10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 29/08/2026
10ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test

1.
6 மீ மற்றும் 11 மீ உயரமுள்ள இரு கம்பங்கள் சமதளத் தரையில் செங்குத்தாக உள்ளன. அவற்றின் அடிகளுக்கு இடையேயுள்ள தொலைவு 12 மீ எனில் அவற்றின் உச்சிகளுக்கு இடையே உள்ள தொலைவு என்ன?
13 மீ
14 மீ
15 மீ
12.8 மீ
2.
ஒரு நேரிய சமன்பாட்டின் வரைபடம் ஒரு ______ ஆகும்.
நேர்கோடு
வட்டம்
பரவளையம்
அதிபரவளையம்
3.
sin θ + cos θ = a மற்றும் sec θ + cosec θ = b எனில் b(a2 -1) -ன் மதிப்பு _____.
2a
3a
0
2ab
4.
74k ☰ _____ (மட்டு 100)
1
2
3
4
5.
ஒரு நபருக்கு வேலை கிடைப்பதற்கான நிகழ்தகவானது \(\frac{x}{3}\). வேலை கிடைக்காமல் இருப்பதற்கான நிகழ்தகவு \(\frac{2}{3}\) எனில் x யின் மதிப்பானது _____.
2
1
3
1.5
6.
\(\frac { 3 }{ 16 } ,\frac { 1 }{ 8 } ,\frac { 1 }{ 12 } ,\frac { 1 }{ 18 } ,...\) என்ற தொடர்வரிசையின் அடுத்த உறுப்பு ______.
\(\frac { 1 }{ 24 } \)
\(\frac { 1 }{ 27 } \)
\(\frac { 2 }{ 3 } \)
\(\frac { 1 }{ 81 } \)
7.
(i) l1 : 3y = 4x + 5
(ii) l2 : 4y + 3x =1
(iii) l3: 4y + 3x = 7
(iv) l4 : 4x + 3y = 2
எனக் கொடுக்கப்பட்ட நான்கு நேர்க்கோடுகளுக்குக் கீழ்க்கண்ட கூற்றுகளில் எது உண்மை
l1 மற்றும் l2 செங்குத்தானவை
l1 மற்றும் l4 இணையானவை
l2 மற்றும் l4 செங்குத்தானவை
l2 மற்றும் l3 இணையானவை
8.
ஓர் உள்ளீடற்ற உருளையின் வெளிப்புற மற்றும் உட்புற ஆரங்களின் கூடுதல் 14 செ.மீ மற்றும் அதன் தடிமன் 4 செ.மீ ஆகும். உருளையின் உயரம் 20 செ.மீ எனில், அதனை உருவாக்கப் பயன்பட்ட பொருளின் கன அளவு ______.
5600π க.செ.மீ
1120π க.செ.மீ
56π க.செ.மீ
3600π க.செ.மீ
9.
f(x) = \(\sqrt { 1+{ x }^{ 2 } } \) எனில் ______.
f(xy) = f(x).f(y)
f(xy) ≥ f(x).f(y)
f(xy) ≤ f(x).f(y)
இவற்றில் ஒன்றுமில்லை
10.
f: A ⟶ B ஆனது இருபுறச் சார்பு மற்றும் n(B) = 7 எனில் n(A) ஆனது
7
49
1
14
11.
13 + 23 + 33+ ....+ k3 = 44100 எனில், 1 + 2 + 3+...+ k யின் மதிப்பு காண்க.
12.
3 + 1 + \(\frac { 1 }{ 3 } \) +...∞ என்ற தொடரின் கூடுதல் காண்க.
13.
பின்வருவனவற்றின் முதல் உறுப்பு மற்றும் பொது விகிதம் கொடுக்கப்பட்டுள்ளது, அதனுடைய பெருக்குத் தொடர்வரிசைகளைக் காண்க.
(i) a = -7, r = 6 (ii) a = 256, r = 0.5
14.
-11, -15, -19...., என்ற கூட்டுத் தொடர்வரிசையின் 19-வது உறுப்பைக் காண்க.
15.
3, 15, 27, 39,… என்ற தொடர்வரிசையின் 15-வது, 24-வது மற்றும் n -வது உறுப்பு (பொது உறுப்பு) காண்க.
16.
பின்வரும் தொடர்வரிசையின் முதல் ஐந்து உறுப்புகளைக் காண்க.
a1 = 1, a2 = 1, an = \(\frac { { a }_{ n-1 } }{ { a }_{ n-2 }+3 } ;n\ge 3,n\in N\).
17.
ஒரு தொடர்வரிசையின் பொது உறுப்பு பின்வருமாறு வரையறுக்கப்படுகிறது.
11 -வது உறுப்பு மற்றும் 18 -வது உறுப்புக் காண்க.
18.
210 மற்றும் 55 ஆகியவற்றின் மீப்பெரு பொது வகுத்தியை 55x - 325 , என்ற வடிவில் எழுதினால் x –யின் மதிப்புக் காண்க.
19.
ஒரு நபர் 10 வருடங்களில் ரூ.16500 ஐ சேமிக்கிறார். ஒவ்வொரு வருடமும் அவர் சேமிக்கும் தொகையானது அதற்கு முந்தைய வருடம் சேமிக்கும் தொகையை விட ரூ.100 அதிகம். அவர் முதல் வருடம் எவ்வளவு சேமித்திருப்பார்?
20.
ரேகாவிடம் 10 செ.மீ, 11 செ.மீ, 12 செ.மீ ....., 24 செ.மீ என்ற பக்க அளவுள்ள 15 சதுர வடிவ வண்ணக் காகிதங்கள் உள்ளன. இந்த வண்ணக் காகிதங்களைக் கொண்டு எவ்வளவு பரப்பை அடைத்து அலங்கரிக்க முடியும்?
21.
ஒரு பெருக்குத் தொடர்வரிசையின் 9-வது உறுப்பு 32805 மற்றும் 6-வது உறுப்பு 1215 எனில், 12-வது உறுப்பைக் காண்க.
22.
ஒரு குறிப்பிட்ட தொடரின் முதல் ‘n’ உறுப்புகளின் கூடுதல் 2n2 - 3n எனில், அது ஒரு கூட்டுத் தொடர்வரிசை என நிரூபிக்க.
23.
ஒரு பெருக்குத் தொடர்வரிசையின் 4-வது உறுப்பு \(\frac { 8 }{ 9 } \) மற்றும் 7-வது உறுப்பு \(\frac { 64 }{ 243 } \) எனில், அந்தப் பெருக்குத் தொடர்வரிசையைக் காண்க.
24.
ஒரு தாய் தன்னிடம் உள்ள ரூ.207 ஐ கூட்டுத் தொடர் வரிசையில் அமையும் மூன்று பாகங்களாகப் பிரித்துத் தனது மூன்று குழந்தைகளுக்கும் கொடுக்க விரும்பினார். அவற்றில் இரு சிறிய தொகைகளின் பெருக்கற்பலன் ரூ.4623 ஆகும். ஒவ்வொரு குழந்தையும் பெறும் தொகையினைக் காண்க.
25.
70004 மற்றும் 778 ஆகிய எண்களை 7 ஆல் வகுக்கக் கிடைக்கும் மீதியைக் காண்க.
1.
AC = 11 - 6 = 5 மீ
செங்கோண ΔABC இல்
\(\mathrm{AB}^2 =\mathrm{BC}^2+\mathrm{AC}^2=12^2+5^2 \)
= 144 + 25 = 169
AB = 13 மீ
2.
(a)
நேர்கோடு
3.
\(\mathrm{b}\left(\mathrm{a}^2-1\right)=(\sec \theta+\operatorname{cosec} \theta)\left[(\sin \theta+\cos \theta)^2-1\right] \)
\(=(\sec \theta+\operatorname{cosec} \theta)\left[\sin ^2 \theta+\cos ^2 \theta+2 \sin \theta \cos \theta-1\right] \)
\(=\left(\frac{1}{\cos \theta}+\frac{1}{\sin \theta}\right)(1+2 \sin \theta \cos \theta-1) \)
\(=\frac{\sin \theta+\cos \theta}{\sin \theta \cos \theta} \times 2 \sin \theta \cos \theta=2 \mathrm{a}\)
4.
(a)
1
5.
வேலை கிடைக்கும் நிகழ்வு A என்க
\(P(A) + P(\bar{A}) =1 \)
\(\frac{x}{3}+\frac{2}{3} =1 \)
\(\frac{x+2}{3} =1 \)
x + 2 = 3
x = 3 - 2
x = 1 .
6.
\(a=\frac{3}{16} ; r=\frac{\frac{1}{8}}{\frac{3}{16}}=\frac{1}{8} \times \frac{16}{3}=\frac{2}{3}\)
இது ஒரு பெருக்குத் தொடா் வரிசை ஆகும்.
∴ அடுத்த உறுப்பு \(\frac{1}{18} \times \frac{2}{3}=\frac{1}{27}\)
7.
கொடுக்கப்பட்ட கோடுகள்
\(l_1: 3 y=4 x+5 \Rightarrow 4 x-3 y+5=0 \)
\(l_2: 4 y=3 x-1 \Rightarrow 3 x-4 y-1=0 \)
\(l_3: 4 y+3 x=7 \Rightarrow 3 x+4 y-7=0 \)
\(l_4: 4 x+3 y=2 \Rightarrow 4 x+3 y-2=0\)
l2-லிருந்து \(\mathrm{a}_2=3, \mathrm{~b}_2=-4\) மற்றும்
l4-லிருந்து \(a_4=4, b_4=3\)
\(a_1 a_2+b_1 b_2=3(4)+(-4)(3)=0\)
\(\therefore l_2\) மற்றும் l4 ஆகியவை செங்குத்தானவை.
8.
உட்புற ஆரம் = r, வெளிப்புற ஆரம் = R
கொ.ப. கூடுதல் = R + r = 14, தடிமன் R - r = 4, உயரம் h = 20 செ.மீ
பயன்பட்ட பொருளின் கன அளவு
\(=\pi\left(\mathrm{R}^2-\mathrm{r}^2\right) \mathrm{h}\) கன அலகுகள்
\(=\pi(\mathrm{R}+\mathrm{r})(\mathrm{R}-\mathrm{r}) \mathrm{h} \)
\(=\pi(14)(4) 20 \)
= 1120π செ.மீ
9.
(c)
f(xy) ≤ f(x).f(y)
10.
\(\mathrm{f}: \mathrm{A} \rightarrow \mathrm{B}\) என்பது இருபுறச் சார்பு மற்றும் n(B) = 7.
f என்பது இருபுறச் சார்பு. அதாவது, ஒன்றுக்கு ஒன்றான மேல்சார்பு.
\(\therefore\) A மற்றும் B ஆகியவற்றில் உறுப்புகளின் எண்ணிக்கை சமமாக இருக்க வேண்டும். n(A) = 7
11.
\(1^3+2^3+3^3+\ldots+k^3 =\left[\frac{k(k+1)}{2}\right]^2=44100=(210)^2 \)
\(=\frac{k(k+1)}{2}=210 \)
\(1+2+3+\ldots+k =\frac{k(k+1)}{2}=210\)
12.
இங்கு a = 3, r = \(\frac { { t }_{ 2 } }{ { t }_{ 1 } } =\frac { 1 }{ 3 } \)
பெருக்குத் தொடர்வரிசையின் முடிவுறா உறுப்புகள் வரை கூடுதல் S∞ = \(\frac { a }{ 1-r } =\frac { 3 }{ 1-\frac { 1 }{ 3 } } =\frac { 9 }{ 2 } \).
13.
(i) பெருக்குத் தொடர்வரிசையின் பொது வடிவம் a, ar, ar2,...
a = -7, ar = -7 x 6 = -42, ar2 = -7 x 62 = -252
எனவே, தேவையான பெருக்குத் தொடர்வரிசை -7, -42, -252,.....
(ii) பெருக்குத் தொடர்வரிசையின் பொது வடிவம் a, ar, ar2,...
a = 256, ar = 256 x 0.5 = 128, ar2 = 256 x (0.5)2 = 64
எனவே, தேவையான பெருக்குத் தொடர்வரிசை 256, 128, 64,....
14.
-11, -15, -19,.... என்பது தரப்பட்ட கூட்டுத்தொடர் வரிசை
இங்கு முதல் உறுப்பு a = -11
பொது வித்தியாசம் \(\mathrm{d}=\mathrm{t}_2-\mathrm{t}_1=-15-(-11)\)
= -15 + 11 = -4
∴ n-ஆவது உறுப்பு \(\mathrm{t}_{\mathrm{n}} =\mathrm{a}+(\mathrm{n}-1) \mathrm{d} \)
∴ 19- ஆவது உறுப்பு \(\left(\mathrm{t}_{19}\right) =-11+(19-1)(-4) \)
= -11 +18(-4)
= -11 + (-72) = -83
∴ -11,-15,-19,......-இன் 19 ஆவது உறுப்பு - 83.
15.
முதல் உறுப்பு a = 3 மற்றும் பொது வித்தியாசம் d = 15–03 = 12 .
முதல் உறுப்பு a, பொது வித்தியாசம் d ஆக உள்ள கூட்டுத் தொடர்வரிசையின் n -வது உறுப்பு
tn = a + (n - 1)d என நாம் அறிவோம்
t15 = a + (15 - 1)d = a + 14d = 3 + 14(12) = 171
(இங்கு a = 3 மற்றும் d = 12)
t24 = a + (24 - 1)d = a + 23d = 3 + 23(12) = 279
n -வது உறுப்பு (பொது உறுப்பு) tn = a + (n - 1)d
tn = 3 + (n - 1)12
tn = 12n - 9
16.
a1 = 1, a2 = 1 எனத் தொடர்வரிசையின் முதல் இரண்டு உறுப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. மூன்றாவது உறுப்பானது முதல் இரண்டு உறுப்புகளைச் சார்ந்தே உள்ளது.
a3 = \(\frac { { a }_{ 3-1 } }{ { a }_{ 3-2 }+3 } =\frac { { a }_{ 2 } }{ { a }_{ 1 }+3 } =\frac { 1 }{ 1+3 } =\frac { 1 }{ 4 } \)
இதைப் போலவே நான்காம் உறுப்பு a4 ஆனது a2 மற்றும் a3 ஆகியவற்றைச் சார்ந்தே உள்ளது.
a4 = \(\frac { { a }_{ 4-1 } }{ { a }_{ 4-2 }+3 } =\frac { { a }_{ 3 } }{ { a }_{ 2 }+3 } =\frac { \frac { 1 }{ 4 } }{ 1+3 } =\frac { \frac { 1 }{ 4 } }{ 4 } =\frac { 1 }{ 4 } \times \frac { 1 }{ 4 } =\frac { 1 }{ 16 } \)
இதே வழிமுறையில் ஐந்தாம் உறுப்பு a5 கணக்கிடப்படுகிறது.
a5 = \(\frac { { a }_{ 5-1 } }{ { a }_{ 5-2 }+3 } =\frac { { a }_{ 4 } }{ { a }_{ 3 }+3 } =\frac { \frac { 1 }{ 16 } }{ \frac { 1 }{ 4 } +3 } =\frac { 1 }{ 16 } \times \frac { 4 }{ 13 } =\frac { 1 }{ 52 } \)
எனவே, தொடர்வரிசையின் முதல் ஐந்து உறுப்புகள் 1,1,\(\frac { 1 }{ 4 } ,\frac { 1 }{ 16 } \) மற்றும் \(\frac { 1 }{ 25 } \) ஆகும்.
17.
n = 11 என்பது ஒற்றை எண் என்பதால், a11-யின் மதிப்புக் காண n = 11 என an = n(n + 3)-யில் பிரதியிட
11-வது உறுப்பு = a11 = 11(11 + 3) = 154
n =18 என்பது இரட்டை எண் என்பதால், a18-யின் மதிப்புக் காண n = 18 என an = n2 + 1 -யில் பிரதியிட,
18 -வது உறுப்பு a18 = 182 + 1 = 325
18.
யூக்ளிடின் வகுத்தல் வழிமுறையைப் பயன்படுத்திக் கொடுக்கப்பட்ட எண்களுக்கு மீ.பொ.வ காண்போம்.
210 = 55 x 3 + 45
55 = 45 x 1 + 10
45 = 10 x 4 + 5
10 = 5 x 2 + 0
மீதி = 0
ஆகவே, கடைசி படிநிலையின் வகுத்தி 5 ஆனது 210 மற்றும் 55 –யின் மீப்பெரு பொது வகுத்தியாகும். மீப்பெரு பொது வகுத்தியை 55x - 325 = 5 எனக் கொடுக்கப்பட்டுள்ளதால்,
55x = 330
x = 6
19.
ஒரு நபரின் முதல் வருட சேமிப்பு a என்க.
எனவே அவரின் 10 வருட சேமிப்பு a, a + 100, a + 2 \(\times\) 100 .......10 உறுப்புகள் வரை
இது மாறிலி 100 ஐ உடைய கூட்டுத்தொடர் வரிசையாகும்.
இங்கு t1 = a, d = 100, n = 10
10 வருட மொத்த சேமிப்பு
\(S_n=\frac{n}{2}[2 \mathrm{a}+(\mathrm{n}-1) \mathrm{d}]=\frac{10}{2}[2 \mathrm{a}+(10-1) 100]\)
Sn = 5[2a + 900] = 10[a + 450] ....(1)
கொடுக்கப்பட்டது: Sn = 16500
\(\therefore\) (1) \(\Rightarrow\) 10 (a + 450) = 16500
a + 450 = 1650
a = 1650 - 450 = 1200
\(\therefore\) அவரின் முதல் வருட சேமிப்பு ரூ 1200
20.
\(1^2+2^2+3^2+\ldots+n^2=\frac{n(n+1)(2 n+1)}{6}\)
வண்ணக் காகிதங்களால் அலங்கரிக்கும் பரப்பு \(=10^2+11^2+12^2+\ldots+24^2\)
=(12 + 22 + 32 + .... + 242) - (12+22 + .... + 92)
\(=\frac{24 \times(24+1)[2(24)+1]}{6}-\frac{9 \times(9+1)[2(9)+1]}{6} \)
\(=(4 \times 25 \times 49)-\frac{9 \times 10 \times 19}{6} \)
= 4900 - 285 = 4615
4615 செ.மீ2 பரப்பளவு அடைத்து அலங்கரிக்க இயலும்.
21.
பெருக்குத் தொடா் வரிசையின்
9வது உறுப்பு \(=ar^{9-1}=32805 \Rightarrow a r^8=32805 \ldots (1)\)
6வது உறுப்பு \(=a r^{6-1}=1215 \Rightarrow a r^5=1215 \quad \ldots (2)\)
\(\frac{(1)}{(2)} \Rightarrow \frac{a r^8}{a r^5}=\frac{32805}{1215} \) \(\Rightarrow \mathrm{r}^3=27 \) ....(3)
∴ பெருக்குத் தொடர் வரிசையின் 12 -வது உறுப்பு
\(t_{12} =a r^{12-1} \) = ar11
= ar8 \(\times\) r3 = 32805 \(\times\) 27
= 765735
(\(\because\) (1) மற்றும் (3) லிருந்து)
பெருக்குத் தொடர் வரிசையின் 12 -வது உறுப்பு = 765735
22.
முதல் n உறுப்புகளின் கூடுதல்
\(\mathrm{S}_n =2n^2-3n \)
∴ முதல் உறுப்பு S1 = 2(1)2 - 3(1) = 2 - 3 = - 1 = t1
முதல் இரு உறுப்புகளின் கூடுதல்
\(\mathrm{S}_2 =2(2)^2-3(2) \)
= 8 - 6 = 2
\(\therefore \quad \mathrm{t}_2 =\mathrm{S}_2-\mathrm{S}_1 \)
\(=2-(-1)=2+1 \)
\(\mathrm{t}_2 =3\)
முதல் மூன்று உறுப்புகளின் கூடுதல்
\(\mathrm{S}_3 =2(3)^2-3(3) \)
\(=18-9=9 \)
\(\therefore \mathrm{t}_3 =\mathrm{S}_3-\mathrm{S}_2=9-2 \)
\(\mathrm{t}_3 =7 \)
இங்கு \(\mathrm{t}_2-\mathrm{t}_1 =3-(-1)=3+1=4 \)
\( \mathrm{t}_3-\mathrm{t}_2 =7-3=4 \)
\(\therefore \mathrm{t}_2-\mathrm{t}_1 =\mathrm{t}_3-\mathrm{t}_2.\)
∴ இது ஒரு கூட்டுத்தொடர்வரிசை ஆகும்.
23.
4-வது உறுப்பு \(t_4=\frac{8}{9} \Rightarrow a r^3=\frac{8}{9}\) ......(1)
7-வது உறுப்பு \(t_7=\frac{64}{243} \Rightarrow a r^6=\frac{64}{243}\) ......(2)
சமன்பாடு (2) ஐ (1) ஆல் வகுக்க நாம் பெறுவது, \(\frac{a r^6}{a r^3}=\frac{\frac{64}{243}}{\frac{8}{9}} \)
\(r^3=\frac{8}{27} \Rightarrow r=\frac{2}{3}\)
r-யின் மதிப்பைச் சமன்பாடு (1) -யில் பிரதியிட, \(a \times\left[\frac{2}{3}\right]^3=\frac{8}{9} \Rightarrow a=3\)
எனவே, தேவையான பெருக்குத் தொடர்வரிசை a, ar, ar2,..... அதாவது, \(3,2, \frac{4}{3}, \ldots\)
24.
மூன்று குழந்தைகள் பெறும் தொகை கூட்டுத் தொடர்வரிசையில் அமைவதால் அவற்றை a - d, a, a + d, என்க. தொகையின் கூடுதல் ரூ.207 என்பதால்
(a - d) + a + (a + d) = 207
3a = 207 ⇒ a = 69
இரு சிறிய தொகைகளின் பெருக்கற்பலன் 4623 என்பதால்
(a - d)a = 4623
(69 - d)69 = 4623
d = 2
எனவே, மூன்று குழந்தைகளுக்கும் தாய் பிரித்துக் கொடுத்த தொகை
ரூ.(69-2), ரூ 69, ரூ.(69+2). அதாவது, ரூ.67, ரூ.69 மற்றும் ரூ.71.
25.
70000 ஆனது 7 ஆல் வகுபடும் என்பதால்
70000 ≡ 0 (மட்டு 7)
70000 + 4 ≡ 0 + 4 (மட்டு 7)
70004 ≡ 4 (மட்டு 7)
எனவே 70004 ஐ 7 ஆல் வகுக்கக் கிடைக்கும் மீதி 4.
777 ஆனது 7 ஆல் வகுபடும் என்பதால்
777 ≡ 0 (மட்டு 7)
777 + 1 ≡ 0 + 1 (மட்டு 7)
778 ≡ 1 (மட்டு 7)
எனவே, 778 ஐ 7 ஆல் வகுக்கக் கிடைக்கும் மீதி 1.
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards