9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9ஆம் வகுப்பு கணிதம் ஆயத்தொலை வடிவியல்,முக்கோணவியல் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Maths Coordinate Geometry,Trigonometry Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு கணிதம் அளவியல்,புள்ளியியல்&நிகழ்தகவு முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Maths Mensuration,Statistics&Probability Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - செவ்வியல் உலகம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - The Classical World Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Early Tamil Society and Culture Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - தொழிற்புரட்சி முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Industrial Revolution Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - நவீன யுகத்தின் தொடக்கம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - The Beginning of the Modern AgeImportant 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.

Published on: 16/10/2019
Term 3 பொருளாதார உயிரியல்
Download Tamil Nadu 9th Standard Science question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Science Test1.
தேனின் மருத்துவ முக்கியத்துவத்தைப் பட்டியலிடுக
2.
காளான்களைப் பதப்படுத்தும் இரண்டு முறைகளைக் கூறுக.
3.
காய்கறித் தோட்டங்களின் வகைகள் யாவை?
4.
AYUSH பற்றி நீ அறிவது என்ன?
5.
இரண்டாம் நிலை வளர்சிதை மாற்றப் பொருட்கள் யாவை?
6.
கால்நடைகளின் உணவு மேலாண்மையைப் பற்றி விவரி.
7.
மீன் வளர்ப்புக் குளங்களின் வகைகள் யாவை?
8.
காளான் வளர்ப்பு என்றால் என்ன? காளான் வளர்ப்பு முறைகளை விளக்குக.
9.
உயிரி உரம் என்றால் என்ன? எடுத்துக்காட் டு தருக. ஏன் உயிரி உரம் மற்ற உரங்களை விடச் சிறந்தது?
1.
i) தேன் புரைத்தடுப்பானாகவும்,பாக்டீரிய எதிர்ப்புப் பொருளாகவும் பயன்படுகிறது,இது இரத்தத்தை தூய்மையாக்கப் பயன்படுகிறது
ii) இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகப்படுத்துகிறது.
iii) ஆயுர்வேதம் மற்றும் யுனானி மருத்துவதில் பயன்படுகிறது.
iv) இருமல் , சளி , காய்ச்சல் மற்றும் தொண்டை வறட்சியை நீக்கவும் பயன்படுகிறது.
v) நாக்கு , வயிறு மற்றும் குடற்பண்புகளை குணப்படுத்த உதவுகிறது.
vi) இது செரிமானத்திற்கும் , பசியைத் தூண்டுவதற்கும் பயன்படுகிறது
2.
i) குளிர்வித்தல்
ii) உலர்த்துதல்
iii) கலனில் அடைத்தல்
iv) வெற்றிட குளிர்வித்தல்
3.
1) சமையலறை அல்லது உணவுத் தோட்டங்கள்
2) வணிகத் தோட்டங்கள்
3) செயற்கைக் காய்கறித் தோட்டங்கள்
4.
அநேக மருத்துவ முறைகளான ஆயுர்வேத, யோகா, யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி (AYUSH) போன்ற மருத்தவ முறைகள் தாவரங்கள் மற்றும் விலங்குகளிலிருந்து பெறப்படும் மருந்துகளைப் பய்னபடுத்தப்படுகின்றன. இவ்வகை மருந்துகள் தாவரங்களின் இரண்டாம் நிலை வளர்சிதை மாற்றப் பொருள்கள் என அழைக்கப்படுகின்றன.
5.
இரண்டாம் நிலை வளர்ச்சிதை மாற்றப் பொருட்கள் தாவரங்களின் பாதுகாப்பு போட்டி மற்றும் சிற்றினங்களின் உடதொடர்பு ஆகியவற்றிற்குப் பயன்படுகின்றன. எ.கா. அல்கலாய்டுகள் , பிளவோனய்டுகள் மற்றும் பல.
6.
பால் உற்பத்தி செய்யும் கால்கடைகளுக்கு சமச்சீரான சரிவிகித உணவு அவசியமாகும்.இத்தீவனங்களில் அனைத்துவித தீவனப் பொருட்களும் அதாவது தாதுக்கள் வைட்டமின்கள், உயிர் எதிர்பொருள்கள் மற்றும் ஹார்மோன்கள் சரிவிகித அளவில் காணப்படுகின்றன.இவை விலங்குகளின் வளர்ச்சி மற்றும் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கும் நோயிலிருந்து பாதுகாப்பு அளிப்பதற்கும் உறுதுணையாக உள்ளன.
பல உற்பத்தி செய்யும் பசுக்களுக்கு தினமும் கொடுக்க வேண்டிய தீவனத்தை சராசரி விகிதங்களாவன.
i) 15 முதல் 25 கி.கி தவிடு அல்லது சக்கை (உலர் புல் மற்றும் பசுந்தாள் தீவனம்)
ii) 4 முதல் 5 கி.கி தானியக் கலவை.
iii) 100 முதல் 150 லிட்டர் நீர்
7.
அ) இனப் பெருக்க குளம் :ஆரோக்கியமான , இனப்பெருக்கத்திற்கேற்ற , முதிர்ச்சியுற்ற ஆண் மற்றும் பெண் மீன்களானவை சேகரிக்கப்பட்டு இனப்பெருக்கத்திற்காக இக்குளத்தினுள் அனுப்பப்படுகின்றன. பெண் மீன்களால் வெளியிடப்பட்ட முட்டைகளானவை விந்துகள் மூலம் கருவுறுதல் அடைகின்றன.இந்த கருவுற்ற முட்டைகள் நீரின் மேற்பகுதியில் நுரைபோன்று கூட்டமாக மிதந்து காணப்படுகின்றன.
ஆ)குஞ்சு பொரிக்கும் குழிகள் : இனப் பெருக்கக் குளங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட கருவுற்ற முட்டைகள் பொரிக்கும் குழிகளுக்கு மாற்றப்படுகின்றன. பொரிப்பங்கள் மற்றும் பொறுப்பு வலைத் தொட்டிகள் ஆகியவை இரண்டு வகையான மீன் பொரிக்கும் குழிகளாகும்.
இ) நாற்றங்கால் குளங்கள் : குஞ்சு பொரிக்கும் குழிகளில் பொரிக்கப்பட்ட இளம் மீன் குஞ்சுகளானவை 2முதல் 7 நாட்களுக்கு பிறகு , வளர்க்கும் குளங்களுக்கு மாற்றப்படுகின்றன. இந்த மீன் குஞ்சுகளானவை 60நாட்கள் வரை நாற்றங்கால் குளத்தில் சரியான அளவு உணவு கொடுக்கப்பட்டு 2 - 25 செ,மீ அளவு வளரும் வரை பாதுகாக்கப்படுகின்றன.
ஈ) வளர்க்கும் குளங்கள் : இளம் மீன்களை வளர்ப்பதற்கும் , வளர்க்கும் குளத்திற்கு மாற்றப்பட்டு மூன்று மாதம் வரை அதாவது 10 முதல் 15 செ.மீ நீளமுடைய மீனாக வளரும் வரை வளர்க்கப்படுகின்றன.இங்கு குளம் மீன்களானவை இளரிகளாக மாற்றமடைகின்றன.
இருப்புக் குளங்கள் : இவை வளர்ப்புகளம் அல்லது உற்பத்திக்குளம் எனவும் அழைக்கப்படுகின்றன. விற்பனைக்கு ஏற்ற அளவினை அடையும் வரை மீன்குஞ்சுகள் இங்கு வளர்க்கப்படுகின்றன. மீன் குஞ்சுகளை விடுவதற்கு முன் இக்குளமானது கரிம மற்றும் கனிம உரங்கள் இடப்பட்டு பராமரிக்கப்படுகிறது.
8.
தாவர, விலங்கு மற்றும் தொழிற்சாலைக் கழிவுகளைப் பயன்படுத்தி காளான்களை வளர்க்கும் முறையே காளான் வளர்ப்பு ஆகும் .இது கழிவை அழித்து நலத்தை உருவாகும் தொழில்நுட்பம் என சுருக்கமாகக் கூறப்படுகிறது.
கலத்தல் (compounting ) : வைக்கோலுடன் மாட்டுச்சானம் , போன்ற பல வகையான கரிமப் பொருட்கள் மற்றும் கனிம உரங்களைச் சேர்த்து கலப்பு உரமானது தயாரிக்கப்படுகிறது. இது 500C வெப்ப நிலையில் ஒரு வாரத்திற்கு வைத்து பாதுகாக்கப்படுகிறது.
காளான் வித்து (spawn - ஸ்பான்) - ஸ்பான் என்பது காளான் விதையாகும் நோய்நுண்மை நீக்கப்பட்ட நிலையில் பூஞ்சை உடலங்களை தானியங்களில் வைத்து வளர்ப்பதன் மூலம் இது பெறப்படுகிறது.எவ்வாறு பெறப்பட்ட விதைகள் உரங்களின் மேல் தூவப்படுகின்றன.
உறையிடுதல் (Casing) : விதை கலந்த உரத்துடன் மண்ணானது மெல்லிய அடுக்காக தூவப்படுகின்றது.இது காளான் வளர்வதற்கு உதவிபுரிகின்ற்து.மேலும் இது ஈரப்பதத்தை வழங்கி , வெப்ப நிலையை சீராக்குகின்றது.
பொருத்துதல் (pinning): உடலானது சிறிய மொட்டுவிடத் தொடங்கி காளானாக வளர்கின்றது.குண்டுசி போல் காணப்படும் இந்த வெண்மையான மொட்டுக்களுக்கு ஊசிகள் என்று பெயர்.
அறுவடை செய்தல்: காளான்கள் 15 முதல் 230C வெப்பநிலையில் நன்றாக வளரும் இவைகள் ஒரு வாரத்தில் வளரக்கூடியவை.இது அறுவடை செய்யத் தேவையான வளர்ச்சி ஆகும்.மூன்று வார காலத்தில் முழுமையான காளான்களை அறுவடை செய்யலாம்.
பதப்படுத்துதல் : நிறம் மாறுதல் , எடை குறைதல் மற்றும் சுவை இழப்பு ஆகியன அறுவடைக் காலத்தில் காணப்படும் முக்கியப் பிரச்சினையாகும்.இவற்றைத் தவிர்க்க கீழ்க்கண்ட முறைகளைப் பயன்படுத்தலாம்.
i) குளிர்வித்தல் ii) உலர்த்துதல், iii) கலனில் அடைத்தல் iv) வெற்றிட குளிர்வித்தல் v) காமா கதிர்வீச்சு மற்றும் 150C வெப்பநிலையில் சேமித்தல்
.
9.
உயிரி உரங்கள் என்பவை நுண்ணுயிரிகள் கலந்த பொருள்கள் ஆகும்.இவைகளை விதைகள் , தாவரங்களின் மேற்பரப்புகள் அல்லது மண் ஆகியவற்றால் பய்னபடுத்தம்போது , தவரா உட்பகுதயில் ரைசோபியம் முண்டுகளை உருவாக்கி ஓம்புயிரிகளுக்கான முதல் நிலை ஊட்டச்சத்துக்களை அதிகரிப்பதன் மூலம் தாவர வளர்ச்சியைத் தூண்டுகின்றன.
.png)
ரைசோபியம்: இலைகள் மண் வாழ் பாக்டீரியம் ஆகும் இவை லெகூமின்ஸ் தாவரங்களின் வேர்களில் வேர்முண்டுகளை உருவாக்குவதற்காக கூட்டுயிர் வாழ்க்கையை நடத்துகின்றன.இந்த பாக்டீ ரியங்கள் வளிமண்டல நைட்ரஜெனை நிலைநிறுத்தி , அவற்றை அமோனியாக மாற்றி வழங்குகின்றன
.
அசோஸ்பைரில்லம் : இவை வளிமண்டல நைட்ரஜனைப் பயன்படுத்தும் திறன் பெற்றவை.மேலும் அவற்றை பயிர்த் தாவரங்களுக்கு வழங்குகின்றன.மக்காச்சோளம் , பார்லி, ஓட்ஸ் மற்றும் சோளம் போன்ற தாவரங்களின் மிது நோய் தடுப்பு உரமாக இவை பயன்படுத்தப்படுகின்றன.இவைகள் தானியங்களில் 5 முதல் 20 சதவீதமும் , சிறு தனியாங்களில் 30 சதவீதம் , தீவனப் பயிர்களில் 50 சதவீதமும் தனியா உற்பத்தியை அதிகப்படுத்துகின்றன.
.png)
அசோட்டோபாக்டர்: இவை கோதுமை , நெல் மக்காச்சோளம் மற்றும் சோளம் ஆகியவற்றின் மகசூலை அதிகரிக்கின்றன.நிலைநிறுத்துவது மட்டுமின்றி பூஞ்சை எதிர்ப்பொருள் மற்றும் பாக்டீரிய எதிர்போலிகள் போன்ற கூட்டுப் பொருள்களையும் உற்பத்தி செய்து தாவரங்களுக்கு வழங்குகின்றன.
.png)
பூஞ்சை வேர்கள் (மைக்கோரைசா ) இவ்வகைப் பூஞ்சை வாஸ்குலார் தாவரங்களின் வேர்களுடன் கூட்டுயிர் வாழ்க்கையை மேற்கொள்கின்றன.இவை பாஸ்பரஸ் ஊட்டச் சத்தினை எடுத்துக் கொள்ளும் திறனை அதிகரிக்கின்றன. எ,கா எலுமிச்சை பப்பாளி ஆகியன.
.png)
அசோலா: அசோலா என்ற நிர்ப் பெரணியானது நீரின் மேல் தனித்து மிதக்குத் தன்மை கொண்டது.நீலப்பச்சை பாசியன (BGA) சையனோ பாக்டீரியாவான அனபினா வுடன் சேர்ந்து கூட்டுயிர் வாழ்க்கையை நடத்துகின்றது, இது ஒளிச்சேர்க்கை மூலம் பெறப்படும் ஆற்றலால் வளிமண்டல நைட்ரஜனை நிலைப்படுத்துகின்றது. என்வேர் இது மிதக்கும் நைட்ரஜன் தொழிற்சாலை எனவும் அழைக்கப்படுகின்றது
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - பண்டைய நாகரிகங்கள் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Ancient . Civilisations Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - புரட்சிகளின் காலம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - The Age of Revolutions Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - State and Society in Medieval India Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Colonialism in Asia and Africa Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards