9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9ஆம் வகுப்பு கணிதம் ஆயத்தொலை வடிவியல்,முக்கோணவியல் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Maths Coordinate Geometry,Trigonometry Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு கணிதம் அளவியல்,புள்ளியியல்&நிகழ்தகவு முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Maths Mensuration,Statistics&Probability Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - செவ்வியல் உலகம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - The Classical World Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Early Tamil Society and Culture Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - தொழிற்புரட்சி முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Industrial Revolution Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - நவீன யுகத்தின் தொடக்கம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - The Beginning of the Modern AgeImportant 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.

Published on: 09/01/2019
9-Std Social Science SA Test
Download Tamil Nadu 9th Standard Social Science question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
மக்கள்தொகை பற்றி புள்ளியியல் விவரக் கல்வி ____________ஆகும்.
மக்கள்தொகையியல்
புற வடிவமைப்பியல்
சொல்பிறப்பியல்
நிலநடுக்கவரைவியல்
2.
'விழு! மூடிக்கொள்! பிடித்துகொள்!' என்பது எதற்கான ஒத்திகை?
தீ
நிலநடுக்கம்
சுனாமி
கலவரம்
3.
நிலவரைபடத்தில் உறுதியான கருத்தை வெளிப்படுத்துவதற்குப் பயன்படும் நிரந்தர குறியீடுகள்
முறைக்குறியீடுகள்
இணைப்பாய புள்ளிகள்
வலைப்பின்னல் அமைப்பு
திசைகள்
4.
2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இந்தியாவின் மக்கள் தொகை
121 கோடி
221 கோடி
102 கோடி
100 கோடி
5.
இவற்றுள் உணவல்லாத பயிர் எது?
கம்பு
கேழ்வரகு
சோளம்
தென்னை
6.
இந்தியாவுடன் வணிக உறவை நிறுவிக் கொண்ட முதல் ஐரோப்பிய நாட்டினர் ______________.
போர்த்துகீசியர்
பிரஞ்சுக்காரர்
டேனிஷார்
டச்சுக்காரர்
7.
1985 ஆம் ஆண்டு திட்டக் குழுவினால் நிறுவப்பட்ட குழு எது?
பல்வந்ராய் மேத்தா குழு
அசோக் மேத்தா குழு
GVK ராவ் மேத்தா குழு
LM சிங்வி மேத்தா குழு
8.
எக்கண்டுபிடிப்பு பருத்தியிலிருந்து கொட்டைகளைப் பிரித்தது
உருட்டாலைகள்
பஞ்சுக் கடைசல் இயந்திரம்
ஸ்பின்னிங் மியூல்
இயந்திர நூற்புக் கருவி
9.
கீழ்க் காண்பனவற்றில் எது ஹே மார்க்கெட் நிகழ்ச்சியின் நினைவு நாளாகக் கடைபிடிக்கப்படுகிறது?
சுதந்திர தினம்
உழவர் தினம்
உழைப்பாளர் தினம்
தியாகிகள் தினம்
10.
________ இல் ஆங்கிலேயரின் தோல்வி பிரான்சிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான நட்புக்கு வழிவகுத்தது.
டிரென்டன்
சாரடோகா
பென்சில் வேனியா
நியூயார்க்
11.
ஆங்கிலேயரின் முக்கிய வருவாயாக திகழ்ந்தது __________ ஆகும்.
12.
சோழர் காலத்தின் போது கிராம சபை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்த இரகசிய தேர்தல் முறை _______________ என்றழைக்கப்பட்டது.
13.
_____________, _____________ ஆகியவை ஒற்றை ஆட்சி முறைக்கான உதாரணங்களாகும்.
14.
விரைவாகவும் குறைந்த செலவிலும் எஃகை உற்பத்தி செய்யும் முறையை ________ கண்டுபிடித்தார்.
15.
பதினாறாம் லூயி பிரான்சை விட்டு தப்பியோட முயன்றபோது _______ நகரில் அவர் தனது குடும்பத்துடன் கைது செய்யப்பட்டார்.
16.
நிலநடுக்கம் ஏற்படும் போது நீங்கள் ஒருவேளை எந்த மரசாமான்களும் இல்லாத அறையில் இருந்தால் எவ்வாறு உங்களைத் தற்காத்துக் கொள்வீர்கள்?
17.
எப்பொழுதெல்லாம் மக்கள் தொகை வளர்ச்சி குறையும்?
18.
பெருநகரம் மற்றும் மிகப்பெருநகரம்.
19.
மிகச் குறைவான எண்ணிக்கையில் வெளி இடப்பெயர்வைக் கொண்ட தமிழ்நாட்டிலிலுள்ள நான்கு மாவட்டங்களின் பெயர்களைக் கூறுக.
20.
வான்வழி புகைப்படங்கள் மற்றும் செயற்கைக்கோள் பதிமங்கள்
21.
நிலஅளவை செய்யப் பயன்படும் கருவிகளைக் கூறுக.
22.
நெல் உற்பத்தித் திறனை 1965 முதல் 2015 வரை பட்டியலிடுக.
23.
காலனியாதிக்கம், ஏகாதிபத்தியம் - இரண்டையும் வேறுபடுத்திக் காட்டவும்.
24.
ஒற்றையாட்சி முறை
25.
பிரெஞ்சு புரட்சியில் லஃபாயட்டின் பங்கினை எழுதுக
26.
குவேக்கர் பற்றி நீவிர் அறிவதென்ன?
27.
தீவிபத்தின்போது என்ன செய்யவேண்டும் என மூன்று வாக்கியங்களில் எழுது .
28.
கிராமக் குடியிருப்பு வகைகளைப் படத்துடன் விளக்குக.
29.
2015 ஆம் ஆண்டு தமிழ்நாட்டிலிருந்து இடம்பெயர்ந்தவர்களின் கல்வித் தகுதியை ஆய்வு செய்க.
30.
வேளாண் நீர் ஆதாரம் பற்றி ஆய்வு செய்க.
31.
இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியின் பொருளாதாரத் தாக்கத்தை விவாதிக்கவும்.
32.
ஒற்றையாட்சி முறையின் நிறைகளை விவரி.
33.
‘பிரதிநிதித்துவம் இல்லாமல் வரி விதிப்பு இல்லை.’ இக்கூற்று அமெரிக்க சுதந்திரப்போருக்கு எவ்வாறு வழிவகுத்தது என்பதை விளக்குக.
34.
செயற்கைக்கோள் இல்லாத உலகத்தை உன்னால் கற்பனை செய்ய இயலுமா?
35.
நகரங்களை நோக்கிய இடப்பெடப்பெயர்வு குடிசை பகுதிகளை உருவாகக் காரணமாகிறது- நியாயப்படுத்துக.
36.
பேரிடர் மேலாண்மை சுழற்சியின் நான்கு நிலைகள் யாவை?
37.
கிராம ஊராட்சிகளின் முக்கிய பணிகள் யாவை?
38.
தொழிற்புரட்சியின் போது இங்கிலாந்தில் தொழிலார்களின் வாழ்விடங்களில் நிலை எவ்வாறு இருந்தன?
39.
கூட்டாட்சி முறையின் நிறைகள் யாவை?
40.
நிலவரைபடப் புத்தகத்தைக் (Atlas) கொண்டு தமிழ்நாடு புறவரி நிலவரைபடத்தில் கீழ்க்காண்பவைகளைக் குறிக்கவும்.
அ) சென்னை நகரின் அட்ச, தீர்க்க பரவல்.
ஆ)10°வ, மற்றும் 78°கி அட்சதீர்க்க பரவலில் அமைந்துள்ள நகரம்.
இ)11°வ, மற்றும் 76°கி அட்சதீர்க்க பரவலில் அமைந்துள்ள நகரம்.
ஈ) கன்னியாகுமரியின் அட்சதீர்க்க பரவல்.
41.
கொடுக்கப்பட்டுள்ள தமிழ்நாடு வரைபடத்தில் குறிக்கவும்.
1. ஒரு பெருநகரம்.
2. சதுர கி.மீ.-ரில் 7857 மக்கள் வாழும் ஒரு மாவட்டம்.
3. மன்னார் வளைகுடா.
4.பாக் நீர்ச் சந்தி.
1.
(a)
மக்கள்தொகையியல்
2.
(b)
நிலநடுக்கம்
3.
(a)
முறைக்குறியீடுகள்
4.
(a)
121 கோடி
5.
(d)
தென்னை
6.
(a)
போர்த்துகீசியர்
7.
(c)
GVK ராவ் மேத்தா குழு
8.
(b)
பஞ்சுக் கடைசல் இயந்திரம்
9.
(c)
உழைப்பாளர் தினம்
10.
(b)
சாரடோகா
11.
( )
நிலவரி
12.
( )
குடவோலைமுறை
13.
( )
ஜப்பான், பிரான்ஸ்
14.
( )
ஹென்றி பெஸ்ஸிமர்
15.
( )
வெர்னே
16.
அறையில் மூலையில் குத்துகாலிட்டு அமர்ந்து இரு கைகளாலும் தலையை மூடிக் கொள்ள வேண்டும்.
17.
பஞ்சம், நிலச்சரிவு. புவி அதிர்ச்சி. ஆழிப்பேரலை போன்ற இயற்கைச் சீற்றங்கள் மற்றும் மனிதனால் ஏற்படும் அழிவுகளான போர் போன்ற காரணங்களால் மக்கள் தொகை வளர்ச்சி குறைகின்றது.
18.
பெருநகரம்: பெருநகரங்களில் நகரங்களைவிடப் பெரியதாகவும், மிக அதிகப் பொருளாதார நடவெடிக்கைகளைக் கொண்டதாகவும் இருக்கும்.
இஃ து ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்டிருக்கும். (உ.ம்) கோயம்புத்தூர்
மாநகரம் பத்து லட்சத்திலிலிருந்து 50 லட்சம் வரையிலான மக்கள் தொகையைக் கொண்டிருக்கும். (உ.ம்) மதுரை மாநகரம்.
மிகப் பெருநகரம்: மிகப் பெரு நகரம் 50 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்டிருக்கும். (உ.ம்) சென்னை மாநகரம்.
19.
1. கடலூர்
2. வேலூர்
3. திண்டுக்கல்
4. திருவண்ணாமலை
5. கரூர்
6. நீலகிரி
7. தருமபுரி
8. சேலம்
9. நாமக்கல்
10. கிருஷ்ணகிரி
20.
வான்வழி புகைப்படம்: வான்வழி புகைப்படம் எடுத்தல் என்பது குறைந்த உயரத்தில் பறக்கும் பறவைகள், பலூன்கள், ஹெலிகாப்டர்கள், விமானங்கள் மற்றும் ட்ரோன்களில் படக் கருவிகள் பொருத்தப்பட்டு எடுக்கப்பட்ட புகைப் படங்களின் மூலம் இடங்கள் அல்லது பொருள்கள் அல்லது நிகழ்வுகள் பற்றிய தகவலை அறியும் முறையைக் குறிக்கிறது. வான்வழி புகைப்படங்கள் ஒரு நிலையான உயரத்திலிருந்து 10 - 30 வினாடிகள் கால இடைவெளியில் தொடர்ந்து எடுக்கப்படுகின்றன. ஒவ்வொரு படத்திற்கும் முந்தைய படத்துடன் சிறிது மேற் பொருத்திய பகுதி இருக்கும். இணைந்த பகுதிகளை நீக்கி அனைத்து புகைப்படங்களின் இணை தோற்றம் செய்வதன் மூலம் ஆய்வு பகுதியக முப்பரிமாண படத்தைத் தயாரிக்க முடியும்.
21.
(i) சங்கிலி (Chain)
(ii) பட்டகக் காந்தவட்டை (Prismatic compass)
(iii) சமதள மேசை (Plane Table)
(iv) LDLLLDI60fl (Dumpy level)
(v) HL860 LDLLID (Abney level)
(vi) சாய்வுமானி (Clinometer)
(vii) தியோடலைட் (Theodalite)
(viii) மொத்த ஆய்வு நிலையம் (Total station)
(ix) உலகளாவிய பயணச் செயற்கைக்கோள் ஒழுங்குமுறை (GNSS) ஆகியவை ஆகும்.
22.
| ஆண்டு | நெல் உற்பத்தித் திறன் |
| 1965-66 | 1409 கிலோ |
| 1975-76 | 2029 கிலோ |
| 1985-86 | 2372 கிலோ |
| 2014-15 | 4429 கிலோ |
23.
| S.No | காலனியாதிக்கம் | ஏகாதிபத்தியம் |
| 1. | காலனி என்னும் சொல் 'கலோனஸ்’ என்னும் லத்தீன் வேர்ச்சொல்லிலிருந்து பிறந்ததாகும். இதன் பொருள் 'விவசாயி' என்பதாகும். |
இம்பீரியம் என்னும் லத்தீன் சொல்லிலிருந்து பிறந்தது. ஆதிக்கம் செய்தல் என்று பொருள். |
| 2. | காலனியாதிக்கம் என்பது மக்களை ஒரு புதிய இடத்தில் குடியேற்றுவது. குடியேறியவர்கள் நிரந்தரமாக தங்கி வாழ்வர். அங்கேயே |
ஒரு நாடு குடியேறுதல் மூலமாகவோ, இறையாண்மை செலுத்துதல் மூலமாகவோ, மறைமுகமாகக் கட்டுப்படுத்தும் வழிகளிலோ வேறொரு நாட்டின் மீது அதிகாரம் செலுத்துவதைக் குறிக்கும். |
24.
1. ஒற்றையாட்சி முறை என்பது இறையாண்மை மிக்க ஓர் அரசு ஒரே நிறுவனமாக இருந்து ஆட்சி செய்வதாகும்.
2. ஒற்றையாட்சி முறையில் அனைத்து அதிகாரங்களும் ஒரே இடத்தில் மையப் படுத்தப்படுகின்றன.
3. இது சிறு நாடுகளுக்குப் பொருத்தமானது.
4. ஒற்றையாட்சி முறை குறைந்த செலவுடையது.
5. ஒற்றையாட்சி முறை உடனடியாக முடிவெடுத்துத் துரிதமாகச் செயல்படுகிறது.
6. அரசியலமைப்பு திருத்தங்களை எளிதில் மேற்கொள்ள இயலும்.
25.
(i) லஃபாயட் பிரெஞ்சுப் புரட்சியின்போது பிரெஞ்சு தேசியப் பாதுகாவலர்கள் என்ற படைப்பிரிவுக்குத் தலைமையேற்றார்.
(ii) ஜெபர்சனின் உதவியோடு இவர் 'மனிதன் மற்றும் குடிமகனின் உரிமைகள் பற்றிய பிரகடனம்' என்பதை எழுதினார். இதைத் தேசியச் சட்டமன்றம் 1789 ஆகஸ்ட் 27இல் ஏற்றது.
26.
(i) குவேக்கர்கள் இங்கிலாந்தில் ஜார்ஜ் பாக்ஸ் என்பவரால் நிறுவப்பட்ட நண்பர்கள் குழாம் என்னும் கிறித்துவ மதக்குழுவின் உறுப்பினர் ஆவர்.
(ii) புனித ஆவிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்த இவர்கள் சடங்குச் சம்பிரதாயங்களையும், சமயக் குருமார் அமைப்பையும் எதிர்த்தனர்.
(iii) இவர்கள் போருக்கு எதிராகவும், அமைதிக்கு ஆதரவாகவும் மேற்கொண்ட பணிகளுக்காக நற்பெயர் பெற்றவர்களாவர்.
27.
1. கட்டடத்தை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும்.
2. மற்றவர்களையும் உடனடியாக வெளியேறச் செய்யவேண்டும்.
3. தீ விபத்தின்போது ஓடாமல் நடந்து வெளியேறும் பகுதிக்குச் செல்ல வேண்டும்.
4. மின்தூக்கிகள் பழுதடைந்திருக்கலாம். எனவே அதைப் பயன்படுத்தக் கூடாது.
5. வீடு, பள்ளி, அடிக்கடி சென்று வருமிடம் போன்றவற்றிலிருந்து வெளியேறும் வழியைத் திட்டமிடுவேன்.
6. ஆழிப்பேரலை தொடர்பான எச்சரிக்கைத் தகவல்களை அறிந்துகொள்ள வானொலி அல்லது தொலைக்காட்சியைக் காண்பேன்.
7. ஆழிப்பேரலையைப் பற்றி குடும்பத்துடன் கலந்துரையாடுவேன்.
8. கலந்துரையாடலின் மூலம் ஆழிப்பேரலையின் போது என்னென்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்வேன்.
28.
கிராமக் குடியிருப்புகள்:
முதன்மைத் தொழில்களான வேளாண்மை, வனத்தொழில், கனிமத் தொழில் மற்றும் மீன்பிடித்தல் போன்றவற்றை மேற்கொண்டிருக்கும் குடியிருப்புகள் கிராமக் குடியிருப்புகள் எனப்படுகிறது.
இவை நிலைத்த நிரந்தரக் குடியிருப்புகளாகும்.
இவைகளின் தனித்தன்மை அதைச் சுற்றியிருக்கும் பரந்த பசுமையும் மாசற்ற சுற்றுச் சூழலும் ஆகும்.
கிராமக் குடியிருப்பு வகைகள்:
1. செவ்வகவடிவக் குடியிருப்புகள்
2. நேர்கோட்டுக் குடியிருப்புகள்
3. வட்டவடிவ அல்லது அரைவட்ட வடிவ குடியிருப்புகள்
4. நட்சத்திர வடிவக் குடியிருப்புகள்
5. முக்கோண வடிவக் குடியிருப்புகள்
6. T வடிவ. Y வடிவ, சிலுவை வடிவ (அ) குறுக்கு வடிவ குடியிருப்புகள்
7. மூலக்கரு வடிவக் குடியிருப்புகள்
1. செவ்வக வடிவக் குடியிருப்புகள்:
சம வெளிப் பகுதிகளிலும் , பள்ளத்தாக்குப் பகுதிகளிலும் காணப்படும் குடியிருப்புகள் செவ்வக வடிவக் குடியிருப்புகளாகும்.
இங்குச் சாலைகள் செவ்வக வடிவில் காணப்படுவதோடு ஒன்றையொன்று செங்கோணங்களில் வெட்டிச் வெல்லும்.
2. நேர்க்கோட்டு குடியிருப்புகள் :
இவ்வகையான குடியிருப்புகள் சாலை, தொடர்வண்டிப்பாதை ,ஆற்றங்கரை மற்றும் அணைக்கட்டு ஓரங்களில் காணப்படுகின்றன.
3. வட்ட வடிவ குடியிருப்பு அல்லது அரைவட்ட வடிவ குடியிருப்புகள் :
இவ்வகையான குடியிருப்புகள் ஏரிகள் குளங்கள் மற்றும் கடற்கரை பகுதிகளைச் சுற்றி வட்டமாகவோ அல்லது அரைவட்டமாகவோ காணப்படுகின்றன .
4. நட்சத்திர வகை குடியிருப்புகள்:
நட்சத்திர வடிவ குடியிருப்புகள் கப்பியிடப்பட்ட அல்லது கப்பியிடப்படாத சாலை அமைப்புகளின் ஓரங்களில் காணப்படுகின்றன,
இவை நட்சத்திர வடிவத்தில் எல்லா திசைகளிலும் பரவிக் காணப்படும்.
5. முக்கோண வடிவக் குடியிருப்புகள் :
ஆறுகள் ஒன்றாக சேரும் இடங்களில் காணப்படும் குடியிருப்புகள் முக்கோண வடிவக் குடியிருப்புகளாகும்.
6. T வடிவ Y வடிவ சிலுவை வடிவ குறுக்கு வடிவக் குடியிருப்புகள் :
T வடிவ குடியிருப்புகள் மூன்று சாலைகள் சந்திக்கும் இடங்களில் வளர்ச்சியடையும்.
Y வடிவக் குடியிருப்புகள் இரண்டு சாலைகள் காணப்படுகிறது.
குறுக்கு வடிவக் குடியிருப்புகள் நான்கு சாலைகள் சந்திக்கும் இடங்களில் காணப்படுகின்றன.
7. முலக்கரு வடிவக் குடியிருப்புகள் :
இங்குச் சாலைகள் வட்ட வடிவமாகவும் ஒரு மையத்தில் முடிய கூடியதாகவும் இருக்கும்.
கிராமத்தின் குடியிருப்புகள் செல்வந்தரின் குடியிருப்பைச் சுற்றியோ ஆழ்ந்து மசூதி , கோவில் தேவாலயங்களைச் சுற்றியுள்ள அமைந்திருக்கும்.
29.
கல்வித்தகுதி:
1. பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் - 30%
2. 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் - 10%
3. தொழில் பயிற்சி பெற்றவர்கள் - 15%
4. பட்டப் படிப்பு படித்தவர்கள் - 11%
5. தொழிற்கல்வி முடித்தவர்கள் - 12%
6. முதுகலை பட்டதாரிகள் - 11%
தமிழ்நாட்டிலிருந்து இடம் பெயர்ந்தவர்கள் மிகவும் திறமை வாய்ந்த வேலைகளிலும், சாதாரணமாகச் செய்யக் கூடிய வேலைகளிலும், நடுத்தரமான வேலைகளிலும் ஈடுபடுகின்றனர்.
30.
1. தமிழகத்தில் வற்றாத நதிகள் இல்லை.
2. தமிழகம் தனது தேவைக்கான நீரை வடகிழக்கு மற்றும் தேன்மேற்குப் பருவ மழைகளிலிருந்து பெறுகிறது.
3. தென்மேற்கு பருவமழைப் பொழிவு அபரிமிதமாக இருந்தால் காவிரி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதியிலுள்ள கர்நாடக அணைகள் நிரம்பி விட்டால் தமிழகத்தில் காவிரி ஆற்றில் நீர் பெருகும்.
4. தமிழகத்திற்கு பெரும் நீர் ஆதாரமாக இருப்பது வடகிழக்கு பருவ மழையாகும்.
5. வடகிழக்குப் பருவமழை நீரை நீர்த்தேக்கங்களிலும், கண்மாய்கள் மற்றும் ஏரிகளிலும் தேக்கி வேளாண்மையை மேற்கொள்கின்றனர்.
6. தமிழக வேளாண்மைக்கான நீரை கால்வாய்கள், ஏரிகள், குளங்கள். கிணறுகள் மற்றும் ஆழ்துளைக் கிணறுகள் ஆகியவை வழங்குகின்றன.
7. தமிழக வேளாண்மை பெருமளவிற்கு நிலத்தடி நீரையே நம்பி இருக்கிறது.
8. இந்த ஆதாரங்களைக் கொண்டே தமிழகத்தில் வேளாண்மை மேற்கொள்ளப்படுகிறது.
31.
ஆங்கிலேய ஆட்சியின் பொருளாதாரத் தாக்கம் :
(i) கவர்னர் ஜெனரல் காரன்வாலிஸ் இங்கிலாந்தில் ஒரு பெரிய நிலப்பிரபு ஆவார்.
(ii) இந்தியாவிலும் நிலப்பிரபுக்களை உருவாக்க அவர் திட்டமிட்டார்.
(iii) இடைத்தரகர்களுடன் பேசி ஒரு முடிவுக்கு வந்த காரன்வாலிஸ் அவர்களை நிலப்பிரபுக்களைப்போல் நடத்தினார்.
(iv) ஜமீன்தார்கள் என்ற பெயரில் நிலப்பிரபுக்கள் உருவாக்கப்பட்டனர்.
(v) நிலங்களுக்கு உரிமையாளர்களாக மாறிய இவர்கள் தங்கள் சொத்துக்களை மற்றவர்களுக்கு விற்கவும், வாரிசாக நிலங்களைப் பெறவும் உரிமை பெற்றனர்.
(vi) விவசாயிகள் வெறும் குத்தகைதாரர்களாக மாற்றப்பட்டனர்.
(vii) கம்பெனி அரசு ஜமீன்தார்களுடன் நேரடித்தொடர்பு வைத்துக்கொண்டு குத்தகைதாரர்களுடன் தங்கள் விருப்பம் போல் நடந்துகொள்ள ஜமீன்தார்களுக்கு முழு சுதந்திரம் அளித்தது.
(viii) வங்காளம், பீகார், ஒடிசா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஜமீன்தார்களுடன் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தீர்வு நிரந்தர நிலவரித்திட்டம் என அழைக்கப்பட்டது.
(ix) ரயத்துவாரி முறை என்பது தென்னிந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட வித்தியாசமான நிலவருவாய் வரி முறையாகும்.
(x) இம்முறையின்படி விவசாயி நிலத்தின் உரிமையாளர் ஆவார், அவரே வரி செலுத்துவார்.
(xi) நிலவரியை ஒரு விவசாயி முறையாகச் செலுத்தும்வரை நிலம் அவருக்குச் சொந்தமானதாக இருக்கும். நிலவரி செலுத்தத் தவறினால் அவர் நிலத்திலிருந்து வெளியேற்றப்படுவார். மேலும் அவருக்குச் சொந்தமான கால்நடைகளையும் ஏனைய உடைமைகளையும் அரசு பறிமுதல் செய்து கொள்ளலாம்.
xii) நிலத்தில் தனிச்சொத்துரிமை எனும் கோட்பாட்டை ரயத்துவாரிமுறை அறிமுகம் செய்தது, தனிநபருக்குச் சொந்தமான நிலங்கள் முறையாகப் பதிவு செய்யப்பட்டன. தனது நிலங்களை விற்கவும், அடகு வைக்கவும், குத்தகைக்கு விடவும், நிலத்தின் மீதான தனது உரிமையை வேறொருவருக்கு வழங்கவும் விவசாயி உரிமை பெற்றிருந்தார்.
xiii) ஆங்கில அரசு வேளாண்மையை வணிகமயமாக்கும் கொள்கையைப் பின்பற்றியது.
xiv) விவசாயி தன்னுடைய வேளாண் விளைபொருள்களை விற்பனை செய்ய பன்னாட்டுச் சந்தையின் விலை நிலவரங்களைச் சார்ந்திருக்க வேண்டி இருந்தது. வேளாண் பொருள்களுக்கான தேவை வீழ்ச்சியுற்றபோது விவசாயிகள் துயரங்களுக்கு உள்ளாயினர்.
ஆப்பிரிக்காவில் காலனி அசிங்
32.
ஒற்றையாட்சி முறை :
ஒற்றை ஆட்சி முறை என்பது இறையாண்மை மிக்க ஓர் அரசு ஒரே நிறுவனமாக இருந்து ஆட்சி செய்வதாகும்.
ஒற்றை ஆட்சி முறையில் அனைத்து அதிகாரங்களும் ஒரே இடத்தில் மையப்படுத்தபடுகின்றன.
1. சிறு நாடுகளுக்குப் பொருத்தமானது.
2. அதிகாரம் மற்றும் பொறுப்புகளுக்கு இடையில் மோதல்கள் இருப்பதில்லை.
3. ஒற்றை ஆட்சிமுறை உடனடியாக முடிவெடுத்துத் துரிதமாகச் செயல்படுகிறது.
4. ஒற்றை ஆட்சிமுறை குறைந்த செலவுடையது
5. அரசியலமைப்பு திருத்தங்களை எளிதில் மேற்கொள்ள இயலும்
6. ஒற்றுமை சீரான சட்டம், கொள்கை மற்றும் நிர்வாகத்தினை உள்ளடக்கியது.
33.
(i) 1774இல் குடியேற்ற நாடுகளின் படைகளுக்கு ஜார்ஜ் வாஷிங்டன் தலைமையேற்றார்.
(ii) குடியேற்றவாதிகள் விடுதலைப் பெறுவதற்காகப் போரை தொடங்கவில்லை. வரிவிதிப்பும், வணிகத்தின் மீதான கட்டுப்பாடுகளும் ஆங்கிலேயரின் உரிமைக்கு எதிராக அவர்கள் செயல்பட்டனர்.
(iii) "பிரதிநிதித்துவம் இல்லாமல் வரி விதிப்பு இல்லை” என்பதே அவர்களின் புகழ்பெற்ற போர் முழக்கமாக இருந்தது.
(iv) பாஸ்டைன் துறைமுக நிகழ்வுகளால் கலக்கமடைந்த இங்கிலாந்து அரசு 'சகிக்க முடியாத சட்டங்கள்' எனும் சட்டத்தை இயற்றியது.
(v) அதில் இச்சட்டத்தை மீறும் அனைவரும் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு இங்கிலாந்து கொண்டு செல்லப்படுவர் என கூறப்பட்டிருந்தது.
(vi) 1774ஆம் ஆண்டு மே மாதம் வெர்ஜீனியா சட்டமன்றத்தில் தாமஸ் ஜெபர்சன் 1774ஆம் ஆண்டு ஜூன் முதல் நாள் உண்ணாவிரதம் மற்றும் வழிபாட்டுத் தினமாக கடைபிடிக்கப்படும் என அறிவித்தார்.
(vii) இதற்கு எதிர்வினையாக ஆளுநர் சட்டமன்றத்தை கலைத்தார்.
(viii) அதன் பின்பு உறுப்பினர்கள் கண்டங்களின் மாநாடு நடத்துவதற்கு தீர்மானம் போடப்பட்டது. - மற்ற குடியேற்ற உறுப்பினர்களும் இவர்களுடன் இணைந்தனர்.
(ix) 1774ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் நாள் முதல் கண்டங்களின் மாநாடு பிலடெல்பியாவில் கூடியது.
(x) குடியேற்றங்களின் பிரதிநிதிகள் தீர்மானங்களின் மீது வாக்களிக்க மாநாடு ஒப்புக்கொண்டது. அதன் சகிக்க முடியாத சட்டம் செல்லாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
(xi) கண்டங்களின் மாநாடு அமெரிக்க மக்களின் உரிமை பிரகடனத்தை ஏற்றது.
34.
செயற்கைக்கோள் இல்லாத உலகத்தை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை.
ஏனென்றால், நமது நில வரைபடத்தின் கூறுகள் இவற்றின் மூலம் தெளிவாக அளவிடப்பட்டுள்ளன. தகவல் தொடர்பு மற்றும் உலகளாவிய பயணம் செயற்கை கோள் மூலமே சாத்தியமாகியுள்ளது. உலக அமைவிட கண்டறியும் தொகுதி செயற்கை கோளின் மிக முக்கிய பயன்பாடாகும்.
35.
நகரப் புறங்களில் குடியிருப்புகள் நெருக்கமாகவும் அதிக மக்கள் தொகையுடனும் காணப்படும். இதனால் நகரப் பகுதிகளில் இடநெருக்கடி ஏற்படுகிறது. நகரங்களில் இடநெருக்கடி, வாடகை உயர்வு ஆகியவை காணப்படுவதால் கிராமங்கலிருந்து இடம் பெயர்ந்து செல்லும் விவசாயிகள், தொழிலாளர்கள் புறநகர்ப் பகுதிகளில் குடிசைகளை அமைத்து அங்கெ தங்கி விடுகின்றனர். இங்கு சாலைவசதி, குடிநீர் வசதி, சாக்கடை வெளியேற்ற வசதி கிடையாது. எனவே தெரு முழுவதும் ஓடும் சாக்கடை நீரால் இப்பகுதிகள் அசுத்தமாகின்றன. இவ்வாறு நகரங்களை நோக்கியே இடப் பெயர்வு குடிசைகள் அமையாக் காரணமாகிறது.
36.
1. தயார் நிலை
2. மட்டுப்படுத்துதல்
3. மீட்பு
4. திட்டமிடல்
5. தடுத்தல்
6. புனர்வாழ்வு
7. மறுசீரமைப்பு
37.
1. குடிநீர் வழங்குதல்
2. தெரு விளக்குகளைப் பராமரித்தல்
3. சாலைகளைப் பராமரித்தல்
4. கிராம நூலகங்களைப் பராமரித்தல்
5. சிறிய பாலங்களைப் பராமரித்தல்
6. வீட்டுமனைகளுக்கு அனுமதி அளித்தல்
7. வடிகால் அமைப்புகளைப் பராமரித்தல்
8. தொகுப்பு வீடுகளைக் கட்டுதல்
9. தெருக்களைச் சுத்தம் செய்தல்
10. இடுகாடுகளைப் பராமரித்தல்
11. பொதுக் கழிப்பிட வசதிகளைப் பராமரித்தல்
38.
தொழிலாளர்கள் மிகவும் சிறிய, அழுக்கடைந்த, சுகாதாரமற்ற வீடுகளில் வாழ்ந்தனர். தொழிலாளர்கள் சுற்றுப்புறத்தைச் சுத்தப்படுத்தவோ மாற்றவோ அவர்களுக்கு நேரம் இருக்கவில்லை. இதனால் டைஃபாயிடு, காலரா, பெரியம்மை போன்ற நோய்கள் பரவின.
39.
1. உள்ளூர் சுய ஆட்சி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டுக்கு இடையே சமரசம் ஏற்படுத்துதல்.
2. மத்திய மாநில அரசுகளுக்கு இடையிலான அதிகாரப் பகிர்வு, நிர்வாகத் திறன்கள் மேம்பட வழிவகுக்கிறது.
3. மிகப்பெரிய நாடுகள் தோன்றுவதற்கு வழி செய்கிறது.
4. அதிகாரம் பகிர்ந்து அளிக்கப்படுவதால் மத்திய அரசின் சர்வாதிகாரப் போக்கைத் தடுக்கிறது.
5. மிகப்பெரிய நாடுகளுக்குப் பொருத்தமானது.
6. பொருளாதார மற்றும் பண்பாட்டு முன்னேற்றங்களுக்கு நன்மை அளிக்கிறது.
40.
அ) 13.067o வடக்கு , 80.238o கிழக்கு
ஆ) மதுரை
இ) கோயமுத்தூர்
ஈ) 8.08o வடக்கு மற்றும் 77.54o கிழக்கு.
41.
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - பண்டைய நாகரிகங்கள் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Ancient . Civilisations Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - புரட்சிகளின் காலம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - The Age of Revolutions Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - State and Society in Medieval India Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Colonialism in Asia and Africa Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards