9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9ஆம் வகுப்பு கணிதம் ஆயத்தொலை வடிவியல்,முக்கோணவியல் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Maths Coordinate Geometry,Trigonometry Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு கணிதம் அளவியல்,புள்ளியியல்&நிகழ்தகவு முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Maths Mensuration,Statistics&Probability Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - செவ்வியல் உலகம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - The Classical World Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Early Tamil Society and Culture Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - தொழிற்புரட்சி முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Industrial Revolution Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - நவீன யுகத்தின் தொடக்கம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - The Beginning of the Modern AgeImportant 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.

Published on: 06/02/2020
9ஆம் வகுப்பு அறிவியல் 5 மதிப்பெண் முக்கிய வினாக்கள் ( 9th Standard Science 5 Mark Important Questions )
Download Tamil Nadu 9th Standard Science question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Science Test1.
சிறு குறிப்பு வரைக .
அ) பசுமை வீட்டின் முக்கியத்துவம்
ஆ) உழவன் கைபேசி செயலி
இ) முக்கிய மலரியல் மண்டலங்கள்
ஈ) அஸோஸ்பை ரில்லம்
2.
மண்ணில்லா நீர்ஊடக தாவர வளர்ப்பின் நிறைகளை எழுதுக?
3.
SONAR வேலை செய்யும் விதத்தினை விளக்குக
4.
ஒலியின் பயன்பாடுகளை பட்டியலிடுக.
5.
பன்னாட்டு விண்வெளி மையத்தின் நன்மைகளை விவாதி.
6.
சூரிய மண்டலத்தில் உள்ள கோள்களைப் பற்றி குறிப்பு வரைக.
7.
வாழிடத்திற்கு ஏற்றாற்போல். வௌவால்கள் எவ்வாறு தகவமைத்துக் கொள்கின்றன?
8.
வரைபடம் மூலம், கார்பன் சுழற்சியை விவரி.
9.
சில மனித நோய்களானவை பாதிக்கப்பட்ட நபரின் இரத்தமானது பாதிக்கப்படாத வரின் இரத்தத்தோடு கலப்பதன் மூலம் பரவுகின்றன. இப்படியான நோய் பாதிக்கப்பட்டவருக்கு தொடர்ச்சியாக இரத்த வெள்ளைணுக்கள் குறைவுபடுகின்றன.
அ. இந்நோயின் பெயர் யாது? இவற்றின் நோய்க்காரணம் எது?
ஆ. இத்தாக்குதலின் போது பாதிக்கப்படும் வெள்ளையணுக்களின் வகை எது?
இ. எவ்வாறு நோயுற்றவரின் இரத்தமானது பாதிக்கப்படாத வரைத் தொடர்பு கொள்கிறது?
ஈ. இவ்வாறான நோய் பரவலைத்தடுப்பதற்கான மூன்று முறைகளை பரிந்துரை செய்க.
10.
புதிதாக பிறந்த குழந்தை முதல் 12 மாத வயது வரை உள்ள குழந்தைகளுக்கான நோய் எதிர்ப்பு திறனூட்ட அட்டவணையை பரிந்துரை செய்க. ஏன் இந்த அட்டவணையைப் பின்பற்றுவது அவசியமாகிறது?
11.
கார்பனின் சில வேதி வினைகளைக் கூறுக.
12.
திரவமானியின் அமைப்பு மற்றும் செயல்படும் விதத்தை படத்துடன் விவரி.
13.
தவறானக கூற்றைக் கண்டறிந்து சரி செய்க.
அ. சகப்பிணைப்புச் சேர்மங்களைப் போலவே, ஈதல் சகப்பிணைப்புச் சேர்மங்களும் மின் சுமை கொண்ட (அயனிகள்) துகள்களைப் பெற்றுள்ளன. எனவே அவை நல்ல மின்கடத்திகள்
ஆ. ஹைட்ரஜன் பிணைப்புடன் ஒப்பிடும் போது அயனிப் பிணைப்பு வலிமை குறைந்த பிணைப்பு ஆகும்.
இ. அயனிப் பிணைப்பு எலக்ட்ரான்களை சமமாக பங்கீடு செய்வதால் உருவாகிறது.
ஈ. எலக்ட்ரான் இழப்பு ஆக்ஸிஜனேற்றம் என்றும், எலக்ட்ரான் ஏற்பு ஒடுக்கம் என்றும் அழைக்கப்படுகிறது.
உ. பிணைப்பில் ஈடுபடாத எலக்ட்ரான்களை இணைதிறன் எலக்ட்ரான்கள் என்கிறோம்.
14.
சிறுநீரகத்தின் அமைப்பினையும்,சிறுநீர் உருவாதலிலுள்ள படிநிலைகளையும் விளக்குக.
15.
மனிதனின் உணவுப் பாதையை விவரி
16.
செல் A ஒரு மைட்டாசிஸ் பகுப்பை பெற்றுவிட்டது மற்றும் மற்றொரு செல் B அதனுடைய மியாஸிஸ் பகுப்பை பூர்த்தி செய்துள்ளது எனில் A மற்றும் B எத்தனை செல்களை உற்பத்தி செய்திருக்கும்
செல் A : செல் B:
17.
கீழே கொடுக்கப்பட்ட படத்தில் பாகங்களைக் கண்டறியவும்.

(a)a,b,c பாகம் குறிக்கவும்
(b)திசுவின் வேதிக் கூட்டுப் பொருட்கள் எவை?
(c)பாகம் c-யின் செயல் என்ன?
18.
உப்புகளின் பயன்களில் ஏதேனும் ஐந்து எழுக.
19.
A,B,C,D மற்றும் E யில் உள்ள கரைசல்களை பொது நிறங்காட்டியைக் கொண்டு சோதனை செய்ததில் அதன் PH மதிப்பு முறையே 4,1,11,7 மற்றும் 9 ஆகும்.மேற்கண்ட கரைசல்களில் எந்த கரைசல்,
i.நடுநிலைத் தன்மை உடையது
ii.வலிமை மிகு காரத்தன்மை உடையது
iii.வலிமை மிகு அமிலத் தன்மை உடையது
iv.வலிமை குறைந்த அமிலத் தன்மை உடையது
v.வலிமை குறைந்த காரத் தன்மை உடையது.
20.
அயனிச் சேர்மங்களுக்கும் சகப்பிணைப்புச் சேர்மங்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை அட்டவணைப்படுத்துக.
21.
ஒரு AC மின்னியற்றியின் நேர்த்தியான வரைபடம் வரைக.
22.
DC மோட்டாரின் தத்துவம் ,அமைப்பு மற்றும் வேலை செய்யும் விதம் ஆகியவற்றை விளக்கவும்.
23.
2\(\Omega \) மற்றும் 5\(\Omega \) மின் தடைகள் கொண்ட இரு மின் தடையங்கள் தொடரிணைப்பில் உள்ளவாறு மின்சுற்று ஒன்றை வரைக. அதனுடன் பக்க இணைப்பில் உள்ளவாறு ஒரு 3\(\Omega \) மின்தடை கொண்ட மின்தடையத்தை இணைக்கவும்.
24.
நீரானது வெப்பத்தை அரிதாகக் கடத்தக் கூடியது என்பதை எவ்வாறு சோதனை மூலம் நிருபிக்கலாம்? சமைக்கும் போது நீரை எவ்வாறு எளிதாகச் சூடுபடுத்தலாம்?
25.
நீரின் நிலை மாற்றங்கள் யாவை? விளக்குக
26.
தொகுதி கணுக்காலிகள் பற்றி எழுதுக.
27.
முன்முதுகு நாணிகளின் பண்புகளை விவரிக்க.
28.
இந்தியாவிலுள்ள உணவுக் கட்டுப்பாடு நிறுவனங்களின் பங்கினை விவரி.
29.
நமது உடல் வளர்ச்சிக்கு வைட்டமின்கள் எவ்வாறு பயன்படுகிறது? கொழுப்பில் கரையும் வைட்டமின்களின் மூலங்கள், அதன் குறை பாட்டு நோய்கள் மற்றும் அதன் அறிகுறிகளை அட்டவணைப்படுத்துக.
30.
கணினியின் தலைமுறைகளை அட்டவணைப்படுத்து
31.
தரவு செயலாக்கத்தின் பல்வேறு படிநிலைகள் யாவை?
32.
போரின் அணு மாதிரியின் கூற்றுக்களைப் பற்றி விளக்குக.
33.
கீழ்க்கண்ட அட்டவணையிலிருந்து அளவீடு தொடர்பான குறைந்தது பத்து வார்த்தைகளைக் கண்டுபிடிக்க

34.
டிண்டால் விளைவு மற்றும் பிரௌனியன் இயக்கம் ஆகியவற்றை தகுந்த வரைபடத்துடன் விளக்குக.
35.
தனிமங்களுக்கும் சேர்மங்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை எழுதி ஒவ்வொன்றிக்கும் ஒரு எடுத்துக்காட்டு தருக.
36.
நீரில் ஒளியின் வேகம் 2.25 \(\times\)108மீ/வி வெற்றிடத்தில் ஒளியின் வேவேகம் 3 \(\times\)108 மீ/வி எனில், நீரின் ஒளிவிலகல் எண்ணைக் கணக்கிடுக
37.
காற்றிலிருந்து 1.5 ஒளிவிலகல் எண் கொண்ட கண்ணாடிப் பாளத்திற்கு ஒளி செல்கிறது. கண்ணாடியில் ஒளியின் வேகம் என்ன? (வெற்றிடத்தில் ஒளியின் வேகம் 3 \(\times\) 108 மீ/வி)
38.
20cm3 பருமன் அளவுள்ள மீத்தேன் முற்றிலும் எரிவதற்கு தேவைப்படும் ஆக்சிஜனின் பருமனளவை கணக்கிடுக.
39.
கீழ்க்காணும் வரைபடம் ஒரு பொருளின் திசைவேகம்-காலம் வரைபடம் ஆகும். எந்த நேர இடைவெளியில் அது முடுக்கப்பட்டது? பகுதி ‘a’ வில் கொடுக்கப்பட்டுள்ள கால இடைவெளியில் அதன் முடுக்கம் என்ன? அதே கால இடைவெளியில் அப்பொருள் கடந்த தூரம் எவ்வளவு?

40.
ஒரு பந்தய மகிழுந்து 4 மீ / விநாடி2 என்ற சீரான முடுக்கத்தில் பயணிக்கிறது. புறப்பட்ட 10 விநாடியில் அது கடந்த தூரம் என்ன?
41.
ஐந்து ரூபாய் நாணயத்தினை திருகு அளவியால் அளக்கும் பொழுது அதன் புரிகோல் அளவு 1.மி.மீ அதன் தலைக்கோல் ஒன்றிப்பு 68 எனில், அதன் தடிமனைக் காண்க.
42.
நவீன தனிம அட்டவணையில் ஏதேனும் ஐந்து பண்புகளைக் குறிப்பிடுக
43.
வீட்டு உபயோக மின் பொருள்கள் எவ்வாறு இணைக்கப்படுகின்றன? தொடரிணைப்பிலா? பக்க இணைப்பிலா? காரணங்கள் தருக.
44.
உயிரினம் Aயினால் ஓர் இடம் விட்டு ஓரிடம் நகரமுடியாது. சுற்றுச்சூழலில் கிடைக்கும், C மற்றும் D யினைக் கொண்டு B என்ற எளிமையான உணவு உருவாக்குகிறது. இந்த உணவு G என்ற நிகழ்வினால் சூரிய ஒளியின் முன்னிலையில் F உறுப்புகளில் காணப்படும். E என்ற பச்சை நிறமுள்ளப் பொருளின் முன்னிலையில் உருவாக்கப்படுகின்றது. சில B எளிய உணவு சேமிப்பு நோக்கத்திற்காக கடினமான H-ஆக மாற்றப்படுகிறது, H அயோடின் கரைசல் உடன் சேர்த்தால் கருநீல நிறமாக மாறுகிறது.
அ) i) A உயிரினம் (ii) உணவு B மற்றும் உணவு H ஆகியன யாவை?
ஆ) C மற்றும் D ஆகியன யாவை?
இ) பெயரிடு: பச்சைநிறமுள்ள E மற்றும் உறுப்பு F
ஈ) நிகழ்வு G ன் பெயர் என்ன?
45.
தாவரத்தில் பல்வேறு வகையான சார்பசைவிற்கான சோதனையை நிகழ்த்தும் போது, X என்று குறிக்கப்பட்டத் தாவரத்தின் வேர் வளைந்து A மற்றும் B என்ற இரண்டு தூண்டல்களை நோக்கி வளர்கிறது. ஆனால் C என்ற மூன்றாம் தூண்டலை விட்டு விலகி வளைந்து காணப்படுகிறது. எனினும் X தாவரத்தின் தண்டு தூண்டல் A மற்றும் B விற்கு விலகியும், ஆனால் தூண்டல் Cயினை நோக்கி வளைகிறது. புவி சார்ந்த தூண்டல் காரணமாக B யானது வேர்களைத் தூண்டுகிறது. இவை அனைத்தையும் மனதில் வைத்து பின்வரும் கேள்விகளுக்குப் பதில் அளிக்கவும்.
அ) A என்பது எந்த வகை தூண்டலாக இருக்கும்?
ஆ) B-ல் காணப்படும் தூண்டலைப் பெயரிடுக.
இ) C என்பது எந்த வகையானத் தூண்டலாக இருக்கும்?
46.
சுதாவுக்கு தீ விபத்து ஏற்பட்டது. அவள் எந்தவித மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும்?
47.
கைபேசியில் பயன்படுத்தும் மின்கலங்களை மறு ஊட்ட ம் (ரீசார்ஜ்) செய்ய வேண்டும். அதேபோல், நீங்கள் கடிகாரங்களில் பயன்படுத்தப்படும் மின்கலங்களை மறு ஊட்டம் செய்யமுடியுமா? ஆராய்ந்து பதில் கூறுக.
48.
யோகா நெகிழியாலான தண்ணீர் புட்டி வாங்க விரும்புகிறாள். அவள் கடையில் சென்று வாங்க முற்படும்போது, அங்கு ரெசின் குறியீடு 1, 2, 3 மற்றும் 7 எனக் குறிக்கப்பட்ட நான்கு வகையான நெகிழிப் புட்டிகளைக் காண்கிறாள். அவள் எந்தக் குறியீடு உடைய புட்டியை வாங்க வேண்டும்? ஏன்?
49.
அடியில் துளையுடன் உள்ள படகு நீரில் செல்லும்பொழுது இறுதியில் மூழ்கிவிடும். ஏன்?
1.
அ) பசுமை வீட்டின் முக்கியத்துவம்:
1. நோயில்லாத் தாவரங்களை தொடர்ச்சியாக உற்பத்தி செய்ய முடியும்.
2. பயிர்களுக்கு மிக்ககுறைந்த அளவு நீரே போதுமானதாகும்.
3. திறந்தவெளியில் பயிரிடப்படும் பயறுகளை விட இதன் மகசூல் அதிகமாகும்.
4. பூச்சிக் கொல்லிகள் பயன்பாடு இதில் குறைவு.
5. சாதகமற்ற சூழ்நிலைகலிருந்து இது தாவரங்களைப் பாதுகாக்கிறது. .
ஆ) உழவன் கைபேசி செயலி: தமிழநாடு அரசு உழவன் (விவசாயி )செயலி என்ற கைபேசி பயன்பாடுச் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.இதன் மூலம் அரசு வழங்கும் விவசாய மானியங்கள் , விவசாய உபகரணங்கள், பயிர்க் காப்பீட்டூத் தகவல்கள் மற்றும் காலநிலை ஆகியவை பற்றிய தகவல்களை பெறமுடியும். மேலும் அரசு மற்றும் தனியார் நிலையங்களில் உள்ள விதை மற்றும் உரங்களின் கையிருப்பைப் பற்றிய தகவல்களையும் இது வாங்குகின்றது.
இ) முக்கிய மலரியல் மண்டலங்கள்
| மண்டலங்கள் | மலர்கள் |
|---|---|
| ஓசூர் மண்டலம் | மல்லிகை, சாமந்தி, செண்பகப் பூ, ரோஜா |
| சென்னை மண்டலம் | மல்லிகை, மேரிகோல்டு, கனகாம்பரம் |
| மதுரை மண்டலம் | மல்லிகை, செண்பகப் பூ , வாசனைரோஜா ,அரளி , கனகாம்பரம் |
| திருச்சி மண்டலம் | மல்லிகை , ரோஜா , வாசனை ரோஜா |
| கோயம்புத்தூர் மண்டலம் | மல்லிகை , நிலசம்மங்கி , கோழிப்பு , வாசனைரோஜா |
| கன்னியாகுமரி மண்டலம் | மல்லிகை, வாசனை ரோஜா |
| மலைப்பிரதேச மண்டலம் | சாமந்தி , கனகாம்பரம். |
ஈ ) அஸோஸ்பை ரில்லம் : இவை வளிமண்டல நைட்ரஜனைப் பயன்படுத்தும் திறன் பெற்றவை மேலும் இவை வளிமண்டல நைட்ரஜனை பயிர்த் தாவரங்களுக்கு வழங்குகின்றன. மக்காச்சோளம் , பார்லி , ஓட்ஸ் மாற்று சோளம் போன்ற தாவரங்களின் மீது நோய்தடுப்பு உரமாக இவை பயன்படுத்தப்படுகின்றன.இவைகள் தானியங்களில் 5 முதல் 20 சதவீதமும் சிறுதானியங்களில் 30 சதவீதமும் தீவனப் பயிர்களில் 50 சதவீதமும் தனியா உற்பத்தியை அதிகப்படுத்துகின்றன.
2.
மண்ணற்ற சுழலில் நீரில் கரைந்துள்ள கனிம ஊட்டங்களை கொண்டு தாவரங்களை வளர்த்தல் மண்ணில்லா நீர்ஊடக தாவர வளர்ப்புமுறை எனப்படும்.இதற்கான கலன்கள் கண்ணாடி உலோகம் மற்றும் நெகிழி ஆகியவற்றால் ஆனவை,இம்முறையில் தனித்த தாவரங்களுக்கு சிறிய தொட்டிகளும் பெரிய அளவில் வளர்ப்பதற்கு பெரிய தொட்டிகளும் பயன்படுத்தப்படுகின்றன.இந்த நுட்பமானது 1980 ல் ஜெர்மன் தாவரவியலாளர் ஜிலியஸ் வான் சாக்ஸ் என்பரால் விளக்கப்பட்டது.விதையில்லா வெள்ளரி மற்றும் தக்காளி போன்றவைகளை வணிக ரிதியாக உற்பத்தி செய்வதற்காக தேவையான ஊட்டச்சத்துகள் கரைந்துள்ள நீருக்குள் வேரானது முழ்கும் படி தாவரங்கள் மிதக்கவிடப்படுகின்றன. வேர்கள் நிறையும் ஊட்டசத்துக்களையும் உறிஞ்சகின்றன. அனால் இறுகப்பிடிக்கும் தன்மையைக் கொண்டிருப்பதில்லை .எனவே தாவரங்கள் மேற்புறத்தில் உறுதியாக இருக்கும்படி அவற்றை அமைக்கவேண்டும்.
முக்கியத்துவம்
i) ஊட்டச்சத்தும் நீரும் பாதுகாக்கப்படுகின்றன.
ii) கட்டுப்படுத்தப்பட்ட தாவர வளர்ச்சி காணப்படும்
iii) பாலைவனங்களிலும் ஆர்டிக் துருவப் பகுதிகளிலும் இந்த முறை ஒரு சிறந்த மாற்று வேளாண் முறையாக உள்ளது.
3.
(i) சோனார் (SONAR) என்ற சொல்லின் விரிவாக்கம் Sound Navigation And Ranging என்பதாகும். சோனார் என்ற கருவியானது மீயொலி அலைகளைச் செலுத்தி நீருக்கு அடியிலுள்ள பொருள்களின் தூரம், திசை மற்றும் வேகம் ஆகியவற்றைக் கணக்கிட பயன்படுகிறது. இதில் மீயொலிகளைப் பரப்பக்கூடிய சாதனமும், மீயொலிகளை உணரக்கூடிய உணர்வியும் உள்ளன. அவை படகு மற்றும் கப்பல்களுக்கு அடியில் பொருத்தப்பட்டுள்ளன. பரப்பியானது மீயொலிகளை உருவாக்கி பரப்புகிறது. இவ்வலைகள் நீருக்குள் பயணித்து, கடலின் அடித்தளத்தில் உள்ள பொருட்களின் மீது (அதாவது கடல் படுகை, மீன்களின் கூட்டம்) பட்டு எதிரொலிப்படைந்து மீண்டும் வரும் பொழுது உணர்வியினால் உணரப்படுகிறது. உணர்வியானது மீயொலிகளை மின்சார சைகைகளாக மாற்றமடையச் செய்கின்றது. அவற்றிலிருந்து தகவல்கள் பெறப்படுகின்றன. நீரில் ஒலியின் திசைவேகம் மற்றும் பரப்பப்பட்ட ஒலிக்கும், பெறப்பட்ட எதிரொலிக்கும் இடையே உள்ள கால இடைவெளி ஆகியவற்றைக் கணக்கிட்டு, அதன் மூலம் நீருக்குள்ளிருந்து மீயொலி அலைகளை எதிரொலித்த, பொருளின் தொலைவைக் கணக்கிடலாம்.
(ii) பரப்பப்பட்ட மற்றும் பெறப்பட்ட மீயொலி அலைகளுக்கு இடையேயான கால இடைவெளியை 't' எனவும், நீரின் வேகத்தை 'v' எனவும் கொண்டால், மீயொலியானது கடந்த தொலைவு 2d=vxt ஆகும். இவ்வாறு பொருள்களின் தொலைவைக் கண்டறியும் முறை எதிரொலி நெருக்கம் (echo-ranging) எனப்படும். கடலின் ஆழத்தை அறியவும், நீருக்கு அடியில் அமைந்துள்ள மலைகள், குன்றுகள், நீர்முழ்கிக் கப்பல்கள் மற்றும் பனிப்பாறைகள் ஆகியவற்றை இடம் கண்டறிவதற்கு இந்த முறையானது பயன்படுகின்றது.
4.
இசைக்கருவி:
குழல்பெருக்கி, ஒலிப்பெருக்கி, குழல்கள், நாதஸ்வரம், செனாய், தாரை போன்ற இசைக் கருவிகள் யாவும் ஒளியானது ஒரு குறிப்பிட்ட திசையில் பரவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இக்கருவிகளில் ஒரு குழாயினைத் தொடர்ந்து ஒரு கூம்பு வடிவ அமைப்பானது ஒலியைப் பெருக்கமடையச் செய்து கேட்பவரை நோக்கி முன்னேறிச் செல்லுமாறு அமைக்கப்பட்டுள்ளது.
இதயத் துடிப்பளவி:
இதயத் துடிப்பளவி என்பது ஒரு மருத்துவக் கருவியாகும். இது உடலில் உண்டாகும் ஒலிகளைக் கேட்க உதவுகிறது. உடலில் தோன்றும் ஒலியானது, இக்கருவியில் உள்ள இணைப்புக் குழாயில் பலமுறை எதிரொலிப்படைந்து, மருத்துவரின் செவியை அடைகிறது.
5.
பன்னாட்டு விண்வெளி மையத்தில் பயன்படுத்தியுள்ள தொழில்நுட்பத்தைக் கொண்டு தண்ணீர்த் தட்டுப்பாடு உள்ள இடங்களில் மேம்படுத்தப்பட்ட நீர் கொண்டு வடிகட்டுதல் மற்றும் சுத்திகரிக்கும் முறைகளைப் பெறலாம். தண்ணீர்த் தட்டுப்பாடு நிறைந்த இடங்களில் வாழும் மக்களுக்கு உயிர் காக்கும் வழிமுறையாக இது இருக்கக் கூடும். பன்னாட்டு விண்வெளி மையத்திற்காக (ISS) உருவாக்கப்பட்ட நீர் மீட்பு அமைப்பு (WRS) மற்றும் ஆக்சிஜன் உருவாக்கும் அமைப்பு (OGS) ஆகியவை, சுத்தமான குடிநீர் அங்கு இல்லை என்பதால், ஈராக் நாட்டிலுள்ள, மக்களால் புறக்கணிக்கப்பட்ட ஒரு கிராமத்தை காப்பாற்றி அவர்களை மீண்டும் அங்கு வாழ வழிவகை செய்துள்ளன.
கண்ணைத் தொடரும் தொழில்நுட்பம்:
நுண் ஈர்ப்பு நிலையில் ஆய்வுகளை செய்வதற்காக உருவாக்கப்பட்ட கண்ணைத் தொடரும் கருவி பல லேசர் அறுவை சிகிச்சைகளில் பயன்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை நிபுணரின் செயல்பாட்டிற்கு இடையூறு ஏற்படுத்தா வண்ணம், இந்தக் கருவியானது கண்ணின் நிலையைத் துல்லியமாகத் தொடர்கிறது. இயக்கக்குறைபாடு மற்றும் பேச்சில் குறைபாடுள்ளவர்களுக்கு இந்த கண்ணைத் தொடரும் தொழில்நுட்பமானது வெகுவாகப் பயன்படுகிறது. எடுத்துக்காட்டாக, தீவிர இயக்கக் குறைபாடுள்ள ஒரு குழந்தை, அதன் கண் அசைவுகளை மட்டுமே வைத்து அன்றாட செயல்பாடுகளை செய்து கொண்டு யாரையும் சாந்திராத வாழ்க்கையை வாழ இயலும்.
தானியங்கி கைகள் மற்றும் அறுவை சிகிச்சைகள்:
அறுவை சிகிச்சை மூலம் அகற்ற இயலாத கட்டிகளை (எ.கா: மூளைக் கட்டிகள்) நீங்குவதற்கும் மிகத் துல்லியான முறையில் உடல்திசு ஆய்வு செய்வதற்கும் (biospy), பன்னாட்டு விண்வெளி மையத்தில் ஆராய்ச்சிக்குத் துணையாக இருப்பதற்காக விண்வெளி வீரர்களுக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்ட பெரும் தானியங்கி கைகள், அறுவை சிகிச்சை தானியங்கியாக (surgical robot) செயல்பட்டு புற்றுநோய் சிகிச்சைக்குப் பயன்படுகின்றன. இத்தகைய கருவிகளால் மிகத்துல்லியமான முறையில் உடல் திசு ஆய்வுகளைச் செய்ய முடியும் என்று இதை உருவாக்கியவர்கள் கூறுகின்றனர்.
இவற்றை தவிரவும் இன்னும் பல வழிகளில் பன்னாட்டு விண்வெளி மையத்தில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் நமக்கு பயனுள்ளதாய் அமைகின்றன. அவையாவன: மேம்படுத்தப்பட்ட தடுப்பூசிகளை உருவாக்குதல், மார்பகப் புற்றுநோயைக் கண்டறிதல் மற்றும் சிகிச்சை, அணுக முடியாத பகுதிகளுக்குள் செல்வதற்கான மீயொலிக் கருவிகள் உள்ளிட்ட இன்னும் பல.
6.
வட்ட வடிவமான சுற்றுப்பாதையில் கோள்கள் சூரியனைச் சுற்றி வருகின்றன. அவை நீள் வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன. சூரிய மண்டலத்திலுள்ள கோள்கள் யாவும் வெவ்வேறு இடைவெளியில் காணப்படுகின்றன. முதல் நான்கு கோள்களான புதன், வெள்ளி, பூமி மற்றும் செவ்வாய் ஆகியவை உட்புறக்கோள்கள் என்று அழைக்கப்படுகின்றன. வெளிப்புற சூரிய மண்டலத்தில் ஒப்பீட்டளவில் சூரியனை மெதுவாகச் சுற்றிவரும் கோள்களான வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகியவை வெளிப்புறக்கோள்கள் என அழைக்கப்படுகின்றன.
(i) புதன்:
சூரியனுக்கு மிக அருகில் அமைந்துள்ள பாறைக்கோள்தான் புதன் ஆகும். இது பகலில் மிக அதிக வெப்பத்துடனும் இரவில் அதிகக் குளிருடனும் காணப்படும். மற்ற எந்த கோள்களையும் விட சூரியனை இது வேகமாகச் சுற்றி வருகின்றது - இதன் சுற்றுக்காலம் 87.97 புவி நாள்களாகும். ஆனால், இது தன்னைத்தானே சுழல எடுத்துக் கொள்ளும் சுழற்சிக்காலம் மிக அதிகம். அதாவது, புதனில் ஒரு நாள் என்பது 58.65 புவி நாள்களாகும்.
(ii) வெள்ளி:
கிட்டத்தட்ட பூமியின் அளவையொத்த ஒரு சிறப்புக்கோள் வெள்ளி. நம் சூரியமண்டலத்தில் காண்ப்படும் கோள்களிலேயே அதிக வெப்பநிலை கொண்டது வெள்ளி ஆகும். நிலவிற்குப் பிறகு, வானத்தில் தெரியும் மிகப்பிரகாசமான வான்பொருள் இதுவே. இதில் ஒரு நாள் என்பது அதனுடைய ஒரு ஆண்டை விட நீண்டது. வெள்ளியில் ஒரு நாள் என்பது 243 புவி நாள்களாகவும் ஒரு ஆண்டு என்பது 224.7 புவி நாள்களாகவும், உள்ளது. மற்ற கோள்களைப்போல் அல்லாமல், இது எதிர்த் திசையில் சுழல்வதால், இங்கு சூரியன் மேற்கே தோன்றி கிழக்கே மறைகிறது. வெள்ளியை நாம் வெறும் கண்ணால் எளிதில் காணலாம். அது கிழக்கு அல்லது மேற்குத் திசையில் கீழ்வானத்தில் தெரியும்.
(iii) பூமி:
சூரிய மண்டலத்திலுள்ள. கோள்களிலேயே நாம் வாழும் பூமியில் மட்டும்தான் உயிர் வாழத் தகுதியான சூழல் உள்ளது. சூரியனிலிருந்து சரியான தொலைவில் அது உள்ளதால், சரியான வெப்பநிலை, நீர் ஆதாரம், சரியான வளிமண்டலம் மற்றும் ஓசோன் படலம் ஆகியவற்றை பூமி கொண்டுள்ளது. இவையனைத்தும் உள்ளதால்தான், பூமியில் உயிர்கள் தொடர்ந்து வாழ்வதென்பது சாத்தியமாகின்றது. பூமியானது, சூரியனைச் சுற்றிவர எடுத்துக்கொள்ளும் காலம் 365.25 நாட்களாகவும், அதன் சுழற்சிக்காலம் 23.93 மணியாகவும் உள்ளது. பூமியின் சுழற்சி அச்சானது அதன் சுற்றுத்தளத்திற்கு செங்குத்தாக அமைந்திருப்பதில்லை. மாறாக, சற்று சாய்வுடன் உள்ளது. இவ்வாறு சாய்ந்துள்ளதால்தான், பூமியில் பருவநிலை மாற்றங்கள் ஏற்படுகின்றன. பூமியின் மீதுள்ள நீர் மற்றும் நிலப்பகுதிகளின் மீது ஒளி எதிரொளிப்பதனால், விண்ணிலிருந்து பார்க்கும்போது பூமி நீலம் கலந்த பச்சை நிறத்துடன் காணப்படும்.
(iv) செவ்வாய்:
புவியின் சுற்றுப்பாதைக்கு வெளியில் அமைந்துள்ள முதல் கோள் செவ்வாய் ஆகும். இது சற்றே சிவப்பு நிறத்தில் காணப்படுவதால், இது சிவப்புக்கோள என அழைக்கப்படுகிறது. இதற்கு டீமோஸ் மற்றும் போபோஸ் எனப்படும் இரு இயற்கைத் துணைக்கோள்கள் உள்ளன. இங்கு ஒரு நாள் என்பது 24 மணி 37 நிமிடம் 22 விநாடியாகவும், ஒரு வருடம் என்பது 686.96 புவி நாள்கள், கிட்டத்தட்ட 687 நாள்களாகவும் உள்ளது.
(v) வியாழன்:
வியாழன் கோளானது, பெருங்கோள் என அழைக்கப்ப்டுகின்றது. கோள்களிலேயே மிகப்பெரியது இதுவே. இதற்கு 3 வளையங்களும் 65 நிலவுகளும் உள்ளன. இதன் நிலவான கானிமீடு என்ற நிலவுதான் சூரிய மண்டலத்திலேயே மிகப்பெரிய நிலவாகும். மற்ற கோள்களையெல்லாம் விட மிக வேகமாக இது சுழல்வதால், வியாழனின் ஒரு நாள் என்பது 9 மணி 55 நிமிடங்கள் 30 வினாடிகளாக உள்ளது. அங்கு ஒரு வருடம் என்பது 11.862 புவி வருடங்கள் ஆகும்.
(vi) சனி:
வளையங்களுக்குப் பெயர்போன சனி கோள், மஞ்சள் நிறத்தில் காணப்படுகின்றது. வெளிப்புற சூரியமண்டலத்தில் காணப்படும் இக்கோளானது வியாழனுக்கு அடுத்து இரண்டாவது பெரும் வாயுக்கோளாகும். இது மிக வேகமாக சுழல்கின்றது. சனியின் வருவதால் இதன் சுற்றுக்காலம் 59.46 புவி ஆண்டுகளாகவும் இருக்கின்றது. குறைந்தபட்சம் சனியின் 60 நிலவுகள் உள்ளன. டைட்டன் என்ற நிலவே அதில் பெரியது ஆகும். நம் சூரிய மண்டலத்தில் மேகங்களுடன் கூடிய ஒரே நிலவு இதுவாகும். சனியின் அடர்த்தி மிகவும் குறைவாக உள்ளதால் (புவியை விட 30 மடங்கு குறைவு) இந்த கோள் கனமற்றது.
(vii) யுரேனஸ்:
யுரேனஸ் கோளானது ஒரு குளிர்மிகு வாயுப் பெருங்கோளாகும். இது சூரிய மண்டலத்தின் ஏழாவது கோள் ஆகும். இது மிகவும் சாய்ந்து சூழல் அச்சைக் கொண்டுள்ளது. அதனால் இது உருண்டோடுவது போல் தெரிகின்றது. இதன் சுற்றுக்காலம் 84 புவி ஆண்டுகள் மற்றும் சுழற்சிக்காலம் 17.2 மணி நேரமாகும். இதன் அசாதாரண சாய்வின் காரணமாக இங்கு கோடை காலமும், குளிர்காலமும் மிக நீண்டு இருக்கும், ஒவ்வொன்றும் 42 ஆண்டுகளாக உள்ளன.
(viii) நெப்டியூன்:
இக்கோளானது பச்சை நிற விண்மீன் போன்று காட்சியளிக்கும். சூரியனிலிருந்து எட்டாவதாக உள்ள இந்தக் கோள் மிகவும் காற்று வீசக்கூடிய கோளாகும். 248 ஆண்டுகளுக்கு ஒருமுறை புளுட்டோ இதன் சுற்றுப்பாதையைக் கடக்கிறது. இந்த நிலை 20 ஆண்டுகளுக்குத் தொடர்கிறது. இதற்கு 13 நிலவுகள் உள்ளன . அதில் டிரைட்டான் என்ற நிலவே பெரியதாகும். சூரிய மண்டலத்தில் கோளின் சுழற்சிக்கு எதிர்த்திசையில் சுற்றும் ஒரே நிலவு டிரைட்டான் ஆகும்.
7.
வௌவாலின் தகவமைப்புகள்:
வெளவால் மட்டுமே பறக்கக்கூடிய பாலூட்டிகளாகும். இவைகள் பெரும்பலாலும் குகைகளில் வாழ்கின்றன. குகைகள் அவைகளை பகல் நேரத்தில் நிலவும் அதிகப்படியான வெப்பநிலையிலிருந்த்து பாதுகாப்பத்தோடு மற்ற பிற விலங்குகளிடமிருந்தும் அவற்றிற்கு பாதுகாப்பு அளிக்கின்றன. வெளவால் மரங்களிலும் பொந்துடைய பழைய மரக்கட்டைகளிலும் பாறை இடுக்குகளிலும் வாழ்கின்றன. இவைகள் பூச்சிகளை உண்டு ஆவற்றின் எண்ணிக்கையைக் குறைப்பதாலும் தாவரங்களின் மகரந்தச் சேர்க்கையில் உதவி செய்தாலும் மனிதர்களுக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்தவைகளாக உள்ளன.
இரவுநேரப் பழக்கம்:
வெளவால்கள் இரவுநேரங்களில் அதிக செயல்திறன் மிக்கவைகளாக உள்ளன.இப்பழக்கம் அவைகளுக்கு ஒரு பயனுள்ள தகவமைப்பாகும்.ஏனெனில் பகல் நேரங்களில் வெளவாலின் மெல்லிய கருத இறக்கைச் சவ்வானது அதிக வெப்பநிலை உறிஞ்சுவதால் அவை பறப்பதற்கு அதிக ஆற்றல் தேவைப்படுகின்றது.இதனால் அவைகளின் உடலில் அதிகளவு நீர் இழப்பு ஏற்படலாம்.
பறத்தலின் தகவமைப்பு:
வெளவால்களின் இறக்கைகள் பூச்சிகள் மற்றும் பறவைகளின் இறக்கைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை.இவற்றின் முன்கால்கள் இறக்கைகளாக மாறியுள்ளன. சதையில் இருபக்கமும் இணைக்கப்பட்டுக் காணப்படும், இந்த எமிப்பு விரலிடைச் சவ்வு எனப்படும்.பறக்கும் போது இயக்கத்தினை கட்டுப்படுத்த இதன் வால் உதவுகின்றது.சிறகடித்துப் பறக்க உதவும் வகைக்கு அவற்றின் சிறகுகளின் உள்ள சதைகள் நன்றாக வளர்ந்தும் அதிக சக்தி வாய்ந்ததகாவும் இருக்கின்றன.ஓய்வு நேரத்தில் தலைகீழாக தொங்கும்போது இறுகப்பிடித்துக் கொள்ளும் தன்மையை அவற்றின் பின்னங்கால்களின் தசை நார்கள் அவற்றிற்கு அளிக்கின்றன.
குளிர்கால உறக்கம்: குளிர்காலங்களில் வளர்சிதை மாற்றம் குறைபடுவதன் மூலம் உடல் வெப்பநிலை குறைந்து , செயலற்ற நிலையில் இருக்கும் நிகழ்வு குளிர்கால உறக்கம் எனப்படும் , மற்ற குளிர் இரத்த பாலூட்திகழ போல் அல்லாமல் ஓய்வுநேரத்தில் அவைகளின் உள்வெப்பநிலையைக் குறைத்துக் கொள்கின்றன. இந்நிலையில் தங்களது செயல்திறன்களைக் குறைத்து சக்தியைப் பாதுகாத்துக் கொள்கின்றன.
எதிரொலித்து இடம் கண்டறிதல்:
வௌவால்கள் பார்வையற்ற விலங்குகள் அல்ல. ஆனாலும், இரவுநேரங்களில் பறந்து, தங்களைச் சுற்றியுள்ள பூச்சிகளை வேட்டையாடுவதற்கு, பிரத்தியேக அதிக அதிர்வெண் கொண்ட ஒலி அமைப்பைப் பயன்படுத்துகின்றன (மீயொலி அலைகள் ultrasonic sound), இவ்வமைப்புக்கு எதிரொலித்து இடம் கண்டறிதல் என்று பெயர். இந்த அலைகள் அவற்றின் இரையின் மீது (prey) பட்டு எதிரொலித்து மீண்டும் அவற்றின் காதினை வந்தடைகின்றன. இந்த எதிரொலியானது இரையின் இடத்தினைக் கண்டறிய பயன்படுகிறது.
8.
கார்பன் பல்வேறு வடிவங்களில் பூமியின் மீது கிடைக்கின்றது. கரி, வைரம் மற்றும் கிராபைட் போன்றவை கார்பனின் எளிய வடிவங்களாகும். கார்பன் மோனாக்சைடு, கார்பன் டை ஆக்ஸைடு, கார்பனேட் உப்பு போன்றவை கார்பனின் கூட்டுப்பொருள்களாகும். அனைத்து உயிரினங்களும் புரதங்கள் மற்றும் நியூக்ளிக் அமிலங்கள் போன்ற கார்பன் கலந்த மூலக்கூறுகளால் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
வளிமண்டலத்திலுள்ள கார்பன் டைஆக்சைடு, ஒளிச்சேர்க்கை மூலம் தவராங்களுக்குள் சென்று மாவுப் பொருளாக (கார்போஹைட்ரேட்டாக ) மாற்றமடைகிறது,இப்பொருளானது தாவரங்களிலிருந்து தவரா உண்ணிகள் மற்றும் விலங்குண்ணிகளுக்கு கடத்தப்படுகின்றது. தாவரம் மற்றும் விலங்குகள் சுவாசித்தலின் போது கார்பனை டை ஆக்சைடை வெளியிடுகின்றன. இவ்வாறாக கார்பன் வளிமண்டலத்தை சென்றடைகிறது.எரிமலைச் செயல்கள் படிம ஏரிபொருள்களை எரித்தல், இறந்து போன கரிமப்பொருள்களை சிதைத்தல் ஆகிய செயல்கள் மூலமும் கார்பன் டை ஆக்சைடு மீண்டும் வளிமண்டலத்தை வந்தடைகின்றது.
9.
அ. நோயின் பெயர் எய்ட்ஸ் (AIDS)
நோய்க்கான காரணம் ரெட்ரோ வைரஸ் ஆகும்.
ஆ. பாதிக்கப்படும் வெள்ளையணுக்களின் வகை
டி. லிம்போசைட்டுகள் ஆகும்.
இ. இந்தவைரஸானதுபாலியல் உறவு(பாதிக்கப்பட்ட நபரிடமிருந்துநல்ல ஆரோக்கியமானவருக்கு, இரத்தத்தினை வழங்குதல் (சோதிக்கப்படாத ரத்தத்தை பிறருக்கு வழங்குதல்), அறுவை சிகிச்சைக் கருவிகள் நோய்க் கிருமிகளுள்ள ஊசிகள், சிரிஞ்சுகள்), தாயிடமிருந்து சேய்க்கு (பாதிக்கப்பட்ட தாயிடமிருந்து வளரும் கருவுக்கு) பரவுதல் போன்ற வழிகளில் பரவுகின்றது.
பரவுதலை தடுத்தல் முறை
1. பாதுகாக்கப்பட்ட மற்றும் பாதுகாப்பான பாலியல் உறவு.
2. சோதிக்கப்பட்ட இரத்தத்தினை பிறருக்கு வழங்குதல்
3. கத்திகளையும், முகச்சவரம் செய்வதற்குரிய ரேசர்களையும் பிறரோடு பகிர்ந்து கொள்ளுதலை தவிர்த்தல்
10.
| வயது | தடுப்பு மருந்து | மருந்தளவு |
| பிறந்த குழந்தை | பிசிஜி | 1 வது ஊட்டம் |
| 15 ஆம் நாளில் | வாய்வழியே போலியோ மருந்து | 1 வது ஊட்டம் |
| 6வது வாரம் | டிபிடீ மற்றும் போலியோ | 1 வது ஊட்டம் |
| 10வது வாரம் | டிபிடீ மற்றும் போலியோ | 1 வது ஊட்டம் |
| 14வது வாரம் | டிபிடீ மற்றும் போலியோ | 1 வது ஊட்டம் |
| 9-12 வது மாதங்கள் | தட்டம்மை | 1 வது ஊட்டம் |
இந்த அட்டவணையானது குழந்தைகள் தொற்று நோய்களிலிருந்து பாதுகாப்பதற்காக எந்த வயது குழந்தைக்கு எந்த தடுப்பு மருந்தினை வழங்குதல் வேண்டும் என்பதைச் சுட்டிக் காட்டுகிறது. எனவே இந்த அட்டவணையைப் பயன்படுத்துவது அவசியமாகிறது.
11.
ஆக்ஸிஜனேற்றம் (ஆக்ஸிஜனோடு வினை புரிதல்): உயர் வெப்பநிலையில் காரப்பனானது ஆக்ஸிஜனோடு வினைபுரிந்து கார்பன் மோனாக்ஸைடு மற்றும் கார்பன் டை ஆக்ஸைடு போன்றவற்றை வெப்பத்துடன் உருவாக்குகின்றனது. ஹைட்ரோ கார்பன் போன்ற கரிம கார்பன் சேர்மங்களும் ஆக்ஸிஜனேற்றம் அடைந்து ஆக்ஸைடுகளையும் நீராவியையும் உருவாக்குகின்றன. அவற்றோடு வெப்பமும் தீச்சுடரும் வெளிப்படும். இதற்கு எரிதல் என்ற மற்றொரு பெயரும் உண்டு.
2C(s) + O2(g) ➝ 2 CO(g) + வெப்பம்
C(s) + O2(g) ➝ CO2(g) + வெப்பம்
CH4(g) + 2O2(g) ➝ CO2(g) + 2H2O(g) வெப்பம்
நீராவியுடன் வினை: கார்பன் நீராவியுடன் வினைபுரிந்து கார்பன் மோனாக்ஸைடையும் ஹைட்ரஜனையும் தருகிறது. இந்த கலவைக்கு நீர் வாயு என்று பெயர்.
C(s) + H2O(g) ➝ CO(g) + H2(g)
கந்தகத்துடன் வேதி வினை: உயர்வெப்பநிலை கந்தகத்துடன் இணைந்து கார்பன் டைசல்ஃபைடை உருவாக்குகிறது.
C(s) + S(g) ➝ CS2(g)
உலகத்துடன் வேதி வினை: உயர் வெப்ப நிலையில் கார்பன் சில உலோகங்களுடன் வினைபுரிந்து அவற்றின் கார்பைடுகளை உருவாக்குகிறது.
W(s) + C(g) ➝ WC2(s)
12.

(i) ஒரு திரவத்தின் அடர்த்தியை அல்லது ஒப்படர்த்தியை நேரடியாக அளப்பதற்குப் பயன்படும் கருவி திரவமானி எனப்படும். மிதத்தல் தத்துவத்தின் அடிப்படியில் திரவமானிகள் வேலைசெய்கின்றன. ஒரு திரவத்தில் மூழ்கியுள்ள பகுதியினால் வெளியேற்றப்பட்ட திரவத்தின் எடையானது திரவமானியின் எடைக்குச் சமமாக இருக்கும்.
(ii) திரவமானியானது அடிப்பகுதியில் கோள வடிவத்திலான குடுவையையும் மேற்பகுதியில் மெல்லிய குழாயையும் கொண்ட நீண்ட உருளை வடிவ தண்டைக் கொண்டுள்ளது. குழாயின் அடிப்பகுதியானது பாதரசம் அல்லது காரீயக் குண்டுகளால் நிரப்பப்பட்டுள்ளது. இது திரவமானியானது, மிதப்பதற்கும் திரவங்களில் செங்குத்தாக நிற்பதற்கும் உதவுகிறது. மேலே உள்ள மெல்லிய குழாயில் அளவீடுகள் உள்ளதால், திரவத்தின் ஒப்படர்த்தியை நேரடியாக அளக்கமுடிகிறது.
(iii) சோதிக்க வேண்டிய திரவத்தினை கண்ணாடிக் குடுவையில் நிரப்ப வேண்டும். திரவமானியை அத்திரவத்தில் மெதுவாக செலுத்தி, மிதக்கவிட வேண்டும். குழாயின் அளவீடுகள் திரவத்தின் மேற்பகுதியைத் தொடும் அளவு, திரவத்தின் ஒப்படர்த்தியாகும்.
(iv) திரவமானிகளை பல்வேறு பயன்பாட்டிற்கு ஏற்றபடி அளவுத்திருத்தம் (Calibration) செய்து பாலின் அடர்த்தியைக் கண்டறியும் பால்மானி (Lactometer), சர்க்கரையின் அடர்த்தியைக் கண்டறியும் சர்கரைமானி (Saccharometer) மற்றும் சாராயத்தின் அடர்த்தியைக் கணக்கிடும் சாராயமானி (Alcoholometer) போன்றவை உருவாக்கப்படுகின்றன.
13.
அ.தவறு, சகப் பிணைப்பு சேர்மங்களைப் போலவே ஈதல் சகப்பிணைப்புச் சேர்மங்களும் மின்சுமை கொண்ட (அயனிகள்) துகள்களைப் பெறவில்லை.
எனவே அவை அரிதில் மின்கடத்திகள்.
ஆ. தவறு, ஹைட்ரஜன் பிணைப்புடன் ஒப்பிடும் போது அயனிப் பிணைப்பு வலிமை அதிகமான பிணைப்பு ஆகும்.
இ. தவறு, அயனிப்பிணைப்பு எலக்ட்ரான்களை இடப்பெயர்ச்சி செய்வதால் உருவாகிறது.
ஈ. சரி
உ. சரி
14.

சிறுநீரகங்கள் அடர் சிவப்பு நிறங்கொண்ட அவரை வடிவ உறுப்பாகும். இது முதுகெலும்பின் இரு பக்கத்திலும் வயிற்றுப் பகுதியின் அடிப்பாகத்திலுள்ள சுவர் பகுதியோடு ஒட்டிக் காணப்படுகிறது. கல்லீரலானது வலது புறத்தில் அதிக இடத்தில் படர்ந்திருப்பதால் வலது புறமுள்ள சிறுநீரகமானது இடதுபுற சிறுநீரகத்தைவிட சற்று கீழே காணப்படுகிறது.ஒவ்வொரு சிறுநீரகமும் சுமார் 11 செ.மீ நீளமும் 5 செ.மீ அகலமும் மற்றும் 3 செ.மீ பருமனும் கொண்டதாகயிருக்கிறது. சிறுநீரகமானது தசைநார் இணைப்புத் திசுக்கள் சிறுநீரக கேப்சியூல்கள், கொழுப்பு கேப்சியூல்கள் மற்றும் இழைகளாலான சவ்வினால் மூடப்பட்டுள்ளது. சிறுநீரகத்தினுள் கார்டெக்ஸ் (புறணி) என்ற ஓர் அடர்த்தியான வெளிப்பகுதியும் மெடுல்லா என்ற மெலிதான உட்பகுதியும் காணப்படுகிறது. இவ்விரண்டு பகுதிகளும் சிறுநீரக நுண்குழல்கள் அல்லது நெஃப்ரான்களைக் கொண்டுள்ளன. மெடுல்லா என்ற பகுதியில் பல்வேறு நுண்குழாய்கள் கூம்பு வடிவில் குவிந்து ஒட்டுமொத்தமாக அமைந்துள்ளன. இவைகளின் அடித்தளமானது கார்டெக்ஸ் (புறணி) என்ற பகுதியின் அருகில் உள்ளது. ஒவ்வொரு சிறுநீரகத்தின் உட்குழிவுப் பகுதியில் ஹைலம் என்று அழைக்கப்படும், வாயில் போன்ற அமைப்பின் வழியே இரத்த நாளங்களும் மற்றும் நரம்புகளும் உள்ளே நுழைகிறது. அங்கிருந்து சிறுநீரானது வெளியேற்றப்படுகிறது.
சிறுநீர் உருவாகும் முறை:
கீழ்காணும் மூன்று படிநிலைகளில் சிறுநீரானது உருவாகிறது.கிளாமருலார் வடிகட்டுதல், குழல்களில் மீள உறிஞ்சப்படுதல் மற்றும் குழல்களில் சுரத்தல்
கிளாமருலார் வடிகட்டுதல்: கிளாமருலஸ் மற்றும் ளெமானின் கிண்ணம் ஆகியவற்றின் எப்பிதீலிய சுவர்களின் மூலமாக இரத்தமானது வடிகட்டப்படுவதால் சிறுநீரானது உருவாக்கப்படுகிறது. இவ்வாறாக வடிகட்டப்பட்ட திரவமானது கிளாமருலார் வடிதிரவம் எனப்படும். இரத்தத்தில் காணப்படும் தேவையான மற்றும் தேவையற்ற பொருள்கள் இங்கு வடிகட்டப்படுகின்றன.
குழல்களில் மீள உறிஞ்சப்படுதல்: அண்மைச் சுருள் நுண்குழலில் காணப்படும் வடித்திரவத்தில் தேவையான பொருள்களான குளுக்கோஸ், அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், சோடியம், பொட்டாசியம், பைகார்பனேட் மற்றும் நீர் ஆகியவை தேர்ந்தெடுத்து மீள உறிஞ்சுதல் என்ற நிகழ்வால் மீண்டும் உறிஞ்சப்படுகின்றன.
குழல்களில் சுரத்தல்: ஹைட்ரஜன் அல்லது பொட்டாசியம் அயனி போன்ற பொருள்கள் நுண் நாளங்களுக்குள் சுரக்கின்றன. பொட்டாசியம் மற்றும் பிற வேதிப்பொருள்களை பெனிசிலின் மற்றும் ஆஸ்பிரின் போன்ற பொருள்கள் சேய்மைசுருள் நுண்குழல்களில் வடித்திரவமாக கடக்கின்றன. இந்த நுண்குழல் வடிதிரவமே இறுதியாக சிறுநீர் எனப்படுகிறது. இது மனிதனில் உயர் உப்படர்வுத் (hypertonic) தன்மையுடைய திரவமாக இருக்கிறது. இறுதியாக சேகரிப்பு நாளத்தில் சிறுநீரானது சேர்ந்து பெல்விஸ் பகுதிக்குச் சென்று சிறுநீர்க்குழாய்கள் வழியாக சிறுநீர்ப்பையை அணைந்து பெரிஸ்டால்ஸிஸ் இயக்கத்தின் மூலம் வெளியேறுகிறது. சிறுநீர்ப்பையிலிருந்து சிறுநீர் வெளியேற்றப்படும் நிகழ்வே மைக்டியூரிஷன் (அ) சிறுநீர் வெளியேற்றமாகும்.
15.

உணவுப் பாதையின் அமைப்பு :
உணவுப் பாதை ஒரு தசையாலான, சுருண்ட மற்றும் குழாய் வடிவ அமைப்பாகும். இவ்வுணவுப் பாதை, வாய், வாய்க்குழி, தொண்டை, உணவுக் குழல், இரைப்பை, சிறுகுடல் (முன் சிறுகுடல், நடுச்சிறுகுடல் மற்றும் பின் சிறுகுடல் உள்ளடங்கியது). பெருங்குடல் (குடல்வால், கோலன் மற்றும் மலக்குடல் உள்ளடங்கியது) மற்றும் மலவாய் போன்ற உறுப்புகளைக் கொண்டுள்ளது.
அ) வாய்
உணவுப் பாதையின் ஆரம்பத் துவாரமாகும். இது வாய்க்குழிக்குள் திறக்கிறது. இது இரு மென்மையான அசையும் மேல் மற்றும் கீழ் உதடுகளால் பிணைக்கப்பட்டுள்ளது. வாய்க்குழியானது பெரிய இடைவெளியோடு மேல் பகுதியில் அண்ணம் (காற்றுக் குழாயையும் உணவுக் குழாயையும் பிரிப்பது) என்ற பகுதியாலும் கீழ்ப்பகுதி தொண்டையாலும் பக்கப்பகுதியானது தாடைகளாலும் பிணைக்கப்பட்டுள்ளது. தாடைகள் பற்களைத் தாங்குகின்றன.
ஆ) பற்கள்
கடினமான கட்டமைப்பைக் கொண்ட பற்கள் உணவைப் பிடித்துக்கொள்வதற்கும், வெட்டுவதற்கும், அரைப்பதற்கும் மற்றும் நசுக்குவதற்கும் உதவுகின்றன. மனிதர்களின் வாழ்நாளில் பற்கள் இரண்டு தொகுப்பாக (இரட்டைப் பல்வரிசை) உருவாகின்றன. முதலில் இருபது தற்காலிக இணைப்பற்கள் அல்லது பால் பற்கள் தோன்றுகின்றன. பின்னர் இப்பற்களுக்குப் பதிலாக இரண்டாம் தொகுப்பில், முப்பத்திரெண்டு நிரந்தர
பற்கள் (கலப்பு பல் வரிசை) மாற்றியமைக்கப்படுகின்றன. இவைகள் ஒரு தாடைக்கு பதினாறு வீதம் இருக்கும். ஒவ்வொரு பல்லும் ஒரு வேரினைக் கொண்டு ஈறுகளில் (திகோடான்ட்) பொருத்தப்பட்டுள்ளது.
| பற்களின் வகைகள் | பற்களின் எண்ணிக்கை | பணிகள் |
| வெட்டுப் பற்கள் | 8 | வெட்டவும் கடிக்கவும் |
| கோரைப் பற்கள் | 4 | கிழிக்கவும் துளையிடவும் |
| முன் கடைவாய்ப் பற்கள் | 8 | நசுக்கவும் அரைக்கவும் |
| பின் கடைவாய்ப் பற்கள் | 12 | நசுக்கவும் அரைக்கவும் மெல்லவும். |
இ) உமிழ்நீர்ச் சுரப்பிகள்:
வாய்க் குழிக்குள் மூன்று இணை உமிழ்நீர்ச் சுரப்பிகள் காணப்படுகின்றன. அவையாவன மேலண்ணச் சுரப்பி. நாவடிச் சுரப்பி மற்றும் தாடைச் சுரப்பி
i. மேலண்ணச் சுரப்பி
இச்சுரப்பிதான் மிகப்பெரிய சுரப்பியாகும். இவை இரு கன்னங்களிலும், காதுக்குக் கீழே அமைந்துள்ளன
ii. நாவடிச் சுரப்பி
இது மிகச்சிறிய சுரப்பியாகும் நாவின் அடிப்புறத்தில் அமைந்துள்ளது.
iii, கீழ் மற்றும் மேல் தாடைச் சுரப்பிகள்
இவைகள் கீழ்தாடைகளின் கோணங்களில் காணப்படுகின்றன.
நாக்கு:
நாக்கு ஒரு தசையாலான,. உணர்ச்சி உறுப்பு ஆகும். இது உமிழ்நீருடன்
உணவானது கலக்க உதவுகிறது. உணவின் சுவையை உணர்வதற்கு நாவில் உள்ள
சுவை மொட்டுகள் உதவுகின்றன.
தொண்டை:
தொண்டை என்பது, மூக்கு மற்றும் வாய்க்கு பின்னால் காணப்படும் மென்படலத்தால் சூழப்பட்ட குழி போன்ற அமைப்பு ஆகும். இது வாய்ப் பகுதியை உணவுக் குழலுக்கு கடந்து செல்லும் ஒரு பாதையாக பயன்படுகிறது.
உணவுக் குழல்:
இது 22 செமீ நீளமுடைய தசைப்படலக் குழலாகும். இது தொண்டையிலிருந்து உணவினை இரைப்பைக்கு பெரிஸ்டால்சிஸ் என்னும் குடல் தசைச் சுவரின் சீரான சுருங்குதல் மற்றும் தளர்தல் (அலை போன்ற இயக்கம்) போன்ற நிகழ்வால் கடத்துகிறது.
ஈ) இரைப்பை
இரைப்பையானது உணவுக் குழலுக்கும் - சிறுகுடலுக்குமிடையே 'J' போன்ற வடிவத்தில் காணப்படும் தசையாலான அகன்ற உறுப்பாகும். இரைப்பையின் உள்ளடுக்கு சுவரில் காணப்படும் சுரப்பிகளிலிருந்து இரைப்பை நீர் சுரக்கிறது. இந்த இரைப்பை நீர், நிறமற்றதாகவும், அதிக அமிலத் தன்மையுடைய ஹைட்ரோகுளோரிக் அமிலத்தையும், நொதிகளான ரென்னின் (பச்சிளம் குழந்தைகளில்) மற்றும் பெப்சின் ஆகியவற்றை கொண்டதாகவும் உள்ளது.
உ) சிறுகுடல்:
உணவுக் கால்வாயில் மிகவும் நீளமான பகுதி சிறுகுடல் ஆகும். இது 5 - 7 மீட்டர் நீளமுள்ள சுருண்ட குழலாகும். இக்குடல் மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது. அவை முன்சிறுகுடல் (டியோடினம்), நடுச்சிறுகுடல் (ஜூஜினம்) மற்றும் பின்சிறுகுடல் (இலியம்) ஆகும்.
i. முன்சிறுகுடல் (டியோடினம்):
சிறுகுடலின் மேல்பகுதியாயிருக்கும் இது 'C' வடிவத்தில் காணப்படுகிறது. பித்த நாளமும் (கல்லீரலிலிருந்து) கணைய நாளமும் (கணையத்திலிருந்து) இணைந்து டியோடினத்தில் திறக்கின்றன.
ii. நடுசிறுகுடல் (ஜூஜினம்):
சிறுகுடலின் நடுப்பகுதி ஜூஜினம் ஆகும். இது சிறுகுடலின் சிறிய பகுதியாகும். சிறுகுடல் சுரக்கும் சுரப்புப் பொருள்கள் சிறுகுடல் நீர் ஆகும். சிறுகுடல்நீரில் சுக்ரோஸ்,மால்டேஸ்,லாக்டேஸ் மற்றும் லிப்பேஸ் போன்ற நொதிகள் காணப்படுகின்றன.
iii. பின்சிறுகுடல் (இலியம்):
சிறுகுடலின் அடிப்பகுதியாக இருக்கும் இப்பகுதி பெருங்குடலில் திறக்கிறது. இலியம் சிறுகுடலின் அதிக நீளமான பகுதியாகும். இவையாகும் இவைகளில் மிகச்சிறிய விரல் போன்ற நீட்சிகள் காணப்படுகின்றன.
ஊ) கல்லீரல்
உடலில் காணப்படும் மிகப் பெரிய செரிமானச் சுரப்பி கல்லீரல் ஆகும். இது வலது மற்றும் இடது என இரண்டு கதுப்புகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வலது கதுப்பானது. இடது கதுப்பைவிட பெரிதானதாகும். கல்லீரல் செல்கள் பித்தநீரைச் சுரக்கிறது. அது தற்காலிகமாக பித்தப்பையில் சேகரிக்கப்படுகிறது.
எ) கணையம்
இது பிளவுபட்ட இலை போன்ற அமைப்புடைய சுரப்பியாகும். இரைப்பைக்கும் டியோடினத்திற்கும் (முன் சிறுகுடல்) இடையே அமைந்துள்ளது. கணையமானது நாளமுள்ள சுரப்பியாகவும் நாளமில்லா சுரப்பியாவும் செயலாற்றுகிறது.நாளமுள்ள சுரப்பியின் பகுதியாகயிருக்கின்ற கணையத்தின் சுரப்புப்பகுதி கணைய நீரைச் சுரக்கிறது அவற்றில் மூன்று நொதிகள் காணப்படுகின்றன. அவையாவன லிப்பேஸ், டிரிப்சின் மற்றும் அமைலேஸ். இவைகள், முறையே கொழுப்பு. புரதம் மற்றும் ஸ்டார்ச் ஆகியவற்றில்செயலாற்றுகின்றன. இதன் மேற்புறத்தில் லாங்கர்கான் திட்டுகள் காணப்படுகின்றன. இந்த லாங்கர்கான் திட்டுகள் நாளமில்லா செல்களைக் கொண்டுள்ளது மற்றும் ஹார்மோன்களையும் சுரக்கின்றன. இதிலுள்ள ஆல்பா செல்கள் குளுக்கோகான் என்ற ஹார்மோனையும், பீட்டா செல்கள் இன்சுலின் ஹார்மோனையும் சுரக்கின்றன.
16.
செல் A: 2
செல் B: ஒன்று
17.
(a) A - லமெல்லா
B - இடைவெளி
C - ஹவேரிசியன் கால்வாய்
(b) இதன் மேட்ரிக்ஸில், கொலஜன் நார்களும் அதிகம் உள்ளன.
(c) லேக்குனாக்கள் என்பன கனாலிகுலி என்ற நுட்பமான கால்வாய்கள் மூலம் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன. இந்தத் தடங்களின் வழியே உணவுப் பொருள் எலும்பு செல்களை அடைகிறது. இதன் மூலம் எலும்பு செல்களில் உருவாகும் கழிவு வெளியேற்றப்படுகிறது.
18.
1. சாதாரண உப்பு (NaCl) நம் அன்றாட உணவிலும், உணவைப் பாதுகாப்பதிலும் பயன்படுகிறது.
2. i) சலவை சோடா (Na2CO3) கடினநீரை மென்னீராக்கப் பயன்படுகிறது.
ii) கண்ணாடித் தொழிற்சாலை, சோப்பு மற்றும் பேப்பர் தொழிற்சாலைகளில் பயன்படுகிறது.
3. சமையல் சோடா - (NaHCO3) கேக் மற்றும் ரொட்டிகளை மென்மையாக மாற்ற பயன்படுகிறது.
4. சலவை தூள் (CaOCl2) கிருமி நாசினியாகப் பயன்படுகிறது.
5. பாரிஸ் சாந்து (CaSO4 1/2 H2O) முறிந்த எலும்புகளை ஒட்ட வைப்பதட்ற்குப் பயன்படுகிறது.
19.
i.நடுநிலைத் தன்மை உடையது - D (pH = 7)
ii.வலிமை மிகு காரத்தன்மை உடையது - C (pH = 11)
iii.வலிமை மிகு அமிலத் தன்மை உடையது - B (pH = 1)
iv.வலிமை குறைந்த அமிலத் தன்மை உடையது - A (pH = 4)
v.வலிமை குறைந்த காரத் தன்மை உடையது. - E (pH = 9)
20.
| வ.எண் | அயனிச் சேர்மங்கள் | சகப்பிணைப்புச் சேர்மங்கள் |
| 1. | உலோக அணுவிலிருந்து அலோக அணுவிற்கு ஒரு எலக்ட்ரான் இடம் பெயர்வதால் உருவாகின்றன |
அலோக அணுக்களுக்கிடையே எலக்ட்ரான்கள் பங்கிடப்படுவதால் உருவாகின்றன. |
| 2. | நேர் மற்றும் எதிர் அயனிகளுக்கிடையே வலிமையான நிலையின் கவர்ச்சி விசை காணப்படுகிறது. |
எலக்ட்ரான்களின் பகிர்வு. எனவே அணுக்களுக்கிடையே வலிமை குறைந்த கவர்ச்சி விசை காணப்படுகிறது. |
| 3. | அறை வெப்பநிலையில் திண்மங்கள் | வாயுக்கள், நீர்மங்கள், மென்மையான திண்மங்கள். |
| 4. | உருகிய நிலையிலும் கரைசல் நிலையிலும் மின்சாரத்தை கடத்தும். |
மின்சாரத்தை கடத்துவதில்லை |
| 5. | உருகுநிலையும், கொதிநிலையும் அதிகம் | உருகுநிலையும், கொதிநிலையும் குறைவு |
| 6. | முனைவுள்ள நொறுங்கும் தன்மையுடையது | முனைவற்ற கரைப்பான்களில் கரையும். |
| 7. | கடினமானது, நொறுங்கும் தன்மையுடையது. |
மென்மையானது, மெழுகுத்தன்மையுடையது. |
| 8. | அயனிகள் வினைகளில் பங்கேற்பதால் வினைகள் உடனடியாகவும், மிக வேகமாகவும் நடைபெறுகிறது. |
மூலக்கூறுகள் வினைகளில் பங்கேற்பதால் வினையின் வேகம் குறைவு. |
21.
22.

(i) இப்படத்தில் ஒரு எளிய கம்பி5சுருள் ஒரு காந்தத்தின் இரு துருவங்களுக்கு நடுவே வைக்கப்பட்டுள்ளது. தற்போது கம்பி சுருள் AB எனும் பிரிவில் மின்னோட்டத்தின் திசை B ஐ நோக்கி செல்கிறது. ஆனால் கடத்திப் பிரிவு CD யில் மின்னோட்டதிசை எதிராக இருக்கும். கடத்திப் பிரிவு AB யிலும் CD யிலும் மின்னோட்டம் எதிரெதிர் திசைகளில் செல்வதால், பிளெமிங்கின் இடது கை விதியின் படி அவற்றின் இயக்கத்திசைகளும் எதிரெதிராக இருக்கும். கம்பிச் சுருள் இரு முனைகளிலும் விசையானது எதிரெதிர் திசைகளில் இருப்பதால் அவை சுழல்கின்றன.
(ii) மின்னோட்டமானது ABCD வழியாக இருந்தால், கம்பிச் சுருள் முதலில் கடிகாரத் திசையிலும் பின் எதிர் திசையிலும் சுழலும், கம்பிச் சுருள் ஒரே திசையில் அதாவது கடிகாரத்திசையில் இயங்க வேண்டுமானால் மின்னோட்டமானது, சுழற்சியின் முதல் பாதியில் ABCD யிலும், இரண்டாவது பத்தியில் DCBA வழியாகவும் பாய வேண்டும். மின்னோட்டத்தின் திசையை மாற்ற, பிளவு வளைய திசைமாற்றி எனும் ஒரு சிறிய கருவி பயன்படுத்தப்படுகிறது.
(iii) பிளவு வளையத்தில் உள்ள இடைவெளியானது முனையம் X மற்றும் Y உடன் இணைந்திருக்கும்போது சுருளில் மின்னோட்டம் இருப்பதில்லை. ஆனால், சுருள் நகர்வதால், அது தொடர்ந்து முன்னோக்கி நகர்ந்து இரு பிளவு வளையங்களில் எதாவது ஒரு கார்பன் தூரிகைகள் X மற்றும் Y யுடன் தொடர்பு கொள்ளும். இந்த மின்னோட்டத் திருப்புதல் ஒவ்வொரு அரைச் சுழற்சியிலும் நிகழ்ந்து கம்பிச்சுருளில் தொடர்ச்சியான சுழற்சியை ஏற்படுத்துகிறது.
23.
24.
நீரின் தன் வெப்ப ஏற்புத்திறன் மிக அதிகம். எனவே நீரானது அதிகப்படியான வெப்பத்தினை தன்னகத்தே சேமித்துக் கொள்கிறது. எனவே தன்னுடைய வெப்பநிலையை உயர்த்துவதற்கு நீர் அதிக வெப்பத்தை எடுத்துக் கொள்ளும். அதனால் தான் வாகனங்களில் இருக்கும் வெப்பம் தணிக்கும் அமைவுகளில் நீர் குளிர்விப்பானாக பயன்படுத்தப்படுகிறது. மேலும் தொழிற்சாலைகளிலும், இயந்திரங்களிலும் ஏற்படும் வெப்பத்தைத் தணிப்பதற்கு நீர் பயன்படுகிறது. நீரின் வெப்ப ஏற்புத்திறன் 4200Jkg 'K'. எனவே எளிதாக நீரின் வெப்பநிலையை அதிகப்படுத்தலாம்.
25.
(i) நிலை மாற்றம்
பொருளானது ஒரு நிலையில் இருந்து மற்றொரு நிலைக்கு மாறும் நிகழ்வையே நாம் நிலை மாற்றம் என்கிறோம்.
எடுத்துக்காட்டாக சாதாரண வெப்பநிலையில் நீர் மூலக்கூறுகள் திறவாநிலையில் இருக்கும். 1000C வெப்பநிலைக்கு நீரை வெப்பப்படுத்தும் போது அது நீராவியாக மாறுகிறது. நீராவி வாயு நிலையில் இருக்கிறது. வெப்பநிலையைக் குறைக்கும் போது மீண்டும் நீராக மாறுகிறது. வெப்பநிலையை 00C க்கு குறைக்கும் போது பனிக்கட்டியாக மாறுகிறது. பனிக்கட்டி திட நிலையில் இருக்கிறது. பனிக்கட்டியை வெப்பப்படுத்தும்போது மீண்டும் நீராக மாறுகிறது. இவ்வாறு வெப்பநிலையில் மாற்றம் ஏற்படும் போது நீர் தனது நிலையை மாற்றிக்கொள்ளுகிறது.
(ii) உருகுதல் உறைதல்
ஒரு பொருள் வெப்பத்தை உட்கவர்ந்து திட நிலையிலிருந்து திரவ நிலைக்கு மாறும் நிகழ்வு உருகுதல் ஆகும்.
(iii) ஆவியாதல் குளிர்தல்
ஒரு பொருள் வெப்பத்தை உட்கவர்ந்து திரவ நிலையில் இருந்து வாயு நிலைக்கு மாறும் நிகழ்வு ஆவியாதல் ஆகும்.

26.
(i) கணுக்காலிகள் விலங்குலகின் மிகப் பெரிய தொகுதியாகும். இவை இருபக்க சமச்சீர், மூவடுக்கள் மற்றும் உண்மையான உடற்குழியுடைய விலங்குகள். இவற்றின் உடல் தலை, மார்பு, வயிறு எனப் பிரிக்கப்பட்டடுள்ளது.
(ii) ஒவ்வொரு கண்டமும் ஒரு ஜோடி இணைப்புக் கால்களைப் பெற்றுள்ளது.
(iii)உடலின் மேற்புறத்தில் கைட்டின் பாதுகாப்பு உறையாக உள்ளது. வளர்ச்சியின் போது குறிப்பிட்ட இடைவெளியில் இவை உதிர்கின்றன. இந்நிலைக்கு
தோலுரித்தல் என்று பெயர். இந்த நிகழ்வின் மூலம் இவற்றின் மேற்புற உறை உதிர்க்கப்பட்டு மீண்டும் உருவாக்கப்படுகின்றது.
(iv) உடற்குழியானது ஹீமோலிம்ப் என்ற திரவத்தினால் (இரத்தம்) நிரப்பப்பட்டுள்ளது. நன்கு வரையறுக்கப்பட்ட இரத்தக் குழல்கள் இல்லாததால் இரத்தம் உடல் முழுவதும் சுற்றிவருகிறது. இந்த வகை இரத்த ஓட்டம் திறந்த வகை இரத்த ஓட்டம் எனப்படும்.
(v) பல நிலவாழ் கணுக்காலிகள் டிரக்கியா எனும் நுண் மூச்சுக் குழல் மூலமாக சுவாசம் மேற்கொள்கின்றன.
(vi) ஆண் பெண் இரண்டும் தனித்தனி உயிரிகளாக உள்ளன. எ.கா. இறால், நண்டு, கரப்பான்பூச்சி, மரவட்டை.
27.
முன்முதுகு நாணிகள்-(Procliordata)
இவை முதுகெலும்பிகளின் முன்னோடிகளாகக் கருதப்படுகின்றன. முதுகு நாண் அமைப்பின் அடிப்படையில் இவை இரண்டு துணை தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை வால்முதுகுநாணிகள் (யுரோகார்டேட்டா) மற்றும் தலைமுதுகு நாணிகள் (செபாலோகார்டேட்டா) என்பவையாகும்.
i) துணைத்தொகுதி: வால் முதுகு நாணிகள் - (Urochordata)
தனித்து வாழும் லார்வாவின் வால் பகுதியில் முதுகுநாண்கள் காணப்படுகின்றன. முதிர் உயிரிகள் இயல்பான அமைப்பை இழந்து தரையில் ஒட்டி வாழ்பவை. உடலைச் சுற்றிலும் டியூனிக் எனும் உறை உண்டு, எ.கா. அசிடியன் அசிடியன்
ii) துணைத்தொகுதி: தலை முதுகு நாணிகள் - (Cephalochordata)
இவை மீன் வடிவ கடல் வாழ் முதுகு நாணிகள். இவற்றின் முதுகுப்புறத்தில் இணையற்ற துடுப்பு உள்ளது. இதில் தலை முதல் வால் வரை நீண்ட நிலையான முதுகுநாண் முக்கியப் பண்பாகக் கருதப்படுகிறது. ஆம்பியாக்லில் எ.கா. ஆம்பியாக்ஸிஸ்
28.
மனிதர்களின் ஆரோக்கியத்தைப் பேணிக்காக்க உணவானது தூய்மையானதாகவும் ஊட்டச்சத்து நிறைந்ததாகவும் மற்றும் எந்த வித கலப்படமின்றியும் இருக்க வேண்டும்.
நாட்டில் உள்ள எல்லா மக்களுக்கும் போதுமான அளவு தூய்மையான மற்றும் பாதுக்காப்பான உணவை கிடைக்கச் செய்வது நமது ஒவ்வொரு அரசாங்கத்தின் கடமையாகும். இந்திய அரசாங்கம் 1954 - ஆம் ஆண்டு ' உணவு கலப்படம் தடுப்புச் சட்டம்' மற்றும் 1955 - ஆம் ஆண்டு ' உணவுக் கலப்பட தடுப்பு விதிகள்' போன்ற உணவுப் பாதுகாப்புச் சட்டங்கள் நுகர்வோருக்குத் தூய்மையான மற்றும் முழு உணவு கிடைக்கப்பெறுவதை உறுதிப்படுத்தவும் மற்றும் நுகர்வோரை வியாபாரிகள் ஏமாற்றுவதிலிருந்து பாதுகாக்கும் நோக்கத்துடன் இயற்றப்பட்டது.
விற்பனை செய்யப்படும் உணவுப்பொருட்கள் குறைந்தபட்ச தரம் மற்றும் மேம்பட்ட சுகாதாரத்தைப் பெற்றிருக்க வேண்டும் என்று இந்த உணவுப்பாதுகாப்பு சட்டம் தெளிவாக வலியுறுத்தப்படுகிறது. எந்த ஒரு உணவு இந்த குறைந்த பட்ச தர நிர்ணயத்தை உறுதிப்படுத்தவில்லையோ அந்த உணவு கலப்படம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்த சட்டம் கலப்படம் செய்த பொருள்களை உருவாக்கும் மற்றும் விற்பனையில் ஈடுபடும் விநியோயோகஸ்தர்களை தண்டனைக்கு உட்படுத்தவும் அறிவுறுத்துகிறது. நேர்மையற்ற செயல்களில் ஈடுபடும் இத்தகைய விநியோகஸ்தர்களை தடுப்பதற்கு ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகு தொடர்ந்து இந்த சட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்படுகிறது. தரக்கட்டுப்பாடு செய்யும் நிறுவனங்கள் முறையே ISI, AGMARK (அக்மார்க்), FPO, FCI மற்றும் இதர சுகாதாரத் துறைகள் போன்றவை நுகர்வோர் பயன்படுத்தும் பொருள்களுக்கு குறைந்தபட்ச தர நிர்ணயங்களை விதித்துள்ளது.
29.
வைட்டமின்கள் சிறிய அளவில் தேவைப்படும் மிக முக்கியமான ஊட்டச்சத்தாகும். இது குறிப்பிட்ட வேலைகளைச் செய்து உடலை ஆரோக்கியமாக நிலை நிறுத்துவதற்குத் தேவைப்படுகிறது. வைட்டமின் ஒரு அங்கக கூட்டுப் பொருளாகும். எப்பொழுது ஒரு உயிரினத்தால் வைட்டமின் வேதிக் கூட்டுப்பொருளை போதுமான அளவு உருவாக்க முடியாதோ அப்பொழுது அந்தப்பொருள் உணவின் மூலம் மட்டுமே பெறப்பட முடியும்.
வைட்டமின்கள் - அதன் மூலங்கள், குறைபாடு நோய்கள், அறிகுறிகள்: கொழுப்பில் கரையும் வைட்டமின்
| வைட்டமின் | அதன் மூலங்கள் | குறைபாடு நோய்கள் | அறிகுறிகள் |
| வைட்டமின் A (ரெட்டினால்) |
கேரட், பப்பாளி, இலை வகை காய்கறிகள் |
சீரொப்தால்மியா (தோல் நோய்கள்), |
உலர்ந்த கார்னியா, |
| வைட்டமின் D (கால்சிஃபெரால்) |
முட்டை, கல்லீரல், பால் பொருட்கள், மீன், சூரிய வெளிச்சத்தில் தோலிலிருந்து உருவாக்குதல் |
ரிக்கெட்ஸ் ( குழந்தைகளிடம் காணப்படுகிறது) |
கவட்டைக்கால்கள் குறைபாடு உடைய மார்பெலும்புகள், புறா போன்ற மார்பு வளர்ச்சி. |
| வைட்டமின் E (டோகோஃபெரால் |
முழு கோதுமை, மாமிசம் தாவர எண்ணெய், பால் |
எலிகளின் மலட்டுத்தன்மை இனப்பெருக்க கோளாறுகள் |
மலட்டுத் தன்மை |
| வைட்டமின் K (வேதிப்பொருள் குயினோனிலிருந்து பெறப்படுகிறது) |
இலை வகை, காய்கறிகள், சோயாபீன்ஸ்கள், பால் |
இரத்தப்போக்கு | தாமதமாக இரத்தம் உரைத்தலின் காரணமாக அதிக இரத்தம் வெளிவருதல் |
30.
| காலம் | தலைமுறை | மின்னணு உறுப்புகள் |
| 1940 - 1956 | முதல் தலைமுறை | வெற்றிடக்குழாய்கள் |
| 1956 - 1963 | இரண்டாம் தலைமுறை | மின்மயப்பெருக்கி (டிரான்சிஸ்டர்) |
| 1964 - 1971 | மூன்றாம் தலைமுறை | ஒருங்கிணைந்த சுற்று |
| 1972 - 2010 | நான்காம் தலைமுறை | நுண்செயலி |
| 2010க்குப் பின் | ஐந்தாம் தலைமுறை | செயற்கை நுண்ணறிவு |
31.
தரவு செயலாக்கம் அல்லது தரவு செயல்பாடு என்பது ஆறு நிலைகளில் செயல்படுகிறது. அவையாவன
தரவு சேகரிப்பு
தரவு சேமித்தல்
தரவு வரிசைப்படுத்தல்
தரவு செயலாக்கம்
தரவு பகுப்பாய்வு
தரவு விளக்கமும் முடிவுகளும்
32.
போரின் அணு மாதிரி:
i) ஓர் அணுவில் எலக்ட்ரான்கள் நிலையான வட்டப் பாதையில் அணுக்கருவை சுற்றி வருகின்றன. இவ்வட்டப்பாதைகள் ஆர்பிட்டுகள் அல்லது ஆற்றல் மட்டங்கள் எனப்படுகின்றன.
ii) ஒரே வட்டப் பாதையில் எலக்ட்ரான்கள் சுற்றி வருகையில் ஆற்றலை இழப்பதோ அல்லது ஏற்பதோ இல்லை.
iii) வட்டப் பாதைகள் 1, 2, 3, 4 அல்லது K, L, M, N,....என பெயரிடப்படுகின்றன. இந்த எண்கள் முதன்மை குவாண்டம் எண்கள் (n) எனப்படும்.
iv) உட்கருவிற்கு அருகாமையில் இருக்கும் K கூடு (n = 1) குறைந்த ஆற்றலை உடையது L,M,N,... ஆகியன அடுத்தடுத்த உயர் ஆற்றல் மட்டங்கள் ஆகும். உட்கருவிலிருந்து தொலைவு அதிகரிக்கும் போது ஆர்பிட்டின் ஆற்றலும் அதிகரிக்கிறது.
v) ஒவ்வொரு ஆர்பிட்டும் நிலையான அளவு ஆற்றலைப் பெற்றுள்ளது.
vi) உட்கருவிலிருந்து தொலைவு அதிகரிக்கும் போது ஆர்பிட்டுகளின் அளவும் அதிகரிக்கும்.
vii) ஒரு ஆற்றல் மட்டத்தில் இடங்கொள்ளும் அதிகபட்ச எலக்ட்ரான்களின் எண்ணிக்கை 2n' ஆகும். இங்கு n என்பது அந்த ஆர்பிட்டின் முதன்மை குவாண்டம் எண் ஆகும்.
viii) எலக்ட்ரான் ஆற்றலை உறிஞ்சும் போது குறைந்த ஆற்றல் மட்டத்திலிருந்து உயர் ஆற்றல் மட்டத்திற்கு தாவுகிறது.
ix) உயர் ஆற்றல் மட்டத்தில் இருந்து குறைந்த ஆற்றல் மட்டத்திற்கு எலக்ட்ரான் இடம் பெயரும் போது ஆற்றலை வெளியிடுகிறது.
33.

34.
(1). டிண்டால் விளைவு:
(i) டிண்டால் என்பவர் ஒரு வலுவான ஒளிக்கற்றைகளை கூழ்மக் கரைசலின் வழியே செலுத்தும் போது ஒளிக்கற்றையின் பாதையை பார்க்க முடியும் என்று கண்டறிந்தார். மேலும் கூழ்மத்துகள்களால் ஒளி சிதறடிக்கப்படுகிறது. இதுவே டிண்டால் விளைவு ஆகும்.
(ii) எ.கா: ஒளிக்கற்றையானது தூய நீர் வழியாக செல்லும்போது கண்களுக்கு புலப்படுவதில்லை. ஆனால் கூழ்மக் கரைசலின் வழியே செல்லும்போது ஒளிக்கற்றை கண்களுக்குபுலப்படுகிறது
.
(2). பிரௌனியன் நகர்வு:
(i) கூழ்மக் கரைசல்களை செறிவு மிக்க நுண்ணோக்கியில் பார்க்கும் போது கூழ்மத்துக்கள்கள் இங்கும் அங்குமாக ஒழுங்கற்ற நிலையில் சீராகவும் வேகமாகவும் நகர்ந்து கொண்டிருப்பதைக் காணலாம். இந்த நகர்வு பிரௌனியன் நகர்வு எனப்படும்.
(ii) எ.கா: பிரௌனியன் இயக்கத்திற்கு காரணம் பரவல் ஊடகத்திலுள்ள மூலக்கூறுகளுடன், பரவிய நிலைமை மூலக்கூறுகள் சமமற்ற முறையில் தாக்குவதே ஆகும்.

35.
| வ.எண் | தனிமம் | சேர்மம் |
|---|---|---|
| 1. | ஒரே வகையான அணுக்களைக் கொண்டது | ஒன்றுக்கு மேற்பட்ட அணுக்களால் ஆனது. |
| 2. | இது ஒரு தூய்மையான பொருள் | இது ஒரு தூய்மையான பொருள் அல்ல. |
| 3. | வேதியியல் முறையில் எளிய பொருட்களாக பிரிக்க முடியாது | வேதியியல் முறையில் எளிய பொருட்களாக பிரிக்க முடியும் |
| 4. | வரையறுக்கப்பட்ட இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகளை பெற்றுள்ளது | வரையறுக்கப்பட்ட இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகளைப் பெற்றுள்ளது |
| 5. | உதாரணம்: ஹைட்ரஜன், ஆக்ஸிஜன் | உதாரணம்: நீர், கரும்புச் சர்க்கரை. |
36.
நீரில் ஒளியின் வேகம் = 2.25 \(\times\) 108 மீ/வி
வெற்றிடத்தில் ஒளியின் வேகம் = 3 \(\times\) 108 மீ/வி
நீரின் ஒளிவிலகல் எண் (μ) = ?
μ =
நீரின் ஒளி விலகல் எண் = 1.33
37.
கண்ணாடியின் ஒளிவிலகல் எண்(μ) = 1.5
வெற்றிடத்தில் ஒளியின் வேகம் = 3 × 108 மீ/வி
கண்ணாடியில் ஒளியின் வேகம் =2\(\times \)108 மீ/வி
38.
| CH4(g) | + | 2O2(g) | \(\rightarrow \) | Co2(g) | + | 2H2O(g) |
| 1 | 2 | 1 | 2 | |||
| பருமன் | பருமங்கள் | பருமன் | பருமங்கள் | |||
| 1 x 20 cm3 | 2 x 20 cm3 | 1 x 20 cm3 | 2 x 20 cm3 | |||
| 20 cm3 | 40 cm3 | 20 cm3 | 40 cm3 |
தேவையான ஆக்சிஜனின் பருமன் = 40 cm3.
39.
0-4 விநாடிகளில் பொருள் முடுக்கம் பெற்றுள்ளது.
a பகுதியில் u = 20ms-1 t = 4s

= \(\frac { 30-0 }{ 4 } =7.5m/s\)
தொலைவு (S) = ut + 1/2 at2
(S) = (0) (2) + 1/2 (7 .5) (4)2
= 7.5 \(\times\) 16/2
S = 60 m
பொருள் கடந்த தூரம் முக்கோணத்தின் பரப்பளவு = 1/2 x 4 x 30 = 60 மீ
40.
முடுக்கம் (a) = 4 மீ / வி2
தொடக்க திசைவேகம் (u) = 0
நேரம் (t) = 10 விநாடி
கடந்த தூரம் (s) = ?
S = ut + 1/2 at2
= (0 \(\times\)10 வி) + (\(\frac{1}{2}\) \(\times\) 4 மீ / வி2 \(\times\) (10) வி)2
= \(\frac{1}{2}\) \(\times\) 4 மீ / வி2 \(\times\) (10 வி)2
= 2 \(\times\) 100
= 200 மீ
10 விநாடி கடந்த தூரம் = 200 மீ.
41.
புரிக்கோல் அளவு = 1மிமீ
தலைக்கோல் ஒன்றிப்பு = 68
5 ரூபாய் நாணயத்தின் தடிமன் = PSR + (HSC \(\times\) L.C)
= 1 + (68 \(\times\) 0.01)
= 1 + 0.68)
5 ரூபாய் நாணயத்தின் தடிமன் = 1.68 மி.மீ
42.
தனிம வரிசை அட்டவணையில் பண்புகள்
(i) எல்லா தனிமங்களும் அவற்றின் அதிகரிக்கும் அணு எண்ணிற்கு ஏற்றாற்போல் அமைக்கப்பட்டுள்ளன.
(ii) நவீன தனிம வரிசை அட்டவணையில் தனிமங்கள் கிடைமட்டமாக வரிசைப்படுத்தப்பட்ட அமைப்பு தொடர்கள் என அழைக்கப்படுகிறது. 7 தொடர்கள் உள்ளன.
(iii) தனிமங்கள் அவற்றின் அணுக்களில் உள்ள கூடுகளின் எண்ணிக்கைகளுக்கு ஏற்ப தொடர்களில் அமைக்கப்பட்டுள்ளன.
(iv) தனிம வரிசை அட்டவணையில் மேலிருந்து மற்றும் கீழாக உள்ள பத்தி தொகுதிகள் ஆகும். மொத்தம் 18 தொகுதிகள் உள்ளன.
(v) ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள தனிமங்களின் பண்பிற்கு ஏற்ப இவைகள் பல குடும்பங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
(vi) மூன்றாம் தொகுதியில் வரும் லாந்தனைடுகள் , ஆக்டினைடுகளும் உள் இடைநிலைத் தனிமங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவை அட்டவணையில் கீழ்தொகுதியில் தனியாக வைக்கப்பட்டுள்ளன.
43.
வீட்டு உபயோக மின் பொருட்கள் பக்க இணைப்பில் இணைக்கப்படுகின்றன. ஏனெனில் ஒவ்வொரு மின் சாதனமும் தனித்தனியே இணைக்கப்படுகின்றன. அதை தனித்தனியே தேவையான நேரத்தில் நாம் செயல்படுத்திக் கொள்ளாம். எனவே பக்க இணைப்பில் தனித்தனியே இணைக்கப்படுகின்றன.
44.
அ) i) A உயிரினம் தாவரங்கள்
ii) உணவு B -குளுக்கோஸ்
உணவு H -ஸ்டார்ச்
ஆ) C - கார்பன் டை ஆக்சைடு
D - நீர்
இ) E - பச்சையம்
F - இலைகள்
ஈ) G - ஒளிச்சேர்க்கை.
45.
(அ) நீர்
(ஆ) புவிஈர்ப்பு விசை
(இ) ஒளி
46.
சுதாவிற்கு தீக்காயம் பட்டவுடன் வலி நிவாரணிகளைப் பயன்படுத்த வேண்டும். இவை உறுப்புகளை உணர்விழக்கச் செய்யாமல் எல்லா வகையான வலிகளிலிருந்தும் நிவாரணம் அளிக்கும் சேர்மங்கள் ஆகும். எனவே இந்த வலி நிவாரணிகளை பயன்படுத்த வேண்டும்.
47.
கடிகாரங்களில் பயன்படுத்தப்படும் மின்கலன்களை மறுஊட்டம் செய்ய இயலாது. ஏனெனில் அவை முதன்மை மின்கலன்கள் ஆகும். இந்த முதன்மை மின்கலன்களை மறுஊட்டம் செய்ய இயலாது. இவை மீளாக்கலம் ஆகும்.
48.
யோகா நெகிழிகுறியீடு 7 எனப் போடப்பட்டுள்ள நெகிழிப் புட்டியை வாங்க வேண்டும். ஏனெனில் இது பாதுகாப்பான நெகிழி ஆகும். எனவே நெகிழி குறியீடு 7 எனப் போடப்பட்டுள்ள நெகிழிப் புட்டியை வாங்க வேண்டும்.
49.
படகின் அடியில் துளை இருப்பதால் அதிக அளவு நீர் படகினுள் சென்றுவிடும். என வே படகானது அதிக எடையுடன் காணப்படும். எனவே படகு மூழ்கத் தொடங்கும். படசின் அடிப்பகுதியில் உள்ள நீரின் அழுத்தம் வளிமண்டல அழுத்தத்தினை விட அதிகமாக இருப்பதால் படகு நீரினுள் மூழ்கி விடும்.
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - பண்டைய நாகரிகங்கள் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Ancient . Civilisations Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - புரட்சிகளின் காலம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - The Age of Revolutions Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - State and Society in Medieval India Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Colonialism in Asia and Africa Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards