9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9ஆம் வகுப்பு கணிதம் ஆயத்தொலை வடிவியல்,முக்கோணவியல் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Maths Coordinate Geometry,Trigonometry Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு கணிதம் அளவியல்,புள்ளியியல்&நிகழ்தகவு முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Maths Mensuration,Statistics&Probability Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - செவ்வியல் உலகம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - The Classical World Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Early Tamil Society and Culture Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - தொழிற்புரட்சி முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Industrial Revolution Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - நவீன யுகத்தின் தொடக்கம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - The Beginning of the Modern AgeImportant 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.

Published on: 21/02/2019
3rd Term SA Mock Test 2019
Download Tamil Nadu 9th Standard Science question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Science Test1.
வலி மருந்துகள் _______ என்று அழைக்கப்படுகின்றன.
2.
_____ கரிமப் பொருட்கள் மற்றும் விலங்குக் கழிவுகளை அம்மோனியாவாக மாற்றுகின்றன.
3.
வளிமண்டல அழுத்தத்தை அளவிடப் பயன்படும் கருவி _________ ஆகும்.
4.
ஹேலிஸ் வால்மீன் 67 மணிநேரங்களுக்கு பின்னர் தோன்றும் .
5.
ஆர்க்கிமிடிஸ் தத்துவம் வாயுக்களுக்கும் பொருந்தும்.
6.
கூற்று: விலங்குகளிலிருந்து உணவுப் பொருள் தயாரித்தல் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது.
காரணம்: பால் செயல்முறைத் திட்டம் மற்றும் நீலப் புரட்சியால் உணவு தயாரித்தல் அதிகரித்துள்ளது.
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மே லும், காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.
இ) கூற்று சரி. ஆனால் காரணம் தவறு.
ஈ) கூற்று தவறு. ஆனால் காரணம் சரி.
7.
கூற்று : எதிர் உயிர் பொருட்களை உட்கொள்வதால் டெங்கு நோயைக் குணமாக்கலாம்.
காரணம் : நோய் எதிர் உயிர் பொருட்கள் வைரஸ்கள் பெருகுவதைத் தடுக்கின்றன.
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.
இ) கூற்று சரி. காரணம் தவறு.
ஈ) கூற்று தவறு. ஆனால் காரணம் சரி.
8.
கூற்று: உறங்குவதற்குப் பயன்படுத்தப்படும் மெ த்தைகளின் மீது படுக்கும் போது உடலின் அதிகமான பரப்பு படுக்கையுடன் தொட்டுக் கொண்டிருக்கும்படி தயாரிக்கப்பட்டிருக்கும்.
காரணம்: இதனால் உடலின் மீது செயல்படும் அழுத்தம் குறைக்கப்பட்டு நிறைவான உறக்கம் கிடைக்கிறது.
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி.மேலும், காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண் டும் சரி. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.
இ) கூற்று சரி. ஆனால் கார ணம் தவறு.
ஈ) கூற்று தவறு. ஆனால் கார ணம் சரி.
9.
கூற்று: நீரியல் தூக்கி பாஸ்கல் விதியின் அடிப்படையில் செயல்படுகிறது.
காரணம்: ஓரலகு பரப்பில் செயல்படும் செங்குத்து விசையே அழுத்தம் ஆகும்.
அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் உண்மை. மேலும், காரணம் கூற்றின் சரியான விளக்கம்.
ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் உண்மை. ஆனால், காரணம் கூற்றின் தவறான விளக்கம்.
இ) கூற்று உண்மை. ஆனால் காரணம் தவறு.
ஈ) கூற்று தவறு. ஆனால் காரணம் உண்மை.
10.
_______ ல் ஒலி வேகமாக பயணிக்கும்.
திரவங்களில்
வாயுக்களில்
திடப்பொருளில்
வெற்றிடத்தில்
11.
தேனீ வளர்ப்பில் போதுவாக பயன்படுத்தப்படும் இந்திய தேனீ எது?
ஏபிஸ் டார்சோ ட்டா
ஏபிஸ் ப்ளோரா
ஏபிஸ் பெல்ல பெரா
ஏபிஸ் இண்டிகா
12.
வட, தென் துருவங்களில் காணப்படும் பனிப்பாறைகளிலுள்ள பனிக்கட்டிகள் நேரடியாக ஆவியாக மாறும் நிலை _________ எனப்படும்.
ஆவியாதல்
குளிர்வித்தல்
பதங்கமாதல்
உட்செலுத்துதல்
13.
குழந்தை நிலையில் வாதத்தினைத் தரும் போலியோமைலிடிஸ் வைரஸானது இவ்வழியாக உடலினுள் செல்கிறது.
தோல்
வாய் மற்றும் மூக்கு
காதுகள்
கண்
14.
நெகிழி மாசுபாட்டைத் தடுக்கும் நடைமுறைகள் _________ பாதுகாப்புச் சட்டம் 1988ன் கீழ் வருகின்றன.
வனத்துறை
வனவிலங்கு
சுற்றுச்சுழல்
மனித உரிமைகள்
15.
A மற்றும் B ஆகிய இரண் டு வெவ்வேறு பொருட்கள் நீரில் முழுவதும் மூழ்கி இருக்கின்றன. மேலும், அவை ஒரே அளவான எடை இழப்பிற்கு உள்ளாகின்றன.
அ) காற்றில் பொருள் A மற்றும் பொருள் B ன் எடை சமமாக இருக்குமா?
ஆ) 4 கி.கி நிறை கொண்ட பொருள் A, 20செ.மீ3 பருமனையும், 9 கிகி நிறை கொண்ட பொருள் B, 90 செ.மீ3 பருமனையும் பெற்றுள்ளன. பொருள் A ன் அடர்த்தி அதிகமா அல்ல து பொருள் B ன் அடர்த்தி அதிகமா என்பதைக் கண்டுபிடி.
இ) பாதரசத் தம்பத் தின் எந்த செங்குத்து உயர ம் 99960 பாஸ்கல் அளவிலான அழுத்தத்தை உருவாக்கும்?
(பாதரசத் தின் அடர்த்தி = 136000கிகி / மீ3)
16.
சில மாணவர்கள் அருகிலுள்ள குளத்தைக்கடக்கும் பொழுது, நீரில் மூழ்கும் ஒரு மனிதன் உதவிவேண்டி அலறுவதைக்கேட்டனர். உடனே அவர்கள் அவ்வழியே சென்றவரை உதவிக்கு அழைத்தனர். அவர் காற்று நிரப்பப்பட்ட குழாய் ஒன்றை நீரினுள் வீசினார் . ரப்பர் குழாய் போடப்பட்டதால் அந்த மனிதன் காப்பாற்றப்பட்டான்.
அ) ஏன் அந்த வழிப்போக்கர் காற்று நிரப்பப்பட்ட ரப்பர் குழாயை, நீரில் மூழ்கும் மனிதனைக் காப்பாற்றுவதற்குப் பயன்படுத்தினார்?
ஆ) இங்கு பயன்படும் தத்துவத்தைக் கூறு.
இ) மாணவர்கள் மற்றும் வழிப்போக்கரின் எந்த குணங்கள் நீரில் மூழ்கும் மனிதனைக் காப்பாற்ற உதவியது என்பதை அடையாளம் காண்.
17.
நீரின் அடர்த்தி 1 கி செமீ3 எனில் அடர்த்தியை SI அலகில் கூறு.
18.
காளான்களைப் பதப்படுத்தும் இரண்டு முறைகளைக் கூறுக.
19.
‘உட்புறக் கோள்கள்’ - குறிப்பு வரைக.
20.
சுற்றுக்காலம் வரையறு
21.
நீர்த்தாவரங்கள் தங்கள் வாழிடங்களில் சந்திக்கக் கூடிய சவால்கள் யாவை?
22.
பயிர்த்துறையில் இரசாயன வேதியியல் உரங்களின் தேவை என்ன?
23.
கார்பன் மோனோக்ஸைடில் கார்பனின் இணைதிறன் என்ன?
24.
மீன்கள் எவ்வாறு நீரின் மேலும் கீழும் நீந்த முடிகிறது?
25.
மண்புழு உரமாக்குதலுக்கு பயன்படும் கரிம மூல ஆதாரங்கள் யாவை?
26.
மனித காது செயல்படும் விதத்தினை படத்துடன் விவரி.
27.
சூரிய மண்டலத்தில் உள்ள கோள்களைப் பற்றி குறிப்பு வரைக.
28.
நீர் மறுசுழற்சி என்றால் என்ன? கழிவு நீர் மறுசுழற்சியில் உள்ள வழக்கமான முறைகள் யாவை?
29.
விவசாயம் மற்றும் தொழிற்சாலைகளில் நுண்ணுயிரிகளின் பங்கினை விவரி.
30.
பயன்பாட்டின் அடிப்படையில் சாயங்களை வகைப்படுத்துக.
31.
சங்கிலித் தொடர் என்றால் என்ன? கார்பன் எவ்வாறு சங்கிலித்தொடர் சேர்மங்களை உருவாக்குகிறது?
32.
அதிர்வெண்
33.
அலைவுக் காலம்
34.
ஒலி
35.
Hardware
36.
MAC OS
37.
DPT
38.
HIV
39.
வாந்திபேதியினை ஏற்படுத்தும் நுண்ணுயிரியின் பெயரென்ன ? இதைத்தடுக்கும் ஏதாவதொரு முறையைத் தருக.
40.
சுவாச மண்டலத்தோடு தொடர்புடைய, அதிக நாட்கள் காணப்படும் நோய்களைப் பெயரிடுக
41.
எந்த இயற்பியல் பண்பு ஹெர்ட்ஸ் (Hz) என்ற அலகினைக் கொண்டுள்ளது? அதனை வரையறு.
42.
கீழ்காண்பவனவற்றை வரையறு
பிரியான்கள்
1.
( )
வலிநீக்கிகள் அல்லது வலி நிவாரணிகள்
2.
( )
பூஞ்சைகள்
3.
( )
காற்றழுத்தமானி
4.
(b)
5.
(a)
6.
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
7.
விடை: ஈ) கூற்று தவறு. ஆனால் காரணம் சரி.
8.
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி.மேலும், காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
9.
அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் உண்மை. மேலும், காரணம் கூற்றின் சரியான விளக்கம்.
10.
(c)
திடப்பொருளில்
11.
(d)
ஏபிஸ் இண்டிகா
12.
(c)
பதங்கமாதல்
13.
(b)
வாய் மற்றும் மூக்கு
14.
(c)
சுற்றுச்சுழல்
15.
அ) A மற்றும் B ஆகிய பொருள்களின் எடை காற்றல் சமமாக இருக்கும்.
ஆ) பொருள் A யின் அடர்த்தி (20செமீ3பருமன் உள்ள 4கி.கி ) அதிகம்.
இ) \(P=P\rho g\)
\(h=P/\rho g\)
\(h=\frac { 99960 }{ 13600\times 9.8 } =.75m\)
=750மி.மீ
16.
அ) காற்று நிரப்பட்ட ரப்பர் குழாய் எப்படி அழுத்தப்பட்டாலும் நீரில் மூழ்கிவிடப்படாமல் மிதக்கும் தன்மையுடையது. நீரில் விழுந்தவர் அதைப் பற்றிக் கொண்டால், முக்கிவிடாமல் மிதந்து கரையை அடைந்து விடலாம். எனவே அந்த வழிப் போக்கர் காற்று நிரப்பட்ட ரப்பர் குழாயைப் பயன்படுத்தினார்
ஆ) காற்றின் அடர்த்தி நீரின் அடர்த்தியைக் காட்டிலும் குறைவு, எனவே காற்று நிரப்பட்ட ரப்பர் குழாய் எப்பொழுதும் நீரில் மிதக்கும்.
இ) சரியான நேரத்தில் மாணவர்கள் காலத்தை வீணாக்காமல் அருகில் உள்ளவரை உதவிக்கு அழைத்தனர். வழிப்போக்கர் காற்றடைத்த ரப்பர் குழாய் தண்ணீரில் மிதக்கும் என்ற அறிவியல் கோட்பாட்டை அறிந்திருந்தார். இதனால் அந்த மனிதன் தண்ணீரில் மூழ்கி விடாமல் காப்பாற்றப்பட்டான்.
17.
நீரின் அடர்த்தி S.I அலகில் =1 கி செ.மீ3
அடர்த்தியில் S.I அலகில் = ?
1 கி = 1000 கி.கி/மீ3
1 செ.மீ3 = 1 \(\times\) 10-6 மீ3
1 கி செ.மீ3 = \(\frac{10^{-3}}{10^{-6}}\)= கி.கி/மீ3 = 1000 கி.கி/மீ3
அடர்த்தி S.I அலகில் =1000 கி.கி/மீ3
18.
i) குளிர்வித்தல்
ii) உலர்த்துதல்
iii) கலனில் அடைத்தல்
iv) வெற்றிட குளிர்வித்தல்
19.
சூரிய மண்டலத்திலுள்ள கோள்கள் யாவும் வெவ்வேறு இடைவெளிகளில் காணப்படுகின்றன. முதல் நான்கு கோள்களான புதன், வெள்ளி, பூமி மற்றும் செவ்வாய் போன்றவை ஒன்றுக்கொன்று நெருக்கமாகவும், சூரியனுக்கு அருகாமையிலும் உள்ளன. எனவே அவை உட்புற சூரிய மண்டத்தை அமைக்கின்றன. மேலும் அவற்றின் புறப்பரப்பு திண்மப்பாறை மேலோட்டினால் அமைந்து உள்ளதால் அவை நிலம் சார் கோள்கள் என அழைக்கப்படுகின்றன. அவற்றின் உட்பகுதி புறப்பரப்பு மற்றும் வளிமண்டலம் ஆகியவை ஒரே முறையில் ஒரே வடிவில் உருவானவை. மேலும் அவை எந்த அமைப்பில் உள்ளவை. இவற்றிற்கு வளையங்கள் இல்லை.
20.
புவியை ஒருமுறை முழுமையாக சுற்றிவர ஒரு செயற்கைக் கோள் எடுத்துக் கொள்ளும் காலம் சுற்றுக் காலம் எனப்படும்.

21.
1) தேவைக்கு அதிகமான நீர் இருத்தல்.
2) நீரோட்டம் தாவரத்தினை சேதப்படுத்துதல்.
3) நீரின் அளவு தொடர்ந்து மாறிக்கொண்டிருத்தல்
4) நீரில் மிதக்கும் தன்மையைப் பராமரித்தல்.
22.
தாவரங்கள் வளர்வதற்கு தேவையான நுண் ஊட்டச்சத்து மற்றும் பெரும ஊட்டச்சத்துக்களை வழங்குவதற்காக இந்த இரசாயன வேதியியல் உரங்கள்
பயன்படுகின்றன. இவை தாவரங்களுக்கு தேவையான நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற பெரும ஊட்டச்சத்துகளை கொடுக்கின்றன.
23.
கார்பன் மோனோக்ஸைடில் கார்பனின் இணைதிறன் இரண்டு.
24.
மீன்கள் மிதப்புத் தன்மையை சீராக வைத்துள்ளன. மீன்கள் தன் உடலில் உள்ள நீந்த தேவையான பை போன்ற அமைப்பு காணப்படுகிறது. இந்த பையானது எடையை குறைத்து மீன்கள் மேலே நீந்த உதவுகிறது. இந்த பையின் எடை அதிகரிக்கும் போது கீழே செல்கிறது. அதாவது இந்த பையில் காற்று அடைத்துக் கொண்டு நீர் பரப்பிற்கு வருகிறது. காற்றினை இடப்பெயர்ச்சி செய்தபின் நீரின் அடிப்பகுதிக்கு சென்று விடுகிறது. இவ்வாறு மீன்கள் நீரில் மேலும், கீழும் நீந்த முடிகிறது.
25.
மண்புழு உரம் தயாரிக்கத் தேவையான மூலப்பொருள்கள் : உயிரியல் முறையில் சிதை வடையக் கூடிய கரிமக் கழிவுகள் மண்புழு உரம் தயாரித்தலில் மிக முக்கியமான கரிம மூலங்களாக பயன்படுத்தப்படுகின்றன.
அவையாவன:
i) விவசாயக் கழிவுகள் (பயிர்க் கழிவுகள் , காய்கறிக் கழிவுகள் கரும்பின் கழிவுகள்
ii) பயிர்க் கழிவுகள் (நெல் , வைக்கோல் , தியிலைக் கழிவு , தனியா மற்றும் , கரும்பின் வகை கழிவு, அரசி ,உமி புகையிலைக் கழிவு , நார்க் கழிவு)
iii) இலைக் குப்பைகள்
iv) பழ மற்றும் காய்கறிக் கழிவுகள்
v) விலங்குக் கழிவுகள் (மாட்டுச் சாணம் , கோழி எச்சங்கள் , பன்றிக் கழிவுகள் வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளின் கழிவுகள்)
சாண ஏரிவாயுக் கழிவுகள்.
26.

மனித காது செயல்படும் விதம் :
i. செவியின் வெளிப்பகுதி செவிமடல் என்று அழைக்கப்படுகிறது. இது சுற்றுப்புறத்திலிருந்து ஒலியைச் சேகரிக்கின்றது.
ii. சேகரிக்கப்பட்ட ஒலியானது, வெளிச் செவிக்குழாய் மூலம் செவிக்கு உள்ளே செல்கிறது.
iii. வெளிச் செவிக் குழாயின் முடிவில், செவிப்பறை (tympanic) உள்ளது.
iv. காற்று ஊடகத்தில் ஒரு நெருக்கமானது உண்டாகும்போது செவிப்பறையின் பகுதியிலுள்ள வெளிப் அழுத்தமானது அதிகரித்து, செவிப்பறையானது உட்புறம் தள்ளப்படுகிறது.
v. அதுபோலவே, காற்று ஊடகத்தில் ஒரு நெகிழ்ச்சி உண்டாகும்போது செவிப்பறையானது, வெளிப்புறம் தள்ளப்படுகிறது.
vi. இவ்வாறாக செவிப்பறையானது அதிர்வடைகின்றது.
vii. இந்த அதிர்வானது. நடுச்செவியிலுள்ள மூன்று எலும்புகளால் (சுத்தி, பட்டை மற்றும் அங்கவடி பலமுறை பெருக்கமடைகிறது.
viii. அலையிலிருந்து பெறப்பட்டு பெருக்கமடைந்த அழுத்தவேறுபாடானது. நடுச்செவியிலிருந்து உட்செவிக்குக் கடத்தப்படுகிறது.
ix. உட்செவியினுள் கடத்தப்பட்ட அழுத்த வேறுபாடானது. காக்ளியா (Cochlea) மூலம் மின்சைகைகளாக மாற்றப்படுகின்றது.
X. இந்த மின் சைகைகள் காது நரம்பு வழியே மூளைக்கு செலுத்தப்படுகின்றன.
xi. மூளையானது அவற்றை ஒலியாக உணர்கின்றது.
27.
வட்ட வடிவமான சுற்றுப்பாதையில் கோள்கள் சூரியனைச் சுற்றி வருகின்றன. அவை நீள் வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன. சூரிய மண்டலத்திலுள்ள கோள்கள் யாவும் வெவ்வேறு இடைவெளியில் காணப்படுகின்றன. முதல் நான்கு கோள்களான புதன், வெள்ளி, பூமி மற்றும் செவ்வாய் ஆகியவை உட்புறக்கோள்கள் என்று அழைக்கப்படுகின்றன. வெளிப்புற சூரிய மண்டலத்தில் ஒப்பீட்டளவில் சூரியனை மெதுவாகச் சுற்றிவரும் கோள்களான வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகியவை வெளிப்புறக்கோள்கள் என அழைக்கப்படுகின்றன.
(i) புதன்:
சூரியனுக்கு மிக அருகில் அமைந்துள்ள பாறைக்கோள்தான் புதன் ஆகும். இது பகலில் மிக அதிக வெப்பத்துடனும் இரவில் அதிகக் குளிருடனும் காணப்படும். மற்ற எந்த கோள்களையும் விட சூரியனை இது வேகமாகச் சுற்றி வருகின்றது - இதன் சுற்றுக்காலம் 87.97 புவி நாள்களாகும். ஆனால், இது தன்னைத்தானே சுழல எடுத்துக் கொள்ளும் சுழற்சிக்காலம் மிக அதிகம். அதாவது, புதனில் ஒரு நாள் என்பது 58.65 புவி நாள்களாகும்.
(ii) வெள்ளி:
கிட்டத்தட்ட பூமியின் அளவையொத்த ஒரு சிறப்புக்கோள் வெள்ளி. நம் சூரியமண்டலத்தில் காண்ப்படும் கோள்களிலேயே அதிக வெப்பநிலை கொண்டது வெள்ளி ஆகும். நிலவிற்குப் பிறகு, வானத்தில் தெரியும் மிகப்பிரகாசமான வான்பொருள் இதுவே. இதில் ஒரு நாள் என்பது அதனுடைய ஒரு ஆண்டை விட நீண்டது. வெள்ளியில் ஒரு நாள் என்பது 243 புவி நாள்களாகவும் ஒரு ஆண்டு என்பது 224.7 புவி நாள்களாகவும், உள்ளது. மற்ற கோள்களைப்போல் அல்லாமல், இது எதிர்த் திசையில் சுழல்வதால், இங்கு சூரியன் மேற்கே தோன்றி கிழக்கே மறைகிறது. வெள்ளியை நாம் வெறும் கண்ணால் எளிதில் காணலாம். அது கிழக்கு அல்லது மேற்குத் திசையில் கீழ்வானத்தில் தெரியும்.
(iii) பூமி:
சூரிய மண்டலத்திலுள்ள. கோள்களிலேயே நாம் வாழும் பூமியில் மட்டும்தான் உயிர் வாழத் தகுதியான சூழல் உள்ளது. சூரியனிலிருந்து சரியான தொலைவில் அது உள்ளதால், சரியான வெப்பநிலை, நீர் ஆதாரம், சரியான வளிமண்டலம் மற்றும் ஓசோன் படலம் ஆகியவற்றை பூமி கொண்டுள்ளது. இவையனைத்தும் உள்ளதால்தான், பூமியில் உயிர்கள் தொடர்ந்து வாழ்வதென்பது சாத்தியமாகின்றது. பூமியானது, சூரியனைச் சுற்றிவர எடுத்துக்கொள்ளும் காலம் 365.25 நாட்களாகவும், அதன் சுழற்சிக்காலம் 23.93 மணியாகவும் உள்ளது. பூமியின் சுழற்சி அச்சானது அதன் சுற்றுத்தளத்திற்கு செங்குத்தாக அமைந்திருப்பதில்லை. மாறாக, சற்று சாய்வுடன் உள்ளது. இவ்வாறு சாய்ந்துள்ளதால்தான், பூமியில் பருவநிலை மாற்றங்கள் ஏற்படுகின்றன. பூமியின் மீதுள்ள நீர் மற்றும் நிலப்பகுதிகளின் மீது ஒளி எதிரொளிப்பதனால், விண்ணிலிருந்து பார்க்கும்போது பூமி நீலம் கலந்த பச்சை நிறத்துடன் காணப்படும்.
(iv) செவ்வாய்:
புவியின் சுற்றுப்பாதைக்கு வெளியில் அமைந்துள்ள முதல் கோள் செவ்வாய் ஆகும். இது சற்றே சிவப்பு நிறத்தில் காணப்படுவதால், இது சிவப்புக்கோள என அழைக்கப்படுகிறது. இதற்கு டீமோஸ் மற்றும் போபோஸ் எனப்படும் இரு இயற்கைத் துணைக்கோள்கள் உள்ளன. இங்கு ஒரு நாள் என்பது 24 மணி 37 நிமிடம் 22 விநாடியாகவும், ஒரு வருடம் என்பது 686.96 புவி நாள்கள், கிட்டத்தட்ட 687 நாள்களாகவும் உள்ளது.
(v) வியாழன்:
வியாழன் கோளானது, பெருங்கோள் என அழைக்கப்ப்டுகின்றது. கோள்களிலேயே மிகப்பெரியது இதுவே. இதற்கு 3 வளையங்களும் 65 நிலவுகளும் உள்ளன. இதன் நிலவான கானிமீடு என்ற நிலவுதான் சூரிய மண்டலத்திலேயே மிகப்பெரிய நிலவாகும். மற்ற கோள்களையெல்லாம் விட மிக வேகமாக இது சுழல்வதால், வியாழனின் ஒரு நாள் என்பது 9 மணி 55 நிமிடங்கள் 30 வினாடிகளாக உள்ளது. அங்கு ஒரு வருடம் என்பது 11.862 புவி வருடங்கள் ஆகும்.
(vi) சனி:
வளையங்களுக்குப் பெயர்போன சனி கோள், மஞ்சள் நிறத்தில் காணப்படுகின்றது. வெளிப்புற சூரியமண்டலத்தில் காணப்படும் இக்கோளானது வியாழனுக்கு அடுத்து இரண்டாவது பெரும் வாயுக்கோளாகும். இது மிக வேகமாக சுழல்கின்றது. சனியின் வருவதால் இதன் சுற்றுக்காலம் 59.46 புவி ஆண்டுகளாகவும் இருக்கின்றது. குறைந்தபட்சம் சனியின் 60 நிலவுகள் உள்ளன. டைட்டன் என்ற நிலவே அதில் பெரியது ஆகும். நம் சூரிய மண்டலத்தில் மேகங்களுடன் கூடிய ஒரே நிலவு இதுவாகும். சனியின் அடர்த்தி மிகவும் குறைவாக உள்ளதால் (புவியை விட 30 மடங்கு குறைவு) இந்த கோள் கனமற்றது.
(vii) யுரேனஸ்:
யுரேனஸ் கோளானது ஒரு குளிர்மிகு வாயுப் பெருங்கோளாகும். இது சூரிய மண்டலத்தின் ஏழாவது கோள் ஆகும். இது மிகவும் சாய்ந்து சூழல் அச்சைக் கொண்டுள்ளது. அதனால் இது உருண்டோடுவது போல் தெரிகின்றது. இதன் சுற்றுக்காலம் 84 புவி ஆண்டுகள் மற்றும் சுழற்சிக்காலம் 17.2 மணி நேரமாகும். இதன் அசாதாரண சாய்வின் காரணமாக இங்கு கோடை காலமும், குளிர்காலமும் மிக நீண்டு இருக்கும், ஒவ்வொன்றும் 42 ஆண்டுகளாக உள்ளன.
(viii) நெப்டியூன்:
இக்கோளானது பச்சை நிற விண்மீன் போன்று காட்சியளிக்கும். சூரியனிலிருந்து எட்டாவதாக உள்ள இந்தக் கோள் மிகவும் காற்று வீசக்கூடிய கோளாகும். 248 ஆண்டுகளுக்கு ஒருமுறை புளுட்டோ இதன் சுற்றுப்பாதையைக் கடக்கிறது. இந்த நிலை 20 ஆண்டுகளுக்குத் தொடர்கிறது. இதற்கு 13 நிலவுகள் உள்ளன . அதில் டிரைட்டான் என்ற நிலவே பெரியதாகும். சூரிய மண்டலத்தில் கோளின் சுழற்சிக்கு எதிர்த்திசையில் சுற்றும் ஒரே நிலவு டிரைட்டான் ஆகும்.
28.
மழைநீர் சேகரிப்பு தவிர , நீரை மறுசுழற்சி செய்வதும் நீரைப் பாதுகாப்பதற்கான முக்கியமான உத்தியாகும்.
மறுசுழற்சி செய்யப்பட்ட வீணான நீரை தேவையான பயன் தரக்கூடிய நோக்கங்களுக்காக , மீண்டும் பயன்படுத்துவதே நீர் மறுசுழற்சி ஆகும்.விவசாயம் மற்றும் இயற்கைப் பாசனகள் , தொழிற்சாலைச் செயல்முறைகள் கழிவறைகளைச் சுத்தம் செய்தல் மற்றும் நிலத்தடி நீரின் அளவினை அதிகப்படுத்துதல் ஆகியவற்றின் இவை பயன்படுகின்றன.
நீர் மறுசுழற்சி நிலைகள்:
பழைய நீர்ச்சுத்திகரிப்பு முறைகள் இயற்பியல் வேதியியல் மற்றும் உயிரியல் செயல்முறைகளை உள்ளடக்கியவை ஆகும். இவற்றின் மூலம் திண்மங்கள், கரிமப் பொருள்கள் மற்றும் சத்துக்கள் ஆகியன கழிவு நீரிலிருந்து நிக்கப்படுகின்றன,கழிவு நீர்ச் சுத்திகரிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ள படிநிலைகளை உள்ளடக்கியதாகும்.
முதல் நிலை சுத்திகரிப்பு:
முதல் நிலை சுத்திகரிப்பு என்பது கழிவுநிரை தற்காலியமாக தொட்டிகளில் சேர்த்து வைத்தல் ஆகும் இவ்வாறு செய்வதன் மூலம் கனமான திண்மங்கள் நீரின் அடியிலும் எண்ணெய், உயவுப் பொருட்கள் போன்ற மிதக்கும் பொருட்கள் நீரின் மேற்பரப்பிலும் தங்கிவிடுகின்றன. கீழே தங்கிய மற்றும் மேலே மிதக்கும் பொருட்கள் தனித்தனியே பிரிக்கப்படுகின்றன.மீதி உள்ள நீர்மம் இரண்டாம் நிலை சுத்திகரிப்பு அனுப்பப்படுகின்றது.
இரண்டாம் நிலை சுத்திகரிப்பு : இதன் மூலம் கழிவு நீரில் கரைந்திருக்கும் மக்கும் (உயிரிகளால் சிதைவுறும்) கரிமப் பொருள்கள் நிக்கப்படுகின்றன.இச்செயல் முறை உயிர்வழி வாயுவின் (O2) முன்னிலையில் கற்று நுண்ணுயிரிகளால் நடத்தப்படுகிறது, (உயிரியல் ஆக்ஸீஜனேற்றம்) கழிவு நீரிலுள்ள நுண்ணுயிரிகள் வீழ்படிவதால் முறையின் மூலம் நீக்கம் செய்யப்பட வேண்டும் என்பதால் உயிரியல் திண்மங்களைப் பிரிந்தவுடன் மீதி உள்ள நீரானது மூன்றாம் கட்ட சுத்திகரிப்புத் தொட்டிக்கு திறந்துவிடப்படுகிறது.
மூன்றாம் நிலை சுத்திகரிப்பு:
மூன்றாம் நிலை அல்லது மேம்பட்ட சுத்திகரிப்பு என்பது கடைசி கட்ட கழிவுநீர் சுத்திகரிப்பாகும். நைட்ரஜன், பாஸ்பரஸ் மற்றும் நுண்ணுயிர்கள் போன்ற கனிம உட்கூறுகளை நீக்குதலை இது உள்ளடக்கியதாகும்.இந்நிலையில் கழிவுநீரில் உள்ள நுண்ணிய கூழ்மத்துகள்கள் வேதியில் முறையில் உறையச் செய்யும் பொருள்களான படிகாரம் அல்லது இரும்பு சல்பேட் ஆகியவற்றைச் சேர்த்து , விழ்படிவாக்கப்பட்டுசுத்திகரிக்கப்படுகின்றன.
29.
நுண்ணுயிரிகள் உயிரியக் கட்டுப்பாட்டுக் காரணிகளாகவும், உயிரின உரங்களாகவும் விவசாயத்துறையில் முக்கிய பங்களிக்கின்றன. இவை கார்பன், நைட்ரஜன், ஆக்ஸிஜன் கந்தகம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற தனிமங்களின் சுழற்சியில் முக்கியப் பங்காற்றுகின்றன. இவை உயிரியல் துப்புரவாளர்கள் எனவும் அழைக்கப்படுகின்றன.
(i) உயரியக் கட்டுப்பாட்டுக் காரணிகளாக நுண்ணுயிர்கள்:
தாவரங்களுக்கு தீங்கு விளைவிக்கும் அல்லது நோயினை உருவாக்கம் உயிரிகள் மற்றும் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் நுண்ணுயிர்கள் பயனுள்ளதாக இருக்கின்றன. எனவே, இவைகள் உயரியக்கட்டுப்பாட்டுக் காரணிகள் உயிரி பூச்சிக்கொல்லி) என அழைக்கப்படுகின்றன. பேசிலஸ் துரின்சியென்சிஸ் (Bt) என்ற பாக்டீரியத்தின் சிற்றினத்திலிருந்து 'படிம' புரதம் என்ற அழைக்கப்படும் புரதமானது உற்பத்தியாகிறது. இந்தப் புரதமானது பூச்சிகள் இளம் உயிரிகளுக்கு நச்சுத்தன்மையுடையதாக இருந்து அவற்றைக் கொல்கிறது.
பேசில்லஸ் துரின்சியென்சிஸ் கருவணுக்கள் (ஸ்போர்கள்) பைகளில் அடைக்கப்பட்டு விற்பனையாகின்றன. அவற்றை நீரோடு சேர்த்து கரைத்து பாதிக்கப்பட்ட தாவரங்களின் மீது தெளிக்கப்படுகிறது. இதன்மூலம் பூச்சிகளின் இளம் உயிரியானது கொல்லப்படுகின்றது.
(ii) உயிரி உரங்களாக நுண்ணுயிரிகள்:
நிலத்திலுள்ள மண்ணினை சத்துமிக்கதாய் வளப்படுத்தும் நுண்ணுயிரிகள் உயிரி உரங்கள் என அழைக்கப்படுகின்றது. பாக்டீரியா, சயனோபாக்டீரியா மற்றும் பூஞ்சை ஆகியவைகள் உயிரி உரங்களின் முக்கிய ஆதாரங்கள் ஆகும். தாவர ஊட்டச்சத்துக்களில் நைட்ரஜனும் மிக முக்கியமான ஒரு ஆதாரம் ஆகும். வளிமண்டலத்தில் வாயுவாகக் காணப்படும் நைட்ரஜனானது பயன்படுத்தப்படக்கூடிய விதத்தில் மாற்றம் செய்யப்பட வேண்டும். இந்த மாற்றத்தினை நிகழ்த்துவதில் தனித்த நிலையில் வாழும் நுண்ணுயிரிகளோ அல்லது தாவரத்தோடு கூட்டுயிர் தொடர்பினைக் கொண்டிருக்கும் நுண்ணுயிரிகளோ பெரும் பங்காற்றுகின்றன. எ.கா. நைட்ரோசோமோனாஸ் மற்றும் நாஸ்டாக் என்ற தனித்து வாழ்பவைகள், கூட்டுயிர் வாழ்க்கைமுறையுடைய ரைசோபியம், ஃப்ரோன்கியா, மைகோரைசா போன்றவைகள்.
தொழிற்சாலைகளில் நுண்ணுயிரிகள்
மனிதனின் நலத்திளற்காக பல்வேறு மதிப்புமிக்க பொருள்களை அதிகமாக உற்பத்தி செய்வதில் நுண்ணுயிரிகள் முக்கிய பங்காற்றுகின்றன.
அ. நொதிக்கவைக்கப்பட்ட பானங்கள் தயாரித்தல்
நொதிக்க வைக்கப்பட்ட திராட்சை ரசங்கள் (வைன்) சாக்கரோமைசிஸ் செரிவியே (ஈஸ்ட்) என்ற உயிரியில் நொதியால் தானியங்கள் மற்றும் பழங்களிலிருந்து உருவாக்கப்படுகின்றன.
ஆ. காஃபி விதைகள், தேயிலை மற்றும் புகையிலையை பதப்படுத்துதல்
காஃபி மற்றும் கோக்கோ தாவரத்தின் விதைகள், தேயிலைச்செடி மற்றும் புகையிலைச் செடியின் இலைகளை நொதிக்க வைத்து குடிநீர் சாறு தயாரிப்பதற்கு ஃபேசில்லஸ் மெகாடெரியம் என்ற பாக்டீரியா பயன்படுத்தப்படுகிறது. இது சிறப்பான நறுமணத்தைத் தருகிறது.
இ. தயிர் தயாரித்தல்
லாக்டோபேசில்லஸ் சிற்றினங்கள் பாலினை தயிராக மாற்றுகின்றன.
ஈ. கரிக அமிலங்கள், நொதிகள் மற்றும் வைட்டமின்கள் தயாரித்தல்
ஆக்ஸாலிக் அமிலம், அசிடிக் அமிலம் மற்றும் சிட்ரிக் அமிலம் போன்றவைகள் ஆஸ்பர்ஜிலஸ் நைகர் என்ற பூஞ்சை மூலம் தயாரிக்கப்படுகின்றன. லிப்பேஸ், இன வெர்டேஸ், புரோட்டியேஸ் மற்றும் குளுக்கோஸ் ஆக்ஸிடேஸ் போன்ற நொதிகள் நுண்ணுயிரிகளிலிருந்து பெறப்படுகின்றன. ஈஸ்ட்கள் வைட்டமின் B கூட்டுப்பொருள்களை (காம்ப்ளக்ஸ்) அதிகம் உற்பத்தி செய்யும் ஆதாரங்களாக உள்ளன.
30.
i) அமிலச்சாயங்கள்: இவை அமிலத் தன்மை கொண்டவை. மேலும், இவை விலங்குகளின் தோல்கள் மற்றும் செயற்கை இழைகளுக்கு சாயமேற்றுவதற்கு பயன்படுகின்றன. கம்பிளி மற்றும் பட்டு போன்ற புரத நூலிழைகளை சாயமேற்ற இவற்றைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டு: பிக்ரிக் அமிலம், மஞ்சள் நாப்தால்.
ii) காரச்சாயங்கள்: இவ்வகைச் சாயங்கள் காரத் தொகுதிகளைக் கொண்டுள்ளன. இவை, தாவர மற்றும் விலங்கு நூல் இழைகளைச் சாயமேற்ற பயன்படுகின்றன.
iii) மறைமுக சாயம்: இவ்வகைச் சாயங்கள் பருத்தி ஆடைகளுடன் குறைவான ஈர்ப்புத் தன்மையைக் கொண்டுள்ளதால் நேரடியாக அவற்றின் மீது படிவதில்லை. எனவே, அவை முதலில் நிறமூன்றிகளுடன் (mordants) செயல்படுத்தப்பட வேண்டும். நிறமூன்றி என்பது துணிகளுடன் இணைக்கப்பட்டு பிறகு சாயங்களுடன் இணைக்கப்படக்கூடிய பொருளாகும். இதன் விளைவாக லேக் எனப்படும் கரையாத கூட்டுப்பொருள் உருவாகின்றது. அலுமினியம், குரோமியம் மற்றும் இரும்பின் உப்புகள் போன்றவை நிறமூன்றிகளாக பயன்படுகின்றன. எ.கா: அலிசரின்.
iv) நேரடி சாயங்கள்: இவை பருத்தி, ரேயான் மற்றும் இதர செல்லுலோஸ் இழைகளுடன் அதிக கவர்ச்சியை உடையன. இவை துணிகளுடன் உறுதியாக ஒட்டிக்கொள்வதால், நேரடியாக பயன்படுத்தப்படுகின்றன. எ.கா: காங்கோ சிவப்பு.
v) தொட்டிச்சாயம்: இவை பருத்தி இழைகளுக்கு மட்டுமே பயன்படக்கூடியவை. ஆனால், பட்டு மற்றும் கம்பிளி இழைகளுக்குப் பயன்படாது. இந்த சாயமிடுதல் தொடர்ச்சியான செயல்பாடாகும். இவற்றை செயல்படுத்த ஒரு பெரிய கலன் தேவைப்படுகிறது. இவை தொட்டி என்று அழைக்கப்படுகின்றன. எனவே, இவ்வகை சாயம் தொட்டிச்சாயம் என்றழைக்கப்படுகிறது. எ.கா: இண்டிகோ.
31.
சங்கிலித் தொடராக்கம் என்பது ஒரு தனிமம் அதே தனிமத்துடனோ அல்லது மற்ற தனிமங்களுடனோ நான்முக இணைதிறன் மூலம் திறந்த சங்கிலிச் சேர்மங்களாகவோ அல்லது மூடிய சங்கிலிச் சேர்மங்களாகவோ இணைவதாகும். சங்கிலித் தொடராக்கம் மூலம் மிக நீண்ட சங்கிலிகளை உடைய சேர்மங்களை உருவாக்கக்கூடிய ஒரு முக்கியமான தனிமம் கார்பனாகும். கார்பன் அணுக்கள் அவற்றுடன் மீண்டும் மீண்டும் சகப்பிணைப்பின் மூலமாக இணைந்து நீண்ட சங்கிலி, கிளை சங்கிலி மற்றும் வளையச் சங்கிலிகளை உருவாக்குகின்றது.


32.
ஹெர்ட்ஸ்
33.
விநாடி
34.
நெட்டைலைகள்
35.
RAM
36.
கட்டண மற்றும் தனி உரிமை மென்பொருள்
37.
Diphtheria Pertussis Tetanus
டிப்தீரியா; பெர்டுசிஸ், டெட்டானஸ் (மூன்று நோய் தடுப்பு)
38.
Human immunodeficiency virus
மனித நோய் எதிர்ப்பு குறைவுபடுத்தும் வைரஸ்
39.
ரோட்டா வைரஸ் என்ற நுண்ணுயிரி வாந்தி பேதியினை ஏற்படுத்துகிறது.
சுற்றுப்புறம், குடிநீர் மற்றும் உணவு ஆகியவற்றைச் சுகாதாரமாக வைத்துக் கொள்வது இதைத் தடுக்கும் முறையாகும்.
40.
கக்குவான் இருமல், காசநோய்
41.
(i) அதிர்வெண்ணின் SI அலகு ஹெர்ட்ஸ் (Hz):
(ii) அதிர்வடையும் பொருள் ஒரு நொடியில் ஏற்படுத்தும் அதிர்வுகளின் எண்ணிக்கையானது அதன் அதிர்வெண் எனப்படும்.
42.
பிரியான்கள் என்பவை நோயை உண்டாக்கவல்ல தீமையாக மாறிப்போன புரதத்துகள்கள் ஆகும். மேலும் இவை புரதங்களை மட்டுமே கொண்டுள்ள வைரஸ் துகள்களாகும், நியூக்ளிக் அமிலங்கள் காணப்படவில்லை.
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - பண்டைய நாகரிகங்கள் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Ancient . Civilisations Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - புரட்சிகளின் காலம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - The Age of Revolutions Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - State and Society in Medieval India Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Colonialism in Asia and Africa Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards