10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 27/08/2026
10ஆம் வகுப்பு Tamil / தமிழ் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Tamil / தமிழ் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Tamil Test

1.
பல துறைகளின் வளர்ச்சிக்கு மொழிபெயர்ப்பு எவ்வாறு பயன்படுகிறது?
2.
மன்னன் இடைக்காடனார் என்னும் புலவருக்கு சிறப்புச் செய்தது ஏன்? விளக்கம் தருக.
3.
ஐக்கிய நாடுகள் அவையில் மொழிபெயர்ப்பு
ஐ.நா. அவையில் ஒருவர் பேசினால் அவரவர் மொழிகளில் புரிந்துகொள்வதற்கு வசதி செய்யப்பட்டிருக்கிறது. மொழிபெயர்ப்பு (Translation) என்பது, எழுதப்பட்டதை மொழிபெயர்ப்பது. ஆனால், ஒருவர் பேசும்போதே மொழிபெயர்ப்பது, விளக்குவது (Interpreting) என்றே சொல்லப்படுகிறது. ஐ.நா. அவையில் ஒருவர் பேசுவதை மொழிபெயர்க்கும் மொழிபெயர்ப்பாளர், பார்வை யாளர்களுக்குத் தெரியாதபடி வேறு இடத்தில் இருப்பார். ஒருவர் பேசுவதைக் காதணிக்கேட்பியில் (Headphone) கேட்டபடி சில நொடிகளில் மொழிபெயர்த்து, ஒலிவாங்கி வழியே பேசுவார். அவையில் உள்ள பார்வையாளர் தம் முன் உள்ள காதணிக்கேட்பியை எடுத்துப் பொருத்திக்கொண்டு அவரது மொழியில் புரிந்துகொள்வார்.
இப்பகுதியிலிருந்து ஐந்து வினாக்களை உருவாக்குக.
4.
கீழ்க்காண்பனவற்றுள் எந்த இலக்கியம் பிறமொழிப் படைப்பினைத் தழுவித் தமிழில் படைக்கப்பட்டது.?
அ) திருக்குறள் ஆ) கம்பராமாயணம்
இ) கலித்தொகை ஈ) சிலப்பதிகாரம்
5.
இரவீந்திரநாதாகூர் -------------- மொழியில் எழுதிய கவிதைத் தொகுப்பான கீதாஞ்சலியை ---------------மொழியில், மொழிபெயர்த்த பிறகுதான் அவருக்கு நோபல் பரிசு கிடைத்தது.
அ) ஆங்கில, வங்காளம் ஆ ) வங்காள, ஆங்கில இ) வங்காள, தெலுங்கு ஈ) தெலுங்கு, ஆங்கில
6.
“கொற்கைக் கோமான் கொற்கையம் பெருந்துறை” என்று குறிப்பிடும் நூல் _____________
ஐங்குறுநூறு
புறநானூறு
அகநானூறு
நற்றிணை
7.
கொற்கை என்னும் ஊர் அமைந்துள்ள மாவட்டம் ____________
மதுரை
திருநெல்வேலி
தூத்துக்குடி
குமரி
8.
கல்வி மறுக்கப்பட்ட சமூகங்களின் ஒரு குரலாக இருந்தவர் _____________
அன்னை தெரசா
வில்சன்
மெக்லியோட் பெத்யூன்
கமலாலயன்
9.
கமலாலயன் அவர்களின் இயற்பெயர் _____________
இராசகோபாலன்
முத்தையா
சண்முகசுந்தரம்
வே. குணசேகரன்
10.
'உனக்குப் படிக்கத் தெரியாது' என்னும் நூலின் ஆசிரியர் ______________
கா.ப. செய்குத்தம்பிப் பாவலர்
கமலாலயன்
வண்ணதாசன்
ஈரோடு தமிழன்பன்
11.
வேப்ப மாலை அணிந்த மன்னன் ____________
சோழன்
சேரன்
பல்லவன்
பாண்டியன்
12.
பரஞ்சோதி முனிவரின் காலம் ____________
18ஆம் நூற்றாண்டு
17ஆம் நூற்றாண்டு
16ஆம் நூற்றாண்டு
12ஆம் நூற்றாண்டு
13.
"ஒரு மொழியில் உணர்த்தப்பட்டதை வேறொரு மொழியில் வெளியிடுவது மொழிபெயர்ப்பு” எனக் கூறியவர் ______________
மு.கு. ஜகந்நாத ராஜா
மணவை முஸ்தபா
சா. கந்தசாமி
தனிநாயக அடிகள்
14.
திருவிளையாடற்புராணம் ___________ காண்டங்களை உடையது.
மூன்று
நான்கு
ஆறு
பத்து
15.
திருவிளையாடற்புராணத்தை இயற்றியவர் ________ .
தாயுமானவர்
மாணிக்கவாசகர்
பரஞ்சோதி முனிவர்
திருநாவுக்கரசர்
16.
கருத்துப் பகிர்வைத் தருவதால் மொழிபெயர்ப்பை _________ என்று குறிப்பிடுவார்கள்.
ஓவியக்கலை
நுண்கலை
பயன்கலை
கவின்கலை
17.
_______ மொழியில் மொழிபெயர்ப்பின் மூலம் அறிமுகம் ஆன ஷேக்ஸ்பியர், அந்நாட்டுப் படைப்பாளர் போலவே கொண்டாடப்பட்டார்.
இத்தாலி
பிரான்ஸ்
ஜெர்மன்
சீனா
18.
மொழி பெயர்த்தல் என்ற தொடரைத் தொல்காப்பியர் _____________ குறிப்பிட்டுள்ளார்.
பெயரியலில்
செய்யுளியலில்
மரபியலில்
தொல்லியலில்
19.
ஒரு மொழியில் உணர்த்தப்பட்டதை வேறொரு மொழியில் வெளியிடுவது _________ .
மொழியாக்கம்
மொழிபெயர்ப்பு
இலக்கியம்
பரப்புரை
20.
இடைக்காடனார் பாடலை இகழ்ந்தவன் __________
இடைக்காடனாரிடம் அன்பு வைத்தவன் ____________
அமைச்சர், மன்னன்
அமைச்சர், இறைவன்
இறைவன், மன்னன்
மன்னன், இறைவன்
21.
மொழிபெயர்ப்பு பற்றி மணவை முஸ்தபா என்ன கூறுகிறார்?
22.
“கழிந்த பெரும் கேள்வியினான் எனக்கேட்டு முழுது உணர்ந்த கபிலன் தன்பால் பொழிந்த பெரும் காதல்மிகு கேண்மையினான் இடைக்காட்டுப் புலவன் தென்சொல்" - இவ்வடிகளில் கழிந்தபெரும் கேள்வியினான் யார்? காதல்மிகு கேண்மையினான் யார்?
23.
24.
இறைவன், புலவர் இடைக்காடனார் குரலுக்குச் செவிசாய்த்த நிகழ்வினை நயத்துடன் எழுதுக.
1.
2.
1. இடைக்காடர் என்னும் புலவர் குலேசபாண்டிய மன்னனின் கல்விப்புலமையை அறிந்தார்.
2. அதனால், அவர் சொல்நயமும் பொருள்நயமும் மிக்க பாடல்களை இயற்றி, மன்னன் முன் பாடிக் காட்டினார்.
3. மன்னன் பாராட்டாது இருந்தான்.
4. கோபமுற்ற புலவர், கோவிலுக்குச் சென்று, 'மன்னன் என்னை அவமதிக்கவில்லை; உன்னை அவமதித்தான்' என்று சிவபெருமானிடம் கூறினார்.
5. அதைக் கேட்ட இறைவன், தன் அருவுருவை மறைத்துவிட்டுக் கோவிலை விட்டு வெளியேறினான்.
6. கோவிலில் லிங்க உருவைக் காணாது வருந்திய மன்னனிடம் இறைவன், அவன் இடைக்காடருக்குச் செய்த பிழையைச் சுட்டிக்காட்டினான்.
7. மனம் திருந்திய மன்னன், புலவருக்கு விழா எடுத்துச் சிறப்புச் செய்தான்.
3.
1) ஐ.நா. சபையில் மொழி சார்ந்து செய்யப்பட்டுள்ள வசதி யாது?
2) மொழிபெயர்ப்பாளர் எங்கு இருப்பார்?
3) Translation, Interpreting ஆகிய ஆங்கிலச்சொற்களைத் தமிழில் எவ்வாறு மொழி பெயர்க்கலாம்?
4) மொழிபெயர்ப்பாளரின் பணி யாது?
5) பிற மொழியினர் பேசும் உரையை ஐ.நா. பார்வையாளர் எவ்வாறு அறிகிறார்?
4.
5.
6.
(a)
ஐங்குறுநூறு
7.
(c)
தூத்துக்குடி
8.
(c)
மெக்லியோட் பெத்யூன்
9.
(d)
வே. குணசேகரன்
10.
(b)
கமலாலயன்
11.
(d)
பாண்டியன்
12.
(b)
17ஆம் நூற்றாண்டு
13.
(b)
மணவை முஸ்தபா
14.
(a)
மூன்று
15.
(c)
பரஞ்சோதி முனிவர்
16.
(c)
பயன்கலை
17.
(c)
ஜெர்மன்
18.
(c)
மரபியலில்
19.
(b)
மொழிபெயர்ப்பு
20.
(d)
மன்னன், இறைவன்
21.
"ஒரு மொழியில் உணர்த்தப்பட்டதை வேறொரு மொழியில் வெளியிடுவது மொழிபெயர்ப்பு" என்கிறார்.
22.
'கழிந்த பெரும் கேள்வியினான்’ - மன்னன் குலேசபாண்டியன்
'காதல்மிகு கேண்மையினான்' - புலவர் இடைக்காடர்.
23.
24.
1. புலவர் கபிலரோடு நட்புக்கொண்டவர், புலவர் இடைக்காடர்.
2. கபிலரைப் போலக் கற்றறிந்த புலமை மிக்கவர், இடைக்காடர்.
3. மன்னன் குலேசபாண்டியன் பொருட்செல்வத்தைப் போல அறிவுச்செல்வத்தையும் மிகுதியாய்ப் பெற்றவன் என்பதனை அறிந்தார், இடைக்காடர்.
4. எனவே, புலவர், சொல்நயம் மிக்க கவிதைகளை இயற்றி மன்னன் முன் பாடிக் காண்பித்தார்.
5. ஆனால், மன்னன் அவற்றைக் கேட்டுப் பாராட்டாது அமர்ந்திருந்தான்.
6. கோபம் கொண்ட இடைக்காடர் இறைவனைக் காணக் கோவிலுக்குச் சென்றார்.
7. மன்னன் தம்மைப் பாராட்டாது அவமதித்ததைக் கூறி, “பாண்டியன் என்னை
அவமதிக்கவில்லை; உமாதேவியாரையும் உம்மையுமே அவமதித்தான்” என்று இறைவனிடம் கூறினார்.
8. அதனைக் கேட்ட இறைவன் கோவிலை விட்டு வெளியேறினான்.
9. நண்பனுக்கு நேர்ந்த இழிவு தமக்கு நேர்ந்த இழிவாகும் எனக் கருதுவதே உண்மையான நட்பு.
10. எனவே, இடைக்காடருக்கு நேர்ந்த இழிவை அறிந்து கபிலர் வருந்தினார்.
11. அதனால், “போன இடைக்காடனுக்கும் கபிலனுக்கும் அகம் உவகை " கொள்ள இறைவன் கோவிலை விட்டு வெளியேறினான் என்கிறார், பரஞ்சோதியார்.
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards