10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 29/08/2026
10ஆம் வகுப்பு Tamil / தமிழ் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Tamil / தமிழ் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Tamil Test

1.
2.
ஆசிரியப்பாவின் பொது இலக்கணத்தை கூறுக.
3.
கீழ்க்காணும் குறளை அலகிட்டு வாய்பாடு தருக.
4.
சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள் இன்றைக்கும் தேவையானவையே என்பதற்குச் சில எடுத்துக்காட்டுகள் தருக.
5.
வெண்பாவின் பொது இலக்கணம் யாது?
6.
பண்டைய அரசியல் அறம் பற்றிக் குறிப்பிடுக.
7.
8.
பள்ளித்திடலில் கிடைத்த பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்ததையும், அதற்குப் பாராட்டுப் பெற்றதையும் பற்றி வெளியூரில் இருக்கும் உறவினர் ஒருவருக்குக் கடிதம் எழுதுக.
9.
இராமானுசர் நாடகத்தினைச் சுருக்கிக் கதையாய்க் கூறுக.
10.
11.
உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் என்றும், பொருள்களின் இருப்பைக்கூட அறியாமல் கொடுப்பவன் என்றும் பாராட்டப்படுவோர் _________ .
உதியன், சேரலாதன்
அதியன், பெருஞ்சாத்தன்
பேகன், கிள்ளிவளவன்
நெடுஞ்செழியன், திருமுடிக்காரி
12.
மேன்மை தரும் அறம் என்பது ____.
கைம்மாறு கருதாமல் அறம் செய்வது
மறுபிறப்பில் பயன் பெறலாம் என்ற நோக்கில் அறம் செய்வது
புகழ் கருதி அறம் செய்வது
பதிலுதவி பெறுவதற்காக அறம் செய்வது
13.
பொருத்துக
| அ | வெண்பா | 1 | துள்ளல் ஓசை |
| ஆ | ஆசிரியப்பா | 2 | செப்பலோசை |
| இ | கலிப்பா | 3 | தூங்கல் ஓசை |
| ஈ | வஞ்சிப்பா | 4 | அகவலோசை |
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 4 | 1 | 2 |
| அ | ஆ | இ | ஈ |
| 2 | 4 | 1 | 3 |
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 1 | 2 | 4 |
| அ | ஆ | இ | ஈ |
| 1 | 4 | 2 | 3 |
14.
மணிமேகலை, பெருங்கதை எப்பாவில் அமைந்தது?
ஆசிரியப்பா
கலிப்பா
வஞ்சிப்பா
வெண்பா
15.
16.
17.
18.
குறள் வெண்பாவின் இலக்கணத்தை எழுதி எடுத்துக்காட்டுத் தருக.
19.
20.
ஆசிரியப்பா எத்தனை வகைப்படும்? அவை யாவை?
21.
"கவிதை வாழ்க்கையின் திறனாய்வு “ என்று திறனாய்வாளர் ஆர்னால்டு கூறுகிறார்?
22.
கண்ணும் கருத்தும்
23.
மனக் கோட்டை
24.
பின்வரும் உரையாடலில் உள்ள பேச்சு வழக்கினை எழுத்து வழக்காக மாற்றுக.
"தம்பீ? எங்க நிக்கிறே?"
"நீங்க சொன்ன எடத்துலதாண்ணே! எதிர்த்தா ப்புல ஒரு டீ ஸ்டால் இருக்குது."
"அங்ஙனக்குள்ளயே டீ சாப்டுட்டு, பேப்பர ப் படிச்சிக்கிட்டு இரு... நா வெர சா வந்துருவேன்"
"அண்ணே! சம்முவத்தையும் கூட்டிக்கிட்டு வாங்கண்ணே! அவனெப் பாத்தே ரொம்ப நாளாச்சு!"
"அவம் பாட்டியோட வெளியூர் போயிருக்கான். உங்கூருக்கே அவனெக் கூட்டிக்கிட்டு வர்றேன்."
"ரொம்பச் சின்ன வயசுல பார்த்ததுண்ணே! அப்பம் அவனுக்கு மூணு வயசு இருக்கும்!”
“இப்ப ஒசரமா வளந்துட்டான்! ஒனக்கு அடையாளமே தெரியாது! ஊருக்கு எங்கூட வருவாம்
பாரேன்! சரி, போனை வையி. நாங் கெளம்பிட்டேன்...”
“சரிங்கண்ணே”
25.
26.
1.
2.
1. எல்லா அடிகளும் நாற்சீர் கொண்ட அடிகளாய் வரும்.
2. ஈரசைச்சீர்களும் மூவசைச்சீர்களும் பயின்று வரும்.
3. நேரொன்றாசிரியத்தளையும் நிரையொன்றாசிரியத்தளையும் வரும்; பிற தளைகள் சிறுபான்மையாகவும் பயின்று வரும்.
4. அகவல் ஓசை பெற்று வரும்.
5. குறைந்தது மூன்று அடிகள்; கூடுதல் பாடுவோரின் உள்ளக்குறிப்பிற்கேற்ப அமையும்.
6. ஈற்றுச்சீர் ஏ, ஓ, ஈ, ஆய், என், ஐ என்ற ஓசையில் அமையும்.
3.
பொருளல்லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்ல தில்லைப் பொருள்.
| வ.எண் | சீர் | அசை | வாய்பாடு |
| 1. | பொரு/ளல் | நிறை நேர் | புளிமா |
| 2. | லவ/ரைப் | நிறை நேர் | புளிமா |
| 3. | பொரு/ளளா/கச் | நிறை நேர் நேர் | புளிமாங்காய் |
| 4. | செய்/யும் | நேர் நேர் | தேமா |
| 5. | பொரு/ளல்/ல | நிறை நேர் நேர் | புளிமாங்காய் |
| 6. | தில்/லைப் | நேர் நேர் | தேமா |
| 7. | பொருள் | நிரை | மலர் |
இக்குறள் மலர் என்னும் வைப்பாட்டால் முடிந்தது.
4.
(i) மன்னர்களுடைய செங்கோலும் வெண்கொற்றக்குடையும் அறத்தின் குறியீடுகள்.
(ii) மன்னர்கள் அமைச்சர்களின் துணைகொண்டு நீதி வழங்கினர்.
(iii) இன்று நாட்டை ஆளும் மக்கள் பிரதிநிதிகள் நம் குறைகளைக் கேட்பதுமில்லை, அறிவதுமில்லை.
(iv) இன்று கையூட்டுப் பெருகி, பொருள் இல்லாதார் வாழ்வது கடினம் என்ற நிலை உருவாகியுள்ளது.
(v) அன்றைய வணிகர்கள்
"நடுவுநின்ற நன்னெஞ்சினோர்
வடுவஞ்சி வாய்மொழிந்து
தமவும் பிறவும் ஒப்ப நாடிக்
கொள்வதூஉம் மிகைகொளாது
கொடுப்பதூஉங் குறைகொடாது..."
விற்றனர் என்கிறது, பட்டினப்பாலை.
(vi) ஆனால், இன்றைய வணிகர்கள் கொடுப்பதைக் குறைத்தும், பெறுவதை மிகுதியாய்ப் பெற்றும் வணிகம் செய்கின்றனர்.
(vii) அறநெறியைக் காலில் இட்டு மிதித்துப் பழிபாவத்திற்கு அஞ்சாது வாழ்கின்றனர். எனவே, சங்க இலக்கியங்கள் காட்டும் அறநெறி இன்றைக்கும் தேவைதான்.
5.
(i) வெண்பா அடிதோறும் நான்கு சீர்களைப் பெற்று வரும்.
(ii) ஈரசைச் சீர்களும், மூவசைச் சீர்களில் காய்ச்சீரும் பெற்று வரும்; கனிச்சீர் வாராது.
(iii) இயற்சீர் வெண்டளையும் வெண்சீர் வெண்டளையும் பயின்று வரும்; பிற தளைகள் வாரா.
(iv) ஈற்றுச்சீர் நாள், மலர், காசு, பிறப்பு ஆகியவற்றுள் ஒன்று கொண்டு முடியும்.
(v) செப்பலோசை பெற்று வரும்.
(vi) ஒரு விகற்பமாகவோ பல விகற்பமாகவோ வரும்.
(vii) வெண்பா இரண்டடிக்குக் குறையாமல் பன்னிரண்டடிகளுக்கு மிகாமல் பாடப்பட வேண்டும்.
6.
(i) 'அறநெறி முதற்றே அரசின் கொற்றம்
'அறன்நெறி பிழையாத் திறனறி மன்னர்'
(ii) மன்னர்களின் செங்கோல், வெண்கொற்றக்குடை ஆகியவை அறத்தின் குறியீடுகள் என்று பல பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
(iii) நீர்நிலை பெருக்கி, நிலவளம் கண்டு, உணவுப்பெருக்கம் கண்டு, அதனை அனைவருக்கும் கிடைக்கச் செய்வது அரசரின் கடமை,
(iv) குற்றங்களை அறத்தின் அடிப்படையில் ஆராய்ந்து தண்டனை வழங்கினர்.
(v) மதுரைக்காஞ்சியில் மாங்குடி மருதனார் அன்பும் அறனும் காத்தல் அமைச்சர் கடமை என்கிறார்.
(vi) அமைச்சர்கள் அரசர்க்கு நல்ல யோசனைகளைக் கூறினர்.
(vii) அறம் கூறும் அவையங்கள் (மன்றங்கள்) மன்னர்களின் ஆட்சிக்குத் துணைபுரிந்தன.
(viii) இதனை, “அறம் அறக்கண்ட நெறிமான் அவையம்” என்கிறது, புறநானூறு.
(ix) மதுரையில் இருந்த அவையம், துலாக்கோல் போல் நடுநிலையுடன் செயல்பட்டதாய் மதுரைக்காஞ்சி கூறுகிறது.
7.
8.
| 21-03-2020, கோயம்புத்தூர். |
| அன்புள்ள மாமா அவர்களுக்கு, வணக்கம். இங்கு அம்மா, அப்பா, அண்ணா, பாட்டி, நான் அனைவரும் நலமாய் இருக்கிறோம். அங்கு அத்தை, மணிவண்ணன், மகாலட்சுமி ஆகியோர் நலமும் தங்கள் நலமும் அறிய ஆவல். ஒரு மகிழ்வான நிகழ்வைத் தங்களோடு பகிர்ந்துகொள்ளவே இக்கடிதம் எழுதுகிறேன். சென்ற புதன்கிழமையன்று, எங்கள் பள்ளி விளையாட்டுத்திடலில் ஒரு துணிப்பை கிடந்தது; எடுத்துப் பிரித்துப் பார்த்தேன்; கட்டுக்கட்டாகப் பணமும் ஒரு கைபேசியும் இருந்தது. அவற்றைத் தலைமை ஆசிரியரிடம் கொடுத்தேன். மறுநாள் காலையில் பள்ளியில் இறைவணக்கம் பாடி முடிக்கப்பட்டது. பின், பேரவையில் தலைமை ஆசிரியர், என்னை மேடைக்கு அழைத்தார்; எனது செயலைக் குறிப்பிட்டுப் பாராட்டினார். எங்கள் ஊர்த்தலைவர், காவல்துறை ஆணையர், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகிய அனைவரும் பாராட்டினர். பணப்பையின் உரிமையாளர் நெகிழ்வுடன் பாராட்டினார். நானும் அப்பா, அம்மா, பாட்டி, அண்ணா ஆகியோரும் மிகவும் மகிழ்ந்தோம். இதனைத் தெரிவிக்கவே கடிதம் எழுதுகிறேன். |
| அன்புடன், அபிராமவல்லி. |
| உறைமேல் முகவரி திரு. ச. இராதாகிருஷ்ணன், 13, தென்றல் காலனி, 3ஆவது தெரு, மேடவாக்கம், சென்னை. |
9.
(i) வேதத்தின் விளக்கங்களுள் ஒன்றான விசிஷ்டாத்துவைதத்தின் முன்னோடியாய் விளங்கியவர், இராமானுசர்.
(ii) திருமந்திரத் திருவருள் பெற இராமானுசர், திருக்கோட்டியூர் பூரணர் இல்லத்திற்கு 18 முறை சென்றார்.
(iii) 18ஆம் முறை சென்ற போது, பூரணர், தண்டும் கொடியுமாய் வரப்பணித்தார்.
(iv) கூரேசர், முதலியாண்டான் ஆகிய இருவரையும் இராமானுசர் தம்முடன் அழைத்துச் சென்றார்.
(v) 'தனித்து வரச் சொன்னால், இவர்களை அழைத்து வந்தது ஏன்?' என்றார், பூரணர்.
(vi) “தாங்கள் கூறிய தண்டுக்கும் கொடிக்கும் இணையானவர்கள் இவர்களே. பொறுத்தருள்க, குருவே" என்றார், இராமானுசர்.
(vii) பூரணர், மூவரையும் வீட்டினுள் அழைத்துச் சென்று, திருமந்திரப் பெருமைகளைக் கூறினார்.
(viii) "இதனை வேறு யாரிடமும் கூறலாகாது; கூறினால் நரகம் கிட்டும்," என்றார், பூரணர்.
(ix) இவ்வாறு கூறி, மந்திரத்தை மூவருக்கும் உபதேசித்தார். அம்மூவரும் பூரணரை வணங்கி ஆசி பெற்றுத் திரும்பினர்.
(x) இராமானுசர் குருவாகிய பூரணர் அருளிய மந்திரத்தை, குருவின் கட்டளையை மீறி, எல்லோரும் அறியும்படி செய்துவிட்டார்.
(xi) இராமானுசர், ''குருவின் நம்பிக்கைக்குக் கேடு இழைத்துவிட்டீர். அதனால் அடையவிருக்கும் துன்பம் யாதென அறிவீரோ?" என்று கேட்டார், பூரணர்.
(xii) இராமானுசர், “அறிவேன், சுவாமி. நரகம் அடைவேன். நான் ஒருவன் நரகம் சென்றாலும், என் மக்கள் அனைவருக்கும் நலம் கிட்டுமே. எல்லோரும் நலமுடன் வாழ்வார்களே” என்றார்.
(xiii) அதனைக் கேட்ட பூரணர் மகிழ்ந்தார்; 'எம்பெருமான்' என்னும் நாமம் சூட்டி இராமானுசரைப் போற்றினார்.
(xiv) பூரணர், தம் மகன் சௌம்ய நாராயணனையும் இராமானுசரிடம் அடைக்கலப்படுத்தினார்.
10.
(a)
11.
(a)
உதியன், சேரலாதன்
12.
(a)
கைம்மாறு கருதாமல் அறம் செய்வது
13.
(b)
| அ | ஆ | இ | ஈ |
| 2 | 4 | 1 | 3 |
14.
(a)
ஆசிரியப்பா
15.
16.
17.
18.
1. குறள் வெண்பா இரண்டடிகளில் வரும்.
2. ஈற்றடி முச்சீராய், முதலடி நாற்சீராய் வரும்.
3. இயற்சீரும் காய்ச்சீரும் பயின்று வரும்.
4. இயற்சீர் வெண்டளையும், வெண்சீர் வெண்டளையும் வரும்.
5. செப்பலோசை குன்றாமல் வரும்.
6. ஒரு விகற்பமாகவோ, இரு விகற்பமாகவோ வரும்.
7. நாள், மலர், காசு, பிறப்பு என்னும் வாய்பாடுகளுள் ஒன்றுகொண்டு முடியும்.
19.
20.
ஆசிரியப்பா நான்கு வகைப்படும். அவை
(i) நேரிசை ஆசிரியப்பா
(ii) இணைகுறள் ஆசிரியப்பா
(iii) நிலைமண்டில ஆசிரியப்பா
(iv) அடிமறிமண்டில ஆசிரியப்பா.
21.
கவிதை திறனாய்வாளர் ஆர்னால்டு கூறுவதென்ன?
22.
தாய் தன் குழந்தையே கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டார்.
23.
மதியழகன் தான் பெரிய அமைச்சராக வேண்டும் என்ற மனக் கோட்டை கட்டினான்
24.
"தம்பி! எங்கே நிற்கிறாய்?"
“நீங்கள் கூறிய இடத்தில் தான் அண்ணா! எதிர்ப்பக்கத்தில் ஒரு தேநீர் கடை இருக்கிறது.”
"அந்த இடத்திற்குள்ளேயே தேனீர் சாப்பிட்டு விட்டு, செய்தித் தாளைப் படித்துக் கொண்டு இரு. நான் விரைவாக வந்துவிடுவேன்.”
“அண்ணா! சண்முகத்தையும் அழைத்துக் கொண்டு வாருங்கள் அண்ணா! அவனைப் பார்த்தே வெகு நாட்களாகி விட்டன."
“அவன் பாட்டியோடு வெளியூர் போய் இருக்கிறான். உங்கள் ஊருக்கே அவனை அழைத்துக்கொண்டு வருகிறேன்.”
“மிகச் சிறிய வயதில் பார்த்தது அண்ணா! அப்பொழுது அவனுக்கு மூன்று வயது இருக்கும்!"
“இப்பொழுது உயரமாக வளர்ந்து விட்டான். உனக்கு அடையாளமே தெரியாது ! ஊருக்கு எங்களுடன் வருவான் பார். சரி, தொலைபேசியை வை. நான் புறப்பட்டு விட்டேன்."
"சரி அண்ணா!"
25.
26.
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards