9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கற்கண்டு (இலக்கணம்) - தொடர் இலக்கணம், ஆகுபெயர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -விரிவானம் (துணைப்பாடம்) - தாய்மைக்கு வறட்சி இல்லை! Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கவிதை பேழை (செய்யுள்) - மார்கழி பெருவிழா Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர்-இலக்கணம் - பகுபத உறுப்பிலக்கணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர் - இலக்கணம்-எழுத்து -அளபெடை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர்-துணைப்பாடம் - ஆறாம்திணை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 15/11/2019
Download Tamil Nadu 9th Standard Science question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Science Test1.
ஒரு நோய் அறிகுறியின் தீவிரமானது இதைப்பொருத்தே அமையும்
நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை
தாக்கப்பட்ட உறுப்பு
அ மற்றும் ஆ
ஏதுமில்லை
2.
அழுத்த சமையற்கலனில் (pressure cooker) உணவு விரைவாக சமைக்கப்படுவதற்குக் காரணம், அதனுடைய
அதிகரிக்கப்பட்ட அழுத்தம் கொதி நிலையைக் குறைக்கிறது
அதிகரிக்கப்பட்ட அழுத்தம் கொதி நிலையை உயர்த்துகிறது.
குறைக்கப்பட்ட அழுத்தம் கொதி நிலையை உயர்த்துகிறது
அதிகரிக்கப்பட்ட அழுத்தம் உருகு நிலையைக் குறைக்கிறது
3.
மையச்செயலகத்துடன் திரையை இணைக்கும் கம்பி
ஈதர்நெட்
விஜிஏ
எச்டிஎம்ஐ
யூஎஸ்பி
4.
ஒரு ஆக்குதிசு கொண்டிருப்பது
பகுப்படையக் கூடிய மற்றும் வளரும் நிலையில் உள்ள முதிர்ச்சியுள்ள செல்கள்.
முதிர்ந்த செல்கள்
உயிரற்ற செல்கள்
ஸ்கிளிரன்கைமா செல்கள்
5.
கீழ்காண்பனவற்றில் எது வியர்வையின் உட்கூறு இல்லை?
யூரியா
புரதம்
நீர்
உப்பு
6.
காந்தப் பாய அடர்த்தியின் அலகு
வெபர்
வெபர் /மீட்டர்
வெபர் / மீட்டர்2
வெபர் மீட்டர்2
7.
முழு அக எதிரொலிப்பு நிகழ ஒளியானது_____லிருந்து _____க்கு செல்லவேண்டும்
அடர்மிகு;அடர்குறை
அடர்குறை:அடர்குறை
அடர்மிகு;அடர்மிகு
8.
தரவு மற்றும் தகவல்களைச் சேமிக்கும் சாதனம் எது?
குழலிப்பெருக்கி
தொலைக்காட்சி
கணினி
வானொலி
9.
வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு போன்றவை முளை கட்டுவதைத் தடுக்கும் முறை
அதிக குளிர் நிலையில் பாதுகாத்தல்
கதிர் வீச்சுமுறை
உப்பினைச் சேர்த்தல்
கலன்களில் அடைத்தல்
10.
நீயூக்ளியான் குறிப்பது
புரோட்டான் + எலக்ட்ரான்
நியூட்ரான் மட்டும்
எலக்ட்ரான் + நியூட்ரான்
புரோட்டான் + நியூட்ரான்
11.
காட்டில் ஒரு பெரிய மரம் விழுகிறது. ஆனால் மரத்தின் வேர்கள் நிலத்தில் தொடர்பு கொண்டுள்ளன. விழுந்த மரத்தின் கிளைகள் நேராக வளர்கின்றது. இந்த நிகழ்வு எதன் தூண்டுதலால் நடைபெறுகின்றது.
ஒளி மற்றும் நீர்
நீர் மற்றும் ஊட்டப்பொருள்
நீர் மற்றும் ஈர்ப்பு விசை
ஒளி மற்றும் ஈர்ப்பு விசை
12.
அளவுகோல், அளவிடும் நாடா மற்றும் மீட்டர் அளவுகோல் ஆகியவை கீழ்க்கண்ட எந்த அளவை அளவிடப் பயன்படுகின்றன?
நிறை
எடை
காலம்
நீளம்
13.
மைய விலக்கு விசையின் பயன்பாடுகள்?
14.
புவியில் ஒரு மனிதன் நிறை 50kg எனில் அவரது எடை எவ்வளவு?
15.
AC மின்னியற்றியின் படம் வரைந்து பாகங்களைக் குறிக்கவும்
16.
12\(\Omega\),6\(\Omega\) மின்தடை மதிப்புள்ள இரு மின் தடையங்கள் முதலில் தொடரிணைப்பிலும் பின்னர் பக்க இணைப்பிலும் இணைக்கப்படுகின்றன. அவற்றின் மின்னோட்ட - மின்னழுத்த வேறுபாடு வரைபடம் எக்கோட்டினால் குறிக்கப்படும்?

17.
மண்டையோடற்றவை (ஏகிரேனியா) என்றால் என்ன?
18.
கீழ்க்கண்ட கலவைகளின் கூறுகளைப் பிரித்தெடுக்கப் பயன்படும் சாதனங்களைப் பெயரிடு.
i) ஒன்றாக கலக்கும் திரவங்கள்
ii) ஒன்றாக கலவாதத் திரவங்கள்
19.
பருப்பொருளின் எந்த நிலை மிக அதிகமான இயக்க ஆற்றலைக் கொண்டுள்ளது
20.
பாதரசத்தின் அடர்த்தி 13600 கிகி மீ-3 எனில் ஒப்படர்த்தியைக் கணக்கிடுக
21.
அடர்குறை ஊடகத்திலிருந்து(ஊடகம் 1) அடர்மிகு ஊடகத்திற்கு(ஊடகம் 2) ஒளி செல்கிறது.படுகோணம் மற்றும் விலகு கோணம் முறையே 45o ,30o எனில் முதல் ஊடகத்தைப் பொறுத்து 2-வது ஊடகத்தின் ஒளிவிலகல் கணக்கிடுக.
22.
ஒரு இரப்பர் பந்தின் விட்டத்தை அளவிடும்போ து முதன்மை அளவுகோலின் அளவு 7 செ.மீ, வெர்னியர் ஒன்றிப்பு 6 எனில் அதன் ஆரத்தினைக் கணக்கிடுக
23.
காரங்களின் பயன்கள் நான்கினை எழுதுக.
24.
மின்மாற்றியின் இரு வகைகளை விளக்கவும்
25.
முன்முதுகு நாணிகளின் பண்புகளை விவரிக்க.
26.
கணினியின் தலைமுறைகளை அட்டவணைப்படுத்து
27.
ஹைட்ரஜன் சல்பைடில் (H2S) 94.11 % சல்ஃபரும், நீரில் ( H2O) 11.11 % ஹைட்ஜனும் மற்றும் சல்ஃபர் டை ஆக்ஸைடு (SO2) ல் 50 % ஆக்ஸிஜனும் உள்ளன. இதன் முடிவுகள் தலைகீழ் விகித விதியுடன் ஒத்துப்போகின்றது என்று காட்டுக.
28.
மலேரியா ஒட்டுண்ணியின் கடத்தியின் பெயர் யாது? தீங்கான மற்றும் சாவுக்கேதுவான மலேரியாவைப் பரப்பும் மலேரியா ஒட்டுண்ணி சிற்றினத்தின் பெயரை எழுதுக.
29.
கணினியின் கூறுகள் யாவை?
30.
செரிக்கப்பட்ட உணவை உட்கிரகிக்க எவ்வாறு சிறுகுடலானது அமைக்கப்பட்டுள்ளது?
31.
தளர்ந்த இணைப்பு திசுவின் மேட்ரிக்ஸ்ஸில் உள்ள நார்கள் எவை?
32.
கீழ்க்கண்ட வினைகள் ஆக்ஸிஜனேற்ற / ஒடுக்க வினைகளா எனக் காண்க.
அ Na\(\rightarrow\) Na++ e-
ஆ Fe3++2 e-\(\rightarrow\) Fe+
33.
நவீன ஆவர்த்தன விதியைக் கூறுக?
34.
கோளக ஆடிச் சமன்பாட்டை எழுதுக.அதில் பயன்படுத்தப்படும் குறியீடுகள் ஒவ்வொன்றையும் விளக்குக.
35.
ரைசோஃபோரா தாவரத்தின் நிமோடோஃபோர்கள் ஏற்படுத்தும் அசைவின் பெயரினை எழுதுக.
36.
மீத்தேன் ஆக்ஸிஜனில் எரிந்து கார்பன் டை ஆக்ஸைடையும் மற்றும் நீராவியையும் ஏற்படுத்துகிறது. இது பின்வரும் சமன்பாட்டின் மூலம் கொடுக்கப்பட்டுள்ளது.
CH4 (வா) + 2O2 (வா) →CO2 (வா) + 2 H2O (வா)
கணக்கீடு : (i) 50 செ.மீ 3 மீத்தேன் எரிவதற்கு தேவைப்படும் ஆக்ஸிஜனின் பருமன் மற்றும்
(ii) இந்த வினையில் உருவான கார்பன் டை ஆக்ஸைடின் பருமன்
37.
கீழக்கண்ட வாக்கியங்களுக்கு தகுந்த ஒருகாரணத்தைக் கூறுக
அ) உணவுப் பாதுகாப்பு பொருளாக உப்பு சேர்க்கப்படுகிறது ஏனெனில்____
ஆ) காலாவதி தேதி முடிவடைத்த உணவுப் பொருட்களை நாம் உண்ணக்கூடாது ஏனெனில்____
இ) கால்சியம் சத்துக் குறைப்பட்டால் எலும்புகளில் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது ஏனெனில்____
1.
(c)
அ மற்றும் ஆ
2.
(b)
அதிகரிக்கப்பட்ட அழுத்தம் கொதி நிலையை உயர்த்துகிறது.
3.
(b)
விஜிஏ
4.
(a)
பகுப்படையக் கூடிய மற்றும் வளரும் நிலையில் உள்ள முதிர்ச்சியுள்ள செல்கள்.
5.
(b)
புரதம்
6.
(c)
வெபர் / மீட்டர்2
7.
(a)
அடர்மிகு;அடர்குறை
8.
(c)
கணினி
9.
(b)
கதிர் வீச்சுமுறை
10.
(d)
புரோட்டான் + நியூட்ரான்
11.
(d)
ஒளி மற்றும் ஈர்ப்பு விசை
12.
(d)
நீளம்
13.
(i) துணி துவைக்கும் இயந்திரத்தில் உள்ள துணி உலர்த்தி மையவிலக்கு விசையை உபயோகிக்கிறது.
(ii) பாலிலிருந்து பாலாடையை பிரிக்கும் கருவிகளில் பயன்படுகிறது.
(iii) இரத்தப் பரிசோதனை ஆய்வங்களில் பயன்படுகிறது.
14.
W = mg
= 50 \(\times\) 9.8
= 490 நியூட்டன்
15.

16.
தொடர் இணைப்பு R3 = 12 + 6 = 18 ᘯ
பக்க இணைப்பு \(\frac {1}{{R}_{P}}\) = \(\frac {1}{12} + \frac {1}{6} = \frac {1 + 2}{12} = \frac {3}{12}\)
\(\frac {1}{{R}_{P}}\) = \(\frac {3}{12}\)
ஃ RP = \(\frac {12}{3}\) = 4
எனவே வரைப்படம் A என்பது தொடர் இணைப்பையும், B என்பது பக்க இணைப்பையும் குறிக்கும்.
17.
இவை முதுகெலும்பிகளின் முன்னோடிகளாகக் கருதப்படுகின்றன. இவற்றிற்கு மண்டையோடு இல்லாததால் ஏகிரேனிய ( மண்டையோடற்றவை) என அழைக்கப்படுகின்றன.
18.
| வ.எண் | கலவை | பிரித்தெடுக்கப் பயன்படும் சாதனம் |
| 1. | ஒன்றாகக் கலக்கும் திரவங்கள் | பின்னக் காய்ச்சி வடிக்கும் சாதனம் |
| 2. | ஒன்றாக கலவாதத் திரவங்கள் | பிரிபுனல் |
19.
பருப்பொருளின் வாயுக்கள் நிலை அதிக இயக்க ஆற்றலைக் கொண்டுள்ளன.
20.
பாதரசத்தின் அடர்த்தி = 13600 கிகி/மீ3

=\(\frac { 13600 }{ 1000 } \)
= 13.6
21.
\(_{ 1 }{ { \mu }_{ 2 } }=\frac { \sin\ i }{ \sin\ r } \)\(=\frac { \sin\ { 45 }^{ o } }{ \sin\ { 30 }^{ o } } \)
\(=\frac { 1 / \sqrt { 2 } }{ 1/2 } =\sqrt { 2 } \) = 1.414
22.
முதன்மைக் கோலின் அளவு = 7 செ.மீ (7 \(\times\) 10 மி.மீ)
= 7 மி.மீ (1 செ.மீ - 10 மி.மீ)
வெர்னியர் ஒன்றிப்பு = 6
மீச்சிற்றளவு = 0.1 மி.மீ.
கழிப்பிழை = இல்லை
இரப்பர் பந்தின் விட்டம் = MSR + (V.C\(\times\) L.C) 土ZE
=7 மி.மீ + (6 \(\times\) 0.1)
= 7 + 0.6
= 7.6 மி.மீ
பந்தின் ஆரம் = 7.6 மி.மீ/2
= 3.53 மி.மீ
23.
1) சோப்பு தயாரிக்க சோடியம் ஹைட்ராக்சைடு பயன்படுகிறது.
2) கட்டிடங்களுக்கு சுண்ணாம்பு பூச கால்சியம் ஹைடிராக்சைடு பயன்படுகிறது.
3) வயிற்றுக் கோளாறுக்கு மருந்தாக மெக்னீசியம் ஹைட்ராக்சைடு பயன்படுகிறது.
4) துணிகளில் உள்ள எண்ணெய்க் கறைகளை நீக்குவதற்கு அம்மோனியம் ஹைட்ராக்சைடு பயன்படுகிறது.
24.
(i) ஏற்று மின்மாற்றி: ஒரு குறைந்த மாறுதிசை மின்னழுத்தத்தை உயர் மாறுதிசை மின்னழுத்தமாக மாற்றுவதற்காகப் பயன்படுத்தப்படும் மின்மாற்றி ஏற்று மின்மாற்றி என்று அழைக்கப்படுகிறது. அதாவது (Vs > Vp). ஒரு ஏற்று மின்மாற்றியில் முதன்மைச் சுருளில் உள்ள கம்பிச்சுருள்களின் எண்ணிக்கையை விட துணைச் சுருளில் உள்ள கம்பிச்சுருள்களின் எண்ணிக்கை அதிகமாகும் (Ns > Np).
(ii) இறக்கு மின்மாற்றி: உயர் மாறுதிசை மின்னழுத்தத்தை குறைந்த மாறுதிசை மின்னழுத்தமாக மாற்றுவதற்காக பயன்படுத்தப்பம் மின்மாற்றி இறக்கு மின்மாற்றி என்று அழைக்கப்படுகிறது. அதாவது (Vs < Vp). ஒரு இறக்கு மின்மாற்றியில், முதன்மைச் சுருளில் உள்ள கம்பிச்ச்சுருள்களின் எண்ணிக்கையை விட துணைச் சுருளில் உள்ள கம்பிச்சுருள்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் (Ns < Np).
25.
முன்முதுகு நாணிகள்-(Procliordata)
இவை முதுகெலும்பிகளின் முன்னோடிகளாகக் கருதப்படுகின்றன. முதுகு நாண் அமைப்பின் அடிப்படையில் இவை இரண்டு துணை தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை வால்முதுகுநாணிகள் (யுரோகார்டேட்டா) மற்றும் தலைமுதுகு நாணிகள் (செபாலோகார்டேட்டா) என்பவையாகும்.
i) துணைத்தொகுதி: வால் முதுகு நாணிகள் - (Urochordata)
தனித்து வாழும் லார்வாவின் வால் பகுதியில் முதுகுநாண்கள் காணப்படுகின்றன. முதிர் உயிரிகள் இயல்பான அமைப்பை இழந்து தரையில் ஒட்டி வாழ்பவை. உடலைச் சுற்றிலும் டியூனிக் எனும் உறை உண்டு, எ.கா. அசிடியன் அசிடியன்
ii) துணைத்தொகுதி: தலை முதுகு நாணிகள் - (Cephalochordata)
இவை மீன் வடிவ கடல் வாழ் முதுகு நாணிகள். இவற்றின் முதுகுப்புறத்தில் இணையற்ற துடுப்பு உள்ளது. இதில் தலை முதல் வால் வரை நீண்ட நிலையான முதுகுநாண் முக்கியப் பண்பாகக் கருதப்படுகிறது. ஆம்பியாக்லில் எ.கா. ஆம்பியாக்ஸிஸ்
26.
| காலம் | தலைமுறை | மின்னணு உறுப்புகள் |
| 1940 - 1956 | முதல் தலைமுறை | வெற்றிடக்குழாய்கள் |
| 1956 - 1963 | இரண்டாம் தலைமுறை | மின்மயப்பெருக்கி (டிரான்சிஸ்டர்) |
| 1964 - 1971 | மூன்றாம் தலைமுறை | ஒருங்கிணைந்த சுற்று |
| 1972 - 2010 | நான்காம் தலைமுறை | நுண்செயலி |
| 2010க்குப் பின் | ஐந்தாம் தலைமுறை | செயற்கை நுண்ணறிவு |
27.
100கி நீரில், ஹைட்ரஜனின் எடை = 11.11 கிராம்
ஆக்ஸிஜனின் எடை = 100 - 11.11 = 88.89 கிராம்
100 கி சல்ஃபர் டை ஆக்ஸைடில், சல்ஃபரின் எடை = 50 கிராம்
ஆக்ஸிஜனின் எடை = 100 - 50 = 50 கிராம்
ஆக்ஸிஜனின் எடைக்கும், ஹைட்ரஜனின் எடைக்கும் இடையே உள்ள விகிதம் 88.89: 11.11. அதாவது 8:1........ (1)
ஹைட்ரஜன் சல்பைடில், சல்ஃபரின் எடை = 94.11 கிராம்
ஹைட்ரஜனின் எடை = 100 - 94.11 = 5.89 கிராம்
சல்ஃபர் மற்றும் ஹைட்ரனின் எடையின் விகிதம் 94.11 : 5.89 அதாவது 16 : 1 ……….(2)
இரண்டு விகிதங்கள 1 மற்றும் 2க்கும் உள்ள தொடர்பு 8 / 1 : 16 / 1 அல்லது 1 : 2
இவைகள் ஒன்றுடன் ஒன்று எளிய பெருக்கல் விகிதத்தில் உள்ளன. ஹைட்ரஜன் எடையுடன் தனித்தனியாக இணையும் சல்ஃபரின் எடைக்கும் (32) மற்றும் ஆக்ஸிஜனின் எடைக்கும் (12) இடையே உள்ள விகிதம்.தலைகீழ் விகித விதிக்கு துணை செய்கிறது.
28.
மலேரியா ஒட்டுண்ணியை கடத்துவது பெண் அனாபிலஸ் கொசு, தீங்கான மலேரியா ஒட்டுண்ணி பிளாஸ்மோடியம் பால்சிபாரம் ஆகும்.
29.
கணினியின் மூன்று பாகங்களாவன:
1. உள்ளீடகம் (Input Unit)
2. மையச்செயலகம் (CPU)
3. வெளியீட்டகம் (Output Unit)
30.
சிறுகுடலானது முன்சிறுகுடல் (டியோடினம்), நடுச்சிறுகுடல் (ஜீஜினம்) மற்றும் பின் சிறுகுடல் (இலியம்) போன்ற பகுதிகளைக் கொண்டுள்ளது. இலியம் பகுதியில் மிகச் சிறிய விரல் போன்ற நீட்சிகள் காணப்படுகின்றன.அவை ஒவ்வொன்றும் மி.மீட்டர் நீளமுடைய குடல் உறிஞ்சிகள் என அழைக்கப்படும் இவற்றில்தான் உணவானது உட்கிரகிக்கப்படுகிறது.
31.
1) கொலாஜன் நார்கள்
2) மீள் நார்கள்
3) ஃபைப்ரோபிளாஸ்ட் செல்கள்
32.
அ) ஆக்ஸிஜனேற்ற வினை
ஆ) ஆக்ஸிஜன் ஒடுக்க வினை
33.
தனிமங்களின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகள் அவற்றின் அணு எண்களின் தனிம வரிசை செயல்பாடுகளாகும். இது நவீன ஆவர்த்தன விதி ஆகும்.
34.
ஆடிச் சமன்பாடு \(\frac { 1 }{ f } =\frac { 1 }{ u } +\frac { 1 }{ v } \)
f = குவியத் தொலைவு
u = பொருளின் தொலைவு
v = பிம்பத்தின் தொலைவு
35.
எதிர் புவி சார்பசைவு
36.
CH4(வா) +2O2(வா) → CO2(வா) +2H2O(வா)
1 2 1 2
பருமன் பருமன்கள் பருமன் பருமன்கள்
1 x 1 x 1 x 1 x
50செ.மீ3 50செ.மீ3 50செ.மீ3 50செ.மீ3
பயன்படுத்தப்பட்ட ஆக்ஸிஜனின் பருமன் =100 செ.மீ3
உருவாகும் கார்பன் டை ஆக்ஸைடின் பருமன் = 50 செ.மீ3
37.
அ) உப்பு ஈரப்பதத்தை அகற்ற உணவைப் பாதுகாக்கிறது.
ஆ) காலாவதி தேதி முடிவடைந்தபின் உணவுப் பொருள் கெட்டுப் போய்விடும்
இ) எலும்பு வளர்ச்சிக்கு கால்சியம் அவசியம் ஆகும்.
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - மணிமேகலை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - ஏறு தழுவுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர் - தண்ணீர் Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards