9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9ஆம் வகுப்பு கணிதம் ஆயத்தொலை வடிவியல்,முக்கோணவியல் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Maths Coordinate Geometry,Trigonometry Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு கணிதம் அளவியல்,புள்ளியியல்&நிகழ்தகவு முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Maths Mensuration,Statistics&Probability Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - செவ்வியல் உலகம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - The Classical World Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Early Tamil Society and Culture Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - தொழிற்புரட்சி முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Industrial Revolution Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - நவீன யுகத்தின் தொடக்கம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - The Beginning of the Modern AgeImportant 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.

Published on: 27/07/2019
தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்
Download Tamil Nadu 9th Standard Social Science question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
காடாக இருந்த இடங்களை வேளாண் நிலங்களாக மாற்றுதல், நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்துதல் ஆகிய பெருமைகளுக்கு உரிய சோழ அரசன் யார்?
கரிகாலன்
முதலாம் இராஜராஜன்
குலோத்துங்கன்
முதலாம் இராஜேந்திரன்
2.
தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்குச் சென்ற வியாபாரிகளையும், குதிரை வணிகர்களையும் பற்றிக் குறிப்பிடுகின்ற, இலங்கையின் பாலி மொழி வரலாற்று நூல் எது?
தீபவம்சம்
அர்த்தசாஸ்திரம்
மகாவம்சம்
இண்டிகா
3.
சங்க காலத்தில் பயன்படுத்தப்பட்ட எழுத்துமுறை யாது?
ஆங்கிலம்
தேவநாகரி
தமிழ்-பிராமி
கிரந்தம்
4.
கிரேக்கர்கள், ரோமானியர்கள், மேற்கு ஆசியர்கள் ஆகியோரை உள்ளடக்கிய மேற்கத்தியர்களை ____________ என்னும் சொல் குறிக்கிறது.
5.
_________ என்பது பிரிவு அல்லது வகை என்ற பொருளில் செய்யுள்களில் பயன்படுத்தப்பட்ட கருப்பொருள்; மேலும், இது ஒரு வாழ்விடத்தை அதன் தனித்தன்மை வாய்ந்த இயற்கைக்கூறுகளுடன் குறிப்பதாகவும் உள்ளது.
6.
மௌரியர் காலத்தில் ஆட்சிக்கலை மற்றும் பொருளாதாரம் குறித்து கௌடில்யர் எழுதிய நூல் ____________ ஆகும்.
7.
கற்கள், செப்பேடுகள், நாணயங்கள், மோதிரங்கள் ஆகியவற்றின் மீது பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் ___________ ஆகும்.
8.
சங்க காலத்தில் விவசாயம் ஒரு முக்கியமான வாழ்வாதாரமாக இருந்தது. இதற்கான காரணங்களைக் கூறு.
9.
சங்க காலம் குறித்து அறிந்து கொள்ள நாணயங்கள் எந்தளவுக்கு ஒரு முக்கியமான சான்றாக உள்ளன?
10.
தமிழகத்தின் அரசியல் சக்திகள் எந்தளவுக்குச் சங்க கால ஆட்சி அமைப்பின் மீது தாக்கம் செலுத்தின?
11.
அரிக்கமேடு
12.
புடைப்பு மணிகள் (cameo)
13.
மேய்ச்சல் வாழ்க்கை
14.
காலவரிசைக் குறிப்புகள்
15.
கல்வெட்டியல்
1.
(a)
கரிகாலன்
2.
(c)
மகாவம்சம்
3.
(c)
தமிழ்-பிராமி
4.
( )
யவனர்
5.
( )
திணை
6.
( )
அர்த்த சாஸ்திரம்
7.
( )
கல்வெட்டியல்
8.
(i) சங்ககால மக்களின் உயிர் வாழ்க்கைத் தேவைகளை நிறைவு செய்வதில் வேளாண்மையே முதலிடத்தில் இருந்தது.
(ii) நன்செய் நிலத்திலும் புன்செய் நிலத்திலும் பயிர்த்தொழில் நடைபெற்றது.
(iii) ஆற்று வடிநீர்ப் பகுதிகளிலும் குளம். ஏரி போன்ற நீர் நிலைகளால் பாசன வசதி பெற்ற பகுதிகளிலும் நெல் பயிரிடப்பட்டது.
(iv) நெல், கரும்பு, சிறுதானியங்கள் பயிரிடப்பட்டன.
9.
(i) முதன் முதலாக, சங்க காலத்தில் தான் செலாவணிக்குரிய பொருளாக நாணயங்கள் புழக்கத்திற்கு வந்தன.
(ii) சேர, சோழ, பாண்டிய அரசர்களின் நாணயங்கள், முத்திரை பொறிக்கப்பட்ட நாணயங்கள், ரோமானிய நாணயங்கள் ஆகியவை சங்க காலம் குறித்து அறிந்து கொள்ள உதவும் மற்றொரு வகையான சான்று ஆகும்.
(iii) சில சமயம் மதிப்புயர் செல்வமாகவும் நாணயங்கள் பாதுகாக்கப்பட்டன.
(iv) மேலும் பலவற்றை உருக்கி அவர்கள் அணிகலன்களும் செய்திருக்கலாம்.
10.
(i) சங்க காலத்திற்கான அடித்தளம் இரும்புக் காலத்தில் வேர் கொண்டது,
(ii) இரும்புக் காலத்தில் மக்கள் குழுக்களாக வாழ்ந்து வந்தனர். தலைவர்கள் அந்நிலப்பகுதிகளைத் தமது ஆளுகைக்குக் கீழ் கொண்டு வந்தனர்.
(iii) இவ்வாறு உருவான தலைவர்களில் இருந்தே வரலாற்றின் தொடக்கக் காலத்தில் வேந்தர்கள் தோன்றினார்கள்,
(iv) வேளிர்கள் என்போர் சங்க காலத்தின் குறுநில மன்னர்கள் ஆவர்.
மூவேந்தர்:
(i) சங்க கால ஆட்சியாளர்களில் சேர, சோழ, பாண்டியர் என்ற மூவேந்தர்களே முன்னிலையில் இருந்தனர்.
(ii) அக்காலத்தில் பெரு நகரங்களும் துறைமுகப்பட்டினங்களும் மூவேந்தரின் ஆளுகைக்கு கீழேயே இருந்தன.
சேரர்:
(i) அசோகரின் கல்வெட்டுகளில் கேரளபுத்திரர்கள் என்று குறிக்கப்பட்டுள்ள சேரர் தற்காலத்துக் கேரளத்தையும், தமிழ்நாட்டின் மேற்குப் பகுதியையும் ஆட்சி புரிந்தனர்.
(ii) தலைநகராக வஞ்சியும், துறைமுகப்பட்டினங்களாக முசிறியும் தொண்டியும் இருந்தன. (iii) சங்க இலக்கியமான பதிற்றுப்பத்து சேர அரசர்கள் குறித்தும் அவர்களுடைய நாட்டின் எல்லைகளைக் குறித்தும் பேசுகிறது.
(iv) வில்லும் அம்பும் சேரர்களின் இலச்சினையாகும்.
சோழர்:
(i) காவிரி வடிநிலப்பகுதியையும் தமிழ்நாட்டின் வடபகுதிகளையும் ஆண்ட சோழர்களுக்கு உறையூர் தலைநகராக இருந்தது.
(ii) காவிரி ஆறு வங்கக் கடலில் கலக்கும் பூம்புகார் என்ற காவிரிப்பூம்பட்டினம் அவர்களுடைய துறைமுகம் ஆகும்.
(iii) சோழ மன்னர்களின் தலைச்சிறந்தவர் கரிகால் சோழன், காவிரி ஆற்றின் நீர்பெருக்கைப் பயன்படுத்தி பாசன வசதிகள் செய்து விவசாயம் தழைக்கச் செய்த பெருமைக்குரியவர்.
(iv) சோழர்களின் இலச்சினை புலி, அவர்கள் சதுரவடிவிலான செப்பு நாணயங்களை வெளியிட்டனர். அவற்றின் முகப்பில் புலியின் உருவமும் மறுபுறத்தில் யானை மற்றும் புனிதச் சின்னங்களும் காணப்படுகின்றன.
பாண்டியர்:
(i) பாண்டியர்கள் குறித்தும் அசோகரது கல்வெட்டுகளில் குறிப்புகள் உள்ளன. மதுரையைத் தலைநகராகக் கொண்டு தென்தமிழகத்தை அவர்கள் ஆண்டனர்.
(ii) தமிழ்ச் சங்கங்களை நிறுவி ஆதரவு அளித்தவர்கள் என்று தமிழ் இலக்கியங்கள் பாண்டிய அரசர்களைப் போற்றுகின்றன.
(iii) பாண்டியர்களின் இலச்சினை மீன் ஆகும்.
வேளிர் / குடித்தலைமை:
(i) தமிழகத்தை ஆட்சிபுரிந்த மூவேந்தர்களைத் தவிர பல குறுநில மன்னர்களும் சிறிய பகுதிகளில் குடித்தலைமை ஏற்றிருந்தனர்.
(ii) குறுநில மன்னர்கள் வேளிர் என்றும் அழைக்கப்பட்டனர்
(iii) வேளிரில் கடையேழு வள்ளல்களான பாரி, காரி, ஓரி, நள்ளி, பேகன், ஆய், அதியமான் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
11.
சங்க காலத் துறைமுகம்
12.
விலையுயர்ந்த கல்லில் செய்யப்பட்ட ஆபரணம்
13.
கால்நடைகளை வளர்த்துப் பிழைக்கும் நாடடோடி மக்கள்
14.
முக்கியமான வரலாற்று நிகழ்வுகளின் தொகுப்பு
15.
கல்வெட்டுக் குறிப்புகளை ஆராய்வது
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - பண்டைய நாகரிகங்கள் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Ancient . Civilisations Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - புரட்சிகளின் காலம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - The Age of Revolutions Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - State and Society in Medieval India Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Colonialism in Asia and Africa Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards