10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 29/08/2026
10ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
மாங்கனீசின் பயன்களைக் குறிப்பிடுக.
2.
இயற்கை எரிவாயு என்றால் என்ன?
3.
கனிமங்கள் மற்றும் அதன் வகைகள் யாவை?
4.
இந்தியாவில் உள்ள பருத்தி நெசவாலைகளின் பரவல் பற்றி எழுதுக.
5.
இந்தியத் தொழிலகங்கள் எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள் பற்றி எழுதுக.
6.
வேளாண் சார்ந்த மற்றும் கனிமம் சார்ந்த தொழிலகங்கள்
7.
உலோகம் மற்றும் அலோக கனிமங்கள்
1.
மாங்கனீசுவின் பயன்கள்:
1. மாங்கனீசு இரும்பு எஃகு மற்றும் உலோக உற்பத்திக்கு அடிப்படையான மூலப்பொருள் ஆகும்.
2. வெளுக்கும் தூள், பூச்சிக் கொல்லிகள், வண்ணப்பூச்சுகள், மின்கலன்கள் போன்றவை தயாரிப்பதற்கு மாங்கனீசு பயன்படுகிறது.
2.
1. இயற்கை எரிவாயு என்பது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் அழிந்து புதையுண்ட தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் அதிக வெப்பம் மற்றும் அழுத்தம் காரணமாக மக்குவதன் மூலம் உண்டாகக்கூடிய ஒரு வாயு ஆகும்.
2. இயற்கை எரிவாயு பொதுவாக பெட்ரோலிய பகுதிகளுடன் இணைந்து காணப்படுகிறது.
3. இது வெப்பப்படுத்தலுக்கும், சமையலுக்கும் மின் உற்பத்திக்கும் வாகனங்களுக்கு எரிபொருளாகவும் விளங்குகிறது
3.
கனிமங்கள்
ஒரு குறிப்பிட்ட வேதியியல் மற்றும் இயற்பியல் பண்புகளைக் கொண்ட உயிருள்ள மற்றும் உயிரற்ற இயற்கை மூலங்கள் கனிமங்கள் ஆகும். இவை புவியிலிருந்து அகழ்ந்தெடுக்கப்படுகிறது.
வகைகள்
வேதியியல் மற்றும் இயற்பியல் பண்புகளின் அடிப்படையில் கனிமங்கள் இரண்டு பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகின்றன. அவை,
i. உலோகக் கனிமங்கள்
ii. அலோகக் கனிமங்கள்
4.
இந்திய பருத்தி நெசவாலைகள்:
1. பருத்தி நெசவாலைகள் நம் நாட்டின் அதிக வேலை வாய்ப்பை அளிக்கும் ஆதாரங்களில் ஒன்றாக உள்ளது.
2. தற்போது இந்தியா, பருத்தி உற்பத்தியில் உலகின் மூன்றாவது பெரிய நாடாகவும் தறிகளிலும், நூற்பு கருவிகளின் எண்ணிக்கையிலும் முதன்மையான நாடாகவும் உள்ளது.
3. தற்போது பருத்தி நெசவாலைகள் இந்தியாவின் மிகப்பெரிய நவீன தொழிலகப் பிரிவாக உள்ளது.
பருத்தி நெசவாலைகளின் பரவல்:
1. மகாராஷ்டிரம், குஜராத், மேற்கு வங்காளம், உத்திரப்பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பருத்தி நெசவாலைகள் செறிந்து காணப்படுகின்றன.
2. தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், கரூர், சென்னை, திருநெல்வேலி, மதுரை, தூத்துக்குடி, சேலம், மற்றும் விருதுநகர் ஆகியன முக்கிய நெசவாலை நகரங்களாகும்.
மும்பை-இந்தியாவின் மான்செஸ்டர்:
1. மும்பை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பருத்தி நெசவாலைகள் செறிந்து காணப்படுவதால் மும்பை, இந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுகிறது.
2. இதற்குக் காரணம் மகாராஷ்டிரா மாநிலத்தில் காணப்படும் கரிசல் மண், ஈரப்பதக்கால நிலை, மும்பைத் துறைமுகம், எளிதில் கிடைக்கும் நீர்மின்சக்தி, சந்தை வசதி மற்றும் சிறந்த போக்குவரத்து வசதி ஆகியனவாகும்.
கோயம்புத்தூர்-தென்னிந்தியாவின் மான்செஸ்டர்
1. தமிழ்நாட்டிலுள்ள கோயம்புத்தூரில் அதிக எண்ணிக்கையிலான பருத்தி நெசவாலைகள் உள்ளன.
2. இதனால் கோயம்புத்தூர் தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படுகிறது.
5.
1. மின் பற்றாக்குறை மற்றும் சீரற்ற மின் விநியோகம்.
2. தொழிலகங்கள் நிறுவுவதற்கேற்ற பரந்த நிலப்பரப்பு இல்லாமை
3. கடன் பெறுவதிலுள்ள நடைமுறை சிக்கல்கள்
4. கடனுக்கான அதிக வட்டி விகிதம்
5. மலிவான ஊதியத்திற்கு வேலையாட்கள் கிடைக்காமை
6. ஊழியர்களுக்கான தொழில்நுட்ப மற்றும் தொழிற்முறை பயிற்சிகள் இல்லாமை
7. தொழில்பேட்டைகளுக்கருகில் வசிப்பதற்கு ஏற்ற சூழல் இல்லாமை
6.
| வேளாண் சார்ந்த தொழிலகங்கள் | கனிமம் சார்ந்த தொழிலகங்கள் | |
| 1 | வேளாண் சார்ந்த தொழிலகங்கள் வேளாண் துறையிலிருந்து மூலப் பொருட்களைப் பெறுகின்றன. | இத்தொழில்கள் உலோகம் மற்றும் உலோகமற்ற பொருட்களை மூலப்பொருட்களாக பயன்படுத்துகின்றன. |
| 2 | பருத்தி நெசவாலைகள், சணல் ஆலைகள், பட்டு நெசவாலைகள், சர்க்கரை ஆலைகள், ஆகியன வேளாண் சார்ந்த தொழிலகங்களுக்கு முக்கிய சான்றுகளாகும். | இரும்பு எஃகு தொழிற்சாலைகள், சிமெண்ட் தொழிற்சாலைகள், இரசாயன உரத்தொழிற்சாலைகள் ஆகியன கனிமம் சார்ந்த தொழிலகங்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். |
7.
| உலோகம் கனிமங்கள் | அலோகக் கனிமங்கள் | |
| 1 | உலோகக் கனிமங்கள் என்பது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உலோகங்களைக் கொண்டிருக்கும். | அலோகக் கனிமங்களில் உலோகத் தன்மை இருப்பதில்லை. |
| 2 | உலோகப் படிவுகளில் இரும்பு, மாங்கனீசு, தாமிரம், பாக்சைட், நிக்கல், துத்தநாகம், காட்மியம், தங்கம் போன்ற மதிப்புமிக்க உலோகங்கள் காணப்படுகின்றன. | மைக்கா, சுண்ணாம்புக்கல், ஜிப்சம், நைட்ரேட், பொட்டாஷ், டோலமைட், நிலக்கரி பெட்ரோலியம் முதலிய அலோகக் கனிமங்கள் ஆகும். |
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards