11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th English Supplementary - 3 - The First Patient (Play) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 3 - Forgetting Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 2 - The Queen of Boxing Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Poem - 1 - Once Upon A Time Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 1 - The Portrait of a Lady Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Tamil Computing Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 19/12/2018
Revision Model Questions
11ஆம் வகுப்பு Economics / பொருளியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Economics / பொருளியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Economics Test

1.
Y = 2x4-6X2 எனில் \(dy\over dx\)=?
2.
பொருளாதார கட்டமைப்பு வசதிகள் என்றால் என்ன?
3.
மிதக்கும் செலவு பற்றி சிறுகுறிப்பு வரைக.
4.
தேவை நெகிழ்ச்சியில் வகைகள் யாவை?
5.
வேளாண் சார்ந்த தொழிற்சாலைகள் பற்றி எழுதுக.
6.
பொருளியல் ஆய்வு முறை இரண்டினை எழுதுக.
7.
அங்காடி என்றால் என்ன?
8.
தொழில் முனைவோர் யார்?
9.
சணல் தொழில் -சிறு குறிப்பு வரைக
10.
தமிழ்நாட்டின் நுழைவு வாயில் எது?
11.
நிறைவுப் போட்டியில் இறுதி நிலை உற்பத்தித் திறன் கோட்பாட்டின் வரைபடம் வரைக.
12.
AR=100, AC=32, உற்பத்தி =5 எனில் மொத்த இலாபம்?
13.
பொருளாதாரச் சீர்திருத்தங்களின் தாக்கம் பற்றி எழுதுக?
14.
\(\int { 5dx } =5x+c\)
15.
பகிர்வு என்றால் என்ன?
16.
மற்ற முறைகளிலிருந்து நில உடைமை முறையை வேறுபடுத்துவதற்கான அம்சங்களைக் கூறு.
17.
தமிழ்நாட்டின் அணுமின் நிலையங்கள் எவை?
18.
திறந்த நிலை வேலையின்மை என்றால் என்ன?
19.
நிதிச் சமநிலையின்மையைக் கட்டுப்படுத்த 1991-92 ல் ஏற்படுத்தப்பட்ட கொள்கை முயற்சிகள் மூன்றினைக் கூறுக.
20.
புதுப்பிக்கப்பட இயலாத ஆற்றல் வளங்கள் தருக.
21.
“அங்காடி” வரையறு
22.
காரணியின் இறுதிநிலை உற்பத்தியை வரையறு
23.
24.
நுகர்வோர் எச்சம் காணும் முறையை எழுதுக.
25.
பொருளியல் என்றால் என்ன?
26.
(4, 4) மற்றும் (8, -16) ஆகிய இரண்டு புள்ளிகள் முறையே (x1,y1) மற்றும் (x2,y2) எனில், அப்புள்ளிகள் வழியேச் செல்லும் நேர்க்கோட்டின் சமன்பாடு காண்க.
27.
திருவள்ளுவரின் பொருளாதார சிந்தனை பற்றி எழுதுக.
28.
செலவு கட்டுப்பாடு விளக்குக.
29.
ஊரக கடன்களை தீர்ப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் யாவை?
30.
நுண்ணினப் பொருளியலில் முக்கியத்துவத்தை விவரி.
31.
மொத்த உற்பத்திக்கும் (TP)சராசரி உற்பத்தி (AP)க்கும் உள்ள வேறுபாடு யாது?
32.
தமிழ்நாட்டின் உயர்கல்வி பற்றி குறிப்பு வரைக?
33.
இலாபத்தின் கருத்துக்களை விளக்குக.
34.
வாங்குவோர் முற்றுரிமை (Monopsony) விளக்குக.
35.
பசுமைப்புரட்சி - விளக்குக
36.
1991-க்குப் பின்னர் இந்தியாவில் ஏற்பட்ட மாற்றங்கள் யாவை?
37.
\(TR=50Q-4{ Q }^{ 2 }\)என தரப்பட்டுள்ளது Q = 3 எனில் இறுதிநிலை வருவாயைக் காண்க.
38.
சுற்றுலாத்துறை மேம்பாட்டிற்கான செயல்பாடுகளை விவரி
39.
பனிரெண்டாம் ஐந்தாண்டுத் திட்டம் பற்றி குறிப்பு வரைக.
40.
41.
வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கை பற்றி குறிப்பு வரைக.
42.
அளிப்பு நெகிழ்ச்சியை நிர்ணயிக்கும் காரணிகள் யாவை?
43.
வாய்ப்புச் செலவை எடுத்துக்காட்டுகளுடன் வரையறு.
44.
தேவை விரிவு மற்றும் சுருக்கத்தை வேறுபடுத்துக.
45.
பொருளாதார நடவடிக்கைகளின் பல்வேறு வகைகளை விளக்குக
1.
Y =2x4-6x4
x ஐ பொருத்து 'y' யினை வகையிட
\({dy\over dx}=2(4)x^{4-1}-6(2)x^{2-1}\)
\(\boxed{\therefore{dy\over dx}=8x^3-12x}\)
2.
1.பொருளாதார கட்டமைப்பு வசதிகள் நாட்டின் உற்பத்தி மற்றும் பகிர்வு வசதிக்கு பயன்படுவதாகும்.
2.உதாரணமாக இருப்புப் பாதைகள்,சரக்கு வாகனங்கள்,தபால் மற்றும் தொலை தொடர்பு நிலையங்கள், துறைமுகங்கள்,கால்வாய்கள்,மின் உற்பத்தி நிலையங்கள்,வங்கிகள், காப்பீட்டு நிறுனங்கள் ஆகியவை பொருளாதார கட்டமைப்புக்கு உதவுகின்றன.
3.
1.வியாபார நடவடிக்கைகளுக்கு நேரடியாக தொடர்புடைய செலவுகள் அனைத்தும் மிதக்கும் செலவுகள் எனப்படும்.
2.ஒரு நிறுவனத்தின் அன்றாட நடவடிக்கைகளுக்கு மிக அவசியமான செலவுகள் மிதக்கும் செலவுகள் எனப்படும்.
4.

5.
(i) வேளாண் உற்பத்தி பண்டங்களை நுகர்வுக்குரிய பொருட்களாக மாற்றுகின்ற பணியில் வேளாண்மை சார்ந்த தொழிற்சாலைகள் ஈடுபடுகின்றன.
(ii) வேளாண் சார்ந்த தொழில்கள் குடிசைத் தொழில், சிறுதொழில் மற்றும் ஆலைத் தொழிலாகவும் உள்ளன.
6.
பொருளியலில் இருவகையான ஆய்வு முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. அவை,
1. பகுத்தாய்வு முறை (Deductive Method)
2. தொகுத்தாய்வு முறை (Inductive Method)
7.
1. அங்காடி என்பது பொருட்களை வாங்குவதும், விற்பதும் நடைபெறும் ஒரு இடமாகும்.
2. பொருளியலில் அங்காடி என்பது ஒரு விலையில் பண்டங்களையும், பணிகளையும் பரிமாற்றம் செய்திட விற்போரும், வாங்குபவரும் இணைவதை குறிக்கும்.
8.
1. ஒரு தொழிலை ஒருங்கிணைத்து ஏற்று நடத்துபவர் "தொழில் அமைப்பாளர் "(அ) "'தொழில் முனைவோர் "ஆவார்.
2. தொழில் முனைவோர் ஒரு முக்கியமான உற்பத்திக் காரணி ஆவார்.
9.
(i) இந்திய போன்ற நாட்டிற்கு சணல் தொழில் மிக முக்கியமானதாகும்
(ii) இத்தொழில் அதிகவெளிநாட்டு செலவாணி ஈட்டப்படுகிறது .
(iii) இது கணிசமான வேலைவாய்ப்பை அளிக்கிறது
10.
(i) தூத்துக்குடி தமிழ்நாட்டின் நுழைவு வாயில் என்று அழைக்கப்படுகிறது.
(ii) தூத்துக்குடி மாநிலத்தில் வேதிப்பொருள் உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது.
11.
12.
சூத்திரம் :
AR=100, AC=32, உற்பத்தி=5
TP=(AR-AC)xஉற்பத்தி
=(100-32)x5
=68x5
∴ மொத்த இலாபம் = 340
13.
பொருளாதாரச் சீர்திருத்தங்களின் விளைவாக இந்தியப் பொருளாதாரம் தொழில்துறை மற்றும் சேவைத்துறைகளில் ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்துள்ளது.
14.
\( \int 4 x d x =4 \frac{x^{1+1}}{1+1}+c \\ =4 \frac{x^{2}}{2}+c \\ =2 x^{2}+c\)
15.
பகிர்வு என்பது நான்கு உற்பத்திக் காரணிகளுக்கு வருவாயை பகிர்ந்தளிப்பதைக் குறிக்கும்.
16.
மற்ற முறைகளில் வசூலித்த நிலவருவாயை அப்படியே அரசுக்கு செலுத்த வேண்டும்.ஆனால் நில உடைமை முறையில் வசூலித்ததில் 10/11 பங்கு அரசுக்குச் செலுத்தப்பட்டு 1 பங்கு ஜமீன்தாருக்கு ஊதியமாக வழங்கப்படுகிறது.
17.
கல்பாக்கம், கூடங்குளம் ஆகியவை தமிழ்நாட்டின் உள்ள முக்கிய அணுமின் நிலையங்களுக்கும்.
18.
திறந்த நிலை வேலையின்மை என்பது வேலைக்கு தயாராக இருந்தும் வேலையில்லாத நிலையில் இருப்பது ஆகும். விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் ஊரக கைவினைஞர்கள் மற்றும் கற்றவர் ஆகியோர் இப்பிரிவினைச் சார்ந்தவர்கள்.
19.
(i) SLR விகிதத்தை 38.5% லிருந்து 25% ஆகக் குறைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
(ii) CRR விகிதத்தையும் நான்கு ஆண்டுகளில் 3.5% ஆக குறைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
(iii) வைப்புகளுக்கான வட்டி வீதம் மற்றும் வங்கிக் கடன்களுக்கான வட்டி போன்றவற்றை கட்டுப்படுத்தியது.
20.
1. மீண்டும் உருவாக்கப்பட முடியாத நிலைத்து இருக்க முடியாதவைகள் புதுப்பிக்கப்படஇயலாத ஆற்றல் வளங்கள் ஆகும்.
2.(எ.கா.) நிலக்கரி, பெட்ரோலியம், கனிமங்கள், படிம எரிபொருட்கள்
21.
(i) பொதுவாக 'அங்காடி' என்பது பொருள்கள் மற்றும் பணிகளை வாங்குதல் மற்றும் விற்பனை செய்யும் இடத்தை குறிக்கும்.
(ii) பொருளாதாரத்தில் 'அங்காடி'என்பது ஒரு பொருளை வாங்குபவர்கள் மற்றும் விற்பவர்கள் ஆகிய இருவருக்கும் இடையே உள்ள பரிமாற்றம் முறையையேக் குறிக்கும்.
22.
1. ஓர் உற்பத்தி காரணியின் அளவில் ஒரு அதிகரிப்பு செய்யும்போது மொத்த உற்பத்தியில் ஏற்படும் கூடுகின்ற நிகர அளவு உற்பத்தியே இறுதிநிலை உற்பத்தி ஆகும்.
2. வேறு வகையில் கூறினால் இறுதி நிலை ஆக்கம் என்பது மொத்த உற்பத்தியில் ஏற்படும் மாற்றத்தினை உள்ளீடுகளில் ஏற்படும் மாற்றத்தினால் வகுப்பதாகும்.
3. \(MP=\triangle TP / \triangle N\) (அ ) \(MP=TP_n-TP_{(n-1)}\)
23.
24.
1. ஒரு பொருளுக்கு நுகர்வோர் கொடுக்க விரும்பும் விலைக்கும் உண்மையிலேயே கொடுக்கும் விலைக்கும் உள்ள வித்தியாசமே நுகர்வோர் எச்சம்.
2. நுகர்வோர் எச்சம் =TU-(P x Q)
அல்லது
3. நுகர்வோர் எச்சம் = தகுவிலை - உண்மை விலை.
TU =மொத்தப் பயன்பாடு
P =விலை
Q =பண்ட அளவு
25.
1. ' பொருளியல் 'என்றால் இல்லங்களில் நிர்வாகம் என்று பொருள்படும்.
2. பொருளியல் என்ற சொல் ஆய்க்கனோமிக்ஸ் என்னும் பழமையான கிரேக்க சொல்லிலிருந்து வந்தது
3. ஆரம்பத்தில் அரசியல் பொருளாதாரம் என்று அழைக்கப்பட்ட இவ்வியல். பிற்பகுதியில் ' பொருளியல் ' என்று ஆல்ஃபிரட் மார்ஷலால் பெயர் மாற்றப்பட்டது.
26.
இங்கு
x1=4 y1=4
x2=8 y2=-16
நேர்கோட்டின் சமன்பாட்டிற்கான சூத்திரம்
\({y-y_1\over y_2-y_1}={x-x_1\over x_2-x_1}\)
மதிப்புகளைப் பிரதியிட,
\({y-4\over -16-4}={x-4\over 8-4}\)
\({y-4\over -20}={x-4\over 4}\)
4(Y-4)=-20(x-4)
4y-16=-20x+80
4y =-20x+80+16

\(\boxed{\therefore y=-5x+24}\)
சாய்வு -5 ஆகும்.
இதனை m என குறிப்பிடலாம். Y வெட்டு 24 அல்லது மாறிலி c என குறிப்பிடப்படுகிறது. இது
y = mx + C வடிவில் உள்ளது
y= 24- 5x
x = 0 எனில் y = 24
y = 0 எனில்


27.
1.வள்ளுவரின் நிறைய பொருளாதாரக் கருத்துக்கள் திருக்குறளின் இரண்டாம் பகுதியான பொருட்பாலில் காணப்படுகிறது.
2.பொருட்பால் செல்வத்தோடு தொடர்புடையது.
3.வாழ்வின் அடிப்படைகளை அறிந்தவர் வள்ளுவர்.
4. மழையை வாழ்வின் பெரும் ஆதாரமாகக் கருதினார்.
5.மழைதான் பொருளாதார வாழ்வில் அடிப்படையை உருவாக்குவதாக நம்பினார்.
6.வாழ்வின் அடிப்படை பொருளாதார தேவையான வேளாண்மை மழையைச் சார்ந்திருக்கிறது அழிமானத்தையும் தருக.
7.அழிமானத்திலிருந்து மீண்டும் தழைத்தோங்கவும் செய்யும் ஆகிய இரண்டையும் செய்யும் தன்மையுடையது மழையாகும்.
28.
1. இலாபத்தை உச்சமாக்கி நிறுவனத்தின் இலக்குகளை அடைவதற்கு செலவை கட்டுப்படுத்துவது மிகவும் இன்றியமையாதது.
2. செலவுக் கட்டுப்பாடு என்பது உற்பத்திக்கு செய்யப்படும் செலவை குறைப்பதாகும்.
3.உற்பத்திக்கான செலவு என்பது மூலதனச் செலவு, கூலி, சம்பளம், உழைப்புச் செலவு, இயந்திரங்களின் தேய்மானம் ஆகியவற்றை குறிக்கும்.
29.
(i) ஊரக கடன்களைத் தீர்ப்பதற்கு பல்வேறு வழிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
(ii) வட்டிக்கு கடன் கொடுப்பவர்களை ஒழுங்குபடுத்துதல், ஊரக வங்கிகளை மேம்படுத்துதல், வட்டார ஊரக வங்கிகள் தொடங்குதல், முன்கடன்கள் வழங்குதல், சுயஉதவிக் குழுக்களை அமைத்தல், தொடக்க கூட்டுறவு வங்கிகள் மற்றும் நில வங்கிகள் தொடங்குதல்.
(iii) பயிர் கடன் வழங்குதல் முன்னோடி வங்கித்திட்டங்கள் சிறிய அழகு முன்னேற்ற மற்றும் மறு நிதியளிப்பு முகவர் வங்கி தொடங்குதல், துணை தொழில்களை உருவாக்குதல், திறன் மேம்பாடு பயிற்சிகள் அளித்தல்.
(iv) ஏழைகள் மற்றும் சுய உதவிக்குழுவினருக்கு வட்டிவீதங்கள் மற்றும் போக்குவரத்து செலவினங்கள் வசதிமிக்கவர்களுக்கு கிடைப்பதை காட்டிலும் அதிகமாக உள்ளது.
30.
1. ஒரு பொருளாதாரத்தின் செயல்பாட்டை அறிந்துகொள்ள உதவுகிறது.
2. பொருளாதாரக் கொள்கைக்கான கருவியைத்தருகிறது.
3. பொருளாதார நலனின் நிலையை பற்றி ஆராய்கிறது.
4. வளங்களை திறன்பட பயன்படுத்த உதவுகிறது.
5. பன்னாட்டு வாணிபத்தில் பயன்படுகிறது.
6. பயனுள்ள முடிவுகளை எடுப்பதற்கு பயன்படுகிறது.
7. வளங்களை உத்தம அளவில் பங்கிட பயன்படுகிறது.
8.முன்கணிப்பிற்கு அடிப்படையாக உள்ளது.
9. விலை நிர்ணயம் செய்ய உதவுகிறது.
31.
மொத்த உற்பத்திக்கும் (TP):
1. ஒரு குறிப்பிட்ட காலத்தில் உற்பத்திக் காரணிகளின் கலவையை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்பட்ட மொத்த பண்டங்களின் அளவு மொத்த உற்பத்தியைக் குறிக்கும்.
2. இறுதிநிலை உற்பத்தியின் கூட்டுத்தொகையே மொத்த உற்பத்தி ஆகும்.
அதாவது TP=\(\sum\)MP
இதில் TP =மொத்த உற்பத்தி
MP=இறுதிநிலை உற்பத்தி
\(\sum\)=மொத்தம்
சராசரி உற்பத்தி (AP):
1. மொத்த உற்பத்தியை உற்பத்தி காரணிகளின் அலகுளால் வகுப்பதால் கிடைப்பது சராசரி உற்பத்தி ஆகும்.
2. ஓர் அலகு உற்பத்தி காரணியின் சராசரி உற்பத்தித்திறனே சராசரி உற்பத்தி ஆகும்.
3. கணித ரீதியாக \(\boxed{AP=TP/N}\)
இதில் AP=சராசரி உற்பத்தி
TP=மொத்த உற்பத்தி
N= மொத்த உள்ளீடுகளின் அலகு
32.
(i) உயர்கல்விக்கான மொத்த சேர்க்கை விகிதத்தில் தமிழ்நாடு தொடர்ந்து பிற மாநிலங்களைக் காட்டிலும் முதன்மை பெற்று முதலிடத்தில் உள்ளது.
(ii) தமிழ்நாட்டின் மொத்த சேர்க்கை வீதமான (GER) 46.9% அனைத்து மாநிலங்களின் தேசிய சராசரியைவிட அதிகமாக உள்ளது.
(iii) தமிழ்நாட்டில் 59 பல்கலைக் கழகங்களும், 40 மருத்துவ கல்லூரிகளும், 517 பொறியியல் கல்லூரிகளும் உள்ளன.
(iv) 2260 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும், 447 பல்தொழில்நுட்ப கல்லூரிகளும், 20 பல் மருத்துவக்கல்லுரிகளும் உள்ளது.
(v) ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்திலிருந்து 4 இலட்சம் பொறியியல் மற்றும் பல்தொழில்நுட்பம் பயில்கின்ற மாணவர்கள் வெளியேறுகின்றனர்.
33.
மொத்த இலாபம் :
(1) ஒரு நிறுவனம் தனது மொத்த வருவாயிலிருந்து மொத்த செலவை கழிக்கும் போது கிடைக்கும் உபரி மொத்த இலாபம் ஆகும்.
(2)
(ii) நிகர இலாபம் /தூய இலாபம் /உண்மையான இலாபம்:
(1) நிகர (அ) தூய(அ) பொருளாதார (அ) உண்மை இலாபம் என்பது மொத்த இலாபத்திலிருந்து தொழில் முனைவோர் சொந்த உற்பத்திக் காரணிகளைப் பயன்படுத்தியதற்கு எடுத்துக்கொண்டது போக மீதி உள்ளதே நிகர இலாபம் ஆகும்.
(2)
(iii) இயல்பு இலாபம் :
தொழில் நீடித்திருக்க எதிர்பார்க்கும் குறைந்தபட்ச இலாபம் இயல்பு இலாபம் ஆகும்.
(iv) மிகை இலாபம்:
(1) இயல்பு இலாபத்திற்கு மேல்பெறப்படும் தொகை மிகை இலாபம் ஆகும்.
(2)
34.
(i) ஒரு அங்காடி அமைப்பில் பண்டங்கள் மற்றும் பணிகளை வாங்க ஒருவரே இருப்பதால் அது வாங்குவோர் முற்றுரிமை எனப்படும்.
(ii) சில பண்டங்களுக்கு ஒருவரே வாடிக்கையாளராக இருப்பதால் அந்த அங்காடியில் வாங்குபவர் மிகுந்த சக்தியுடன் காணப்படுவார்.
(iii) முற்றுரிமையும், வாங்குபவர் முற்றிமையும் ஒரே மாதிரி இருந்தாலும், வாங்கும் முற்றுரிமையாளர் அங்காடியின் தேவை பக்கத்திலும், முற்றுரிமையாளர் அங்காடியில் அளிப்புப் பக்கத்திலும் ஆதிக்கத்துடன் இருப்பர்.
35.
(i) பசுமைப்புரட்சி என்பது வேளாண் துறை தொழில்நுட்ப மாற்றத்தை ஏற்படுத்தி ஒரு திருப்புமுனையாக அமைந்தது
(ii) 1960 க்கு பிறகு பாரம்பரிய வேளாண் முறைகள் சிறிது சிறிதாக மாற்றப்பட்டு புதிய தொழில் நுட்பத்தை வேளாண் முறைகள் இந்தியாவில் செயல்படுத்தப்பட்டன.
(iii) ஆரம்பமாகா 1960 -61 ல் ஏழு மாவட்டங்களில் ''வழிநடத்தும் திட்டம் புதிய தொழில் நுட்பத்தை வேளாண் துறையில் பயன்படுத்தும் முயற்சி எடுக்கப்பட்டது
(iv) அதிக விளைச்சல் தரும் ரகங்களைஉற்பத்தி செய்வதற்கான திட்டம் (HYVP)
36.
(i) வெளிநாட்டுச் செலவாணியின் கையிருப்பு அதிகரிக்கத் துவங்கியது.
(ii) தொழில்மயமாதல் விரைவாக நடைபெற்றது.
(iii) நுகர்வு முறை மேம்படத் துவங்கியுள்ளது.
(iv) விரைவு நெடுஞ்சாலைகள், மெட்ரோ ரயில், மேம்பாலங்கள், விமான நிலையங்கள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் பெருகி வருகின்றன.
(v) ஆனால் இந்த வசதிகள் ஏழைகளுக்கு எட்டப்படவில்லை.
37.
\(TR=50Q-4{ Q }^{ 2 }\)
\(MR={ d\left( TR \right) }/{ dQ }\)
\(MR=50(1){ Q }^{ 1-1 }-4(2){ Q }^{ 2-1 }\)
\(=50(1){ Q }^{ 0 }-8{ Q }^{ 1 }\)
\(=50(1)-8Q\quad \quad \quad \left( \therefore { Q }^{ 0 }=1,{ Q }^{ 1 }=Q \right) \)
MR = 50 - 8Q
Q =3 எனும்போது
MR = 50 -8(3) =26
38.
(i) பழங்காலத்திலிருந்தே தமிழ்நாடு ஒரு சிறந்த சுற்றுலா மையமாகத் திகழ்ந்து வருகிறது.
(ii) நவீன காலங்களில் நமது மாநிலம் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் முதன்மைப் புகலிடமாக விளங்குகிறது.
(iii) தமிழ்நாடு அரசு மேற்பார்வையில் இயங்கும் தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுத்துறை (TTDC) தமிழ்நாட்டின் சுற்றுலாவை மேம்படுத்துகிறது.
(iv) இந்திய மாநிலங்களில் 25 கோடி சுற்றுலாப் பயணிகளுடன் (2013) தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது.
(v) இத்துறையின் ஆண்டு சராசரி வளர்ச்சி 16% ஆக உள்ளது.
(vi) 28 இலட்சம் வெளிநாட்டுப் பயணிகள் மற்றும் 11 கோடி உள்நாட்டுப் பயணிகள் தமிழகத்திற்கு வருகை புரிகின்றனர்.
39.
(i) பனிரெண்டாம் ஐந்தாண்டு திட்டத்தின் காலம் 2012-17 இதன் முதன்மை நோக்கம் ''விரைவான அதிகமான உள்ளடக்கிய மற்றும் நிலையான வளர்ச்சியே'' ஆகும்.
(ii)இதன் வளர்ச்சி இலக்கு 8% ஆகும் .
(iii) பற்றக்குறையான வளங்களை பயன்படுத்தி எவ்வாறு அதிகபட்ச பொருளாதாரப் பலன்களை பெறலாம் என்று இத்திட்டங்கள் வழிகாட்டியுள்ளன.
(iv) இந்திய அரசு ஐந்தாண்டு திட்டங்கள் முறையே சோவியத் ரஷியாவிடமிருந்து எடுத்துக் கொண்டது என்று தெரிந்து கொள்வது மிக அவசியமாகும்.
40.
41.
(i) பொருளாதார சீர்திருத்தத்தின் மற்றொரு முக்கிய அம்சம் வெளிநாட்டு முதலீட்டிற்க்கும் மற்றும் வெளிநாட்டு தொழில் நுட்பத்திற்கும் சிவப்பு கம்பள வரவேற்பு தருவதாகும்.
(ii) நாட்டில் தொழில்துறையில் போட்டியை ஏற்படுத்தி வணிகச் சூழலை மேம்படுத்தியுள்ளது.
(iii) அயல்நாட்டு நேரடி முதலீடு (FDI) மற்றும் அயல்நாட்டு தொகுப்பு முதலீடு (FPI) ஆகியவற்றிற்கு இலகுவான வழி திறந்துவிடப்பட்டது.
(iv) 1991ல் சில உயர் தொழில்நுட்பம் மற்றும் பேரளவு முதலீடு தேவைப்படும் முக்கிய தொழ்ற்சாலைகளுக்கு அனுமதியளித்தது.
(v) 51% பங்குகள் வரை அயல்நாட்டு நேரடி முதலீடு செய்ய அனுமதிக்கப்பட்டது.
(vi) இதன் அளவு பல நிறுவனங்களுக்கு 74% பின்னர் 100% மாற்றியமைக்கப்பட்டது.
42.
1. பொருட்களின் தன்மை:
நிலைத்து நீடிக்க கூடிய பொருட்களை நீண்டகாலம் வரை பாதுகாக்கலாம்.
2. உற்பத்திச் செலவு:
ஒரு நிறுவனம் குறைந்து செல் விளைவு நிலையில் செயல்பட்டால் உற்பத்தி அதிகரிக்கும் போது உற்பத்தி செலவு வேகமாக அதிகரிக்கும்.
3. தொழில்நுட்ப நிலை:
தொழில்நுட்பத்தை பயன்படுத்தும்போது அளிப்பு அதிக நெகிழ்ச்சியுடையதாக இருக்க வாய்ப்பு உள்ளது.
4. கால அளவு:
மிகக் குறுகிய காலத்தில் பல நிறுவனங்களுக்கு அளிப்பின் அளவை அதிகரிக்க இயலாது.
43.
1. பிறவாய்ப்பு செலவு என்பது அடுத்த சிறந்த மாறுபட்ட செலவைக் குறிக்கும்.
2. ஒரு பண்டத்தின் சிறந்த பயன்பாடு தேந்தெடுக்கப்படுவதால் அதனுடைய அடுத்த சிறந்த பயன்பாடு விட்டுக் கொடுக்கப்பட வேண்டியுள்ளது.
3. எடுத்துக்காட்டாக, ஒரு விவசாயி தன்னுடைய நிலத்தில் நெல் சாகுபடி செய்தால், நெல்லின் வாய்ப்புச் செலவு யாதெனில் விட்டுத்தந்த கரும்பு உற்பத்தியின் அளவே ஆகும்.
44.
தேவை விரிவு:
குறைந்த விலையில் அதிக பொருட்களை வாங்குவது தேவை விரிவு ஆகும்.
தேவை சுருக்கம்:
அதிக விலையில் குறைந்த பொருட்களை வாங்குவது தேவை சுருக்கம் ஆகும்.
தேவை விரிவும், தேவை சுருக்கமும்:
விலையில் ஏற்படும் மாற்றத்தால் மட்டுமே தேவை அளவில் மாற்றம் ஏற்பட்டால் அதனை ' தேவை விரிவு ' மற்றும் 'தேவை சுருக்கம் 'என அழைக்கிறோம்
45.
பொருளாதார நடவடிக்கைகள் நுகர்வு, உற்பத்தி, பரிமாற்றம், பகிர்வு ஆகியவைகளாகும்.
நுகர்வு:
மனித விருப்பங்களை நிறைவு செய்யும் நுகர்வு, பொருளாதார நடவடிக்கைகளின் துவக்கப் புள்ளியாக விளங்குகிறது.
உற்பத்தி:
உள்ளீடுகளை வெளியீடுகளாக மாற்றும் செயல்பாடே உற்பத்தி எனப்படும்.
பரிமாற்றம்:
பரிமாற்றம் என்பது பல்வேறு அங்காடி அமைப்புகளின் மூலம் விலை தீர்மானிக்கப்படுவதோடு தொடர்புடையது.
பகிர்வு:
உற்பத்தி காரணிகளின் பங்களிப்பு மூலம் கிடைக்கும் விளைவாகும்.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Computer Applications Computer Ethics and Cyber Security Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications JavaScript Functions Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Control Structure in JavaScript Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Introduction to JavaScript Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards