9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கற்கண்டு (இலக்கணம்) - தொடர் இலக்கணம், ஆகுபெயர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -விரிவானம் (துணைப்பாடம்) - தாய்மைக்கு வறட்சி இல்லை! Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கவிதை பேழை (செய்யுள்) - மார்கழி பெருவிழா Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர்-இலக்கணம் - பகுபத உறுப்பிலக்கணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர் - இலக்கணம்-எழுத்து -அளபெடை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர்-துணைப்பாடம் - ஆறாம்திணை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 16/10/2019
Term 3 அண்டம்
Download Tamil Nadu 9th Standard Science question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Science Test1.
பூமியில் உயிர்வாழ்வதற்கான காரணிகள் யாவை?
2.
ககன்யான்-குறிப்பு வரைக.
3.
கெப்ளரின் விதிளை வரையறு
4.
வால் விண்மீன்கள் என்றால் என்ன?
5.
‘உட்புறக் கோள்கள்’ - குறிப்பு வரைக.
6.
சுழற்சித் திசைவேகம் என்றால் என்ன ?
7.
பன்னாட்டு விண்வெளி மையத்தின் நன்மைகளை விவாதி.
8.
சூரிய மண்டலத்தில் உள்ள கோள்களைப் பற்றி குறிப்பு வரைக.
9.
பூமியிலிருந்து 400 கிமீ தொலைவில் உள்ள, கோளின் சுழற்சிக் காலத்தைக் கணக்கிடவும்.
10.
புவியின் பரப்பிலிருந்து 36000 உயரத்திலும், சுழற்சிக் காலம் 24 மணி நேரத்தையும் கொண்டுள்ள செயற்கைக் கோளின் வேகத்தைக் கணக்கிடவும். R – 6370 கிமீ எனக் கொள்க .
(குறிப்பு: மணி நேரத்தை வினாடிகளில் மாற்றியபின் கணக்கிடவும்)
1.
சூரிய மண்டலத்திலுள்ள கோள்களிலேயே நாம் வாழும் பூமியில் மட்டும்தான் உயிர்வாழத் தகுதியான சூழல் உள்ளது. சூரியனிலிருந்து சரியான தொலைவில் அது உள்ளதால், சரியான வெப்பநிலை, நீர் ஆதாரம், சரியான வளிமண்டலம் மற்றும் ஓசோன் படலம் ஆகியவற்றை பூமி கொண்டுள்ளது. இவையனைத்தும் உள்ளதால் தான், பூமியில் உயிர்கள் தொடர்ந்து வாழ்வதென்பது சாத்தியமாகின்றது.
2.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) தலைவர், கே.சிவனின் கூற்றுப்படி,2021 / 2022 -ம் ஆண்டில் இந்திய மனித விண்வெளிப் பயணத்திட்டத்தை இஸ்ரோ செயல்படுத்தும். இதன் முதல் பணிக்குழுவில் மூன்று விண்வெளி வீரர்கள் இருப்பர். ஜி.எஸ்.எல்.வி - III ராக்கெட் மூலம் விண்வெளிக்கு இவர்களை எடுத்துச் செல்லும் திட்டம் ககன்யான் என்றழைக்கப்படுகிறது. இந்தத் திட்டத்திற்கு மேம்படுத்தப்பட்ட ஏவுதல் தொழிநுட்பத்தில் வல்லுநரான வீ.ஆர்.லலிதாம்பிகா என்பவர் இயக்குநராகப் பொறுப்பேற்றுள்ளார்.
3.
முதல் விதி - நீள்வட்டங்களின் விதி
சூரியனின் மையம் ஒரு குவியத்தில் உள்ளவாறு, நீள்வட்டப் பாதையில் கோள்கள் சூரியனைச் சுற்றி வருகின்றன.
இரண்டாவது விதி - சமபரப்புகளின் விதி
கோளின் மையத்தையும் சூரியனின் மையத்தையும் இணைக்கும் கற்பனைக் கோடு சம காலங்களில் சமபரப்புகளைக் கடக்கிறது.
மூன்றாவது விதி - ஒத்திசைவுகளின் விதி
எந்த இரு கோள்களுக்கும், சுற்றுக்காலங்களின் இருமடிகளின் விகிதம் சூரியனிலிருந்து அவற்றின் பாதியளவு பேரச்சுகளின் மும்மடிகளின் விகிதத்திற்குச் சமம்.
4.
அதி நீள்வட்டப் பாதையில் நம் சூரியனைச் சுற்றிவரும் தூசு மற்றும் பனி நிறைந்த பொருள்களே வால் விண்மீன்கள் எனப்படும். இவற்றின் சுற்றுக்காலம் அதிகம் ஆகும். இவை சூரியனை நெருங்கும் போது ஆவியாகி தலை மற்றும் வால் ஆகியவை உருவாகின்றன.
5.
சூரிய மண்டலத்திலுள்ள கோள்கள் யாவும் வெவ்வேறு இடைவெளிகளில் காணப்படுகின்றன. முதல் நான்கு கோள்களான புதன், வெள்ளி, பூமி மற்றும் செவ்வாய் போன்றவை ஒன்றுக்கொன்று நெருக்கமாகவும், சூரியனுக்கு அருகாமையிலும் உள்ளன. எனவே அவை உட்புற சூரிய மண்டத்தை அமைக்கின்றன. மேலும் அவற்றின் புறப்பரப்பு திண்மப்பாறை மேலோட்டினால் அமைந்து உள்ளதால் அவை நிலம் சார் கோள்கள் என அழைக்கப்படுகின்றன. அவற்றின் உட்பகுதி புறப்பரப்பு மற்றும் வளிமண்டலம் ஆகியவை ஒரே முறையில் ஒரே வடிவில் உருவானவை. மேலும் அவை எந்த அமைப்பில் உள்ளவை. இவற்றிற்கு வளையங்கள் இல்லை.
6.
ஒரு செயற்கைகோளின் சுற்றியக்கத் திசைவேகம் என்பது அது புவியிலிருந்து உள்ள உயரத்தைப் பொறுத்தது. பூமிக்கு எந்த அளவிற்கு அருகில் உள்ளதோ அந்த அளவிற்கு அதன் வேகம் அதிகமான இருக்க வேண்டும். 200 கி.மீ தொலைவில் உள்ள செயற்கைக்கோள் ஒன்று கிட்டத்தட்ட 27,400 கி.மீ/மணி வேகத்திற்கும் சற்று அதிகமாக வேகத்துடன் இயங்க வேண்டும்.

அவ்வாறு இயங்கும்போது அது 24 மணி நேரத்தில் பூமியைச் சுற்றிவரும், புவியின் பரப்பிற்கு மேல் ஒரே இடத்தில் இருப்பது போல் தோன்றும். இவ்வாறாக, புவியைப் பொறுத்து ஒரே நிலையில் இருப்பதால், இவ்வகை செயற்கைக்கோள்களுக்கு புவிநிலை செயற்கைக்கோள்கள் என்று பெயர். சுற்றியக்கத் திசைவேகத்தை (v) பின்வரும் வாய்ப்பாட்டினக் கொண்டு கணக்கிடலாம்.
v = \(\frac {GM}{\sqrt {(R + h)}}\) இங்கு
G = ஈர்ப்பியல் மாறிலி = 6.67 \(\times\) 10-11 நிமீ 2.கிகி-2
M = புவியின் நிறை = 5.972 \(\times\) 1024 கிகி
R = புவியின் ஆரம் = 6371 கிமீ
h = புவிபரப்பிலிருந்து செயற்கைக்கோளின் உயரம்.
7.
பன்னாட்டு விண்வெளி மையத்தில் பயன்படுத்தியுள்ள தொழில்நுட்பத்தைக் கொண்டு தண்ணீர்த் தட்டுப்பாடு உள்ள இடங்களில் மேம்படுத்தப்பட்ட நீர் கொண்டு வடிகட்டுதல் மற்றும் சுத்திகரிக்கும் முறைகளைப் பெறலாம். தண்ணீர்த் தட்டுப்பாடு நிறைந்த இடங்களில் வாழும் மக்களுக்கு உயிர் காக்கும் வழிமுறையாக இது இருக்கக் கூடும். பன்னாட்டு விண்வெளி மையத்திற்காக (ISS) உருவாக்கப்பட்ட நீர் மீட்பு அமைப்பு (WRS) மற்றும் ஆக்சிஜன் உருவாக்கும் அமைப்பு (OGS) ஆகியவை, சுத்தமான குடிநீர் அங்கு இல்லை என்பதால், ஈராக் நாட்டிலுள்ள, மக்களால் புறக்கணிக்கப்பட்ட ஒரு கிராமத்தை காப்பாற்றி அவர்களை மீண்டும் அங்கு வாழ வழிவகை செய்துள்ளன.
கண்ணைத் தொடரும் தொழில்நுட்பம்:
நுண் ஈர்ப்பு நிலையில் ஆய்வுகளை செய்வதற்காக உருவாக்கப்பட்ட கண்ணைத் தொடரும் கருவி பல லேசர் அறுவை சிகிச்சைகளில் பயன்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை நிபுணரின் செயல்பாட்டிற்கு இடையூறு ஏற்படுத்தா வண்ணம், இந்தக் கருவியானது கண்ணின் நிலையைத் துல்லியமாகத் தொடர்கிறது. இயக்கக்குறைபாடு மற்றும் பேச்சில் குறைபாடுள்ளவர்களுக்கு இந்த கண்ணைத் தொடரும் தொழில்நுட்பமானது வெகுவாகப் பயன்படுகிறது. எடுத்துக்காட்டாக, தீவிர இயக்கக் குறைபாடுள்ள ஒரு குழந்தை, அதன் கண் அசைவுகளை மட்டுமே வைத்து அன்றாட செயல்பாடுகளை செய்து கொண்டு யாரையும் சாந்திராத வாழ்க்கையை வாழ இயலும்.
தானியங்கி கைகள் மற்றும் அறுவை சிகிச்சைகள்:
அறுவை சிகிச்சை மூலம் அகற்ற இயலாத கட்டிகளை (எ.கா: மூளைக் கட்டிகள்) நீங்குவதற்கும் மிகத் துல்லியான முறையில் உடல்திசு ஆய்வு செய்வதற்கும் (biospy), பன்னாட்டு விண்வெளி மையத்தில் ஆராய்ச்சிக்குத் துணையாக இருப்பதற்காக விண்வெளி வீரர்களுக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்ட பெரும் தானியங்கி கைகள், அறுவை சிகிச்சை தானியங்கியாக (surgical robot) செயல்பட்டு புற்றுநோய் சிகிச்சைக்குப் பயன்படுகின்றன. இத்தகைய கருவிகளால் மிகத்துல்லியமான முறையில் உடல் திசு ஆய்வுகளைச் செய்ய முடியும் என்று இதை உருவாக்கியவர்கள் கூறுகின்றனர்.
இவற்றை தவிரவும் இன்னும் பல வழிகளில் பன்னாட்டு விண்வெளி மையத்தில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் நமக்கு பயனுள்ளதாய் அமைகின்றன. அவையாவன: மேம்படுத்தப்பட்ட தடுப்பூசிகளை உருவாக்குதல், மார்பகப் புற்றுநோயைக் கண்டறிதல் மற்றும் சிகிச்சை, அணுக முடியாத பகுதிகளுக்குள் செல்வதற்கான மீயொலிக் கருவிகள் உள்ளிட்ட இன்னும் பல.
8.
வட்ட வடிவமான சுற்றுப்பாதையில் கோள்கள் சூரியனைச் சுற்றி வருகின்றன. அவை நீள் வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன. சூரிய மண்டலத்திலுள்ள கோள்கள் யாவும் வெவ்வேறு இடைவெளியில் காணப்படுகின்றன. முதல் நான்கு கோள்களான புதன், வெள்ளி, பூமி மற்றும் செவ்வாய் ஆகியவை உட்புறக்கோள்கள் என்று அழைக்கப்படுகின்றன. வெளிப்புற சூரிய மண்டலத்தில் ஒப்பீட்டளவில் சூரியனை மெதுவாகச் சுற்றிவரும் கோள்களான வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகியவை வெளிப்புறக்கோள்கள் என அழைக்கப்படுகின்றன.
(i) புதன்:
சூரியனுக்கு மிக அருகில் அமைந்துள்ள பாறைக்கோள்தான் புதன் ஆகும். இது பகலில் மிக அதிக வெப்பத்துடனும் இரவில் அதிகக் குளிருடனும் காணப்படும். மற்ற எந்த கோள்களையும் விட சூரியனை இது வேகமாகச் சுற்றி வருகின்றது - இதன் சுற்றுக்காலம் 87.97 புவி நாள்களாகும். ஆனால், இது தன்னைத்தானே சுழல எடுத்துக் கொள்ளும் சுழற்சிக்காலம் மிக அதிகம். அதாவது, புதனில் ஒரு நாள் என்பது 58.65 புவி நாள்களாகும்.
(ii) வெள்ளி:
கிட்டத்தட்ட பூமியின் அளவையொத்த ஒரு சிறப்புக்கோள் வெள்ளி. நம் சூரியமண்டலத்தில் காண்ப்படும் கோள்களிலேயே அதிக வெப்பநிலை கொண்டது வெள்ளி ஆகும். நிலவிற்குப் பிறகு, வானத்தில் தெரியும் மிகப்பிரகாசமான வான்பொருள் இதுவே. இதில் ஒரு நாள் என்பது அதனுடைய ஒரு ஆண்டை விட நீண்டது. வெள்ளியில் ஒரு நாள் என்பது 243 புவி நாள்களாகவும் ஒரு ஆண்டு என்பது 224.7 புவி நாள்களாகவும், உள்ளது. மற்ற கோள்களைப்போல் அல்லாமல், இது எதிர்த் திசையில் சுழல்வதால், இங்கு சூரியன் மேற்கே தோன்றி கிழக்கே மறைகிறது. வெள்ளியை நாம் வெறும் கண்ணால் எளிதில் காணலாம். அது கிழக்கு அல்லது மேற்குத் திசையில் கீழ்வானத்தில் தெரியும்.
(iii) பூமி:
சூரிய மண்டலத்திலுள்ள. கோள்களிலேயே நாம் வாழும் பூமியில் மட்டும்தான் உயிர் வாழத் தகுதியான சூழல் உள்ளது. சூரியனிலிருந்து சரியான தொலைவில் அது உள்ளதால், சரியான வெப்பநிலை, நீர் ஆதாரம், சரியான வளிமண்டலம் மற்றும் ஓசோன் படலம் ஆகியவற்றை பூமி கொண்டுள்ளது. இவையனைத்தும் உள்ளதால்தான், பூமியில் உயிர்கள் தொடர்ந்து வாழ்வதென்பது சாத்தியமாகின்றது. பூமியானது, சூரியனைச் சுற்றிவர எடுத்துக்கொள்ளும் காலம் 365.25 நாட்களாகவும், அதன் சுழற்சிக்காலம் 23.93 மணியாகவும் உள்ளது. பூமியின் சுழற்சி அச்சானது அதன் சுற்றுத்தளத்திற்கு செங்குத்தாக அமைந்திருப்பதில்லை. மாறாக, சற்று சாய்வுடன் உள்ளது. இவ்வாறு சாய்ந்துள்ளதால்தான், பூமியில் பருவநிலை மாற்றங்கள் ஏற்படுகின்றன. பூமியின் மீதுள்ள நீர் மற்றும் நிலப்பகுதிகளின் மீது ஒளி எதிரொளிப்பதனால், விண்ணிலிருந்து பார்க்கும்போது பூமி நீலம் கலந்த பச்சை நிறத்துடன் காணப்படும்.
(iv) செவ்வாய்:
புவியின் சுற்றுப்பாதைக்கு வெளியில் அமைந்துள்ள முதல் கோள் செவ்வாய் ஆகும். இது சற்றே சிவப்பு நிறத்தில் காணப்படுவதால், இது சிவப்புக்கோள என அழைக்கப்படுகிறது. இதற்கு டீமோஸ் மற்றும் போபோஸ் எனப்படும் இரு இயற்கைத் துணைக்கோள்கள் உள்ளன. இங்கு ஒரு நாள் என்பது 24 மணி 37 நிமிடம் 22 விநாடியாகவும், ஒரு வருடம் என்பது 686.96 புவி நாள்கள், கிட்டத்தட்ட 687 நாள்களாகவும் உள்ளது.
(v) வியாழன்:
வியாழன் கோளானது, பெருங்கோள் என அழைக்கப்ப்டுகின்றது. கோள்களிலேயே மிகப்பெரியது இதுவே. இதற்கு 3 வளையங்களும் 65 நிலவுகளும் உள்ளன. இதன் நிலவான கானிமீடு என்ற நிலவுதான் சூரிய மண்டலத்திலேயே மிகப்பெரிய நிலவாகும். மற்ற கோள்களையெல்லாம் விட மிக வேகமாக இது சுழல்வதால், வியாழனின் ஒரு நாள் என்பது 9 மணி 55 நிமிடங்கள் 30 வினாடிகளாக உள்ளது. அங்கு ஒரு வருடம் என்பது 11.862 புவி வருடங்கள் ஆகும்.
(vi) சனி:
வளையங்களுக்குப் பெயர்போன சனி கோள், மஞ்சள் நிறத்தில் காணப்படுகின்றது. வெளிப்புற சூரியமண்டலத்தில் காணப்படும் இக்கோளானது வியாழனுக்கு அடுத்து இரண்டாவது பெரும் வாயுக்கோளாகும். இது மிக வேகமாக சுழல்கின்றது. சனியின் வருவதால் இதன் சுற்றுக்காலம் 59.46 புவி ஆண்டுகளாகவும் இருக்கின்றது. குறைந்தபட்சம் சனியின் 60 நிலவுகள் உள்ளன. டைட்டன் என்ற நிலவே அதில் பெரியது ஆகும். நம் சூரிய மண்டலத்தில் மேகங்களுடன் கூடிய ஒரே நிலவு இதுவாகும். சனியின் அடர்த்தி மிகவும் குறைவாக உள்ளதால் (புவியை விட 30 மடங்கு குறைவு) இந்த கோள் கனமற்றது.
(vii) யுரேனஸ்:
யுரேனஸ் கோளானது ஒரு குளிர்மிகு வாயுப் பெருங்கோளாகும். இது சூரிய மண்டலத்தின் ஏழாவது கோள் ஆகும். இது மிகவும் சாய்ந்து சூழல் அச்சைக் கொண்டுள்ளது. அதனால் இது உருண்டோடுவது போல் தெரிகின்றது. இதன் சுற்றுக்காலம் 84 புவி ஆண்டுகள் மற்றும் சுழற்சிக்காலம் 17.2 மணி நேரமாகும். இதன் அசாதாரண சாய்வின் காரணமாக இங்கு கோடை காலமும், குளிர்காலமும் மிக நீண்டு இருக்கும், ஒவ்வொன்றும் 42 ஆண்டுகளாக உள்ளன.
(viii) நெப்டியூன்:
இக்கோளானது பச்சை நிற விண்மீன் போன்று காட்சியளிக்கும். சூரியனிலிருந்து எட்டாவதாக உள்ள இந்தக் கோள் மிகவும் காற்று வீசக்கூடிய கோளாகும். 248 ஆண்டுகளுக்கு ஒருமுறை புளுட்டோ இதன் சுற்றுப்பாதையைக் கடக்கிறது. இந்த நிலை 20 ஆண்டுகளுக்குத் தொடர்கிறது. இதற்கு 13 நிலவுகள் உள்ளன . அதில் டிரைட்டான் என்ற நிலவே பெரியதாகும். சூரிய மண்டலத்தில் கோளின் சுழற்சிக்கு எதிர்த்திசையில் சுற்றும் ஒரே நிலவு டிரைட்டான் ஆகும்.
9.
பூமியிலிருந்து கோள்களின் உயரம்(h) = 400 கி.மீ
= 400 \(\times\) 103 மீ
= 400000 மீ
புவியின் விட்டம் (R) = 6370 கி.மீ
= 6370 \(\times\) 103மீ
= 6370000 மீ
ஈர்ப்பியல் மாறிலி (G) = 6.67 \(\times\) 10-11 நி.மீ 2 கி.கி-2
புவியின் நிறை (M) = 5.972 \(\times\) 1024 கி.கி
செயற்கை கோளின் வேகம்
\((v) =\sqrt{\frac{G M}{(R\ +\ h)}} \\ (v) =\sqrt{\frac{6.67\ \times\ 10^{-11}\ \times\ 5.972\ \times\ 10^{24}}{6370000\ +\ 400000}} \\ =\sqrt{\frac{39.83\ \times\ 10^{13}}{6770\ \times\ 10^{3}}} \\ =\sqrt{5.8 \times 10^{7}} \)
\(=10^{3} \sqrt{58}\)
= 7620 மீ /வி
கோள்களின் சுழற்சிக்காலம்
\((T) =2 \pi \frac{(R+h)}{v} \\ =2 \times \frac{22}{7} \times \frac{6370000+400000}{7620} \\ =\frac{44}{7} \times \frac{6770000}{7620} \\ =\frac{297880000}{53340} \)
= 5584 வினாடிகள்
= 93 நிமிடம் (60 வினாடி = 1நிமிடம்)
கோள்களின் சுழற்சிக்காலம் (T) = 93 நிமிடம்
10.
செயற்கைக் கோள் நிலை கொண்டுள்ள
உயரம் (h) = 36000 கி.மீ
= 36,000 \(\times\) 103 மீ
=36000000 மீ
செயற்கைக் கோளின் சுழற்சிக்காலம் (T) = 24 மணிநேரம்
= 24 \(\times\) 60 \(\times\) 60 வினாடி
= 86400 வினாடி
புவியின் விட்டம் (R) = 6370 கி.மீ
= 6370 \(\times\) 103 மீ
= 6370000 மீ
செயற்கைக் கோளின் வேகம் (V) = ?
v = \(\frac {2\pi (R +h)}{T}\)
= 2 \(\times\) \(\frac {22}{7}\) \(\times\) \(\frac{6370000+36000000} {86400}\)
= 2 \(\times\) \(\frac {22}{7}\) \(\times\) \(\frac{(637+3600)} {86400}\times10\)4
=\(\frac{44} {7}\times\frac {4237} {86400}\times10\)4
செயற்கைக் கோளின் வேகம் (v) = 3082 மீ /வி
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - மணிமேகலை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - ஏறு தழுவுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர் - தண்ணீர் Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards