9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கற்கண்டு (இலக்கணம்) - தொடர் இலக்கணம், ஆகுபெயர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -விரிவானம் (துணைப்பாடம்) - தாய்மைக்கு வறட்சி இல்லை! Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கவிதை பேழை (செய்யுள்) - மார்கழி பெருவிழா Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர்-இலக்கணம் - பகுபத உறுப்பிலக்கணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர் - இலக்கணம்-எழுத்து -அளபெடை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர்-துணைப்பாடம் - ஆறாம்திணை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 16/10/2019
Term 2 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள்
Download Tamil Nadu 9th Standard Science question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Science Test1.
கீழ்க்காண்பனவற்றிற்கான காரணங்கள் யாவை?
அ.மனித இனத்தில் ஆண்களின் விதைப்பையானது உடலுக்கு வெளியே உள்ளது.
ஆ.இரைப்பையின் சுவரானது அதனுடைய நொதியால் செரிக்கப்படமாட்டாது.
2.
பெண் இனப்பெருக்க மண்டலத்திலுள்ள அண்டகங்கள் மற்றும் கர்ப்பப்பை ஆகியவற்றின் பணிகள் யாவை?
3.
கீழ்காணும் சொற்கூறுகளை வேறுபடுத்துக.
அ. கழிவுநீக்கம் மற்றும் சுரத்தல்
ஆ. உரிஞ்சுதல் மற்றும் தன்மயமாதல்
இ. விந்து மற்றும் அண்டம்
ஈ. உட்கொள்ளுதல் மற்றும் வெளியேற்றுதல்
உ. இரட்டைப் பல்வரிசை மற்றும் கலப்பு பல் வரிசை
ஊ. வெட்டுப் பற்கள் மற்றும் கோரைப் பற்கள்
4.
நெஃப்ரானின் அமைப்பினை விளக்குக.
5.
ஸ்டார்ச், புரதங்கள் மற்றும் கொழுப்புகளின் செரிமானத்தின் இறுதி விளைபொருட்கள் யாவை?
6.
முதிர்ச்சியடைந்த மனிதனில் காணப்படும் பற்களின் பெயர்களை எழுதி அவற்றின் பணிகளைக் குறிப்பிடுக.
7.
கீழ்க்காணும் சொற்கூறுகளை வரையறுக்க
அ. செரித்தல்
ஆ. சவ்வூடுபரவலைச் சீராக்குதல்
இ. பால்மமாக்குதல்
ஈ. கருமுட்டை வெளிப்படுதல்
8.
சிறுநீரகத்தின் அமைப்பினையும், சிறுநீர் உருவாதலிலுள்ள படிநிலைகளையும் விளக்குக.
9.
மனிதனின் உணவுப் பாதையை விவரி
1.
அ) விதைப்பையானது வெப்ப சீராக்கியாக செயலாற்றும் உறுப்பாகும். விந்துக்களை உருவாக்குவதற்கு தேவையான உகந்த வெப்பநிலையை இது வழங்குகிறது. சாதாரண உடல் வெப்பநிலையை விட 1 முதல் 3°C குறைவான வெப்பநிலையில் விந்தணு வளர்ச்சி ஏற்படுகிறது. எனவே ஆண்களின் விதைப்பை உடலுக்கு வெளியே உள்ளது.
ஆ) இரைப்பை நீரில் ஹைட்ரோகுளோரிக் அமிலமும் மற்றும் பெப்சின் போன்ற நொதிகள் உள்ளன. இரைப்பையின் சுவரானது பாதிக்கப்படாத வரையிலும் நொதிகளால் செரிக்கப்படாமலும் கொழுகொழுப்பான திரவம் ஒன்று பாதுகாக்கப்படுகிறது.
2.

அண்டகங்கள்: பெண்களின் ஒரு ஜோடி பாதாம்-வடிவ அண்டகங்கள். கீழ் வயிற்றறையில் சிறுநீரகங்களுக்கு அருகில் அமைந்துள்ளன. அண்டகங்கள் பெண் இனப்பெருக்க சுரப்பிகள் ஆகும். இதிலிருந்து பெண் பாலின உயிரணு (கருமுட்டை அல்லது அண்டம்) மற்றும் பெண் பாலின ஹார்மோன்கள் (ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டிரான்) உற்பத்தி செய்யப்படுகின்றன. ஒரு முதிர்ந்த அண்டகத்தில் பல்வேறு நிலைகளில் வளர்ச்சியடைந்துள்ள அதிகப்படியான அண்டங்கள் / கருமுட்டைகள் காணப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் ஒரே ஒரு கருமுட்டையானது முதிர்ச்சியடைகிறது. ஒரு முதிர்ந்த கருமுட்டை ஏதாவது ஒரு அண்டகத்திலிருந்து ஒவ்வொரு 28 நாட்கள் இடைவெளியில் (மாதவிடாய் சுழற்சி) வெளியிடப்படுகிறது. இவ்வாறு கருமுட்டையானது அண்டகத்திலிருந்து வெளியேறும் செயல் கருமுட்டை வெளிப்படுதல் (Ovulation) என்று அழைக்கப்படுகிறது.
கர்ப்பப்பை: கர்ப்பப்பையானது ஒரு பேரிக்காய் போன்ற தசையாலான வெற்றிடமுள்ள அமைப்பையுடையது. இது இடுப்புக்குழிக்குள் அமைந்து காணப்படுகிறது. இந்த கர்ப்பப்பையானது, சிறுநீர்ப்பை மற்றும் மலக்குடலுக்கு இடையே உள்ளது. கருவின் வளர்ச்சியானது கர்ப்பப்பையின் உள்ளே நடைபெறுகிறது. கர்ப்பப்பையின் குறுகலான அடிப்பகுதியானது கருப்பைவாய் (செர்விக்ஸ்) என அழைக்கப்படுகிறது. இது யோனி என்ற பகுதிக்குள் செல்கிறது.
3.
அ) கழிவுநீக்கம் மற்றும் சுரத்தல்
உடலில் ஏற்படும் நைட்ரஜன் அடங்கிய கழிவுகளை கழிவு மண்டலம் மூலம் அகற்றுவது கழிவு நீக்கம் எனப்படுகிறது. ஹார்மோன்கள், என்சைம்கள், எண்ணெய், வியர்வை போன்றவை உடலின் பல்வேறு சுரப்பிகளால் சுரக்கப்பட்டு குறிப்பிட்ட ஒவ்வொன்றும் வேலையைச் செய்கின்றன. இதற்கு சுரத்தல் எனப் பெயர்.
ஆ) உறிஞ்சுதல் மற்றும் தன்மயமாதல்:
செரிக்கப்பட்ட உணவு சிறுகுடலில் உள்ள குடலுறிஞ்சுகளால் ஏற்கப்படுவது உறிஞ்சுதல் எனப்படுகிறது. உறிஞ்சப்பட்ட உணவுப் பொருள்கள் இரத்தத்தின் மூலம் செல்களைச் சென்றடைவதற்கு தன்மயமாதல் எனப் பெயர்.
இ) விந்து மற்றும் அண்டம்:
விந்து என்பது விந்தகங்களில் உற்பத்தியாகும் ஆண்பால் உயிரணுவாகும். இது நகரக் கூடியது. அண்டம் என்பது கருமுட்டையாகும். இது பெண்பாலின் உயிரணு.
ஈ) உட்கொள்ளுதல் மற்றும் வெளியேற்றுதல்:
வாயின் வழியே உணவு உண்பது உட்கொள்ளல் எனப்படுகிறது. உடலில் தோன்றும் கழிவுகள் மலக்குடலைக் கடந்து குதத்தின் வழியே வெளியேற்றப்படுவது வெளியேற்றுதல் எனப்படுகிறது.
உ) இரட்டைப் பல்வரிசை மற்றும் கலப்புப் பல்வரிசை:
மனிதர்களின் ஆயுட் காலத்தில் இரண்டுவிதமான பல்வரிசைகள் தோன்றுகின்றன. குழந்தைப் பருவத்தில் உண்டாகும் 20 பற்கள் அடங்கிய பால்பற்கள் இரட்டைப் பல்வரிசையாகும். அதன் பின் நிலையாக அமையும் 32 பல் கொண்ட அமைப்பு கலப்புப் பல்வரிசை எனப்படுகிறது. இதில் நான்கு வகைப் பற்கள் உள்ளன. 1) வெட்டுப் பற்கள் 2) கோரைப் பற்கள் 3) முன் கடை வாய்ப்பற்கள் 4) பின் கடை வாய்ப்பற்கள்.
ஊ) வெட்டுப் பற்கள் மற்றும் கோரைப் பற்கள்:
வெட்டுப் பற்கள் மொத்தம் 8 உள்ளன. இவை உணவை வெட்டுவதற்கும் கடிப்பதற்கும் பயன்படுகின்றன. கோரைப் பற்கள் நான்கு உள்ளன. இவை உணவைக் கிழிக்கப் பயன்படுகின்றன.
4.

ஒவ்வொரு சிறுநீரகத்திலும் ஒரு மில்லியனைவிட அதிகமான நெஃப்ரான்கள் அமைந்துள்ளன இந்த நெஃப்ரான்கள் அல்லது சிறுநீரைக் கொண்டுவரும் நுண்குழல்கள் சிறுநீரகத்தின் அடிப்படைச் செயல் அலகுகள் ஆகும். ஒவ்வொரு நெஃப்ரானும் சிறுநீரக கார்ப்பஸ்கிள் அல்லது மால்பீஜியன் உறுப்பு மற்றும் சிறுநீரக நுண்குழல்கள் ஆகிய இரு பகுதிகள் காணப்படுகின்றன. இச்சிறுநீரக கார்ப்பசலில் (Renal corpuscle) கிண்ண வடிவில் காணப்படும் பௌமனின் கிண்ணத்தில் இரத்த நுண்நாளங்களின் தொகுப்பாகிய குளோமெருலஸ் என்ற பகுதி காணப்படுகிறது. இரத்தமானது குளோமெருலஸில் உள்ள நுண்நாளத்தொகுப்பில் உட்செல் நுண் தமனி (Afferent arterioles) வழியாக உட்சென்று, வெளிச் செல் நுண்தமனி (Efferent arterioles) வழியாக வெளியேறுகிறது.
பௌமனின் கிண்ணத்தினைத் தொடர்ந்து உள்ள சிறுநீரக நுண்குழல்கள் மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளன. அவை உண்மை சுருள் நுண்குழலாகவும், 'U' வடிவில் கொண்ட ஹென்லேயின் வளைவாகவும், சேய்மை சுருள் நுண்குழலாகவும் தொடர்கின்றன. இச்சுருள் நுண்குழல் சேகரிப்பு நாளத்தில் திறக்கிறது. நைட்ரஜன் கழிவுகளெல்லாம் சிறுநீரகப் பெல்விஸில் வடிகட்டப்படுகின்றன. பின்னர் சிறுநீரானது சிறுநீர்ப்பையில் சேகரிக்கப்பட்டு, சிறுநீர்ப்புறவழிப் பகுதி மூலம் வெளியேற்றப்படுகிறது.
5.
| ஸ்டார்ச் | மால்டோஸ் |
| புரோட்டீன் | பெப்டோன்கள், பெப்டைடு, பாலிபெப்டைடுகள் |
| கொழுப்பு | கொழுப்பு அமிலங்கள், கிளிசரால் |
6.
| பற்களின் வகைகள் | பணிகள் |
| வெட்டுப் பற்கள் | வெட்டவும் கடிக்கவும் |
| கோரைப் பற்கள் | கிழிக்கவும் துளையிடவும் |
| முன்கடைவாய்ப் பற்கள் | நசுக்கவும் அரைக்கவும் |
| பின் கடைவாய்ப் பற்கள் | நசுக்கவும் அரைக்கவும் மெல்லவும். |
7.
அ) செரித்தல்: பெரிய, சிக்கலான, எளிதில் கரையாத உணவு மூலக்கூறுகளை சீரண மண்டலத்தின் நொதிகள் மூலம் கரையக்கூடிய, சிறிய மூலக்கூறுகளாக மாற்றும் முறையே செரித்தல் எனப்படுகிறது.
ஆ) சவ்வூடுபரவலைச் சீராக்கல்: செல்களில் உள்ள நீர், உப்புக்களின் அடர்த்தியை சீராக்கி, உடலில் தொடர்ச்சியான சவ்வூடுபரவல் அழுத்தத்தை நிலைநிறுத்தும் செயலே சவ்வூடுபரவலைச் சீராக்கல் எனப்படுகிறது.
இ) பால்மமாக்குதல்: பெரிய கொழுப்புச் சொட்டுகளை சிறிய கொழுப்புத் துகள்களாக மாற்றுவது பால்மமாக்கல் எனப்படுகிறது. பித்த உப்புக்கள் கொழுப்பைப் பால்மமாக்கி செரித்தலுக்கு உதவுகின்றன.
ஈ) கருமுட்டை வெளிப்படுதல்: அண்டகத்திலிருந்து கருமுட்டை விடுபட்டு வருவது கருமுட்டை வெளிப்படுதல் எனப்படுகிறது.
8.

சிறுநீரகங்கள் அடர் சிவப்பு நிறங்கொண்ட அவரை வடிவ உறுப்பாகும். இது முதுகெலும்பின் இரு பக்கத்திலும் வயிற்றுப் பகுதியின் அடிப்பாகத்திலுள்ள சுவர் பகுதியோடு ஒட்டிக் காணப்படுகிறது. கல்லீரலானது வலது புறத்தில் அதிக இடத்தில் படர்ந்திருப்பதால் வலது புறமுள்ள சிறுநீரகமானது இடதுபுற சிறுநீரகத்தைவிட சற்று கீழே காணப்படுகிறது. ஒவ்வொரு சிறுநீரகமும் சுமார் 11 செ.மீ நீளமும் 5 செ.மீ அகலமும் மற்றும் 3 செ.மீ பருமனும் கொண்டதாக இருக்கிறது. சிறுநீரகமானது தசைநார் இணைப்புத் திசுக்கள் சிறுநீரகக் கேப்சியூல்கள், கொழுப்பு கேப்சியூல்கள் மற்றும் இழைகளாலான சவ்வினால் மூடப்பட்டுள்ளது. சிறுநீரகத்தினுள் கார்டெக்ஸ் (புறணி) என்ற ஓர் அடர்த்தியான வெளிப்பகுதியும் மெடுல்லா என்ற மெலிதான உட்பகுதியும் காணப்படுகிறது. இவ்விரண்டு பகுதிகளும் சிறுநீரக நுண்குழல்கள் அல்லது நெஃப்ரான்களைக் கொண்டுள்ளன. மெடுல்லா என்ற பகுதியில் பல்வேறு நுண்குழாய்கள் கூம்பு வடிவில் குவிந்து ஒட்டுமொத்தமாக அமைந்துள்ளன. இவைகளின் அடித்தளமானது கார்டெக்ஸ் (புறணி) என்ற பகுதியின் அருகில் உள்ளது. ஒவ்வொரு சிறுநீரகத்தின் உட்குழிவுப் பகுதியில் ஹைலம் என்று அழைக்கப்படும், வாயில் போன்ற அமைப்பின் வழியே இரத்த நாளங்களும் மற்றும் நரம்புகளும் உள்ளே நுழைகிறது. அங்கிருந்து சிறுநீரானது வெளியேற்றப்படுகிறது.
சிறுநீர் உருவாகும் முறை:
கீழ்க்காணும் மூன்று படிநிலைகளில் சிறுநீரானது உருவாகிறது.கிளாமருலார் வடிகட்டுதல், குழல்களில் மீள உறிஞ்சப்படுதல் மற்றும் குழல்களில் சுரத்தல்
கிளாமருலார் வடிகட்டுதல்: கிளாமருலஸ் மற்றும் பௌமானின் கிண்ணம் ஆகியவற்றின் எபிதீலிய சுவர்களின் மூலமாக இரத்தமானது வடிகட்டப்படுவதால் சிறுநீரானது உருவாக்கப்படுகிறது. இவ்வாறாக வடிகட்டப்பட்ட திரவமானது கிளாமருலார் வடிதிரவம் எனப்படும். இரத்தத்தில் காணப்படும் தேவையான மற்றும் தேவையற்ற பொருள்கள் இங்கு வடிகட்டப்படுகின்றன.
குழல்களில் மீள உறிஞ்சப்படுதல்: அண்மைச் சுருள் நுண்குழலில் காணப்படும் வடித்திரவத்தில் தேவையான பொருள்களான குளுக்கோஸ், அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், சோடியம், பொட்டாசியம், பைகார்பனேட் மற்றும் நீர் ஆகியவை தேர்ந்தெடுத்து மீள உறிஞ்சுதல் என்ற நிகழ்வால் மீண்டும் உறிஞ்சப்படுகின்றன.
குழல்களில் சுரத்தல்: ஹைட்ரஜன் அல்லது பொட்டாசியம் அயனி போன்ற பொருள்கள் நுண் நாளங்களுக்குள் சுரக்கின்றன. பொட்டாசியம் மற்றும் பிற வேதிப்பொருள்களை பென்சிலின் மற்றும் ஆஸ்பிரின் போன்ற பொருள்கள் சேய்மைச் சுருள் நுண்குழல்களில் வடித்திரவமாக கடக்கின்றன. இந்த நுண்குழல் வடிதிரவமே இறுதியாக சிறுநீர் எனப்படுகிறது. இது மனிதனில் உயர் உப்படர்வுத் (hypertonic) தன்மையுடைய திரவமாக இருக்கிறது. இறுதியாக சேகரிப்பு நாளத்தில் சிறுநீரானது சேர்ந்து பெல்விஸ் பகுதிக்குச் சென்று சிறுநீர்க்குழாய்கள் வழியாக சிறுநீர்ப்பையை அணைந்து பெரிஸ்டால்ஸிஸ் இயக்கத்தின் மூலம் வெளியேறுகிறது. சிறுநீர்ப்பையிலிருந்து சிறுநீர் வெளியேற்றப்படும் நிகழ்வே மைக்டியூரிஷன் (அ) சிறுநீர் வெளியேற்றமாகும்.
9.

உணவுப் பாதையின் அமைப்பு :
உணவுப் பாதை ஒரு தசையாலான, சுருண்ட மற்றும் குழாய் வடிவ அமைப்பாகும். இவ்வுணவுப் பாதை, வாய், வாய்க்குழி, தொண்டை, உணவுக் குழல், இரைப்பை, சிறுகுடல் (முன் சிறுகுடல், நடுச்சிறுகுடல் மற்றும் பின் சிறுகுடல் உள்ளடங்கியது). பெருங்குடல் (குடல்வால், கோலன் மற்றும் மலக்குடல் உள்ளடங்கியது) மற்றும் மலவாய் போன்ற உறுப்புகளைக் கொண்டுள்ளது.
அ) வாய்
உணவுப் பாதையின் ஆரம்பத் துவாரமாகும். இது வாய்க்குழிக்குள் திறக்கிறது. இது இரு மென்மையான அசையும் மேல் மற்றும் கீழ் உதடுகளால் பிணைக்கப்பட்டுள்ளது. வாய்க்குழியானது பெரிய இடைவெளியோடு மேல் பகுதியில் அண்ணம் (காற்றுக் குழாயையும் உணவுக் குழாயையும் பிரிப்பது) என்ற பகுதியாலும் கீழ்ப்பகுதி தொண்டையாலும் பக்கப்பகுதியானது தாடைகளாலும் பிணைக்கப்பட்டுள்ளது. தாடைகள் பற்களைத் தாங்குகின்றன.
ஆ) பற்கள்
கடினமான கட்டமைப்பைக் கொண்ட பற்கள் உணவைப் பிடித்துக்கொள்வதற்கும், வெட்டுவதற்கும், அரைப்பதற்கும் மற்றும் நசுக்குவதற்கும் உதவுகின்றன. மனிதர்களின் வாழ்நாளில் பற்கள் இரண்டு தொகுப்பாக (இரட்டை பல்வரிசை) உருவாகின்றன. முதலில் இருபது தற்காலிக இணைப்பற்கள் அல்லது பால் பற்கள் தோன்றுகின்றன. பின்னர் இப்பற்களுக்குப் பதிலாக இரண்டாம் தொகுப்பில், முப்பத்திரெண்டு நிரந்தர
பற்கள் (கலப்பு பல் வரிசை) மாற்றியமைக்கப்படுகின்றன. இவைகள் ஒரு தாடைக்கு பதினாறு வீதம் இருக்கும். ஒவ்வொரு பல்லும் ஒரு வேரினைக் கொண்டு ஈறுகளில் (தீகோடான்ட்) பொருத்தப்பட்டுள்ளது.
| பற்களின் வகைகள் | பற்களின் எண்ணிக்கை | பணிகள் |
| வெட்டுப் பற்கள் | 8 | வெட்டவும் கடிக்கவும் |
| கோரைப் பற்கள் | 4 | கிழிக்கவும் துளையிடவும் |
| முன் கடைவாய்ப் பற்கள் | 8 | நசுக்கவும் அரைக்கவும் |
| பின் கடைவாய்ப் பற்கள் | 12 | நசுக்கவும் அரைக்கவும் மெல்லவும். |
இ) உமிழ்நீர்ச் சுரப்பிகள்:
வாய்க் குழிக்குள் மூன்று இணை உமிழ்நீர்ச் சுரப்பிகள் காணப்படுகின்றன. அவையாவன மேலண்ணச் சுரப்பி. நாவடிச் சுரப்பி மற்றும் தாடைச் சுரப்பி
i. மேலண்ணச் சுரப்பி
இச்சுரப்பிதான் மிகப்பெரிய சுரப்பியாகும். இவை இரு கன்னங்களிலும், காதுக்குக் கீழே அமைந்துள்ளன
ii. நாவடிச் சுரப்பி
இது மிகச்சிறிய சுரப்பியாகும் நாவின் அடிப்புறத்தில் அமைந்துள்ளது.
iii. கீழ் மற்றும் மேல் தாடைச் சுரப்பிகள்
இவைகள் கீழ்தாடைகளின் கோணங்களில் காணப்படுகின்றன.
நாக்கு:
நாக்கு ஒரு தசையாலான, உணர்ச்சி உறுப்பு ஆகும். இது உமிழ்நீருடன்
உணவானது கலக்க உதவுகிறது. உணவின் சுவையை உணர்வதற்கு நாவில் உள்ள
சுவை மொட்டுகள் உதவுகின்றன.
தொண்டை:
தொண்டை என்பது, மூக்கு மற்றும் வாய்க்கு பின்னால் காணப்படும் மென்படலத்தால் சூழப்பட்ட குழி போன்ற அமைப்பு ஆகும். இது வாய்ப் பகுதியை உணவுக் குழலுக்கு கடந்து செல்லும் ஒரு பாதையாக பயன்படுகிறது.
உணவுக் குழல்:
இது 22 செமீ நீளமுடைய தசைப்படலக் குழலாகும். இது தொண்டையிலிருந்து உணவினை இரைப்பைக்கு பெரிஸ்டால்சிஸ் என்னும் குடல் தசைச் சுவரின் சீரான சுருங்குதல் மற்றும் தளர்தல் (அலை போன்ற இயக்கம்) போன்ற நிகழ்வால் கடத்துகிறது.
ஈ) இரைப்பை
இரைப்பையானது உணவுக் குழலுக்கும் - சிறுகுடலுக்குமிடையே 'J' போன்ற வடிவத்தில் காணப்படும் தசையாலான அகன்ற உறுப்பாகும். இரைப்பையின் உள்ளடுக்கு சுவரில் காணப்படும் சுரப்பிகளிலிருந்து இரைப்பை நீர் சுரக்கிறது. இந்த இரைப்பை நீர், நிறமற்றதாகவும், அதிக அமிலத் தன்மையுடைய ஹைட்ரோகுளோரிக் அமிலத்தையும், நொதிகளான ரென்னின் (பச்சிளம் குழந்தைகளில்) மற்றும் பெப்சின் ஆகியவற்றை கொண்டதாகவும் உள்ளது.
உ) சிறுகுடல்:
உணவுக் கால்வாயில் மிகவும் நீளமான பகுதி சிறுகுடல் ஆகும். இது 5 - 7 மீட்டர் நீளமுள்ள சுருண்ட குழலாகும். இக்குடல் மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது. அவை முன்சிறுகுடல் (டியோடினம்), நடுச்சிறுகுடல் (ஜூஜினம்) மற்றும் பின்சிறுகுடல் (இலியம்) ஆகும்.
i. முன்சிறுகுடல் (டியோடினம்):
சிறுகுடலின் மேல்பகுதியாயிருக்கும் இது 'C' வடிவத்தில் காணப்படுகிறது. பித்த நாளமும் (கல்லீரலிலிருந்து) கணைய நாளமும் (கணையத்திலிருந்து) இணைந்து டியோடினத்தில் திறக்கின்றன.
ii. நடுசிறுகுடல் (ஜூஜினம்):
சிறுகுடலின் நடுப்பகுதி ஜூஜினம் ஆகும். இது சிறுகுடலின் சிறிய பகுதியாகும். சிறுகுடல் சுரக்கும் சுரப்புப் பொருள்கள் சிறுகுடல் நீர் ஆகும். சிறுகுடல் நீரில் சுக்ரோஸ், மால்டேஸ், லாக்டேஸ் மற்றும் லிப்பேஸ் போன்ற நொதிகள் காணப்படுகின்றன.
iii. பின்சிறுகுடல் (இலியம்):
சிறுகுடலின் அடிப்பகுதியாக இருக்கும் இப்பகுதி பெருங்குடலில் திறக்கிறது. இலியம் சிறுகுடலின் அதிக நீளமான பகுதியாகும். இவையாகும் இவைகளில் மிகச்சிறிய விரல் போன்ற நீட்சிகள் காணப்படுகின்றன.
ஊ) கல்லீரல்
உடலில் காணப்படும் மிகப் பெரிய செரிமானச் சுரப்பி கல்லீரல் ஆகும். இது வலது மற்றும் இடது என இரண்டு கதுப்புகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வலது கதுப்பானது. இடது கதுப்பைவிட பெரிதானதாகும். கல்லீரல் செல்கள் பித்தநீரைச் சுரக்கிறது. அது தற்காலிகமாக பித்தப்பையில் சேகரிக்கப்படுகிறது.
எ) கணையம்
இது பிளவுபட்ட இலை போன்ற அமைப்புடைய சுரப்பியாகும். இரைப்பைக்கும் டியோடினத்திற்கும் (முன் சிறுகுடல்) இடையே அமைந்துள்ளது. கணையமானது நாளமுள்ள சுரப்பியாகவும் நாளமில்லாச் சுரப்பியாகவும் செயலாற்றுகிறது. நாளமுள்ள சுரப்பியின் பகுதியாகயிருக்கின்ற கணையத்தின் சுரப்புப்பகுதி கணைய நீரைச் சுரக்கிறது அவற்றில் மூன்று நொதிகள் காணப்படுகின்றன. அவையாவன லிப்பேஸ், டிரிப்சின் மற்றும் அமைலேஸ். இவை, முறையே கொழுப்பு. புரதம் மற்றும் ஸ்டார்ச் ஆகியவற்றில் செயலாற்றுகின்றன. இதன் மேற்புறத்தில் லாங்கர்கான் திட்டுகள் காணப்படுகின்றன. இந்த லாங்கர்கான் திட்டுகள் நாளமில்லா செல்களைக் கொண்டுள்ளது மற்றும் ஹார்மோன்களையும் சுரக்கின்றன. இதிலுள்ள ஆல்பா செல்கள் குளுக்கோகான் என்ற ஹார்மோனையும், பீட்டா செல்கள் இன்சுலின் ஹார்மோனையும் சுரக்கின்றன.
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - மணிமேகலை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - ஏறு தழுவுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர் - தண்ணீர் Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards