9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9ஆம் வகுப்பு கணிதம் ஆயத்தொலை வடிவியல்,முக்கோணவியல் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Maths Coordinate Geometry,Trigonometry Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு கணிதம் அளவியல்,புள்ளியியல்&நிகழ்தகவு முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Maths Mensuration,Statistics&Probability Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - செவ்வியல் உலகம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - The Classical World Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Early Tamil Society and Culture Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - தொழிற்புரட்சி முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Industrial Revolution Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - நவீன யுகத்தின் தொடக்கம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - The Beginning of the Modern AgeImportant 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.

Published on: 21/01/2020
Download Tamil Nadu 9th Standard Science question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Science Test1.
ஒரு மழை நாளில் வானத்தில் மின்னல் ஏற்பட்ட 5 விநாடிக்குப் பிறகு ஒலி கேட்டது. மின்னல் ஏற்பட்ட இடம் எவ்வளவு தொலைவில் உள்ளது என்று கண்டுபிடிக்கவும். காற்றில் ஒலியின் வேகம் = 346 மீ / விநாடி
2.
ஒலியை எழுப்ப, ஒரு பொருள் என்ன செய்ய வேண்டும்?
3.
கெப்ளரின் விதிளை வரையறு
4.
தகவமைப்பு என்றால் என்ன?
5.
ஒரு பகுதியிலிலுள்ள குழந்தைகளுள் ஒரு குழந்தை மட்டும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் மற்ற குழந்தைகள் பாதிக்கப்படவில்லை. இதற்கு என்ன காரணங்களெல்லாம் இருக்கும் என்று நீ நினைக்கிறாய்?
6.
இயங்குதளம் என்றால் என்ன? அவற்றின் செயல்பாட்டை எழுதுக?
7.
முதிர்ச்சியடைந்த மனிதனில் காணப்படும் பற்களின் பெயர்களை எழுதி அவற்றின் பணிகளைக் குறிப்பிடுக.
8.
கூட்டுதிசு என்றால் என்ன? பல்வேறு வகையான கூட்டுதிசுவின் பெயர்களை எழுது.
9.
அமில மழை எப்பொழுது ஏற்படும்?
10.
பிணைப்பின் வகைகள் யாவை?
11.
காப்பிடப்பட்ட கம்பிகளைக் கொண்ட A மற்றும் B என்னும் இரண்டு கம்பிச்சுருள்கள் ஒன்றுக்கொன்று அருகில் வைக்கப்பட்டுள்ளன. கம்பிச்சுருள் A கால்வனாமீட்டருடனும் கம்பிச்சுருள் B சாவி வழியாக மின்கலனுடனும் இணைக்கப்பட்டுள்ளன
(அ) சாவியை அழுத்தி கம்பிச்சுருள் B யின் வழியாக மின்சாரம் பாயும் பொழுது என்ன நிகழும்?
(ஆ) கம்பிச்சுருள் B யில் மின்னோட்டம் தடைபடும்பொழுது என்ன நிகழும்
12.
ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் ஒரு கம்பியின் மின்தடை எந்த காரணிகளைச் சார்ந்தது?
13.
பெருக்கல் விகித விதியினை வரையறு
14.
சீரான வட்ட இயக்கம் என்றால் என்ன? சீரான வட்ட இயக்கத்துக்கு இரண்டு உதாரணங்கள் தருக.
15.
பின்வருவனவற்றுள் எவை தூய பொருட்கள்? பனிக்கூழ், பால், இரும்பு, ஹைட்ரோகுளளோரிக் அமிலம், பாதரசம், செங்கல் மற்றும் நீர்.
16.
நெகிழிப்பையின் தடிமனைக் கணக்கிடுவதற்குத் தேவையான அலகு என்ன ?
17.
நிலையான அலகு முறையின் தேவை என்ன?
18.
வளி மண்டல அழுத்தம் என்றால் என்ன ?
19.
கலப்படம் செய்யப்பட்ட உணவை உண்பதால் ஏற்படும் விளைவுகள் யாவை?
1.
வேகம் = தொலைவு / காலம்
தொலைவு = வேகம் \(\times\) காலம்
= 346 \(\times\) 5
= 1730 மீட்டர்
மின்னல் ஏற்பட்ட இடம் இடியைக் கேட்ட இடத்திலிருந்து 1730 மீ தொலைவில் இருக்கும்.
2.
ஒலியை எழுப்ப வேண்டுமானால் ஒரு பொருள் அதிர்வடைய வேண்டும்.
3.
முதல் விதி - நீள்வட்டங்களின் விதி
சூரியனின் மையம் ஒரு குவியத்தில் உள்ளவாறு, நீள்வட்டப் பாதையில் கோள்கள் சூரியனைச் சுற்றி வருகின்றன.
இரண்டாவது விதி - சமபரப்புகளின் விதி
கோளின் மையத்தையும் சூரியனின் மையத்தையும் இணைக்கும் கற்பனைக் கோடு சம காலங்களில் சமபரப்புகளைக் கடக்கிறது.
மூன்றாவது விதி - ஒத்திசைவுகளின் விதி
எந்த இரு கோள்களுக்கும், சுற்றுக்காலங்களின் இருமடிகளின் விகிதம் சூரியனிலிருந்து அவற்றின் பாதியளவு பேரச்சுகளின் மும்மடிகளின் விகிதத்திற்குச் சமம்.
4.
ஒரு உயிரினத்தின் எந்த ஒரு பண்போ அல்லது அதன் ஒரு பகுதியோ அந்த உயிரினத்தை அதன் வாழிடத்தில் இருக்கக் கூடிய சூழ்நிலைக்கேற்ப ஒத்துப்போக வைப்பதையே தகவமைப்பு என்கிறோம்.
5.
i. அக்குழந்தை கெட்டுப்போன உணவை சாப்பிட்டிருக்கலாம். மாசு கலந்த நீரை குடித்திருக்கலாம்.
ii. மேலும் அக்குழந்தைக்கு நோய் எதிர்ப்பு தன்மை குறைவாக காணப்படலாம்.
iii. மற்ற குழந்தைகள் சுத்தம், சுகாதாரத்தோடு இருந்திருக்கலாம்.
6.
கணினியின் சாதனங்களை ஒன்றுடன் ஒன்று இணைக்கும் மென்பொருள் இயக்க மென்பொருள் ஆகும். கணினி இயங்குவதற்குத் தேவையான அடிப்படைத் தரவுகளைக் (Data) கொண்ட மென்பொருளை, இயக்க மென்பொருள் என்கிறோம். இயக்க மென்பொருள் (OS) இன்றி கணினியைப் பயன்படுத்த இயலாது. (எ.கா.) - Linux, Windows, Mac, Android.
பயன்பாட்டு மென்பொருள் (APPLICATION SOFTWARE)
கணினியை நமது தேவைக்கேற்ப பயன்படுத்த உதவும் மென்பொருள்களே பயன்பாட்டு மென்பொருள்கள் ஆகும். இவற்றை இயக்க மென்பொருளின் உதவியுடன்தான் நிறுவ முடியும். இவ்வகை மென்பொருள்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குறிப்பிட்ட வேலைகளைச் செய்து முடிக்க பயனாளர்களுக்கு உதவுகின்றன.
எ.கா. - Video players, Audio players, Word processing softwares, Drawing tools, Editing softwares, etc.
7.
| பற்களின் வகைகள் | பணிகள் |
| வெட்டுப் பற்கள் | வெட்டவும் கடிக்கவும் |
| கோரைப் பற்கள் | கிழிக்கவும் துளையிடவும் |
| முன் கடைவாய்ப் பற்கள் | நசுக்கவும் அரைக்கவும் |
| பின் கடைவாய்ப் பற்கள் | நசுக்கவும் அரைக்கவும் மெல்லவும். |
8.
ஒன்றுக்கு மேற்பட்ட பலவகை செல்களால் ஆனவை கூட்டுத்திசுக்கள் ஆகும். அந்த செல்கள் அனைத்தும் ஒன்றாக ஒரு குறிப்பிட்ட பணியை மேற்கொள்ளும். இவை பாரன்கைமா மற்றும் ஸ்கிளீரன்கைமா செல்களையும் கொண்டுள்ளன. இருந்தபோதிலும் கோலன்கைமா செல்கள் இந்த திசுவில் காணப்படுவத்தில்லை. பொதுவான உதாரணம்: சைலம் மற்றும் ஃபுளோயம் ஆகும்.
9.
வளிமண்டல வாயுவானது கந்தக மற்றும் நைட்ரஜனின் ஆக்சைடுகளால் மாசு அடையும் பொழுது அவை நீரில் கரைந்து நீரின் pH மதிப்பை ஏழுக்கும் குறைவாக மாற்றி விடுகின்றன. pH மதிப்பு 7 ஐ விட குறையும்போது அது அமில மழை எனப்படுகிறது.
10.
வேதிப்பிணைப்புகள் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. அவை பலமான இணைப்பு மற்றும் பலவீனமான இணைப்பு பலமான இணைப்பு. மேலும் அயனிப்பிணைப்பு, சகப்பிணைப்பு, ஈதல் பிணைப்பு, உலோகப்பிணைப்பு என நான்காக பிரிக்கப்படுகிறது. பலவீனமான இணைப்பு நைட்ரஜன் பிணைப்பு மற்றும் வாண்டர் வால்ஸ் கவர்ச்சி விசை என இரண்டாக பிரிக்கப்படுகிறது.
11.
அ) கால்வனா மீட்டரில் ஒரு விலகல் ஏற்படுகிறது.
ஆ) மீண்டும் கால்வனா மீட்டரில் ஒரு விலகல் ஏற்படுகிறது. ஆனால் இது எதிர் திசையில் இந்த விலகல் ஏற்படுகிறது.
12.
குறிப்பிட்ட வெப்பநிலையில் ஒரு பொருள் அளிக்கும் மின்தடை
(i) பொருளின் வடிவமைப்பையும்
(ii) பொருளின் இயல்பாயும் சார்ந்தது.
13.
A மற்றும் B என்ற இரு தனிமங்கள் ஒன்றாக சேர்ந்து ஒன்றுக்கும் மேற்பட்ட சேர்மங்களை உருவாக்கும்போது A ன் நிறையானது B ன் நிறையோடு எளிய விகிதத்தில் சேர்ந்திருக்கும்.
14.
1). ஒரு பொருள் வட்டப் பாதையில் மாறாத வேகத்தில் சென்றால் அந்த இயக்கம் சீரான வட்ட இயக்கம் எனப்படும்.
2). எடுத்துக்காட்டுகள்:
i) பூமி சூரியனைச் சுற்றி வருவது
ii) நிலவு பூமியைச் சுற்றி வருவது
15.
தூய பொருட்கள் பனிக்கூழ், இரும்பு, பாதரசம்.
16.
திருகு அளவியினை கொண்டு மிக சிறிய அளவு கொண்ட நெகிழிப்பையின் தடிமனை கணக்கிடலாம். திருகு அளவியின் மூலம் ஒரு மில்லி மீட்டரில் நூறில் ஒரு பங்கு அளவை கூட துல்லியமாக அளவிடலாம். நெகிழிப்பையின் தடிமனானது மைக்ரோ மீட்டரில் (10-3 m) இருந்து ஒரு சில நானோ மீட்டர்கள் (10-9 m) வரை அமையும்.
17.
i) சரியான மற்றும் துல்லியமான அளவுகளான நீளம், நிறை, காலம் போன்றவற்றை அளவிடலாம்.
ii) சிறு இடம் விட்டு இடமோ, நபர்களுக்கிடையிலோ, மாறாத அளவினைப் பெறலாம்.
எ. கா: நீளத்தின் அலகு மீட்டர்
18.
வளிமண்டலத்தில் உள்ள காற்றானது இடத்தை அடைத்துக் கொள்ளும். மேலும் அதற்கு எடை உள்ளது என்பதால் காற்றின் அழுத்தத்தை ஏற்படுத்தும் அழுத்தம் வளிமண்டல அழுத்தம் எனப்படுகிறது.
19.
உணவு கலப்படம் செய்யப்படுவதால் அதில் நச்சுப் பொருள்கள் கலக்கப்படுகின்றன.உணவில் சேர்க்கப்படும் பல வேதிப் பொருள்கள் நம் உடல் நிலையைப் பாதிக்கின்றன. பல ஆபத்தான நோய்களையும் தோற்றுவிக்கின்றன. உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு இரைப்பை, கல்லிரல், சிறுநீரக நோய்கள் தோன்றுகின்றன.
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - பண்டைய நாகரிகங்கள் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Ancient . Civilisations Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - புரட்சிகளின் காலம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - The Age of Revolutions Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - State and Society in Medieval India Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Colonialism in Asia and Africa Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards