11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 19/12/2018
11 Model Question Paper Computer Applications
11ஆம் வகுப்பு Computer Applications / கணினி பயன்பாடுகள் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Applications / கணினி பயன்பாடுகள் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Applications Test

1.
பின்வருவனவற்றுள் எது ஒரு CISC செயலி ஆகும்?
Intel P6
AMD K6
Pentium III
Pentium IV
2.
எந்த பட்டை, திரையின் மேல் பகுதியில் உள்ளது.
பட்டிப்பட்டை
கருவிப்பட்டை
தலைப்புப் பட்டை
பணிப் பட்டை
3.
கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எது Linux இயக்க அமைப்பை சார்ந்ததல்ல
Ubuntu
RedHat
CentOS
BSD
4.
பின்வரும் இயக்க அமைப்புகளில் மொபைல் சாதனங்களை ஆதரிக்கும் எது?
விண்டோஸ் 7
லினக்ஸ்
பாஸ்
iOS
5.
ஒற்றை பக்க மற்றும் ஒற்றை அடுக்கு 12 செ.மீ விட்டம் உள்ள DVD-யின்மொத்த கொள்ளளவு எவ்வளவு?
4.7 GB
5.5 GB
7.8GB
2.2 GB
6.
கீழ்க்கண்டவற்றில் எது எண்ணிலை எண் அல்ல?
645
234
876
123
7.
2^50 என்பது எதை குறிக்கும்.
கிலோ (Kilo)
டெரா (Tera)
பீட்டா (Peta)
ஜீட்டா (Zetta)
8.
எந்தக் கணிப்பொறி தலைமுறையில் ஒருங்கிணைந்த சுற்றுகள் பயன்படுத்தப்பட்டது?
முதலாம்
இரண்டாம்
மூன்றாம்
நான்காம்
9.
10.
11.
Impress-ல் கொடாநிலை பார்வை அடையாளம் காணவும்?
Normal
Outline
Handout
Slide Sorter
12.
கால்க்-ல் ஒரு நெடுவரிசையின் தலைப்பு என்பது:
எண்
குறியீடு
தேதி
எழுத்து
13.
14.
Find & Replace அம்சம் எந்த பட்டிப்பட்டையில் உள்ளது?
File
Edit
Tools
Format
15.
எண் வரிசையிடும் விருப்பத்தை கொண்ட பட்டிப்பட்டை எது?
File
Edit
Tools
Format
16.
இயந்திர மொழி (Machine Language) என்றால் என்ன?
17.
இயக்கநேரம் (Access Time) என்றால் என்ன?
18.
முதன்மைப் பக்கம் பற்றி எழுதுக.
19.
Save மற்றும் Save As-க்கு உள்ள வித்தியாசங்கள் யாவை?
20.
பல பயனர் இயக்க அமைப்பு என்றால் என்ன?
21.
EPROM- உள்ள தரவை எவ்வாறு அழிப்பாய்?
22.
எழுத்துருக்களை நினைவகத்தில் கையாளுவதற்கான குறியீட்டு முறைகளைப் பட்டியலிடுக.
23.
முதன்மை நினைவகம் மற்றும் இரண்டாம் நிலை நினைவகம் வேறுபாடு யாது?
24.
நகலெடுத்தல், வெட்டுதல் மற்றும் ஓட்டுவதற்கான குறுக்குவழி சாவி சேர்மானங்கள் யாவை?
25.
உங்கள் ஆவணத்தில் படங்களை எவ்வாறு சேர்ப்பாய்?
26.
iOS இயக்க அமைப்பு பற்றி எழுதுக.
27.
ASCII குறிப்பு வரைக.
28.
தானியங்கு நிரப்பு வசதி மூலம் எவ்வாறு எண் வரிசையை உருவாக்குவாய்?
29.
ரைட்டர் ஆவணத்தில் தலைப்பு மற்றும் அடிக்குறிப்பை எவ்வாறு சேர்ப்பாய் ?
30.
மறுசுழற்சி தொட்டியிலுள்ள ஒரு கோப்பு அல்லது கோப்புறையை எவ்வாறு மீட்டெடுப்பாய்?
31.
தொடங்குதல் (Booting) என்றால் என்ன? அதன் வகைகள் யாவை?
32.
எண் முறையில் அடிமானம் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
33.
ஆறாவது தலைமுறையின் தன்மைகளைப் பற்றி சுருக்கமாக எழுதுக.
34.
Impress-ல்பயனர்களை ஈர்க்கும் வகையில் எத்தனை வகையான காட்சிகள் வழங்கப்படுகின்றன.
35.
பக்க அமைவுகள் எத்தனை வகைப்படும்?
36.
ஒரு பயன்பாட்டிற்கான இடைமுகத்தை வடிவமைக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவற்றைப் பட்டியலிடுக.
37.
ஓபன் ஆஃபீஸ் கால்க் சன்னல் திரையின் பகுதிகளை விளக்குக.
38.
உரையை வடிவூட்டல் செய்வதற்கானப் பல்வேறு வழிகளை விவரி?
39.
உபுண்டு முகப்புத்திரையின் பட்டிப்பட்டையில் உள்ள குறிப்பான்களை விவரி
40.
காலியான நிகழ்த்துதலை தேர்ந்தெடுப்பதன் மூலம் நிகழ்த்தலை உருவாக்கும் படிநிலைகளை விவரி?
41.
திறந்த மூல இயக்க அமைப்பின் நன்மை மற்றும் தீமைகளை விளக்குக
42.
நுண்செயலியின் பண்பு கூறுகளை விளக்குக.
43.
கணிப்பொறியின் பல்வேறு தலைமுறைகளை விளக்குக.
44.
வார்புருக்கள் பயன்படுத்தலில் சில நன்மைகள் பட்டியலிடு.
45.
ஓபன் ஆஃபீஸ் ரைட்டரில் ஒரு சொல்லை தேடி மற்றொரு சொல்லாக மாற்றும் வழிகளைப் பற்றி எழுது.
1.
(c)
Pentium III
2.
(a)
பட்டிப்பட்டை
3.
(a)
Ubuntu
4.
(a)
விண்டோஸ் 7
5.
(a)
4.7 GB
6.
(c)
876
7.
(c)
பீட்டா (Peta)
8.
(c)
மூன்றாம்
9.
(c)
10.
(a)
11.
(a)
Normal
12.
(d)
எழுத்து
13.
(c)
14.
(b)
Edit
15.
(d)
Format
16.
1. இயந்திர மொழி என்பது இருநிலை இலக்கங்கள் அல்லது பிட்டுகளின் தொகுப்பாகும்.
2. அது கணிப்பொறி படிக்க மற்றும் விளங்கிக் கொள்ளப் பயன்படுகிறது.
17.
இயக்கநேரம் நினைவகம் படிக்க/எழுதும் கோரிக்கைக்கு எவ்வளவு விரைவாக பதிலளிக்க முடியும் என்பதைக் குறிக்கின்றது.
18.
1.நிகழ்த்துதலின் பக்க அமைவை வரையறுக்க முதன்மைப் பக்கம் பயன்படுகிறது.
2.impress-ல் முன்னரே வரையறுக்கப்பட்ட முதன்மைப் பக்கங்கள் இருக்கும்.
3. கொடாநிலை பக்கம் வெற்றிடம் ஆகும்.
4.மற்றவை குறிப்பிட்ட பின்னணி உடையவை.
19.
1.முதன் முதலாக ஒரு கோப்பினை சேமிக்கும் போது 'Save' அல்லது 'Save As'. இதில் எதைத் தேர்வு செய்தாலும் 'Save As'. உரையாடல் பெட்டி தோன்றும்.அதில் கோப்பின் பெயர்,வடிவம்,மற்றும் எங்கு சேமிக்க வேண்டும் என்பதைக் கொடுத்து சேமிக்கலாம்.
2. ஒரு முறைக் கோப்பினைக் குறிப்பிட்ட பெயரில் சேமித்த பின்,'Save' என்றத் தேர்வைப் பயன்படுத்தினால் மாற்றங்கள் நடப்புக் கோப்பில் சேமிக்கப்படும்.மேலும் தொடர்ந்து அக்கோப்பில் வேலை செய்யலாம்.
3. அனால் 'Save As' தேர்வைப் பயன்படுத்தினால் மீண்டும் 'Save As' உரையாடல் பெட்டி தோன்றும் அதில் கோப்பிற்கு வேறொரு பெயர், வடிவம் மற்றும் எங்கு சேமிக்க வேண்டும் என்பதைக் கொடுத்து,கோப்பினை நகலெடுத்துக் கொள்ளலாம்.
20.
ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பயனர்கள் ஒரே மாதிரியான தரவுகளையும் பயன்பாடுகளையும் கணிப்பொறியில் பயன்படுத்த அனுமதிக்கும் இயக்க அமைப்பு "பல பயனர் இயக்க அமைப்பு"எனப்படும்.
21.
EPROM-ல் தகவல்களை புற ஊதா ஒளி மூலம் அழிக்கப்படுகிறது.
22.
எழுத்துருக்களை நினைவகத்தில் கையாளுவதற்கான பல்வேறு குறியீட்டு முறைகள்
1.BCD -Binary Coded Decimal
2.EBCDIC -Extended Binary Coded Decimal Interchange Code.
3.ASCII -American Standard Code for Information Interchange.
4.ISCII - Indian Standard Code for Information Interchange.
5.Unicode
23.
| முதன்மை நினைவகம் | இரண்டாம் நிலை நினைவகம் |
|---|---|
| 1. அழியும் நினைவகமாகும் | அழியா நினைவகமாகும் |
| 2. மின்சாரம் நிறுத்தப்பட்டவுடன் அதில் சேமிக்கப்பட்டுள்ள அனைத்துத் தகவல்களும் அழிந்துவிடும். | மின்சாரம் நிறுத்தப்பட்டாலும் அதில் சேமி்க்கப்பட்டுள்ள அனைத்துத் தகவல்களும் அழியாமல் இருக்கும். |
| எ.கா: RAM | எ.கா: வன்வட்டு, குறுவட்டு (CD-ROM) |
24.
| செயல் | குறுக்குவழிச் சாவிச் சேர்மானம் |
| நகலெடுத்தல் | Ctrl + C |
|
வெட்டுதல் |
Ctrl + X |
| ஓட்டுதல் | Ctrl +V |
25.
படத்தை சேர்ப்பதற்கான வழிமுறைகள் :
1. எந்த இடத்தில் சேர்க்க வேண்டுமோ அந்த இடத்திற்கு செருகும் புள்ளியைக் கொண்டு செல்லவும்.
2. Insert \(\rightarrow \) Picture \(\rightarrow \) From File \(\rightarrow \) என்ற கட்டளையத் தேர்வு செய்யவும்.
3. Insert picture உரையாடல் பெட்டி படத்தொகுப்புடன் (picture gallery) தோன்றும் அதில் தேவையான படத்தை தேர்வு செய்து open பொத்தாணைக் கிளிக் செய்யவும்
4. தேவையான படம் படத்தொகுப்பில் இல்லையெனில், கோப்புறையில் (Folder) உள்ள தேவையான படத்தை தேர்வு செய்து Open பொத்தானை கிளிக் செய்யவும்.
5. தேர்வு செய்யப்பட்ட படம் ஆவணத்தில் சேர்க்கப்பட்டிருக்கும்.
26.
iOS ஓர் மொபைல் இயக்க அமைப்பாகும்.
ஆப்பிள் இன்க் நிறுவனம். பிரத்தியேகமாக அதன் வன்பொருளுக்கென உருவாக்கியது.
ஐபோன், ஐபாட் டச் போன்ற மொபைல் சாதனங்களில் பல்வேறு பணிகளை செயல்படுத்துவது இந்த இயக்க அமைப்பாகும்.
இது அண்ட்ராய்டுக்குப் பின்னர் உலகளாவிய அளவில் இரண்டாவது மிகப் பிரபலமான மொபைல் இயக்க அமைப்பாகும்.
27.
1.அமெரிக்க ஐக்கிய நாட்டின் (USA) அங்கீகாரம் பெற்ற மிகவு பிரபலமான ஒரு குறியீட்டு முறையாகும்.
2. பெரும்பாலான கணிப்பொறிகளில் இந்த முறை பயன்படுத்தப்படுகிறது. இந்த குறியீட்டு முறை ஆங்கில மொழி எழுத்துருக்களை கையாளும் திறன் பெற்றது. அதாவது, இத முறையில் ஒவ்வொரு எழுத்துருவுக்கும் ஒரு குறிப்பிட்ட எண் வழங்கப்பட்டுள்ளது.
3.ASCII-8 என்ற புதிய பாதிப்பு, 28 பிட் முறையில் 256 எழுத்துருக்களைக் கையாளும் திறன் 0 முதல் 255 வரை குறியீட்டு எண்கள் வழங்கப்பட்டுள்ளது.
4.ஆங்கில பெரிய எழுத்துரு A க்கு நிகரான ASCII குறியீட்டு எண் 65. இதற்கான நிகரான 7 பிட் ASCII யின் இருநிலை மதிப்பு 1000001 ஆகும். ASCII-8 ன் இருநிலை மதிப்பு 01000001.
28.
(i) படிநிலை 1: நுண்ணறை A1 ல் 1 என தட்டச்சு செய்து Enter பொத்தானை அழுத்தவும்.
(ii) படிநிலை 2: மீண்டும் நுண்ணறைச் சுட்டியை A1 க்கு நகர்த்தவும்.
(iii) படிநிலை 3: நுண்ணறை சுட்டியின் Drag fill handle லின் மீது அம்புக்குறியை வைக்க வேண்டும். இப்போது சிறிய + குறி தோன்றும்.
(iv) படிநிலை 4: இப்போது நுண்ணறைச் சுட்டியின் Drag fill handle ஐ கீழ்நோக்கி இழுக்க வேண்டும். அவ்வாறு செய்யும் போது ஒவ்வொரு நுண்ணறையிலும் நிரப்பப்படும் மதிப்பு நுண்ணறை சுட்டியின் வலது பக்கத்தில் தோன்றும்.
(v) படிநிலை 5: தேவையான எண் வரிசை தோன்றிய பின், சுட்டியை இழுப்பதை விட்டுவிடவும்.
29.
1. Insert Header Default என்ற கட்டளையைப் பட்டிப்படையிலிருந்து தேர்வு செய்யவும்.
2. தற்போது தலைப்பு பகுதியும் பணியிடத்தில் தட்டச்சு செய்த பகுதியும் தனித்தனியாக பிரிக்கப்பட்டிருக்கும்.
3. தலைப்பு பகுதியில் நேரடியாகவோ தலைப்பை தட்டச்சு செய்யலாம் அல்லது எல்லா பக்கங்களிலும் தலைப்பைச் சேர்க்க தலைப்புப் பகுதியில் கிளிக் செய்து Insert Fields Title என்ற கட்டளையைத் தேர்வு செய்து தலைப்பை தட்டச்சு செய்யலாம்.
4. Insert Footer Default என்ற கட்டளையைப் பட்டிப்பட்டையிலிருந்து தேர்வு செய்தால் அடிக்குறிப்பு உருவாகும்.
5. அடிக்குறிப்பில் செருகும் புள்ளியை வைத்து கிளிக் செய்யவும்.
6. Insert Fields Date என்ற கட்டளையைத் தேர்வு செய்தால் எல்லா பக்கங்களிலும் கணிப் பொறியின் தேதி புகுத்தப்படும்.
30.
1. திரைமுகப்பிலிருந்து, மறுசுழற்சித் தொட்டியைத் திறக்கவும்.
2. அதில், அழிக்கப்பட்ட கோப்புகள் அல்லது கோப்புறைகள் தோன்றும்,மீட்டெடுக்க வேண்டிய கோப்பு அல்லது கோப்புறையின் மீது வலது கிளிக் செய்யவும், அப்போது தோன்றும் மேல்மீட்புப் பெட்டியிலிருந்து Restore தேர்வைக் கிளிக் செய்யவும்.
3.மறுசுழற்சித் தொட்டியிலுள்ள அனைத்து கோப்பு அல்லது கோப்புறைகளையும் மீட்டெடுக்க, Restore all என்ற பணிக்குறியை கிளிக் செய்யவும்.
31.
கணிப்பொறியுடன் இணைக்கப்பட்ட அனைத்து புறக்கருவிகளும் சரியான நிலையில் இருப்பதை உறுதி செய்த பிறகு "அடிப்படை உள்ளீட்டு வெளியீட்டு முறைமை" (BIOS - Basic Input Output System) இயக்கப்படும். இந்தச் செயல்முறை தொடங்குதல் (Booting) என அழைக்கப்படுகிறது.
இரண்டு வகையான தொடங்குதல் முறைகள்:
1. தண் தொடக்கம் (Cold booting)
2. உடன் தொடக்கம் (Warm booting)
32.
ஒவ்வொரு எண் முறையும் அதன் அடிமான மதிப்பைக் கொண்டு அடையாளம் காணப்படும். அடிமானம் என்பது ஆங்கிலத்தில் Radix அல்லது Base எனப்படும். அடிமானம் ஒவ்வொரு எண்முறையிலும் உள்ள மொத்த எண் மதிப்பு உருக்களின் எண்ணிக்கையைக் குறிக்கும். எ.கா:
| பதின்ம எண்முறை | அடிமானம் 10 |
| இருநிலை எண்முறை | அடிமானம் 2 |
| எண்ணிலை எண்முறை | அடிமானம் 8 |
| பதினாறு நிலை எண்முறை | அடமானம் 16 |
33.
1. செயற்கை நரம்பியல் வலையமைப்பின் (ANN - Artificial Neural Networks) அடிப்படையில் ஆறாவது தலைமுறை கணிப்பொறிகள், அறிவு சார்ந்த கணிப்பொறிகள் என வரையறுக்கப்படுகிறது.
2. ஆறாவது தலைமுறை, கணிப்பொறிகளின் வியத்தகு மாற்றங்களில் ஒன்று பரந்த வலையமைப்பு (WAN - Wide Area Networking(-ன் வளர்ச்சி ஆகும்.
3. இயற்கை மொழி செயலாக்கம் (NLP - Natural Language Processing) என்பது செயற்கை நுண்ணறிவின் (AI - Artificial Intelligence) - ஒரு அங்கமாகும்.
4. இது மனித மொழியைப் புரிந்துகொள்ளக் கூடிய ஒரு கணிப்பொறி நிரலை உருவாக்குவதற்கானத் திறனை வழங்குகிறது.
i .இணை மற்றும் பகிர்வு கணிப்பீடு
ii. கணிப்பொறிகள் திறமையாகவும், விரைவாகவும் மற்றும் சிறியதாகவும் இருக்கும்.
iii. செயற்கை மனிதர்கள் (Robots) உருவாக்குதல்.
iv. இயற்கை மொழி செயலாக்கம்
v. குரல் அறிதல் மென்பொருள் உருவாக்குதல்.
34.
Impress ல் ஐந்து வகையானக் காட்சிகள் வழங்கப்படுகின்றன.
1. Normal View தனித்தனி சிலுவை உருவாக்கவும், பதிப்பிக்கவும் உதவுகிறது.
2. Outline View சில்லுவின் பெயர் மற்றும் தலைப்புகளைத் தேவைக்கேற்ப பதிப்பித்துக் கொள்ள உதவுகிறது.
3. Notes View சில்லுகளின் குறிப்புகளைச் சேர்க்கவும், ஏற்கனவே உள்ளக் குறிப்புகளைப் பார்க்க உதவுகிறது.
4. Slide Sorter எல்லா சில்லுகளை சிறிய வடிவத்தில் பார்க்க உதவுகிறது.
5. Handout View சில்லுவின் அளவை மாற்றி, பல சில்லுகள் ஒரே அச்சிட்டுக் கைப்பிடி அறிக்கைகளாக வழங்க உதவுகிறது.
35.
இரு வகையான பக்க அமைவுகள் உள்ளன.
பக்கவாக்கு மூலம் (Landscape):
1. ஆவணத்தின் அகலம் அதன் நீளத்தை விட பெரியதாக இருந்தால் பக்கவாட்டு வடிவம் எனப்படும்.
2. தொழில் முறை புகைப்படங்கள் அழைப்பிதழ்கள் போன்றவற்றிற்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
நீளவாக்கு வடிவம் (Portrait):
1. கொடாநிலையாக ஒரு ஆவணத்தின் பக்க அமைவானது நீளவாக்கில் இருக்கும்.
2. இந்த அமைவில் ஆவணத்தின் நீளம் அதன் அகலத்தை விட பெரியதாக இருக்கும். புத்தகங்கள் , செய்தித்தாள்கள் இந்த வடிவத்தில் அச்சிடப்படும்.
36.
பயனர் இடைமுகமானது நீண்ட காலத்திற்கு பயன்பாட்டில் இருக்க பயனர் விரும்புவர்.
இடைமுகம் பயனரின் தேவைகளை திருப்தி செய்ய வேண்டும்.
தட்டச்சு செய்யும் நேரத்தை குறைக்க, வரைகலை கூறுகளான பாட்டிகள், சன்னல் திரைகள். தத்தல், பணிக்குறி போன்றவற்றின் மூலம் பயனரின் விலைமதிப்பற்ற நேரத்தை குறைப்பது இயக்க அமைப்பின் கூடுதல் பயனாகும்.
எந்தவொரு தயாரிப்பின் இறுதி நோக்கமும், வாடிக்கையாளரை திருப்திப்படுத்த வேண்டும். என்பதாகும், அதே போல், பயனர் இடைமுகமும் வாடிக்கையாளரை திருப்பதிப்படுத்த வேண்டும்.
பயனர் செய்யும் தவறுகளை இடைமுகம் குறைக்க வேண்டும், அதே போல் பயனர் குறைந்த பயிற்சியிலும், தவறுகள் குறையும் வண்ணம் இருத்தல் வேண்டும்.
37.
1. தலைப்புப் பட்டை
2. கட்டுப்பாட்டு பொத்தான்கள்.
3. பட்டிப் பட்டை
4. கருவிப் பட்டை
5. பெயர் பெட்டி / முகவரி பெட்டி
6. விரைவு செயற்கூறு வழிகாட்டி
7. வாய்ப்பாட்டுப் பட்டை / உள்ளீட்டு பெட்டி
8. வடிவூட்டல் பண்புகள்
9. பெரிதாக்குதல்
10. உருள் பட்டை
11. நிலைமைப் பட்டை.
1. தலைப்புப் பட்டை: சன்னல் திரையின் மேல்பக்கம், தலைப்புப் பட்டை என்று அழைக்கப்படுகிறது. இது பயன்பாட்டின் பெயரையும், அதன் மூலம் உருவாக்கப்படும் கோப்பின் பெயரையும் காட்டும்.
2. கட்டுப்பாட்டு பொத்தான்கள்: தலைப்புப் பட்டையின் வலது ஓரத்தில் மூன்று கட்டுப்பட்டு பொத்தான்கள் உள்ளன. அவை
1. சிறதாக்கு
2. பெரிதாக்கி / மீட்டிமை
3. மூடு பொத்தான்கள்
3. பட்டிப்பட்டை : தலைப்புப் பட்டைக்கு கீழே உள்ளது. பட்டிப்பட்டை ஆகும்.
4. கருவிப்பட்டை: ஓபன் ஆபிஸ் கால்க்-ல் கொடா நிலையாக மூன்று கருவிப்பட்டைகள் உள்ளன. அவை
(i) செந்தரக் கருவிப்பட்டை: இந்தப்பட்டை, File, Edit மற்றும் Data பட்டிப்பட்டையிலுள்ள அடிக்கடிப் பயன்படுத்தப்படும் கட்டளைகளின் பணிக்குறிகளைக் கொண்டுள்ளது.
(ii) வடிவூட்டல் கருவிப்பட்டை: உரை மற்றும் நுண்ணறைகளை வடிவூட்டல் செய்யும் கட்டளைகளின் பணிக்குறிகளைக் கொண்டுள்ளது.
(iii) வாய்ப்பாட்டு பட்டை : வாய்ப்பாட்டு பட்டை பெயர் பெட்டி, செயற்கூறு வழிகாட்டி, கூட்டல் பொத்தான், செயற்க்கூறு பொத்தான் மற்றும் உள்ளீட்டுத்தாரை ஆகியவற்றைக் கொடுள்ளது.
5. பெயர் பெட்டி / முகவரி பெட்டி (Name box / Address box) : இது நடப்பு நுண்ணறையின் முகவரியைக் காட்டும்.
(i) செயற்கூறு வழிக்காட்டி: செயற்கூறுகளைச் சேர்க்க உதவுகிறது.
(ii) கூட்டல் பொத்தான்: கூட்டல் செயற்கூற்றை விரைவாகச் செருக உதவுகிறது.
(iii) உள்ளீட்டுத்தாரை (Input Line): நடப்பு நுண்ணறையில் உள்ள தரவுகளைக் காட்டவும் அவற்றை பதிப்பிக்கவும் பயன்படுகிறது.
5. பணித்தளம்: வாய்ப்பாட்டைப் பட்டையின் கீழ் உள்ள கட்டங்களுடன் கூடிய நுண்ணறைகள் பணிப்பகுதி அல்லது அட்டவணைத்தாள் என்றழைக்கப்படுகிறது.
6. திரை உருளல் பட்டை: அட்டவணைச்செயலி சன்னல் திரை இரண்டு விதமான திரை உருளல் பட்டைகளை கொண்டுள்ளது. அவை
1. நெடுங்கிடை திரை உருளல்
2. படுக்கிடை திரை உருளல் பட்டை
1. நெடுங்கிடை திரை உருளல் பட்டை: திரையை மேல் மற்றும் கீழாக நகர்த்த உதவுகிறது.
2. படுக்கிடை திரை உருளல் பட்டை: திரையை வலது மற்றும் இடது புறமாக நகர்த்த உதவுகிறது.
(i) திரை உருளல் பொத்தான்கள் (Scroll buttons): திரையைத் தேவையான அளவிற்கு நகர்த்த உதவுகிறது.
7. அட்டவணைத்தாள் தத்தல்: நுண்ணறைக் கட்டங்களின் கீழே அட்டவணைத்தாள் தத்தல்கள் (Sheet Tabs) உள்ளன. கொடாநிலையாக Sheet1, Sheet2 மற்றும் Sheet3 என்ற பெயரில் மூன்று தாள்கள் இருக்கும்.
6. நிலைமைப்பட்டை: அட்டவணைத்தாள்கள் மற்றும் படுக்கிடை திரை உருள் பட்டையின் கீழ் உள்ள பகுதி, நிலைமைப்பட்டை எனப்படும். இது அட்டவணைத்தாளின் நடப்பு நிலைமையை காண்பிக்கும். ஆதாவது தாள்களின் எண்ணிக்கை, பக்க அமைப்பு போன்றவற்றைக் காண்பிக்கும்.
38.
உரையை தட்டச்சு செய்யும் போது கொடாநிலையாக உள்ள எழுத்துவகை, அளவு, நிறம் , வடிவமைப்பு போன்றவற்றை மாற்றியமைப்பது '' உரைவடிவூட்டல் எனப்படும்.
| செயல் | செயல்பாடு | பனிக்குறி | குறுக்கு வழி |
|---|---|---|---|
| தடிமனாக்குதல் | உரையைத் தடித்த எழுத்துக்களாக மாற்றுவதற்கு | ![]() |
Ctrl + B |
| சாய்வெழுத் தாக்குதல் | உரையைத் சாய்ந்த எழுத்துக்களாக மாற்றுவதற்கு | ![]() |
Ctrl + I |
| அடிக்கோடிடுதல் | உரையைத் அடிக்கோடிட | ![]() |
Ctrl + U |
(i) Times New Roman என்பது கொடாநிலை எழுத்து வகையாகம்.எழுத்து வகை மாற்ற பனிக்குறியைக் கிளிக் செய்யவும்.
.jpg)
(ii) எழுத்தின் கொடாநிலை அளவு 12 புள்ளியாகும்.எழுத்தின் அளவை மாற்ற எழுத்து அளவு பணிக்குறியை கிளிக் செய்து மாற்றலாம்.
.jpg)
(iii) எழுத்தின் கொடாநிலை நிலை நிறம் கருப்பு
என்ற பணிக்குறியை க் கிளிக் செய்தால் ஒரு வண்ணத்தட்டு (color Palatte ) திரையில் தோன்றும். இதில் தேவையான நிறத்தைத் தேர்வு செய்யலாம்.
தட்டச்சு செய்யப்பட்ட எழுத்துக்களை கீழ் கொடுக்கப்பட்டுள்ளவாறு மாற்றிக் கொள்ள முடியும்.
(i) Uppercase (ii) toggle case (iii) sentence case (iv) lower case (v) capitalize word
மேற்கண்டவாறு மாற்றுவதற்கு:
(i) மாற்ற வேண்டிய உரையைத் தேர்ந்தெடுக்கவும்.
(ii) Format \(\rightarrow \) Change case என்பதைத் தேர்வு செய்யுவும்.
(iii) ஒரு உரையின் முக்கியமான பகுதிகளை படிப்பவரின் கவனத்திற்கு கொண்டு செல்ல உரையை உயர்த்திக்காட்டுதல் பயன்படுகிறது.
(iv) தேர்வு செய்யப்பட்ட உரையை உயர்த்திக் காட்ட Highlighting பணிக்குறியை கிளிக் செய்தால் ஒரு வண்ணத் தட்டு தோன்றும்.அதில் தேவையான வண்ணத்தை தேர்வு செய்து உரையை உயர்த்திக் காட்டலாம்.
(v) உயர்த்திக் காட்டப்பட்ட உரையை அதன் இயல்பு தோற்றத்திற்கு மாற்ற, உயரத்திக் காட்டப்பட்ட உரையை தேர்வு செய்து வண்ணத் தட்டில் No fill தேர்வைக் கிளிக் செய்யவும்.
39.
1.பட்டிப்பட்டை: பட்டிப்பட்டை திரையின் மேல்பகுதியில் அமைந்துள்ளது. உபுண்டுவில் உள்ள பட்டிப்பட்டை பொதுவானச் செயல்பாடுகளை இணைக்கின்றது.பட்டிப்பட்டையின் வலது ஓரத்தில் அடிக்கடி பயன்படுத்தப்படும் பணிக்குறிகள் உள்ளது. குறிப்பான் அல்லது அறிவிப்பு பகுதி பட்டிப்பட்டையில் மிகவும் பொதுவான குறிப்பான்கள் இடம்பெறும்.

2. வலையமைப்பு குறிப்பான் (Network Indicator)
கம்பி வலையமைப்பு அல்லது கம்பியில்லா வலையமைப்பை மேலாண்மை செய்ய அனுமதிக்கின்றது.
3. உரை உள்ளீடு அமைப்பு (Text Entry settings)
தற்பொழுது பயன்படுத்தப்படும் விசைப்பலகையில் அமைப்பைக் காண்பிக்கும் (En,Fr, Ku போன்றவை). ஒன்றுக்கு மேற்பட்டவிசைப்பலகை அமைப்பு இருந்தால், நமது விருப்பத்திற்கேற்ப விசைப்பலகையில் அமைப்பை தேர்வு செய்து கொள்ள அனுமதிக்கின்றது.
4. செய்திக் குறிப்பான் (Messaging indicator)
சமூகப் பயன்பாடுகளை இணைக்க உதவுகிறது. உடனடி செய்தியாளர் (Instant Messenger) மற்றும் மின்னஞ்சல் வாடிக்கையாளர் போன்றவற்றை இங்கிருந்து அணுக முடியும்.
5.ஒலி குறிப்பான் (Sound Indicator)
ஒலி பெருக்கியின் அளவைக் கூட்ட அல்லது குறைக்க, ஒலி இசைப்பானை (Music Player) இதன் மூலம் எளிதாக இயக்க முடியும்.
6.கடிகாரம்: கணினியில் தற்போதைய நேரத்தைக் காட்டும். மேலும் காலண்டர்,தேதி மற்றும் நேரத்தை மாற்றி அமைக்கும் இணைப்பை வழங்கின்றது.
7. அமர்வு குறிப்பான் (Session Indicator):
கணினியின் அமைப்புகள், உபுண்டு உதவி மற்றும் அமர்வு விருப்பங்கள் (பயனர்/விருந்தினர் அமர்வு. அமர்விலிருந்து வெளியேறுதல், திரும்பவும் கணிப்பொறியை இயக்க அல்லது கணிப்பொறியின் இயக்கத்தை முழுவதுமாக நிறுத்தல்) போன்ற செயல்களுக்கு ஒரு இணைப்பை வழங்குகிறது.
8. தலைப்புப் பட்டை (Title bar):
தலைப்புப் பட்டை தற்பொழுது நாம் வேலை செய்து கொண்டிருக்கும் நடப்பு கோப்புப் பெயரை (Directory) காண்பிக்கிறது.மேலும் தலைப்புப் பட்டையில் மூடு, சிறியதாக்கு மற்றும் பெரியதாக்கு பொத்தான்கள் உள்ளன.
9. கருவிப் பட்டை (Tool bar):
கருவிப்பட்டை நம்முடைய நடப்பு கோப்புறை உலவியில் (browsing) வரலாற்றை (இரண்டு அம்பு பொத்தான்கள் மூலம்) காட்டும். மேலும் இதில் நம்முடைய உரை அமைப்பின் (File system) இடம், தேடல் பொத்தான் மற்றும் நடப்பு கோப்புறையை பார்வையிடு விருப்பங்களை கொண்டுள்ளது.
40.
1.காலியான நிகழ்த்துதலை தேர்ந்தெடுக்க TYPE என்பதன் கீழ் உள்ள Empty Presentation என்ற ரேடியோ பொத்தானைத் தேர்வு செய்து Next பொத்தானைக் கிளிக் செய்ய வேண்டும்.
2. Select a slide design என்பதன் கீழ் உள்ள டிசைனைத் தேர்வு செய்யவும். இது இரண்டு முக்கிய தேர்வுகளைக் கொடுக்கும். presentation Backgrounds மற்றும் Presentations.
3.Slide Design பட்டியலில் உள்ளவற்றில் <Original> தவிர்த்து, ஏதேனும் ஒன்றைக் கிளிக் செய்தால் அது முன்னோட்ட பலகத்தில் (preview) தோன்றும்.
4.Presentation Background -ல் 25 வகையான Backgrounds தோன்றும் Presentation என்பதில் '<Oruginal>', 'Introducing a New Product' 'Recommendation of a Strategy என்ற மூன்று முன்னரே வடிவமைக்கப்பட்ட பின்னணி தோன்றும். <Original> என்பது காலியான பின்னணி ஆகும்.
5.இந்தப் பட்டியலில் ஒன்றைத் தேர்வு செய்தால் பிரிவியூ சன்னலின் திரையில் உள்ள preview slide design மூலம் முன்னோட்டம் பார்த்து கிளிக் செய்யலாம்.
6.நிகழ்த்துதலை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதைத் தேர்வு செய்ய 'Select an output medium' என்பதன் கீழ் உள்ளதைத் தேர்வு செய்யலாம். பொதுவாக நிகழ்த்துதல் கணிப்பொறித் திரையில் காட்ட உருவாக்கப்படுகிறது. எனவே screen என்பதைத் தேர்வு செய்யவும்.
7. Next பொத்தானைகே கிளிக் செய்தால் தேவையான சில்லுமாற்றத்தைத் தேர்வு செய்யலாம். Speed என்ற கீழிறங்கு பெட்டியில் இடையேயான சில்லுமாற்ற வேகத்தைத் தேர்வு செய்யலாம். Speed ல் Medium என்பதைத் தேர்வு செய்வது நல்லது.
8.Create பொத்தானை கிளிக் செய்தால் புதிய நிகழ்த்துதல் தோன்றும்.
41.
நன்மைகள்:
இலவசமாக பயன்படுத்த, விநியோகிக்க மற்றும் மாற்றிடக் கூடியதாகும்.
உருவாக்கிய மூல நிறுவனத்தையோ அல்லது உருவாக்கிய அறிஞரையோ சார்ந்திருப்பதில்லை. நிறுவனம் இயங்கவில்லை என்றாலும் இயக்க அமைப்பின் குறிமுறை தொடர்ந்து இருக்கும் மற்றும் அதன் பயனர்களால் மேலும் புதுப்பிக்கப்படும்.
தீமைகள்:
வணிக தனி உரிம இயக்க அமைப்புகள் போல பயனர் எளிதாக பயன்படுத்த முடியாது.
திறந்த மூல இயக்க அமைப்பு மற்றும் தனி உரிம இயக்க அமைப்பு இரண்டிலும் இயங்கக் கூடிய பயன்பாட்டு மென் பொருள்கள் குறைவு.
எனவே திறந்த மூல இயக்க அமைப்புக்கு மாறினால், தனி உரிம இயங்கு தளத்தில் இயங்கும் மென்பொருள்களின் ஒத்தியங்கும் பகுப்பாய்வை மேற்கொள்ளுதல் வேண்டும்.
திறந்த மூல இயக்க அமைப்புகளின் உருவாக்கம் இணையாக சென்று கொண்டிருக்கும். இது எந்த பதிப்பில் எந்த வகையான செயல்பாடு உள்ளதெனக் குழப்பத்தை ஏற்படுத்தும்.
திறந்த மூல இயக்க அமைப்புகள் மிகப்பெரிய உறுதுணையாக இருப்பிதில்லை.
தற்போது கிடைக்க கூடிய வன்பொருள்கள் திறந்த மூல இயங்கு தளங்களில் ஒத்துப் போவதில்லை.
42.
ஒரு நுண்செயலின் செயல்பாடு, கீழ்காணும் அதன் பண்பியல்புகளை அடிப்படையாக கொண்டது.
1. கடிகார வேகம் (Clock Speed)
2. கட்டளை தொகுப்பு (Instruction Set)
3. வேர்டு அளவு (Word Size)
1. கடிகார வேகம்:
(i) ஒவ்வொரு நுண்செயலியிலும் உள்ளே ஒரு கடிகாரம் உள்ளது. கணிப்பொறியின் ஒவ்வொரு கட்டளையும் நிறைவேற்றுதலின் வேகத்தை இந்தக் கடிகாரம் கட்டுப்படுத்துகிறது. இதுவே கடிகாரத்தின் வேகம் எனப்படும்.
(ii) கணிப்பொறியின் வேகம் மெகா ஹெர்ட்ஸ் (Mega Hertz) மற்றும் கிகா ஹெர்ட்ஸ் (Mega Hertz) அளவில் அளக்கப்படுகிறது.
2. கட்டளைத் தொகுப்பு:
(i) கணிப்பொறியில் தரவை செயற்படுத்த கொடுக்கும் கட்டளை அறிவுறுத்தல் எனப்படும்.
(ii) ஒரு நுண்செயலி இயக்குவதற்காக, வடிவமைக்கப்பட்ட அடிப்படையான எந்திர மொழி அறிவுறுத்தல்களின் தொகுப்பு, கட்டளைத் தொகுதி எனப்படும்.
செயல்படுத்தும் செயல்கள்:
(i) தரவு மாற்றம்
(ii) எண் கணித செயல்முறைகள்
(iii) தருக்கச் செயல்முறைகள்
(iv) கட்டுப்பாடு நகர்வு
(v) உள்ளீடு/வெளியீடு
3. வேர்டு அளவு:
(i) வேர்டின் அளவு என்பது ஒரு தடவை செயலி செயற்படுத்தும் பிட்டுகளின் அளவாகும்.
(ii) ஒரு வேர்டு அளவு என்பது கணிப்பொறியின் முதன்மை நினைவகம் (RAM) செயற்படுத்தும் கட்டளையின் அளவையும், நுண்செயலியில் உள்ள ஊசிகளின் (Pins) எண்ணிக்கையையும் பொறுத்ததாகும்.
(iii) மொத்த உள்ளீடு மற்றும் வெளியீடு ஊசிகளின் மொத்த எண்ணிக்கை நுண்செயலியின் கட்டமைப்பைத் தீர்மானிக்கிறது.
43.
| கணிப்பொறியின் தலைமுறை | காலம் | பயன்படுத்திய முதன்மை பொருள் | நிறை/குறை |
|---|---|---|---|
| முதலாம் தலைமுறை | 1942-55 | வெற்றிடக் குழல் (Vaccum tubes) | 1. அளவில் பெரியது 2. அதிக அளவு மின்சாரத்தை எடுத்துக் கொண்டது. 3. அதிக வெப்பம் காரணமாகச் செயலிழக்கும். 4. இயந்திர மொழி பயன்படுத்தப்பட்டது. eg: ENIAC, EDVAC, UNIVACI |
| இரண்டாம் தலைமுறை | 1955-64 | திரிதடையகம் (Transistors) | 1. முதல் தலைமுறையுடன் ஒப்பிடும்போது அளவில் சிறியது, குறைந்த மின்சாரத்தை எடுத்துக் கொண்டது. 2. குறைந்த வெப்பத்தை உருவாக்கியது. 3. துளையிட்ட அட்டை உள்ளீட்டுக்கு பயன்படுத்தப்பட்டது. 4. முதல் இயக்க அமைப்பான தொகுப்பு செயலாக்க அமைப்பு உருவாக்கப்பட்டது. 5. இயந்திர மொழி மற்றும் அசெம்பளி மொழி பயன்படுத்தப்பட்டது eg: IBM 1620, UNIVAC 1108, IBM 1401 |
| மூன்றாம் தலைமுறை | 1964-75 | ஒருங்கிணைந்த சுற்றுகள் Integrated Circuits (IC) | 1. கணிப்பொறிகள் அளவில் சிறியது, விரைவான செயல்பாடு மற்றும் நம்பகத் தன்மையுடையது. 2. குறைந்த மின்சாரத்தை எடுத்துக் கொண்டது. 3. உயர் நிலை மொழி பயன்படுத்தபட்டது. |
| நான்காம் தலைமுறை | 1975-80 | நுண் செயலி (மிகப் பெரிய அளவிலான ஒருங்கிணைந்த சுற்றுகள்) Very Large Scale Integrated Circuits (VLSI) |
1.சிறியது மற்றும் வேகமானது 2. IBM மற்றும் APPLE போன்ற நுண்கணிப்பொறிகள் உருவாக்கப்பட்டது. 4. கையடக்க கணிப்பொறிகள் அறிமுகமாயின. |
| ஐந்தாம் தலைமுறை | 1980-இன்று வரை |
மீப்பெரு அளவிலான ஒருங்கிணைந்த சுற்றுகள் |
1. இணைச் செயலாக்கம் 2. மீ-கடத்தி 3. கணிப்பொறியின் அளவு கணிசமாகக் குறைக்கப்பட்டது. 4. நிழற்படங்கள் மற்றும் வரைபடங்களைப் புரிந்து கொள்ளும் திறன் 5. செயற்கை நுண்ணறிவு மற்றும் நிபுணர் அமைப்பு (Expert system) அறிமுகம். 6. தீர்மானித்தல் மற்றும் தருக்க முறையில் அதிகச் சிக்கலான பிரச்சனைகளுக்குத் தீர்வு காணுதல். |
| ஆறாவது தலைமுறை | எதிர் காலத்தில் | செயற்கை அறிவு |
1. இணை மற்றும் பகிர்வு கணிப்பீடு. |
44.
1. வார்ப்புருக்கள் என்பவை மென்பொருளில் முன் வடிவமைத்தப் படிவங்கள் ஆகும்.
2. நிகழ்த்தல் உருவமைத்தலில் எளிதான முறை வார்ப்புருக்களைப் பயன்படுத்தி உருவாக்குதல் மற்றும் தேவைக்கேற்ப மாற்றிக் கொள்வதேயாகும்.
3.Impress -ல் ஐந்து நிகழ்த்துதல் வார்ப்புருக்கள் உள்ளன. Presentation backgrounds என்பதன் கீழ் மூன்று வார்ப்புருக்களும் உள்ளன.
4. இரண்டு வகைகளுக்கான வேறுபாடு, 'Presentation' வார்ப்புருக்கள் மாதிரி தலைப்புக்கள் மற்றும் விஷியன்களைக் கொண்ட சில்லுகளின் தொகுப்பைக் கொண்டிருக்கும். "ப்றேசெண்டடின் Background" வார்ப்புருக்கள் பின்னணி மற்றும் பின்னணிப் பொருட்களை மட்டுமே கொண்டிருக்கும்.
5. இரண்டு வகைகளும் முன் வடிவமைத்த நிகழ்த்துதல் மற்றும் வரைகலைப் பாணிகளைக் கொண்டிருக்கும்.
45.
1.Search for பெட்டியில் தேட வேண்டிய சொல்லை தட்டச்சு செய்யவும். எடுத்துக்காட்டாக “Bombay” என்ற வார்த்தையை தேடி அதற்கு பதிலாக “Mumbai” என்று மாற்றம் செய்ய Search for பெட்டியில் “Bombay” என்று தட்டச்சு செய்யவும். Replace with பெட்டியில் மாறி வர வேண்டிய “Mumbai” என்ற சொல்லை தட்டச்சு செய்க.
2.Find பொத்தானை கிளிக் செய்தவுடன், தேடல் தொடங்கி “Bombay” என்ற வார்த்தையின் முதல் இருப்பிடத்தில் அந்த வார்த்தையை கண்டுபிடித்து அது உயர்த்திக் காட்டப்படும்.
3.உயர்த்திக் காட்டப்பட்ட சொல்லை மட்டும் மாற்றியிடுவதற்கு Replace பொத்தானை கிளிக் செய்யவும்.
4. Find All கிளிக் செய்தால் ஆவணத்தில் தேடப்படும் சொல் உள்ள எல்லா இடங்களிலும் தேடப்பட்டு அந்த சொல்லானது அனைத்து இடத்திலும் தேர்வு செய்யப்பட்டு உயர்த்திக் காட்டப்படும்..
5. Replace All பொத்தானை கிளிக் செய்தால் உயர்த்திக் காட்டப்பட்ட அனைத்து “Bombay” என்ற வார்த்தை இருக்கும் எல்லா இடத்திலும் “Mumbai” என்று மாற்றப்பட்டிருக்கும்.
6.உரையாடல் பெட்டியில் உள்ள Match case தேர்வு செய்தால் பெரிய மற்றும் சிறிய வடிவிலான வழக்கு எழுத்துக்களை தனித்தனியாக தேடலின் போது வேறுபடுத்த முடியும்.
7. Whole words only-ஐ தேர்வு செய்தால் அந்த வார்த்தையை மட்டும் தேடும்.
8. Close பொத்தானை கிளிக் செய்யவும்.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards