9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9ஆம் வகுப்பு கணிதம் ஆயத்தொலை வடிவியல்,முக்கோணவியல் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Maths Coordinate Geometry,Trigonometry Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு கணிதம் அளவியல்,புள்ளியியல்&நிகழ்தகவு முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Maths Mensuration,Statistics&Probability Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - செவ்வியல் உலகம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - The Classical World Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Early Tamil Society and Culture Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - தொழிற்புரட்சி முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Industrial Revolution Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - நவீன யுகத்தின் தொடக்கம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - The Beginning of the Modern AgeImportant 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.

Published on: 16/10/2019
Term 3 ஒலி
Download Tamil Nadu 9th Standard Science question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Science Test1.
வெற்றிடத்தில் ஒலி பயணம் செய்யுமா?
2.
ஒலியை எழுப்ப, ஒரு பொருள் என்ன செய்ய வேண்டும்?
3.
ஆய்வகங்களில் ஒலியை உண்டாக்கும் கருவிகளைப் பற்றி கூறுக.
4.
சூப்பர் சோனிக் வேகம் என்றால் என்ன ?
5.
மனித காது செயல்படும் விதத்தினை படத்துடன் விவரி.
6.
SONAR வேலை செய்யும் விதத்தினை விளக்குக
7.
ஒலியின் பயன்பாடுகளை பட்டியலிடுக.
8.
ஒலியின் எதிரொலிப்பு விதிகளை சோதனை மூலம் விளக்குக.
9.
நெருக்கங்கள் மற்றும் அழுத்தங்கள் எவ்வாறு உண்டாகின்றன? படங்களுடன் விளக்குக.
10.
ஒலியின் அதிர்வெண் 600 Hz எனில், அதனை உண்டாக்கும் பொருள், ஒரு நிமிடத்திற்கு எத்தனை முறை அதிர்வுரும்?
1.
வெற்றிடத்தில் ஒலி பரவாது. பரவ ஊடகம் தேவை.
2.
ஒலியை எழுப்ப வேண்டுமானால் ஒரு பொருள் அதிர்வடைய வேண்டும்.
3.
ஆய்வகங்களில் ஒலியை உண்டாக்க இசைக்கவை பயன்படுகிறது.
4.
ஒரு பொருளானது காற்றில் ஒலியின் வேகத்தைவிட அதிக வேகத்தில் செல்லும்போது அலை அதிர்வலைகளை ஏற்படுத்துகின்றன. இவ்வதிர்வலைகள் அதிக ஆற்றலைப் பெற்றிருக்கும். இவ்வதிர்வலைகளால் காற்றில் ஏற்படும் இதர மாறுபாட்டின் காரணமாக கூர்மையான மற்றும் உரத்த ஒலியை உண்டாக்குகிறது. இதனை சூப்பர் சோனிக் வேகம் என அழைக்கின்றோம்.
5.

மனித காது செயல்படும் விதம் :
i. செவியின் வெளிப்பகுதி செவிமடல் என்று அழைக்கப்படுகிறது. இது சுற்றுப்புறத்திலிருந்து ஒலியைச் சேகரிக்கின்றது.
ii. சேகரிக்கப்பட்ட ஒலியானது, வெளிச் செவிக்குழாய் மூலம் செவிக்கு உள்ளே செல்கிறது.
iii. வெளிச் செவிக் குழாயின் முடிவில், செவிப்பறை (tympanic) உள்ளது.
iv. காற்று ஊடகத்தில் ஒரு நெருக்கமானது உண்டாகும்போது செவிப்பறையின் பகுதியிலுள்ள வெளிப் அழுத்தமானது அதிகரித்து, செவிப்பறையானது உட்புறம் தள்ளப்படுகிறது.
v. அதுபோலவே, காற்று ஊடகத்தில் ஒரு நெகிழ்ச்சி உண்டாகும்போது செவிப்பறையானது, வெளிப்புறம் தள்ளப்படுகிறது.
vi. இவ்வாறாக செவிப்பறையானது அதிர்வடைகின்றது.
vii. இந்த அதிர்வானது. நடுச்செவியிலுள்ள மூன்று எலும்புகளால் (சுத்தி, பட்டை மற்றும் அங்கவடி பலமுறை பெருக்கமடைகிறது.
viii. அலையிலிருந்து பெறப்பட்டு பெருக்கமடைந்த அழுத்தவேறுபாடானது. நடுச்செவியிலிருந்து உட்செவிக்குக் கடத்தப்படுகிறது.
ix. உட்செவியினுள் கடத்தப்பட்ட அழுத்த வேறுபாடானது. காக்ளியா (Cochlea) மூலம் மின்சைகைகளாக மாற்றப்படுகின்றது.
X. இந்த மின் சைகைகள் காது நரம்பு வழியே மூளைக்கு செலுத்தப்படுகின்றன.
xi. மூளையானது அவற்றை ஒலியாக உணர்கின்றது.
6.
(i) சோனார் (SONAR) என்ற சொல்லின் விரிவாக்கம் Sound Navigation And Ranging என்பதாகும். சோனார் என்ற கருவியானது மீயொலி அலைகளைச் செலுத்தி நீருக்கு அடியிலுள்ள பொருள்களின் தூரம், திசை மற்றும் வேகம் ஆகியவற்றைக் கணக்கிட பயன்படுகிறது. இதில் மீயொலிகளைப் பரப்பக்கூடிய சாதனமும், மீயொலிகளை உணரக்கூடிய உணர்வியும் உள்ளன. அவை படகு மற்றும் கப்பல்களுக்கு அடியில் பொருத்தப்பட்டுள்ளன. பரப்பியானது மீயொலிகளை உருவாக்கி பரப்புகிறது. இவ்வலைகள் நீருக்குள் பயணித்து, கடலின் அடித்தளத்தில் உள்ள பொருட்களின் மீது (அதாவது கடல் படுகை, மீன்களின் கூட்டம்) பட்டு எதிரொலிப்படைந்து மீண்டும் வரும் பொழுது உணர்வியினால் உணரப்படுகிறது. உணர்வியானது மீயொலிகளை மின்சார சைகைகளாக மாற்றமடையச் செய்கின்றது. அவற்றிலிருந்து தகவல்கள் பெறப்படுகின்றன. நீரில் ஒலியின் திசைவேகம் மற்றும் பரப்பப்பட்ட ஒலிக்கும், பெறப்பட்ட எதிரொலிக்கும் இடையே உள்ள கால இடைவெளி ஆகியவற்றைக் கணக்கிட்டு, அதன் மூலம் நீருக்குள்ளிருந்து மீயொலி அலைகளை எதிரொலித்த, பொருளின் தொலைவைக் கணக்கிடலாம்.
(ii) பரப்பப்பட்ட மற்றும் பெறப்பட்ட மீயொலி அலைகளுக்கு இடையேயான கால இடைவெளியை 't' எனவும், நீரின் வேகத்தை 'v' எனவும் கொண்டால், மீயொலியானது கடந்த தொலைவு 2d=vxt ஆகும். இவ்வாறு பொருள்களின் தொலைவைக் கண்டறியும் முறை எதிரொலி நெருக்கம் (echo-ranging) எனப்படும். கடலின் ஆழத்தை அறியவும், நீருக்கு அடியில் அமைந்துள்ள மலைகள், குன்றுகள், நீர்முழ்கிக் கப்பல்கள் மற்றும் பனிப்பாறைகள் ஆகியவற்றை இடம் கண்டறிவதற்கு இந்த முறையானது பயன்படுகின்றது.
7.
இசைக்கருவி:
குழல்பெருக்கி, ஒலிப்பெருக்கி, குழல்கள், நாதஸ்வரம், செனாய், தாரை போன்ற இசைக் கருவிகள் யாவும் ஒளியானது ஒரு குறிப்பிட்ட திசையில் பரவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இக்கருவிகளில் ஒரு குழாயினைத் தொடர்ந்து ஒரு கூம்பு வடிவ அமைப்பானது ஒலியைப் பெருக்கமடையச் செய்து கேட்பவரை நோக்கி முன்னேறிச் செல்லுமாறு அமைக்கப்பட்டுள்ளது.
இதயத் துடிப்பளவி:
இதயத் துடிப்பளவி என்பது ஒரு மருத்துவக் கருவியாகும். இது உடலில் உண்டாகும் ஒலிகளைக் கேட்க உதவுகிறது. உடலில் தோன்றும் ஒலியானது, இக்கருவியில் உள்ள இணைப்புக் குழாயில் பலமுறை எதிரொலிப்படைந்து, மருத்துவரின் செவியை அடைகிறது.
8.

ஒலி எதிரொலித்தல் விதிகள்:
(i) ஒலியானது ஒரு புள்ளியில் ஏற்படுத்தும் படுகோணமும் அது எதிரொலிக்கும் கோணமும் சமமாக இருக்கும்.
(ii) ஒலி படும் திசை, எதிரொலிக்கும் திசை மற்றும் அப்புள்ளியில் வரையப்பட்ட செங்குத்துக்கோடு ஆகியவை ஒரே தளத்தில் அமைகின்றன.
(iii) படத்தில் காட்டியுள்ளபடி இரண்டு குழாய்களை எடுத்துக் கொள்க. காகிதத்தைப் பயனப்டுத்தியும் அவற்றை உண்டு பண்ணலாம். ஒரே மாதிரியான இரண்டு குழாய்களைச் செய்க. குழாயின் நீளம் தேவையான அளவு பெரியதாக இருக்க வேண்டும். அவற்றை ஒரு மேசையின் மீது படத்திலுள்ளவாறு அமைக்க வேண்டும். ஒரு குழாயின் ஒரு முனையில் நிறுத்துக்கடிகாரத்தை வைக்கவும். மற்றொரு குழாயின் மூலம் நிறுத்துக்கடிகாரத்தின் ஒலியினைக் கேட்ட முயற்சிக்கவும். குழாயின் நிலையை மாற்றி ஒளியானது தெளிவாகக் கேட்குமாறு செய்ய வேண்டும். இப்பொழுது படுகோனம் மற்றும் எதிரொலிப்புக் கோணம் ஆகியவற்றை அளக்கவும். அவற்றிக்கிடையேயான தொடர்பைக் கண்டறியவும். படுகோனத்தின் மதிப்பை சோதனையை மீண்டும் செய்யவும்.
9.
கம்பிச் சுருள் அல்லது சுருள்வில் ஒன்றை எடுத்துக்கொண்டு அதனை முன்னும் பின்னும் நகர்த்தவும். கம்பிச்சுருளில் ஒரு சில பகுதியில் சுளைகள் நெருக்கமாகவும், சில பகுதிகளில் சுருள்கள் நெகிழ்வுடனும் உள்ளதைக் காணலாம். ஒலி அலைகளும் ஊடகத்தின் வழியே இவ்வாறு செல்கின்றன.

மேலே உள்ள செயல்பாட்டில் கம்பிச்சுருளின் ஒரு சில பகுதியில் சுருள்கள் நெருக்கமாக உள்ளதைக் காணலாம். இப்பகுதி நெருக்கப்பகுதி அல்லது அழுத்தப்பகுதி எனப்படுகிறது. இரண்டு நெருக்கங்களுக்கிடையே கம்பிச் சுருள் விலகி இருக்கும் பகுதி நெகிழ்வுப்பகுதி எனப்படும். கம்பிச்சுருள் அதிர்வுறும்போது நெருக்கமும் (C) நெகிழ்வும் (R) கம்பிச்சுருளின் வழியே நகர்ந்து செல்லும். இவ்வாறு நெருக்கமும் நெகிழ்ச்சியுமாகச் செல்லும் அலைகளே நெட்டலைகள் எனப்படுகின்றன. நெட்டலைகள் ஊடகத்தின் துகள்கள் பரவும் திசைக்கு இணையாக முன்னும் பின்னுமாக அதிர்வுறுகின்றன.


முன்னும் பின்னுமாக அதிர்வுறும் (நெட்டலைகள்) ஒலியும் ஒரு நெட்டலையாகும். ஊடகத்திலுள்ள துகள்கள் நெருக்கமும் நெகிழ்ச்சியும் அடையும்போதுதான் அதன் வழியே ஒலி அலைகள் செல்லமுடியும். நெருக்கம் என்பது துகள்கள் அருகருகே இருக்கும் பகுதியாகும். நெகிழ்வு என்பது குறைந்த அழுத்தம் உள்ள பகுதி ஆகும். அங்கு, துகள்கள் விலகியே இருக்கும். ஒலி என்பது எந்திரவியல் நெட்டலைக்கு ஒரு உதாரணமாகும். ஒரு ஊடகத்தில் ஒலி அலையின் நெட்டலைத் தன்மையை படம் விளக்குகிறது.
10.
ஒலியின் அதிர்வெண் = 600 Hz
600 Hz = 600 அதிர்வுகள் / வினாடி
ஒரு நிமிடம் = 60 வினாடி
ஒரு நிமிடத்திற்கு உண்டாகும் அதிர்வுகள் = 60 \(\times\) 600 = 3,600 அதிர்வுகள்
ஒரு நிமிடத்திற்கு 3600 முறை அதிர்வுரும்.
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - பண்டைய நாகரிகங்கள் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Ancient . Civilisations Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - புரட்சிகளின் காலம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - The Age of Revolutions Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - State and Society in Medieval India Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Colonialism in Asia and Africa Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards