8th Standard Syllabus & Materials
8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - மயங்கொலிகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை -பட்டமரம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - இயற்கையை போற்றுவோம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 1 - தமிழ் இன்பம் - ஆழிக்கு இணை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2-ஈடில்லா இயற்கை - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 3 - கல்வி கரையில - பாடறிந்து ஒழுகுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 02/09/2026
8ஆம் வகுப்பு Tamil / தமிழ் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Tamil / தமிழ் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Tamil Test

1.
முறை, பொறை என்பவற்றுக்குக் கலித்தொகை கூறும் விளக்கம் யாது?
2.
பண்பு, அன்பு ஆகியவை பற்றிக் கலித்தொகை கூறுவன யாவை?
3.
திரு.வி.க சங்கப் புலவர்களாகக் குறிப்பிடுபவர்களின் பெயர்களை எழுதுக.
4.
தாய்நாடு என்னும் பெயர் எவ்வாறு பிறக்கிறது?
5.
இன்றைய கல்வியின் நிலை பற்றித் திரு.வி.க. கூறுவன யாவை?
6.
பகைவர்களிடமும் நாம் நடந்து கொள்ள வேண்டிய முறை யாது?
7.
யாருடைய உள்ளம் மாணிக்கக் கோயில் போன்றது?
8.
பழியின்றி வாழும் வழியாகத் திருக்குறள் கூறுவது யாது?
9.
சான்றோர்க்கு அழகாவது எது?
10.
தமிழர் மருத்துவத்தில் மருந்துகளாகப் பயன்படுவன யாவை?
11.
நல்வாழ்விற்கு நாம் நாள்தோறும் செய்ய வேண்டியவை யாவை?
12.
மருத்துவம் எப்போது தொடங்கியது?
13.
ழகர, லகர மற்றும் ளகர மெய்களின் பிறப்பு முயற்சிப் பற்றி எழுதுக.
14.
மெய் எழுத்துகள் எவற்றை இடமாகக் கொண்டு பிறக்கின்றன?
15.
எழுத்துகளின் பிறப்பு என்றால் என்ன?
16.
வீரமாமுனிவர் மேற்கொண்ட எழுத்துச் சீர்திருத்தங்களில் எவையேனும் இரண்டனை எழுதுக.
17.
ஓலைச்சுவடிகளில் நேர்கோடுகள், புள்ளிகள் ஆகியவற்றைப் பயன்படுத்த இயலாமைக்குக் காரணம் என்ன?
18.
ஓவிய எழுத்து என்றால் என்ன?
19.
தமிழ் எவற்றை அறிந்து வளர்கிறது?
20.
தமிழ் எங்குப் புகழ் கொண்டு வாழ்கிறது?
21.
22.
23.
24.
25.
26.
27.
28.
29.
30.
31.
32.
33.
34.
1.
1. முறை (நீதிமுறை) எனப்படுவது குற்றம் செய்தவருக்கு உரிய தண்டனை வழங்குதல்.
2. பொறை (பொறுமை) எனப்படுவது தம்மை இகழ்வாரையும் பொறுத்தல்.
3. இவ்வாறு முறை, பொறை என்பவற்றுக்குக் கலித்தொகை விளக்கம் தருகிறது.
2.
1. பண்பு எனப்படுவது சான்றோர் காட்டிய வழியில் நடத்தல்.
2. அன்பு எனப்படுவது உறவினர்களோடு வெறுப்பின்றி வாழ்தல். இவையே கலித்தொகை கூறுவனவாகும்.
3.
திரு.வி.க குறிப்பிடும் சங்கப் புலவர்கள்:
1. இளங்கோவடிகள்
2. திருத்தக்க தேவர்
3. திருஞானசம்பந்தர்
4. ஆண்டாள்
5. சேக்கிழார்
6. கம்பர்
7. பரஞ்சோதி முனிவர் முதலியோர்.
4.
நாம் தமிழ் மக்கள்:
1. நாம் நமது தாய்மொழி வாயிலாகக் கல்வி பெறலே சிறப்பு.
2. அதுவே இயற்கை முறை.
3. போதிய ஓய்வும் நேரமும் இருப்பின் வேறு பல மொழிகளையும் பயிலலாம்.
4. ஆனால் முதல் முதல் தாய்மொழி வாயிலாகவே கல்வி பயிலுதல் வேண்டும்.
5. தாய்நாடு என்னும் பெயர் தாய்மொழியைக் கொண்டே பிறப்பது.
5.
1. இந்நாளில் ஏட்டுக்கல்வியே கல்வி என்னும் ஒரு கொள்கை எங்கும் நிலவி வருகிறது.
2. ஏட்டுக்கல்வி மட்டும் கல்வி ஆகாது. இந்நாளில் கல்வியென்பது பொருளற்றுக் கிடக்கிறது.
3. குறிப்பிட்ட பாடங்களை நெட்டுருச் செய்து தேர்வில் தேறிப் பட்டம் பெற்று, ஒரு தொழிலில் நுழைவதற்குக் கல்வி ஒரு கருவியாகக் கொள்ளப்பட்டு வருகிறது.
4. நாளடைவில் அக்கல்விக்கும் வாழ்விற்கும் தொடர்பில்லாமல் போகிறது என்று திரு.வி.க கூறுகிறார்.
6.
i. பகைவர்களிடம் நாம் அன்புடன் பழக வேண்டும்.
ii. அன்பை வெளிப்படுத்தி பகைவர்களை நம் வசமாக்க வேண்டும்.
7.
பிறரை மன்னிக்கத் தெரிந்த உள்ளம் மாணிக்கக் கோயில் போன்றது.
"மன்னிக்கத் தெரிந்த மனிதனின் உள்ளம்
மாணிக்கக் கோயிலப்பா"
8.
முதலில் தன் குற்றத்தைக் கண்டு நீக்கி, அதன்பின் பிறருடைய குற்றத்தை ஆராய்வதே பழியின்றி வாழும் வழியாக திருக்குறள் கூறுவதாகும்.
9.
துலாக்கோல் பொருள்களின் எடையைச் சரியாகக் காட்டுவது போல், நடுவுநிலைமையுடன் செயல்படுவது சான்றோர்க்கு அழகாகும்.
10.
தமிழர் மருத்துவத்தில் தாவரங்கள் மட்டும் அல்லாமல் உலோகங்களையும், தாதுப் பொருட்களையும் மருந்துகளாகப் பயன்படுத்தினர்.
11.
தினமும் நாற்பத்தைந்து நிமிடத்தில் மூன்று கி.மீ. நடைப்பயணம், பதினைந்து நிமிடம் யோகா, தியானம், மூச்சுப்பயிற்சி, ஏழு மணி நேர தூக்கம், மூன்று லிட்டர் தண்ணீர் அருந்துதல் முதலியவையே நல்வாழ்விற்கு நாம் நாள்தோறும் செய்ய வேண்டியவை ஆகும்.
12.
தொடக்க காலத்தில் மனிதனுக்கு நோய் வந்த போது இயற்கையாக வளர்ந்த தாவரங்களின் வேர், பட்டை, இலை, பூ, கனி முதலியவற்றை மருந்தாகப் பயன்படுத்தினர். இவ்வாறு தான் மருத்துவம் தொடங்கியது.
13.
i. ழகர மெய் எழுத்து மேல்வாயை நாக்கின் நுனி வருடுவதால் பிறக்கின்றன.
ii. லகர மெய் எழுத்து மேல்வாய்ப் பல்லின் அடியை நாக்கின் ஓரங்கள் தடித்து நெருங்குவதால் பிறக்கிறது.
iii. ளகர மெய் எழுத்து மேல்வாயை நாக்கின் ஓரங்கள் தடித்துத் தடவுதலால் பிறக்கிறது.
14.
i. க், ச், ட், த், ப், ற் ஆகிய ஆறு வல்லின மெய் எழுத்துகளும் மார்பை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.
ii. ங், ஞ், ண், ந், ம், ன் ஆகிய ஆறு மெல்லின மெய் எழுத்துகளும் மூக்கை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.
iii. ய், ர், ல், வ், ழ், ள் ஆகிய ஆறு இடையின மெய் எழுத்துகளும் கழுத்தை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.
15.
i. உயிரின் முயற்சியால் உடலின் உள்ளிருந்து எழும் காற்றானது மார்பு, தலை, கழுத்து. மூக்கு ஆகிய நான்கு இடங்களுள் ஒன்றில் பொருந்தி, இதழ், நாக்கு, பல், மேல்வாய் ஆகிய உறுப்புகளின் முயற்சியினால் வேறுவேறு ஒலிகளாகத் தோன்றுகின்றன.
ii. இதனையே எழுத்துகளின் பிறப்பு என்பர். எழுத்துகளின் பிறப்பினை இடப்பிறப்பு, முயற்சிப் பிறப்பு என இரு வகையாக பிரிப்பர்.
16.
i. எகர ஒகர வரிசை எழுத்துகளில் புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களை வீரமாமுனிவர் களைந்தார்.
ii. எ என்னும் எழுத்திற்கு ஏ நெடிலாக எழுதினார்.
iii. ஒ என்னும் எழுத்திற்குச் சுழி இட்டு ஓ என்னும் எழுத்தை உருவாக்கினார்.
17.
i. ஓலைச்சுவடிகளிலும் கல்வெட்டுகளிலும் புள்ளி பெறும் எழுத்துகளை எழுதும் போது அவை சிதைந்து விடும் என்பதால் புள்ளி இடாமல் எழுதினர்.
ii. புள்ளி இடப்பட்டு எழுதப்படும் இடங்களில் புள்ளிகள் தெளிவாகத் தெரியாத நிலையில் அவற்றின் இடம் நோக்கி மெய்யா, உயிர்மெய்யா, குறிலா, நெடிலா என உணர வேண்டிய நிலை இருந்தது.
18.
i. தொடக்க காலத்தில் எழுத்து என்பது ஒலியையோ வடிவத்தையோ குறிக்காமல் பொருளின் ஓவிய வடிவமாகவே இருந்தது.
ii. இவ்வரிவடித்தை ஓவிய எழுத்து என்பர்.
19.
i. தமிழ்மொழியானது எக்காலத்தும் நிலைபெற்று வாழ்கிறது.
ii. ஆகாயத்தால் சூழப்பட்ட எல்லாவற்றையும் அறிந்து உரைக்கும் வளமான மொழியாக தமிழ்மொழி வளர்கிறது.
"வானம் அறிந்த அனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழியவே"
20.
தமிழ் மொழியானது ஏழ்கடல்களால் சூழப்பட்ட நிலப்பகுதி முழுவதும் தன் இலக்கிய மணத்தைப் பரவச் செய்து வாழ்கிறது.
"ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி
இசை கொண்டு வாழியவே"
21.
22.
23.
24.
25.
26.
27.
28.
29.
30.
31.
32.
33.
34.
8th Standard Syllabus & Materials
8th Standard
TN 8th Tamil இயல் 3-கல்வி கரையில - பல்துறைக் கல்வி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 3-கல்வி கரையில - புத்தியைத் தீட்டு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - தமிழர் மருத்துவம் ( நேர்காணல்) Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 8th Standard Subjects
Tamilnadu Stateboard Standards