11th Standard Syllabus & Materials
11th Standard
Tamilnadu 11th Standard Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil கேடில் விழுச்செல்வம் - உரைநடை - தமிழகக் கல்வி வரலாறு Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 19/02/2019
+1 Public Exam March 2019 Model
11ஆம் வகுப்பு Physics / இயற்பியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Physics / இயற்பியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Physics Test1.
இடப்பெயர்ச்சி உடைய துகள் மேற்கொள்ளும் அலை இயக்கத்தின் சமன்பாடு \(y=4\cos ^{ 2 }{ \left( \frac { t }{ 2 } \right) } \sin { \left( 1000t \right) } \) இது எத்தனை மேற்பொருந்துதல் அலைகளின் விளைவு
இரண்டு
மூன்று
நான்கு
ஐந்து
2.
டால்டனின் பகுதி அழுத்த விதிப்படி
மெய்வாயுக்களின் ஒரு கலவையின் மொத்த அழுத்தம் அதன் காரணிகளின் கூடுதல் அழுத்தம்
நல்லியல்பு வாயுக்களின் ஒரு கலவையின் மொத்த அழுத்தம் என்பது பகுதி அழுத்தத்தின் வேறுபாடு
நல்லியல்பு வாயுக்களின் ஒரு கலவையின் மொத்த அழுத்தம் என்பது அழுத்தங்களின் கூடுதல்
மெய்வாயுக்களின் ஒரு கலவையின் மொத்த அழுத்தம் பகுதி அழுத்தத்தின் கூடுதல்
3.
குறிப்பிட்ட கால அளவில் சூரியன் புவி மீது செய்த வேலையின் அளவு எவ்வாறு இருக்கும்?
நேர்குரியாக எதிர்குரியாக அல்லது சுழியாக
எப்போதும் நேர்குறி
எப்போதும் எதிர்குறி
எப்போதும் சுழி
4.
ஒரு திண்ம கோளம் மற்றும் திண்ம உருளை சமநிறையும் ஆரமும் உடையது. இது தன சொந்த அச்சைப் பற்றி சுழலுமானால் M.I. பின்வரும் இதில் அதிகமாக இருக்கும்.
திண்மக் கோளம்
திண்ம உருளை
a, b இரண்டும்
இரண்டிலும் சமம்
5.
வாயுக்கலவை ஒன்று μ1 மோல்கள் ஓரணு மூலக்கூறுகளையும் μ2 மோல்கள் ஈரணு மூலக்கூறுகளையும் மற்றும் μ3 மோல்கள் நேர்கோட்டில் அமைந்த மூவணு மூலக்கூறுகளையும் கொண்டுள்ளது. இவ்வாயுக்கலவை உயர் வெப்பநிலையில் உள்ளபோது அதன் மொத்த சுதந்திர இயக்கக்கூறுகளின் எண்ணிக்கை யாது?
[3μ1 + 7(μ2+μ3)]NA
[3μ1 + 7μ2+6μ3)]NA
[7μ1 + 3(μ2+μ3)]NA
[3μ1 + 6(μ2+μ3)]NA
6.
வெப்பமான கோடைகாலத்தில் சாதாரண நீரில் குளிந்த பின்னர் நமது உடலின் ______.
அக ஆற்றல் குறையும்
அக ஆற்றல் குறையும்
வெப்பம் குறையும்
அக ஆற்றல் மற்றும் வெப்பத்தில் மாற்றம் நிகழாது
7.
ஒரு தனி ஊசலின் அலைவுநேரம் T1 அது தொங்கவிடப்பட்டுள்ள புள்ளியானது y = k t2 என்ற சமன்பாட்டின்படி செங்குத்தாக மேல்நோக்கி இயங்குகின்றது. இங்கு y என்பது கடந்த செங்குத்து தொலைவு மற்றும் k =1 m s-2, இதன் அலைவுநேரம் T2 எனில் \({T_1 \over T_2}\)(g=10ms -2) என்பது_______.
5/6
11/10
6/5
5/4
8.
ஒரு குறிப்பிட்ட குழாய்க்கு 1000Hz விட குறைவான 4 சீரிசை அதிர்வெண்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவை 300Hz, 600Hz, 750Hz மற்றும் 900Hz இந்த தொடரில் விடுபட இரு அதிர்வெண்கள் யாவை?
100Hz, 150Hz
150Hz,450Hz
450Hz, 700Hz
700Hz, 800Hz
9.
ஒரு திரவத்தின் R ஆரமுள்ள குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கோளகத்துளிகள் ஒன்று சேர்ந்து R ஆரமும் V பருமனும் கொண்ட ஒரே திரவத்துளியாக மாறுகிறது. திரவத்தின் பரப்பு இழுவிசை T எனில் _____.
ஆற்றல் 4VT \(\left( \frac { 1 }{ r } -\frac { 1 }{ R } \right) \)வெளிப்பட்டது
ஆற்றல் 3VT \(\left( \frac { 1 }{ r } +\frac { 1 }{ R } \right) \)வெளிப்பட்டது
ஆற்றல் 3VT \(\left( \frac { 1 }{ r } -\frac { 1 }{ R } \right) \)வெளிப்பட்டது
ஆற்றல் வெளிப்படவும் இல்லை உட்கவரப்படவும் இல்லை
10.
h மீட்டர் உயர கோபுரம் ஒன்றிலிருந்து பந்து ஒன்று தானாக கீழே விழுகிறது. இது தரையை t காலத்தில் அடையுமெனில் t /2 காலத்தில் தரையிலிருந்து பொருளுக்குள்ள உயரம் (மீட்டரில்) யாது?
h/2
h/4
3h/4
பந்தின் நிறை மற்றும் பருமனை பொருத்தது
11.
குறிப்பிட்ட உயரத்திலிருந்து பந்து ஒன்று கீழே விழுகிறது. பின்வருவனவற்றுள் எப்படம் பந்தின் இயக்கத்தினைச் சரியாக விளக்குகிறது?




12.
ஒரு அமைப்பின் நிலை ஆற்றல் உயருகிறது. எனில் _______.
ஆற்றல் மாற்றா விசைக்கெதிராக அமைப்பினால் வேலை செய்யப்படுகிறது
ஆற்றல் மாற்றும் விசைக்கெதிராக அமைப்பினால் வேலை செய்யப்படுகிறது
ஆற்றல் மாற்றா விசையின் அமைப்பின் மீது வேலை செய்யப்படுகிறது
ஆற்றல் மாற்றும் விசையினால் அமைப்பின் மீது வேலை செய்யப்படுகிறது
13.
படத்தில் காட்டியவாறு வழுவழுப்பான கிடைத்தள பரப்பில் m, 2m நிறைகள் வைக்கப்பட்டுள்ளன, முதல் நிலையில் F1 விசை இடப்புறமிருந்து செயல்படுத்தப்படுகிறது. பிறகு F2 விசை மட்டும் வலப்புறமிருந்து செயல்படுத்தப்படுகிறது பொருள்கள் ஒன்றையொன்று தொடும் பரப்பில், இரு நிலைகளிலும் சமவிசைகள் செயல்படுகின்றன எனில் F1 : F2 _______.
1: 1
1: 2
2: 1
1: 3
14.
ஒரு கோளத்தின் ஆரத்தை அளவிடுதலில் பிழை 2% எனில், அதன் கனஅளவைக் கணக்கிடுதலின் பிழையானது_______.
8%
2%
4%
6%
15.
துகள்களால் ஆன அமைப்பின் நிறை மையம் சாராதிருப்பது ______.
துகள்களின் நிலை
துகள்களுக்கிடையே உள்ள தொலைவு
துகள்களின் நிறை
துகளின் மீது செயல்படும் விசை
16.
விண்வெளிக் கலத்தில் எடையின்மை தோன்றுவது ஏன்?
17.
பின்வரும் வரைபடம் 1m ஒரு கம்பியின் நீட்சி \(\triangle \)I.இதன் ஒரு முனை கூரையிலிருந்து தொங்கவிடப்பட்டுள்ளது. பளு w மறுமுனையில் இணைக்கப்பட்டுள்ளது,கம்பியின் குறுக்குப் பரப்பு 10-6m2 கம்பியின் யங்குணத்தைக் கணக்கிடுக
18.
கீழே கொடுக்கப்பட்டுள்ள PV வரைபடம் மூலம் உயர்ந்த வெப்பநிலை எது எனக்கண்டறி. வரைபடம் வெவ்வேறு வெப்பநிலைகளில் நடைபெறும் இரண்டு மாறா நிகழ்வுகளைக் குறிக்கின்றன.
19.
ஐன்ஸ்டீன் நிறை ஆற்றல் தொடர்பை பரிமாண முறையில் பெறுக. (E = mc2)
20.
கணத்தாக்கு என்பது உந்தத்தில் ஏற்படும் மாற்றம் என்று விளக்குக.
21.
ஆற்று நீரோட்டத்தின் திசையில் நீந்தும் நீச்சல் வீரரின் திசைவேகம் 12 km h-1. ஆற்று நீரோட்டத்தின் திசைக்கு எதிர்திசையில் அவரின் நீச்சல் திசைவேகம் 6 km h-1 எனில், அமைதி நிலையில் இருக்கும் நீரினைப் பொருத்து நீச்சல் வீரரின் வேகத்தையும் மற்றும் ஆற்று நீரோட்டத்தின் திசைவேகத்தையும் காண்க.
22.
m நிறையுள்ள ஒரு பொருள் சுருள்வில்லுடன் இணைக்கப்பட்டு, செயல்படுத்தப்படும் விசையினால் அது நடுநிலையில் இருந்து 25 cm அளவிற்கு நீட்சியடைகிறது.
(a) சுருள்வில் – நிறை அமைப்பில் சேமிக்கப்பட்ட நிலை ஆற்றலைக் கணக்கிடுக.
(b) இந்த நீட்சியில் சுருள்வில் விசையால் செய்யப்பட்ட வேலை யாது?
(c) சுருள்வில்லானது அதே 25 cm அளவிற்கு அமுக்கப்பட்டால் சேமிக்கப்படும் நிலை ஆற்றல் மற்றும் அமுக்கத்தின்போது சுருள்வில் விசையால் செய்யப்பட்ட வேலை ஆகியவற்றைக் கணக்கிடுக. (சுருள்வில் மாறிலி K = 0.1 N m-1)
23.
திருப்புவிசை வரையறு. அதன் அலகு யாது?
24.
இரு கோள வடிவ சோப்பு குமிழிகள் இணைகின்றன. V என்பது அவற்றிலுள்ள காற்றின் பருமனில் மாற்றம் A என்பது மொத்த பரப்பளவின் மாற்றம் எனில் 3PV + 4AT = 0 காட்டு . T என்பது பரப்பு இழுவிசை p என்பது வளி அழுத்தம்.
25.
C = 3.0 \(\pm \) 0.1 \(\mu\)F மின்தேக்குத்திறன் கொண்ட மின்தேக்கி V = 18 \(\pm \) 0.4 Volt மின்மூலத்தால் மின்னேற்றம் செய்யப்படுகிறது. மின்தேக்கியின் மின்னுட்டத்தைக் காண்க [Q = CV என்ற சமன்பாட்டைப் பயன்படுத்துக்க]
26.
\(\\ \overrightarrow { A } =2\hat { i } -\hat { j } \) மற்றும் \(\overrightarrow { B } =4\hat { i } -3\hat { j } \)எனில் பின்வருவனவற்றின் ஸ்கேலர் எண்மதிப்பு மற்றும் x அச்சு பொருத்து திசையையும் காண்.
(i) \(\overrightarrow { A } \) (ii)\(\overrightarrow {B } \) (iii) \(\overrightarrow { A } \)+\(\overrightarrow {B } \) (iv) \(\overrightarrow { A } \)-\(\overrightarrow {B } \)
27.
ஒரு துகள் \(\overset { \rightarrow }{ { r }_{ 1 } } =(2\hat { i } +\hat { j } -3\hat { k } )\) என்ற நிலையிலிருந்து \(\overrightarrow { { r }_{ 2 } } =(4\hat { i } +6\hat { j } -7\hat { k } )\) நிலைக்கு, \(\overrightarrow { F } =(3\hat { i } +2\hat { j } +4\hat { k } )N\). என்ற விசையின் தாக்கத்தால் நகர்கிறது எனில் செய்யப்பட்ட வேலை யாது?
28.
வாயு மூலக்கூறுகள், அவற்றை அடைத்து வைக்கப்பட்டிருக்கும் கொள்கலனின் சுவரின்மீது ஏற்படுத்தும் அழுத்தத்திற்கான கோவையை பெறுக.
29.
வெப்ப விரிவைப்பற்றி விவாதித்து எழுதுக.
30.
சுருள்வில்லின் செங்குத்து அலைவுகளை விவரி.
31.
5 m, 6 m அலைநீளம் கொண்ட இரண்டு ஒலி மூலங்களை கருதுக. இவை இரண்டும் வாயு ஒன்றில் 330ms-1 திசைவேகத்துடன் செல்கின்றன. ஒரு வினாடியில் ஏற்படும் விம்மல்களின் எண்ணிக்கையை காண்க
32.
உன் பள்ளி ஆய்வகத்தில் g' மதிப்பினைக் காண்க.
33.
நியூட்டனின் மூன்று விதிகளின் முக்கியத்துவத்தை விளக்குக.
34.
m நிறை கொண்ட துகளானது v என்ற மாறாத திசை வேகத்துடன் இயங்குகிறது. ஏதேனும் ஒரு புள்ளியைப் பொருத்து இயக்கம் முழுவதிலும் இதன் கோண உந்தம் மாறாதது எனக் காட்டுக.
35.
சீரமைவு இயக்கத்திற்கு எடுத்துக்காட்டுகள் தருக:
36.
100 kg நிறை உள்ள பொருள் 50 cm s-2 முடுக்கத்தில் இயங்குகிறதெனில், அப்பொருளின் மீது செயல்படும் விசையின் மதிப்பைக் காண்க.
37.
இயற்பியலில் கால அளவு மற்றும் நிறைகளின் வீச்சு பற்றி கூறு.
38.
வெப்ப விரிவு என்றால் என்ன?
39.
மனிதன் ஒருவன் ஒரு மலை உச்சியிலிருந்து குறிப்பிட்ட தொலைவில் நின்று கொண்டு கைதட்டுகிறான். 4s கழித்து மலை உச்சியிலிருந்து அந்த கைத்தட்டலின் எதிரொலியை கேட்கிறான். ஒலியின் சராசரி திசைவேகம் 343 ms-1 எனில் மனிதனிடமிருந்து மலை உச்சியின் தொலைவை காண்க.
40.
சூரியனை புவி சுற்றும் வேகம் 30 kms-1 எனில் புவியின் இயக்க ஆற்றலைக் கணக்கிடுக. முந்தய கணக்கில் புவியின் ஈர்ப்பு நிலை ஆற்றலை கணக்கிட்டாய். அதன்படி புவியின் மொத்த ஆற்றல் நேர்க்குறி தன்மையுடையதா? இல்லை எனில் காரணம் கூறு.
41.
சைக்கிள் சக்கரத்தின் குறுக்கே கம்பிகள் மெல்லிய உலோகக் கம்பிகள் இணைக்கப்பட்டிருப்பதன் காரணம்
42.
உடனடித் திறன் வரையறு.
43.
ஒரு முழுசுற்றினை நிறைவு செய்ய புவி எடுத்துக்கொள்ளும் நேரம் 24 மணிநேரமாகும். இந்நிலையில் புவி ஒரு மணி நேரத்தில் அடைந்த கோண இடப்பெயர்ச்சியைக் கணக்கிடு. விடையை ரேடியன் மற்றும் டிகிரி இரண்டிலும் தருக.
1.
(b)
மூன்று
2.
(d)
மெய்வாயுக்களின் ஒரு கலவையின் மொத்த அழுத்தம் பகுதி அழுத்தத்தின் கூடுதல்
3.
(a)
நேர்குரியாக எதிர்குரியாக அல்லது சுழியாக
4.
(b)
திண்ம உருளை
5.
(a)
[3μ1 + 7(μ2+μ3)]NA
6.
(a)
அக ஆற்றல் குறையும்
7.
(c)
6/5
8.
(b)
150Hz,450Hz
9.
(c)
ஆற்றல் 3VT \(\left( \frac { 1 }{ r } -\frac { 1 }{ R } \right) \)வெளிப்பட்டது
10.
(c)
3h/4
11.
கடக்கும் தொலைவு \(s=\frac{1}{2} g t^2 ; s \alpha t^2\)
கடக்கும் தொலைவுகளின் விகிதம் 1: 4: 9:......
12.
(a)
ஆற்றல் மாற்றா விசைக்கெதிராக அமைப்பினால் வேலை செய்யப்படுகிறது
13.
(c)
2: 1
14.
ஆரத்தின் பிழை = 2 %
\(\Delta r=\frac{2}{100}=0.02\)
கோளத்தின் பருமன்
\(\mathrm{V} =\frac{4}{3} \pi r^3 \)
\(\frac{d V}{V} =\frac{4}{3} \pi \times 3 r^2 d r \)
\(=3 d r=3 \times(2 \%) \)
\(\frac{d V}{V} =6 \%\)
15.
(d)
துகளின் மீது செயல்படும் விசை
16.
விண்வெளிக் கலத்தில் எடையின்மை:
(i) புவியை சுற்றிவரும் விண்வெளிக்கலத்தில் உள்ள விண்வெளி வீரர்கள் மீது எவ்வித ஈர்ப்பியல் விசையும் செயல்படாது என்ற ஒரு தவறான கருத்து நிலவுகிறது. உண்மையில் புவியின் பரப்புக்கு அருகே புவியினை வலம் வரும் விண்வெளிகலம் புவியின் ஈர்ப்பு விசைக்கு உட்படும்.
(ii) அதே ஈர்ப்பியல் விசையை விண்வெளி கலத்தில் உள்ள விண்வெளி வீரர்களும் உணர்வார்கள். இதன் காரணமாக அவர்கள் கலத்தின் தரை மீது எவ்வித விசையையும் செலுத்துவது இல்லை. எனவே கலத்தின் தரையும் அவர்கள் மீது எவ்வித செங்குத்து விசையையும் செலுத்துவது இல்லை.
(iii) ஆகவே விண்வெளி கலத்தில் உள்ள வீரர்கள் எடையின்மை நிலையில் உள்ளனர். விண்வெளி வீரர்கள் மட்டுமல்ல. விண்கலத்தில் உள்ள அனைத்து பொருட்களும் எடையின்மை நிலையில் உள்ளன. இதனை தானாக கீழேவிழும் நிலையுடன் ஒப்பிடலாம்.
17.

W = 20 N \(\triangle \)l = 1 x 10-4 m
\(\therefore \) \(Y=\frac { F }{ A } .\frac { l }{ \triangle l } =\frac { w }{ A } .\frac { l }{ \triangle l } \)
= \(\frac { 20 }{ { 10 }^{ -6 } } \times \frac { 1 }{ 1\times { 10 }^{ -4 } } \)
= 2 x 1011Nm-2
18.

1. உயர் வெப்பநிலை வளைகோட்டைக் காண்பதற்கு படத்தில் காட்டியுள்ளவாறு X அச்சுக்கு இணையாக கிடைத்தளக் கோட்டினை வரைய வேண்டும். இது மாறா அழுத்ததிற்கான கோடு ஆகும்.
2.மாறா, அழுத்தக் கோட்டினை வெட்டும் செங்குத்துக் கோடுகளுக்கான பருமங்கள் V1 மற்றும் V2 ஆகியவை, ஒரே அழுத்தத்தில் உள்ள பருமன்களைக் குறிக்கின்றன.

3.மாறா அழுத்தத்தில் அதிக பருமனுள்ள வாயுவில் வெப்பநிலையும் அதிகமாக இருக்கும். படத்திலிருந்து V1 > V2 எனவே, T1>T2 என அறியலாம். பொதுவாக வெப்பநிலை குறைவாக உள்ள வளைகோடுகள் ஆதிப்புள்ளிக்கு அருகே அமையும்.
19.
ஆற்றலானது நிறை மற்றும் ஒளியின் திசைவேகத்தைப் பொறுத்தது எனில்
E \(\alpha \) ma cb
E = kma cb இங்கு k என்பது மாறிலி
ஆற்றலின் பரிமாண வாய்ப்பாடு E = [ML2 T2]
நிறையின் பரிமாண வாய்ப்படு = [M]
திசைவேகத்தின் பரிமாண வாய்ப்பாடு
c = [LT-1]
பரிமாண மதிப்புகளை சமன்பாட்டில் பிரதியிட
[ML2T2] = K [M]a [LT 1]b
அடுக்குகளை இருபுறமும் சமன்செய்ய,
a = 1
b = 2
E = k.mc2
இங்குமாறிலி k = 1
E = mc2
இதுவே நிறை ஆற்றல் சமன்பாடாகும்.
20.
மிக அதிக விசை, மிகக்குறுகிய நேரத்திற்கு ஒரு பொருளின் மீது செயல்பட்டால் அவ்விசையை கணத்தாக்கு விசை அல்லது கணத்தாக்கு என்று அழைக்கலாம்.
F என்ற விசை, மிகக்குறுகிய நேர இடைவெளியில் (Δt) ஒரு பொருளின் மீது செயல்பட்டால் நியூட்டன் இரண்டாம் விதியின் எண் மதிப்பு வடிவில் இந்நிகழ்வினை பின்வருமாறு குறிப்பிடலாம்.
Fdt = dp
தொடக்க நேரம் t1 மற்றும் இறுதி நேரம் tf என்ற கால இடைவெளியில் இச்சமன்பாட்டை தொகையிட
\(\int_i^f d p=\int_{t_i}^{t_f} F d t \)
\(p_f-p_i=\int_{i_i}^{t_t} F d t\)
pi என்ப்து ti என்று நேரத்தில் பொருளின் ஆரம்ப உந்தம்
pf என்பது tf என்ற நேரத்தில் பொருளின் இறுதி உந்தம்
pf - pi = Δp என்பது \(t_f-t_i=\Delta t\) என்ற நேர இடைவெளியில் பொருளில் ஏற்பட உந்த மாற்றமாகும்.
தொகையீடு \(\int_{t_i}^{t_r} F d t=J\) என்பது கணத்தாக்கு எனப்படும். மேலும், இக்கணத்தாக்கு
பொருளின் உந்த மாற்றத்திற்கு சமமாகும்.
கொடுக்கப்பட்ட நேர இடைவெளியில் விசை ஒரு மாறா மதிப்பைப் பெற்றிருப்பின்
\(\int_{t_i}^{t_f} F d t=F \int_{t_i}^{t_f} d t=F\left(t_f-t_i\right)=F \Delta t \)
\(F \Delta t=\Delta p\) ...(1)
சமன்பாடு (1)க்கு "கணத்தாக்கு - உந்தச் சமன்பாடு என்று பெயர்
விசை ஒரு மாறா மதிப்பைப் பெற்றுள்ளபோது, கணத்தாக்கு J = FΔt எனக் குறிப்பிடப்படுகிறது. மேலும், இது Δt என்ற நேர இடைவெளியில் பொருளில் ஏற்படும் உந்த மாற்றத்திற்கு (Δp) சமம் ஆகும். கணத்தாக்கு
ஒரு வெக்டா் அளவாகும். இென் அலகு Ns.
ஒரு சிறிய நேர இடைவெளியில் பொருளின்மீது செயல்படும் சராசரி விசையைப் பின்வருமாறு வரையறை செய்யலாம்.
\(F_{\text {avg }}=\frac{\Delta p}{\Delta t}\) ....(2)
சமன்பாடு (2)லிருந்து, நேர இடைவெளி மிகக்குறுகியதாக இருப்பின், பொருளின் மீது செயல்படும் சராசரி விசை மிக அதிகமாக இருக்கும். பொருளின் உந்தம் எப்பொழுதெல்லாம் மிகவேகமாக மாற்றமடைகிறதோ, அப்பொழுதெல்லாம் சராசரி விசை மிக அதிகமாக இருக்கும்.
21.
தரையைப் பொருத்து நீச்சல் வீரர் மற்றும் ஆற்று நீரோட்டத்தின் திசை வேகங்கள் முறையே vs மற்றும் vr என்க.
vs + vr = 12 ... (1)
மற்றும் vs - vr = 6 ...(2)
இரண்டு சமன்பாடுகளையும் கூட்டும் போது,
2vs = 12 + 6 = 18 km h-1 (அல்லது)
vs = 9 km h-1
சமன்பாடு (1) இல் இருந்து
9 + vr = 12 (அல்லது) vr = 3 km h-1
நீச்சல் வீரர் ஆற்று நீரோட்டம் பாய்ந்து கொண்டிருக்கும் அதே திசையில் நீந்தும் போது அவரின் தொகுபயன் திசைவேகம் 12 km h-1.
22.
சுருள்வில் மாறிலி K = 0.1 N m-1
இடப்பெயர்ச்சி x = 25 cm = 0.25 m
(a) சுருள்வில்லில் சேமிக்கப்பட்ட நிலை ஆற்றல்
\(U=\frac { 1 }{ 2 } { kx }^{ 2 }=\frac { 1 }{ 2 } \times 0.1\times ({ 0.25 })^{ 2 }=0.0031J\)
b) சுருள்வில் விசை \(\vec { F } \) ஆல் செய்யப்பட்ட வேலை Ws மதிப்பு
\(\mathrm{W}_{\mathrm{s}}=\int_{\mathrm{n}}^x \overrightarrow{\mathrm{F}}_{\mathrm{s}} \cdot \mathrm{d} \overrightarrow{\mathrm{r}}=\int_n^x(-\mathrm{k} x \hat{\mathrm{i}}) \cdot(\mathrm{d} x \hat{\mathrm{i}})\)
சுருள்வில்விசை \(\vec { F } _s\) எதிர்க்குறி x அச்சின் திசையில் செயல்படுகிறது. அதேசமயம் நீட்சியானது நேர்க்குறி x அச்சின் திசையில் செயல்படுகிறது
\(\mathrm{W}_{\mathrm{s}}=\int_0^x(-\mathrm{k} x) \mathrm{d} x=-\frac{1}{2} \mathrm{k} x^2 \)
\(\mathrm{~W}_{\mathrm{s}}=-\frac{1}{2} \times 0.1 \times(0.25)^2=-0.0031 \mathrm{~J}\)
வெளிப்புற அமைப்பால் செய்யப்பட்ட வேலையின் மூலம் நிலை ஆற்றலை வரையறுக்கலாம். நிலை ஆற்றலில் உள்ள நேர்க்குறி, ஆற்றலானது அமைப்பிலிருந்து பொருளுக்கு மாற்றப்படுவதைக் குறிக்கிறது. ஆனால் இந்நேர்வில் மீள் விசையால் செய்யப்பட்ட வேலை எதிர்க்குறி மதிப்புடையது. ஏனென்றால் மீள்விசையானது இடப்பெயர்ச்சியின் திசைக்கு எதிர்த்திசையில் செயல்படுகிறது
(c) அமுக்கத்தின் போதும் பொருளில் அதே அளவு நிலை ஆற்றல் சேமிக்கப்படுகிறது.
\(U=\frac { 1 }{ 2 } { kx }^{ 2 }=0.0031J\)
அமுக்கப்படும் போதும் சுருள்வில் மீள் விசையால் செய்யப்பட்ட வேலை
\(W_s=\int_o^x \vec{F}_s \cdot \vec{d} r=\int_o^x(k x \hat{i}) \cdot(-d x \hat{i})\)
அமுக்கப்படும் நேர்வில் சுருள்வில் மீள்விசை நேர்க்குறி x அச்சை நோக்கி செயல்படுகிறது. மற்றும் இடப்பெயர்ச்சியானது எதிர்க்குறி x அச்சின் திசையில் உள்ளது.
\({ W }_{ s }=\int _{ 0 }^{ x }{ (-kx)dx=-\frac { 1 }{ 2 } { kx }^{ 2 }=-0. 0031 J} \)
23.
ஒரு புள்ளி அல்லது அச்சைப் பொருத்து பொருளின் மீது செய்படுத்தப்படும் புறவிசையின் திருப்புத்திறன் திருப்பு விசை என வரையறுக்கப்படுகிறது.
\(\vec{\tau}=\vec{r} \times \vec{F}.\) இதன் அலகு Nm.
24.
P1, P2 என்பன இரு கோள வடிவ சோப்பு குமிழிகளின் உள்ளே அழுத்தங்கள்
\({ P }_{ 1 }-{ P }_{ 2 }=\frac { 4T }{ { r }_{ 1 } } \Rightarrow { P }_{ 1 }=P+\frac { 4T }{ { r }_{ 1 } } \)
இதைப்போலவே
\({ P }_{ 1 }-{ P }=\frac { 4T }{ { r }_{ 2 } } \Rightarrow { P }_{ 2 }=P+\frac { 4T }{ { r }_{ 2 } } \)
குமிழிகள் இணையும் போது
P1V1 + P2V2 = PV
புதிய குமிழியின் உள்ளே அழுத்தம்
\(P=P+\frac { 4T }{ r } \)
P, P1, P2 இல் பிரதியிட
P1V1 + P2V2 = PV
\(\left( P+\frac { 4T }{ { r }_{ 1 } } \right) { V }_{ 1 }+\left( P+\frac { 4T }{ { r }_{ 2 } } \right) { V }_{ 2 }=\left( P+\frac { 4T }{ { r } } \right) V\)
\(\left( P+\frac { 4T }{ { r }_{ 1 } } \right) \frac { 4 }{ 3 } \pi { r }_{ 1 }^{ 3 }+\left( P+\frac { 4T }{ { r }_{ 2 } } \right) \frac { 4 }{ 3 } \pi { r }_{ 2 }^{ 3 }\)
= \(\left( P+\frac { 4T }{ { r } } \right) \frac { 4 }{ 3 } \pi { r }^{ 3 }\)
\(\frac { 4 }{ 3 } \pi P\left( { r }_{ 1 }^{ 3 }+{ r }_{ 1 }^{ 3 }-{ r }^{ 3 } \right) +\frac { 16\pi T }{ 3 } \left( \frac { { r }_{ 1 }^{ 3 } }{ { r }_{ 1 } } +\frac { { r }_{ 2 }^{ 3 } }{ { r }_{ 2 } } -\frac { { r }^{ 3 } }{ { r }_{ 1 } } \right) =0\)
\(\frac { 4 }{ 3 } \pi P\left( { r }_{ 1 }^{ 3 }+{ r }_{ 1 }^{ 3 }-{ r }^{ 3 } \right) +\frac { 16\pi T }{ 3 } \left( { r }_{ 1 }^{ 2 }+{ r }_{ 1 }^{ 2 }-{ r }^{ 2 } \right) =0\)....... (2)
பருமனில் கொடுக்கப்பட்ட மாற்றம்
\(V=\frac { 4 }{ 3 } \pi { r }_{ 1 }^{ 3 }+\frac { 4 }{ 3 } \pi { r }_{ 2 }^{ 3 }-\frac { 4 }{ 3 } \pi { r }^{ 3 }\) ......... (3)
பரப்பில் மாற்றம்
\(V=4\pi { r }_{ 1 }^{ 2 }+{ 4\pi r }_{ 1 }^{ 2 }-4\pi r^{ 2 }\).......(4)
சமன் (3), (4) ஐ சமன் (2)ல் பிரதியிட
\(p\left( \frac { 4 }{ 3 } \pi { r }_{ 1 }^{ 3 }+\frac { 4 }{ 3 } \pi { r }_{ 2 }^{ 3 }-\frac { 4 }{ 3 } { \pi r }^{ 3 } \right) +\frac { 4 }{ 3 } \left( 4\pi { r }_{ 1 }^{ 2 }+4\pi { r }_{ 2 }^{ 2 }-4{ \pi { r } }^{ 2 } \right) =0\)
\(P(V)+\frac { 4T }{ 3 } (A)=0\)
\(PV+\frac { 4T }{ 3 } A=0\)
3PV + 4TA = 0
\(\therefore\)3PV + 4TA = 0
25.
(C + \(\Delta\)C) = (3.0 \(\pm \) 0.1) \(\mu\)F
(V+\(\Delta\)V) = (18 \(\pm \) 0.4) V
Q = CV
Q = 3.0 \(\times\) 10-6 \(\times\) 18 = 54 \(\times\) 10-6 C
C இல் உள்ள சதவீதப் பிழை =\(\frac { \Delta C }{ C } \times 100\)
\(=\frac { 0.1 }{ 3 } \times 100=3.3\)%
V இல் உள்ள சதவீதப் பிழை = \(\frac { \Delta V }{ V } \times 100\)
\(=\frac { 0.4 }{ 18 } \times 100=2.2\)%
Q இல் உள்ள சதவீதப் பிழை = C இல் உள்ள சதவீதப் பிழை + V இல் உள்ள சதவீதப் பிழை
= 3.3% + 2.2% = 5.5%
\(\therefore \) மின்னூட்டம் Q = (54 \(\times\) 10-6 \(\pm \) 5.5%) C
26.
\(\overrightarrow { A } =2\hat { i } -\hat { j } ,\overrightarrow { B } =4\hat { i } -3\hat { j } \)
(i) \(\overrightarrow { A } \)ன் எண் மதிப்பு
\(\overrightarrow { |A| } \sqrt { { (2) }^{ 2 }-{ (1) }^{ 2 } } =\sqrt { 4+1 } =\sqrt { 5 } \)
\(\overrightarrow { A } \)ன் திசை \(tan\theta =\frac { { A }_{ y } }{ { A }_{ x } } =\frac { -1 }{ 2 } \)
\(\theta ={ tan }^{ -1 }\left( \frac { -1 }{ 2 } \right) \)
(ii) \(\overrightarrow { B } \)ன் எண் மதிப்பு \(y=\sqrt { { (4) }^{ 2 }-{ (3) }^{ 2 } } \)
\(=\sqrt { 16+9 } =5\)
\(\overrightarrow { B } \)ன் திசை\(tan\theta =\frac { { B }_{ y } }{ B_{ x } } =\frac { 3 }{ 4 } \)
(iii) \(\overrightarrow { A } \)+\(\overrightarrow {B } \)ன் எண் மதிப்பு
\(\overrightarrow { A } +\overrightarrow { B } =2\hat { i } -\hat { j } +4\hat { i } +3\hat { j } \)
\(\overrightarrow { A } +\overrightarrow { B } =6\hat { i } -2\hat { j } \)
\(\overrightarrow { A } \)+\(\overrightarrow {B } \)ன் எண் மதிப்பு \(\sqrt { { (6) }^{ 2 }-{ (2) }^{ 2 } } =\sqrt { 40 } =6.3\)
\(\overrightarrow { A } \)+\(\overrightarrow {B } \)ன் திசை \(tan\theta =\frac { 2 }{ 6 } =\frac { 1 }{ 3 } \)
\(\theta ={ tan }^{ -1 }\left( \frac { 1 }{ 3 } \right) \)
(iv)\(\overrightarrow { A } \)-\(\overrightarrow {B } \)ன் எண் மதிப்பு
\(\overrightarrow { A } -\overrightarrow { B } =2\hat { i } -\hat { j } -4\hat { i } -3\hat { j } \)
\(\overrightarrow { A } -\overrightarrow { B } =2\hat { i } -4\hat { j } \)
\(\overrightarrow { A } \)-\(\overrightarrow {B } \)ன் எண் மதிப்பு \(\sqrt { { (-2) }^{ 2 }-{ (-4) }^{ 2 } } =\sqrt { 20 } \)
\(\overrightarrow { A } \)-\(\overrightarrow {B } \)ன் எண் மதிப்பு=\(\sqrt {20}\)
\(\overrightarrow { A } \)-\(\overrightarrow {B } \)ன் திசை \(tan\theta =\frac { 2 }{ 6 } =\frac { 1 }{ 3 } \)
திசை \(\theta=\frac {-4}{-2}=2\)
\(\theta ={ tan }^{ -1 }( 2) \)
27.
\(\overrightarrow { { r }_{ 1 } } =(2\hat { i } +\hat { j } -3\hat { k } )\)
\(\overrightarrow { { r }_{ 2 } } =(4\hat { i } +6\hat { j } -7\hat { k } )\)
நிலை வெக்டர்கள் \(\vec { r } =\vec { { r }_{ 2 } } -\vec { { r }_{ 1 } } \)
\(=(4\hat { i } +6\hat { j } -7\hat { k } )-(2\hat { i } +\hat { j } -3\hat { k } )\)
\(=4\hat { i } +6\hat { j } -7\hat { k } -2\hat { i } -\hat { j } +3\hat { k } \)
\(=\hat { i } (4-2)+\hat { j } (6-1)+\hat { k } (-7+3)\)
\(=\hat { i } (2)+\hat { j } (5)+\hat { k } (-4)\)
\(\overrightarrow { r } =\overrightarrow { { r }_{ 2 } } -\overrightarrow { { r }_{ 1 } } =2\hat { i } +5\hat { j } -4\hat { k } \)
W = \(\overrightarrow { F } .\overrightarrow { x } \)
\(=(3\hat { i } +2\hat { j } +4\hat { k } ).(2\hat { i } +5\hat { j } -4\hat { k } )\)
\(=\hat { i } .\hat { j } .\hat { k } (6+10-16)\)
= 1(0)
செய்யப்பட்ட வேலை = 0
28.
வாயு ஒன்றினால் ஏற்படும் அழுத்தத்திற்கான கோவை
l பக்க அளவு கொண்ட கனசதுரக் கொள்கலன் ஒன்றினுள் N எண்ணிக்கையுடைய ஓரணுவாயு மூலக்கூறுகள் உள்ளன. ஒவ்வொரு மூலக்கூறின் நிறையும் m என்க.
1. வாயு மூலக்கூறுகள் ஒழுங்கற்ற இயக்கத்தில் உள்ளதால், அவை ஒன்றுடன் ஒன்று மோதுவது மட்டுமின்றி, அடைத்துவைக்கப்பட்டுள்ள கொள்கலனின் சுவருடன் மோதுகின்றன. இம்மோதல்கள் அனைத்தும் முழுமீட்சியுறும் மோதல்கள்.

2.இவ்வாறு வாயு மூலக்கூறு சுவரின்மீது மோதும்போது, ஒரு உந்தத்தை சுவரின் மீது செலுத்துகிறது. இந்த உந்த மாற்றத்தினால் கொள்கலனின் சுவர் ஓரலகு பரப்பில் உணரும் விசை,சுவரின் மீது வாயுவால் ஏற்படும் அழுத்தத்தை நிர்ணயிக்கிறது. ஒரு சிறிய நேர இடைவெளியில் வாயு மூலக்கூறுகளால் சுவரின் மீது மாற்றம் செய்யப்பட்ட மொத்த உந்தத்தை பின்வருமாறு கணக்கிடலாம்
3.m நிறையும், \(\overline v \) திசைவேகமும் கொண்ட வாயுமூலக்கூறு ஒன்று வலதுபக்கச் சுவரின் மீது மோதுகிறது, அதன் திசைவேகக்கூறுகள் (\({ v }_{ x },{ v }_{ y },{ v }_{ z }\))ஆகும். முழு மீட்ச்சியுறும் மோதல் என நாம் கருதுவதால், வாயு மூலக்கூறுகள் அதே வேகத்துடன் பின்னோக்கி வரும். அதன் x கூறு மட்டும் எதிர்குறி மதிப்பினைப்பெறும் மோதலுக்குப் பின்பு வாயு மூலக்கூறின் திசைவேகக்கூறுகள் (\(-{ v }_{ x },{ v }_{ y },{ v }_{ z }\))ஆகும்.
4. மோதலுக்கு முன்பு வாயு மூலக்கூறின் உந்தத்தின் x கூறு =mvx
மோதலுக்கு பின்பு வாயு மூலக்கூறின் உந்தத்தின் x கூறு =-mvx
x திசையில் வாயுமூலக்கூறின் உந்த மாறுபாடு=இறுதி உந்தம் -ஆரம்ப உந்தம் =-mvx -mvx=2-mvx
உந்தமாறா விதியின்படி, சுவரின் உந்தமாறுபாடு =+2mvx
5. \(\triangle t \) என்ற சிறிய நேர இடைவெளியில் வலதுபக்கச் சுவரின்மீது மோதும் வாயு மூலக்கூறுகளின் எண்ணிக்கை பின்வருமாறு கணக்கிடப்படுகிறது.
6.வலது பக்கச் சுவரிலிருந்து vx\(\triangle t \) தொலைவிலுள்ள வாயு மூலக்கூறுகள், வலது பக்கமாகச் சென்று \(\triangle t \) என்ற நேர இடைவெளியில் சுவரின் மீது மோதும். \(\triangle t \) என்ற நேர இடைவெளியில் வலதுபக்கச் சுவரின் மீது மோதும் வாயு மூலக்கூறுகளின் எண்ணிக்கையானது, பருமன் (AVx \(\triangle t \))மற்றும் மூலக்கூறுகளின் எண்ணடர்த்தி (n) ஆகியவற்றின் பெருக்கல்பலனுக்குச் சமமாகும்.
7.இங்கு A என்பது சுவரின் பரப்பாகும் மற்றும் n என்பது ஓரலகு பருமனிலுள்ள மூலக்கூறுகளின் எண்ணிக்கையாகும் \(\left( \frac { N }{ V } \right) \)கனசதுரக் கொள்கலன் முழுமைக்கும் வாயு மூலக்கூறுகளின் எண்ணடர்த்தி மாறிலியாக உள்ளது எனக் கருதுவோம்.

8.எனவே \(\triangle t \) நேர இடைவெளியில் வலதுபக்கச் சுவரின் மீது மோதும் மூலக்கூறுகளின் எண்ணிக்கை
\(\frac { n }{ 2 } \) AVx \(\triangle t \)....(1)
9.இதே \(\triangle t \) நேர இடைவெளியில் மூலக்கூறுகளால் சுவருக்கு மாற்றம் செய்யப்பட்ட மொத்த உந்தம்
\(\triangle p =({n\over2}AV_x\triangle t )\times 2mv_x=AV_x^2mv\triangle t\)....(2)
நியூட்டனின் இரண்டாம் இயக்க விதியின்படி, ஒரு சிறு நேர இடைவெளியில் உந்தத்தில் ஏற்பட்ட மாற்றம் விசையைக் கொடுக்கும். எனவே மூலக்கூறுகளால், சுவரின்மீது செலுத்தப்பட்ட விசையின் என்மதிப்பு
\(F=\left( \frac { \triangle p }{ \triangle t } \right) =nmA{ v }_{ x }^{ 2 }\)...(3)
இவ்வாறே அழுத்தம்
\(P=\left( \frac { F }{ A } \right) =nm{ v }_{ x }^{ 2 }\)....(4)
10. இங்கு மூலக்கூறுகள் அனைத்தும் ஒழுங்கற்ற இயக்கத்தில் உள்ளதால், அவை அனைத்தும் ஒரே வேகத்தில் இயங்க இயலாது. எனவே சமன்பாடு (4) இல் உள்ள \({ v }_{ x }^{ 2 }\) என்ற பதத்தை சராசரி \(\bar { { v }_{ x }^{ 2 } } \) என மாற்றியமைக்க வேண்டும்.
\(P=nm\bar { { v }_{ x }^{ 2 } } \)...(5)
11.இங்கு வாயு ஒழுங்கற்ற இயக்கத்தில் உள்ளது எனக் கருதுவதால் அதன் இயக்கத்திசையையும் வரையறுக்க இயலாது. மூன்று திசைகளிலும் வாயு மூலக்கூறுகளின் சராசரி வேகம் சமமாகும். எனவே \(\bar { { v }_{ x }^{ 2 } } =\bar { { v }_{ y }^{ 2 } } =\bar { { v }_{ z }^{ 2 } } \) இதுபோன்றே \(\overline {v ^ 2}=\bar { { v }_{ x }^{ 2 } } +\bar { { v }_{ y }^{ 2 } } +\bar { { v }_{ z }^{ 2 } } =3\bar { { v }_{ x }^{ 2 } } \)ஆகும். எனவே வாயு மூலக்கூறுகளின் சராசரி இருமுடி வேகத்தை பின்வருமாறு குறிப்பிடலாம்.
\(\bar { { v }_{ x }^{ 2 } } =\frac { 1 }{ 3 } \bar { { v }_{ 6 }^{ 2 } } \)
சமன்பாடு (5) ஐப் பயன்படுத்தி பின்வரும் சமன்பாட்டைப் பெறலாம்.
\(P=\frac { 1 }{ 3 } nm\bar { { v }^{ 2 } } \)அல்லது \(P=\frac { 1 }{ 3 } \frac { N }{ V } nm\bar { { v }^{ 2 } } \)
ஏனெனில் \(\left[ n=\frac { N }{ V } \right] \)
வாயு மூலக்கூறுகளால் ஏற்படும் அழுத்தம் சார்ந்திருக்கும் காரணிகளை இவற்றிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
29.
(i) வெப்பநிலை மாற்றத்தினால் பொருளக்களின் வடிவம், பரப்பு மற்றும் பருமனில் ஏற்படும் மாற்றமே வெப்ப விரிவு எனப்படும்.
(ii) பொருள்களின் மூன்று நிலைகளும் (திட, திரவ மற்றும் வாயு) வெப்பப்படுத்தும் போது விரிவடையும், திடப்பொருளொன்றை வெப்பப்படுத்தும் போது அதன் அணுக்கள் அவற்றின் சமநிலைப் புள்ளியைப் பொறுத்து வேகமாக அதிர்வடைகின்றன. மற்ற பொருள்களுடன் ஒப்பிடும்போது திடப்பொருள்களின் அளவில் ஏற்படும் மாற்றம் குறைவானதாகும். இரயில் வண்டிகளின் இருப்புபாதைகளில் சில இடங்களில் சிறிய இடைவெளி விடப்பட்டிருக்கும். ஏனெனில் கோடை காலங்களில் இருப்புப்பாதை விரிவடையும் அவ்வாறு வெப்பநிலை மாற்றங்களின்போது எளிதாக விரிவடையும், அவ்வாறு வெப்பநிலை மாற்றங்களின்போது எளிதாக விரிவடையவும், சுருங்கவும் ஏற்ற வகையில் பாலங்களிலும் இருப்புபாதைகளும் விரிவடையும் இணைப்புகள் காணப்படும்.
(iii) திரவங்களின் மூலக்கூறிடை விசை, திடப்பொருள்களின் மூலக்கூறிடை விசையை விடக் குறைவாக இருக்கும். எனவே அவை திடப்பொருள்களைவிட அதிகமாக விரிவடையும், இந்தப் பண்பின் அடிப்படையில் தான் பாதரச வெப்பநிலைமானி செயல்படுகிறது.
(iv) வாயு மூலக்கூறுகளைப் பொறுத்தவரை புறக்கணிக்கும் அளவிலேயே இருக்கும். எனவே அவை திடப்பொருள்களைவிட மிக அதிகமாக விரிவடையும்.
(v) வெப்பநிலை உயர்வால் பொருள்களின் பரிமாணத்தில் ஏற்படும் அதிகரிப்பே வெப்பவிரிவு எனப்படும்
30.
(i) நிறையற்ற விசை மாறிலி அல்லது சுருள்வில் மாறிலி k (spring constant) கொண்ட சுருள்வில்லானது கூரையின் மேற்பகுதியில் இணைக்கப்பட்டுள்ளதாக கருதுவோம். நிறை l இணைக்கப்படுவதற்கு முன்பு சுருள்வில்லின் நீளம் என்க. சுருள்வில்லின் மற்றொரு முனையில் நிறை m இணைக்கப்படும்போது சுருள்வில்லானது l நீளத்திற்கு விரிவடைகிறது. சுருள்வில்லானது l நீளத்திற்கு விரிவடைகிறது. சுருள்வில்லின் நீட்சி காரணமாக ஏற்படும் மீள்விசை F1 என்க. நிறை m-ல் செயல்படும் ஈர்ப்பு விசையானது செங்குத்தாக கீழ்நோக்கி செயல்படும். இந்த அமைப்பிற்கு தனித்த பொருளின் விசைப்படம் வரைய முடியும்.

(ii) அமைப்பானது சமநிலையில் உள்ளபோது
F1+mg=0
ஆனால் சுருள்வில் I இடப்பெயர்ச்சிக்கு நீட்சியடைந்துள்ளது. எனவே
F1 ∝ I ⇒ F1=-k1
-kl+mg=0
mg=kl அல்லது \(\frac { m }{ k } =\frac { l }{ g } \) .....(1)
(iii) மிகச் சிறிய அளவிலான புற விசையை நிறை மீது செலுத்தினால், அந்த நிறை மேலும், கீழ்நோக்கிய திசையில் இடப்பெயர்ச்சி y க்கு நீள்கிறது. பிறகு அது மேலும் (y + l) சுருள்வில்லின் மொத்த நீட்சி காரணமாக ஏற்படும் மீள்விசை.
F2 ∝(y+l)
F2=-k(y+1)=-y-kl ....(2)
\(\frac { { d }^{ 2 }y }{ dt^{ 2 } } \) என்ற முடுக்கத்துடன் இயங்கும் நிறைக்கு தனித்த விசைப்படம் வரைந்தால், நாம் பெறுவது
-ky-kl+mg=m\(\frac { { d }^{ 2 }y }{ dt^{ 2 } } \)
நீட்சி காரணமாக நிறை மீது செயல்படும் மொத்த விசை
F=F2+mg
F=-ky-kl+mg .....(3)
ஈர்ப்பு விசையானது மீள்விசைக்கு எதிராக அமையும். சமன்பாடு (1)ஐ சமன்பாடு (3)ல் பிரதியிட
F=-ky-kl+kl=-ky
நியூட்டனின் இரண்டாம் விதியைப் பயன்படுத்த
m\(\frac { { d }^{ 2 }y }{ dt^{ 2 } } \)=-ky
\(\frac { { d }^{ 2 }y }{ dt^{ 2 } } \)=-\(\frac { k }{ m } \)y
(iv)இச்சமன்பாடு தனிச்சீரிசை இயக்கத்தின் வகைக்கெழு சமன்பாட்டின் வடிவமாகும். எனவே
அலைவுநேரம் T=\(2\pi \sqrt { \frac { m }{ k } } \)s
சமன்பாடு (1)ஐ பயன்படுத்தி, அலைவுநேரத்தை வேறு வடிவில் எழுதினால்
அலைவுநேரம் T=\(2\pi \sqrt { \frac { m }{ k } } =2\pi \sqrt { \frac { l }{ g } } \)
இச்சமன்பாட்டிலிருந்து புவிஈர்ப்பு முடுக்கம் மதிப்பை பெறலாம்.
g=\(4{ \pi }^{ 2 }\left( \frac { l }{ { T }^{ 2 } } \right) \)ms-2.
31.
கொடுக்கப்படடது λ1 = 5m, λ2 = 6m v = 330 ms-1 திசைவேகத்திற்கும் அலைநீளத்திற்கும் இடையேயான தொடர்பு.
v = λf ⇒ f = v/λ
⋋1 அலைநீள ஒலியின் அதிர்வெண்
\(f_1={v\over \lambda_1}={33\over5}=66Hz\)
⋋2 அலைநீள ஒலியின் அதிர்வெண்
\(f_2={v\over \lambda_2}={330\over5}=55Hz\)
ஒரு வினாடியில் விம்மல்கள்
| f1 − f2| = |66 − 55|
=11 விம்மல்கள்/வினாடி (beats/sec)
32.
உன் பள்ளி அமைந்துள்ள ஊர்/நகரத்தின் குறுக்குக் கோட்டு மதிப்பினை கணினியில் கூகுள் தேடுதல் மூலம் காண்க.
உதாரணமாக சென்னைக்கு குறுக்கு கோட்டு மதிப்பு 130 ஆகும்.
g' = g − \(\omega \)2Rcos2\(\lambda \)
இங்கு \(\omega \)2R = (2 × 3.14/86400)2 × (6400 × 103) = 3.4 × 10−2 m/s−2.
\(\lambda \)ன் மதிப்பு ரேடியனில் இருக்க வேண்டும். டிகிரியில் இருக்க கூடாது. 130 என்பது 0.2268 ரேடியனுக்குச் சமம்.
g' = 9 8 − (3 4 × 10−2) × ( cos 0.2268)2
g' = 9.7677 ms-2
33.
நியூட்டன் விதிகள்:
(1) ஒரு பொருளின் மீது வெளிப்புற விசை ஒன்று செயல்படாதவரை, அது தனது ஓய்வு நிலையிலோ அல்லது மாறாத் திசைவேகத்திலுள்ள சீரான இயக்க நிலையிலோ தொடா்ந்து இருக்கும்.
(2) ஒரு பொருளின் மீது செயல்படும் விசையானது அந்தப் பொருளின் உந்த மாறுபாட்டு வீதத்திற்கு சமமாகும்.
(3) எந்தவொரு செயல் விசைக்கும் சமமான எதிர் செயல்விசை உண்டு.
விளக்கம்:
(1) நியூட்டன் விதிகள் வெக்டா் விதிகளாகும். \(\overrightarrow{\mathrm{F}}=\mathrm{ma}\) என்ற சமன்பாட்டை, கார்டீசியன் ஆயக்கூறுகளின் அடிப்படையில் கீழ்க்கண்டவாறு எழுதலாம்.
\(F_x \hat{i}+F_y \hat{j}+F_z \hat{k}=m a_x \hat{i}+m a_y \hat{j}+m a_z \hat{k}\)
இருபுறமும் ஒப்பிட,
\(F_x=m a_x \)
\(F_y=m a_y \)
\(F_z=m a_z\)
இதிலிருந்து நாம் அறிய வேண்டியது என்னவெனில், y திசையில் செயல்படும் வினை, x திசையில் ஏற்படும் முடுக்கத்தை எவ்விதத்திலும் பாதிக்காது. அதே போன்று Fz ஆனது ay மற்றும் ax ஐ எவ்விதத்திலும் பாதிக்காது.
(2) ஒரு குறிப்பிட்ட நேரத்தில் (t), பொருள் அடையும் முடுக்கம், அதே நேரத்தில் அப்பொருளின் மீது செயல்படுமு வினையினை மட்டுமே சார்ந்தது. இதனை இவ்வாறு எழுதலாம்.
\(\overrightarrow{\mathrm{F}}(\mathrm{t})=\mathrm{ma}(\mathrm{t})\)
பொருளின் முடுக்கம். கடந்தகால விசையைச் சார்ந்ததல்ல. எடுக்துக்காட்டாக. பந்து வீச்சாளரால் வீசப்பட்ட பந்து, அவரின் கரத்தை விட்டு விடுபட்ட பின்பு பந்து, புவியீர்ப்பு விசை மற்றும் காற்றின் உராய்வுவிசை இவைகளை மட்டுமே உணரும். பந்தின் முடுக்கம் அது எவ்வளவு வேகத்தில் வீசப்பட்டது என்பகை பொருத்து அமையாது.
(3) பொதுவாக பொருளின் இயக்கம் விசையின் திசையிலிருந்து மாறுபட்டு அமையலாம்.
(a) விசையும் இயக்கமும் ஒரே திசையில் அமைதல்.
(எ.கா.) மரத்திலிருந்து கீழே விழும் பழத்தின் இயக்கம்.
(b) விசையும் இயக்கமும் வெவ்வேறு (செங்குத்து) திசைகளில் அமைதல்.
(எ.கா.) நிலா புவியினை நோக்கி ஒரு விசையை உணா்கிறது. ஆனால் நிலா புவியை ஒரு நீள் வட்டப்பாதையில் சுற்றி வருகிறது.
(c) விசையும் இயக்கமும் எதிரெதிர் திசையில் அமைதல்
(எ.கா.) பொருளை. புவியீர்ப்பு விசைக்கு எதிராக மேல்நோக்கி எறிதல்.
(d) சுழிநிகர விசையுடன் பொருளின் இயக்கம் அமைதல்.
(எ.கா.) மழைத்துளி மாறாத்திசைவேகத்துடன் தரையில் விழுதல்.
(4) ஒரு பொருளின் மீது பல்வேறு விசைகள், \(\vec{F}_1, \vec{F}_2, \vec{F}_3 \ldots \ldots . \vec{F}_n\) செயல்படும் போது, நிகரவிசை \(\left(\vec{F}_{n e t}\right)\), தனித்தனி வெக்டா் கூடுதலுக்குச் சமம்.
\(\vec{F}_{\text {net }}=\vec{F}_1, \vec{F}_2, \vec{F}_{3 \ldots} \vec{F}_n\)
(5) நியூட்டனின் இரண்டாம் விதியை பொருளின் இடப்பெயர்ச்சி வெக்டரின் இரண்டாம்படி வகைக்கெழு வடிவத்திலும் எழுதலாம்.
\(\vec{F}=m \frac{d^2 \vec{r}}{d t^2}\)
இதிலிருந்து நாம் அறிந்துகொள்வது என்னவெனில், எப்பொழுதெல்லாம் இடப்பெயர்ச்சி வெக்டரின் இரண்டாம் வகைக்கெழு சுழியல்லாத மதிப்பினை பெறுகிறதோ அப்பொழுதெல்லாம் பொருளின் மீது விசை செயல்படுகிறது.
(6) பொருளின் மீது எவ்விதமான விசையும் செயல்படாத நிலையில் நியூட்டனின் இரண்டாம் விதி \(m=\frac{d \vec{v}}{d t}=0\).. அதாவது பொருள் மாறாத் தினைவேகத்துடன் இயங்குகிறது என்று நமக்கு உணர்த்துகிறது. நியூட்டனின் இரண்டாம் விதி, முதல் விதியோடு இயல்பாக பொருந்துவதை நாம் உணரலாம். இருப்பினம் அவை இரண்டும் ஒன்றையொன்று சாராத தனித்தனி விதிகளாகும். ஒன்றிலிருந்து மற்றொன்றை தருவிக்க இயலாது.
(7) நியூட்டனின் இரண்டாம் விதி காரணம் மற்றும் விளைவு வகையைச் சார்ந்தது. விசை ஒரு காரணம் எனில் முடுக்கம் அதற்கான விளைவு ஆகும். எனவே விதியின் சரியான வடிவம் \(m \vec{a}=\vec{F}.\)
34.
m நிறை கொண்ட Q துகளானது மாறா திசைவேகம் \(\overset { \rightarrow }{ v } \) யுடன் செல்வதாக கொள்வோம்

மாறா திசைவேகம் என்பதால் துகளின் பாதை நேர்க்கோட்டு பாதையாக அமையும். அதன் உந்தமும் (\((\overset { \rightarrow }{ p } =m\overset { \rightarrow }{ v } )\) அதே பாதையில் நேர்கோட்டில் அமையும். அப்பாதையிலிருந்து செங்குத்து தொலைவில் (d) ஆதிப்புள்ளி O வை எடுத்துக் கொள்வோம். ஒரு குறிப்பிட்ட கணத்தில் Q என்ற புள்ளியில் அமைந்த துகளின் நிலை வெக்டர் \(\vec {O Q} =\vec{ r }\) என்க. ஒரு குறிப்பிட்ட கணத்தில் \(\vec{r}\) க்கும் p க்கும் இடைப்பட்ட கோணம் θ என்க எனவே அக்கணத்தில் கோண உந்தத்தின் எண்மதிப்பு
L = OQ p sinፀ = OQ mv sinፀ = mv(OQsinፀ)
இங்கு (OQsinፀ) என்பது ஆதிப்புள்ளிக்கும் பொருள் செல்லும் திசைக்கும் உள்ள செங்குத்துக் தொலைவு ஆகும். எனவே துகள் Q வின் ஆதியைப்பொறுத்த கோண உந்தம்
L = mvd
மேற்கண்ட கோண உந்தத்தின் சமன்பாடு கோணம் θ வை பெற்றிருப்பதில்லை. நேர்கோட்டு உந்தம் p (p = m v) மற்றும் செங்குத்து தொலைவு d இரண்டும் மாறிலிகள். ஆதலால், துகளின் கோண உந்தமும் மாறாது. எனவே கோண உந்தமானது நேர்கோட்டு இயக்கத்தில் உள்ளபொருட்களோடும் தொடர்புடையது. பொருள் செல்லும் நேர்க்கோட்டு திசை, ஒருவேளை ஆதிப்புள்ளி வழியாகச் சென்றால் கோண உந்தம் சுழியாகவும், அது மாறாததாகவும் இருக்கும்.
35.
சூரியனைச் சுற்றிவரும் கோள்களின் இயக்கம், கடிகாரம் ஒன்றின் முள்ளின் இயக்கம், கைக் கடிகாரத்தில் சமன் செய்யப்பட்ட சக்கரத்தின் இயக்கம், புவியின் மீதிருந்து காணக்கூடிய 76 ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரியனைச் சுற்றிவரும் ஹேலியின் வாள்மீனின் இயக்கம்.
36.
நிறை m = 100 kg
முடுக்கம் a = 50 cm s-1 = 0.5 m s-2
நியூட்டனின் இரண்டாம் விதியைப் பயன்படுத்துக,
F = ma
F = 100 kg \(\times\) 0.5 ms-2 = 50 N
37.
எலக்ட்ரான் மற்றும் புரோட்டான்களை உள்ளடக்கிய மீச்சிறு அளவுகள் முதல் வானியல் நிகழ்வுகள் போன்ற மிகப்பெரிய அளவுகள் வரை இயற்பியல் எடுத்துரைக்கிறது.
(i) கால அளவின் வீச்சு: வானியல் அளவுமுதல் நுண்ணிய அளவு வரை (1018s முதல் 10-22 s)
(ii) நிறைகளின் வீச்சு: மீப்பெரு வான் பொருட்களிலிருந்து எலக்ட்ரான் வரை. 1055 kg [அளவிடக் கூடிய பிரபஞ்சத்தின் நிறை) முதல் எலக்ட்ரானின் நிறை 9.11 x 10-31 kg வரை.
38.
வெப்பநிலை மாற்றத்தினால் பொருள்களின் வடிவம், பரப்பு மற்றும் பருமனில் ஏற்படும் மாற்றமே வெப்ப விரிவு எனப்படும்.
39.
ஒலி எடுததுக் கொள்ளும் நேரம் 2t = 4 ⇒ t = 2 s
தொலைவு d = vt =(343 ms-1)(2 s) = 686 m.
40.
சூரியனை புவி சுற்றும் வேகம்
v = 30 kms-1
=30 \(\times\) 103 ms-1
புவி இயக்க ஆற்றல் \(K.E=\frac { 1 }{ 2 } { mv }^{ 2 }=?\)
புவியின் நிறை =5.9 \(\times\) 1024 kg
K.E = \(\frac { 1 }{ 2 } \times 5.9\times { 10 }^{ 24 }\times 30\times 30\times { 10 }^{ 3 }\times { 10 }^{ 3 }\)
\(=\frac { 1 }{ 2 } \times 5.9\times { 10 }^{ 24 }\times 900\times { 10 }^{ 6 }\)
= 2655 \(\times\)1030 or = 26.55 \(\times\) 1032 J
P.E = -49.84 \(\times\) 1032J [11-ம் கணக்கின் தீர்வு]
\(\therefore\) மொத்த ஆற்றல்
E = P.E. + K.E.
= -49.84 \(\times\) 1032 + 26.55 \(\times\) 1032
= - 23.29 \(\times\) 1032J
மொத்த ஆற்றல் எதிர்க்குறி தண்மையுடையது. ஏனெனில் புவி சூரியனுடன் பிணைக்கப்பட்டுள்ளதை குறிக்கிறது.
41.
குறைந்த நிறையில், சக்கரத்தின் நிலைமத் திருப்புத்திறனை அதிகரிக்க, சக்கரத்தின் குறுக்கே கம்பிகள் மெல்லிய உலோகக் கம்பிகள் இணைக்கப் பட்டுள்ளன.
42.
1. ஒரு கண நேரத்தில் (நேர இடைவெளி சுழியை நெருங்கும்போது) வெளிப்படும் திறன் உடனடித்திறன் (P உடனடி) என வரையறுக்கப்படுகிறது.
2.P(உடனடி)=\(\frac{dw}{dt}\)
43.
24 மணி நேரத்தில் உருவாக்கும் கோணம் = 360o.
∴ கோண இடப்பெயர்ச்சி / மணி \(=\frac{360}{24} \)
=15o (அல்லது) \(=\frac{2 \pi}{24}=\frac{\pi}{12}\)
11th Standard Syllabus & Materials
11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards