11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th English Supplementary - 3 - The First Patient (Play) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 3 - Forgetting Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 2 - The Queen of Boxing Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Poem - 1 - Once Upon A Time Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 1 - The Portrait of a Lady Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Tamil Computing Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 19/12/2018
Revision Mock Test
11ஆம் வகுப்பு Computer Technology / கணினி தொழில்நுட்பம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Technology / கணினி தொழில்நுட்பம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Technology Test

1.
விசைப்பலகை மூலம் உரையை எவ்வாறு தேர்வு செய்யலாம்?
2.
சொற்செயலி என்றால் என்ன?
3.
பயன்பாட்டு சன்னல் திரைக்கும், ஆவணச் சன்னல் திரைக்கும் உள்ள வேறுபாடு யாது?
4.
சன்னல் திரை (Window) என்றால் என்ன?
5.
முக்கிய இயக்க அமைப்புகள் சிலவற்றைப் பட்டியலிடுக .
6.
அமைப்புப் பாட்டை(System Bus) என்றால் என்ன?
7.
எண்ணிலை எண்முறை குறிப்பு வரைக
8.
தரவுச் செயலாக்கம் என்றால் என்ன?
9.
ஆண்ட்ராயடு பயன்பாடு விசைப்பலகை என்றால் என்ன?
10.
சமூக வலையகம் என்றால் என்ன?
11.
காணொலி கருத்தரஙகம் என்றால் என்ன?
12.
கணினி வலையமைப்பில் உள்ள முனையம் பற்றி நீ புரிந்தவற்றை எழுதுக
13.
நிகழத்துதளை ஆதரிக்கும் கோப்புகளின் வகைகளை பட்டியலிடுக
14.
நிகழத்துதல் என்றால் என்ன?
15.
வடிகட்டியின் வகைகள் யாவை?
16.
தாள்களை பெயர் மாற்றம் செய்யும் வழிமுறையை எழுதுக
17.
ஓபன் ஆஃபீஸ் கால்க் -ல் எத்தனை வகையான கருவிப்பட்டைகள் உள்ளது?
18.
திறந்த மூல (Open Source) மென்பொருள் என்றால் என்ன?
19.
பல்பணியாக்கம் என்றால் என்ன?
20.
நிரல் கவுண்ட்டர் என்றால் என்ன?
21.
எழுத்துருக்களை நினைவகத்தில் கையாளுவதற்கான குறியீட்டு முறைகளைப் பட்டியலிடுக.
22.
கட்டுப்பாட்டகத்தின் செயல்களை எழுதுக?
23.
முகவரிப் புத்தகம் என்றால் என்ன?
24.
ஆவணத்தில் ஒரு படத்தை எவ்வாறு சேர்ப்பாய்?
25.
உரை வடிவூட்டம் என்றால் என்ன?
26.
Writer-ல் உள்ள உதவி பற்றிக் குறிப்பு வரைக .
27.
ஆவணத்தைத் தமிழில் எவ்வாறு தட்டச்சு செய்வாய்?
28.
ஓபன் ஆஃபீஸ் ரைட்டரில் ஒரு புதிய ஆவணத்தை எவ்வாறு உருவாக்குவாய்?
29.
Windows-ல் ஒரு புதிய கோப்புறையை எவ்வாறு உருவாக்குவாய்?
30.
இயக்க அமைப்பின் வகைகள் யாவை?
31.
இயக்க அமைப்பின் தேவை என்ன?
32.
நுண்செயலி கொண்டுள்ள முக்கிய பகுதிகள் யாவை?
33.
குரல் உள்ளீட்டு சாதனம்(voice Input systems)-குறிப்பு வரைக.
34.
இணையங்கியின் சிறப்பு அம்சஙகள் யாவை?
35.
இணைய இணைப்பிற்கு தேவையான வன்பொருள் மற்றும் மென்பொருள்கள் யாவை?
36.
பொதுவாக,இணைப்பிகள் மையத்தை விட விரும்பப்படுகிறது.ஏன்?
37.
Master slide – என்பதை வரையறு
38.
Impress-ல் சிறந்த நிகழத்துதலை உருவாக்க சில்லு மாற்று (transistion effect) முறை எவ்வாறு உதவுகிறது?
39.
பயனர் அனைத்துப் பக்கஙகளின் அடிப்பகுதியிலும் பக்க எண்களை புகுத்த வேண்டுமானால், எந்த கருவியை பயன்படுத்த வேண்டும்?இதை வடிவமைப்பதற்கான படிநிலைகளை எழுதுக
40.
ஒப்பீட்டு நுண்ணறை முகவரியையும் தனித்த நுண்ணறை முகவரியையும் வேறுபடுத்துக
41.
ஏதேனும் மூன்று வடிவூட்டல் தேர்வுகளை எழுதுக
42.
Windows மற்றும் Ubuntu -க்கு உள்ள வித்தியாசங்கள் யாவை?
43.
மொபைல் இயக்க அமைப்பின் உதாரணங்களை விளக்குங்கள்.
44.
தரவின் அளவைப் பொருத்து நுண்செயலியை வகைப்படுத்துக
45.
கழித்து எழுதவும் 10010102 - 101002
46.
ISCII குறிப்பு வரைக.
47.
உள்ளீட்டு சாதனங்கள் என்றால் என்ன? இரண்டு எடுத்துக்காட்டுகள் தருக.
48.
ஒரு பத்தியில் உள்ள வார்த்தைகளின் எண்ணிக்கையை கண்டுபிடிப்பதற்கான படி நிலைகளை எழுதுக.
49.
பின்னணியிலுள்ள ஒரு படத்தின் தெளிவை எவ்வாறு மாற்றுவாய்?
50.
உரையில் வரி இடைவெளியை மாற்றும் வழிகள் பற்றி எழுதுக.
1.
1. செருகும் புள்ளியை தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய உரையின் தொடக்கத்தில் வைக்க வேண்டும்.
2. Shift பொத்தானை அழுத்தியவாறு நகர்வுப் பொத்தான்களை பயன்படுத்தி தேவையான உரை தேர்வு செய்யப்பட்டப்பின் Shift பொத்தானை அழுத்துவதை விட்டு விடவும்.
2.
ஒரு உரை ஆவணத்தை உருவாக்குதல், பதிப்பித்தல், கையாளுதல், பரிமாற்றம் செய்தல், சேமித்தல் மற்றும் திரும்ப எடுத்தல் ஆகிய செயற்பாடுகளைச் செய்யும் கணிப்பொறி மென்பொருள் "சொற்செயலி" ஆகும்.
3.
| பயன்பாட்டு சன்னல் திரை | ஆவண சன்னல் திரை |
|---|---|
| பயனர், பயன்பாட்டு மென்பொருள்களுடன் தொடர்பு கொள்ளப் பயன்படுகிறது. | இது உரை மற்றும் படங்களை உருவாக்கவும், பதிப்பாய்வு செய்யவும்,படங்களை வரையவும் மற்றும் வடிவூட்டம் செய்யவும் பயன்படுகிறது. |
4.
ஒரு ஆவணம் அல்லது பயன்பாட்டின் பொதுவான செவ்வகப் பகுதி "சன்னல் திரை" எனப்படும்.
5.
1. யுனிக்ஸ்
2. மைக்ரோசாஃப்ட் விண்டோஸ்
3. லினக்ஸ்
4. iOS
5. அண்ட்ராய்டு
6.
அமைப்புப் பாட்டை என்பது நுண் செயலிக்கும் மற்ற சாதனங்களுக்கும் இடையில் இணைப்பை ஏற்படுத்த உதவும் முகவரிப் பாட்டை , தரவுப் பாட்டை மற்றும் கட்டுப்பாட்டுப் பாட்டை ஆகியவற்றின் தொகுப்பாகும்.
7.
எண்ணிலை எண் முறையில் 0 முதல் 7 வரை மொத்தம் எட்டு எண் உருக்கள் உள்ளது. இந்த எண் முறையும் "நிலைநிறை " முறையாகும்
8.
தரவுகளை, தகவல்களாக மாற்றம் செய்யும் செயல்முறை "தரவுச் செயலாக்கம்" என்று அழைக்கப்படுகிறது.

9.
செல்லினம் மற்றும் பொன்மடல் : ஸ்மார்ட் கைப்பேசிகளில் ஆண்ட்ராய்டு இயக்க அமைப்பில் ஆங்கில ஒலியியல் முறையில் பயன்படுத்தப்படும் இடைமுக விசைப்பலகை மென்பொருட்கள் ஆகும்.
10.
சமூக வலையகம் அல்லது சமூக ஊடகமானது கணினி ஊடகத் தொழில்நுட்ப வசதியைக் கொண்டு உருவாக்கப்படுவதோடு தகவல். எண்ணங்கள், தொழில்துறை ஆர்வம் மற்றும் பிறவடிவ வெளிப்பாடுகளைமாய சமுதாயம் மற்றும் வலையகத்தின் மூலம் பகிரும் வசதி ஆகும்.
11.
1.காணொளி கருத்தரங்கம் என்பது வெவ்வேறு இருப்பிடங்களில் வசிக்கின்ற இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மக்களுக்கு இடையே நேரலையாக, பார்க்கக்கூடியத் தொடர்பிற்கான இணைப்பைக் கொண்டிருக்கிறது.
2.இது நிலையான படங்கள் மற்றும் உரைகளை இரண்டு இருப்பிடங்களுக்கு இடையே பரிமாற்றிட உதவுகிறது.
12.
வலையமைப்பில் உள்ள ஒவ்வொரு கணிப்பொறியும் முனையம் எனப்படும். இவை தகவலை அனுப்பவும் பெறவும் முடியும்.
13.
1. Open Document படிவங்களான -.odp, odg,otp
2. Open Office.org XML 1.0 presentation -.sxi
3. Openoffice .org XML1.0 Presentation Template - .sti
4. Microsoft Powerpoint 97/2000/xP/ 2007 படிவங்கள் - .ppt or pptx
5. Microsoft Powerpoint 97/2000/xp/2007 Template - .pot
6. OpenOffice.org XML 1.0 Drawing - .sxd
7. Uniformofficeformat2presentation-.uop.
14.
1. நிகழ்த்துதல் என்பது ஒரு கணிப்பொறி மென்பொருள் ஆகும். தகவல்களை சில்லுக்காட்சிகளாக வழங்கப் பயன்படுகிறது.
2. நிகழ்த்துதல் என்பது. நிகழ்த்துதலை உருவாக்கவும், வினா-விடைகள், மின் கற்றல் மற்றும் பல்லூடகப் பொருட்களை உருவாக்கப் பயன்படும் மென்பொருள் ஆகும்.
15.
கால்க்-ல் மூன்று வகையான வடிக்கட்டல்கள் உள்ளன. அவை :
1. தானியங்கு வடிகட்டல் (Auto filter)
2. செந்தர வடிகட்டல் (Standard filter) மற்றும்
3. மேம்பட்ட வடிகட்டல் (Advanced filter)
16.
வழிமுறை 1:
1.மாற்றுப் பெயரிட வேண்டிய கணக்கீட்டுத்தாளின் தத்தலின் மீது இரட்டை கிளிக் செய்யவும்.
2.ஒரு சிறிய "Rename Sheet" என்ற உரையாடல் பெட்டி தோன்றும்.
3. Name உரைப்பெட்டியில், புதிய பெயரைத் தட்டச்சு செய்து, OK பொத்தானைக் கிளிக் செய்யவும்.
வழிமுறை 2:
மாற்றுப் பெயரிட வேண்டிய தத்தலின் மீது வலது கிளிக் செய்து தோன்றும் மேல்மீட்பு பட்டியலிலிருந்து Rename தேர்வை கிளிக் செய்யவும்.
இப்பொழுது Rename Sheet உரையாடல் பெட்டி தோன்றும். அதில் புதிய பெயரைத் தட்டச்சு செய்து OK பொத்தானைக் கிளிக் செய்யவும்.
17.
ஓபன் ஆஃபீஸ் கால்க்-ல் கொடா நிலையாக மூன்று கருவிப்பட்டைகள் உள்ளன. அவை
(i) செந்தரக் கருவிப்பட்டை
(ii) வடிவூட்டல் கருவிப்பட்டை
(iii) வாய்ப்பாட்டு பட்டை
18.
பொது மக்களுக்கு விலையில்லாமல், இணையத்தின் வழியே கிடைக்கும் ஒரு மென்பொருளின் மூல நிரல்களுக்கு திறந்த மூலம் (Open Source) என்று பெயர்.
19.
1. பல் பணியாக்கம் அல்லது பல செயலாக்கம் என்பது இயக்க அமைப்பு அம்சங்களின் ஒன்றாகும். பல செயலாக்க செயல்முறை(வேலை) இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட செயலிகளைக் கொண்டுள்ளது.
2. செயலாக்கம் இணையாக செய்யப்படுவதால் இது இணையாக்க செயலி ஆகும்.
3. ஒவ்வொரு செயலாக்கமும் ஒரே வேலையில் வெவ்வேறு பகுதிகளில் அல்லது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வெவ்வேறு பணிகளைச் செய்கிறது.
20.
நிரலில் அடுத்து செயற்படுத்த வேண்டிய கட்டளைகளின் முகவரியை சேமித்து வைக்கப் பயன்படும், மையச்செயலகத்தில் உள்ள ஒரு சிறப்பு பதிவேடே நிரல் கவுண்ட்டர் எனப்படும்.
21.
எழுத்துருக்களை நினைவகத்தில் கையாளுவதற்கான பல்வேறு குறியீட்டு முறைகள்:
1. BCD- Binary Coded Decimal.
2. EBCDIC- Extended Binary Coded Decimal Interchange Code.
3. ASCII- American Standard Code for Information Interchange
4. ISCII- Indian Standard Code for Information Interchange
5. Unicode
22.
(i) மையச்செயலகம், நினைவகம் உள்ளீடு/வெளியீடு சாதனங்களுக்கு இடையே பரிமாறப்படும் தரவைக் கட்டுப்பட்டகம் கட்டுப்படுத்துக்கிறது.
(ii) மேலும் ஒரு கணிப்பொறியின் முழுச் செயல்பாடுகளையும் கட்டுப்படுத்துக்கிறது.
23.
முகவரிப் புத்தகம் என்பது கணினிப் பயனருக்காக, பயனர் பெயர்கள், முகவரிகள் மற்றும் பிறத் தொட்ர்புத் தகவல்கள் சேமிக்கப்பட்ட ஒரு தரவுத்தளம் ஆகும்.
24.
1. எந்த இடத்தில் படத்தை சேர்க்க வேண்டுமோ அந்த இடத்திற்கு செருகும் புள்ளியைக் கொண்டு செல்லவும்.
2. Insert\(\rightarrow \)Picture\(\rightarrow \)From file என்ற கட்டளையைத் தேர்வு செய்யவும்.
3. Insert Picture உரையாடல் பெட்டி படத்தொகுப்புடன்(Picture gallery) தோன்றும்.அதில் தேவையான படத்தைத் தேர்வு செய்து Open பொத்தானை கிளிக் செய்யவும்.
25.
உரையைத் தட்டச்சு செய்யும் போது கொடாநிலையாக உள்ள எழுத்துவகை, அளவு , நிறம்,வடிவமைப்பு போன்றவற்றை மாற்றியமைப்பது "உரை வடிவூட்டல்" எனப்படும்.
எ.கா: தடிமனாக்குதல்,சாய்வெழுத்தாக்குதல், அடிக்கோடிடல் போன்றவை பொதுவான வடிவூட்டல் தேர்வுகளாகும்.
26.
ஓபன் ஆஃபீஸ் ரைட்டர் பல்வேறு விதமான உதவிகளை வழங்குகின்றது.
1. F1 அல்லது பட்டிப்பட்டையில் உள்ள Help-ஐ தேர்வு செய்தால் உதவித்திரை தோன்றும்.
2. கருவிப் குறிப்புகள் (Tools tips) நீட்டிக்கப்பட்ட குறிப்புகள் (Extended tips).உதவி முகவர் செயல்படுத்த Tools→Options→ Open Office என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
3. மேலும் விரிவான விளக்கத்திற்கு Help →What's this? என்பதைக் தேர்வு செய்ய வேண்டும்.
27.
1. "தமிழ் எழுத்துரு" முறையில் தமிழ் எழுத்துருக்களை பதிவிறக்கம் செய்து கட்டுப்பாட்டு பலகத்தில் உள்ள Font கோப்புறையில் சேர்த்துக் கொள்ளலாம்.
2. தமிழ் தட்டச்சு இடைமுகம் முறையில் Unicode தொழில்நுட்பம் பின்பற்றுவதால், தமிழ் தட்டச்சு செய்யும் முறை தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை.
28.
வழிமுறை 1: Start → All Programs →Open Office→Open Office Writer
வழிமுறை 2: விண்டோஸ் திரை முகப்பிலுள்ள Open Office
பணிக்குறியை இருமுறைக் கிளிக் செய்தால் :ஸ்டார் சென்டர்" என்றத் திரைத் தோன்றும். இதிலுள்ள "Text Document" பணிக்குறியை அழுத்தவும்.
வழிமுறை 3: Open Off'ice ன் ஏதேனும் பயன்பாடுகளிலிருந்து File → New →Text Document என்றக் கட்டளை மூலம்.
வழிமுறை 4: Ctrl+N என்ற விசைப்பலகைக் குறுக்குவழி மூலம்.
29.
புதிய கோப்புறையை உருவாக்க இரண்டு வழிமுறைகள் உள்ளன.
I. முறை 1
1. கம்ப்யூட்டர் குறும்படத்தை திறக்கவும்
2. கோப்புறையை உருவாக்க விரும்பும் இயக்கியை திறக்கவும். ( உதாரணம் D:/)
3. File \(\rightarrow \)New\(\rightarrow \) Folder கிளிக் செய்ய வேண்டும்.
4. புதிய கோப்புறை, தானமைவாக "New Folder " என காட்டியவாறு உருவாகும்.
5. கோப்புறைகளின் பெயரைத் தட்டச்சு செய்து, Enter பொத்தானை அழுத்தவும்.
II. முறை 2:
படி 1- திரைமுகப்பில் சுட்டி வலது பொத்தானை கிளிக் செய்து.
New\(\rightarrow \) Folder கட்டளையை கிளிக் செய்ய வேண்டும்.
படி 2- பெயரிடப்படாத ஒரு new folder என்ற கோப்புறை தோன்றுகிறது.
படி 3- கோப்புறைக்கு ஒரு பெயர் தட்டச்சு செய்து, Enter பொத்தானை அழுத்தவும்.
30.
செயலாக்கத் திறன்களைப் பொறுத்து இயக்க அமைப்புகள் இரு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன.
1. ஒற்றைப்பயனர் இயக்க அமைப்பு
2.பலபயனர் இயக்க அமைப்பு
1. ஒற்றைப்பயனர் இயக்க அமைப்பு :
இந்த வகை இயக்க அமைப்பு, ஒரு நேரத்தில், ஒரு பயனரை ஒரே ஒரு பணியை மட்டுமே செய்ய அனுமதிக்கிறது. எனவே, இது "ஒற்றை பயனர் மற்றும் ஒற்றை பணி இயக்க அமைப்பு " என அழைக்கப்படுகிறது.
எ .கா: MS-DOS.
2.பல பயனர் இயக்க அமைப்பு:
ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பயனர்கள். தரவுகளையும் பயன்பாடுகளையும் கணிப்பொறியில் பயன்படுத்த அனுமதிக்கும் இயக்க அமைப்பு "பல பயனர் இயக்க அமைப்பு" எனப்படும்.
எ .கா: விண்டோஸ், லினக்ஸ் மற்றும் யுனிக்ஸ்.
31.
1. ஒரு பயன்பாட்டை உருவாக்குவதற்கு, பயன்ர்க்கு இயக்க அமைப்பை பற்றிய அறிவு அவசியமானது, ஆனால் வன்பொருளின் உள் கட்டமைப்பை பற்றி அறிந்திருக்க வேண்டியதில்லை.
2. இயக்க அமைப்பு அனைத்து மென்பொருள் மற்றும் வன்பொருள்களை நிர்வகிக்க உதவுகிறது.
3. பயனருக்கும் வன்பொருளுக்குமிடையே இடைமுகமாக செயல்படுவது இயக்க அமைப்பின் அடிப்படைத் தேவையாகும்.
4. இயக்க அமைப்பு ஒரு மொழிப் பெயர்ப்பியாக செயல்பட்டு. பயனர் எழுதும் நிரலை கணிப்பொறி புரிந்துகொள்ளும் இயந்திர மொழியாக (இருநிலை எண்கள்) மாற்றி செயலாக்கம் செய்து. இயக்க அமைப்பிற்கு மீண்டும் திருப்பி அனுப்புகிறது.
5. இயக்க அமைப்பு செயலாக்கம் செய்த தகவல்களை பயனர் படிக்கக்கூடிய வடிவில் மாற்றியமைக்கிறது.

32.
நுண்செயலி மூன்று முக்கிய பகுதிகளைக் கொண்டுள்ளது அவை:
1. கந்த ஏரணச் செயலகம் (Arithmetic and Logic Unit - ALU): கணித மற்றும் ஏரண செயல்பாடுகளைக் கட்டளைக்கேற்ப செயல்படுத்தும்.
2. கட்டுப்பாட்டகம்: கட்டுப்பாட்டு சமிக்ஞகளைப் பெற்று கணிப்பொறியின் எல்லா பாகங்களையும் கட்டுப்படுத்துகிறது.
3. பதிவேடுகள்- உள்ளமைந்த நினைவகம் (Registers- Internal Memory): செயல்பாடுகளுக்குத் தேவையான தரவுகள் மற்றும் கட்டளைகளைச் சேமிக்கும்.
33.
1. நுண்பேசி ஒரு குரல் உள்ளீடு சாதனமாகச் செயல்படுகிறது.
2. குரல் தரவைப் பெற்று கணிப்பொறிக்கு அனுப்புகிறது.
3. நுண்பேசியுடன், பேச்சினை உணர்ந்து கொள்ளும் மென்பொருளைப் பயன்படுத்திக் கணிப்பொறிக்கு உள்ளிடப்படும் தகவலுக்கான முற்றிலும் புதிய அணுகு முறையை வழங்க முடியும்.
34.
சிறப்பியல்புகள் :
1.வங்கி வாடிக்கையாளர் பரிமாற்றம் மற்றும் பரிமாற்ற வேலைகளை நிகழ்நிலை வங்கி மூலம் செய்யலாம் அவை
2.வாடிக்கையாளரின் வங்கி இருப்பு , பணபரிமாற்றம், கணக்கு அறிக்கையை பார்த்தல்.
3.செலுத்தப்பட்ட காசோலையின் நகல், காசோலை புத்தகத்தை இணையத்தின் மூலம் கேட்டுப் பெறல்.
4.வாடிக்கையாளரின் இணைப்பு வங்கி கணக்குகளிடையே பணபரிமாற்றம் செய்தல்.
5.மூன்றாம் நபருக்கு பணம் செலுத்துதல் மற்றும் பண பரிமாற்றம் செய்தல்.
6. பணம் செலுத்துபவரை பதிவு செய்து பணம் செலுத்துதல்.
35.
தேவையான வன்பொருட்கள் :
இணைய வழித் தொடர்பிற்குக் கீழ்க்கண்ட ஏதேனும் ஒன்று கட்டாயம் ஆகும்.
1. தொலைபேசி வழி இணைய இணைப்பிற்கு மோடம் (modem) பயன்படுகிறது.
2. NIC - Network Interface Card (கம்பி / கம்பியில்லா) வசதி இணையத்தை இணைக்கத் தேவைப்படும் மிக முக்கியமான வன்பொருளாகும்.
3. செல்லுலார் வலையகம் (cellular network) மூலம் இணையத்தில் இணைய வன்பூட்டு (dongle) பயன்படுகிறது.
4. Wi - Fi திசைவி (Router) அல்லது ஹாட்ஸ்பாட் (Hotspot) கம்பியில்லா வலையகத்தைப் பயன்படுத்தி இணையகத்துடன் இணைக்கப் பயன்படுகிறது.
5. செல்லுலார் வலையகத்தை ஆதரிக்கும் மின்னணு சாதனம் தொலைபேசி இணைப்பி (dial up connection), ISDN, DSL, கேபிள் TV, கம்பியில்லா வலையகம் மூலம் இணையத்தில் இணைத்தல்.
தேவையான மென்பொருள்கள் :
இயக்க அமைப்பானது
1. TCP/IP (Transfer Control Protocol/ Internet Protocol)
2. SMTP (Simple Mail Transfer Protocol)
3. FTP (File Transfer Protocol).
4. HTTP (Hyper Text Transfer Protocol)
5. HTTPS (Hyper Text Transfer Protocol Secured) ) நெறிமுறைகளை ஆதரிக்கிறது.
உலவிகள் (Broswers) மற்றும் இணைய வாடிக்கையாளரான (client) outlook gmail, whatsapp, facebook, twitter மூலம் வலைப் பயன்பாடுகளை அணுகலாம்.
36.
1. இணைப்பி. தரவுப் பொட்டலங்களைப் பெற்றவுடன் எந்தக் கணிப்பொறி அல்லது சாதனத்திற்குரியது என்பதைக் கண்டறிந்து அந்த கணிப்பொறிக்கு மட்டுமே அதை அனுப்புகிறது.
2. அதை மையத்தைப் போல அனைத்து கணிப்பொறிகளுக்கும் ஒலிபரப்புவதில்லை (broadcast).
3. இந்தக் காரணத்திற்காகவே இணைப்பிகள் மையங்களை விட அதிகமாக தேர்வு செய்யப்படுகின்றன.
37.
1. முதன்மை சில்லு என்பது மற்ற சில்லுகளுக்குத் தொடக்க புள்ளியாகப் பயன்படுத்தப்படும் சில்லுவாகும். அனைத்து சில்லுகளுக்கான அடிப்படை வடிவமைப்பைக் கட்டுப்படுத்துகிறது.
2. ஒரு சில்லு நிகழ்த்துதலில் ஒன்றுக்கும் மேற்பட்ட Slide Master இருக்கலாம்.
3. ஒரு முதன்மை சில்லு. பின்னணி நிறம், வரைகலை அல்லது சாய்வு, பொருள்கள் பின்னணித் தலைப்பு, அடிக்குறிப்புகள், உரையாடல் மற்றும் உரைச்சட்டங்கள் அளவு மற்றும் உரை வடிவமைத்தல் போன்ற வரையறுக்கப்பட்ட தொகுப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது.
4. சில்லு Master ன் அனைத்து குணங்களும், பாணிகளால் கட்டுப்படுத்தப்படுகின்றன.
38.
1.சில்லுக்காட்சியில் ஒரு சில்லுவைக் காண்பிக்கும் போது தோன்றும் சிறப்பு விளைவுகளே சில்லு மாற்று விளைவுகள் எனப்படும்.
2.நடப்புச் சில்லு மறைவதற்கு பின்பும் அடுத்த சில்லு தோன்றுவதற்கு முன்பும் மாற்று விளைவுகள் தோன்றும்.
3.சில்லுகளுக்கிடையேயான மாற்று விளைவுகள், பார்வையாளர்களின் கவனத்தை ஈர்ப்பதற்கான ஒரு முயற்சி ஆகும்.
4. இவ்விளைவுகள் சில்லுகளின் தோற்றத்தை மேம்படுத்த உதவுகின்றன.
39.
அடிக்குறிப்பை உருவாக்குதல் :
1. Format--> page என்றக் கட்டளையின் மூலம் Page style உரையாடல் பெட்டியைப் பெறலாம்.
2. Footer தொகுதியைக் கிளிக் செய்து, Footer on தேர்வுப்பெட்டியைக் கிளிக் செய்து OK பொத்தானை அழுத்த வேண்டும்.
பக்க எண்களைச் சேர்த்தல் :
1. Edit - Headers & Footers கட்டளையைத் தேர்வு செய்தால் Headers/Footers உரையாடல் பெட்டி தோன்றும்.
2. Footer தொகுதியைத் தேர்வு செய்து, Footer கீழிறங்கு பட்டியில் பெட்டியில் Page 1 என்பதைத் தேர்வு செய்து OK பொத்தானைக் கிளிக் செய்ய வேண்டும்.
40.
| ஒப்பீட்டு நுண்ணறை முகவரி | தனித்த நுண்ணறை முகவரி |
| கொடா நிலை முகவரி முறை. | கொடா நிலை முகவரி முறை அல்ல . |
| நுண்ணறை முகவரியில் எந்தச் சிறப்புக்குறியீடும் இடப்படுவதில்லை |
நுண்ணறைமுகவரியில் $ என்ற குறியீடு பயன்படுத்தப்படும் |
| நுண்ணறையில் உள்ள வாய்ப்பாடு அல்லது செயற்கூறு, நகலெடுத்து ஒட்டப்படும் போது ஒட்டப்பட்ட நுண்ணறையின் வரிசை மற்றும் நெடுவரிசைக்கு ஏற்ப அதன் முகவரி தானாகவே மாற்றம் பெறும். எ.கா := A1+5. | நுண்ணறையில் உள்ள வாய்ப்பாடு அல்லதுசெயற்கூறு. நகலெடுத்து ஒட்டும் போது முகவரியில் எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை. எ.கா:= A1+5 |
41.
| வடிவூட்டல் தேர்வு | விசைப்பலகை குறுக்கு வழி |
பயன் |
| எழுத்துரு வகை | - | எழுத்துரு வகையை மாற்றப் பயன்படுகிறது. |
| எழுத்துரு அளவு | - | எழுத்துருக்களின் அளவை மாற்றுவதற்கு பயன்படுகிறது. |
|
தடிமனாக்குதால் |
Ctrl+B | தரவை தடிமனாக்குவதற்கு பயன்படுகிறது. |
| சாய்வெழுத்தாக்குல் | Ctrl+I | தரவை சாய்வெழுத்தாக மாற்றுவதற்கு பயன்படுகிறது. |
| அடிக்கோடிடுதல் | Ctrl+U | தரவுகளை அடிக்கோடிடுவதற்கு, |
| வலது இசைவு | Ctrl+L | நுண்ணறைக்குள் தரவுகளை வலது இசைவில் அமைக்க. |
| இடது இசைவு | Ctrl+R | நுண்ணறைக்குள் தரவுகளை இடது இசைவில் அமைக்க. |
| மைய இசைவு | Ctrl+E | நுண்ணறைக்குள் தரவுகளை மைய இசைவில் அமைக்க. |
| நேர்த்தி இசைவு | Ctrl+J | நுண்ணறைக்குள் தரவுகளை வலது மற்றும் இடது ஓரங்களில் சமமானதாக மாற்றுவதற்கு |
| நுண்ணறை சேர்ப்பு | - | தேர்ந்தெடுக்கப்பட்ட நுண்ணறைகளை, ஒரே நுண்ணறையாக மாற்றுவதற்கு, |
42.
| Windows | Ubuntu |
|---|---|
| 1. மூடிய மூல இயக்க அமைப்பாகும். | ஒரு திறந்த மூல இயக்க அமைப்பாகும். |
| 2.Windows இயக்க அமைப்பைப் பயன்படுத்த பணம் செலுத்த வேண்டும். | விலையில்லாமல் கிடைக்கிறது. |
| 3. இது நிறுவனம் சார்ந்தது | சமூகம் சார்ந்தது |
| 4. ஒரே ஒரு திரை முகப்பைக் கொண்டது. | ஒன்றுக்கும் மேற்ப்பட்ட திரை முகப்பைக் கொண்டது. |
| 5. தானமைவாக Internet Explorer ஐ உலவியாகக் கொண்டுள்ளது. | தானமைவாக Firefox ஐ உலவியாகக் கொண்டுள்ளது. |
| 6. இயங்குநிலைக் கோப்புகளை(executable :files) ஆதரிக்கும். | இயங்குநிலைக் கோப்புகளை(executable :files) ஆதரிக்காது. எனவே நச்சு நிரல் தாக்குதல்கள் இல்லை |
43.
1. கைபேசிகள்,டேப்ளட்கள் மற்றும் எம்பி 3 பிளேயர்கள் போன்ற மொபைல் சாதனங்கள் டெஸ்க்டாப் மற்றும் லேப்டாப் கணினிகளில் இருந்து வேறுபட்டவை. எனவே அவற்றிறிக்கு சிறப்பு இயக்க அமைப்புகள் தேவைப்படுகின்றன.
2. மொபைல் சாதனங்களுக்கான இயக்க அமைப்புகள் பொதுவாக முழுமையாக இல்லை டெஸ்க்டாப் மற்றும் மடிக்கணினி கம்ப்யூட்டிற்காக உருவாக்கப்பட்டவை போல் அனைத்தையும் இயக்க முடியாது.
எ.கா: ஆப்பிள் IOS மற்றும் கூகிள் ஆன்ட்ராய்டு.
44.
தரவின் அகலத்தைப் பொறுத்து நுண்செயலியைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்:
8-பிட் நுண்செயலி
16-பிட் நுண்செயலி
32-பிட் நுண்செயலி
64-பிட் நுண்செயலி
45.

46.
1. இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்துருக்களை மட்டும் கையாளும் நோக்கில் வடிவமைக்கப்பட்ட ஓர் முறை ISCII ஆகும்.
2. இதுவும் 8 பிட் குறியீட்டு முறையாகும். எனவே, இந்த முறையில் 256 எழுத்துருக்களை கையாள முடியும்.
3. இந்திய அரசின் மின்னணு துறையின் (Department of Electronics)கீழ் அமைக்கப்பட்ட தரநிர்ணயக் குழுவால் 1986-88 ஆண்டு வாக்கில் இந்த முறை உருவாக்கப்பட்டு இந்திய தரநிர்ணயக் குழுமத்தால்(Bureau of Indian Standards -BIS) ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளது .
4. தற்போது இந்த குறியீட்டு முறை யுனிகோட் முறையில் இணைந்து விட்டது.
47.
(i) உள்ளீட்டகம் அனைத்து வகையான தரவுகளையும் கணிப்பொறிக்குள் உள்ளிடப் பயன்படுகிறது.
(ii) உள்ளிடப்பட்ட தரவுகள் செயலாக்கத்திற்காக நினைவகத்தில் சேமிக்கப்படுகின்றன.
48.
1. தேவையான உரையைத் தேர்வு செய்தபின் Tools→Word Count விருப்பத்தைத் தேர்வு செய்யவும்.
2. தேர்வு செய்யப்பட்ட உரையில் உள் சொல்லின் எண்ணிக்கை மற்றும் எழுத்துக்களின் எண்ணிக்கையை WordCount உரையாடல் பெட்டியில் காணலாம்.
49.
1. சேர்க்கப்பட்ட படத்தின் மேல் கிளிக் செய்தால் Picture கருவிப்பட்டை தோன்றும்.
2. Transparency பணிக்குறி உதவியுடன் படத்தின் தோற்றத் தெளிவை சதவீதத்தில் ( % ) மாற்றலாம்.
50.
வழிமுறை1:
தேவையான உரையைத் தேர்வு செய்து வலது பொத்தானைக் கிளிக் செய்தால் தோன்றும் மேல் மீட்பு பட்டிப்பட்டையில் உள்ள Line Spacing என்றத் தேர்வை கிளிக் செய்யவும். இப்போது தோன்றும் Single, 1.5 அல்லது Double போன்ற ஏதேனும் வரி இடைவெளியை தேர்வு செய்யலாம்.
வழிமுறை 2:
1. Edit\(\rightarrow \)Select All கட்டளையைப் பயன்படுத்தி முழு ஆவணத்தையும் தேர்வு செய்யவும்.
2. Format \(\rightarrow \)Paragraph கட்டளையைபக் கிளிக் செய்யவும்.
3. Paragraph உரையாடல் பெட்டி தோன்றும்,இதில் Indents & Spacing தொகுதியைக் கிளிக் செய்யவும்.
4. Line Spacing வகையிழு பட்டியில் தேவையான வரி இடைவெளியைத் தேர்வு செய்து OK பொத்தானைக் கிளிக் செய்யவும்.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Computer Applications Computer Ethics and Cyber Security Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications JavaScript Functions Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Control Structure in JavaScript Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Introduction to JavaScript Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards