9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9ஆம் வகுப்பு கணிதம் ஆயத்தொலை வடிவியல்,முக்கோணவியல் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Maths Coordinate Geometry,Trigonometry Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு கணிதம் அளவியல்,புள்ளியியல்&நிகழ்தகவு முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Maths Mensuration,Statistics&Probability Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - செவ்வியல் உலகம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - The Classical World Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Early Tamil Society and Culture Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - தொழிற்புரட்சி முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Industrial Revolution Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - நவீன யுகத்தின் தொடக்கம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - The Beginning of the Modern AgeImportant 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.

Published on: 03/01/2019
9th Std Revision Test Model
Download Tamil Nadu 9th Standard Maths question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Maths Test1.
5 செமீ பக்க அளவு கொண்ட கனச்சதுரத்தின் மொத்தப்பரப்பு மற்றும் பக்கப்பரப்பைக் காண்க.
2.
ஒரு கனச்செவ்வகத்தின் நீளம் 7.5 மீ, அகலம் 3 மீ, உயரம் 5 மீ எனில் அதன் மொத்தப்பரப்பு மற்றும் பக்கப்பரப்பைக் காண்க.
3.
8x + 5y = 9; kx +10y = 15 என்ற சமன்பாடுகளின் தொகுப்பிற்குத் தீர்வுகள் இல்லையெனில் k இன் மதிப்பு காண்க.
4.
குறுக்குப் பெருக்கல் முறையைப் பயன்படுத்தித் தீர்க்க
(i) 8x − 3y = 12 ; 5x = 2y + 7
(ii) 6x + 7y −11 = 0 ; 5x + 2y = 13
(iii) \(\frac { 2 }{ x } +\frac { 3 }{ y } =5;\frac { 3 }{ x } -\frac { 1 }{ y } +9=0\)
5.
tan 700 13' இன் மதிப்பைக் காண்க
6.
cos 190 59' இன் மதிப்பைக் காண்க.
7.
புள்ளிகள் A(−11,4) மற்றும் B(9,8) ஐ இணைக்கும் கோட்டுத்துண்டை நான்கு சமப் பாகங்களாகப் பிரிக்கும் புள்ளிகளைக் காண்க.
8.
(x,3), (6,y), (8,2) மற்றும் (9,4) என்பன வரிசையாக எடுத்துக்கொள்ளப்பட்ட இணைகரத்தின் உச்சிகள் எனில் x மற்றும் y இன் மதிப்புகளைக் காண்க.
9.
ஒரு வினாவிற்கான சரியான விடையை ஊகிப்பதற்கான நிகழ்தகவு \(\frac { x }{ 3 } \)என்க. சரியான விடையை ஊகிக்காமல் இருப்பதற்கான நிகழ்தகவு \(\frac { x }{ 5 } \) எனில் x இன் மதிப்பு காண்க.
10.
ஒரு கொள்கலனின் (container) கன அளவு 1440 மீ3. அதன் நீளம் மற்றும் அகலம் முறையே 15 மீ மற்றும் 8 மீ எனில் அதன் உயரத்தைக் காண்க.
11.
ஒரு கனச்செவ்வக வடிவப் பெட்டியின் அளவுகளானது 6 மீ× 400 செமீ × 1.5 மீ ஆகும். அப்பெட்டியின் வெளிப்புறம் முழுவதும் வண்ணம் பூசுவதற்கு 1 சதுர மீட்டருக்கு ₹22 வீதம் ஆகும் எனில், மொத்தச் செலவைக் காண்க.
12.
இரண்டு சீரான நாணயங்களை ஒரே நேரத்தில் சுண்டும்போது, இரு தலைகள் கிடைப்பதற்கான நிகழ்தகவு யாது?
13.
இரு எண்கள் 5 : 6 என்ற விகிதத்தில் உள்ளன. அவை ஒவ்வொன்றிலிருந்தும் முறையே 8 ஐக் கழித்தால் அவற்றின் விகிதம் 4 : 5 என மாறும் எனில், அந்த எண்களைக் காண்க.
14.
ஒரு முக்கோண வடிவ வயலின் பக்க நீளங்கள் 28 மீ, 15 மீ மற்றும் 41 மீ எனில் வயலின் பரப்பளவைக் கணக்கிடுக. மேலும் வயலைச் சமப்படுத்த ஒரு சதுர மீட்டருக்கு ₹ 20 செலவாகும் எனில், வயலைச் சமப்படுத்த ஆகும் மொத்தச் செலவைக் கணக்கிடுக.
15.
ஒரு மகிழுந்து மாறா வேகத்தில் பயணிக்கின்றது. அது புறப்பட்ட இடத்திலிருந்து பிற்பகல் 2 மணியளவில் 180 கிமீ தொலைவிலும் பிற்பகல் 6 மணியளவில் 360 கிமீ தொலைவிலும் உள்ளது எனில் நள்ளிரவு 12 மணியளவில் எவ்வளவு தொலைவுவில் இருக்கும் என்பதைப் பிரிவு சூத்திரத்தைப் பயன்படுத்திக் காண்க.
16.
பிரிவுச் சூத்திரத்தைப் பயன்படுத்திப் புள்ளிகள் A(7, −5), B(9, −3) மற்றும் C(13,1) ஆகியன ஒரே கோட்டில் அமையும் என நிரூபிக்க.
17.
இரண்டு மகிழுந்துகளுக்கு இடைப்பட்ட தொலைவு 100 மைல்கள். இரண்டும் ஒன்றையொன்று நோக்கிப் பயணித்தால் ஒரு மணி நேரத்தில் சந்தித்துக்கொள்ளும். இரண்டும் ஒரே திசையில் செல்லும்போது 2 மணி நேரத்தில் ஓரிடத்தில் சந்தித்து ஒன்றாகப் பயணிக்குமெனில், இரண்டு மகிழுந்துகளின் வேகங்களைக் (வரைபட முறையில்) கணக்கிடுக.
18.
கீழ்க்கண்டவற்றின் மதிப்புகளை காண்க
(i) \(\frac {\tan45° }{ cosec30° } +\frac { \sec60° }{ \cot45° } -\frac { 5\sin90° }{ 2\cos0° } \)
(ii) (sin90° + cos60° + cos 45°) × (sin30° − cos0° + cos 45°)
(iii) sin2 300 - 2cos3 600 + 3tan4 450
19.
2 cos \(\theta \) = \(\sqrt { 3 } \) எனில், \(\theta \)-வின் அனைத்து முக்கோணவியல் விகிதங்களையும் காண்க.
20.
கோணம் \(\theta \) வின் அனைத்து முக்கோணவியல் விகிதங்களையும் காண்க

21.
இனிப்புகள் வைக்கும் ஒரு பெட்டியானது 22 செமீ × 18 செமீ × 10 செமீ என்ற அளவில் உள்ளது. இதனை 1 மீ × 88 செமீ × 63 செமீ அளவுள்ள ஓர் அட்டைப் பெட்டியில் எத்தனை அடுக்கலாம்?
22.
பத்தாம் வகுப்பு இறுதித் தேர்வில் பல்வேறு பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்ற 1184 மாணவர்களில், 233 பேர் கணிதத்திலும், 125 பேர் சமூக அறிவியலிலும், 106 பேர் அறிவியலிலும் நூற்றுக்கு நூறு பெற்றுள்ளனர். சம வாய்ப்பு முறையில் ஒரு மாணவரைத் தேர்ந்தெடுக்கும்போது அந்த மாணவர்
(i) கணிதத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றவராக இருக்க,
(ii) அறிவியலில் நூற்றுக்கு நூறு பெறாதவராக இருக்க நிகழ்தகவு காண்க
23.
விவசாயி ஒருவர் சாய்சதுர வடிவிலான நிலத்தை வைத்துள்ளார். அந்த நிலத்தின் சுற்றளவு 400மீ மற்றும் அதன் ஒரு மூலைவிட்டத்தின் அளவு 120மீ ஆகும். இரண்டு வெவ்வேறு வகையான காய்கறிகளைப் பயிரிட அவர் நிலத்தை இரு சமபகுதிகளாகப் பிரிக்கிறார் எனில் அந்த முழு நிலத்தின் பரப்பைக் காண்க.
24.
கர்ணம் 5 செமீ மற்றும் ஒரு குறுங்கோணம் 48° 30′ கொண்ட ஒரு செங்கோண முக்கோணத்தின் பரப்பைக் காண்க.

25.
புள்ளிகள் (3, 5) மற்றும் (8, 10) ஆகியவற்றை இணைக்கும் கோட்டுத்துண்டை 3:2 என்ற விகிதத்தில் உட்புறமாகப் பிரிக்கும் புள்ளியின் ஆயத் தொலைவுகளைக் காண்க.
26.
பின்வருவனவற்றிற்கு வரைபடம் வரைக.
(i) y = 3x −1
(ii) \(y=\left( \frac { 2 }{ 3 } \right) x+3\)
27.
10 செமீ × 6 செமீ × 5 செமீ அளவுள்ள ஒரு கனச்செவ்வகப் பெட்டியின் மொத்தப்பரப்பு _____.
280 செமீ2
300 செமீ2
360 செமீ2
600 செமீ2
28.
12 செமீ பக்க அளவுள்ள ஒரு கனச்சதுரத்தின் பக்கப்பரப்பு _____.
144 செமீ2
196 செமீ2
576 செமீ2
664 செமீ2
29.
15 செமீ, 20 செமீ மற்றும் 25 செமீ பக்க அளவுகள் கொண்ட ஒரு முக்கோணத்தின் அரைச் சுற்றளவு _____.
60 செ.மீ
45 செ.மீ
30 செ.மீ
15 செ.மீ
30.
''STATISTICS'' என்ற சொல்லிலிருந்து ஓர் எழுத்து சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்படும்போது, அது ஆங்கில உயிரெழுத் தாக இருக்க நிகழ்தகவு.
\(\frac { 1 }{ 10 } \)
\(\frac { 2 }{ 10 } \)
\(\frac { 3 }{ 10 } \)
\(\frac { 4 }{ 10 } \)
31.
A என்பது S-ன் ஏதேனும் ஒரு நிகழ்ச்சி மற்றும் A' என்பது A-ன் நிரப்பு நிகழ்ச்சி எனில் P (A)′ இன் மதிப்பு ____.
1
0
1 - A
1 - P(A)
32.
ஒப்பீட்டு நிகழ்வெண் கருத்தை அடிப்படையாகக் கொண்ட நிகழ்தகவு எவ்வாறு அழைக்கப்படுகிறது.
பட்டறி நிகழ்தகவு
தொண்மை நிகழ்தகவு
(1) மற்றும் (2) இரண்டும்
(1)வும் அல்ல (2) வும் அல்ல
33.
\(\frac { { a }_{ 1 } }{ { a }_{ 2 } } =\frac { { b }_{ 1 } }{ { b }_{ 2 } } \neq \frac { { c }_{ 1 } }{ { c }_{ 2 } } \) எனில், a1x + b1y + c1 = 0 மற்றும் a2x + b2 y + c2 = 0 ஆகிய நேரிய சமன்பாடுகளுக்கு ________.
தீர்வு இல்லை
இரண்டு தீர்வுகள்
ஒரு தீர்வு
எண்ணற்ற தீர்வுகள்
34.
கீழ்க்காண்பனவற்றில் எது நேரிய சமன்பாடு அல்ல
ax + by + c = 0
0x + 0y + c = 0
0x + by + c = 0
ax + 0y + c = 0
35.
2x + 3y = 15 என்ற சமன்பாட்டிற்குக் கீழ்கண்டவற்றுள் எது உண்மையானது?
ஒரேயொரு தீர்வு உண்டு
இரண்டு தீர்வுகள் உண்டு
தீர்வு இல்லை
எண்ணற்ற தீர்வுகள்
36.
cos A = \(\frac { 3 }{ 5 } \) எனில் , tan A இன் மதிப்பு_____.
\(\frac { 4 }{ 5 } \)
\(\frac { 3 }{ 4 } \)
\(\frac { 5 }{ 3 } \)
\(\frac { 4 }{ 3 } \)
37.
\(\frac { 1-\tan^{ 2 }45° }{ 1+\tan^{ 2 }45° } \) இன் மதிப்பு_____.
2
1
0
\(\frac { 1 }{ 2 } \)
38.
\(\frac { 2\tan30° }{ 1-\tan^{ 2 }30° } \) இன் மதிப்பு ______.
cos 600
sin 600
tan 600
sin 300
39.
(1,−2), (3,6), (x,10) மற்றும் (3,2) ஆகியன ஓர் இணைகரத்தின் வரிசையாக எடுக்கப்பட்ட முனைப் புள்ளிகள் எனில், x இன் மதிப்பானது _____.
6
5
4
3
40.
A(a1,b1) மற்றும் B(a2 ,b2 ) ஆகிய புள்ளிகளை இணைக்கும் கோட்டுத்துண்டை X -அச்சு எந்த விகிதத்தில் பிரிக்கும்?
b1 : b2
−b1 : b2
a1 : a2
−a1 : a2
41.
P(2,7) மற்றும் R(−2,3) ஆகிய புள்ளிகளை இணைக்கும் கோட்டுத்துண்டை Q(1,6) என்ற புள்ளியானது என்ன விகிதத்தில் பிரிக்கும்?
1:2
2:1
1:3
3:1
1.
கனச்சதுரத்தின் பக்க அளவு (a) = 5 செமீ
மொத்தபரப்பு = 6a2 = 6(52 ) = 150 ச.செமீ
பக்கப்பரப்பு= 4a2 = 4(52 ) = 100 ச.செமீ
2.
இங்கு கனச்செவ்வகத்தின் நீளம் (l) = 7.5 மீ, அகலம் (b) = 3 மீ மற்றும் உயரம் (h) = 5 மீ.
மொத்த பரப்பு = 2(lb + bh + lh)
= 2[(7.5 × 3) + (3 × 5) + (7.5 × 5)]
= 2(22.5 +15 + 37.5)
= 2 × 75
= 150 மீ2
பக்கபரப்பு = 2(l + b) × h
= 2(7.5 + 3) × 5
= 2 ×10.5 × 5
= 105 மீ2
3.
கொடுக்கப்பட்ட இரு நேரிய சமன்பாடுகள்
8x + 5y = 9
5x + 10y = 15
\(\left[ \begin{matrix} { a }_{ 1 }x+{ b }_{ 1 }y+{ c }_{ 1 }=0 \\ { a }_{ 2 }x+{ b }_{ 2 }y+{ c }_{ 2 }=0 \end{matrix} \right] \)
இங்கு a1 = 8, b1 = 5, c1 = 9, a2 = k,b2 = 10,c2 = 15
தீர்வுகள் இல்லையெனில் \(\frac { { a }_{ 1 } }{ { a }_{ 2 } } =\frac { { b }_{ 1 } }{ { b }_{ 2 } } \neq \frac { { c }_{ 1 } }{ { c }_{ 2 } } \) ஆகவே, \(\frac { 8 }{ k } =\frac { 5 }{ 10 } \neq \frac { 9 }{ 15 } \)
80 = 5k
k = 16
4.
(i) 8x - 3y = 12; 5x - 2y = 7
8x - 3y = 12 .......(1)
5x - 2y = 7 .......(2)
8x - 3y - 12 = 0
5x - 2y - 7 = 0
குறுக்குப் பெருக்கல் முறையில் சமன்பாட்டில் உள்ள கெழுக்களை பின்வருமாறு அமைப்போம்
\(\begin{gathered}
\frac{x}{(-3)(-7)-(-2)(-12)}=\frac{y}{(-12)(5)-(-7)(8)}=\frac{1}{(8)(-2)-(5)(-3)}
\end{gathered}\)
\(\begin{gathered}
\frac{x}{21-24}=\frac{y}{-60+56}=\frac{1}{-16+15}
\end{gathered}\)
\(\begin{gathered}
\frac{x}{-3}=\frac{y}{-4}=\frac{1}{-1}
\end{gathered}\)
\(\begin{gathered}
\therefore \frac{x}{-3}=\frac{1}{-1}=\frac{y}{-4}=\frac{1}{-1}
\end{gathered}\)
-x = -3 -y = -4
\(\therefore\) x = 3; y = 4

(ii) 6x + 7y - 11 = 0; 5x + 2y - 13 = 0
6x + 7y - 11 = 0
5x + 2y - 13 = 0
\(\begin{aligned}
\frac{x}{-91-(-22)} & =\frac{y}{-55-(-78)}=\frac{1}{12-35}
\end{aligned}\)
\(\begin{aligned}
\frac{x}{-91+22} & =\frac{y}{-55+78}=\frac{1}{-23}
\end{aligned}\)
\(\frac{x}{-69}=\frac{y}{23}=\frac{1}{-23}\)


x = 3 y = -1
\(\therefore\) x = 3; y = -1
(iii) \(\begin{aligned}
\frac{2}{x}+\frac{3}{y}=5 ; \frac{3}{x}-\frac{1}{y}+9 & =0
\end{aligned}\)
\(\begin{aligned}
\frac{2}{x}+\frac{3}{y}-5 & =0
\end{aligned}\) ....(1)
\(\begin{aligned}
\frac{3}{x}-\frac{1}{y}+9 & =0
\end{aligned}\) ....(2)
(1), (2) ல் \(\frac{1}{x}\) = a, \(\frac{1}{y}\) = b எனக் கொள்க
(1) \(\Rightarrow\) 2a + 3b - 5 = 0
(2) \(\Rightarrow\) 3a - b + 9 = 0
குறுக்கு பெருக்கல் முறையைப் பயன்படுத்தி
\(\begin{aligned}
\frac{a}{(3)(9)-(-1)(-5)} & =\frac{b}{(-5)(3)-(9)(2)}=\frac{1}{(2)(-1)-(3)(3)}
\end{aligned}\)
\(\begin{aligned}
\frac{a}{27-5} & =\frac{b}{-15-18}=\frac{1}{-2-9}
\end{aligned}\)
\(\begin{aligned}
\frac{a}{22} & =\frac{b}{-33}=\frac{1}{-11}
\end{aligned}\)
\(\begin{aligned}
\therefore \frac{a}{22} & =\frac{1}{-11} \left\lvert\, \frac{b}{-33}=\frac{1}{-11}\right.
\end{aligned}\)


a = -2 b = 3
\(\begin{aligned}
\therefore x=\frac{1}{a}=\frac{-1}{2} & y=\frac{1}{b}=\frac{1}{3}
\end{aligned}\)
\(\begin{aligned}
\therefore x=-\frac{1}{2} \quad y=\frac{1}{3}
\end{aligned}\)
5.
| 0' | 6' | 12' | 18' | 24' | 30' | 36' | 42' | 48 | 54' | பொது வித்தியாசம் | |||||
| 0.00 | 0.10 | 0.20 | 0.30 | 0.40 | 0.50 | 0.60 | 0.70 | 0.80 | 0.90 | 1 | 2 | 3 | 4 | 5 | |
| 700 | 2.7776 | 26 | |||||||||||||
70013' = 70012' + 1' என எழுதலாம்
அட்டவணையிலிருந்து tan 70012' = 2.7776
பொது வித்தியாசம் 1' = 26 (tan -ற்குப் பொது வித்தியாசத்தைக் கூட்டவும் )
__________________
tan 70013' = 2.7802
___________________
6.
| 0' | 6' | 12' | 18' | 24' | 30' | 36' | 42' | 48 | 54' | பொது வித்தியாசம் | |||||
| 0.00 | 0.10 | 0.20 | 0.30 | 0.40 | 0.50 | 0.60 | 0.70 | 0.80 | 0.90 | 1 | 2 | 3 | 4 | 5 | |
| 190 | 0.9403 | 5 | |||||||||||||
19059' = 1905' + 5' என எழுதலாம்
அட்டவணையிலிருந்து cos 19054' = 0.9403
பொது வித்தியாசம் 4' = 5 (cosine - ற்குப் பொது வித்தியாசத்தைக் கழிக்கவும்)
__________________
cos 19059' = 0.9398
___________________
7.
A(−11,4) மற்றும் B(9,8)ஐ இணைக்கும் கோட்டுத் துண்டை நான்கு சமப் பாகங்களாகப் பிரிக்கும் புள்ளிகள் P, Q, R என்க. இங்கு AP = PQ = QR = RB .
இங்கு AB இன் நடுப்புள்ளி P மற்றும் QB இன் நடுப்புள்ளி R என்க.
AB இன் நடுப்புள்ளி Q=\((\frac {-11+9}{2}, \frac{4+8}{2})=(\frac {-2}{2},\frac{12}{2})\)=(-1, 6)
AQ இன் நடுப்புள்ளி P=\((\frac {-11-1}{2}, \frac{4+6}{2})=(\frac {-12}{2},\frac{10}{2})\)=(-6, 5)
QB இன் நடுப்புள்ளி R=\((\frac {-1+9}{2}, \frac{6+8}{2})=(\frac {8}{4},\frac{14}{2})\)=(4, 7)
எனவே கோட்டுத்துண்டு AB ஐ நான்கு சமபாகங்களாகப் பிரிக்கும் புள்ளிகள் P(-6, 5), Q(-1, 6) மற்றும் R(4, 7) ஆகும்.
8.
A(x,3), B(6,y), C(8,2) மற்றும் D(9,4) என்பவை இணைகரம் ABCD இன் உச்சிகள் என்க. வரையறையின்படி, மூலைவிட்டங்கள் AC மற்றும் BD ஒன்றையொன்று இருசமக் கூறிடும்.
AC இன் நடுப்புள்ளி = BD இன் நடுப்புள்ளி
\((\frac {x +8}{2},\frac {3+2}{2})=(\frac {6+9}{2},\frac {y+4}{2})\)
இருபுறமும் ஆயத் தொலைவுகளைச் சமப்படுத்த, நாம் பெறுவது
\(\frac{x+8}{2}=\frac {15}{2}\)
x + 8 = 15
x = 7 மற்றும்
\(\frac{5}{2}=\frac {y+4}{2}\)
5 = y + 4
y = 1
இதிலிருந்து, x = 7 மற்றும் y = 1.
9.
சரியான விடையை ஊகிப்பதற்கான நிகழ்தகவு\(P(A)=\frac { x }{ 3 } \)
சரியான விடையை ஊகிக்காமல் இருப்பதற்கான நிகழ்தகவு \(P(A')=\frac { x }{ 5 } \)
p(A)+p(A')=1
\(\frac{x}{3}+\frac{x}{5} = 1\)
\(\frac {5x + 3x }{15} = 1\)
\(\frac {8x }{15} = 1\)
8x = 15
x=\(\frac{15}{8}\)
10.
நீளம் (l) = 15மீ
அகலம் (b) = 8மீ
உயரம் = hமீ
கன அளவு = 1440மீ3
l x b x h =1440
15 x 8 x h = 1440
= 12
கொள்கலனின் உயரம் 12 மீ
11.
கனசெவ்வக வடிவப் பெட்டியின் அளவுகள் 6மீ x 400செமீx 1.5மீ
நீளம் (l)= 6மீ, அகலம் (b)= 400 மீ, மற்றும் உயரம்(h)= 1.5 மீ
மொத்தப் பரப்பு = 2(lb+bh+lh)
=2(6 x 4 + 4 x 1.5 + 6 x 1.5)ச.மீ
=2(24 + 6 + 9)ச.மீ
=2 x 39ச.மீ
= 78ச.மீ
1 ச.மீருக்கு வண்ணம் பூச ஆகும் செலவு = Rs.22
∴ 78 ச.மீருக்கு வண்ணம் பூசச் செலவு = Rs. 22 x 78 = Rs.1,716
பெட்டியின் வெளிப்புறம் முழுவதும் வண்ணம் பூச ஆகும் மொத்தச் செலவு = Rs.1716
12.
இரண்டு சீரான நாணயங்களை சுண்டும் பொழுது கிடைக்கும் கூறுவெளி, S={HH,HT,TH,TT}
n(S)=4
இரு தலைகள் கிடைக்கும் கணம் A ={HH}
P(A)=1
இரண்டு தலைகள் கிடைப்பதற்கான நிகழ்தகவு \(P(A)=\frac { n(A) }{ n(S) } =\frac { 1 }{ 4 } \)
13.
இரண்டு எண்களின் விகிதங்கள் x, y என்க.
\(\frac{x}{y}=\frac{5}{6}\)
\(\Rightarrow\) 6x = 5y
6x - 5y =0 ....(1)
\(\frac{x-8}{y-8}=\frac{4}{5}\)
\(\Rightarrow\) 5(x - 8) = 4(y - 8)
5x - 40 = 4y - 32
5x - 4y = 40 - 32
5x - 4y = 8 .....(2)

y = 48 என (1) ல் பிரதியிட
6x - 5(48) = 0
6x - 240 = 0
6x = 240
x = \(\frac{240}{6}=40\)
\(\therefore\) அந்த எண்கள் 40 : 48 என்ற விகிதத்தில் இருக்கும்.
14.
a = 28 மீ, b = 15 மீ மற்றும் c = 41மீ என்க.
இப்போது, s = \(\frac {a +b |+c }{2}=\frac {28+15+41}{2}=\frac {84}{2}\)= =42 மீ
முக்கோண வயலின் பரப்பளவு=\(\sqrt { s(s-a)(s-b)(s-c) } \)
=\(\sqrt {42(42-28)(42-15)(42-41)}\)
=\(\sqrt {42 \times 14\times17\times1}\)
=\(\sqrt {2 \times 3\times 7\times 7\times 2\times 3\times 3\times 3\times 1}\)
=126 ச.மீ
1 ச.மீ வயலைச் சமப்படுத்த ஆகும் செலவு = ₹ 20
126 ச.மீ சமப்படுத்த ஆகும் செலவு = 20 × 126 = ₹ 2520.
15.
புறப்பட்ட இடம் A(0,0)
2 மணிக்கு 180 கிமீ B(2,180)
6 மணிக்கு 360 கிமீ C(6,360)
கோட்டுத்துண்டு BD ஐ C என்ற புள்ளி m:n என்ற விகிதத்தில் பிரிக்கிறது.
பிரிவுச் சூத்திரப்படி
\(\left( \frac { { mx }_{ 2 }+{ nx }_{ 1 } }{ m+n } ,\frac { { my }_{ 2 }+{ ny }_{ 1 } }{ m+n } \right) \)=(6,360)
\(\left( \frac { 12m+2m }{ m+n } ,\frac { mx+180n }{ m+n } \right) \)=(6,360)
x இன் ஆயத்தொலைவை சமப்படுத்த
\(\frac { 12m+2n }{ m+n } \)=6
12m + 2n= 6(m + n) = 6m + 6n
12m-6m=6n-2n
6m=4n
\(\\ \frac { m }{ n } =\frac { 4 }{ 6 } =\frac { 2 }{ 3 } \)
m:n = 2:3
m:n = 2:3 என y இன் ஆயத் தொலைவில் பிரதியிட
\(\frac { mx+180n }{ m+n } =\frac { 2x+180(3) }{ 2+3 } \)=360
\(\frac { 2x+540 }{ 5 } \)=360
2x + 540 = 360 x 5 = 1800
2x = 1800 - 540 = 1260
x =\(\frac { 1260 }{ 2 } \)=630
x=630
நள்ளிரவு 12 மணியளவில் 630 கிமீ தொலைவில் இருக்கும்.

16.
\(\overline {AB} = \sqrt {(x_2 - x_1)^2 + (y_2 - y_1)^2}\)
= \( \sqrt{(9-7)^2+(-3-(-5))^2}\)
\(=\sqrt {2^2 + (-3 + 5)^2} = \sqrt{4+4}\)
\(=\sqrt{8} = \sqrt{4 \times 2} = 2\sqrt{2}\)
\(\overline{BC}\)= \( \sqrt{(13-7)^2+(1-(-5))^2}\)
\(=\sqrt {4^2 +4^2} = \sqrt{16+16}\)
\(=\sqrt{32} = \sqrt{2 \times 16} = 4\sqrt{2}\)
\(\overline{BC}\)= \( \sqrt{(13-7)^2+(1-(-5))^2}\)
\(=\sqrt {6^2 +6^2} = \sqrt{36+36}\)
\(=\sqrt{72} = \sqrt{2 \times 36} = 6\sqrt{2}\)
\(2 \sqrt{2}, 4\sqrt{2}, 6\sqrt{2}\)
AB + BC = AC இங்கு B ஆனது பொதுப்புள்ளி
A, B, C ஒரே கோட்டில் அமையும்

எனவே மூன்று புள்ளிகளும் ஒரே நேர்க்கோட்டில் அமையும்
17.
இரண்டு மகிழுந்துகளின் வேகம் x, y என்க, அவை ஒன்றையொன்று எதிர்நோக்கி பயணித்தால்
அவை 1 மணி நேரத்தில் சந்திக்கும் எனில் d = 100; \(\frac{d}{s}=t\)
i.e., \(\frac{100}{x+y}=1 \Rightarrow x+y=100\) ....(1)
இரண்டு மகிழுந்துகளும் ஒரே திசையில் பயணித்தால் அவை 2 மணி நேரத்தில் சந்திக்கும்.

(1) \(\Rightarrow\) x + y = 100
y = -x + 100
| x | 100 | 0 |
| -x | -100 | 0 |
| 100 | 100 | 100 |
| y=-x+100 | 0 | 100 |
வரைபடத்தில் குறிக்க வேண்டிய புள்ளிகள்
(0, 100), (100, 0)
(2) \(\Rightarrow\) x - y = 50
-y = -x + 50
y = x - 50

| x | 50 | 0 |
| -50 | -50 | -50 |
| y=x-50 | 0 | -50 |
வரைபடத்தில் குறிக்க வேண்டிய புள்ளிகள் (0, -50), (50, 0)
x + y = 100 ....(1)
x = 0 என (1) ல் பிரதியிட, 0 + y = 100 \(\Rightarrow\) y = 100
A(0, 100) ஆனது நேர்க்கோடு (1) ன் மீது அமையும் புள்ளி
y = 0 என (1) ல் பிரதியிட, x + 0 = 100 \(\Rightarrow\) x = 100
B (100, 0) ஆனது மற்றொரு புள்ளியாகும் (1)
வரைபடத்தில் A & B புள்ளிகளைக் குறித்து அவற்றை இணைக்க நேர்க்கோடு (1) கிடைக்கும்.
மேலும் x - y = 50 .....(2)
x = 0 என (2), ல் பிரதியிட 0 - y = 50
\(\Rightarrow\) y = -50
P(0, -50) ஆனது ஒரு புள்ளியாகும் (2)
y = 0 என (2) ல் பிரதியிட, x - 0 = 50
\(\Rightarrow\) x = 50
Q (50, 0) ஆனது மற்றொரு புள்ளியாகும்
வரைபடத்தில் P & Q புள்ளிகளைக் குறித்து அவற்றை இணைக்க நேர்க்கோடு (2) கிடைக்கும்
இரண்டு கோடுகளும் ஒன்றையொன்று (75, 25) என்ற புள்ளியில் வெட்டிக்கொள்கின்றன. எனவே நேர்கோடுகள் (1) & (2) ன் தீர்வு (75, 25) ஆகும்
எனவே இரண்டு மகிழ்ந்துகளின் வேகம் முறையே x மற்றும் y ஆனது
x = 75 கி.மீ
y = 25 கி.மீ
18.
(i) tan 45o = 1 sec 60o = 2 sin 90o = 1
cosec 30o = 2 cot 45о = 1 cos 0o = 1
\(\frac {\tan45° }{ cosec30° } +\frac { \sec60° }{ \cot45° } -\frac { 5\sin90° }{ 2\cos0° } \)
= \(\frac12+\frac12-\frac{5\times1}{2\times1}\)
\(\frac 12+\frac21-\frac52=\frac{1+4-5}{2}=\frac{5-5}{2}=0\)
(ii) sin90° = 1, cos60° = 1/2 cos 45° = 1/2
sin30° = 1/2, cos0° = 1, cos 45° = \(\frac{1}{\sqrt2}\)
(sin90° + cos60° + cos 45°) X (sin30° − cos0° + cos 45°)
\(=\left( 1+\frac { 1 }{ 2 } +\frac { 1 }{ \sqrt { 2 } } \right) \left( \frac { 1 }{ 2 } -1+\frac { 1 }{ \sqrt { 2 } } \right) \)
\(=\left( \frac { 2\sqrt { 2 } +\sqrt { 2 } +2 }{ 2\sqrt { 2 } } \right) \left( \frac { \sqrt { 2 } -2\sqrt { 2 } +2 }{ 2\sqrt { 2 } } \right) \)
\(\left( \frac { 2+3\sqrt { 2 } }{ 2\sqrt { 2 } } \right) \left( \frac { 2\sqrt { 2 } }{ 2\sqrt { 2 } } \right) \)
\(\frac { 4+6\sqrt { 2 } -2\sqrt { 2 } -6 }{ 8 } =\frac { 4\sqrt { 2 } -2 }{ 8 } \)
\(\frac { 2(2\sqrt { 2 } -1) }{ 8 } \frac { 2\sqrt { 2 } -1 }{ 4 } \)
(iii) \({ \left( \frac { 1 }{ 2 } \right) }^{ 2 }{ -2\left( \frac { 1 }{ 2 } \right) }^{ 3 }+3(1)4\)
\(\left( \frac { 1 }{ 4 } \right) -\left( \frac { 1 }{ 4 } \right) +3=3\)
19.
2cos θ = \(\sqrt{3}\)
பிதாகரஸ் தேற்றத்தின் படி,
AB =\(\sqrt{AC^2-BC^2}\)
=\(\sqrt{2^2-(\sqrt3)^2}\)
=\(\sqrt{4^2-3^2}\) =\(\sqrt{1}\)=1
20.
பிதாகரஸ் தேற்றத்தின் படி,
OA=\(\sqrt { { OB }^{ 2 }+{ AB }^{ 2 } } \)
=\(\sqrt { { 10 }^{ 2 }-{ 8 }^{ 2 } } =\sqrt { 100+64 } =\sqrt { 36 } \)=6
OA=6

21.
இங்கு இனிப்புப் பெட்டியின் நீளம் (l) = 22செமீ, அகலம் (b) = 18 செமீ, உயரம் (h) = 10செமீ.
ஓர் இனிப்புப் பெட்டியின் கன அளவு = l \(\times\) b \(\times\) h
= 22 \(\times\) 18 \(\times\) 10 செமீ3
அட்டைப் பெட்டியின் நீளம் (l) = 1மீ = 100 செமீ,

அகலம் (b) = 88 செமீ, உயரம் (h) = 63 செமீ.
அட்டைப் பெட்டியின் கனஅளவு = l \(\times\) b \(\times\) h
= 100 \(\times\) 88 \(\times\) 63 செமீ3
அட்டைப் பெட்டியில் அடுக்க இயலும் இனிப்புப் பெட்டிகளின் எண்ணிக்கை

\(=\frac { 100\times 88\times 63 }{ 22\times 18\times 10 } \)
= 140 பெட்டிகள்
22.
நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள் = 1184 ஆகவே n = 1184
(i) E1 என்பது கணிதத்தில் நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள் உள்ள நிகழ்ச்சி என்க.
ஆகையால் n(E1) = 233, அதாவது r1 = 233
P(E1) = \(\frac { { r }_{ 1 } }{ n } =\frac { 233 }{ 1184 } \)
(ii) E2 என்பது அறிவியலில் நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள் உள்ள நிகழ்ச்சி என்க.
ஆகையால் n(E2 ) = 1069 , அதாவது , r2 = 106
P(E2) = \(\frac { { r }_{ 2 } }{ n } =\frac { 106 }{ 1184 } \)
ஆகவே அறிவியலில் நூற்றுக்கு நூறு பெறாதவராக இருக்க நிகழ்தகவு
P(E'2) = 1 - P(E2)
= 1 - \(\frac { 106 }{ 1184 } \) = \(\frac { 1078 }{ 1184 } \)
23.
ABCD என்பது ஒரு சாய்சதுரம் என்க.
அதன் சுற்றளவு = 4 × பக்கம் = 400 மீ
ஆகவே சாய்சதுரத்தின் ஒவ்வொரு பக்கமும் 100 மீ ஆகும்.
இங்கு, மூலைவிட்டம் AC= 120 மீ
\(\triangle \)ABC இல் a =100 மீ, b =100 மீ, c =120 மீ எனில்,
அரைச் சுற்றளவு s = \(\frac {a +b +c }{2}=\frac {100+100+120}{2}\)=160 மீ
\(\triangle \)ABC இன் பரப்பு =\(\sqrt {160(160-100)(160-100)(160-120)}\)
=\(\sqrt {160 \times 60\times 60\times 40}\)
=\(\sqrt {40\times 2\times 2\times 60\times 60\times 40}\)
=40 × 2 × 60 = 4800மீ2
ஆகவே, சாய்சதுர நிலம் ABCD இன் பரப்பு = 2 × \(\triangle \)ABC இன் பரப்பு =× 4800 = 9600 மீ2
24.
படத்திலிருந்து,
sin \(\theta \) = \(\frac { AB }{ AC } \)
sin 48°30' = \(\frac { AB }{ 5 } \)
0.7490 = \(\frac { AB }{ 5 } \)
5 x 0.7940 = AB
AB =3..7450 செமீ
cos \(\theta \) = \(\frac { BC }{ AC } \)
cos48°30' = \(\frac { BC }{ 5 } \)
0.6626 = \(\frac { BC }{ 5 } \)
0.6626 x 5 = BC
BC = 3.313 செமீ
முக்கோணத்தின் = \(\frac { 1 }{ 2 } \)bh அடிப்பக்கம் உயரம்
= \(\frac { 1 }{ 2 } \) x BC x AB
= \(\frac { 1 }{ 2 } \) x 3.3130 x 3.7450
= 1.6565 x 3.7450 = 6.2035925 செமீ2
25.
கொடுக்கப்பட்ட புள்ளிகள் A(3, 5), B(8, -10) என்க. மேலும் புள்ளி P(x,y) ஆனது கோட்டுத்துண்டு AB ஐ 3:2 என்ற விகிதத்தில் உட்புறமாகப் பிரிக்கும் புள்ளி என்க.
பிரிவுச் சூத்திரத்தின்படி,
P(x, y)=P\(\left( \frac { m{ x }_{ 2 }+n{ x }_{ 1 } }{ m+n } ,\frac { m{ y }_{ 2 }+n{ y }_{ 1 } }{ m+n } \right) \)
இங்கு, x1 = 3, y1 = 5, x2 = 8, y2 = −10 மற்றும் m = 3, n = 2
ஆகையால், P(x, y) = P\(\left( \frac { 3(8)+2(3) }{ 3+2 } ,\frac { 3(-10)+2(5) }{ 3+2 } \right) \)
= P\(\left( \frac { 24+6 }{ 5 } ,\frac { -30+10 }{ 5 } \right) \)=P(6, -4)
26.
(i) y = 3x −1 என்ற கோட்டிற்கான புள்ளிகளின் வரிசைக்கு சோடிகளைக் காண்பதற்கு அட்டவணையைத் தயாரிக்கலாம்.
x - இன் மதிப்பாக எந்த மதிப்பை வேண்டுமென்றாலும் எடுத்துக்கொள்ளலாம், இங்கு -1, 0 மற்றும் 1 ஐ மட்டுமே எடுத்துக்கொள்வோம்.
x = −1 எனில், y = 3(–1)–1 = –4
x = 0 எனில், y = 3(0)–1 = –1
x = 1 எனில், y = 3(1)–1 = 2
| x | -1 | 0 | 1 |
| y | -4 | -1 | 2 |
குறிக்க வேண்டிய புள்ளிகள் (x,y):
(−1, −4), (0, −1), (1, 2).

(ii) \(y=\left( \frac { 2 }{ 3 } \right) x+3\) என்ற கோட்டின் புள்ளிகளின் வரிசைச் சோடிகளைக் காண்பதற்கான அட்டவணைத் தயாரிக்கலாம்.
x இன் மதிப்புகளை -3, 0, 3 என எடுத்துக்கொள்கிறோம் (ஏன்?)
x = -3 எனில், \(y=\frac { 2 }{ 3 } (-3)+3=1\)
x = 0 எனில், \(y=\frac { 2 }{ 3 } (0)+3=3\)
x = 3 எனில், \(y=\frac { 2 }{ 3 } (3)+3=5\)
| x | -3 | 0 | 3 |
| y | 1 | 3 | 5 |
குறிக்க வேண்டிய புள்ளிகள் (x,y) :(−3,1), (0,3), (3,5).
27.
TSA = 2(lb + bh + hl)
= 2(10 x 6 + 6 x 5 + 5 x 10)
= 2(60 + 30 + 50) = 2 x (140) = 280 செமீ2
28.
a = 12
4a2 = 4 x 12 x 12 = 4 x 144 = 576 செமீ2
29.
\(s = \frac {a + b +c }{2}\)
\(s = \frac {15+20+25}{2} = \frac {60}{2} = 30\)
30.
(c)
\(\frac { 3 }{ 10 } \)
31.
P (A) + P (A)′ = 1
32.
(a)
பட்டறி நிகழ்தகவு
33.
இரண்டும் இணைகோடுகள்
34.
a மற்றும் b இரண்டும் பூஜ்ஜியமாக இருக்கக்கூடாது.
35.
(d)
எண்ணற்ற தீர்வுகள்
36.
(d)
\(\frac { 4 }{ 3 } \)
37.
38.
\(\frac { 2\tan30° }{ 1-\tan^{ 2 }30° } \)
39.
AC ன் நடுப்புள்ளி
x + 1/2 , 3 + 3/2
x + 1 = 6
x = 5
40.
\(\left(\frac{m a _2+n a _1}{m+n}, \frac{m b _2+n b _1}{m+n}\right) =(x ,0) \)
\(\frac{m b _2+n b _1}{m+n} = 0\)
\(\left(\frac{x_1+x_2}{2}, \frac{y_1+y_1}{2}\right)\) = (x, 0)
\(\Rightarrow m b_2+n b_1 =0 \)
\(\Rightarrow \frac{m}{n}=-\frac{b_1}{b_2}\)
41.
\(\left(\frac{m x_2+n x_1}{m+n}, \frac{m y_2+n y_1}{m+n}\right) =(1,6) \)
(1, 6) = \((\frac {m(-2) +n (2)}{m + n}, \frac {m(3) +n (7)}{m + n})\)
\((\frac {-2m +2n }{m + n}, \frac {3m +7n }{m + n})\)
x அச்சுத் தொலைவு \(=\frac{-2 m+2 n}{m+n}=\frac{1}{1} \)
\(-3 m =-n \)
\(\frac{m}{n} =\frac{1}{3} \Rightarrow 1: 3\)
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - பண்டைய நாகரிகங்கள் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Ancient . Civilisations Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - புரட்சிகளின் காலம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - The Age of Revolutions Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - State and Society in Medieval India Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Colonialism in Asia and Africa Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards