10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 27/08/2026
10ஆம் வகுப்பு Tamil / தமிழ் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Tamil / தமிழ் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Tamil Test

1.
பாய்ச்சல் - சிறுகதையைச் சுருக்கி எழுதுக.
2.
'சந்தக்கவிதையில் சிறக்கும் கம்பன்' என்ற தலைப்பில் இலக்கிய உரை எழுதுக. பின்வரும் உரையைத் தொடர்க. அன்பும் பண்பும் குணச்சித்திரமும் கொண்ட தலைவர் அவர்களே! தேர்ந்தெடுத்த பூக்களைப் போன்று வரிசை தொடுத்து அமர்ந்திருக்கும் ஆன்றோர்களே! அறிஞர் பெருமக்களே! வணக்கம். இயற்கை கொலு வீற்றிருக்கும் காட்சியைப் பெரிய கலைநிகழ்வே நடப்பதான தோற்றமாகக் கம்பன் காட்டும் கவி 'தண்டலை மயில்கள் ஆட...' எனத் தொடங்கும் கவியாகும்.
3.
அகத்திணைகள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
4.
வறுமையின் காரணமாக உதவி கேட்டு வருபவரின் தன்மானத்தை எள்ளி நகையாடுவது குறித்துக் குறளின் கருத்து யாது?
5.
கரப்பிடும்பை இல்லார் - இத்தொடரின் பொருள் கூறுக.
6.
தஞ்சம் எளியர் பகைக்கு - இவ்வடிக்குரிய அசைகளையும் வாய்பாடுகளையும் எழுதுக.
7.
பின்வருவனவற்றுள் கூரான ஆயுதம் எது என்று செந்நாப்போதார் கூறுகிறார்? ஏன் என்பதை எழுதுக.
பெரியகத்தி, இரும்பு ஈட்டி, உழைத்ததால் கிடைத்த ஊதியம், வில்லும் அம்பும்.
8.
கீழ்வரும் தொடர்களில் பொருந்தாத கருப்பொருளைத் திருத்தி எழுதுக.
உழவர்கள் மலையில் உழுதனர்.
முல்லைப்பூச்செடியைப் பார்த்தவாறே பரதவர் கடலுக்குச் சென்றனர்.
9.
தேவர் அனையர் கயவர் அவரும்தாம்
மேவன செய்தொழுக லான் - இக்குறட்பாவில் பயின்றுவந்துள்ள அணியைச் சுட்டி விளக்குக.
10.
11.
'கடற்கரையில் உப்புக்காய்ச்சுதல் நடைபெறுகிறது. மலைப்பகுதிகளில் மலைப்பயிர்களும், நிலப்பகுதிகளில் உழவுத்தொழிலும் நடைபெறுகின்றன' - காலப்போக்கில் பல மாற்றங்கள் நிகழ்ந்தபோதிலும் பண்டைத்தமிழரின் திணைநிலைத்தொழில்கள் இன்றளவும் தொடர்வதையும், அவற்றின் இன்றைய வளர்ச்சியையும் எழுதுக.
12.
“பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்ல தில்லை பொருள்" - இதில் பயின்று வந்துள்ள அணி
தற்குறிப்பேற்ற அணி
உவமையணி
சொற்பொருள் பின்வருநிலை அணி
வஞ்சப் புகழ்ச்சி அணி
13.
மணலும் மணல் சார்ந்த இடமும் எத்திணைக்குரியது?
குறிஞ்சி
முல்லை
நெய்தல்
பாலை
14.
மருதத்திற்குரிய சிறுபொழுது __________ .
நண்பகல்
மாலை
வைகறை
எற்பாடு
15.
சித்திரை, வைகாசி - எந்தப் பெரும்பொழுதிற்கு உரியது?
பின்பனி காலம்
இளவேனிற் காலம்
கார் காலம்
முதுவேனிற் காலம்
16.
பொழுது எத்தனை வகைப்படும்?
3
4
2
1
17.
சா. கந்தசாமி எந்தப் புதினத்திற்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றார்?
சூர்யவம்சம்
சாந்தகுமாரி
விசாரணைக்கமிஷன்
தொலைந்து போனவர்கள்
18.
பாய்ச்சல் என்னும் சிறுகதையின் ஆசிரியர் ________ .
ஜெயகாந்தன்
அகிலன்
சா. கந்தசாமி
ஜெயமோகன்
19.
கம்பராமாயணம் எத்தனை காண்டங்களை உடையது?
ஏழு
ஆறு
எட்டு
ஒன்பது
20.
கம்பர் தன் நூலுக்கு இட்ட பெயர் _________ .
கம்பராமாயணம்
இராமாயணம்
இராமாவதாரம்
வால்மீகி இராமாயணம்
21.
குளிர் காலத்தைப் பொழுதாய்க் கொண்ட நிலங்கள் __________ .
முல்லை, குறிஞ்சி, மருத நிலங்கள்
குறிஞ்சி, பாலை, நெய்தல் நிலங்கள்
குறிஞ்சி, மருதம், நெய்தல் நிலங்கள்
மருதம், நெய்தல், பாலை நிலங்கள்
22.
அணிமை
23.
ஏந்தெழில்
24.
அகவுதல்
25.
உழுவை
26.
தால்
27.
"கம்பராமாயணம்" என்னும் தலைப்பில் இடம் பெற்றுள்ள 'தண்டலை மயில்கள்' எனத் தொடங்கும் மனப்பாடப் பாடலை அடிபிறழாமல் எழுதுக
28.
29.
30.
31.
32.
1.
தெருமுனையில் பெரிய கூட்டம். மேளம் கடகடவென்று இரைந்துகொண்டிருந்தது. அழகு ஊருக்குப் புதியவன்; ஆகையால், என்ன நடக்கிறது என்பதை அவனால் புரிந்துகொள்ள முடியவில்லை. நாதஸ்வரமும் மேளமும் சேர்ந்து ஒலித்தன. அழகன் குனிந்து பார்த்தான். ஆள் உயரக் குரங்கு ஒன்று மரத்திலிருந்து கீழே இறங்குவது தெரிந்தது; அவனால் நம்ப முடியவில்லை. அவன் கண்டது குரங்கன்று; அனுமார்தான். அனுமாரைக் காணும் ஆவலில் கூட்டத்தில் முண்டியடித்து நுழைந்தான். அனுமார் வலக்காலையும் இடக்காலையும் மாறி மாறித் தரையில் வேகமாய் உதைத்துக் கைகளை வீசி நடக்க ஆரம்பித்தார். அழகனும் கூட்டத்துடன் பின்னால் நடந்தான். கூட்டம் வட்டமாய் மாறியது. சதங்கையும் மேளமும் நாதஸ்வரமும் துரித கதியில் ஒலிக்கத் தொடங்கின. அழகனுக்குத் தானே அனுமாராய் மாறியது போன்று தோன்றியது. திடீரென்று அனுமார் வாலில் பெரிய தீப்பந்தம் ஜுவாலை விட்டு எரிந்தது; அவர் கைகளைத் தரையில் ஊன்றிக் கரணமடித்தார். மக்கள் வியப்புடன் கண்டனர். தீயின் ஜுவாலை தணிந்தது. கீழே புரண்ட வாலைச் சிறுவர்கள் இருவர் தூக்கி வந்தார்கள். அவர்களுள் ஒருவன் அழகனிடம் வாலைக் கொடுத்துவிட்டுக் கைகளை உதறிக்கொண்டான். அனுமார் நடையில் வேகம் கூடிற்று. அவருக்கு இணையாய் நடக்க முடியவில்லை. அழகன் ஓடினான்; அனுமார் துள்ளிப் பாய்ந்தார்; பாய்ச்சல் பாய்ந்து வேகமாய் ஆடினார்; தம்மை இழந்தவராய் ஆடினார். மேளம், நாதஸ்வரத்தால் ஈடு கொடுக்க முடியவில்லை. மேல்மூச்சு வாங்க அனுமார் ஆட்டத்தை நிறுத்தினார். ஆலமரத்தில் அனுமார் சாய்ந்து ஓய்வெடுத்தார். சிறிது நேரத்திற்குப் பின் நடக்க ஆரம்பித்தார். அழகனும் இராமுவும் வாலைத் தூக்கிக்கொண்டு பின்னால் நடந்தனர். ஆற்றங்கரை அருகிலிருந்த கோவிலில் தூணில் சாய்ந்தபடி அமர்ந்தார், அனுமார். அழகன் அனுமாரைப் பார்த்துச் சிரித்தான். அனுமார் அழகனை அருகில் அழைத்து, “ஆட்டம் பார்த்தாயா? பிடித்ததா?” என்று கேட்டார். "பார்த்தேங்க; ரொம்ப ஜோருங்க. எனக்கும் இது மாதிரி ஆடணும்னு ஆசைங்க" என்றான். “அப்படியா! எங்கே ஓர் ஆட்டம் ஆடிக் காட்டு” என்றார், அனுமார். அழகனும் தனக்குத் தெரிந்த வகையில் அனுமார் ஆடியதை மனத்தில் இருத்தி ஆடினான். முதலில் இரசித்த அனுமார், பின்னர் அவனது ஆட்டம் சரியில்லையென்று தாமே ஆடிக் காட்டினார். அழகன் அனுமாருடன் சேர்ந்து ஆடினான். அனுமாரின் கைக்குள் அகப்படாது, கை இடுக்குள் புகுந்து ஓடினான். “எனக்கா பாச்சா காட்டுற?" என்றபடி அனுமார் பாய்ந்தார். அழகன் சிக்காமல் நழுவ, அனுமார் கால்கள் பின்னிக் கீழே விழுந்தார். அழகன், ஆட்டத்தில் மூழ்கியவனாய் உற்சாகமாய் ஆடிக்கொண்டிருந்தான்.
2.
கம்பநாடன் சந்த நயத்துடன் பாடிய அப்பாடலை இனிக் காண்போம்.
"தண்டலை மயில்கள் ஆடத் தாமரை விளக்கம் தாங்கக்
கொண்டல்கள் முழவினேங்கக் குவளைகண் விழித்துநோக்கத்
தெண்டிரை யெழினி காட்டத் தேம்பிழி மகரயாழின்
வண்டுகள் இனிது பாட மருதம்வீற்றிருக்கும் மாதோ"
இப்பாடல்மூலம் கம்பர், ஓர் அரசவையில் நடைபெறும் அழகிய நடனக் காட்சியைக் கண்முன் நிறுத்துகிறார். “வயல்களின் கரையிலுள்ள சோலையே நாடக அரங்கு. மயிலின் ஆட்டமே நடனம்; தாமரை அரும்புகளே விளக்குகள்; மேக முழக்கமே மத்தளம்; மகர யாழைப் போன்ற வண்டுகளின் இன்னிசையே யாழொலி. நீர் அலையே திரைச்சீலை. இக்காட்சியை மருதமாகிய மன்னன். குவளையாகிய கண்களால் நோக்கியவாறு வீற்றிருக்கிறான்" என்கிறார், கம்பர். இடத்திற்கு ஏற்ற ஓசைநயம் அமையப் பாடுவதில் வல்லவர், கம்பர். வீரம், காதல், கோபம், வியப்பு, அவலம் என அனைத்து உணர்ச்சிகளும் தோன்றும்படியான கவிதை அடிகளை இயற்றியவர், கம்பர்.
“பஞ்சியொளிர் விஞ்சுகுளிர் பல்லவம் அணுங்கச்
செஞ்செவிய கஞ்சநிமிர் சீறடிய ளாகி..."
என்ற பாடலில், இராமனின் மனத்தைக் கவரும் எண்ணத்துடன் மெல்ல நடந்து வரும் சூர்ப்பநகையின் நடையழகை மெல்லினச் சொற்கொண்டு பாடுகிறார்.
"மையோமர கதமோமறி கடலோமழை முகிலோ
ஐயோஇவன் வடிவென்பதொர் அழியாஅழ குடையான்.”
இதில் வியப்புச்சுவையைச் சொல்லடுக்கிலும் ஓசையமைப்பிலும் அழகாய் வெளிப்படுத்தியுள்ளார். கம்பரின் பாடல்கள் ஒவ்வொன்றும் 'கம்ப சித்திரம்'. “சான்றோர் கவிஎனக் கிடந்த கோதாவரி” என ஆற்றுக்குக் கவிதையை ஒப்புமைப்படுத்தினார், கம்பர். அவர் கூறிய இலக்கணத்திற்கு அவர் கவிதைகளே சான்று. பன்னீராயிரம் பாடல்கள் கொண்ட கம்பர் காவியத்தில் எத்தனையோ சந்தக்கவிகள் நம் சிந்தையைக் கொள்ளை கொள்கின்றன. நல்வாய்ப்புக்கு நன்றி! வணக்கம்.
3.
அகத்திணைகள் ஏழு வகைப்படும்.
அவையாவன:
(i) குறிஞ்சி
(ii) முல்லை
(iii) மருதம்
(iv) நெய்தல்
(v) பாலை
(vi) கைக்கிளை
(vii) பெருந்திணை
4.
(i) வறுமை காரணமாய்ச் சிலர் உதவி கேட்டு வருவர்.
(ii) அவரின் தன்மானத்தை எள்ளி நகையாடி, இழிவாய்ப் பேசிக் கொடுத்தால் இரப்பவர் உள்ளம் மிகவும் துன்புறும்.
5.
கரப்பிடும்பை இல்லார் - தம்மிடம் உள்ளதை மறைத்தலாகிய நோய் இல்லாதவர்.
6.
| சொல் | அசை | வாய்பாடு |
| தஞ்சம் எளியர் பகைக்கு |
நேர் நேர் நிரை நேர் நிரை நேர் |
தேமா புளிமா புளிமா |
7.
(i) போர்க்கருவிகள் பகையுடையவரை அழிக்கும்.
(ii) ஆனால், கண்ணுக்குத் தெரியாத பகையை அழிக்காது.
(iii) பகைவரின் செருக்கினை அடக்குவதற்குத் தேவையான படைவலிமையையும், நட்பு வலிமையும் பெறுவதற்குச் செல்வம் தேவை.
(iv) அதனால், உழைப்பால் கிடைத்த ஊதியமே கூரான ஆயுதம் என்கிறார், செந்நாப்போதார்.
8.
விடை: உழவர்கள் வயலில் உழுதனர்.
நெய்தற்பூவை பார்த்தவாறே பரதவர் கடலுக்குச் சென்றனர்.
9.
இக்குறட்பாவில் பயின்று வந்துள்ள அணி வஞ்சப் புகழ்ச்சி அணி.
அணி இலக்கணம்:
பழிப்பது போலப் புகழ்வதும் புகழ்வது போலப் பழிப்பதும் வஞ்சப்புகழ்ச்சி அணி ஆகும். இப்பாடல் புகழ்வது போலக் கூறி பழிக்கப்பட்டுள்ளது.
விளக்கம்:
புகழ்தல் - கயவர் தேவர்களுக்கு ஒப்பாவர்
பழித்தல் - கயவர் தம் மனம் போன போக்கில் தீய செயல்களைச் செய்வார்கள்.
தேவரும் கயவரும் ஒரு தன்மையர். தேவரைப் போல கயவரும் தாம் விரும்பியதைச் செய்வர் என்று புகழ்வது போல பழித்தலால், இஃது வஞ்சப்புகழ்ச்சி அணி ஆயிற்று.
10.
11.
(i) பண்டைத்தமிழர்கள் தாங்கள் வாழும் பகுதியை ஐவகை நிலங்களாய்ப் பிரித்தனர்.
(ii) அவற்றுள் குறிஞ்சி, மருதம், நெய்தல், முல்லை ஆகிய நிலங்கள் முறையே மலை, வயல்,
(iii) கடல், காடு ஆகிய பகுதிகளைக் குறித்தன.
(iv) அன்று நடைபெற்ற அந்நிலத்தொழில்களே இன்றும் நடைபெறுகின்றன.
(v) காலநிலைக்கேற்பச் சிறுசிறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
(vi) மருதநிலத்தில் உழவுத்தொழில் நடைபெறுகிறது. அத்தொழிலுக்கான பல பணிகளுக்கு இன்று இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
(vii) நெய்தலில் அன்று கட்டுமரத்தில் சென்று மீன் பிடித்தனர். இன்று மோட்டார் படகுகளில் சென்று மீன் பிடிக்கின்றனர்.
(viii) இவ்வாறு நிலங்களுக்கேற்ற தொழில்களில் நவீனக்கருவிகள் பல பயன்படுத்தப்படுகின்றன.
12.
(c)
சொற்பொருள் பின்வருநிலை அணி
13.
(d)
பாலை
14.
(c)
வைகறை
15.
(b)
இளவேனிற் காலம்
16.
(c)
2
17.
(c)
விசாரணைக்கமிஷன்
18.
(c)
சா. கந்தசாமி
19.
(b)
ஆறு
20.
(c)
இராமாவதாரம்
21.
(c)
குறிஞ்சி, மருதம், நெய்தல் நிலங்கள்
22.
சமீபம்
23.
மிக்க அழகு
24.
ஒலித்தல், பாடுதல்
25.
புலி, ஒருவகை மீன்
26.
தாலாட்டு
27.
தண்டலை மயில்கள் ஆடத் தாமரை விளக்கந் தாங்கக்
கொண்டல்கண் முழவி னேங்கக் குவளை கண் விழித்து நோக்கத்
தெண்டிரை யெழினி காட்டத் தேம்பிழி மகர யாழின்
வண்டுகள் இனிது பாட மருதம் வீற்றிருக்கு மாதோ.
வெய்யோன் ஒளி தன்மேனியில் விரிசோதியின் மறையப்
பொய்யோவெனு மிடையிளொடு மிளையானொடும் போனான்;
மையோ மரகதமோ மறிகடலோ மழைமுகிலோ
ஐயோ இவன் வடிவென்பதொ ரழியாவழ குடையான்
28.
தோளில் மாட்டி டோலக் வாசிக்க
தலைமேலே வண்ணத் துணியாட்டி ஆடுகிறார் நால்வர்
ஒருகாலைத் தூக்கி இசைக்கேற்ப அசைவுகாட்டி
ஆடுகின்றார் ஒயிலாட்டம்.
உணர்வான நிகழ்கலையாட்டம்
29.
30.
31.
32.
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards