11th Standard Syllabus & Materials
11th Standard
Tamilnadu 11th Standard Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil கேடில் விழுச்செல்வம் - உரைநடை - தமிழகக் கல்வி வரலாறு Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 14/11/2019
11ஆம் வகுப்பு Economics / பொருளியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Economics / பொருளியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Economics Test

1.
நுகர்வோர் உபரியை கணக்கிடும் சூத்திரம் _________
Qd=Qs
\(n_0={-p\over x}{dx\over dp}\)
\(Cs=[\int^{xo}_{o}f(x)dx\)
\(Ps=x_op_o-\int^{xo}_{o}g(x)dx\)
2.
"மொத்த நாடுகள் மகிழ்ச்சிக் குறியீடு"(GNHI)என்ற தொடரை உருவாக்கியவர்________.
பூடானின் முதல் மன்னர்-மார்ஷல்
பூடானின் இரண்டாவது மன்னர் -J.M.கீன்ஸ்
பூடானின் மூன்றாவது மன்னர் -ஷாஜஹான்
பூடானின் நான்காவது மன்னர்-ஜிக்மே சிங்யே-வாங்கக்
3.
வாய்ப்புச் செலவு _______என்றும் அழைக்கப்படுகிறது.
பிறவாய்ப்புச் செலவு
மாற்றுச் செலவு
பரிமாற்றச் செலவு
மேற்கூறிய அனைத்தும்
4.
தேவைக்கும் விலைக்கும் உள்ள தலைகீழ் உறவை பற்றி விளக்கியவர்_____.
ஆடம்ஸ்மித்
பெஃர்கூசன்
கார்ல் மார்க்ஸ்
கிஃபன்
5.
பெருன்பான்மையான கிராம மக்கள் ____ அதிக வட்டிக்கு பணம் கொடுப்பவர்களிடமிருந்தும் கடன் பெறுகிறார்.
தனியார் நிறுவனம்
நிதி நிறுவனம்
இரண்டும்
எதுவுமில்லை
6.
'சர்வசிக்ஷா அபியான் ' எத்திட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது _______.
முதல் ஐந்தாண்டுத் திட்டம்
பத்தாம் ஐந்தாண்டுத் திட்டம்
மூன்றாம் ஐந்தாண்டுத் திட்டம்
ஒன்பதாவது ஐந்தாண்டுத் திட்டம்
7.
_____________ மிக அதிக அளவில் ஆற்றுநீர் மற்றும் பருவமழையை நம்பியுள்ளது.
தொழிற்துறை
வேளாண்மை
சுரங்கம்
வாணிபம்
8.
பலவிதமான விலைகளை பல்வேறு நபர்களிடம் பெறுவது ________ ஆகும்.
தனிநபர் பேதம்
இட பேதம்
பயன் அடிப்படையில் பேதம்
மேற்கூறிய அனைத்தும்
9.
ஏற்றுமதி உதவிகளை ________ சதவீத அளவு குறைக்க "இந்தியத் தயாரிப்பு" என்று கருத்து உருவாக்கப்பட்டது.
30%
20%
25%
40%
10.
நிலை நிற்கும் புள்ளி (State of rest) _______________ எனப்படும்.
சமநிலை
சமநிலையின்மை
குறைந்தபட்ச புள்ளி
அதிகபட்ச புள்ளி
11.
1993ல் முன் பதிவு நீக்கப்பட்ட தொழில்துறை
இரயில்வே துறை
செம்பு மற்றும் சிங்க் சுரங்கத் தொழில்
அணு ஆற்றல்
அணு கனிமங்கள்
12.
தமிழ்நாட்டின் எம்மாவட்டத்தில் பாலின விகிதம் அதிகமாக உள்ளது?
நாகப்பட்டினம்
நீலகிரி
திருச்சி
தஞ்சாவூர்
13.
எதனைப் பயன்படுத்துவதற்கான வெகுமதியே வாரம் ஆகும்?
மூலதனம்
உழைப்பாளி
நிலம்
அமைப்பு
14.
இரண்டு முற்றிலும் வேறுபட்ட தன்மைகளை தொடர்புபடுத்தி குறிப்பது
நுட்பம்
சார்ந்திருப்பு
இரட்டை தன்மை
சமமின்மை
15.
பண்டங்கள் மற்றும் பணிகள் வரி சட்டம் _____________ அமல்படுத்தப்பட்டது.
2017 ஜுலை 1ந் தேதி
2016 ஜுலை 1ந்தேதி
2017 ஜனவரி 1ந்தேதி
2016 ஜனவரி 1ம்தேதி
16.
எந்தக் காரணி சமுதாய மாற்றம் உருவாக்கும் முகவர் என்று அழைக்கப்படுகிறது?
உழைப்பாளர்
நிலம்
தொழிலமைப்போர்
மூலதனம்
17.
முற்றுரிமை நிறுவனம் குறுகிய காலத்தில்______பெறும்
இயல்பு இலாபம்
நஷ்டம்
அதிக இலாபம்
அதிக நஷ்டம்
18.
ஒரு அலகு பொருளை கூடுதலாக விற்பதால் கிடைக்கும் வருவாய் ----------- வருவாயாகும்.
இலாபம்
சராசரி
இறுதிநிலை
மொத்த
19.
விருப்பங்களோடும் கிடைப்பருமையுள்ள மாற்றுவழிகளில் பயன்படத்தக்க சாதனங்களோடும் தொடர்புள்ள மனித நடவடிக்கைகளைப் பற்றி பயில்கின்ற அறிவியலே பொருளியலாகும் என்று இலக்கணம் வகுத்தவர்.
இலயனல் இராபின்ஸ்
ஆடம் ஸ்மித்
ஆல்ஃபிரட் மார்ஷல்
பால் அ சாமுவேல்சன்
20.
முரண்பட்டதை தெரிவு செய்க.
ஆடம்பர பண்டங்கள்
வசதிபண்டங்கள்
அத்தியாவசிய பண்டங்கள்
விவசாயப் பொருட்கள்
21.
ஓர் உற்பத்தியாளரின் மொத்த செலவுச் சார்பு TC(Q)=Q3 - 36Q2 + 182Q +20 ஆகும். இங்கு செலவுகள் ரூபாயில் உள்ளன Q=6 என்கின்ற போது இறுதிநிலை செலவு MC மற்றும் சராசரி மாறும் செலவு (AVC) காண்க.
22.
நிலையான பேரளவு பொருளாதாரம் விளக்குக.
23.
AC மற்றும் MC வளைகோட்டில் உள்ள தொடர்புகளை வரைபடம் வரைந்து விளக்குக.
24.
சம அளவு உற்பத்திக் கோட்டுத் தொகுதியின் வரைபடம் வரைந்து விளக்குக.
25.
தமிழ்நாட்டின் உயர்கல்வி பற்றி குறிப்பு வரைக?
26.
முற்றுரிமை என்றால் என்ன? முற்றுரிமை அங்காடியில் அதிக பொருட்களை அதிக விலைக்கு விற்கிறார்களா?
27.
காத்திருத்தல் வட்டிக்கோட்பாட்டை எழுதுக
28.
29.
நுகர்வோர் எச்சம் என்ற கருத்தை வரைபடத்துடன் விளக்கு.
30.
இயல்புரை பொருளியல் மற்றும் நெறியுரை பொருளியல் ஒப்பிடுக
31.
ஆற்றல் என்றால் என்ன? அதன் வகைகளை எழுதுக?
32.
மொத்த செலவு 100+Q3 எனில் AVC,AC, TFC,AFC மற்றும் TVC யை காண்க இதில் Q = 10.
33.
சமநோக்கு வளைகோட்டின் தொகுப்பினை வரைந்து அதனுடைய பண்புகளை விளக்குக.
34.
ஊரக வறுமைக்கான காரணங்களை விளக்குக.
35.
ஆடம் ஸ்மித்தின் செல்வ இலக்கணத்தை விளக்குக.
36.
தமிழ்நாட்டின் வங்கியியல் வளர்ச்சி பற்றி விவரி.
37.
முற்றுரிமையின் போட்டியில் வீண் செலவுகள் யாவை?
38.
வகைக்கெழு கணித முறையைப் பயன்படுத்தி தேவையின் சமன்பாடு P = 60 − 0.2Q ஆக இருக்கும்போது
(i) P = 0
(ii) P=20
(iii) P = 40 என்றால் தேவை நெகிழ்ச்சிக் கெழு மதிப்பு காண்.
39.
இறுதிநிலை உற்பத்தித்திறன் பகிர்வுக் கோட்பாட்டை விளக்குக
40.
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்தியப்பொருளாதாரம் பற்றி விவாதிக்க?
41.
தொழிற்கொள்கை தொடர்பாக இந்திய அரசு மேற்கொண்ட முயற்சிகளை விளக்குக.
42.
நிறைவு போட்டியின் இயல்புகள் விளக்குக.
43.
சம அளவு உற்பத்தி கோட்டின் பண்புகளை வரைபடத்துடன் விவரி
44.
45.
இந்தியாவில் உடல்நலப் பணிகள் பற்றி எழுதுக.
46.
இறுதிநிலை வருவாய் என்றால் என்ன?
47.
விலைத் தேவை நெகிழ்ச்சியின் அளவுகள் யாவை?
48.
பணிகளின் இயல்புகள் யாவை?
49.
இடத்தை பொறுத்து அங்காடியின் வகைகள் யாவை?
50.
நிதிப்பற்றாக்குறையின் நிர்ணயம் யாது?
51.
வட்டி பற்றி நீ அறிவது யாது?
52.
பத்தாம் ஐந்தாண்டுத் திட்டத்தின் நோக்கங்கள் யாவை?
53.
தமிழ்நாட்டின் முக்கியத் துறைமுகங்கள் யாவை?
54.
1.
(c)
\(Cs=[\int^{xo}_{o}f(x)dx\)
2.
(d)
பூடானின் நான்காவது மன்னர்-ஜிக்மே சிங்யே-வாங்கக்
3.
(d)
மேற்கூறிய அனைத்தும்
4.
(b)
பெஃர்கூசன்
5.
(c)
இரண்டும்
6.
(b)
பத்தாம் ஐந்தாண்டுத் திட்டம்
7.
(b)
வேளாண்மை
8.
(a)
தனிநபர் பேதம்
9.
(c)
25%
10.
(a)
சமநிலை
11.
(b)
செம்பு மற்றும் சிங்க் சுரங்கத் தொழில்
12.
(b)
நீலகிரி
13.
(c)
நிலம்
14.
(c)
இரட்டை தன்மை
15.
(a)
2017 ஜுலை 1ந் தேதி
16.
(c)
தொழிலமைப்போர்
17.
(c)
அதிக இலாபம்
18.
(c)
இறுதிநிலை
19.
(a)
இலயனல் இராபின்ஸ்
20.
(d)
விவசாயப் பொருட்கள்
21.
TC(Q)=Q3 - 36Q2 + 182Q +20
தரப்பட்டுள்ளது. இறுதிநிலை செலவுச் சார்பினை காண Qஐ பொருத்து வகைப்படுத்த.
MC(Q)= \({d(TC)\over dQ}\)
= 3Q3-1 -36 (2) Q2-1 + 182(l)Q1-1 + 20
= 3Q2-72Q1 + 182 Qo+ 20
= 3Q2- 72Q + 182 (1) + 20
= 3Q2 -72Q + 182 + 20
= 3Q2-72Q + 202
Q=6 எனில்,
MC (Q) = 3(6)2 - 72 (6) + 202
= 3 (36) - 432 + 202
= 108 - 432 + 202
= 310 - 432
\(\boxed{\therefore MC(Q)=122}\)
TC (Q) = Q3 - 36Q2 +182Q +20
AVC=?
TVC (Q) = Q3 - 36Q2 + 182Q என அறிகிறோம்.
(மாறிலி மதிப்பு என்பது மாறாச் செலவு ஆகும் )
AVC (Q) = TVC (Q) /Q
\(={Q^3-36Q^2+182Q\over Q}\)

= Q2-36Q+182
Q = 6 எனில்,
AVC (Q) = (6)2 - 36 (6) +182
= 36 - 216 + 182
=218-216
\(\boxed {AVC (Q) =2}\)
குறிப்பு:
மாறாச்செலவு =20
சராசரி மாறாச் செலவு =\({20\over Q }\)

=Q2-36Q+182+\({20\over Q }\)
22.
1.உலக நாடுகளில் இந்தியா ஒரு நிலைத்த பேரளவு பொருளாதார நாடு என்பதை தொடர்ந்து நிரூபித்து வருவதை புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.
2."நிலைத்த உறுதிவாய்ந்த சிறந்த எதிர்காலம் கொண்ட பேரியல் பொருளாதாரத்திற்கான சொர்க்கம்"என்று குறிப்பிடுகிறது.
3.பொருளாதார ஆய்வறிக்கையின்படி 2014-2015க்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி வீதம் 8% ஆக இருக்கும் என நிர்ணயித்து இருந்தபோதிலும்.உண்மையான வளர்ச்சி அதைவிட சற்று குறைவாக 7.6%ஆக இருந்தது.
4.இதன் மூலம் இந்தியா ஒரு நிலையான பேரளவு பொருளாதாரம் வளர்ச்சியுடையது என நிரூபித்து வருகிறது.
23.
சராசரி செலவிற்கும் இறுதிநிலைச் செலவிற்கும் தனித்தன்மையான தொடர்பு உள்ளது.

1.AC குறையும் போது MC அதற்கு கீழே குறைகிறது.
2. AC யின் அடிமட்டப் புள்ளியில் MC சமமாக இருக்கிறது.
3.AC அதிகரிக்கும் போது அதைவிட வேகமாக MC அதிகரிக்கிறது எனவே AC கோட்டிற்கு மேலே MC உள்ளது.
4.AC கோட்டின் மிகத் தாழ்வான புள்ளியை MC கோடு கீழிருந்து மேல் நோக்கி வெட்டிச் செல்கிறது.
24.
1.சம அளவு உற்பத்திக் கோட்டுத் தொகுதி என்பது உற்பத்திக் காரணிகளின் பல்வேறு இணைப்பில் உள்ள பல சம அளவு உற்பத்தி கோடுகளின் தொகுதி ஆகும்.
2. ஒவ்வொரு சமநோக்கு வளைகோடும் வேறுபட்ட உற்பத்தியைக் கொண்டவை.
3.சுருங்கக்கூறின் சமநோக்கு வளைகோட்டின் குடும்பம் சம அளவு உற்பத்தி வரைபடமாகும்.
சம அளவு உற்பத்திக் கோட்டுத் தொகுதி

4. சம அளவு உற்பத்திக் கோடு மேலேச் செல்ல செல்ல அதிக உற்பத்தியையும், கீழேச் செல்ல செல்ல குறைந்த அளவு உற்பத்தியையும் கொடுக்கும்.
5. வரைபடத்தில் x-அச்சு உழைப்பையும்,y-அச்சு மூலதனத்தையும் குறிக்கிறது.
6.ஒன்றுக்கு மேற்பட்ட பல சம அளவு உற்பத்திக் கோடுகள் இருந்தால் அது சம அளவு உற்பத்திக் கோட்டுத்தொகுதி எனப்படும்.
25.
(i) உயர்கல்விக்கான மொத்த சேர்க்கை விகிதத்தில் தமிழ்நாடு தொடர்ந்து பிற மாநிலங்களைக் காட்டிலும் முதன்மை பெற்று முதலிடத்தில் உள்ளது.
(ii) தமிழ்நாட்டின் மொத்த சேர்க்கை வீதமான (GER) 46.9% அனைத்து மாநிலங்களின் தேசிய சராசரியைவிட அதிகமாக உள்ளது.
(iii) தமிழ்நாட்டில் 59 பல்கலைக் கழகங்களும், 40 மருத்துவ கல்லூரிகளும், 517 பொறியியல் கல்லூரிகளும் உள்ளன.
(iv) 2260 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும், 447 பல்தொழில்நுட்ப கல்லூரிகளும், 20 பல் மருத்துவக்கல்லுரிகளும் உள்ளது.
(v) ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்திலிருந்து 4 இலட்சம் பொறியியல் மற்றும் பல்தொழில்நுட்பம் பயில்கின்ற மாணவர்கள் வெளியேறுகின்றனர்.
26.
(i) ஒரு விற்பனையாளர் இருக்கும் அங்காடி முற்றுரிமை அங்காடி ஆகும்.
(ii) முற்றுரிமையில் நிறுவனமே தொழிற்சாலையாகும்.
(iii) முற்றுரிமை நிறுவனம் கீழ்நோக்கி சரியும் தேவை வளைகோட்டை கொண்டுள்ளது.
(iv) நெருங்கிய பதிலீட்டுப் பண்டங்கள் இல்லை.
(v) உட்புகுதல் தடையாகும்.
(vi) இறுதிநிலை வருவாய் வளைகோடு (MR),AR வளைகோட்டிற்கு கீழ் அமைந்துள்ளது.(MR
(viii) சமநிலை உற்பத்தியானது MC=MR.
(ix) இந்த புள்ளிக்கு மேல் உற்பத்தியாளர் தனக்கு நட்டம் ஏற்படும் என்பதை எதிர்பார்த்து விற்பனையை நிறுத்திக்கொள்வார்.
27.
(i) அமெரிக்க பொருளியல் அறிஞர் J.B கிளார்க் 1900 ல் இக்கோட்பாட்டை எடுத்துரைத்தார்.
(ii) இக்கூற்றுப்படி, இலாபம் என்பது விலைக்கும் பனங்களின் உற்பத்திச் செலவிற்கும் உள்ள வேறுபாடே ஆகும்.
(iii) சமுதாயத்தில் ஏற்பட்ட இயங்குநிலை மாற்றங்களுக்கான வெகுமதியே இலாபம் ஆகும்.
(iv) கிளார்க் கருத்துப்படி, இயங்கா நிலையில் உள்ள சமுதாயத்தில் இலாபம் தோன்றாது. இந்நிலைச் சமுதாயத்தில் அனைத்தும் செயல்படாதிருக்கும். அங்கு எவ்வித மாற்றமும் ஏற்படாது.
(v) தற்காலத்தில் சமுதாயம் அதிக மாற்றங்கள் ஏற்பட்டு இயங்கக்கூடிய நிலையில் உள்ளது. கிளார்க்கின் கூற்றுப்படி, கீழ்க்கண்ட ஐந்து முக்கிய மாற்றங்களை இயங்கு சமுதாயத்தில் காணலாம்.
(1) மக்கள் தொகை பெருகும்
(2) மூலதன அளவு பெருகும்
(3) உற்பத்தி முறைகள் மேம்பாடு அடையும்
(4) தொழில் அமைப்பின் வகைகள் மாற்றமடையும்
(5) நுகர்வோரின் விருப்பங்கள் பெருகும்.
திறனாய்வு:
நவீன கோட்பாடுகளில் ஒன்றான இது குறுகிய காலத்தில் எதிர்பார்க்க முடியாத மாற்றங்களின் வேறுபாட்டைப் புறக்கணித்துவிட்டது.
28.
29.
மார்ஷலின் நுகர்வோர் எச்சம்:இலக்கணம்
"ஒரு பொருளை வாங்காமல் இருப்பதை விட வாங்குவதே மேல் என முடிவுசெய்து, கொடுக்க நினைத்த விலைக்கும், நுகர்வோர் உண்மையில் கொடுத்த விலைக்கும் உள்ள வித்தியாசம் நுகர்வோர் எச்சம்" எனப்படும் என்று மார்ஷல் கூறுகிறார்.

(அ)
நுகர்வோர் எச்சம் =(மொத்தப் பயன்பாடு)-(உண்மைவிலை x பண்ட அலகுகள்)
\(\boxed{CS=TU-P \times Q}\)

வரைபட விளக்கம்:
1. X- அச்சில் தேவையில் அளவும்,Y - அச்சில் விளையும் குறிக்கப்பட்டுள்ளது
2. DDI என்பது நுகர்வோரின் பல்வேறு பண்ட அலகுகளின் மூலம் பெறும் பயன்பாட்டைக் குறிக்கும்.
3.விலை OP2 ஆக இருக்கும் போது தேவை அளவு OQ5ஆக உள்ளது.
4. எனவே, உண்மை விலை OPCQ-10 ஆகும். தகுவிலை (மொத்தப் பயன்பாடு ) ODCQ ஆகும்

=20-10=10

30.
| வ.எண் | இயல்புரை பொருளியல் | நெறியுரை பொருளியல் |
| 1. | இயல்புரை அறிவியல்,'உள்ளதை உள்ளவாறு' கூறுகிறது. | நெறியுரை பொருளியல் 'எதுவாக இருக்கவேண்டும்' என்ற வினாவிற்கு விடையளிப்பதாக உள்ளது. |
| 2. | நிரூபிக்க இயலும் | நிரூபிக்க இயலாது |
| 3. | என்ன என்பதைக் கூறுகிறது | எப்படி இருக்க வேண்டும் என உரைக்கின்றது. |
| 4. | உண்மையின் அடிப்படையில் அமைந்தது. | உண்மைகளின் அடிப்படையில் அமைந்ததன்று. |
31.
1.நம் வாழ்க்கைக்கு தேவையான அங்கங்களில் ஒன்று மின் ஆற்றலாகும்.
2.இன்றைய நவீன தொழில்நுட்ப காலத்தில் மின்சாரம் இன்றி நம்மால் வாழ்வது சிரமம்.
3.ஆற்றல் இரண்டு வகைப்படும்.
1.புதுப்பிக்க இயலாத மின் ஆற்றல் மூல வளங்கள்.
2.புதுப்பிக்கக்கூடிய மின் ஆற்றல் மூல வளங்கள்.
1.புதுப்பிக்க இயலாத மின் ஆற்றல் மூல வளங்கள்.
1.இதன் பெயருக்கு ஏற்றார் போல் இத்தகைய வளங்களை நாம் மறுபடியும் பயன்படுத்த முடியாது.அவை தீர்ந்துவிட்டால் மறுபடியும் உருவாக்க முடியாது.
2.மூலங்கள் தொடர்ந்து பயன்படுத்திட அவை காலப்போக்கில் தீர்ந்து போகும்.
3.உதாரணம் :நிலக்கரி, பெட்ரோலியம்,இயற்கை வாயு மற்றும் பல.
2.புதுப்பிக்கக்கூடிய மின் ஆற்றல் மூல வளங்கள்.
1.இத்தகைய வளங்களை மீண்டும் மீண்டு பயன்படுத்த இயலும் ஏனென்றால் இத்தகைய வளங்கள் தீர்ந்து போகாதவை.
2.ஏராளமாகவும், முற்றுப் பெறாதவைகளாகவும் இருக்கின்றன.அவை,
1.சூரிய சக்தி.
2.காற்று சக்தி.
3.அலைகள் சக்தி
4.புவி வெப்ப சக்தி
5.உயிரி எரிவாயு சக்தி
3.சில நேரங்களில் புதுப்பிக்க கூடிய வளங்களை வழக்கில் இல்லாத ஆற்றல் எனவும் அழைப்பதுண்டு.
4.காரணம் இவ்வளங்கள் கொண்டு முன்காலங்களில் மின் ஆற்றல் உற்பத்தி செய்யப்பட வில்லை அல்லது வழக்கத்தில் இல்லை எனலாம்.
32.
1.\(\boxed{TC=TFC+TVC}\)
TC=மொத்த செலவு,
TFC=மொத்த மாறாச் செலவு,
TVC=மொத்த மாறும் செலவு
\(\boxed{AVC={TVC\over Q}}\)
AVC=சராசரி மாறும் செலவு
Q=உற்பத்தி
\(\boxed{AFC={TFC\over Q}}\)
AFC=சராசரி மாறாச் செலவு
AC=சராசரி செலவு
\(\boxed{AC={TC\over Q}}\)
2. TC = 100 + Q3-மொத்த செலவில் இரண்டு செலவுகள் உள்ளடங்கியுள்ளது.அவை மொத்த மாறாச் செலவு மற்றும் மொத்த மாறும் செலவு ஆகும்.
3.மொத்த மாறாச் செலவு (TFC)உற்பத்தி அதிகரித்தாலும்,குறைந்தாலும், புஜ்ஜியமாக இருந்தாலும் மாறாது.
எனவே,
TC= 1O+Q3.
4.இங்கு மொத்த மாறாச் செலவு 100 ஆகும்.
TC 100 + Q3 Q = 10 எனில்
TC = 100 + (10)3 (10 x 10 x 10 = 1000)
= 100 + 1000
\(\boxed {\therefore TC=1100}\)மொத்த செலவு
TFC = 100, TC = 1100 எனில்
TVC= ?
TC= TFC+TVC
1100= 100 + TVC
1100 -100= TVC
\(\boxed {\therefore TVC=1000}\)மொத்த மாறும் செலவு
TVC =1000, TC = 1100, TFC = 100, Q = 10 எனில்
\(AFC={TFC\over Q}\)

\(\boxed {\therefore AFC=10}\)சராசரி மாறாச் செலவு
\(AVC={TVC\over Q}\)

\(\boxed {\therefore AVC=100}\) சராசரி மாறும் செலவு
\(AC={TC\over Q}\) (அ) AC=AFC+AVC
(அ) 110= 10+ 100
\( {\therefore AC=110}\) 110=110
AVC=சராசரி மாறும் செலவு =100
AFC=சராசரி மாறாச் செலவு =10
AC=சராசரி செலவு =110
TVC=மொத்த மாறும் செலவு =1000
TFC=மொத்த மாறாச் செலவு=100
TC=மொத்த செலவு=1100 ஆகும்.
33.
சமநோக்கு வளைகோட்டின் பண்புகள்:
1.எல்லா சமநோக்கு வளைக்கோடுகளும் வலப்புறமாக கீழ்நோக்கிச் செல்லும்.
2.சமநோக்கு வளைகோடுகள் குவிந்த நிலையில் அமையும்.
3.இரண்டு சமநோக்கு வளைக்கோடுகள் ஒன்றை ஒன்று வெட்டிக்கொள்ளாது .
1.எல்லா சமநோக்கு வளைக்கோடுகளும் வலப்புறமாக கீழ்நோக்கிச் செல்லும்.
1.கீழ்நோக்கிச் சரிந்து செல்லும் சமநோக்கு வளைகோடு நுகர்வோர் X பண்டத்திற்கு பதிலாக Y பணத்தினை பதிலீட்டு பண்டமாக தெரிவுச் செய்கிறார்.
2.Y பண்டத்தை அதிகரித்து X பண்டத்தை குறைக்கிறார் எனவும் பொருள்படும்.
2.அனைத்து சமநோக்கு வளைகோடுகளும் தோற்றுவாய் நோக்கி குவிந்து காணப்படும்.
1.இறுதிநிலை பதிலீட்டு வீதம் (DMRS)அதிகரிக்கும் போது சமநோக்கு வளைகோடுகள் தோற்றுவாய் நோக்கி குழியாக காணப்படும்.
2.இறுதிநிலை பதிலீட்டு வீதம் (DMRS)குறைந்து கொண்டே செல்கிறது.

3.எந்த இரு சமநோக்கு வளைகோடுகளும் ஒன்றை ஒன்று வெட்டிக் கொள்ளாது.

1.மூன்றாவது எடுகோள் இரண்டு சமநோக்கு வளைகோடுகள் எப்போதும் ஒன்றை ஒன்று வெட்டிக் கொள்ளாது என்பதாகும்.
2.இரண்டாவது சமநோக்கு வளைகோட்டில் (IC2)உள்ள புள்ளி A முதலாவது வளைகோட்டில் (IC1)உள்ள புள்ளி B யை விட அதிக மனநிறைவை நுகர்வோருக்குத் தருகிறது.
3.சமநோக்கு வளைகோடுகள் எப்போதும் ஒன்றை ஒன்று வெட்டுக் கொள்ளாது.
34.
(1) நிலங்கள் சரியாக பிரிக்கப்படாமை:
(i) ஊரக நிலப் பகுதிகள் ஒரு சிலரிடம் குவிந்து காணப்படுகிறது.
(ii) கிராம மக்கள் தங்கள் குடும்ப தேவைகளுக்காக அந்நிலங்களில் கூலிக்கு செய்கின்றனர்.
(2) பண்ணை சாராத தொழில்களில் வேலை வாய்ப்பின்மை:
அதிகரிக்கும் உழைப்பாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பண்ணை சாராத தொழில்கள் வளரவில்லை.
(3) பொதுத்துறைகளில் முதலீடு இன்மை:
மனித வளத்தை மேம்படுத்துவதற்கான முதலீடு நமது நாட்டில் மிகக் குறைவாக உள்ளது.
(4) பணவீக்கம்:
பொருட்களின் விலை அதிகரிப்பதால் ஊரக மக்களின் வாங்கும் சக்தி குறைந்த ஊரக வறுமைக்கு வழிவகுக்கிறது.
(5) குறைந்த உற்பத்தித் திறன்:
ஊரக தொழிலாளர்கள் மற்றும் பண்ணைகளின் குறைந்த உற்பத்தித்திறன், வறுமைக்கு காரணமாக அமைந்தது.
(6) வளர்ச்சியின் நன்மைகளில் உள்ள சமனற்ற நிலை:
பொருளாதார வளர்ச்சியினால் ஏற்படும் நன்மைகளை நகர்புற பணக்காரர்களே அனுபவிப்பதால் சொத்துக்கள் அவர்களிடமே குவிந்து உள்ளது.
(7) குறைந்த பொருளாதார வளர்ச்சி வீதம்:
இந்திய பொருளாதார வளர்ச்சி பணக்காரர்களுக்கு சாதகமாகவே உள்ளது.
(8) பெரிய தொழிற்சாலைகளுக்கே முக்கியத்துவம்:
இந்தியாவில் பெரிய தொழிற்சாலைகளில் செய்யப்படும் அதிக முதலீடு நகர்புறத்தின் நடுத்தர மற்றும் உயர் வருமான பிரிவினரின் தேவைகளையே பூர்த்தி செய்கிறது.
(9) சமூக குறைபாடுகள்:
சமுதாயத்தில் நிலவும் பழக்க வழக்கங்கள் நம்பிக்கைகள் போன்றவை ஆக்கமற்ற உற்பத்தி செலவை அதிகரிக்கிறது.
35.
செல்வ இலக்கணம்:
1. ஆடம்ஸ்மித்(1723-1790)"நாடுகளின் செல்வத்தின் இயல்பும்,காரணங்களும் பற்றிய ஓர் ஆய்வு"(1776)என்ற தனது நூலில் "பொருளியல் என்பது செல்வத்தைப் பற்றிய ஓர் அறிவியல் என்று வரையறுத்துள்ளார்."
2.அவர் ஒரு நாட்டின் செல்வம் எவ்வாறு உருவாக்கப்படுகிறது மற்றும் அதிகரிக்கப்படுகிறது என்பதை விளக்குகின்றார்.
3.தனி மனிதர்கள் தங்கள் சுய இலாபத்தை முன்னேற்ற விரும்பி செயல்படும் போது,அவர்களை திரைக்குப் பின்னாலிருந்து 'ஒரு புலனாக உந்து சக்தி"வழி நடத்துகிறது என்கிறார்.
4. ஒவ்வொரு மனிதனும் சுய ஆர்வத்தால் தூண்டப்படுவதாக ஸ்மித் கூறகிறார்.
5.உற்பத்தி அளவினை அதிகரிக்க "வேலை பகுப்பு முறையை" அறிமுகப்படுத்துவதை ஆதரிக்கின்றார்.
6.சமுதாயம் மற்றும் நிறுவனங்களில் நிலவும் கடுமையான போட்டியின் காரணமாக சிறந்த பொருட்கள் கிடைக்க உதவுகின்றன.
திறனாய்வு:
1.ஸ்மித்தைப் பொறுத்தவரை பொருளியல் என்பது 'செல்வத்தைத் திரட்டுதல்' மற்றும் 'செல்வத்தைச் செலவிடுதல்' சார்ந்த நடவடிக்கைகளாகும்.
2.பொருட்சார் செல்வம் என்ற ஒன்றிற்கு மட்டுமே அதிக அளவு முக்கியத்துவம் தரப்பட்டு முக்கிய பகுதியான 'மனித நலம்' அவரால் புறக்கணிக்கப்படுள்ளது.
3.மதம் மற்றும் ஆன்மீக மதிப்பீடுகள் மேலோங்கியிருந்த காலக் கட்டத்தில் ஸ்மித் தனது வரையறையை வழங்கியுள்ளார்
4.இரஸ்கின் மற்றும் கார்லைல் போன்றோர் நீதிநெறிக்கு புறம்பான சுயநலத்தை கற்றுதருவதாக பொருளியல் வர்ணிக்கப்படுவதால், பொருளியலை 'ஓர் இருண்ட அறிவியல்'எனக் கூறியுள்ளார்.
36.
(i) தமிழ்நாட்டில் உள்ள மொத்த வங்கித் சேவையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் 52% பகுக்களுடன் 5,337 கிளைகள் பணியாற்றுகின்றன.
(ii) தனியார் வணிக வங்கிகள் 30% (3,060 கிளைகள் ) பாரத ஸ்டேட் வங்கி மற்றும் அதன் துணை நிறுவனங்கள் 13% (1,364 கிளைகள்) ஆகும்.
(iii) வட்டார கிராமிய வங்கிகள் 5% (537 கிளைகள்) மற்றும் 2 அயல்நாட்டு வணிக வங்கிகளும் சேவையில் உள்ளன.
(iv) தமிழ்நாடு வங்கிகளின் மொத்த வைப்பு நிதியானது ஒவ்வொரு ஆண்டும் 14.32% உயர்கிறது.
கடன் வழங்கல்:
(i) முதன்மைத் துறைமுகங்களுக்கான கடன் தொகையானது 45.5%
(ii) வேளாண்மைத் துறைகளுக்கான கடன் வழங்கல் 18%
(iii) தமிழ்நாட்டில் உள்ள வங்கிகள் இந்தியாவிலேயே அதிககடன் வைப்பு வீதமாக 119.15% விழுக்காட்டைக் கொண்டுள்ளது.
(v) இந்திய அளவில் இதன் வீதம் 77.5% மட்டுமே உள்ளது.
37.
வீணாக்கப்பட்ட சக்தி :
(i) வீணாக்கப்பட்ட சக்தி என்பது உத்தம அளவு உற்பத்திக்கும் உண்மை அளவு உற்பத்திக்கும் உள்ள வேறுபாடாகும்.
(ii) நீண்ட காலத்தில் நிறுவனங்கள் குறைந்தளவு சராசரிச் செலவு இருந்தாலும் உத்தம அளவு உற்பத்தி விட வேண்டுமென்றே குறைந்த அளவு உற்பத்தி செய்கின்றன.
(iii) முற்றுரிமைப் போட்டியில் இந்த அளவு சக்தி வீணாக்கப்படுவதாகவே கருதப்படுகிறது.
வேலையின்மை:
(i) முற்றுரிமையாளர் போட்டியில் நிறுவனங்கள் உத்தம அளவை விட குறைவாக உற்பத்தி செய்வதால் வளங்களை முழுமையாக பயன்படுத்துவதில்லை.
(ii) உற்பத்தி திறன் முழுமையாக பயன்படுத்தபடுவதில்லை.
(iii) இதனால் மனிதர்களுக்கு வேலையின்மை ஏற்படுகிறது.
விளம்பரம் :
(i) முற்றுரிமை போட்டியில் போட்டியின் காரணத்தினால் விளம்பரத்திற்காக அதிகப் பணம் செலவிடப்படுகிறது.
(ii) வீண் விளம்பரங்களினால் நுகர்வோருக்கு விலை அதிகரிக்கிறது.
(iii) விளம்பரங்களில் உண்மையற்ற தகவல் மூலம் நுகர்வோர் ஏமாற்ற படுவதும் நடக்கிறது.
பல்வேறு விதமான பண்டங்கள்:
முற்றுரிமை போட்டியில் ஒரே பயனுக்கு பல்வேறு விதமான பண்டங்களை அறிமுகப்படுத்துவது மற்றொரு வீண் செலவாகும்.
செயல்திறன் குறைந்த நிறுவனங்கள்:
(i) முற்றுரிமை போட்டியில் சில செயல்திறன் குறைந்த நிறுவனங்கள் தமது இறுதிநிலைச் செலவை விட அதிக விலை வசூலிக்கின்றனர்.
(ii) நிறுவனங்கள் வெளியேற்றப்பட வேண்டும்,ஆனால் நுகர்வோர் பெரும்பாலும் உணர்ச்சி தூண்டுதலால் இத்தகைய நிறுவனப் பொருட்களை வாங்குவதால் திறமைக் குறைவான நிறுவனங்களை வெளியேற்ற முடிவதில்லை.
(iii) திறமையான நிறுவனங்கள் நுகர்வோரைக் கவரும் வகையில் விளம்பரம் செய்ய போதிய அளவு செலவு செய்வதில்லை இதனால் திறமைக் குறைவான நிறுவனங்களை வெளியேற்ற முடிவதில்லை.
38.
தேவை நெகிழ்ச்சிக் கெழு = η
\(ηd=\frac{dp}{dq}\)
p=60-0.2 Q
\(\frac{dp}{dq}= -0.2\)
\(\boxed { \eta d=\frac { -q }{ p } \frac { dp }{ dq } } \)
\(\eta d=\frac{+q}{60-2.0q}(+0.2)\)
=\(\frac{0.2q}{60-0.2q}\)
இதில் q=0 எனில்
\(= \frac{0.2(0)}{60-0.2(0)}=0\)
q=20 எனில்
\(\eta d=\frac{0.2(20)}{60-0.2(20)}\)
=\(\frac{4.0}{60-4}\)
\(\eta d=\frac{1}{14}\)
இதில் q=40 எனில்
\(\eta d=\frac{0.2(40)}{60-0.2(40)}\)
\(=\frac{8}{60-8}\)
\(\eta d=\frac{2}{13}\)
விடை :
| q | 0 | 20 | 40 |
| ባd | 0 | \(\frac{1}{14}\) | \(\frac{2}{13}\) |
39.
இறுதிநிலை உற்பத்தித்திறன் பகிர்வுக் கோட்பாடு:
(i) இறுதிநிலை உற்பத்தி திறன் பகிர்வு கோட்பாட்டை வளர்ச்சியுறச் செய்தவர்கள். கிளார்க்,விக்சீடு மற்றும் வால்ரஸ் ஆவார்.
(ii) இக்கோட்பாடு பல்வேறு உற்பத்திக் காரணிகளுக்கு எவ்வாறு விலைகளை நிர்ணயிப்பது என விளக்குகிறது.
(iii) காரணி வருவாயான வாரம், கூலி, வட்டி மற்றும் இலாபம், போன்றவற்றிற்கு எவ்வாறு விலையை தீர்மானிக்கப்படுகின்றன என்பதை விளக்குகிறது.
(iv) இக்கோட்பாடு "காரணிகளின் பொது பகிர்வு கோட்பாடு" அல்லது "தேசிய ஈவுத்தொகை பகிர்வு கோட்பாடு" என்றும் அழைக்கப்படுகிறது.
எடுகோள்கள்:
(i) காரணிகள் அனைத்தும் ஒருமித்த தன்மை கொண்டவை.
(ii) நிறைவுப்போட்டி நிலவுகிறது .
(iii) உற்பத்திக் காரணிகள் முழுமையாக இடம் பெயரக் கூடியவை.
(iv) முழு வேலை நிலை நிலவுகிறது.
(v) நீண்ட காலத்திற்கு மட்டுமே இவ்விதி பொருந்தும்.
(vi) காரணிகளின் விலை நிர்ணயத்தில் அரசின் தலையீடு இல்லை.
(vii) தொழில் நுட்பத்தில் மாற்றமில்லை.
இக்கோட்பாட்டின் விளக்கம்:
இறுதிநிலை உற்பத்தித்திறன் பகிர்வுக்கோட்பாட்டின்படி எந்த ஒரு உற்பத்தி திறனுக்குச் சமமாக விலையோ அல்லது வெகுமதியோ வழங்கப்பட வேண்டும்.
இறுதிநிலை உற்பத்தி:
உற்பத்தி காரணிகளின் இறுதிநிலை உற்பத்தி என்பது ஓர் அலகு கூடுதல் காரணியை பணியில் அமர்த்துவதால் மொத்த உற்பத்தியில் ஏற்படுகிற கூடுதல் மாற்றமே ஆகும்.
இறுதிநிலை பருப்பொருள் உற்பத்தி (MPP):
ஒரு அலகு கூடுதல் காரணியை பணியில் அமர்த்துவதால் மொத்த உற்பத்தியில் பெறும் உயர்வே என்று அழைக்கப்படுகிறது.
இறுதிநிலை உற்பத்தி மதிப்பு:
காரணியின் இறுதிநிலை பருப்பொருள் உற்பத்தியை விலையால் பெருகுவதால் இறுதிநிலை உற்பத்தி மதிப்பைப் பெறலாம்.
இறுதிநிலை வருவாய் உற்பத்தி:
(i) ஓர் அலகு கூடுதல் காரணியை பணியில் அமர்த்துவதால் மொத்த வருவாயில் பெறுகின்ற வருவாய் உயர்வே ஆகும்.
கோட்பாட்டின் விளக்கம்:
(i) இறுதிநிலை உற்பத்தித்திறன் பகிர்வுக்கோட்பாடு குறிப்பிடுவது என்னவெனில் காரணியின் விலை அக்காரணியின் உற்பத்தியின் அடிப்படையில் அமைகிறது.
(ii) காரணியின் இறுதிநிலை வருவாய் உற்பத்திற்கு சமமாக அக்கரணியின் விலை தீர்மானிக்கப்படுகிறது.
(iii) சில நிபந்தனைகளுக்குட்பட்டு காரணியின் விலை அக்காரணி சராசரி மற்றும் இறுதிநிலை உற்பத்திக்கு சமமாக அமையும்.
வரைபட விளக்கம்:
(i) x அச்சில் காரணியின் அலகுகளும் y அச்சில் காரணியின் விலை மற்றும் வருவாய் உற்பத்தியும் குறிப்பிடுகின்றன.
(ii) MRP -என்பது இறுதிநிலை வருவாய் உற்பத்தி வளைகோடு.
(iii) ARP -என்பது சராசரி வருவாய் உற்பத்தி வளைகோடு.
(iv) AFC -காரணியன் சராசரி செலவு.
(v) MFC -காரணியின் இறுதிநிலைச் செலவு
(vi) AFC -கோடு நிறைவுப் போட்டியில் படு கிடைக்கோடாக உள்ளது MFC கொடும் அதோடு இணைந்திருக்கும்.
(vii) MFC -MRP ஆக இருக்கும் பொது நிறைவுப் போட்டியில் ஒரு நிறுவனம் காரணி அங்காடியில் சமநிலை அடைகிறது.
40.
பிரிட்டன் நாடு, இந்தியாவைக் காலனி ஆதிக்கத்தின் கீழ் 200 ஆண்டுகளுக்கு மேலாக சீரழித்து வந்தது.
காலனி ஆதிக்கம் சிதைப்பின் அடிப்படையில் முழு காலத்தையும் வரலாற்றுப் பொருளியல் வல்லுநர்கள் மூன்று கட்டங்களாக பிரித்தனர்.அவை
(i) வணிக மூலதனக் காலம்.
(ii) தொழில் மூலதனக் காலம்.
(iii) நிதி மூலதனக் காலம்.
(1) வணிக மூலதனக் காலம்.
(i)1757 லிருந்து 1813 வரையிலான காலம் வணிக மூலதன காலம் ஆகும்.
(ii) கிழக்கிந்திய கம்பெனியின் முக்கிய நோக்கம் இந்திய மற்றும் கிழக்கிந்திய பொருட்களை ஒருவர் முற்றுரிமையாக வாணிபம் செய்து இலாபம் ஈட்டுவதேயாகும்.
(iii) பிரிட்டன் தொழில் மூலதனத்தை முன்னேற்ற இந்தியா ஒரு மிக முக்கியமான சுரண்டல் பிரதேசமாக கிழக்கிந்திய கம்பெனி கருதப்பட்டது.
(iv) 1750 மற்றும் 1760 களில் வங்காளமும் தென்னிந்தியாவும் கிழக்கிந்திய கம்பெனி அரசியல் நெருக்கடிக்கு உள்ளான போது முற்றுரிமை வணிகத்தின் (அல்லது) வாணிபத்தின் நோக்கம் நிறைவேறியது.
(v) எல்லாவற்றிற்கும் மேலாக இக்கம்பெனயின் அலுவலர்கள் அனைவரும் நேர்மையற்று , ஊழல் நிறைந்தவர்களாக இருந்தனர்
(2) தொழில் மூலதனக் காலம்.
(i)1813 முதல் 1858 வரையிலான காலம் தொழில் மூலதன காலமாகும்.
(ii) பிரிட்டிஷ் துணிமணிகளின் சந்தையாக இந்தியா விளங்கியது.
(iii) இந்தியாவிலிருந்து மலிவு விலையில் பெறப்பட்ட கச்சாப் பொருட்கள் இங்கிலாந்திற்கு ஏற்றுமதி செய்யப்பட்டு முழுமை பெற்ற பொருட்கள் இந்தியாவிற்கு அதிக விலையில் இறக்குமதி செய்யப்பட்டன.
(iv) இந்தியாவின் பாரம்பரிய கைவினைப் பொருட்கள் தூக்கி எறியப்பட்டன.
(3) நிதி மூலதனக் காலம்.
(i)19 ஆம் நூற்றாண்டின் இறுதி வருடங்களிருந்து சுதந்திரம் அடைந்தது வரையிலான காலம் மூன்றாவது கட்டமான நிதி மூலதன காலமாகும்.
(ii) இக்கால கட்டத்தில் வியாபார நிறுவனங்கள் செலவாணி, ஏற்றுமதி இறக்குமதி , நிறுவனங்கள் மாற்று வங்கிகள் மற்றும் சில மூலதன ஏற்றுமதிகளில் நிதி ஏகாதிபத்தியம் தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்த தொடங்கியது.
(iii) இந்திய மூலதனத்தை கொள்ளையடித்து இந்தியாவில் இருப்ப பாதை சாலை வசதிகள் , அஞ்சலக துறை , பாசனம் , ஐரோப்பிய வங்கி முறை கல்வியில் குறிப்பிட்ட பகுதிகளில் பெரிய அளவில் முதலீடு செய்ய பிரிட்டன் முடிவு செய்தது.
(iv) பிரிட்டன் இரயில்வே கட்டமைப்பு கொள்கையானது கற்பனை செயய் முடியாத பொருளாதார பயணில்லாக் கொள்கையாகும்
(v)1858 ஆம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனி தனது அரசியல் அதிகாரத்தை பிரிட்டிஷ் அரசிடம் ஒப்படைத்தது.
41.
தொழிற்கொள்கை பின்வரும் மாற்றங்களை தொழில் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது.
(i) தொழில் உரிமங்கள் விலக்கம் செய்யப்பட்டன.
(ii) தொழில் துறையில் உள்ள ஒதுக்கீட்டை நீக்குதல்.
(iii) பொதுத்துறைக் கொள்கை, கோட்பாடுகள் நீக்கம் மற்றும் சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டது.
(iv) MRTP-சட்டம் ஒழிப்பு.
(v) அந்நிய முதலீட்டுக் கொள்கை மற்றும் அந்நிய தொழில்நுட்பக் கொள்கை கொண்டு வரப்பட்டது.
42.
ஓரியல்பான பண்டங்கள் மற்றும் ஒரே மாதிரியான விலை:
வாங்கும் மற்றும் விற்கும் பண்டங்கள் ஒத்த தன்மையுடையவையாகவும் முற்றிலும் பதிலீட்டு பண்டங்களாகவும் இருக்கும்.
எண்ணற்ற விற்பவர் மற்றும் வாங்குபவர் இருப்பார்.உட்புகுதல் மற்றும் வெளியேறுதலில் தடையில்லை:
(i) குறுகிய காலத்தில் ஒரு திறமையான உற்பத்தியாளர் குறைந்த செலவில் உற்பத்தி செய்து மிக அதிக இலாபம் பெறுவார்.
(ii) இதனால் அதிக எண்ணிக்கையில் உற்பத்தியாளர் தொழிற்சாலையில் நுழையவும்,வெளியேறவும் வாய்ப்பு உள்ளது.
போக்குவரத்து செலவு இல்லை :
போக்குவரத்து செலவு இல்லாததால் ஒரே மாதிரியான விலை நிலவுகிறது.
உற்பத்தி காரணிகள் இடம் பெயரும்:
ஒரு தொழிலிலிருந்து மற்றொரு தொழிலுக்கு மாறுவதற்கு முழு சுதந்திரம் பெற்றுள்ளதால் விலை சரி செய்யப்படுகிறது.
அங்காடி நிலை பற்றி அறிந்திருப்பார்:
அங்காடி மற்றும் பண்டத்தின் தரம் பற்றி வாங்குபவரும், விற்பவரும் நன்கு அறிவர்.
அரசின் தலையீடு இல்லை:
மூலப்பொருளின் அளிப்பு மற்றும் விலை நிர்ணயம் போன்றவற்றில் அரசின் தலையீடு இல்லை.
43.
சம அளவு உற்பத்திக் கோட்டின் பண்புகள் :
1. சம உற்பத்திக் கோடு எதிர்மறைச் சரிவைக் கொண்டது.
2. தோற்றுவாய் நோக்கி குவிந்து காணப்படும்.
3. சம உற்பத்திக் கோடு ஒன்றையொன்று வெட்டிக் கொள்ளாது.
4. உயர் சம உற்பத்திக்கோடு உயர் உற்பத்தி அளவை குறிக்கிறது.
5. சம உற்பத்திக் கோடு X அச்சினையோ (அ) Y அச்சினையோ தொடாது.
சம உற்பத்திக்கு கோடுகள் எதிர்மறைச் சரிவைக் கொண்டது:
1. சம உற்பத்திக் கோடுகள் இடமிருந்து வளமாக மேலிருந்து கீழ்நோக்கி சரிந்து செல்கிறது.
2. சம உற்பத்திக் கோடு சரிவதற்கு காரணம் (MRTS) இறுதிநிலை தொழில்நுட்ப பதிலீட்டு வீதம் ஆகும்.
3. ஒரு காரணியை (K5) அதிகமாக பயன்படுத்தும் போது மற்றொரு காரணி (L2) குறைகிறது.

தோற்றுவாய் நோக்கி குவிந்து காணப்படும்:
1. இறுதிநிலை பதிலீட்டு வீதம் அதிகரிக்கும் போது சம உற்பத்திக் கோடுகள் தோற்றுவாய் நோக்கி குழியாகவும் மற்றும் நிலையான இறுதிநிலை பதிலீட்டுவிதம் இருந்தால் நேர்கோடாகவும் அமையும்.
2. இது சம உற்பத்திக் கோட்டின் இயல்பினை பொறுத்தது.
3. குறைந்த அளவு உழைப்பின் அலகுகள் மூலதனத்திற்கு பதிலீடாக பயன்படுத்தப்படும் போது சம உற்பத்திக் கோடுகள் தோற்றூய் நோக்கி குவிந்து அமையும்

சம உற்பத்தி கோடுகள் ஒன்றையொன்று வெட்டிக் கொள்ளாது:
1. IQ2சம உற்பத்தி வளைகோட்டில் உள்ள C என்ற புள்ளி அதிக உற்பத்தியையும், IQ1 சம உற்பத்தி வளைகோட்டில் உள்ள B என்ற புள்ளி குறைவான உற்பத்தியை குறிக்கிறது.
2.சமமற்ற இருவேறு புள்ளிகள் A என்ற புள்ளியில் சமமாகிவிட்டது என்பதாகும்.C=A, B=A என்றால் C=B அனால் C>B, இது ஏற்றுக் கொள்ள முடியாததாகும்.

உயர் சம உற்பத்திக் கோடு உயர் உற்பத்தி அளவை குறிக்கிறது:
1. சம உற்பத்திக் கோடுகள் உயரச் செல்ல செல்ல அதிக அளவு உற்பத்தியும், கீழே செல்ல செல்ல குறைந்த அளவு உற்பத்தியும் கொடுக்கும்.

2. IQ,
சம உற்பத்திக் கோடு X அச்சினையோ அல்லது Y அச்சினையோ தொடாது:
1. எந்த ஒரு சம உற்பத்திக்கோடு X அச்சின் மேலோ அல்லது Y அச்சின் மேலோ அமையாது.
2. IQ, ல் மூலதனம் மட்டும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
3. IQ,வில் உழைப்பு மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.
4. மூலதனம் அல்லது உழைப்பை மட்டுமே உற்பத்தியில் ஈடுபடுத்துவது இயலாத செயல் என்று கருதப்படுகிறது.

44.



45.
1.இந்தியாவில் உடல்நலப் பணிகள் மத்திய நலத்துறை அமைச்சகத்தின் கீழ் வருகின்றன.
2.மாநிலங்களை பொறுத்தவரையில் கேரளா மற்ற மாநிலங்களை விட உடல்நலம் பேனுதலின் சிறப்பான இடத்தை பெற்றிருக்கிறது.
46.
1.இறுதிநிலை வருவாய் என்பது, கூடுதலாக ஓர் அலகு பண்டத்தை விற்பனை செய்வதால் மொத்த வருவாய் எனப்படும்.
2.\(\boxed{MR_n=TR_n-TR_{n-1}}\)
47.
1. முற்றிலும் நெகிழ்ச்சியுள்ள தேவை (EP=\(\alpha\))
2.முற்றிலும் நெகிழ்ச்சியற்ற தேவை (EP=0)
3.மிகைத் தேவை நெகிழ்ச்சி (EP>1)
4.குறைவான நெகிழ்ச்சியுள்ள தேவை (EP<1)
5. அலகுத் தேவை நெகிழ்ச்சி (EP=1)
48.
பணிகளின் இயல்புகள்.
1. புலனாகாப் பொருட்கள்
2. பலதரப்பட்ட பண்டங்கள்
3. பணிகளை உருவாக்குபவரிடமிருந்து பிரிக்க இயலாது
4. அழியக் கூடியவை.
49.
(i) உள்ளூர் அங்காடி
(ii) மாகாண அங்காடி
(iii) தேசிய அங்காடி
(iv) பன்னாட்டு அங்காடி
50.
நிதிப்-பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்று சதவீதத்திற்கு மேல் இருக்கக்கூடாது என்று பன்னாட்டு பணநிதி நிர்ணயம் அறிவித்தது.
51.
முதலைப் பயன்படுத்திக் கொள்ள அதைப்பெற்றவர்கள் அதை வழங்கியவர்க்கு வெகுமதியே வட்டியாகும்.
52.
(i) இத்திட்டம் அடுத்த பத்தாண்டுகளில் தலா வருவாயை இரு மடங்காக உயர்த்த இலக்கு நிர்ணயித்தது
(ii) 2012 ஆம் ஆண்டில் வறுமை விகிதத்தை 15% ஆக குறைக்கும் குறிக்கோள்களை கொண்டடிருந்தது
53.
எண்ணூர் மற்றும் தூத்துக்குடி ஆகியவை தமிழ்நாட்டின் மிகப்பெரிய துறைமுகங்களாகும். நாகப்பட்டினம் நடுத்தர துறைமுகமாகும்.
54.
11th Standard Syllabus & Materials
11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards