9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கற்கண்டு (இலக்கணம்) - தொடர் இலக்கணம், ஆகுபெயர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -விரிவானம் (துணைப்பாடம்) - தாய்மைக்கு வறட்சி இல்லை! Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கவிதை பேழை (செய்யுள்) - மார்கழி பெருவிழா Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர்-இலக்கணம் - பகுபத உறுப்பிலக்கணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர் - இலக்கணம்-எழுத்து -அளபெடை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர்-துணைப்பாடம் - ஆறாம்திணை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 22/10/2019
வேதிப்பிணைப்பு
Download Tamil Nadu 9th Standard Science question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Science Test1.
மந்த வாயுக்கள் ஏன் மந்தத் தன்மையுடன் காணப்படுகின்றன?
2.
அணு எண் 20 கொண்ட X என்ற தனிமம்,அணு எண் 8 கொண்ட Y என்ற தனிமத்துடன் இணைந்து XY என்ற மூலக்கூறை உருவாக்குகிறது என்க.XY மூலக்கூறு உருவாதலின் புள்ளி அமைப்பு வரைபடம் வரைக.
3.
பொருந்தாததைத் தேர்ந்தெடு.
அ. H2 , Cl2, NaCl, O2, N2
ஆ. H2O2, MnO4-, LiAiH4, Cr2O72-
4.
பிணைப்பின் வகைகள் யாவை?
5.
எண்ம விதியை எடுத்துக்காட்டுடன் கூறுக
6.
தனிமங்கள் எவ்வாறு மந்த வாயுக்களின் எலக்ட்ரான் அமைப்பிற்கு மாறுகின்றன?
7.
பின்வரும் சேர்மங்களில் உள்ள குறிப்பிட்ட தனிமத்தின் ஆக்ஸிஜனேற்ற எண்ணைக் கணக்கிடுக.
அ.CO2 ல் உள்ள C
ஆ.MnSO4 ல் உள்ள Mn
இ. HNO3 ல் உள்ள N
8.
ஈதல் சகப்பிணைப்புச் சேர்மங்களின் பண்புகளை விவரி.
9.
அயனிச் சேர்மங்களுக்கும் சகப்பிணைப்புச் சேர்மங்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை அட்டவணைப்படுத்துக.
10.
வெளிக்கூட்டில் எட்டு எலக்ட்ரான்களுடன் நிலைத்த எலக்ட்ரான் அமைப்பைப் பெற்ற தனிமங்கள் _____________
ஹேலஜன்கள்
உலோகங்கள்
மந்த வாயுக்கள்
அலோகங்கள்
11.
ஆக்ஸிஜனேற்றிகள் ____________ கள் எனவும் அழைக்கப்படுகின்றன.
எலக்ட்ரான் ஈனி
எலக்ட்ரான் ஏற்பி
12.
சகப்பிணைப்பு ____________ மூலம் உருவாகிறது
எலக்ட்ரான் பரிமாற்றத்தின்
எலக்ட்ரான் பங்கீடு
ஒரு இணை எலக்ட்ரான்களின் பங்கீடு
13.
____________ சேர்மங்கள் அதிக உருகுநிலை மற்றும் கொதிநிலை கொண்டவை
சகப்பிணைப்பு
ஈதல் சகப்பிணைப்பு
அயனிப் பிணைப்பு
14.
கார்பன் அணுவில் உள்ள இணைதிறன் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை
2
4
3
5
15.
ஓர் அணு எலக்ட்ரானை ஏற்று ------------------- அயனியாகிறது.
16.
ஓர் அணு எலக்ட்ரானை இழந்து ------------------ அயனியாகிறது
1.
மந்த வாயு அணுக்கள் ஹீலியம் தவிர இணைதிறன் கூட்டில் நிலையான எலக்ட்ரான் அமைப்பை பெற்றிருப்பதால் அவை எலக்ட்ரான்களை இழக்கும் அல்லது ஏற்கும் தன்மையைப் பெற்றிருப்பதில்லை, எனவே அவற்றின் இணைதிறன் பூஜ்ஜியம். மேலும் இவை மந்தத்தன்மை கொண்டிருப்பதால் அவை ஓரனு வாயுக்களாகவே காணப்படுகின்றன. எனவே மந்தத் தன்மையுடன் காணப்படுகின்றன.
2.
X என்ற தனிமம் - கால்சியம் எலக்ட்ரான் அமைப்பு 2,8,8,2.
Y என்ற தனிமம் - ஆக்சிஜன் எலக்ட்ரான் அமைப்பு 2,6.
3.
அ) H2 ,Cl2 , NaCl , O2 , N2
NaCl2 இது மட்டும் அயனிக் சேர்மம் ஆகும். மற்றவை சகப் பிணைப்பு சேர்மங்கள் ஆகும்.
ஆ) H2O2 , MnO4- , LiAiH4 , Cr2O72-
LiAlH4 மட்டும் ஒடுக்கியாகும். மற்றவை ஆக்சிஜனேற்றிகள்.
4.
வேதிப்பிணைப்புகள் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. அவை பலமான இணைப்பு மற்றும் பலவீனமான இணைப்பு பலமான இணைப்பு. மேலும் அயனிப்பிணைப்பு, சகப்பிணைப்பு, ஈதல் பிணைப்பு, உலோகப்பிணைப்பு என நான்காக பிரிக்கப்படுகிறது. பலவீனமான இணைப்பு நைட்ரஜன் பிணைப்பு மற்றும் வாண்டர் வால்ஸ் கவர்ச்சி விசை என இரண்டாக பிரிக்கப்படுகிறது.
5.
ஒரு அணுவானது மற்றொரு அணுவிடம் அதன் இணைதிறன் கூடு எலக்ட்ரான்களை இழந்தோ அல்லது பங்கீடு செய்தோ இணைதிறன் கூட்டில் எட்டு எலக்ட்ரான்களைப் பெற்றிருக்கும். இவ்விளைவு எட்டு எலக்ட்ரான் விதி அல்லது எண்ம விதி எனப்படுகிறது.
உதாரணமாக சோடியத்தின் அணு எண் 11 சோடியம் கூட்டிலிருந்து ஒரு எலக்ட்ரானை எளிதில் இழந்து நியான் அணுவின் எலக்ட்ரான் அமைப்பைப் பெறுகிறது.
6.
மந்தவாயுக்கள் தவிர மற்ற தனிமங்களின் அணுக்கள் முழுவதும் நிரப்பப்படாத இணைதிறன் கூட்டைப் பெற்றிருக்கின்றன. எனவே மற்ற வாயுக்கள் போன்று நிலையான எலக்ட்ரான் அமைப்பைப் பெறுவதற்காக அவை மற்ற அணுக்களுடன் இணைந்து மூலக்கூறுகளை உருவாக்குகின்றன. ஒரு அணு அதன் இணைதிறன் கூட்டில் உள்ள எலக்ட்ரான்களை இழந்தோ அல்லது பங்கீடு செய்தோ இணைவதன் மூலம் நிலையான மந்த வாயு எலக்ட்ரான் அமைப்பை பெறுகிறது.
7.
O வின் ஆக்சிஜனேற்ற எண் = -2
C யின் ஆக்சிஜனேற்ற எண் = x என்க.
எனவே CO2 ல்
(x) + 2 \(\times\) (-2) = 0|
x+ (-4) = 0
x = +4
எனவே கார்பனின் ஆக்சிஜனேற்ற எண் = +4.
ஆ) Mnso4 ல் உள்ள Mn
S ன் ஆக்ஸிஜனேற்ற எண் = +6
O ன் ஆக்ஸிஜனேற்ற எண் = -2
Mn ன் ஆக்ஸிஜனேற்ற எண் - x என்க.
(x) + (1 \(\times\) + 6) + (4 \(\times\)-2) = 0
x + 6 + (-8) = 0
x - 2 = 0
எனவே MnSO, ல் Mn ன் ஆக்ஸிஜனேற்ற எண் = +2.
இ) HNO3 ல் உள்ள N,
H ன் ஆக்ஸிஜனேற்ற எண் = +1
N ன் ஆக்ஸிஜனேற்ற எண் = x என்க.
O ன் ஆக்ஸிஜனேற்ற எண் = -2
(+1) + x + 3 \(\times\) (-2) = 0
+1 + x- 6 = 0
x - 5 = 0
x = + 5
எனவே HNO3 ல் N ன் ஆக்ஸிஜனேற்ற எண் = +5.
8.
அ. இயற்பியல் நிலைமை - இச்சேர்மங்கள் வாயுநிலை, நீர்ம நிலை மற்றும் திண்ம நிலைகளில் காணப்படுகின்றன.
ஆ. மின்கடத்துத் திறன் - சகப்பிணைப்புச் சேர்மங்களைப் போலவே, ஈதல் சகப்பிணைப்புச் சேர்மங்களிலும் அயனிகள் இல்லை. எனவே இவை அரிதில் மின்கடத்திகள் ஆகும்.
இ. உருகுநிலை - ஈதல் சகப்பிணைப்புச் சேர்மன்களின் உருகுநிலை மற்றும் கொதிநிலை சகப்பிணைப்புச் சேர்மங்களை விட அதிகமாகவும் அயனிச் சேர்மங்களை விட குறைவாகவும் காணப்படுகின்றன.
ஈ. கரைதிறன் - ஈதல் போன்ற முனைவுள்ள கரைப்பான்களில் மிகச் சிறிதளவே கரையும் அல்லது கரைவதில்லை. பென்சீன், டொலுவீன், கார்பன் டெட்ரா குளோரைடு போன்ற முனைவற்ற கரைப்பான்களில் எளிதில் கரைகிறது.
உ. வினைபடுதிறன் - இச்சேர்மங்கள் மெதுவான மூலக்கூறு வினைகளில் ஈடுபடுகின்றன.
9.
| வ.எண் | அயனிச் சேர்மங்கள் | சகப்பிணைப்புச் சேர்மங்கள் |
| 1. | உலோக அணுவிலிருந்து அலோக அணுவிற்கு ஒரு எலக்ட்ரான் இடம் பெயர்வதால் உருவாகின்றன |
அலோக அணுக்களுக்கிடையே எலக்ட்ரான்கள் பங்கிடப்படுவதால் உருவாகின்றன. |
| 2. | நேர் மற்றும் எதிர் அயனிகளுக்கிடையே வலிமையான நிலையின் கவர்ச்சி விசை காணப்படுகிறது. |
எலக்ட்ரான்களின் பகிர்வு. எனவே அணுக்களுக்கிடையே வலிமை குறைந்த கவர்ச்சி விசை காணப்படுகிறது. |
| 3. | அறை வெப்பநிலையில் திண்மங்கள் | வாயுக்கள், நீர்மங்கள், மென்மையான திண்மங்கள். |
| 4. | உருகிய நிலையிலும் கரைசல் நிலையிலும் மின்சாரத்தை கடத்தும். |
மின்சாரத்தை கடத்துவதில்லை |
| 5. | உருகுநிலையும், கொதிநிலையும் அதிகம் | உருகுநிலையும், கொதிநிலையும் குறைவு |
| 6. | முனைவுள்ள நொறுங்கும் தன்மையுடையது | முனைவற்ற கரைப்பான்களில் கரையும். |
| 7. | கடினமானது, நொறுங்கும் தன்மையுடையது. |
மென்மையானது, மெழுகுத்தன்மையுடையது. |
| 8. | அயனிகள் வினைகளில் பங்கேற்பதால் வினைகள் உடனடியாகவும், மிக வேகமாகவும் நடைபெறுகிறது. |
மூலக்கூறுகள் வினைகளில் பங்கேற்பதால் வினையின் வேகம் குறைவு. |
10.
(c)
மந்த வாயுக்கள்
11.
(b)
எலக்ட்ரான் ஏற்பி
12.
(b)
எலக்ட்ரான் பங்கீடு
13.
(c)
அயனிப் பிணைப்பு
14.
(b)
4
15.
( )
எதிர்
16.
( )
நேர்
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - மணிமேகலை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - ஏறு தழுவுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர் - தண்ணீர் Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards