9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9ஆம் வகுப்பு கணிதம் ஆயத்தொலை வடிவியல்,முக்கோணவியல் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Maths Coordinate Geometry,Trigonometry Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு கணிதம் அளவியல்,புள்ளியியல்&நிகழ்தகவு முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Maths Mensuration,Statistics&Probability Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - செவ்வியல் உலகம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - The Classical World Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Early Tamil Society and Culture Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - தொழிற்புரட்சி முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Industrial Revolution Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - நவீன யுகத்தின் தொடக்கம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - The Beginning of the Modern AgeImportant 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.

Published on: 21/01/2020
Download Tamil Nadu 9th Standard Social Science question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
இந்தியப் பொருளாதாரம் காலனிமயமாக்கப்பட்டதின் மூன்று கட்டங்களைக் கூறுக.
2.
பிரான்சின் மூன்று வர்க்கங்களின் அமைப்பு (Three Estates) பற்றி எழுதுக
3.
கடல் நீரோட்டங்களைத் தோற்றுவிக்கும் காரணிகள் யாவை?
4.
கான்ஸ்டன்டைனின் முக்கிய பங்களிப்பை சுட்டிக் காட்டுக.
5.
அஜாதசத்ருவைப் பற்றிக் கூறு?
6.
சங்க காலம் குறித்து அறிந்து கொள்ள நாணயங்கள் எந்தளவுக்கு ஒரு முக்கியமான சான்றாக உள்ளன?
7.
காற்றின் அரித்தல் செய்கையால் உருவாக்கப்படும் நிலத்தோற்றங்களை பட்டியலிடு.
8.
இந்தியாவில் காணப்படும் ஏதேனும் நான்கு சுண்ணாம்புப்பாறை பிரதேசங்களை பட்டியலிடுக
9.
குறுட்டு ஆறு என்றால் என்ன?
10.
உனது பகுதியைப் பற்றி நீ பார்த்தறிந்த குடியிருப்பு வகைகளை பற்றி எழுதுக
11.
ஹே மார்க்கெட் படுகொலை பற்றிக் குறிப்பு வரைக.
12.
கூட்டாட்சி முறையின் நிறைகள் யாவை?
13.
வயது வந்தோர் வாக்குரிமையின் அடிப்படைக் கொள்கைகள் மற்றும் முக்கியத்துவம் என்ன?
14.
பருத்தி நெசவில் இந்தியர் பெற்றிருந்த இயற்கையான சாதகங்கள் இரண்டினைக் குறிப்பிடுக.
15.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கு அரேபியர்களின் பங்களிப்பு.
16.
குழந்தைகளையும், 60 வயதுக்கு மேற்பட்ட வயோதிகர்களையும் ஏன் பணிக் குழுக்களாக கருதக்கூடாது?
17.
பொருளாதார மேம்பாட்டின் குறியீடுகள் என்ன?
18.
இரு கட்சி ஆட்சிமுறை மற்றும் பல கட்சி ஆட்சிமுறையினை வேறுபடுத்துக.
19.
மக்களாட்சி அரசாங்க அமைப்பினை பற்றி கூறுக
1.
இந்தியாவைக் காலனி நாடாக்கிய செயல்பாட்டை மூன்று கட்டங்களாகப் பிரித்துப் பார்க்கலாம்.
(i)முதற்கட்டம் : வாணிக முதலாளித்துவம்.
(ii) இரண்டாம் கட்டம் : தொழில்துறை முதலாளித்துவம்.
(iii) மூன்றாம் கட்டம் : நிதி மூலதன முதலாளித்துவம்.
2.
(i)மதகுருமார்கள் (சமயப் பணிகளுக்காகப் பணியமர்த்தப்பட்ட ஆண்களும், பெண்களும்)
(ii) பிரபுக்கள் மற்றும்
(iii) பொதுமக்கள் (வழக்கறிஞர்கள், பணம்படைத்த வர்த்தகர்கள், வணிகர்கள், வங்கியாளர்கள், செல்வராக இருந்த நிலவுடைமையாளர்கள்).
3.
(i) புவியின் சுழற்சி
(ii) வீசும் காற்று
(iii) கடல் நீரின் வெப்பம் மற்றும் உவர்ப்பியதில் உள்ள வேறுபாடு
4.
(i) ரோமானியப் பேரரசர்களில் ஒருவரான கான்ஸ்டன்டைன் கிறித்தவராக மாறினார்.
(ii) இதனால் கிறித்தவம் ரோமானியப் பேரரசின் அரசு மதமாயிற்று.
5.
(i) பிம்பிசாரரின் புதல்வரான அஜாதசத்ரு பொ.ஆ.மு. 493இல் தனது தந்தையைக் கொன்றுவிட்டு அரியணை ஏறினார்.
(ii) இராணுவ வெற்றிகளின் மூலம் ஆட்சியை விரிவுபடுத்தும் தனது தந்தையின் கொள்கையை இவரும் பின்பற்றினார்.
(iii) மகதத்தின் தலைநகரான ராஜகிருஹக் கோட்டையை வலுப்படுத்திய அதே வேளையில் கங்கைக்கரையில் பாடலிகிராமத்தில் மற்றொரு கோட்டையைக் கட்டினார்.
6.
(i) முதன் முதலாக, சங்க காலத்தில் தான் செலாவணிக்குரிய பொருளாக நாணயங்கள் புழக்கத்திற்கு வந்தன.
(ii) சேர, சோழ, பாண்டிய அரசர்களின் நாணயங்கள், முத்திரை பொறிக்கப்பட்ட நாணயங்கள், ரோமானிய நாணயங்கள் ஆகியவை சங்க காலம் குறித்து அறிந்து கொள்ள உதவும் மற்றொரு வகையான சான்று ஆகும்.
(iii) சில சமயம் மதிப்புயர் செல்வமாகவும் நாணயங்கள் பாதுகாக்கப்பட்டன.
(iv) மேலும் பலவற்றை உருக்கி அவர்கள் அணிகலன்களும் செய்திருக்கலாம்.
7.
காற்று அரித்தலால் உருவாக்கப்படும் நிலத் தோற்றங்கள் காளான் பாறை (Mushroom Rock), இன்சல்பர்க் (Inselberg), மற்றும் யார்டங் (Yardarg) போன்றவையாகும்.
8.
இந்தியாவில் உள்ள சுண்ணாம்புப் பாறை பிரதேசங்கள்:
(i)மேற்கு பீஹார் - குப்ததாம் குகைகள்.
(ii)உத்தர்காண்ட் - ராபர்ட் குகை மற்றும் தப்கேஷ்வர் கோவில்.
(iii)மத்தியப்பிரதேசம் - பச்மாரி மலைகள், பாண்டவர் குகைகள்
(iv)சத்திஸ்கர் (பஸ்தர்) - குடும்சர் குகைகள்.
(v)அந்திர பேரதேசம் (விசாகப்பட்டினம்) - போரா குகைகள்.
9.
ஆற்று வளைவுகள் காலப்போக்கில் பெரிதாகி இறுதியில் ஒரு முழு வளையமாக மாறுகிறது. இம்முழு வளைவுகள் முதன்மை ஆற்றிலிருந்து முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டு ஒரு ஏரியைப் போன்று காட்சி அளிக்கும். இதுவே குருட்டு ஆறு எனப்படுகிறது.
10.
1. செவ்வக வடிவக் குடியிருப்புகள் - சாலைப் பகுதிகளில்
2. நேர்க்கோட்டுக் குடியிருப்புகள் - சாலையோரங்களில்
3. அரைவட்ட வடிவக் குடியிருப்புகள் - குளத்தைச் சுற்றி
4. குறுக்கு வடிவக் குடியிருப்புகள் - மூன்று சாலை சந்திக்கும் இடம்
11.
சிகாகோவின் ஹே மார்க்கெட் சதுக்கத்தில் 1886 மே மாதம் 4 ஆம் தேதி ஒரு தொழிலாளர் ஆர்ப்பாட்டம் நடந்தது.நாளொன்றுக்கு எட்டு மணிநேர வேலை கோரிக்கையை முன்வைத்து அமைதியாகத் தொடங்கிய இக்கூட்டத்தில் காவல்துறை பல சுற்றுகள் துப்பாக்கிச் சூடு நடத்திப் பலரைக் கொன்றது.ஹேமார்க்கெட் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக மே 1ஆம் நாள் இன்றளவும் சர்வதேச தொழிலாளர் நாளாகக் (மே தினம்) கடைபிடிக்கப்படுகிறது.
12.
1. உள்ளூர் சுய ஆட்சி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டுக்கு இடையே சமரசம் ஏற்படுத்துதல்.
2. மத்திய மாநில அரசுகளுக்கு இடையிலான அதிகாரப் பகிர்வு, நிர்வாகத் திறன்கள் மேம்பட வழிவகுக்கிறது.
3. மிகப்பெரிய நாடுகள் தோன்றுவதற்கு வழி செய்கிறது.
4. அதிகாரம் பகிர்ந்து அளிக்கப்படுவதால் மத்திய அரசின் சர்வாதிகாரப் போக்கைத் தடுக்கிறது.
5. மிகப்பெரிய நாடுகளுக்குப் பொருத்தமானது.
6. பொருளாதார மற்றும் பண்பாட்டு முன்னேற்றங்களுக்கு நன்மை அளிக்கிறது.
13.
1. வயது வந்தோர் வாக்குரிமையின் அடிப்படை கொள்கைகள் மற்றும் முக்கியத்துவம்:
2. வாக்களிப்பவர் இனம், மதம், மொழி போன்றவற்றினால் வேறுபடுத்தப்படக்கூடாது.
3. வாக்களிப்பவர் தமது தலைவரை தேர்ந்தெடுக்கும் அளவுக்கு மனமுதிர்ச்சியடைந்தவராக இருக்க வேண்டும். எனவே அதற்கு வயது வரம்பு முக்கியம்.
4. வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தால் என்பது வெளிப்படையாகத் தெரியாமல் இருக்க வேண்டும்.
14.
(i)பருத்தி இழை இரண்டு இயற்கையான சாதகங்களைப் பெற்றிருந்தது.
(ii) பெரும்பாலும் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் பருத்தி பயிரிடப்பட்டதால், அடிப்படையான மூலப் பொருள் எளிதாகக் கிடைத்தது.
(iii) இரண்டாவதாக தாவரச் சாயங்களைப் பயன்படுத்தி பருத்தி இழைகளின் மேல் நிரந்தரமாக வர்ணம் ஏற்றும் தொழில்நுட்பம் இந்தியர்களுக்கு ஆரம்ப காலங்களிலேயே தெரிந்திருந்தது.
15.
அரேபியர்கள் அறிவியல் பூர்வமான கேள்வி ஞானம் உடையவர்களாக இருந்தனர். மருத்துவம், கணிதம் போன்ற துறைகள் தொடர்பான பலவற்றை அவர்கள் இந்தியாவிலிருந்து கற்றுக் கொண்டனர். பல அராபிய மாணவர்கள் மருத்துவக் கல்வி கற்பதற்காக தட்சசீலம் சென்றனர். தட்சசீலம் பெரும் பல்கலைக் கழகமாக மருத்துவத் துறையில் சிறந்து விளங்கியது. இந்திய அறிஞர்களும் கணிதவியலாளர்களும் அதிக அளவில் பாக்தாத் சென்றனர். மருத்துவம் மற்றும் பிற துறைகள் சார்ந்த சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட பல இந்திய நூல்கள் அராபிய மொழியில் மொழி பெயர்க்கப்பட்டன. அராபிய மருத்துவர்களும் அறுவை சிகிச்சை துறையில் புகழ் பெற்று விளங்கினர்.
16.
1. 15 வயதிற்குக் குறைந்தவர்கள் குழந்தைகளாகவும், 60 வயதைக் கடந்தவர்கள் முதியவர்களாகவும் கருதப்படுகின்றனர்.
2. குழந்தைகளும், முதியவர்களும் உற்பத்தி சார்ந்த வேலையை மேற்கொள்வதற்கு உடல் ரீதியாகத் தகுதியானவர்கள் அல்ல என்பதால் அவர்கள் உடல் உழைப்பைச் செய்ய முடியாது என விலக்கப்படுகின்றனர்.
17.
1. நிகர நாட்டு உற்பத்தி (NNP)
2. தனிநபர் வருமானம் (PCI)
3. வாங்கும் திறன் சமநிலை (PPP)
4. மனித வள மேம்பாட்டுக் குறியீடு (HDI)
5. ஆகியன பொருளாதார மேம்பாட்டின் முதன்மையான குறியீடுகளாகும்.
18.
| இரு கட்சி ஆட்சிமுறை | பலகட்சி ஆட்சிமுறை |
|---|---|
| இரு முக்கிய கட்சிகள் மட்டுமே பங்கு பெறுவது இருகட்சி ஆட்சி முறையாகும். |
இரண்டிற்கும் மேற்பட்ட கட்சிகள் பங்குபெறுவது பலகட்சி ஆட்சி முறையாகும். |
| இருகட்சி ஆட்சி முறை நடைபெறும் நாடுகள்:அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் இங்கிலாந்து | பலகட்சி ஆட்சி முறை நடைபெறும் நாடுகள்: இந்தியா. இலங்கை, பிரான்ஸ், இத்தாலி |
19.
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - பண்டைய நாகரிகங்கள் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Ancient . Civilisations Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - புரட்சிகளின் காலம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - The Age of Revolutions Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - State and Society in Medieval India Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Colonialism in Asia and Africa Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards