11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 02/01/2019
XI Model Question
11ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
மாறுபடும் சிக்கலான செறிவு படம் வரைந்து பகங்களைக் குறிக்க.
2.
கனிமங்களின் உள்ளெடுப்பு என்றால் என்ன?
3.
புறத்தோல் திசுத்தொகுப்பின் பணிகளில் எவையேனும் மூன்றினை எழுதுக.
4.
நொதியின் செயலில் முடிவுப் பொருள் தடுப்பு என்றால் என்ன?
5.
மண்புழு செறிவூட்டப்பட்ட நீர் என்பது யாது?
6.
அதிகமான ஒளியும், அதிக ஆக்ஸிஜன் செறிவும் காணப்படும் போது எவ்வகை வழித்தடம் தாவரங்களில் நடைபெறும் காரணங்களை ஆராய்க.
7.
லிம்பிக் மண்டலம் ஏன் உணர்ச்சி மூளை எனப்படுகிறது? அதன் பகுதிகளைக் கூறு?
8.
கிளாமருலார் வடிகட்டுதலை துரிதப்படுத்தும் விசைகள் யாவை?கிளாமருலார் வடிகட்டுதலுக்கான எதிர்விசைகள் யாவை?நிகர வடிகட்டுதல் அழுத்தம் என்றால் என்ன?
9.
கருத்து வரைபடம் – தொகுதி நெமட்டோ்டோடுகளின் பண்புகளை விளக்கும் கீழ்க்கண்ட சொற்களைப் பயன்படுத்தி ஒரு கருத்து வரைபடம் வரைக. உருளைப்ளைப்புழுக்கள், போலி உடற்குழி உடையவை, உணவுப்பாதை, கியுட்டிகள், ஒட்டுண்ணி, பால்வேறுபாட்டுத்தன்மை.
10.
11.
சூல் ஒட்டுமுறையின் வகைகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
12.
இதில் கருவுற்ற முட்டைகள் விடப்பட்டு பொரித்தல் நடைபெறுகின்றது.
பென்சிஜால்
பொரிப்புக்குழி
பொரிப்புக்குளம்
பொரிப்பக ஹாப்பா
13.
ஆற்றல் மிகுந்த ATP-களை அதிக அளவில் மைட்டோகாண்ட்ரியங்கள் உருவாக்குவதால் இவை ________ என அழைக்கப்படுகிறது.
வீரிய சுவாசம்
செல்லின் ஆற்றல் நிலையம்
பைருவேட்
ஈஸ்ட்
14.
புரோட்டோசைலக் கூறுகள் வெளிப்புறத்தை நோக்கியும், மொட்ட சைலக் கூறுகள் உள் நோக்கியும் அமைந்திருப்பது ______ எனப்படும்..
வெளி நோக்கி சைலம்
லிப்ரிஃபார்ம் நார்கள்
இடியோபிளாஸ்ட்கள்
ஸ்கிலிரைடுகள்
15.
பின்வருவனவற்றுள் எந்தமுறை விதை உறக்கத்தை நீக்க பயன்படுத்தப்படுகின்றன?
விதையுறை செதுக்கீடு
மோதல் நிகழ்த்துதல்
அடுக்கமடைதல்
இவை அனைத்தும்
16.
சரியானவற்றைப் பொருத்துக.
| தனிமங்கள் | பணிகள் | ||
|---|---|---|---|
| A | மாலிப்டினம் | 1 | பச்சையம் |
| B | துத்தநாகம் | 2 | மெத்தியோனின் |
| C | மெக்னீசியம் | 3 | ஆக்சின் |
| D | சல்ஃபர் | 4 | நைட்ரோஜினேஸ் |
| A | B | C | D |
| 1 | 3 | 4 | 2 |
| A | B | C | D |
| 2 | 1 | 3 | 4 |
| A | B | C | D |
| 4 | 3 | 1 | 2 |
| A | B | C | D |
| 4 | 2 | 1 | 3 |
17.
யூகேரியோட்டுகளில் காணப்படும் இந்த நுண்ணுறுப்புகள் உள்ளுறை கூட்டுயிர் வாழ்க்கை கோட்பாட்டை உறுதி படுத்துகின்றன.
லைசோசோம்கள் , ரைபோசோம்கள்
மைட்டோகாண்ட்ரியா ,பசுங்கணிகம்
எண்டோபிளாசவலை , கோல்கை உடலம்
உட்கரு , சென்ட்ரியோல்
18.
தொகுதி: நிடோரியாவிலுள்ள அனைத்து விலங்குகளும் ஆரச்சமச்சீரமைப்புடையவைகள் ஆனால் இவ்விலங்கு மட்டும் இருபக்க சமச்சீரமைப்புடையது
பைசாலியா
ஆடம்சியா
பென்னாட்டுலா
மியான்ட்ரினா
19.
பசுங்கணிகத்தில் பச்சையம் a மற்றும் பச்சையம் c யைக் கொண்ட பாசிகள் இப்பிரிவின் கீழ் வைக்கப்படுள்ளது.
தாவரங்கள்
ஆர்க்கி பாக்டிரீயா
குரோமிஸ்டா
புரோட்டிஸ்டா
20.
இந்த இரத்தச் செல்கள் எலும்பு மஞ்சையில் வேறுபாடடைந்து உருவாகின்றன.
இரத்தச் சிவப்பணுக்கள்
இரத்தத் தட்டுகள்
பிளேட்டுலெட்டுகள்
இரத்த வெள்ளையணுக்கள்
21.
சைனோவியல் திரவத்தை சுரப்பது
இரத்தம்
குருத்தெலும்பு
எலும்பு
சைனோவியல் படலம்
22.
23.
ஆர்னிதைன் சுழற்சியின் விளைபொருள் யாது?
கார்பன் டை ஆக்ஸைடு
யூரிக் அமிலம்
யூரியா
அம்மோனியா
24.
கிளிசரால், கொழுப்பு அமிலம் மற்றும் மோனோ கிளிசரைடுகளை உட்கிரகிப்பது_______.
குடல் உறிஞ்சியிலுள்ள நிணநீர் நாளங்கள்
இரைப்பை சுவர்
பெருங்குடல்
குடலுறிஞ்சியில் உள்ள இரத்த நுண் நாளங்கள்.
25.
பல்லுயிர் தன்மை என்ற பதத்தைச் சூட்டியவர் யார்?
வால்டர் ரோஸன்
எ.ஜி.டான்ஸ்லே
அரிஸ்டாடில்
எபி.டி.காண்டோல்
26.
பிரையோஃபில்லம், டயாஸ்கோரியா – எதற்கு எடுத்துக்காட்டு
இலை மொட்டு, நுனி மொட்டு
இலை மொட்டு, தண்டு மொட்டு
தண்டு மொட்டு, நுனி மொட்டு
தண்டுமொட்டு, இலைமொட்டு
27.
முதன்மை வகைக்காட்டு காணப்படாத போது அசலற்ற தொகுப்பிலிருந்து பெறப்படட் மாதிரி பெயர்ச்சொல் இவ்வாறு அறியப்படுகிறது
ஹோலோடைப்
நியோடைப்
ஐசோடைப்
பாராடைப்
28.
இணை பிரிவு நரம்பு மண்டலததின் பணிகளை எழுதுக?
29.
கிரப்ஸ் சுழற்சியினை விளக்குக. (விளக்கம் (அல்லது) வரைபடம்)
30.
கரப்பான் பூச்சியின் சுற்றோட்ட மண்டலத்தின் அமைப்பை படத்துடன் விளக்குக.
31.
ஆக்டினோமைசீட்களின் பண்புகள் யாவை?
32.
சல்லடை குழாய்கள் என்றால் என்ன? விளக்குக.
33.
யூரியோடெலிக், யூரிகோடெலிக் விலங்கு கழிவுகளின் நச்சுத்தன்மை, மற்றும் நீர்ப்புத் தேவையை எது நிர்ணயிக்கிறது?இது எதன் அடிப்படையில் வேறுபடுகிறது.மேற்கண்ட கழிவுநீக்க முறைகளை மேற்கொள்ளும் உயிரிகளுக்கு உதாரணம் கொடு.
34.
ஊர்வன உயிரிகள் நிலவாழ்க்கை வெற்றிக்கான அவற்றின் பண்புகளின் பங்கீடு யாது?
35.
கிளைட்டோரியா டெர்னேஷியாவின் மலர் பண்புகளை விளக்குக.
36.
அக உணரவேற்பிகள் பற்றி குறிப்பு எழுதுக.
37.
நீள் பகல் தாவரம் என்றால் என்ன?
38.
சயனோபாக்டீரியங்கள் எங்கனம் இடம் பெயர்கிறது?
39.
நீ புதிதாக வீடு கட்ட மரக்கட்டைக்குச் சென்று மரம் வாங்கும் பொழுது நேர்த்தியான கட்டையை எவ்வாறு தேர்ந்தெடுப்பாய்?
40.
பைலோரிக் சுருக்குத் தசைகள் எங்கு காணப்படுகிறது?
41.
ரைமோஸ் வகை மஞ்சரி என்பது யாது?
42.
வரையறுக்கப்பட்ட துண்டங்களின் பல்வேறு தன்மைகளின் பகுப்பாய்வி என்பது யாது?
43.
அரக்குப்பூச்சிகள் வளரும் ஏதேனும் இரண்டு மரங்களின் பெயர்களைக் கூறு
44.
சிறுநீரகப்பணிகளை நெறிப்படுத்தும் மூன்று ஹார்மோன்கள் யாவை?
45.
உயிரியியல் பாடத்தில் இலத்தீன் மற்றும் கிரேக்கப் பெயர்களின் பயன்பாட்டின் முக்கியத்துவத்தை விளக்குக.
46.
பக்க வேர்கள் ஏன் அகத் தோன்றிகளாக வளர்கின்றன?
1.

2.
கனிமங்கள் நிலக்கரைசலின் கரைநிலை அல்லது மண்ணின் கூழ்மத் துகளுடன் இணைந்த நிலை என இரு வகையான அமைப்பில் காணப்படுகின்றன.
கனிமங்களின் உள்ளெடுப்பு நீரின் உள்ளெடுப்புடன் சேர்ந்தே நடைபெறுகிறது என முற்காலத்தில் தவறுதலாகக் கருதப்பட்டது. ஆனால் கனிமங்களின் உள்ளெடுப்பும் நீரின் உள்ளெடுப்பும் ஒன்றையொன்று சாராத இரு தனித்தனிச் செயல்களாக உள்ளன.
கனிமங்கள் வேர்தூவிகளால் மட்டும் உறிஞ்சப்படுவதில்லை, வேரின் புறத்தோல் அடுக்காலும் (எபிபிளமா) உள்ளெடுக்கப்படுகிறது.
3.
(i) தண்டு தொகுப்பின் (shoot system) உள்ள புறத்தோல் திசுத்தொகுப்பில் கியூட்டிக்கிள் இருப்பதனால் அதிகப்படியான நீரிழப்பு தடை செய்யப்படுகிறது.
(ii) புறத்தோல் உட்புறத் திசுக்களைப் பாதுகாக்கிறது.
(iii) புறத்தோல், துளைகள் நீராவிப்போக்கு மற்றும் வளிமப்பரிமாற்றம் ஆகிய செயல்களில் ஈடுபடுகின்றன.
4.
1.ஒரு வளர்ச்சிதை மாற்ற வழித் தடத்தின் முடிவு பொருள் சேகரம் அடையும்போது அது அந்த வழித்தடத்தின் முதல் படியை வேற்றுத்தள தடுப்பான இருந்து தடுக்கிறது.
2.இவ்வாறு விளைபொருளின் சேகரம்,தனது உற்பத்தியைத் தானே நிறுத்திக் கொள்கிறது.
3.விளைபொருள் பயன்பாட்டிற்குப்பின் அதன் அளவு குறையும் போது மீண்டும் அதன் உற்பத்தி தொடர்கிறது.
4.இதற்கு முடிவுப் பொருள் தடுப்பு எனப்படும்.
5.
1. மண்புழுவைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் தாவரங்களுக்கான திரவ உரம் அல்லது தாவர ஊட்ட மருந்து மண்புழு செறிவூட்டப்பட்ட நீர் எனப்படும்.
2. மண்புழுவின் கோழை, கழிவுப் பொருட்கள் இவற்றுடன் மண்ணின் கரிம மூலக்கூறுகளால் உருவான நுண்ணூட்ட பொருட்களும் இணைந்தே செறிவூட்டபட்ட நீராகும்.
இத்திரவத்தை இலைகளின் மேல் தெளிப்பதன் மூலம் தாவர வளர்ச்சி தூண்டப்படுகிறது.
6.
(i) ஒளிச்சேர்க்கை நடைபெறும் செல்களில் CO2 இல்லாதபோது O2 அதிகரிக்கும் போது நடைபெறும் அதிகப்படியான சுவாசம் ஒளிச்சுவாசம் எனபப்டுகிறது. C2 சுழற்சியின்போது RUBISCO-வின் கார்பாக்சிலேஸ் செயல் ஆக்ஸிஜினேஸ் செயலாக மாறுகிறது.
(ii) C2 சுழற்சியானது பசுங்கணிகம், பெர்ராக்ஸிசோம் மற்றும் மைட்டோகாண்டரியம் என மூன்று செல் நுண்றுப்புகளில் நடைபெறுகிறது. பசுங்கணிகத்தில் RUBP யானது 2C-பாஸ்போகிளைக்கோலேட் மற்றும் பாஸ்போகிளிசரிக் அமிலமாக மாறுகிறது.
(iii) இதற்கு RUBISCOநொதி பயன்படுகிறது. இவ்வினையில் முதலில் உருவாகும் பொருள் 2C பொருளாக இருப்பதால் இச்சுழற்சிக்கு C2 சுழற்சி என்று பெயர்.
7.
1. பெருமூளையின் உட்பகுதியில் லிம்பிக் மண்டலம் உள்ளது.
2. நுகர்ச்சி குமிழ், சிங்குலேட் கைரஸ், மாமில்லரி உறுப்பு, அமிக்தலா, ஹிப்போகாம்பஸ் மற்றும் ஹைப்போதலாமஸ் ஆகியவை லிம்பிக் மண்டலஉறுப்புகள் ஆகும்.
3. இன்பம், வலி, கோபம், பயம், பாலுணர்வு மற்றும் அன்பு ஆகிய உணர்வுகளைக் கட்டுப்படுத்துவதில் இப்பகுதி முதன்மைப் பங்கு வகிக்கிறது.
4. இதனால் மண்டலத்தை உணர்ச்சி மூளை என்றும் அழைப்பர். ஹிப்போகேம்பசும் அமிக்தலாவும் நினைவாற்றல் பணியில் முக்கியப் பங்காற்றுகின்றன.
8.
நீரம் அழுத்தம் கிளாமருலார் வடிகட்டுதலை துரிதப்படுத்தும் விசையாகும்.
கூழ்ம ஊடுகலப்பு அழுத்தம் மற்றும் கிளாமருலார் கிண்ணங்களில் நீரம் அழுத்தம் ஆகியவை கிளாமருலார்
நிகர வடிக்கட்டலுக்கான அழுத்தம் - கிளாமருலாரின் அழுத்தம் - (கூழ்ம ஊடுகலப்பு அழுத்தம் + கிளாமருலர் கிண்ணத்தின் நீர்ம அழுத்தம்)
நிகர வடிக்கட்டலுக்கான அழுத்தம் = 55mm Hg - (30 mm Hg + 15mm Hg )=10mm Hg
9.

10.
11.
12.
(c)
பொரிப்புக்குளம்
13.
(b)
செல்லின் ஆற்றல் நிலையம்
14.
(a)
வெளி நோக்கி சைலம்
15.
(a)
விதையுறை செதுக்கீடு
16.
(c)
| A | B | C | D |
| 4 | 3 | 1 | 2 |
17.
(b)
மைட்டோகாண்ட்ரியா ,பசுங்கணிகம்
18.
(b)
ஆடம்சியா
19.
(c)
குரோமிஸ்டா
20.
(d)
இரத்த வெள்ளையணுக்கள்
21.
(b)
குருத்தெலும்பு
22.
(b)
23.
(c)
யூரியா
24.
(a)
குடல் உறிஞ்சியிலுள்ள நிணநீர் நாளங்கள்
25.
(a)
வால்டர் ரோஸன்
26.
(b)
இலை மொட்டு, தண்டு மொட்டு
27.
(b)
நியோடைப்
28.
1. கண்கள்-கண் பாவையை சுருங்கச் செய்தல்
2. உமிழ்நீர் சுரப்பி_உமிழ்நீர் சுரப்பைத் தூண்டுதல்
3.இதயம்-இதயத் துடிப்பைக் குறைத்தல்
4.நுரையீரல்-மூச்சுக் குழலை சுருங்கச் செய்தல்
5.இரைப்பை _ செரிமானத்தைத் தூண்டுதல்
6.கல்லீரல்-பித்தநீர் வெளியேற்றத்தைத் தூண்டுதல்
7.சிறுகுடல்-அலை இயக்கம் மற்றும் சுரப்பை தூண்டுதல்
8.சிறுநீர்பை-சிறுநீர்ப் பையை சுருங்கச் செய்தல்
29.

விளக்கம்
தளப்பொருள்
நொதி
ATP, NADH2, FADH2
30.
1. திறந்த வகை ரத்த ஓட்ட மண்டலம்.
2. இரத்த நாளங்கள் சரியாக வளர்ச்சியடையாமல் உள்ளது.
3. இதன் உடற்குழி முழுவதும் நிறமற்ற இரத்தமான
ஹீமோலிம்ப் தடையின்றி ஓடிக்கொண்டிருக்கிறது.
4.இதன் உள்ளுறுப்புகள் அனைத்தும் உடற்குழியிலுள்ள ஹீமோலிம்பில் மிதக்கின்றன.
5. ஹீமோலிஃம்பில் பிளாஸ்மா மற்றும் செல் விழுங்கும் தன்மையுடைய இரத்தச் செல்கள் உள்ளன.
6. தசையாலான இதயம் குழல் அமைப்பில் உள்ளது.
7. இதயம் மார்புப்பகுதி முதல் வயிற்று பகுதி வரை நீண்டுள்ளது.
8. இதயம் 13 அறைகளை கொண்டுள்ளது.
9. ஒவ்வொரு அறையில் இரண்டு புறங்களிலும் ஆஸ்டியா எனும் துளைகள் காணப்படுகின்றன.
10. உடற்குழியிலுள்ள ஹீமோலிம்ப் ஆஸ்தியாக்கள் மூலம் இதயத்திற்குள் நுழைந்து மீண்டும் மேல்நோக்கி உள்குழிகளில் செலுத்தப்படுகிறது.
11. ஒவ்வொரு கண்டத்திலும் இதயத்தின் இரண்டு பக்கங்களிலும் ஒரு ஜோடி முக்கோண வடிவ அலரிதசைகள் (13 இணைகள்) காணப்படுகிறது.
12. இத்தசைகளின் இயக்கமே இரத்த ஓட்டத்திற்கு காரணமாகிறது.
13. மேலும் இதன் உணர்கொம்பு நீட்சியின் அடியிலுள்ள துடிக்கும்பை இரத்தத்தை பாய்ச்சுகிறது.
31.
1.இவை காற்றுணா அல்லது நிலைமாறும் காற்றுணா சுவாச நுண்ணுயிரிகளாகும்.
2.இவை கிராம் நேர் நுண்ணுயிரிகளாகும்.
3.இவைகள் நிமிர்ந்த மைசீலியத்தைத் தோற்றுவிப்பதில்லை.
4.இவற்றின் DNA வில் கூடுதலாக குவானைன்,சைட்டோசைன் காணப்படுகிறது.
5.ஃபிரான்கியா எனும் ஒருங்குயிரி ஆக்டினோ பாக்டீரியம், வேர் முடிச்சுக்களை உருவாக்கி, லெகூம் அல்லாத தாவரங்களான அல்னஸ் மற்றும் கேசுரைனா தாவரங்களில் N2 நிலைப்படுத்துகிறது.
6.இவை பல செல்களுடைய விந்தங்களை உருவாக்குகின்றன.
32.
(i) சல்லடைக் குழாய்கள் நீண்ட ககுழாய்களைப் போன்ற ஃபுளோயத்தின் கடத்துக் கூறுகளாகும்.
(ii) இவை வரிசையாக அமைந்த சல்லடைக் குழாய் கூறுகளின் முனைகள் ஒன்றன் மீது ஒன்று அமைந்து உண்டாக்கபப்டுகிறது.
(iii) இதனுடைய முனை சுவரில் சல்லடை போன்ற துளைகள் காணப்படுகின்றன. இது சல்லடை துளைத்தட்டு எனபப்டும்.
(iv) சல்லடைக் குழாய் கூறுகளின் பக்கச்சுவர்களில் பளபளப்பான தடிப்புகள் காணபப்டுகின்றன. இவை எளிய அல்லது கூட்டு சல்லடைத்தட்டுகளை கொண்டுள்ளன. சல்லடைக் குழாய்களின் பணிகள் துணைச் செல்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன என நம்பப்படுகிறது.
(v) முதிர்ந்த சல்லடை குழாய்களில் உட்கரு காணப்படுவதில்லை. ஆனால் சுவரை ஒட்டிய சைட்டோபிளாசம் காணபப்டுகிறது. இதில் சிறப்பு வகை புரதம். (பு.புரதம் ஃபுளோயம் புரதம்) எனபப்டும் ஸ்லைம் உடலங்கள் காணப்படுகின்றன.
(vi) முதிர்ந்த சல்லடைக் குழாய்களில், சல்லடை தட்டுகளில் உள்ள துளைகள் கேலோஸ் எனப்படும் பொருளால் (callose plug), அடைபட்டுள்ளது உணவுப்பொருட்கள் சைட்டோபிளாச இழைகள் மூலமாகக் கடத்தப்படுகிறது.
(vii) சல்லடைக் குழாய்கள் ஆஞ்சியோஸ் பெர்ம்களில் மட்டும் காணபப்டுகிறது.
33.
யூரியோடெலிக், யூரிகோடெலிக் விலங்கு கழிவுகளின் நச்சுத்தன்மை, மற்றும் நீர்ப்புத் தேவையை நைட்ரஜன் கழிவுப்பொருள் நிர்ணயிக்கிறது.
இது அமோனியா, யூரியா மற்றும் யூரிக் அமிலம் அடிப்படையில் வேறுபடுகிறது.
யூரியோடெலிக் உயிரிகள் - பாலூட்டிகள், நிலவாழ் இருவாழ்விகள்
யூரிகோடெலிக் உயிரிகள் - ஊர்வன, பறப்பன, நிலவாழ் நத்தைகள்.
34.
1. உடல் உலர்ந்த உறுதியான தோலால் மூடப்பட்டுள்ளது.
2. தோலில் செதில்கள் காணப்படுகிறது.
3. மாறும் உடல் வெப்பமுடையவைகள்
4. ஓடுடைய முட்டைகளை இடுகின்றன.
5. யூரிக் அமிலத்தை கழிவுப் பொருளாக வெளியேற்றுகிறது.
6. சிறுநீரகம் மெட்டாநெஃப்ரிக் வகை
7. உட்கருவுருவுதல் நடைபெறுகிறது.
35.
வளரியல்பு: பின்னுக் கொடி
வேர்: ஆணிவேர்த் தொகுப்பு கிளைத்து மற்றும் வேர்முண்டுகளுடன் கூடியது
தண்டு : நிலத்தின் மேல் காணப்படும் நலிந்த தண்டுடைய பின்னுக்கொடி
இலை: ஒற்றைப்படை ஒருமடிககூட்டிலை, மாற்றிலையடுக்கமைவு , இலையடிச் செதிலுடையது .வலைப் பின்னால் இலைக்காம்பும் சிற்றிலைக்காம்பும் அதைப்புடையன.
மஞ்சுரி ; கக்க மலர்
மலர் : பூவடிச்செதிலுடையது. புககாம்புச் செதிலுடையது . புககாம்புச் செதில்கள் அளவில் பெரியது,மலர்காம்புடையது.இரு பூவிதழடுக்குடையது.முழுமையானது, இருபால்மலர் , ஐந்தங்கமலர். இரு பக்கச்சிருடையது மற்றும் மேல்மட்டச் சூலகப்பையுடையது.
புல்லிவட்டம் ; புல்லிகள் 5,இணைந்த புல்லிகள் பசுமையானது, தொடு இதழமைவில் அமைத்துள்ளது .தனிப்புள்ளி மலரின் அச்சு நோக்கிக் காணப்படும் .
அல்லிவட்டம்: அல்லிகள் 5,வெண்மை அல்லது நீல நிறத்தாலானது.தனித்தது ,ஒழுங்கற்றவை , வண்ணத்துப் பூச்சி வடிவில் அமைந்தவை இறங்குதழுவு இதழமைவில் உள்ளன
மகர்ந்ததாள் வட்டம் : மகர்ந்ததாள் கள் 10 இருகற்றைகளில் அமைந்தது (9) +1, ஒன்பது மகர்ந்தக் கம்பிகள் இணைந்து ஒரு கற்றையாகவும் 10 வந்து தனித்து ஒரு கற்றையாகவும் உள்ளன.மகரந்தப்பை ஈரறையுடையது. தாள்அடி இணைந்தவை.நீள்வாக்கில் உட்புறமாக வெடிப்பவை.
சூலவட்டம் : ஒற்றச்சூலக இலையானது மேல்மட்டசூலகம், ஒரு சூலக அறை ,சூல்கள் பல விளிம்பு சூள் ஒட்டு முறையில் அமைத்துள்ளன.சூலகத்தண்டு தனித்தது உள்நோக்கி வளைந்தது , சூலக முடி தூவிகளுடையது கனி: இருபுற வெடிகனி
விதை :சிறுநீரக வடிவிலானது.கருவூன் அற்றது
36.
வயிற்றை, உள்ளுறுப்புகள் மற்றும் இரத்தநாளங்களில் உள்ளவை உடலின் உள்ளே ஏற்படும் தூண்டல்களை உணரக்கூடியவை. ஆதலால் அவற்றை அக உணர்வேற்பிகள் என்று அழைப்பர். உடல் அசைவு மற்றும் நிலையை உணரக்கூடிய இயக்க உணர்வேற்பிகளும் அக உணர்வேற்பிகளே.
37.
தீர்வுக்கட்ட ஒளிக்கால அளவைவிட மலர்தலுக்கு அதிக ஒளிக்காலம் தேவைப்படும் தாவரங்கள் நீள் பகல் தாவரங்கள் அல்லது குறு இருள் தாவரங்கள் என்படுகினற்ன,
எடுத்துக்காட்டு : பட்டாணி, பார்லி , ஓட்ஸ்.
38.
வழுக்கு நகர்வு இயக்கம் மூலம் இடப்பெயர்ச்சி செய்கிறது.எ.கா: ஆஸில்லடோரியா.
39.
40.
இரைப்பையும் முன் சிறுகுடலும் இணையும் இடத்திலுள்ள திறப்பில் காணப்படுகிறது.
41.
1. மஞ்சரித் தண்டு வளர்ச்சி தடைபட்டு மலரில் முடிவடையும்.
2.கக்க மொட்டுகளின் மூலம் தொடர்ந்து வளர்ச்சி நடைபெறும்.
3. முதிர் மலர்கள் மஞ்சரித் தண்டின் நுனியிலும், இளமலர்கள் அடிப்பகுதியிலும் காணப்படுகிறது.
42.
ஒத்தமைவு டி.என்.ஏ. மூலக்கூறுகளின் வரிசை அமைப்பில் உள்ள வேற்றுமைகளை டி.என்.ஏ. மாதிரிகளைப் பல துண்டங்கள் ஆக்குவதன் மூலம் அறிய இயலும். இம் முறைக்கு வரையறுக்கப்பட்ட துண்டங்களின் பகுப்பாய்வு என்று பெயர்.
43.
1. கருங்காலி
2. கருவேலை
3. கும்பாதிரி
44.
சிறுநீரகப்பணிகளை நெறிப்படுத்தும் மூன்று ஹார்மோன்கள் ஆன்டிடையூரிக் ஹார்மோன், ரெனின் மற்றும் ஆஞ்சியோடென்சின் ஆகும்.
45.
உலகில் இலத்தீன் மற்றும் கிரேக்க மொழிகள் அதிகமாக பயன்பாட்டில் இல்லை. காலங்கள் கடந்தாலும் அதன் எழுத்துக்கள் மற்றும் அமைப்பு மாறாத காரணத்தினால் உயிரியல் சொற்கள் இன்றும் அம்மொழியில் தான் உள்ளது.
46.
பக்கவேரானது வேர்களின் பெரிசைக்களிலிருந்து தோன்றி அகத்தோல், புறணி மற்றும் ரைசோடெர்மியை தாண்டி வெளி வருவதால் அவைகள் அகத் தோன்றிகளாகும்.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards