9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கற்கண்டு (இலக்கணம்) - தொடர் இலக்கணம், ஆகுபெயர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -விரிவானம் (துணைப்பாடம்) - தாய்மைக்கு வறட்சி இல்லை! Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கவிதை பேழை (செய்யுள்) - மார்கழி பெருவிழா Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர்-இலக்கணம் - பகுபத உறுப்பிலக்கணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர் - இலக்கணம்-எழுத்து -அளபெடை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர்-துணைப்பாடம் - ஆறாம்திணை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 12/09/2019
நவீன யுகத்தின் தொடக்கம்
Download Tamil Nadu 9th Standard Social Science question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
'கொலம்பியப் பரிமாற்றம்' என்றால் என்ன?
2.
மதஎதிர் சீர்திருத்தம் பற்றி ஒரு சிறு குறிப்பு வரைக.
3.
கத்தோலிக்க திருச்சபை மீது மார்ட்டின் லூதர் கொண்டிருந்த மாற்றுக் கருத்துக்களை விவரி.
4.
மறுமலர்ச்சி, மதசீர்திருத்தம் மற்றும் புவியியல் சார் கண்டுபிடிப்புகள் எவ்வாறு நவீனயுகத்தின் வருகையைப் பறை சாற்றின - விவாதி.
5.
வணிகப்புரட்சியின் தலையாய அம்சங்கள் ________ , ________ மற்றும் _______ ஆகும்.
6.
கத்தோலிக்க திருச்சபை நிறுவனத்துக்கு உள்ளேயே மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தம் _____ ஆகும்.
7.
_____ சிஸ்டைன் திருச்சபை மேற்கூரைகளில் வரையப்பட்ட தன்னுடைய ஓவியங்களுக்காக புகழ்பெற்றவராவார்
8.
_______ என்பவர் மனிதநேயவாதிகளிடையே ஒரு இளவரசர் என்று அறியப்படுகிறார்.
9.
கி.பி.1453 ல் கான்ஸ்டாண்டிநோபிளை ____ கைப்பற்றினர்
10.
கீழ்கண்ட தாவரங்களுள் எது அமெரிக்காவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது?
கரும்பு
சர்க்கரைவள்ளிக்கிழங்கு
அரிசி
கோதுமை
11.
கிழக்கு இந்தியாவில் போர்ச்சுகீசியர்களின் வசமிருந்த பகுதிகளுக்குத் தலைமையகமாக ______ இருந்தது.
மணிலா
பம்பாய்
பாண்டிச்சேரி
கோவா
12.
பசிபிக் பெருங்கடல் எனப் பெயரிட்டவர்________.
கொலம்பஸ்
அமெரிகோ வெஸ்புகி
ஃபெர்டினான்ட் மெகெல்லன்
வாஸ்கோடகாமா
13.
பூமத்திய ரேகையை கடந்த முதல் மாலுமி யார்?
மாலுமி ஹென்றி
லோபோ கோன்ஸால்வ்ஸ்
பார்த்தலோமியோ டயஸ்
கொலம்பஸ்
14.
'ஸ்கூல் ஆஃப் ஏதென்ஸ்' என்ற ஓவியத்தை வரைந்தவர்.
ரஃபேல்
மைக்கேல் ஆஞ்சலோ
அல்புருட் டியுரர்
லியானார்டோ டாவின்சி
15.
கீழ்க்கண்டவர்களில் யார் மனித நேயத்தின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்?
லியானார்டோ டாவின்சி
பெட்ரார்க்
ஏராஸ்மஸ்
தாமஸ் மூர்
16.
கொலம்பிய பரிமாற்றம்
17.
மெர்க்கண்டலிசம்
18.
நீதி விசாரணை
19.
மனிதாபிமானம்
20.
நிலபிரபுத்துவம்
1.
(i) அமெரிக்க நாடுகளுக்கும் ஐரோப்பாவுக்குமிடையே அல்லது புதிய உலகத்திற்கும் பழைய உலகத்திற்குமிடையே, தாவரங்கள், விலங்குகள், தொழில்நுட்பம், பண்பாடு மற்றும் விநோதமான நோய்கள் ஆகியவற்றின் இடப்பெயர்வுக்கு ஐரோப்பிய காலனியாதிக்க சக்திகள் அமெரிக்காவை வெற்றி கொண்டதே காரணமாகும்.
(ii) இது கொலம்பியப் பரிமாற்றம் (Columbian Exchange) என்று அறியப்படுகிறது.
2.
(i) பிராட்டஸ்டன்ட் சீர்திருத்த இயக்கம், கத்தோலிக்க திருச்சபைக்கு ஓர் அச்சுறுத்தலாக விளங்கியது.
(ii) ஊழல்களைக் கடுமையான முறையில் கையாண்டதுடன், பதவிகளின் விற்பனையையும் தடை செய்தனர்.
(iii) கூட்டு வழிபாட்டின் முக்கியத்துவத்தையும், விழாக்களின் முக்கியத்துவத்தையும் ட்ரென்ட் கவுன்சில் மீண்டும் வலியுறுத்தியது.
(iv) மேலும், புனித மறைநூல்களை திருச்சபை மட்டுமே படித்து விளக்கமளிக்க முடியுமென்றும் அது அறிவித்தது.
(v) இயேசு சபைக்கு அதிகாரப்பூர்வமான அனுமதியையும் அது வழங்கியது. கத்தோலிக்க திருச்சபைக்குள்ளேயே மேற்கொள்ளப்பட்ட இந்தச் சீர்திருத்தம் 'எதிர் மத சீர்திருத்தம்' என்று அறியப்பட்டது.
3.
(i) திருச்சபையுடன் தனக்குள்ள கருத்து வேறுபாடுகளை லூதர் மேலும் விரிவாக விளக்கினார். சடங்குகளும், பாவமன்னிப்பு நடைமுறைகளும் ஆன்ம விடுதலைக்கு இட்டுச் செல்லும் என்ற நம்பிக்கையை அவர் நிராகரித்தார். நம்பிக்கையினால் மட்டுமே ஒருவர் ஆன்ம விடுதலையை அடைய முடியுமென அவர் வாதிட்டார்.
(ii) 'நம்பிக்கையினால் நியாயப்படுத்துதல்' என்ற கொள்கை வடிவை அவர் முன்வைத்தார். பைபிள் அனைத்து மக்களாலும் படிக்கப்பட்டு, விவாதிக்கப்படக் கூடியதே அல்லாமல் திருச்சபையினால் மட்டுமே வாசித்து விளக்கமளிக்கக் கூடிய ஒன்றல்ல.
(iii) கடவுளுக்கும் ஒரு தனிநபருக்குமிடையே திருச்சபை ஓர் இணைப்புப் பாலம் என்பதையும் லூதர் நிராகரித்தார்.
4.
மறுமலர்ச்சி:
(i) மறுமலர்ச்சி என்பதைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லான Renaissance என்பது மறுபிறப்பு எனப்பொருள்படும். இத்தாலியச் சொல்லான Renascita என்பதிலிருந்து தோன்றியது.
(ii) மறுமலர்ச்சி என்று இது அழைக்கப்படுவதற்குக் காரணம், கிரேக்க, இலத்தீன் செவ்வியல் இலக்கியத்தில் ஒரு மறுபிறப்பு அல்லது புத்தாக்கம் நிலவியதாகும்.
மதச் சீர்த்திருத்தம் :
(i) இடைக் காலங்களில் ரோமன் கத்தோலிக்க திருச்சபை ஒரு வலிமை நிறைந்த நிறுவனமாயிருந்தது.
ஆன்மிக ரீதியாகவும், உலகியல் ரீதியாகவும் திருச்சபை அதிகாரங்களை அனுபவித்துக்
கொண்டிருந்தது.
(ii) திருச்சபையின் தலைவர் போப்பாண்டவர். அவருடைய அப்பதவி பபாசி (Papacy) என்று அறியப்பட்டிருந்தது. அவர் ஓர் இளவரசரைப் போன்ற ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தார்.
(iii) அவருடைய அதிகாரிகளுள் பலர் ஊழல் நிறைந்தவர்களாக இருந்தனர்; திருச்சபையின் பதவிகள் ஒவ்வொன்றும் விலைகூறி விற்கப்பட்டன.
(iv) அதோடு மட்டுமின்றி மக்கள் தங்களின் பாவங்களுக்காக மனம் வருந்தி, பாவமன்னிப்புக் கோருவார்களெனில் அவர்கள் பாவச்சுமையிலிருந்து விடுவிக்கப்பட்டு சொர்க்கத்துக்குச் செல்ல முடியும் என்றும் மக்களை நம்பச் செய்திருந்தது.
(v) மதச்சீர்திருத்தக்காரர்கள், திருச்சபையின் ஊழல் மிக்க நடைமுறைகளைக் கடுமையாகக் கண்டித்து பிரசுரங்களை விநியோகித்தனர்; புத்தகங்களையும் பதிப்பித்தனர்.
புவியியல் சார் கண்டுபிடிப்புகள்:
(i) புதிய நிலப்பரப்புகள், புதிய கடல்வழிப் பாதைகளின் கண்டுபிடிப்புகளின் விளைவாக ஐரோப்பாவின் பொருளாதார மையம் இத்தாலிய நகர அரசுகளிலிருந்து ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் ஆகிய இரு அரசுகளுக்கு இடம் பெயர்ந்தது.
(ii) பதினான்காம் நூற்றாண்டில், தாலமியின் 'ஜியாகரபி' (புவியியல்) என்ற நூலின் ஒரு பிரதி, பைஸாண்டியன் பேரரசிலிருந்து மேற்குலகுக்குக் கொண்டுவரப்பட்ட போது ஓர் புத்தார்வம் ஏற்பட்டது.
5.
( )
வங்கிகள், கூட்டுப் பங்கு நிறுவனங்களின் தோற்றம் ,வர்த்தகத்தின் வளர்ச்சி
6.
( )
எதிர்மத சீர்திருத்தம்
7.
( )
மைக்கேல் ஆஞ்சலோ
8.
( )
எராஸ்மஸ்
9.
( )
உதுமானியத் துருக்கியர்
10.
(b)
சர்க்கரைவள்ளிக்கிழங்கு
11.
(d)
கோவா
12.
(c)
ஃபெர்டினான்ட் மெகெல்லன்
13.
(b)
லோபோ கோன்ஸால்வ்ஸ்
14.
(a)
ரஃபேல்
15.
(b)
பெட்ரார்க்
16.
ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையேயான வர்த்தக பரிமாற்றம்
17.
ஏகபோக வர்த்தகம்
18.
மதத்திற்குப் புறம்பானவர் மீது விசாரணை
19.
மனித கௌரவம்
20.
சமூக பொருளாதார அமைப்பின் படிநிலை
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - மணிமேகலை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - ஏறு தழுவுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர் - தண்ணீர் Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards