9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9ஆம் வகுப்பு கணிதம் ஆயத்தொலை வடிவியல்,முக்கோணவியல் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Maths Coordinate Geometry,Trigonometry Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு கணிதம் அளவியல்,புள்ளியியல்&நிகழ்தகவு முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Maths Mensuration,Statistics&Probability Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - செவ்வியல் உலகம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - The Classical World Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Early Tamil Society and Culture Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - தொழிற்புரட்சி முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Industrial Revolution Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - நவீன யுகத்தின் தொடக்கம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - The Beginning of the Modern AgeImportant 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.

Published on: 21/02/2019
3rd Term Full Study Material
Download Tamil Nadu 9th Standard Maths question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Maths Test1.
ஒரு மீன் தொட்டியானது 3.8 மீ × 2.5 மீ × 1.6 மீ என்ற அளவுகளை உடையது. இந்தத் தொட்டியானது எத்தனை லிட்டர் தண்ணீர் கொள்ளும்?
2.
ஒரு கனச்செவ்வகத்தின் நீளம், அகலம் மற்றும் உயரத்தின் விகிதம் 7:5:2 என்க. அதன் கனஅளவு 35840 செமீ3 எனில் அதன் பக்க அளவுகளைக் காண்க.
3.
sin 640 34' இன் மதிப்பைக் காண்க.
4.
(1,−6) மற்றும் (−5,2) ஆகியன ஒரு முக்கோணத்தின் இரண்டு முனைப் புள்ளிகள் மற்றும் அதன் நடுக்கோட்டு மையம் (−2, 1) எனில் முக்கோணத்தின் மூன்றாவது முனைப் புள்ளியைக் காண்க.
5.
ஒருங்கமைந்த நேரிய சமன்பாடுகளைப் பிரதியிடல் முறையில் தீர்க்க: x + 3y = 16 மற்றும் 2x - y = 4
6.
(x,3), (6,y), (8,2) மற்றும் (9,4) என்பன வரிசையாக எடுத்துக்கொள்ளப்பட்ட இணைகரத்தின் உச்சிகள் எனில் x மற்றும் y இன் மதிப்புகளைக் காண்க.
7.
(வரைபடம் வரைதல் எளிதே!) y=4x-3 என்ற கோட்டின் சமன்பாட்டிற்கு வரைபடம் வரைக.
8.
sec \(\theta \) = \(\frac { 13 }{ 5 } \) எனில் \(\frac { 2\sin\theta -3\cos\theta }{ 4\sin\theta -9\cos\theta } \) = 3 என நிறுவுக
9.
கீழ்க்காணும் அளவுகளைக் கொண்ட கனச்செவ்வகத்தின் கன அளவைக் காண்க.
(i) நீளம் = 12 செமீ, அகலம் = 8 செ மீ, உயரம் = 6 செ மீ
(ii) நீளம் = 60 மீ, அகலம் = 25 மீ, உயரம் = 1.5 மீ
10.
4 செமீ பக்க அளவு உடைய ஒரே மாதிரியான மூன்று கனச்சதுரங்கள் ஒன்றோடு ஒன்று பக்கவாட்டில் இணைக்கப்படும்போது கிடைக்கும் புதிய கனச்செவ்வகத்தின் மொத்தப் பரப்பு மற்றும் பக்கப் பரப்பு ஆகியவற்றைக் காண்க.
11.
ஒரு கால்பந்தாட்டத்தில், ஓர் இலக்குக் காப்பாளரால் (Goal - keeper) 40 இல் 32 முயற்சிகளைத் தடுக்க இயலும் எனில், எதிரணியானது ஒரு முயற்சியை இலக்காக மாற்றுவதற்கான நிகழ்தகவு காண்க.
12.
ஓர் உற்பத்தியாளர் 7000 ஒளி உமிழ் இருமுனைய விளக்குகளை (LED lights) சோதனை செய்ததில் அவற்றில் 25 விளக்குகள் குறைபாடுடையதாகக் கண்டறியப்பட்டன. சம வாய்ப்பு முறையில் ஒரு விளக்கைத் தேர்ந்தெடுக்கும்போது அது குறைபாடுடையதாக இருக்க நிகழ்தகவு என்ன?
13.
ஒரு தொலைக்காட்சிப் பெட்டியை 5% இலாபத்திற்கும், ஒரு குளிர்சாதனப் பெட்டியை 10% இலாபத்திற்கும் விற்பதால் கடைக்காரருக்கு நிகர இலாபம் ரூ2,000 கிடைக்கிறது. ஆனால் அவர் ஒரு தொலைக்காட்சிப் பெட்டியை 10% இலாபத்திற்கும், ஒரு குளிர்சாதனப் பெட்டியை 5% நட்டத்திற்கும் விற்பதால் அவரின் நிகர இலாபம் ரூ1,500 கிடைக்கிறது எனில், தொலைக்காட்சிப் பெட்டி மற்றும் குளிர்சாதனப் பெட்டியின் சரியான விலைகளைக் காண்க .
14.
x= 3, x = 5 மற்றும் 2x – y – 4 = 0 என்ற சமன்பாடுகளுக்கு வரைபடம் வரைக. இந்தக் கோடுகளும் x - அச்சும் இணைந்து ஏற்படுத்தும் நாற்கரத்தின் பரப்பைக் காண்க.
15.
படத்தில் நிழலிடப்படாத பகுதியின் பரப்பைக் காண்க.
16.
கீழ்க்காண்பனவற்றின் மதிப்பு காண்க.
(i) sin65o39' + cos24o57' + tan10o10'
(iii) tan70o58' + cos15o26' - sin84o59'
17.
A(4,−3) மற்றும் B(9,7) ஆகிய புள்ளிகளை இணைக்கும் கோட்டுத்துண்டை 3:2 என்ற விகிதத்தில் உட்புறமாகப் பிரிக்கும் புள்ளியின் ஆயத் தொலைவுகளைக் காண்க.
18.
பின்வரும் சமன்பாடுகளை சரிபார்க்க.
(i) sin2 600 + cos2 600 =1
(ii) 1+ tan2 300 = sec2 300
(iii) cos900 =1- 2sin2 450 = 2cos2 450 -1
(iv) sin300cos600 + cos300sin600 = sin900
19.
கீழ்க்காணும் புள்ளிகளை இணைத்து உருவாக்கும் கோட்டுத்துண்டின் நடுப்புள்ளிகளைக் காண்க.
(i) (−2,3) மற்றும் (−6,−5)
(ii) (8,−2) மற்றும் (−8,0)
(iii) (a,b) மற்றும் (a+2b,2a−b)
(iv) \((\frac {1}{-2},\frac {-3}{7})\)மற்றும் \((\frac {3}{-2},\frac {-11}{7})\).
20.
ஒரு மாணவன் 'O' என்ற புள்ளியில் தரையில் நின்று கொண்டு 'P' என்ற புள்ளியில் உள்ள படத்தை OP = 25 மீ என்றவாறு காண்கிறான். pஇதிலிருந்து மேலும் 10 மி தொலைவு நகர்ந்து Q என்ற புள்ளியில் பட்டம் உள்ள போது தரையிலிருந்து பட்டத்தின் உயரம் 'QN' ஐக் காண்க. (முக்கோணவியல் விகிதங்களைப் பயன்படுத்துக.)

21.
இனிப்புகள் வைக்கும் ஒரு பெட்டியானது 22 செமீ × 18 செமீ × 10 செமீ என்ற அளவில் உள்ளது. இதனை 1 மீ × 88 செமீ × 63 செமீ அளவுள்ள ஓர் அட்டைப் பெட்டியில் எத்தனை அடுக்கலாம்?
22.
பத்தாம் வகுப்பு இறுதித் தேர்வில் பல்வேறு பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்ற 1184 மாணவர்களில், 233 பேர் கணிதத்திலும், 125 பேர் சமூக அறிவியலிலும், 106 பேர் அறிவியலிலும் நூற்றுக்கு நூறு பெற்றுள்ளனர். சம வாய்ப்பு முறையில் ஒரு மாணவரைத் தேர்ந்தெடுக்கும்போது அந்த மாணவர்
(i) கணிதத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றவராக இருக்க,
(ii) அறிவியலில் நூற்றுக்கு நூறு பெறாதவராக இருக்க நிகழ்தகவு காண்க
23.
AB = 8 செமீ, BC = 15 செமீ, CD = 12 செமீ, AD = 25 செமீ ஆகியவற்றைப் பக்கங்களாகவும் -90o ஐக் கோணமாகவும் உடைய நாற்கரம் ABCD இன் பரப்பைக் காண்க.
24.
கர்ணம் 5 செமீ மற்றும் ஒரு குறுங்கோணம் 48° 30′ கொண்ட ஒரு செங்கோண முக்கோணத்தின் பரப்பைக் காண்க.

25.
புள்ளிகள் A(−3,5) மற்றும் B ஐ இணைக்கும் கோட்டுத்துண்டைப் புள்ளி P(−2,3) ஆனது 1:6 என்ற விகிதத்தில் உட்புறமாகப் பிரிக்கின்றது எனில் B இன் ஆயத் தொலைவுகளைக் காண்க?
26.
ஒருங்கமைந்த நேரிய சமன்பாடுகளுக்கு வரைபடம் மூலம் தீர்வு காண்க. x + y = 5; 2x – y = 4
27.
ஒரு கனச் செவ்வகத்தின் கன அளவு 660 செ.மீ3 மற்றும் அதன் அடிப்பரப்பு 33 செ.மீ2 எனில் அதன் உயரம் _____.
10 செ.மீ
12 செ.மீ
20 செ.மீ
22 செ.மீ
28.
இரு கனச்சதுரங்களின் பக்கங்களின் விகிதமானது 2:3 எனில் அதன் புறப்பரப்புகளின் விகிதங்கள் _____.
4:6
4:9
6:9
16:36
29.
ஒரு கனச்சதுரத்தின் பக்கப்பரப்பு 600 செமீ2 எனில், அதன் மொத்தப்பரப்பு ______.
150 செமீ2
400 செமீ2
900 செமீ2
1350 செமீ2
30.
ஒரு சோதனையின் குறிப்பிட்ட முடிவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
முயற்சி
எளிய நிகழ்ச்சி
கூட்டு நிகழ்ச்சி
விளைவு
31.
ஒப்பீட்டு நிகழ்வெண் கருத்தை அடிப்படையாகக் கொண்ட நிகழ்தகவு எவ்வாறு அழைக்கப்படுகிறது.
பட்டறி நிகழ்தகவு
தொண்மை நிகழ்தகவு
(1) மற்றும் (2) இரண்டும்
(1)வும் அல்ல (2) வும் அல்ல
32.
நிகழ்தகவு மதிப்பின் இடைவெளி_______.
-1 மற்றும் +1
0 மற்றும் 1
0 மற்றும் n
0 மற்றும் \(\infty \)
33.
கீழ்க்காணும் நேரிய சமன்பாடுகளுக்கான வரைபடங்களில் எதற்குத் தீர்வு இல்லை?




34.
கீழ்க்கண்டவற்றுள் எது நேரிய சமன்பாடு
\(x+\frac { 1 }{ x } =2\)
x(x −1) = 2
\(3x+5=\frac { 2 }{ 3 } \)
x3 − x = 5
35.
2x + 3y = 15 என்ற சமன்பாட்டிற்குக் கீழ்கண்டவற்றுள் எது உண்மையானது?
ஒரேயொரு தீர்வு உண்டு
இரண்டு தீர்வுகள் உண்டு
தீர்வு இல்லை
எண்ணற்ற தீர்வுகள்
36.
2 sin 2θ = \(\sqrt { 3 } \) எனில், θ இன் மதிப்பு______.
900
300
450
600
37.
tan 72o tan18o இன் மதிப்பு _____.
0
1
180
720
38.
sin 300 = x மற்றும் cos 600 = y எனில், x2 + y2 இன் மதிப்பு _____.
\(\frac { 1 }{ 2 } \)
0
sin 900
cos 900
39.
(−1,−6), (−2,12) மற்றும் (9,3) ஆகியவற்றை முனைப் புள்ளிகளாகக் கொண்டுள்ள ஒரு முக்கோணத்தின் நடுக்கோட்டு மையம் ____.
(3,2)
(2,3)
(4,3)
(3,4)
40.
(6,4) மற்றும் (1, −7) ஆகிய புள்ளிகளை இணைக்கும் கோட்டுத்துண்டை X -அச்சு எந்த விகிதத்தில் பிரிக்கும்?
2:3
3:4
4:7
4:3
41.
P(2,7) மற்றும் R(−2,3) ஆகிய புள்ளிகளை இணைக்கும் கோட்டுத்துண்டை Q(1,6) என்ற புள்ளியானது என்ன விகிதத்தில் பிரிக்கும்?
1:2
2:1
1:3
3:1
1.
மீன் தொட்டியின் நீளம் l = 3.8 மீ
மீன் தொட்டியின் அகலம் b = 2.5 மீ
மீன் தொட்டியின் உயரம் h = 1.6 மீ
மீன் தொட்டியின் கனஅளவு = l \(\times\) b \(\times\) h
= 3.8 \(\times\) 2.5 \(\times\)1.6
= 15.2 மீ3
= 15.2 \(\times\)1000 லிட்டர்
= 15200 லிட்டர்

2.
கனச்செவ்வகத்தின் பக்க அளவுகள் l = 7x, b = 5x மற்றும் h =2x என்க
இங்குக் கனச்செவ்வகத்தின் கனஅளவு = 35840 செமீ3
l\(\times\) b \(\times\) h = 35840
(7x) (5x) (2x) = 35840
70x3 = 35840
\({ x }^{ 3 }=\frac { 35840 }{ 70 } \)
x3 = 512
\(x=\sqrt [ 3 ]{ 8\times 8\times 8 } \)
x = 8 செமீ
கனச்செவ்வகத்தின் நீளம் = 7x = 7 \(\times\) 8 = 56 செமீ
கனச்செவ்வகத்தின் அகலம் = 5x = 5 \(\times\) 8 = 40 செமீ
கனச்செவ்வகத்தின் உயரம் = 2x = 2 \(\times\) 8 = 16 செமீ
3.
| 0' | 6' | 12' | 18' | 24' | 30' | 36' | 42' | 48 | 54' | பொது வித்தியாசம் | |||||
| 0.00 | 0.10 | 0.20 | 0.30 | 0.40 | 0.50 | 0.60 | 0.70 | 0.80 | 0.90 | 1 | 2 | 3 | 4 | 5 | |
| 640 | 0.9026 | 5 | |||||||||||||
64034' = 64030' + 4' என எழுதலாம்
அட்டவணையிலிருந்து sin 64030' = 0.9026
பொது வித்தியாசம் 4 = 5 (sine-ற்குப் பொது வித்தியாசத்தைக் கூட்டவும் )
__________________
sin 64034 = 0.9031
___________________
4.
ஒரு முக்கோணத்தின் மூன்று முனைப் புள்ளிகள் A(1, –6), B(–5, 2) மற்றும் C(x3 , y3) என்க.
முக்கோணத்தின் நடுக்கோட்டு மையம் (-2, 1) ஆனது கொடுக்கப்பட்டுள்ளது. எனவே நாம் பெறுவது,
\(\frac { { x }_{ 1 }+{ x }_{ 2 }+{ x }_{ 3 } }{ 3 } \)=-2
\(\frac { 1-5+{ x }_{ 3 } }{ 3 } \)=-2
−4 + x3 = −6
x3 = −2
\(\frac { { y }_{ 1 }+{ y }_{ 2 }+{ y }_{ 3 } }{ 3 } \)=1
\(\frac { -6+2+{ y }_{ 3 } }{ 3 } \)=1
−4 + y3 = 3
y3 = 7
எனவே மூன்றாவது முனைப் புள்ளி (-2, 7) ஆகும் .
5.
கொடுக்கப்பட்டவை
x + 3y = 16 ... (1)
2x – y = 4 ... (2)
| படி 1 | படி 2 | படி 3 | தீர்வு |
|---|---|---|---|
| சமன்பாடு (2) இலிருந்து 2x −y = 4 –y = 4–2x y = 2x − 4 ...(3) |
(3) ஐ (1) இல் பிரதியிட x + 3y = 16 x + 3(2x − 4) = 16 x + 6x −12 = 16 7x = 28 x = 4 |
x =4 என (3) இல் பிரதியிட y = 2x − 4 y = 2(4) − 4 y = 4 |
x = 4 மற்றும் y = 4 |
6.
A(x,3), B(6,y), C(8,2) மற்றும் D(9,4) என்பவை இணைகரம் ABCD இன் உச்சிகள் என்க. வரையறையின்படி, மூலைவிட்டங்கள் AC மற்றும் BD ஒன்றையொன்று இருசமக் கூறிடும்.
AC இன் நடுப்புள்ளி = BD இன் நடுப்புள்ளி
\((\frac {x +8}{2},\frac {3+2}{2})=(\frac {6+9}{2},\frac {y+4}{2})\)
இருபுறமும் ஆயத் தொலைவுகளைச் சமப்படுத்த, நாம் பெறுவது
\(\frac{x+8}{2}=\frac {15}{2}\)
x + 8 = 15
x = 7 மற்றும்
\(\frac{5}{2}=\frac {y+4}{2}\)
5 = y + 4
y = 1
இதிலிருந்து, x = 7 மற்றும் y = 1.
7.
இதற்கு முன்பே அட்டவணையை அமைத்து, புள்ளிகளை வரிசைப் படுத்துவதுடன், சோடிப் புள்ளிகளை வரைபடத்தில் குறித்து அவற்றை இணைப்பது பற்றிய ஒரு வழிமுறையை நாம் கடந்து வந்திருக்கிறோம். ஆனால், ஒரு கோட்டை நிர்ணயிக்க குறைந்தது எத்தனை புள்ளிகள் நமக்குத் தேவை? இரண்டு புள்ளிகள் போதுமானதே. ஒரு கோடு y = mx + c என்ற வடிவில் இருந்தால் இதனை எளிதில் காணலாம்.
கொடுக்கப்பட்ட கோடு y = 4x - 3
y - வெட்டுத்துண்டைப் பெற
x = 0 எனப் பிரதியிட, y =4(0) - 3
y = -3
இதிலிருந்து (0, -3) என்ற புள்ளியும்
y - வெட்டுத்துண்டு = -3 எனவும் கிடைக்கிறது
x - வெட்டுத்துண்டைப் பெற
y = 0 எனப் பிரதியிட, 0 = 4x - 3
3 = 4x
\(\frac { 3 }{ 4 } =x\)

இதிலிருந்து \(\left( \frac { 3 }{ 2 } ,0 \right) \) என்ற புள்ளி மற்றும் x - வெட்டுத்துண்டு =\(\frac { 3 }{ 4 }\) எனவும் கிடைக்கிறது.
இப்பொழுது (0, -3) மற்றும் \(\left( \frac { 3 }{ 4 } ,0 \right) \) என்ற இரண்டு புள்ளிகளின் வழியே வரைபடத்தை வரையலாம்.
8.
BC = 13 மற்றும் AB = 5 என்க
.jpg)
பிதாகரஸ் தேற்றத்தின்படி
\(AC=\sqrt { { BC }^{ 2 }-{ AB }^{ 2 } } \)
= \(\sqrt { { 13 }^{ 2 }-{ 5 }^{ 2 } } \)
= \(\sqrt { 169-25 } \) = \(\sqrt { 144 } \) = 12
எனவே , \(\sin\theta -\frac { AC }{ BC } =\frac { 12 }{ 13 } ;\cos\theta \frac { AB }{ BC } =\frac { 5 }{ 13 } \quad \)
இடப்பக்கம் = \(\frac { 2\sin\theta -3\cos\theta }{ 4\sin\theta -9\cos\theta } =\frac { 2\times \frac { 12 }{ 13 } -3\times \frac { 5 }{ 13 } }{ 4\times \frac { 12 }{ 13 } -9\times \frac { 5 }{ 13 } } =\frac { \frac { 24-15 }{ 13 } }{ \frac { 48-15 }{ 13 } } =\frac { 9 }{ 3 } =3\)= வலப்பக்கம்.

9.
i) நீளம் (l)= 12செமீ, அகலம் (b)= 8செமீ, மற்றும் உயரம்(h)= 6 செமீ
கன அளவு=l x b x h
= 12 x 8 x 6செமீ3
= 96 x 6செமீ3
= 576செமீ3
கன அளவு=576செமீ3
ii) நீளம் (l)= 60 மீ, அகலம் (b)= 25 மீ, மற்றும் உயரம்(h)= 1.5 மீ
கன அளவு =l x b x h
= 60 x 25 x 1.5 m3
= 1500 x 15 m3
=2250 m3
கன அளவு= 2250 m3
10.
கனச்சதுரத்தின் பக்க அளவு (a)=4செ.மீ
புதிய கனச் செவ்வகத்தின் நீளம் (l) = 4 + 4 + 4 = 12செ.மீ
அகலம் (b) = 4செ.மீ
உயரம் (h) = 4செ.மீ
மொத்தப்பரப்பு = 2(lb + bh + lh)
=2(12 x 4 + 4 x 4 + 12 x 4)செமீ2
= 2(48 + 16 + 48)செமீ2
= 2 x 112செமீ2
புதிய கன செவ்வகத்தின் மொத்தப்பரப்பு = 224செமீ2
பக்கப் பரப்பு =2(l + b) x h
= 2(12 + 4) x 4செமீ2
= 2 x 16 x 4செமீ2
= 32 x 4 செமீ2
புதிய கனச் செவ்வகத்தின் பக்கபரப்பு=128செமீ2
11.
முயற்சிகளின் மொத்த எண்ணிக்கை n(S) =40
இலக்கு காப்பாளரால் தடுக்கப்படும் முயற்சிகள் n(A) =32
எதிராணியால் தடுக்க இயலாத முயற்சிகள் n(B) = 40 - 32 = 8
\(P(A)=\frac { n(A) }{ n(S) } =\frac { 8 }{ 40 } =\frac { 1 }{ 5 } \\ \)
12.
LED விளக்குகளின் மொத்த எண்ணிக்கை n(S) =7000
குறைபாடுடைய விலங்குகளின் எண்ணிக்கை n(A) = 25
S = மொத்த விளக்குகளின் எண்ணிக்கை
A = பழுதமுடைய விளக்குகள்
ஒரு விளக்கைத் தேர்ந்தெடுக்கும் போது அது குறைபாடுடையதாக இருக்க நிகழ்தகவு \(P(A)=\frac { n(A) }{ n(S) } =\frac { 25 }{ 7000 } =\frac { 1 }{ 280 } \\ \)
13.
தொலைக்காட்சிப் பெட்டியின் விலை = x என்க
குளிர்சாதனப் பெட்டியின் விலை = y என்க
\(\begin{aligned}
\frac{5}{100} x+\frac{10}{100} y & =2000
\end{aligned}\)
\(\begin{aligned}
\frac{5}{100}(x+2 y) & =2000
\end{aligned}\)
\(\begin{aligned}
x+2 y & =2000 \times \frac{100}{5}
\end{aligned}\)
x + 2y = 40000 ....(1)
\(\begin{aligned}
\frac{10}{100} x-\frac{5}{100} y & =1500
\end{aligned}\)
\(\begin{aligned}
\frac{5}{100}(2 x-y) & =1500
\end{aligned}\)
\(\begin{aligned}
2 x-y & =1500 \times \frac{100}{5}
\end{aligned}\)
2x - y = 30000 .....(2)

y = 10000
y = 10000 என (1) ல் பிரதியிட
x + 2(10000) = 40000
x + 20000 = 40000
x = 40000 - 20000
x = 20000
\(\therefore\) தீர்வு: தொலைக்காட்சிப் பெட்டியின் விலை = ரூ 20000,
குளிர்சாதனப்பெட்டியின் விலை = ரூ 10000
14.
x=3, x=5 மற்றும் 2x-y-4=0
x=3
| x | 3 | 3 | 3 | 3 | 3 |
| y | -2 | -1 | 0 | 1 | 2 |
புள்ளிகள் (3, -2), (3, -1), (3, 0), (3, 1), (3, 2)
x =5
| x | 5 | 5 | 5 | 5 | 5 |
| y | -2 | -1 | 0 | 1 | 2 |
புள்ளிகள் (5, -2), (5, -1), (5, 0), (5, 1), (5, 2)
2x - y - 4 = 0, y = 2x - 4
| x | -2 | -1 | 0 | 1 | 2 |
| y | -8 | -6 | -4 | -2 | 0 |
ABCD என்ற நாற்கரத்தின் பரப்பு =8 சதுர அலகுகள்.
15.
செங்கோண முக்கோணம் ABD யிலிருந்து, பிதாகரஸ் தேற்றப்படி
\(AB=\sqrt { { AD }^{ 2 }+{ BD }^{ 2 } } \)
\(=\sqrt { { 12 }^{ 2 }+{ 16 }^{ 2 } } =\sqrt { 144+256 } =\sqrt { 400 } =20\)செ.மீ
∆ABD யின் பரப்பு =1/2bh

முக்கோணம் ABC யின் பக்கங்கள் a=42செ.மீ , b=34 செ.மீ மற்றும் c =20 செ.மீ
முக்கோணம் ABC யின் பரப்பு =\(=\sqrt { S(s-a)(s-b)(s-c) } \)
\(S=\frac { a+b+c }{ 2 } =\frac { 42+34+20 }{ 2 } =\frac { 96 }{ 2 } =48\)
முக்கோணத்தின் பரப்பு \(=\sqrt { 48(48-42)(48-34)(48-20) } \)
\(=\sqrt { 112896 } = \sqrt {336 \times 336}\)
= 336 ச.செமீ
நிழலிடப்படாத பகுதியின் பரப்பு
= Δ ABC யின் பரப்பு - Δ ABD யின் பரப்பு
= (336 - 96)ச.செமீ =240ச.செமீ
நிழலிடப்படாத பகுதியின் பரப்பு = 240 செ மீ2
16.
(i) sin65039' + cos24057' + tan10010'
= 0.9111+ 0.9066 + 0.1793 = 1.9970
sin65039' + cos24057' + tan10010'
(ii) tan70058' + cos15026' - sin84059'
tan 70o58' = 2.8982 + 0.9639 = 0.9962
= 3.8621 - 0.9962 = 2.8659
tan70058' + cos15026' - sin84059' = 2.8659
17.
A(4, -3), B(9, 7) என்பன கொடுக்கப்பட்ட புள்ளிகள் P(x, y) என்பது கோட்டுத்துண்டு AB யை உட்புறமாக 3:2 என்ற விகிதத்தில் பிரிக்கிறது என்க.
பிரிவுச் சூத்திரத்தின்படி,
P(x,y)=P\(\left( \frac { { mx }_{ 2 }+{ nx }_{ 1 } }{ m+n } ,\frac { { my }_{ 2 }+{ ny }_{ 1 } }{ m+n } \right) \)
இங்கு x1=4, y1=-3 ,x2=9, y2=7
m = 3, n = 2
∴ P(x,y)=P\(\left( \frac { 3(9)+2(4) }{ 3+2 } ,\frac { 3(7)+2(-3) }{ 3+2 } \right) \)
=P\(\left( \frac { 27+8 }{ 5 } ,\frac { 21-6 }{ 5 } \right) \)
= P(7,3)
18.
(i) \(\sin^260^о=\frac{\sqrt{3}}{2}\), cos 60o = 1/2
இடப்பக்கம் sin2 60o + coso = \({ \left( \frac { { \sqrt { 3 } } }{ 2 } \right) }^{ 2 }+{ \left( \frac { 1 }{ 2 } \right) }^{ 2 }\)
= \(\frac34+\frac14=\frac14\) = 1 = வலப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
(ii) tan 30o = \(\frac{1}{\sqrt3}\) , sec2 60о = \(\frac{2}{\sqrt3}\)
இடப்பக்கம் 1 + tan2 30o = 1 + \({ \left( \frac { { 1 } }{ \sqrt { 3 } } \right) }^{ 2 }\)
= 1+ \(\frac13\)=\(\frac{3+1}{3}=\frac43\)
வலப்பக்கம் sec2 30o = \({ \left( \frac { { 2 } }{ \sqrt { 3 } } \right) }^{ 2 }=\frac43\)
இடப்பக்கம் = வலப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
(iii) cos900 =1- 2sin2 450 = 2cos2 450 -1
cos 90o = 0 ...(1)
sin 45o = \(\frac{1}{\sqrt2}\)
cos 45o = \(\frac{1}{\sqrt2}\)
1 - 2 sin2 45o = 1 - 2\(\left ( \frac{1}{\sqrt2} \right )^2\)- 1
= 1 - 2 x 1/2 = 1 - 1 = 0 ........(2)
2 cos2 45o - 1 = 2\(\left ( \frac{1}{\sqrt2} \right )^2\)- 1
=2 x 1/2 - 1 = 1 - 1 = 0
(1) = (2) = (3)
∵ cos 90o = 1 - 2 sin2 45o = 2 cos 45o - 1 சரிபார்க்கப்பட்டது.
(iv) sin300cos600 + cos300sin600 = sin900
sin 30o = 1/2
cos 60ο = 1/2
sin 90о = 1
cos 30o = \(\frac{\sqrt3}{2}\)
sin 60о = \(\frac{\sqrt3}{2}\)
இடப்பக்கம் sin300 cos600 + cos300sin600 sin900
\(1/2\times1/2+\frac{\sqrt3}{2} \times \frac{\sqrt3}{2}\)
\(1/4+3/4=\frac44=1\)
வலப்பக்கம் sin 90о = 1
இடப்பக்கம் = வலப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
19.
(i) (-2,3) மற்றும் (-6, -5)
புள்ளிகளை இணைக்கும் கோட்டுத் துண்டின் நடுப்புள்ளி \(M = \left( \frac { { x }_{ 1 }+{ x }_{ 2 } }{ 2 } ,\frac { { y }_{ 1 }+{ y }_{ 2 } }{ 2 } \right) \)
A (-2,3) மற்றும் B (-6, -5) என்பன புள்ளிகள்
=\(\left( \frac { -2-6 }{ 2 } ,\frac { 3-5 }{ 2 } \right) \)
=\(\left( \frac { -8 }{ 2 } ,\frac { -2 }{ 2 } \right) \)
=(-4,1)
கோட்டுத்துண்டின் நடுப்புள்ளி (-4,-1)
(ii) (8,-2) மற்றும் (-8,0)
புள்ளிகளை இணைக்கும் கோட்டுத் துண்டின் நடுப்புள்ளி \(M = \left( \frac { { x }_{ 1 }+{ x }_{ 2 } }{ 2 } ,\frac { { y }_{ 1 }+{ y }_{ 2 } }{ 2 } \right) \)
A (8,-2) மற்றும் B (-8,0) என்பன புள்ளிகள்
=\(\left( \frac { 8-8 }{ 2 } ,\frac { -2+0 }{ 2 } \right) \)
=\(\left( \frac { 0 }{ 2 } ,\frac { -2 }{ 2 } \right) \)
=(0,1)
கோட்டுத்துண்டின் நடுப்புள்ளி=(0,-1)
iii) (a,b) மற்றும் (a + 2b, 2a - b)
புள்ளிகளை இணைக்கும் கோட்டுத் துண்டின் நடுப்புள்ளி \(M = \left( \frac { { x }_{ 1 }+{ x }_{ 2 } }{ 2 } ,\frac { { y }_{ 1 }+{ y }_{ 2 } }{ 2 } \right) \)
A (a,b) மற்றும் B (a + 2b, 2a - b) என்பன புள்ளிகள்
=\(\left( \frac { a+a+2b }{ 2 } ,\frac { b+2a-b }{ 2 } \right) \)
=\(\left( \frac { 2a+2b }{ 2 } ,\frac { 2a }{ 2 } \right) \)
=(a + b, a)
கோட்டுத்துண்டின் நடுப்புள்ளி ((a + b), a)
iv) \(\left( \frac { 1 }{ 2 } ,\frac { -3 }{ 7 } \right) \) மற்றும் \(\left( \frac { 3 }{ 2 } ,\frac { -11 }{ 7 } \right) \)
புள்ளிகளை இணைக்கும் கோட்டுத் துண்டின் நடுப்புள்ளி \(M = \left( \frac { { x }_{ 1 }+{ x }_{ 2 } }{ 2 } ,\frac { { y }_{ 1 }+{ y }_{ 2 } }{ 2 } \right) \)
A \(\left( \frac { 1 }{ 2 } ,\frac { -3 }{ 7 } \right) \) மற்றும் B \(\left( \frac { 3 }{ 2 } ,\frac { -11 }{ 7 } \right) \)என்பன புள்ளிகள்
=\(\left( \frac { \frac { 1 }{ 2 } +\frac { 3 }{ 2 } }{ 2 } ,\frac { \frac { -3 }{ 9 } -\frac { 11 }{ 7 } }{ 2 } \right) \)
=\(\left( \frac { 2 }{ 2 } ,\frac { -2 }{ 2 } \right) \)
கோட்டுத்துண்டின் நடுப்புள்ளி (1,-1)
20.
செங்கோண முக்கோணம் OMP யில், OP = 25மீ, PM = 5மீ
\(\sinθ=\frac{PM}{OP}=\frac{5}{25}=\frac15\)......(1)
செங்கோணமுக்கோணம் OQN, OQ = 3மீ, QN = h
\(\sinθ=\frac{QN }{OQ }=\frac{h }{35}\)......(2)
(1) = (2)
\(\frac {h}{35}=\frac 15\)
\(h =\frac {35}{5}\) = 7மீ
உயரம் h = 7மீ.
21.
இங்கு இனிப்புப் பெட்டியின் நீளம் (l) = 22செமீ, அகலம் (b) = 18 செமீ, உயரம் (h) = 10செமீ.
ஓர் இனிப்புப் பெட்டியின் கன அளவு = l \(\times\) b \(\times\) h
= 22 \(\times\) 18 \(\times\) 10 செமீ3
அட்டைப் பெட்டியின் நீளம் (l) = 1மீ = 100 செமீ,

அகலம் (b) = 88 செமீ, உயரம் (h) = 63 செமீ.
அட்டைப் பெட்டியின் கனஅளவு = l \(\times\) b \(\times\) h
= 100 \(\times\) 88 \(\times\) 63 செமீ3
அட்டைப் பெட்டியில் அடுக்க இயலும் இனிப்புப் பெட்டிகளின் எண்ணிக்கை

\(=\frac { 100\times 88\times 63 }{ 22\times 18\times 10 } \)
= 140 பெட்டிகள்
22.
நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள் = 1184 ஆகவே n = 1184
(i) E1 என்பது கணிதத்தில் நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள் உள்ள நிகழ்ச்சி என்க.
ஆகையால் n(E1) = 233, அதாவது r1 = 233
P(E1) = \(\frac { { r }_{ 1 } }{ n } =\frac { 233 }{ 1184 } \)
(ii) E2 என்பது அறிவியலில் நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள் உள்ள நிகழ்ச்சி என்க.
ஆகையால் n(E2 ) = 1069 , அதாவது , r2 = 106
P(E2) = \(\frac { { r }_{ 2 } }{ n } =\frac { 106 }{ 1184 } \)
ஆகவே அறிவியலில் நூற்றுக்கு நூறு பெறாதவராக இருக்க நிகழ்தகவு
P(E'2) = 1 - P(E2)
= 1 - \(\frac { 106 }{ 1184 } \) = \(\frac { 1078 }{ 1184 } \)
23.
நாற்கரம் ABCD இன் மூலைவிட்டங்களில் ஒன்றான AC ஐ இணைக்க.
\(\triangle \)ABC இன் பரப்பு = \(\frac {1}{2}\)xஅடிபக்கம் × உயரம்
=\(\frac {1}{2}\)x 8x 15= 60 செ.மீ2
பிதாகரஸ்தேற்றப்படி, செங்கோண முக்கோணம் \(\triangle \)ABC இல்,
AC2 = AB2 + BC2
= 82 +152 = 64 + 225 = 289 செ.மீ
ஆகவே, AC = \(\sqrt {289}\)=17 செ.மீ
இப்பொழுது , \(\triangle \)ACD இல் a = 17 செமீ, b =12 செமீ, c =25 செமீ என்க
அரைச் சுற்றளவு s=\(\frac {a+b+c}{2}=\frac {17+12+25}{2 }=\frac {54}{2}\) =27 செ.மீ
\(\triangle \)ACD இன் பரப்பு =\(\sqrt { s(s-a)(s-b)(s-c) } \)
=\(\sqrt {27(27-17)(27-12)(27-25)}\)
=\(\sqrt {27 \times 10\times15\times2} \)
=\(\sqrt {3\times3\times3\times2\times5\times5\times3\times2}\)
=× 3 × 2 × 5 = 90 செமீ2
ஆகவே நாற்கரம் \(\triangle \)BCD இன்
24.
படத்திலிருந்து,
sin \(\theta \) = \(\frac { AB }{ AC } \)
sin 48°30' = \(\frac { AB }{ 5 } \)
0.7490 = \(\frac { AB }{ 5 } \)
5 x 0.7940 = AB
AB =3..7450 செமீ
cos \(\theta \) = \(\frac { BC }{ AC } \)
cos48°30' = \(\frac { BC }{ 5 } \)
0.6626 = \(\frac { BC }{ 5 } \)
0.6626 x 5 = BC
BC = 3.313 செமீ
முக்கோணத்தின் = \(\frac { 1 }{ 2 } \)bh அடிப்பக்கம் உயரம்
= \(\frac { 1 }{ 2 } \) x BC x AB
= \(\frac { 1 }{ 2 } \) x 3.3130 x 3.7450
= 1.6565 x 3.7450 = 6.2035925 செமீ2
25.
புள்ளிகள் A(−3,5) மற்றும் B(x2 , y2 ) என்க.
புள்ளி P(-2, 3) ஆனது AB ஐ உட்புறமாக 1:6 என்ற விகிதத்தில் பிரிக்கின்றது எனக் கொடுக்கப்பட்டுள்ளது.
பிரிவுச் சூத்திரத்தின் படி P\(\left( \frac { { mx }_{ 2 }+{ nx }_{ 1 } }{ m+n } ,\frac { { my }_{ 1 }+{ ny }_{ 1 } }{ m+n } \right) \)=P(-2, 3)
\(p\left(\frac{1\left(x_2\right)+6(-3)}{1+6}, \frac{1\left(y_2\right)+6(5)}{1+6}\right)=P(-2,3)\)
ஆயத் தொலைவுகளைச் சமப்படுத்த
\(\frac { { x }_{ 2 }-18 }{ 7 } \)=-2
x2 −18 = −14
x2 = 4
\(\frac { { y }_{ 2 }+30 }{ 7 } \)=3
y2 + 30 = 21
y2 = −9
ஆகவே, புள்ளி B இன் ஆயத்தொலைவுகள் (4, -9) ஆகும்.
26.
கொடுக்கப்பட்டவை
x + y = 5 ...(1)
2x – y = 4 ...(2)
சமன்பாடு (1) இக்கு வரைபடம் வரைதல் எளிது.
முதற்கோட்டின் x மற்றும் y மதிப்புகளை பின்வருமாறு காணலாம்.
x = 0 எனில், (1) இலிருந்து y = 5 எனக் கிடைக்கும் எனவே, A(0, 5) என்பது கோட்டின் மீதுள்ள ஒரு புள்ளியாகும்.
y = 0 எனில் (1) இலிருந்து x = 5 எனக் கிடைக்கும். எனவே, B(5, 0) என்பது கோட்டின் மீதுள்ள மற்றோரு புள்ளியாகும்.
வரைபடத்தில் A மற்றும் B ஆகிய இரண்டு புள்ளிகளைக் குறித்து அவற்றை இணைத்துக் கோடு (1) வரைக.

இதே முறையைப் பயன்படுத்திச் சமன்பாடு (2) இக்கும் வரைபடம் வரையலாம்.
x = 0 எனில், (2) இலிருந்து y = -4 எனக் கிடைக்கும்.
எனவே (0, -4) என்பது கோட்டின் மீதுள்ள ஒரு புள்ளி.
y =0 எனில், (2) இலிருந்து x = 2 எனக் கிடைக்கும்.
எனவே Q (2, 0) என்பது அந்தக் கோட்டின் மீதுள்ள மற்றோரு புள்ளி ஆகும்.
வரைபடத்தில் P மற்றும் Q ஆகிய புள்ளிகளைக் குறித்து இரண்டு புள்ளிகளையும் இணைத்துக் கோடு (2) வரைக.
இந்த இரு கோடுகளும் ஒன்றையொன்று வெட்டிக்கொள்ளும் புள்ளியான (3, 2) என்பது சமன்பாடுகள் (1) மற்றும் (2) இன் தீர்வாகும். இரு கோடுகளுக்கும் ஒரே ஒரு புள்ளி தீர்வாக அமைகிறது ஆகவே, தீர்வு x =3, y = 2 ஆகும்.
27.
lbh = 660
lb = 33
33 h = 660
h = 20
28.
a1 : a2 = 2 : 3
a12 : a22 = 4 : 9
6a12 : 6a22 = 24 : 54 ⇒ 12 : 27 ⇒ 4 : 9
29.
4a2 = 600 ⇒ a2 = 150
6a2 = 6 x 150 = 900
30.
சமவாய்ப்பு சோதனையின் முடிவு, விளைவு என அழைக்கப்படுகிறது. (வரையறை)
31.
(a)
பட்டறி நிகழ்தகவு
32.
(b)
0 மற்றும் 1
33.
இணை கோடுகளுக்கு தீர்வு இல்லை
34.
\(x+\frac { 1 }{ x } =2\) ⇒ x2 - 2x + 1 = 0 ; x(x - 1) = 2 ⇒ x2 - x - 2 = 0; x3 - x = 5 என்பன நேரிய சமன்பாடுகள் அல்ல.
35.
(d)
எண்ணற்ற தீர்வுகள்
36.
2 sin 2θ = \(\sqrt { 3 } \)
sin 2θ = \(\sqrt { 3 } \)/2 = sin 60o ⇒ 2θ = 60o
⇒ θ = 30o
37.
tan 72o tan18o = tan (90o -18o)
tan18o = cot 18o , tan 18o = 1
38.
x = sin 30o = 1/2
y = cos 60o = 1/2
x2 + y2 = \((\frac{1}{2})^2 + (\frac{1}{2})^2 = 1/4 + 1/4 = 1/2\)
39.
(b)
(2,3)
40.
\(\left(\frac{m x_2+n x_1}{m+n}, \frac{m y_2+n y_1}{m+n}\right)\) பிரிவுச் சூத்திரப்படி
y அச்சுத் தொலைவு = 0
\(\left(\frac{m (1)+n (6)}{m+n}, \frac{m (-7)+n (4)}{m+n}\right)\)
\(\therefore \frac{m(-7)+n(4)}{m+n}=0 \)
\(\Rightarrow -7 m+4 n=0 \)
\(\therefore m: n=4: 7 \)
41.
\(\left(\frac{m x_2+n x_1}{m+n}, \frac{m y_2+n y_1}{m+n}\right) =(1,6) \)
(1, 6) = \((\frac {m(-2) +n (2)}{m + n}, \frac {m(3) +n (7)}{m + n})\)
\((\frac {-2m +2n }{m + n}, \frac {3m +7n }{m + n})\)
x அச்சுத் தொலைவு \(=\frac{-2 m+2 n}{m+n}=\frac{1}{1} \)
\(-3 m =-n \)
\(\frac{m}{n} =\frac{1}{3} \Rightarrow 1: 3\)
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - பண்டைய நாகரிகங்கள் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Ancient . Civilisations Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - புரட்சிகளின் காலம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - The Age of Revolutions Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - State and Society in Medieval India Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Colonialism in Asia and Africa Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards