9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கற்கண்டு (இலக்கணம்) - தொடர் இலக்கணம், ஆகுபெயர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -விரிவானம் (துணைப்பாடம்) - தாய்மைக்கு வறட்சி இல்லை! Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கவிதை பேழை (செய்யுள்) - மார்கழி பெருவிழா Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர்-இலக்கணம் - பகுபத உறுப்பிலக்கணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர் - இலக்கணம்-எழுத்து -அளபெடை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர்-துணைப்பாடம் - ஆறாம்திணை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 23/09/2019
நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருட்கள்
Download Tamil Nadu 9th Standard Science question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Science Test1.
கொதிக்கும் நீர் அல்லது நீராவி ஆகியவற்றில் எது அதிகமான காயத்தை உருவாக்குகிறது? ஏன்?
2.
கொதிநிலை என்றால் என்ன?
3.
அம்மோனியம் குளோரைடு மற்றும் எளிய உப்பு ஆகியவற்றின் கலவையைப் பிரித்தெடுக்க நீ பின்பற்றும் முறையைக் கூறு.
4.
பதங்கமாதல் – வரையறு
5.
வாயுக்களின் அழுத்தம் எவ்வாறு அதிகரிக்கின்றது?
6.
பரப்பு கவர்தல் என்றால் என்ன?
7.
பாயில் விதி - வரையறு.
8.
வாயுக்கள் ஏன் நிலையான கன அளவை பெற்றிருக்கவில்லை?
9.
திண்மங்கள் ஏன் நிலையான கன அளவை பெற்றுள்ளன?
10.
22 காரட் தங்கத்திலான ஒரு பதக்கத்தினை நீ வென்றிருக்கிறாய். அதன் தூய்மையை எவ்வாறு கண்டறிவாய்?
1.
கொதிக்கும் நீரைக் காட்டிலும் நீராவி அதிகக் காயத்தை ஏற்படுத்தும். ஏனெனில் நீராவியில் நீரின் கொதிநிலை வெப்பத்துடன், அது ஆவியாகும் போது உருவாகும் உள்ளுறை வெப்பமும் (latent heat) கூடுதலாகச் சேர்ந்து உள்ளது. எனவே நீராவியால் உண்டாகும் காயம் கொதிநீரின் காயத்தை விட அதிகத் தீங்கு விளைவிக்கும்.
2.
ஒரு திரவத்தை சூடுபடுத்தும் போது அத்திரவத்தின் ஆவி அழுத்தம் உயருகிறது. மேலும் ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் அத்திரவத்தினூடே குமிழிகள் உருவாகத் துவங்குகிறது. இவ்வெப்பநிலையே அத்திரவத்தின் கொதிநிலை எனப்படுகிறது.
3.
பதங்கமாதல்
4.
(i) சில திண்மப் பொருட்களை வெப்பப்படுத்தும் போது திரவ நிலையை அடையாமல் நேரடியாக திண்ம நிலையிலிருந்து வாயு நிலைக்கு மாற்றமடைகின்றன. இந்நிகழ்விற்கு பதங்கமாதல் என்று பெயர்.
(ii) எ.கா: அயோடின், கற்பூரம்.
5.
வாயுவின் அழுத்தமானது அதன் வெப்பநிலை அதிகரிக்கும்போது அதிகரிக்கிறது.
6.
(i) ஒரு பொருளின் மேற்பரப்பில் வேறொரு பொருளின் துகள்கள் கவரப்படும் நிகழ்வு பரப்புக் கவர்தல் எனப்படும்.
(ii) எ.கா: கரி அதன் மேற்பரப்பில் வாயுவை கவர்கிறது.
7.
மாறா வெப்பநிலையில் கொடுக்கப்பட்டுள்ள நிறையுள்ள ஒரு நல்லியல்பு வாயுவின் அழுத்தமானது அதன் கனஅளவிற்கு எதிர் விகிதத் தொடர்புடையது.இது பாயில் விதி ஆகும்.
8.
i) வாயுக்களில் உள்ள துகள்கள் ஒன்றுக்கொன்று நெருக்கமின்றி இருப்பதால் அவைகளுக்கிடையே அதிக இடைவெளி உள்ளது.
ii) ஆகவே அவைகள் ஒன்றுக்கொன்று நெருக்கப்படலாம் அல்லது எளிதில் அழுத்தப்படலாம். எனவே நிலையான கனஅளவைப் பெற்றிருக்கவில்லை.
9.
i) திண்மங்களில் துகள்களுக்கிடையேயுள்ள இடைவெளியானது குறைவாக இருப்பதால் திண்மங்களை அழுத்த முடியாது.
ii) அவை ஒன்றோடு ஒன்று நெருக்கமாக உள்ளன.
iii) துகள்களுக்கிடையே உள்ள இடைவெளி குறைவு. எனவே திண்மங்கள் நிலையான அளவைக் கொண்டுள்ளது.
10.
தங்கத்தின் தூய்மையை காரட் என்ற அலகின் மூலம் கண்டறியலாம். 22 காரட் தங்கப் பதக்கம் தூய பொருள் அல்ல. 22 காரட் தங்கப்பதக்கத்தில் 22 பங்கு தங்கமும் 2 பங்கு தாமிரமும் உள்ளது. மேலும் பதக்கத்தின் மேல் 916 என்ற முத்திரை பதிக்கப்பட்டிருக்கும். இதன் மூலமும் நாம் கண்டறியலாம்.
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - மணிமேகலை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - ஏறு தழுவுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர் - தண்ணீர் Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards