9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9ஆம் வகுப்பு கணிதம் ஆயத்தொலை வடிவியல்,முக்கோணவியல் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Maths Coordinate Geometry,Trigonometry Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு கணிதம் அளவியல்,புள்ளியியல்&நிகழ்தகவு முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Maths Mensuration,Statistics&Probability Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - செவ்வியல் உலகம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - The Classical World Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Early Tamil Society and Culture Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - தொழிற்புரட்சி முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Industrial Revolution Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - நவீன யுகத்தின் தொடக்கம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - The Beginning of the Modern AgeImportant 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.

Published on: 08/08/2019
சமூக அறிவியல் முதல் பருவம் ஐந்து மதிப்பெண்
Download Tamil Nadu 9th Standard Social Science question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
ஏதேனும் ஐந்து சுற்றுச்சூழல் சட்டங்களையும் அவற்றின் செயல்களையும் விவரி
2.
நேரடித் தேர்தலின் நிறைகள் மற்றும் குறைகளை விவாதி
3.
வளிமண்டலத்தின் அமைப்பைப் பற்றி ஒரு பத்தியில் எழுதுக
4.
இந்தியாவில் மக்களாட்சிப் பற்றிய உங்களது கருத்து என்ன?
5.
கன்பூசியஸின் ஐந்து முக்கியமான கோட்பாடுகளை விளக்கிக்கூறு
6.
தமிழகத்தின் அரசியல் சக்திகள் எந்தளவுக்குச் சங்க கால ஆட்சி அமைப்பின் மீது தாக்கம் செலுத்தின?
7.
நிலத்தோற்றங்களின் மூன்று நிலைகளை விவரி.
8.
எரிமலைகளால் உண்டாகும் விளைவுகள் யாவை?
9.
புவியின் அகச்செயல் முறைகள் மற்றும் புறச்செயல் முறைகள் குறித்து எழுதுக.
10.
மனிதர்களின் வரலாறு பூமியின் வரலாற்றுடன் நெருங்கிய தொடர்பு உடையது – தெளிவுப்படுத்துக.
1.
| சட்டம் | செயல்பாடு |
|---|---|
| 1. தேசியப் பசுமை தீர்ப்பாய சட்டம், 2010 | சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காடுகள் மற்றும் இயற்கை வளங்களைப் பாதுகாக்கிறது. |
| 2. பல்லுயிர்மை பாதுகாப்புச் சட்டம், 2002 | பல்லுயிர்மைகளைப் பாதுகாத்தல் |
| 3. சுற்றுச்சூழல் (பாதுகாப்புச்) சட்டம், 1986 | சுற்றுச்சூழலை பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதலுக்கான அதிகாரம் வழங்குதல் |
| 4. வன (பாதுகாப்பு) சட்டம், 1980 | காடுகளை அழித்தலை தடை செய்தல் மற்றும் காடுகள் அல்லாத பகுதிகளில் மரம் வளர்த்தலை ஊக்கப்படுத்துதல். |
| 5. நீர் (நீர் பாதுகாப்பு மற்றும் மாசுபடுத்துதல் தடுப்பு) சட்டம், 1974 | அனைத்து வகையான ஆறுகள், ஏரிகள், குளங்களை மீட்டுப் பராமரித்தல். |
| 6. வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டம், 1972 | காட்டு விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு பாதுகாப்பு வழங்குகிறது. |
2.
நேரடித் தேர்தல்:
வாக்காளர்கள் தங்களது பிரதிநிதிகளைத் தாங்களே நேரடியாக தேர்தலில் வாக்களித்து தேர்ந்தெடுக்கும் முறை நேரடித்தேர்தல் எனப்படுகிறது.
நிறைகள்:
1. வாக்காளர்கள் தங்களது பிரதிநிதிகளை நேரடியாகத் தேர்ந்தெடுப்பதால். நேரடித் தேர்தல் முறையான
2. வலுவான மக்களாட்சி கொண்டதாகக் கருதப்படுகிறது.
3. அரசாங்க நடவடிக்கைகள் பற்றிய விழிப்புணர்வும், தகுதியான பிரதிநீதிகளைத் தேர்ந்தெடுக்கவும் மக்களுக்குக் கற்பிக்கிறது.
4. மக்கள் அரசியலில் முக்கிய பங்கு வகிக்கவும். தீவிர அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவும் ஊக்கமளித்துத் தூண்டுகிறது.
குறைகள்:
1. நேரடித் தேர்தல் முறை அதிக செலவு கொண்டதாக உள்ளது.
2. எழுத்தறிவற்ற வாக்காளர்கள். பொய்யான பரப்புரைகளால் தவறாக வழி நடத்தப்படுகிறார்கள்.
3. சில நேரங்களில் சாதி, மதம் மற்றும் இன்ன பிற பிரிவுகளை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படும்
4. பிரச்சாரங்கள் மற்றும் பொய்யான பரப்புரைகளால் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள்.
5. நேரடித் தேர்தல் நடத்துவது மிகப் பெரும் பணியாக இருப்பதால். ஒவ்வொரு வாக்கு மையங்களிலும் சுதந்திரமான, நியாயமான தேர்தல் முறையை உறுதி செய்வது என்பது தேர்தல் ஆணையத்திற்கு மிகப்பெரும் சவாலாக உள்ளது.
6. சில அரசியல் கட்சி வேட்பாளர்கள் வாக்காளர்கள் மீது பணம், பொருள் அல்லது பணிகள் மூலமாக தங்களது செல்வாக்கைச் செலுத்துவது என்பது மற்றொரு சவாலாகும்.
7. தேர்தல் பரப்புரைகளின் போது சில நேரங்களில் வன்முறைகள், பதற்றங்கள், சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்பட்டு மக்களின் அன்றாட வாழ்க்கை முறை பாதிக்கப்படுகிறது.
3.
வளிமண்டல அடுக்குகள்:
i) வளிமண்டலம் புவியின் அருகாமைப் பகுதியில் அடர்த்தியாகவும் உயரே செல்லச் செல்ல அடர்த்தி குறைந்து இறுதியில் அண்ட வெளியோடு கலந்து விடுகிறது.
(ii) இவ்வளிமண்டலம் ஐந்து அடுக்குகளாகக் காணப்படுகின்றது. அவை வளிமண்டல கீழடுக்கு, மீள் அடுக்கு, இடையடுக்கு, வெப்ப அடுக்கு மற்றும் வெளியடுக்கு போன்றவை ஆகும்.
அ) வளிமண்டல கீழடுக்கு:
(i) இது வளிமண்டலத்தின் கீழடுக்காகும்.
(ii) இவ்வடுக்கு துருவப்பகுதியில் 8 கி.மீ. உயர அளவிலும், நிலநடுக்கோட்டுப் பகுதியில் 18 கி.மீ உயர வரையிலும் காணப்படுகிறது.
(iii) இவ்வடுக்கில் உயரே செல்லச் செல்ல வெப்பநிலை குறையும்.
(iv) இவ்வடுக்கில்தான் அனைத்து வானிலை நிகழ்வுகளும் நடைபெறுகின்றன.
ஆ) மீள்அடுக்கு:
(i) கீழடுக்கிற்கு மேல், மீள் அடுக்கு அமைந்துள்ளது.
(ii) இது வளிமண்டலத்தில் 50 கி.மீ. வரை பரவியுள்ளள்ளது.
(iii) இங்கு ஓசோன் மூலக்கூறுகள் அதிகம் உள்ளதால், இது 'ஓசோனோஸ்பியர்' என்று அழைக்கப்படுகிறது.
(iv) இங்கு உயரம் அதிகரித்துச் செல்ல செல்ல வெப்பநிலை அதிகரிக்கின்றது. இந்த அடுக்கு ஜெட்விமானங்கள் பறப்பதற்கு ஏதுவாக உள்ளது.
இ) இடையடுக்கு:
(i) இடையடுக்கு (மீசோஸ்பியர்) என்பது வளிமண்டலத்தில் 50 கி.மீ முதல் 80 கி.மீ உயரம்வரை காணப்படுகிறது. இங்கு உயரம் அதிகரித்துச் செல்ல செல்ல வெப்பநிலை கூடுகின்றது
ii) புவியிலிருந்து பெறப்படும் வானொலி அலைகள் இவ்வடுக்கிலிருந்து தான் புவிக்கு திருப்பி அனுப்பப்படுகின்றன.
(iii) புவியை நோக்கி வரும் விண்கற்கள் இவ்வடுக்கில் நுழைந்ததும் எரிவிக்கப்படுகின்றன.
ஈ) வெப்ப அடுக்கு:
(i) இடையடுக்கிற்கு மேல் காணப்படும் அடுக்கு, வெப்ப அடுக்கு ஆகும். இது சுமார் 600 கி.மீ உயரம் வரை பரவிக் காணப்படுகிறது.
(ii) வெப்ப அடுக்கின் கீழ்பகுதியில் வாயுக்களின் அளவு சீராக காணப்படுவதால் இது 'ஹோமோஸ்பியர் (Homosphere) என அழைக்கப்படுகின்றது.
(iii) ஆனால் வெப்ப அடுக்கின் மேல்பகுதியில் உள்ள வாயுக்களின் அளவு சீரற்று காணப்படுவதால் அப்பகுதி 'ஹெட்ரோஸ்பியர்'(heterosphere) என அழைக்கப்படுகின்றது.
(iv) இவ்வடுக்கில் உயரம் அதிகரித்துச் செல்ல செல்ல வெப்பநிலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
உ) வெளியடுக்கு:
(i) வளிமண்டல அடுக்குகளின் மேல் அடுக்கு வெளிஅடுக்கு என்று அழைக்கப்படுகிறது.
(ii) இங்கு வாயுக்கள் மிகவும் குறைந்து காணப்படுகிறது. இவ்வடுக்கின் மேல்பகுதி படிப்படியாக அண்ட வெளியோடு கலந்து விடுகிறது.
(iii) அரோரா ஆஸ்ட்ரியாலிஸ் (Aurora Australis) மற்றும் அரோரா பொரியாலிஸ் (Aurora Borealis) என்ற விநோத ஒளிநிகழ்வுகள் இவ்வடுக்கில் நிகழ்கின்றன.
4.
இந்தியாவில் மக்களாட்சி:
1. இந்தியா நாடாளுமன்ற மக்களாட்சி முறையைக் கொண்டுள்ள நாடாகும்.
2. இந்தியாவின் நாடாளுமன்றம் தேர்ந்தெடுக்கப்ட்ட மக்கள் பிரதிநிதிகளை உள்ளடக்கியது.
3. இது நாட்டிற்குத் தேவையான சட்டங்களை உருவாக்குகிறது.
4. கொள்கை முடிவெடுப்பதில் மக்கள் பங்கு பெறுவதும். ஒப்புதல் அளிப்பதும் இந்தியாவிலுள்ள நாடாளுமன்ற மக்களாட்சி அரசாங்கத்தின் இரு முக்கியக் கூறுகளாகும்.
5. உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடு இந்தியாவாகும்.
6. இந்தியாவில் மக்களாட்சி ஐந்து முக்கியக் கெள்கைகளின் அடிப்படையில் இயங்குகிறது.
7. அவை இறையாண்மை, சமதர்மம், மதச் சார்பின்மை, மக்களாட்சி. மற்றும் குடியரசு.
8. 18 வயது நிரம்பிய ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றிருக்கிறான்.
9. சாதி, சமயம், இனம், பால், கல்வித்தகுதி என எவ்வித பாரபட்சமும் இன்றி சமமான வாக்குரிமையைப் பெற்றுள்ளனர்.
5.
கன்பூசியனிசத்தின் ஐந்து முக்கியக் கொள்கைகள்
1. மனிதத்தன்மை
2. நேர்மை
3. நன்னடத்தை
4. மெய்யறிவு
5. நம்பகத்தன்மை
(i) மெய்யறிவு குடும்பத்திலிருந்து தான் வளரும் என்றார் கன்பூசியஸ்.
(ii) ஓர் ஒழுங்கான குடும்பத்தின் கட்டுப்பாடு மிக்க தனிநபர் தான் சமூகத்தின் அடித்தளம் என்கிறார். அவரைப் பொறுத்தவரை மேன்மையான மனிதர் என்பவர் வெறும் அறிவாளியாகவோ, அறிஞராகவோ மட்டும் இல்லாமல், முன்மாதிரியான நடத்தை கொண்டவராகவும் இருக்க வேண்டும்.
(iii) கன்பூசியசின் மேன்மையான மனிதர் புத்திசாலித்தனம், துணிச்சல், நல்லெண்ணம் ஆகிய மூன்று பண்புகளைக் கொண்டவராவார்.
(iv) குழந்தைகள் பெற்றோருக்கும், மனைவி கணவனுக்கும் கீழ்படிய வேண்டும் என்று கன்பூசியஸ் வலியுறுத்தினாலும், "உத்தரவு தவறு என்றால் ஒரு மகன் தனது தந்தையை எதிர்க்க வேண்டும், دو ஓர் அமைச்சர் அரசரை எதிர்க்க வேண்டும்' என்று தெளிவாக கூறினார்.
(v) 'ஒரு அரசுக்கு மூன்று விசயங்கள் அவசியமானவை, நாட்டில் போதுமான உணவு, இராணுவத் தளவாடங்கள் மற்றும் மக்களுக்குத் தம் ஆட்சியாளர் மீது நம்பிக்கை இருக்க வேண்டும்” என்றார்.
6.
(i) சங்க காலத்திற்கான அடித்தளம் இரும்புக் காலத்தில் வேர் கொண்டது,
(ii) இரும்புக் காலத்தில் மக்கள் குழுக்களாக வாழ்ந்து வந்தனர். தலைவர்கள் அந்நிலப்பகுதிகளைத் தமது ஆளுகைக்குக் கீழ் கொண்டு வந்தனர்.
(iii) இவ்வாறு உருவான தலைவர்களில் இருந்தே வரலாற்றின் தொடக்கக் காலத்தில் வேந்தர்கள் தோன்றினார்கள்,
(iv) வேளிர்கள் என்போர் சங்க காலத்தின் குறுநில மன்னர்கள் ஆவர்.
மூவேந்தர்:
(i) சங்க கால ஆட்சியாளர்களில் சேர, சோழ, பாண்டியர் என்ற மூவேந்தர்களே முன்னிலையில் இருந்தனர்.
(ii) அக்காலத்தில் பெரு நகரங்களும் துறைமுகப்பட்டினங்களும் மூவேந்தரின் ஆளுகைக்கு கீழேயே இருந்தன.
சேரர்:
(i) அசோகரின் கல்வெட்டுகளில் கேரளபுத்திரர்கள் என்று குறிக்கப்பட்டுள்ள சேரர் தற்காலத்துக் கேரளத்தையும், தமிழ்நாட்டின் மேற்குப் பகுதியையும் ஆட்சி புரிந்தனர்.
(ii) தலைநகராக வஞ்சியும், துறைமுகப்பட்டினங்களாக முசிறியும் தொண்டியும் இருந்தன. (iii) சங்க இலக்கியமான பதிற்றுப்பத்து சேர அரசர்கள் குறித்தும் அவர்களுடைய நாட்டின் எல்லைகளைக் குறித்தும் பேசுகிறது.
(iv) வில்லும் அம்பும் சேரர்களின் இலச்சினையாகும்.
சோழர்:
(i) காவிரி வடிநிலப்பகுதியையும் தமிழ்நாட்டின் வடபகுதிகளையும் ஆண்ட சோழர்களுக்கு உறையூர் தலைநகராக இருந்தது.
(ii) காவிரி ஆறு வங்கக் கடலில் கலக்கும் பூம்புகார் என்ற காவிரிப்பூம்பட்டினம் அவர்களுடைய துறைமுகம் ஆகும்.
(iii) சோழ மன்னர்களின் தலைச்சிறந்தவர் கரிகால் சோழன், காவிரி ஆற்றின் நீர்பெருக்கைப் பயன்படுத்தி பாசன வசதிகள் செய்து விவசாயம் தழைக்கச் செய்த பெருமைக்குரியவர்.
(iv) சோழர்களின் இலச்சினை புலி, அவர்கள் சதுரவடிவிலான செப்பு நாணயங்களை வெளியிட்டனர். அவற்றின் முகப்பில் புலியின் உருவமும் மறுபுறத்தில் யானை மற்றும் புனிதச் சின்னங்களும் காணப்படுகின்றன.
பாண்டியர்:
(i) பாண்டியர்கள் குறித்தும் அசோகரது கல்வெட்டுகளில் குறிப்புகள் உள்ளன. மதுரையைத் தலைநகராகக் கொண்டு தென்தமிழகத்தை அவர்கள் ஆண்டனர்.
(ii) தமிழ்ச் சங்கங்களை நிறுவி ஆதரவு அளித்தவர்கள் என்று தமிழ் இலக்கியங்கள் பாண்டிய அரசர்களைப் போற்றுகின்றன.
(iii) பாண்டியர்களின் இலச்சினை மீன் ஆகும்.
வேளிர் / குடித்தலைமை:
(i) தமிழகத்தை ஆட்சிபுரிந்த மூவேந்தர்களைத் தவிர பல குறுநில மன்னர்களும் சிறிய பகுதிகளில் குடித்தலைமை ஏற்றிருந்தனர்.
(ii) குறுநில மன்னர்கள் வேளிர் என்றும் அழைக்கப்பட்டனர்
(iii) வேளிரில் கடையேழு வள்ளல்களான பாரி, காரி, ஓரி, நள்ளி, பேகன், ஆய், அதியமான் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
7.
முக்கிய நிலத்தோற்றங்களில் முதல் நிலை நிலத்தோற்றம் கண்டங்களும் கடல்களும் ஆகும்.
இரண்டாம் நிலை நிலத்தோற்றம்: கண்டங்களிலும் கடல்களிலும் காணப்படும் மலைகள், பீடபூமிகள், சமவெளிகள், குறுகிய நிலத்தோற்றங்கள் டெல்டா, பனியாறு, குடாக்கள், மணல் மேடுகள், கடற்கரை, பள்ளத்தாக்கு, சரக், காளான் பாறை, சுண்ணம் பாறை, குகை போன்றவை.
8.
எரிமலையின் விளைவுகள்.
அ) நன்மைகள்:
(i) எரிமலைகளிலிருந்து வெளிப்படும் பொருட்கள் மண்ணை வளமிக்கதாக்குகிறது.
(ii) அதனால் வேளாண் தொழில் மேம்படுகிறது.
(iii) எரிமலைகள் உள்ள பகுதிகள் புவி வெப்ப சக்தியை (Geothreniral energy) பயன்படுத்திக் கொள்ள உதவுகிறது.
(iv) உறங்கும் எரிமலையும், செயல்படும் எரிமலையும் உலகில் சிறந்த சுற்றுலாத் தளங்கள் ஆகும்.
(v) எரிமலைகளிலிருந்து வெளிவரும் பொருட்கள் கட்டிடத் தொழிலுக்குப் பயன்படுகிறது.
ஆ) தீமைகள்:
(i) எரிமலை வெடிப்பினால் புவி அதிர்ச்சி, திடீர் வெள்ளம், சேறு வழிதல் மற்றும் பாறை சரிதல் போன்றவை நிகழ்கின்றன.
(ii) வெகுதூரம் பயணிக்கும் பாறைக்குழம்பானது தன் பாதையில் உள்ள அனைத்தையும் எரித்தும், புதைத்தும் சேதப்படுத்துகிறது.
(iii) அதிக அளவில் வெளிப்படும் தூசு மற்றும் சாம்பல் நமக்கு எரிச்சலையும் மூச்சு விடுவதில் சிரமத்தையும் உண்டாக்குகிறது.
(iv) எரிமலை வெடிப்பு அதன் சுற்றுப்புறப் பகுதிகளின் வானிலையில் மாற்றத்தை ஏற்படுத்துவதுடன் போக்குவரத்திற்கும் இடையூறை உண்டாக்குகின்றன.
9.
புவியின் மேற்பரப்பில் காணப்படும் நிலத்தோற்றங்களை உருவாக்குவதிலும், மறு உருவாக்கம் செய்வதிலும் இரண்டு முதன்மைச் செயல்கள் முக்கியப் பங்காற்றுகின்றன. அவை, அகச் செயல்முறைகள் மற்றும் புறச்செயல்முறைகள் ஆகும்.
அ) அகச்செயல்முறைகள்:
(i) புவியின் உட்பகுதியிலிருந்து புவியின் மேற்பரப்பை நோக்கிச் செயல்படும் விசைகளே 'அகச்செயல் முறைகள்' எனப்படுகின்றன.
(ii) இவ்விசைகள் புவியின் நிலப்பரப்பில் பல்வேறு நிலத்தோற்றங்களை உருவாக்குகின்றன.
(iii) புவியின் வெகு ஆழத்தில் உருவாகும் வெப்பத்தினால் புவிமேலோட்டின் கீழ் காணப்படும் பொருள்கள் வெளித்தள்ளப்படுகின்றன. இச்செயல்பாட்டில் புவியின் உள்ளே உள்ள கதிர்வீச்சு முக்கியப் பங்காற்றுகின்றது.
ஆ) புவிப்புறச் செயல்முறைகள்
(i) இச்செயல் முறைகள் புவியில் உள்ள பொருள்களின் மீது அழுத்தத்தையும், மறு உருவாக்கத்தையும் ஏற்படுத்தி புவிமேற்பரப்பில் உள்ள பொருள்களின் மீது மாற்றத்தை உண்டாக்குகின்றன. இவை 'புவிப்புறச் செயல்முறைகள்' எனப்படுகின்றன.
(ii) புவியின் மேற்பரப்பில் செயல்படும் இயற்கைக் காரணிகளான ஆறுகள், பனியாறுகள், காற்று, அலைகள் போன்ற விசைகள் 'புவிப்புறச் செயல்முறை' காரணிகள் எனப்படுகின்றன. இக்காரணிகள் நிலத்தின் மேற்பரப்பினை அரித்து தாழ்நிலச் சமவெளிகளில் படிய வைத்து அவற்றை உயர்த்துகின்றன.
10.
1. மனிதர்களின் வரலாற்றைப் புவியின் வரலாற்றிலிருந்து பிரிக்க முடியாது.
2. புவியின் மேலடுக்குகளில் வரலாற்றுக் காலக்கட்டங்கள் குறித்த நிலவியல், தொல்லியல், உயிரியல் பதிவுகள் பொதிந்து கிடக்கின்றன.
3. புவி மற்றும் பல்வேறு உயிரினங்களின் வரலாற்றை அறிவதற்கு இச்சான்றுகள் மிக முக்கியமானவயாகும்.
4. இவ்வடுக்குகளில் மனித மூதாதையர்களின் எலும்புகளின் புதை படிவங்கள் புதைந்துள்ளன.
5. தொல்மானுடவியல் அறிஞர்களும், தொல்லியல் அறிஞர்களும் புவியின் மண் மற்றும் பாறை அடுக்குகளை அகழ்ந்து மனித மூதாதையர்கள் குறித்த சான்றுகளைச் சேகரிக்கின்றார்கள்.
6. மனிதர்களின் பரிணாமம். தொல்பழங்காலம் ஆகியவற்றின் பல்வேறு கால கட்டங்களை அறிய இந்தப் புதைபடிவங்கள் மற்றும் மண்ணடுக்குகளின் காலம் அறிவியல் பூர்வமாக கணிக்கப்படுகிறது.
7. இச்சான்றுகள் வழியாக மனித வரலாற்றின் பரிணாம வளர்ச்சி நிலைகள் மற்றும் அவற்றின் காலகட்டம் ஆகியவற்றை புரிந்து கொள்ள முயல்கின்றனர்.
8.தொல்லியல் (Archaeology): தொல்பொருள்களை ஆராய்ந்து விளக்கமளிப்பதன் வழியாக மனிதர்களின் கடந்த காலம் குறித்து ஆராயும் இயல் ஆகும்.
9.தொல்மானுடவியல் (Palaconnthropology): மனிதர்களின் மூதாதையர்களின் உடலமைப்பு மற்றும் அவர்களது பரிணாம வளர்ச்சி குறித்து ஆய்ந்து அறிந்து கொள்ளும் இயல் ஆகும்.
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - பண்டைய நாகரிகங்கள் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Ancient . Civilisations Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - புரட்சிகளின் காலம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - The Age of Revolutions Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - State and Society in Medieval India Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Colonialism in Asia and Africa Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards