11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 12/08/2019
வாயு நிலைமை
11ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
227°C மற்றும் 4 வளிமண்டல அழுத்தத்திலுள்ள ஆகிஸிஜன் வாயுவின் அடர்த்தி என்ன?(R = 0.082 L atom k-1 mol-1)
3.12 g/L
3.41 g/L
2.81 g/L
இவை எதுவுமில்லை
2.
மாறா வெப்பநிலையில் வரையப்படும் வரைகோடு சமவெப்பநிலைக் கோடு எனப்படும்.இக்கோடு காட்டும் தொடர்பு
p மற்றும் \(\frac { 1 }{ v } \)
pv மற்றும் v
p மற்றும் v
v மற்றும் \(\frac { 1 }{ p } \)
3.
ஒரு வாயுவின் நிலைமாறு வெப்பநிலை என்பது
ஒரு குறிப்பிட்ட வெப்பநிலைக்கு மேல் வாயுவானது திரவமாகும்
ஒரு குறிப்பிட்ட வெப்பநிலைக்கு மேல் அழுத்தத்தை அதிகரிப்பதால் திரவமாக்க இயலாது
குறிப்பிட்ட வெப்பநிலையில் திண்மமாகும்
குறிப்பிட்ட வெப்பநிலையில் வாயுவின் கனஅளவு பூஜ்ஜியமாகும்
4.
ஒரு வாயுவை மாறாத வெப்பநிலையில் விரிவடையச் செய்யும்போது
வாயு மூலக்கூறுகளின் எண்ணிக்கை குறைகிறது
வாயு மூலக்கூறுகளின் இயக்க ஆற்றல் குறைகிறது
வாயு மூலக்கூறுகளின் இயக்க ஆற்றல் அதிகரிக்கிறது
வாயு மூலக்கூறுகளின் இயக்க ஆற்றல் மாறாமல் இருக்கும்
5.
| A ) நல்லியல்பு வாயுப் பண்பு | 1)குறைந்த அழுத்தம் மற்றும் அதிக வெப்பநிலை |
| B ) வெப்ப மாறா செயல்முறையில் காந்த தன்மையை இழத்தல் |
2) திரவ ஹீலியம் |
| C )31.1 °C ல் CO2 | 3) நிலைமாறு வெப்பநிலை |
| D ) ஜூல் தாம்சன் சோதனை | 4) திரவ அக்ஸிஜன் |
A-1 B-2 C-3 D-4
A-2 B-3 C-1 D-4
A-4 B-3 C-2 D-1
A-1 B-2 C-4 D-3
6.
ஒரு இயல்பு வாயுவை வெப்பமாறாச் செயல்முறையில் விரிவடையச் செய்யும்போது
வெப்பமடைகிறது
குளிர்ச்சியடைகிறது
வெடிக்கிறது
a & b
7.
ஹீலியத்தை திரவமாக்க பெரும்பான்மையாகப் பயன்படுத்தும் முறை
லிண்டே முறை
ஜூல் -தாம்சன் விளைவு
கிளாட் முறை
கார்னாட் முறை
8.
வானியல் ஆய்வுமையங்களில் உபயோகப்படும் அதிக வெப்பபலூன்களின் பயன்பாடு இவ்விதியின் அடிப்படையில் அமைகிறது
பாயிலின் விதி
நியூட்டனின் விதி
கெல்வினின் விதி
பிரௌனின் விதி
9.
ஒரு காலியாகவுள்ள கலனில் 298K யில் எடையுள்ள மீத்தேன் மற்றும் ஆக்சிஜன் நிரப்பப்படுகின்றன. மொத்த அழுத்தத்தில் ஆக்சிஜன் மூலக்கூறு கொடுக்கும் அழுத்த பின்னம்.
1/3
1/2
2/3
1/3 x 273 x 298
10.
வாயுக்கள் அதிக அழுத்தத்தில் நல்லியல்பு பண்பிலிருந்து விலகலடைகின்றன. கீழ்கண்ட
கூற்றுகளில் நல்லியல்பு அல்லா தன்மைக்கு பொருந்தும் சரியான கூற்று எது? எவை
அதிக அழுத்தத்தில் மூலக்கூறுகளுக்கிடையே மோதல் அதிகரிக்கின்றன.
அதிக அழுத்தத்தில் வாயு மூலக்கூறுகள் ஒரே திசையில் நகர்கின்றன.
அதிக அழுத்தத்தில் வாயுவின் கனஅளவு புறக்கணிக்கத்தக்கதாகும்.
அதிக அழுத்தத்தில் மூலக்கூறுகளுக்கிடையேயான கவர்ச்சிவிசை புறக்கணிக்கத்தக்கதன்று.
11.
ஜூல் தாம்சன் விளைவை எழுதுக.
12.
அம்மோனியா HCl உடன் வினைபுரிந்து அடர்ந்த வெண்ணிற புகையான NH4Cl ஐ தருகிறது.புகை HCl க்கு அருகில் தோன்றுவது ஏன்?
13.
காற்று கரைசல்கள் கொண்ட கலன்கள் வெப்பப்படுத்துவத்தைப் பற்றிய தெளிவான எச்சரிக்கை கொண்டிருக்கும் ஏன்?
14.
ஒரு வாயுவின் கன அளவு மற்றும் மோல்களை தொடர்புபடுத்தும் கணிதமுறை வாய்ப்பாட்டினை தருக
15.
கேலூசாக் விதிக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இரு மாதிரிகளின் பெயர்களைத் தந்து விளக்குக.
16.
300K ல் 525g ஆக்சிஜன் மற்றும் 65.1g CO2 அடங்கியுள்ள தொட்டியில் கலவையின் மொத்த அழுத்தம் 9.21 atm. கலவையிலுள்ள ஒவ்வொரு வாயுவின் பகுதி அழுத்தங்களை கண்டறிக.
17.
ஏரி ஒன்றில் ஒரு சிறிய குமிழி 6°C மற்றும் 4atm உள்ள அடிப்புறத்தில் இருந்து 25°C மற்றும் 1atm உள்ள மேற்பரப்பிற்கு வருகின்றது. அதன் ஆரம்ப கனஅளவு 1.5ml எனில் இறுதி கனஅளவினை கண்டறிக.
18.
கீழ்கண்டவற்றிற்கு உரிய விளக்கங்கள் தருக.
அ) கோடைக்காலத்தில் காற்றேட்டப்பட்ட குளிர்பானப் புட்டிகள் நீரினுள் வைக்கப்பட்டிருக்கும்
ஆ) திரவ அம்மோனியா அடைக்கப்பட்டுள்ள புட்டிகள் திறக்கப்படும் முன் குளிர்விக்கப்படும்
இ) மோட்டார் வாகன எந்திரங்களின் உருளைகளில் (tyres) கோடையில் குளிர்காலத்தை விடகாற்று குறைவாக நிரப்பப்பட்டிருக்கும்.
ஈ) வானியல் ஆய்வு பலூனின் அளவு உயரமாக மேலே செல்லச் செல்ல பெரியதாக மாறும்.
19.
ஒரு சமவெப்ப அழுத்த நிலையில் \({ C }_{ n }{ H }_{ 2n-2 }\) என்ற மூலக்கூறு வாய்பாடு கொண்ட ஹைட்ரோகார்பன் போன்று ஹைட்ரஜன் வாயு \(3\sqrt { 3 } \) மடங்கு விரவுதல் வீதம் கொண்டதெனில் n ன் மதிப்பு என்ன?
20.
வாயுக்களை திரவமாக்கப் பயன்படும் பல்வேறு முறைகளை எழுதுக.
21.
ஒரு வாயு 192 நொடியில் சுவரிலுள்ள ஒரு துளையின் வழியே விரவுகின்றது. N2 வாயு அதே வெப்ப அழுத்த நிலையில் விரவ எடுக்கும் நேரம் 84 நொடி எனில் வாயுவின் மோலார் நிறை என்ன?
22.
2.98 atmல் 250சி ல் உள்ள எரிவாயு உலோகத்தொட்டி ஒன்று வைக்கப்பட்டுள்ளது அத்தொட்டி 12atm அழுத்தம் வரை மட்டுமே தாங்கி பின் அதிக அழுத்தத்தினால் வெடிக்க கூடியது அத்தொட்டி உள்ள கட்டிடத்தில் தீப்பிடிக்கும் போது அத்தொட்டி முதலில் வெடிக்குமா அல்லது உருகத் தொடங்குமா என கண்டறிக.(உலோகத்தின் உருகுநிலை 1100K)
23.
வாயுக்கள் பற்றிய கீழ்கண்ட உண்மைகளுக்கு சரியான விளக்கம் தருக
அ) வாயுக்கள் கலனின் அடிப்பரப்பில் தங்குவதில்லை
ஆ) வாயுக்கள் தமக்குக் கொடுக்கப்பட்டுள்ள வெளியில் பரவுகின்றன
1.
(a)
3.12 g/L
2.
(c)
p மற்றும் v
3.
(b)
ஒரு குறிப்பிட்ட வெப்பநிலைக்கு மேல் அழுத்தத்தை அதிகரிப்பதால் திரவமாக்க இயலாது
4.
(b)
வாயு மூலக்கூறுகளின் இயக்க ஆற்றல் குறைகிறது
5.
(a)
A-1 B-2 C-3 D-4
6.
(b)
குளிர்ச்சியடைகிறது
7.
(b)
ஜூல் -தாம்சன் விளைவு
8.
(a)
பாயிலின் விதி
9.
(a)
1/3
10.
(d)
அதிக அழுத்தத்தில் மூலக்கூறுகளுக்கிடையேயான கவர்ச்சிவிசை புறக்கணிக்கத்தக்கதன்று.
11.
வெப்பமாறாச் செயல்முறையில் ஒரு வாயுவானது அதிக அழுத்தப்பகுதியிலிருந்து , குறைந்த அழுத்தப்பகுதிக்கு விரிவடையச் செய்யும் போது, வெப்பநிலையானது குறையும் இந்நிகழ்வு ஜூல் தாம்சன் விளைவு எனப்படுகிறது.
12.
NH3 ஆனது குறைந்த மோலார் நிறையைக் கொண்டுள்ளதால் விரைவாக கலக்கிறது மற்றும் நீளமான குழாயில் பயணிக்கிறது.எனவே அதிக வெண்ணிற புகை HCI க்கு அருகில் தோன்றுகிறது.
13.
1.பெரும்பாலான காற்று கரைசல்கள் கொண்ட ககலன்கள் சிறு அவுன்ஸ் உந்து கார்பன்டை ஆக்ஸைடு புரோப்பேன் அல்லது பியுட்டேனை கொண்டிருக்கும்
2. இவற்றை வெப்பப்படுத்தினால் அதிக ஆவியை கலனினுள் ஏற்படுத்தும்.அதனால் அழுத்தம் விரைவாக உயரும்
3. இந்த அழுத்த விளைவினால் காற்று கரைசல்கள் கொண்ட கலன்கள் வெடித்து சிதறும் நிலை ஏற்படலாம்
4. எனவேதான் வெப்பப்படுத்துவதை பற்றிய தெளிவான எச்சரிகையக் கொண்டிருக்கும்
14.
PV = nRT என்ற சமன்பாடானது ஒரு வாயுவின் கனஅளவு மற்றும் மோல்களை தொடப்படுத்தும் கணிதமுறை வாய்ப்பாடு ஆகும்
இங்கு
P = அழுத்தம்
V = கன அளவு
T = வெப்ப நிலை
n = வாயுக்களின் மோல்களின் எண்ணிக்கை
R = வாயு மாறிலி
15.
1. நன்றாக காற்று நிரப்பப்பட்ட சக்கரத்தின் அழுத்தம் ஆனது மாறிலியாக அமையும்
2. ஆனால் கோடைகாலங்களில் வெப்பநிலை அதிகரிப்பதால் அழுத்தம் அதிகரிக்கிறது.சில நேரங்களில் சக்கரம் வெடிக்கவும் செய்கிறது.
3. துப்பாக்கி மற்றும் சுடக்கூடிய அனைத்து பொருட்களும் கேலுசாக் விதிக்கு உதாரணம் ஆகும்
4. துப்பாக்கியை உபயோகிம்போது அது வெளியேற்றும் துப்பாக்க துகள்களால் (gun powder ) வெப்பநிலை உயருகிறது.இது அழுத்தம் உயரவும் காரணமாகிறது.எனவே துப்பாக்கிலிருந்து தோட்ட பாய்ந்து செல்கிறது
16.
mO2 = 52.5 g PO2 = ?
mCO2 = 65.1 g PCO2 = ?
T = 300 K P = 9.21 atm
PO2 = XO2 x மொத்த அழுத்தம்
\(X_{O_2}=\frac{O_2}{n_{O_2}+n_{CO_2}}\)

=\(\frac{52.5g}{32gmol^{-1}}\)=1.64 mol

=1.48 mol
PO2=XO2 x மொத்த அழுத்தம்
=0.53x9.21 atm=4.88 atm
PCO2=XCO2 x மொத்த அழுத்தம்
=0.47x9.21 atm=4.33 atm
17.
T1 = 6 °C + 273 = 279 K
P1 = 4 atm V1 = 1.5 ml
T2 = 25o C + 273 = 298 K
P2 = 1 atm V2 = ?
\(\frac{P_1V_1}{T_1}=\frac{P_2V_2}{T_2}\)
V2=\(\frac{P_1V_1}{T_1}\times\frac{T_2}{P_2}\)
\(=\frac{4 \mathrm{~atm} \times 1.5 \mathrm{ml} \times 298 \mathrm{~K}}{279 \mathrm{~K} \times 1 \mathrm{~atm}}\)
V2 = 6.41 ml
18.
19.
\(\frac { \gamma { H }_{ 2 } }{ \gamma _{ { C }_{ n }{ H }_{ 2n-2 } } } =\sqrt { \frac { { m }_{ { c }_{ n }{ H }_{ 2n-2 } } }{ m_{ { H }_{ 2 } } } } \\ 3\sqrt { 3 } =\sqrt { \frac { { m }_{ { c }_{ n }{ H }_{ 2n-2 } } }{ 2 } } \)
இருபுறமும் வர்க்கப்படுத்தி மாற்றி அமைக்கும் பொழுது.
\(27\times 2={ m }_{ { c }_{ n }{ H }_{ 2n-2 } }\\ 54={ n }_{ (12) }+(2n-2)(1)\\ 54=12n+2mn-2\\ 54=14n-2\\ n=(54+2)/14\\ =\frac { 56 }{ 14 } =4\\ \therefore n=4.\)
20.
வாயுக்களை திரவமாக்கப்பல்வேறு முறைகள் பயன்படுகின்றன.
1) லின்டே முறையில், காற்று அல்லது பிறவாயுக்கள் ஜூல் தாம்சன் விளைவை பயன்படுத்தி திரவமாக்கப்படுகின்றன.
2) கிளாட் முறையில், ஜூல் தாம்சன் விளைவுடன்,வாயுவானது எந்திரவியல் வேலைக்கும் உட்படுத்தப்படுகிறதன் மூலம் அதிக குளிரிச்சியடைந்த நிலை உருவாக்கப்படுகிறது.
3) வெப்பமாறாச் செயல் முறையில்,கடோலினியம் சல்பேட் போன்ற காந்தத் தன்மையுடைய பொருளின் காந்தத் தன்மையை இழக்கச் செய்வதன் மூலம், குளிரிச்சியடைச் செய்தல் நிகழ்த்தப்படுகிறது. இம்முறையில் 0K யை விடகுறைவான வெப்பநிலையான 10-4 K
அளவில் வெப்பநிலையினை அடைய இயலும்.
21.
இருப்புறமும் வர்க்கப்படுத்தி மாற்றியமைக்க
22.
உலோகத்தின் உருகுநிலையில் உலோகத் தொட்டியில் உள்ள வாயுவின் அழுத்தம்
T1 = 298K; P1=2.98atom; T2=1100K; P2=?
\({P_1\over T_1}={P_2\over T_2}\)
\(⇒\ P_2={P_1\over T_1}\times T_2\)
\(={2.98atm\over 298K}\times 1100 K=11atm\)
1100K வெப்பநிலையில் தொட்டியில் உள்ள வாயுவின் அழுத்தமானது 11atm ஆகிறது.உலோகத் தொட்டியானது அதிக பட்சமாக 12atm வரை தாங்கக்கூடியது என்பதால் தொட்டி முதலில் உருகத் தொடங்கும்.
23.
(அ) 1. வாயுக்களானது தின்மங்கள் மற்றும் திரவங்களை காட்டிலும் குறைந்த அடர்தியினை உடையது
2. இவை தள்ளத்தக்க மூலக் கூறுக்களுக்கிடைப்பட்ட விசைகளைப் பெற்றுள்ளன
3. எனவே இவை சுதந்திரமாக இயங்கின்றன.இதனால் தான் கலனின் அடிப்பரப்பில் வாய்க்கள் தூங்குவதில்லை
(ஆ) 1. வாயுக்களில் உள்ள வாயு மூலக்கூறுகள் ஒன்றோடு ஒன்று முழுமையாக விரவுகின்றது.இவை அதிக இயக்க ஆற்றலையும் குறைந்த மூலக்கூறுகளுக்கிடைப்பட்ட கவர்ச்சி விசையும் பெற்றுள்ளது.
2. எனவேதான் வாயுக்கள் தமக்குக் கொடுக்கப்பட்டுள்ள வெளியில் பரவுக்கின்றன.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards