12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 29/08/2020
12 ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் முக்கிய 2 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Accountancy Important 2 Mark Book Back Questions (New Syllabus) 2020
12ஆம் வகுப்பு Accountancy / கணக்குப்பதிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Accountancy / கணக்குப்பதிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Accountancy Test

1.
ரோஸி, ரதி மற்றும் இராணி என்ற கூட்டாளிகள் தங்கள் இலாபங்கள் மற்றும் நட்டங்களை சமமாகப் பகிர்ந்து வந்தனர். 1.1.2018 அன்று, ரதி கூட்டாண்மையிலிருந்து விலகினார். அந்நாளைய இருப்புநிலைக்குறிப்பின் சொத்துகள் பக்கம் ரூ.45,000 பகிர்ந்து தரா நட்டங்கள் இருப்பைக் காட்டியது. பகிர்ந்து தரா நட்டத்தை பகிர்ந்தளிப்பதற்கான குறிப்பேட்டுப் பதிவினைத் தரவும்.
2.
செல்வம் மற்றும் செந்தில் இருவரும் 2:3 என்ற விகிதத்தில் இலாபம் பகிரும் கூட்டாளிகள். இதில், சிவா என்பவர் 1/5 பங்கு விகிதத்தில் கூட்டாளியாக சேருகிறார். சிவா, இப்பங்கினை செல்வம் மற்றும் செந்தில் இருவரிடமும் சமமாக பெறுகிறார். புதிய இலாபப் பகிர்வு விகிதம் மற்றும் தியாக விகிதம் கண்டறியவும்.
3.
புதிய கூட்டாளி சேர்க்கையின்போது, பகிர்ந்துதரா இலாபங்கள் மற்றும் நட்டங்கள் எவ்வாறு கூட்டாளிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது?
4.
பின்வரும் விவரங்களிலிருந்து பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு கணக்கு தயாரிக்கவும் மற்றும் கடனாளிகளிடமிருந்து பெற்ற மாற்றுச்சீட்டுத் தொகையினைக் கணக்கிடவும்.
| விவரம் | ரூ. |
|---|---|
| ஆண்டு தொடக்கத்தில் பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு | 1,40,000 |
| ஆண்டு முடிவில் பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு | 2,00,000 |
| பெறுதற்குரிய மாற்றுச்சீட்டுக்காக ரொக்கம் பெற்றது | 3,90,000 |
| பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு மறுக்கப்பட்டது | 30,000 |
5.
ரமேஷ் மற்றும் ராஜு என்ற இரு கூட்டாளிகள் 2:1 என்ற விகிதத்தில் இலாப நட்டத்தைப் பகிர்ந்து வந்தனர். அவர்கள் ரஞ்சன் என்பவரை 1/4 பங்குக்கு கூட்டாளியாகச் சேர்த்தனர். ரஞ்சன் அவரது பங்கை பழைய கூட்டாளிகளிடமிருந்து 3:2 என்ற விகிதத்தில் வாங்கினார். புதிய இலாபப் பகிர்வு விகிதம் மற்றும் தியாக விகிதம் கணக்கிடவும்.
6.
சென்னை டென்னிஸ் மன்றத்தின் விளையாட்டுப் போட்டிநிதி ஏப்ரல் 1, 2018 அன்று ரூ.24,000 வரவிருப்பு காட்டியது. அந்த ஆண்டில் அந்நிதியிலிருந்து பெற்ற வரவுகள் ரூ. 26,000. அந்த ஆண்டில் மேற்கொண்ட விளையாட்டுப்போட்டிச் செலவுகள் 33,000. இவ்விவரங்கள் மன்றத்தின் 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய இறுதிக் கணக்குகளில் எவ்வாறு தோன்றும் எனக் காட்டவும்.
7.
ஏதேனும் ஐந்து கணக்கியல் அறிக்கைகள் கூறுக.
8.
உயர் இலாபம் என்றால் என்ன?
9.
கீழ்வரும் தகவல்களிலிருந்து முதல் உந்து திறன் விகிதத்தைக் கணக்கிடவும்.
| விவரம் | ரூ. |
|---|---|
| I. பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள் | |
| 1. பங்குதாரர் நிதி | |
| (அ) பங்குமுதல் | |
| நேர்மைப் பங்குமுதல் | 2,00,000 |
| 6% முன்னுரிமைப் பங்குமுதல் | 1,00,000 |
| (ஆ) காப்புகள் மற்றும் மிகுதி | |
| பொதுக் காப்பு | 1,25,000 |
| மிகுதி | 75,000 |
| 2. நீண்டகாலப் பொறுப்புகள் | |
| நீண்டகாலக் கடன்கள் (8% கடனீட்டுப் பத்திரங்கள்) | 2,00,000 |
| 3. நடப்புப் பொறுப்புகள் | |
| கணக்குகள் மூலம் செலுத்த வேண்யவை | 1,50,000 |
| வரி ஒதுக்கு | 50,000 |
| மொத்தம் | 9,00,000 |
10.
நிலைமுதல் முறை என்றால் என்ன?
11.
இராஜா, ரோஜா மற்றும் பூஜா எனும் கூட்டாளிகள் 4:5:3 எனும் விகிதத்தில் இலாபம் பகிர்ந்து வந்தனர். நிறுவனத்திலிருந்து ரோஜா என்பவர் விலகினார். புதிய இலாப விகிதத்தையும் மற்றும் ஆதாய விகிதத்தையும் கணக்கிடவும்.
12.
ஜெயம் டயர்ஸ் நிறுமம் 15,000 சாதாரணப்பங்குகளை ரூ. 10 வீதம் பின்வருமாறு செலுத்தும்படி வெளியிட்டது. விண்ணப்பத்தின் மீது ரூ.3 ஒதுக்கீட்டின் மீது ரூ.5 முதலாம் மற்றும் இறுதி அழைப்பின் மீது ரூ.2. அனைத்து தொகையும் பெறப்பட்டது. ஆனால் 100 பங்குகளை வைத்திருக்கும் ஒரு பங்குதாரர் அழைப்பு பணத்தை செலுத்தத் தவறினார். அழைப்பு நிலுவைக் கணக்கைப் பயன்படுத்தி அழைப்பிற்கான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.
13.
பின்வரும் விவரங்களிலிருந்து, பெறுதற்குரிய மாற்றுச்சீட்டுக் கணக்கினைத் தயாரித்து கடனாளிகளிடமிருந்து பெற்ற மாற்றுச்சீட்டினைக் கணக்கிடவும்.
| விவரம் | ரூ. |
|---|---|
| தொடக்க பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு | 20,000 |
| இறுதி பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு | 30,000 |
| மாற்றுச்சீட்டிற்கான ரொக்கம் பெற்றது | 60,000 |
| பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு மறுக்கப்பட்டது | 5,000 |
14.
சந்திரா நிறுமத்தின் பின்வரும் இருப்புநிலைக்குறிப்பிலிருந்து 2016 மார்ச் 31 மற்றும் 2017 மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய ஒப்பீட்டு இருப்புநிலைக்குறிப்பினைத் தயார் செய்யவும்.
| விவரம் | 2016, மார்ச் 31 | 2017, மார்ச் 31 |
|---|---|---|
| ரூ. | ரூ. | |
| I.பங்குமூலதனம் மற்றும்பொறுப்புகள் | ||
| பங்குதாரர் நிதி | 1,00,000 | 2,60,000 |
| நீண்ட காலப் பொறுப்புகள் | 50,000 | 60,000 |
| நடப்புப் பொறுப்புகள் | 25,000 | 30,000 |
| மொத்தம் | 1,75,000 | 3,50,000 |
| II. சொத்துகள் | ||
| நிலைச் சொத்துகள் | 1,00,000 | 2,00,000 |
| நடப்புச் சொத்துகள் | 75,000 | 1,50,000 |
| மொத்தம் | 1,75,000 | 3,50,000 |
15.
பாரத் நிறுமம் ரூ.10 மதிப்புள்ள 1,00,000 பங்குகளை முகமதிப்பில் பொதுமக்களுக்கு வெளியிட்டது. பங்குகள் மீதான பணம் செலுத்த வேண்டிய விவரங்கள் பின்வருமாறு:
| விண்ணப்பத்தின் போது பங்கொன்றிற்கு | ரூ.5 |
| ஒதுக்கீட்டின் போது பங்கொன்றிற்கு | ரூ.3 |
| முதல் மற்றும் இறுதி அழைப்பின் போது பங்கொன்றிற்கு | ரூ.2 |
1,20,000 பங்குகளுக்கு விண்ணப்பத் தொகை பெறப்பட்டது. கூடுதல் விண்ணப்பத் தொகை உடனடியாக திருப்பிச் செலுத்தப்பட்டது. மேற்கண்டவற்றை பதிவு செய்ய குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்
16.
பின்வரும் தகவல்களிலிருந்து புற அக பொறுப்புகள் விகிதம் கணக்கிடவும்:
| விவரம் | ரூ. |
|---|---|
| I. பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள் | |
| 1. பங்குதாரர் நிதி | |
| (அ) பங்கு முதல் | |
| நேர்மைப் பங்குமுதல் | 1,00,000 |
| (ஆ) காப்புகள் மற்றும் மிகுதி | 60,000 |
| 2. நீண்டகாலப் பொறுப்புகள் | |
| நீண்ட காலக் கடன்கள் (கடனீட்டுப் பத்திரங்கள்) | 80,000 |
| 3. நடப்புப் பொறுப்புகள் | |
| (அ) கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள் | 50,000 |
| (ஆ) இதர நடப்புப் பொறுப்புகள் கொடுபடவேண்டிய செலவுகள் | 30,000 |
| மொத்தம் | 3,20,000 |
17.
பின்வரும் விவரங்களிலிருந்து 2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வருவாய் மற்றும் செலவினக் கணக்கில் சந்தா எவ்வாறு தோன்றும் என்பதைக் காட்டவும்.
2018-ல் பெற்ற சந்தா ரூ16,000-ல் 2017 ஆம் ஆண்டுக்கான ரூ.3,000 மற்றும் 2019 ஆம் ஆண்டிற்கான ரூ.5,000 அடங்கியுள்ளது. 2018 ஆம் ஆண்டில் பெறவேண்டிய சந்தா ரூ. 4,000. 2017 ஆம் ஆண்டில் 2018 ஆம் ஆண்டிற்கான சந்தா முன்கூட்டிப் பெற்றது ரூ.2,000.
1.
| நாள் | விவரம் | பே.ப. எண் |
பற்று ரூ. |
வரவு ரூ. |
|
|---|---|---|---|---|---|
| 2018 | |||||
| ஜனவரி 1 | ரோஸி முதல் க/கு | ப | 15,000 | ||
| ரதி முதல் க/கு | ப | 15,000 | |||
| இராணி முதல் க/கு | ப | 15,000 | |||
| இலாப நட்ட க/கு | 45,000 | ||||
| (பகிர்ந்து தரா நட்டம் அனைத்து கூட்டாளிகளின் முதல் கணக்கிற்கு பழைய இலாப விகிதத்தில் மாற்றப்பட்டது) |
2.
தியாக விகிதம் மற்றும் புதிய இலாபப் பகிர்வு விகிதம் கணக்கிடுதல்:
சிவாவின் பங்கு = \(\frac { 1 }{ 5 } \)
தியாகப்பங்கின் விகிதம் = 1 : 1 (சமமாக) அதாவது, \(\frac { 1 }{ 2 } :\frac { 1 }{ 2 } \)
தியாகப்பங்கு = புதிய கூட்டாளியின் பங்கு x தியாகப் பங்கின் விகிதம்
செல்வம் = \(\frac { 1 }{ 5 } \times \frac { 1 }{ 2 } =\frac { 1 }{ 10 } \)
செந்தில் = \(\frac { 1 }{ 5 } \times \frac { 1 }{ 2 } =\frac { 1 }{ 10 } \)
செல்வம் மற்றும் செந்திலின் தியாக பங்கு = \(\frac { 1 }{ 10 } :\frac { 1 }{ 10 } \) அதாவது, 1 : 1
பழைய கூட்டாளியின் புதிய பங்கு = பழைய பங்கு - தியாகப் பங்கு
செல்வம் = \(\frac { 2 }{ 5 } -\frac { 1 }{ 10 } =\frac { 4-1 }{ 10 } =\frac { 3 }{ 10 } \)
செந்தில் = \(\frac { 3 }{ 5 } -\frac { 1 }{ 10 } =\frac { 6-1 }{ 10 } =\frac { 5 }{ 10 } \)
புதிய கூட்டாளியின் பங்கு
சிவா = \(\frac { 1 }{ 5 } \)
சிவாவின் பங்கிற்குரிய பகுதியை சமன் செய்யும் பொருட்டு, 2 ஆல் பெருக்கி மற்றும் வகுக்க வேண்டும்.
= \(\frac { 1 }{ 5 } \times \frac { 2 }{ 2 } =\frac { 2 }{ 10 } \)
எனவே, புதிய இலாபப் பகிர்வு விகிதம் = \(\frac { 3 }{ 10 } :\frac { 5 }{ 10 } :\frac { 2 }{ 10 } \) அதாவது 3 : 5 : 2
3.
(i) கடந்த ஆண்டுகளின் இலாபங்கள் மற்றும் நட்டங்கள் கூட்டாளிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படாமல் இருந்தால் அது பகிர்ந்துதர இலாபம் எனப்படும்
(ii) அவ்வாறான பகிர்ந்து தரா காப்புகள், இலாபங்கள் அல்லது நட்டங்கள் பழைய கூட்டாளிகளுக்கு உரியன. எனவே, அவை பழைய கூட்டாளிகளுக்கு பழைய இலாப விகிதத்தில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.
4.
| விவரம் | ரூ. | விவரம் | ரூ. |
| இருப்பு கீ/கொ | 1,40,000 | ரொக்கக் க/கு | 3,90,000 |
| கடனாளிகள் க/கு | 4,80,000 | கடனாளிகள் க/கு | 30,000 |
| (அவ்வாண்டில் மாற்றுச்சீட்டு பெற்றது-இருப்புக்கட்டும் தொகை) | (பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு மறுக்கப்பட்டது) | ||
| இருப்பு கீ/இ | 2,00,000 | ||
| 6,20,000 | 6,20,000 |
5.
தியாக விகிதம் மற்றும் புதிய இலாபப் பகிர்வு விகிதம் கணக்கிடுதல்
ரஞ்சன் பங்கு =\(\frac { 1 }{ 4 } \)
பழைய விகிதம் =2:1 அதாவது, \(\frac { 2 }{ 3 } :\frac { 1 }{ 3 } \)
தியாகப் பங்கின் விகிதம் = 3:2 அதாவது, \(\frac { 3 }{ 5 } :\frac { 2 }{ 5 } \)
தியாகப் பங்கு = புதிய கூட்டாளியின் பங்கு x தியாகப் பங்கின் விகிதம்
ரமேஷ் =\(\frac { 1 }{ 4 } \times \frac { 3 }{ 5 } =\frac { 3 }{ 20 } \)
ராஜு =\(\frac { 1 }{ 4 } \times \frac { 2 }{ 5 } =\frac { 2 }{ 20 } \)
ரமேஷ் மற்றும் ராஜு வின் தியாகப் பங்கு \(\frac { 3 }{ 20 } \) மற்றும் \(\frac { 2 }{ 20 } \) அதாவது 3:2
பழைய கூட்டாளியின் புதிய பங்கு = பழைய பங்கு – தியாகப் பங்கு
ரமேஷ் =\(\frac { 2 }{ 3 } -\frac { 3 }{ 20 } =\frac { 40-9 }{ 60 } =\frac { 31 }{ 60 } \)
ராஜு =\(\frac { 1 }{ 3 } -\frac { 2 }{ 20 } =\frac { 20-6 }{ 60 } =\frac { 14 }{ 60 } \)
புதிய கூட்டாளியின் பங்கு ரஞ்சன் =\(\frac { 1 }{ 4 } \)
ரஞ்சனின் பங்கிற்குரிய பகுதியை சமன் செய்யும் பொருட்டு, 15 ஆல் பெருக்கி மற்றும் வகுக்க வேண்டும்.
\(= \frac { 1 }{ 4 } \times \frac { 15 }{15 } =\frac { 15 }{ 60 } \)
எனவே , புதிய இலாபப் பகிர்வு விகிதம்
\(= \frac { 31 }{ 60 } : \frac { 14 }{ 60 } : \frac { 15 }{ 60 } \) = 31:14:15
6.
| பொறுப்புகள் | ரூ. | ரூ. | சொத்துகள் | ரூ. |
|---|---|---|---|---|
| விளையாட்டுப் போட்டி நிதி | 24,000 | |||
| கூட்டுக: நிதியிலிருந்து பெற்ற வரவுகள் | 26,000 | |||
| 50,000 | ||||
| கழிக்க:விளையாட்டுப் போட்டி செலவுகள் | 33,000 | 17,000 |
7.
(i) நாளோடு/குறிப்பேடு
(ii) பேரேடு
(iii) இருப்பாய்வு
(iv) இலாப அறிக்கை
(v) இருப்பு நிலைக்குறிப்பு
8.
ஒரு வியாபாரத்தின் உயர் இலாபம் என்பது சாதாரண இலாபத்தை விட கூடுதலாக உள்ள சராசரி இலாபம் ஆகும்.
உள்ள இலாபம் = சராசரி இலாபம் - சாதாரண இலாபம்
9.
முதல் உந்துதிறன் விகிதம் =
= \(\frac {3,00,000}{4,00,000}\) = 0.75:1
நிலையான வட்டி மற்றும் நிலையான பங்காதாயம் ஈட்டுகின்ற நிதிகள் = 6% முன்னுரிமைப் பங்குமுதல் + 8% கடனீட்டுப் பத்திரங்கள்
= 1,00,000 + 2,00,000 = ரூ.3,00,000
நேர்மைப் பங்குதாரர் நிதி = = நேர்மைப் பங்குமுதல் + பொதுக் காப்பு + மிகுதி
= 2,00,000 + 1,25,000 + 75,000 = ரூ.4,00,000
10.
(i) நிலைமுதல் முறையில் கூட்டாளிகளின் முதல் மாறாமல் இருக்கும் மற்றும் பொதுவாக அதே தொகையாக நிலையானதாக இருக்கும்
(ii) ஒவ்வொரு கூட்டாளிக்கும் இரண்டு கணக்குகள் பராமரிக்கப்படவேண்டும் அதாவது (அ) முதல் கணக்கு மற்றும் (ஆ) நடப்புக் கணக்கு.
(iii) தொடக்க முதல் கொண்டு வந்தது, கூடுதல் முதல் கொண்டு வந்தது மற்றும் முதல் நிரந்தரமாக திரும்ப எடுத்தது போன்றவை தொடர்பான நடவடிக்கைகள் முதல் கணக்கில் பதிவு செய்யப்படுகின்றன மற்ற அனைத்து நடவடிக்கைகளும் நடப்புக் கணக்கில் பதிவு செய்யப்படுகின்றன.
11.
புதிய இலாப விகிதம், ஆதாயப்பங்கு மற்றும் ஆதாயப்பங்கு விகிதாச்சாரம் ஆகியவை கொடுக்கப்படாததால், புதிய பங்கினைக் கணக்கிடுவதற்கு அவர்களுடைய ஆதாயப் பங்கை பழைய பங்கின் விகிதாச்சாரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். எனவே, தொடரும் கூட்டாளிகளான இராஜா மற்றும் பூஜா ஆகியோரின் பழைய இலாபப் பகிர்வு விகிதம், புதிய இலாபப்பகிர்வு விகிதமாகவும் மற்றும் ஆதாய விகிதமாகவும் இருக்கும். அதாவது, 4:3.
12.
| நாள் | விவரம் | பே. ப.எ |
பற்று ரூ. |
வரவு ரூ. |
|
|---|---|---|---|---|---|
| நேர்மைப் பங்கு முதல் மற்றும் இறுதி அழைப்பு க/கு (15,000 × 2) | ப | 30,000 | |||
| பங்குமுதல் க/கு | 30,000 | ||||
| (பங்கு முதல் மற்றும் இறுதி அழைப்புத் தொகை பெற வேண்டியது) | |||||
| வங்கி க/கு (14,900 × 2) | ப | 29,800 | |||
| அழைப்பு நிலுவை க/கு (100 × 2) | ப | 200 | |||
| நேர்மைப் பங்கு முதல் மற்றும் இறுதி அழைப்பு க/கு | 30,000 | ||||
| (அழைப்பு பணம் பெறப்பட்டது, பெறப்படாத தொகை அழைப்பு நிலுவைக் கணக்கில் எடுத்துச் செல்லப்பட்டது) |
13.
| விவரம் | ரூ. | விவரம் | ரூ. |
|---|---|---|---|
| இருப்பு கீ/கொ | 20,000 | ரொக்கக் க/கு | 60,000 |
| கடனாளிகள் க/கு (அவ்வாண்டில் பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு பெற்றது - இருப்புக் கட்டும் தொகை) | 75,000 | கடனாளிகள் க/கு (பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு மறுக்கப்பட்டது) | 5,000 |
| இருப்பு கீ/இ | 30,000 | ||
| 95,000 | 95,000 |
14.
| விவரம் | 2015-16 | 2016-17 | தொகையின் கூடுதல் (+) அல்லது குறைவு (-) |
சதவீதத்தின் கூடுதல் (+) அல்லது குறைவு (-) |
|---|---|---|---|---|
| ரூ. | ரூ. | ரூ. | ||
| I. பங்குமூலதனம் மற்றும் பொறுப்புகள் | ||||
| பங்குதாரர் நிதி | 1,00,000 | 2,60,000 | +1,60,000 | +160 |
| நீண்ட காலப் பொறுப்புகள் | 50,000 | 60,000 | +10,000 | +20 |
| நடப்புப் பொறுப்புகள் | 25,000 | 30,000 | +5,000 | +20 |
| மொத்தம் | 1,75,000 | 3,50,000 | +1,75,000 | +100 |
| II. சொத்துகள் | ||||
| நிலைச் சொத்துகள் | 1,00,000 | 2,00,000 | +1,00,000 | +100 |
| நடப்புச் சொத்துகள் | 75,000 | 1,50,000 | +75,000 | +100 |
| மொத்தம் | 1,75,000 | 3,50,000 | +1,75,000 | +100 |
15.
| நாள் | விவரம் | பே. ப.எ |
பற்று ரூ. |
வரவு ரூ. |
|
|---|---|---|---|---|---|
| வங்கி க/கு (1,20,000 × 5) | ப | 6,00,000 | |||
| நேர்மைப் பங்கு விண்ணப்பக் க/கு | 6,00,000 | ||||
| (விண்ணப்பத் தொகை பெற்றது) | |||||
| நேர்மைப் பங்கு விண்ணப்பக் க/கு (1,00,000 × 5) | ப | 5,00,000 | |||
| நேர்மைப் பங்குமுதல் க/கு | 5,00,000 | ||||
| (நேர்மைப் பங்கு விண்ணப்பத் தொகையை பங்கு முதலுக்கு மாற்றியது) | |||||
| நேர்மைப் பங்கு விண்ணப்பக் க/கு (20,000 × 5) | ப | 1,00,000 | |||
| வங்கி க/கு | 1,00,000 | ||||
| (மிகுதியான பங்கு விண்ணப்பத்தொகை திருப்பிச் செலுத்தியது) | |||||
| நேர்மைப் பங்கு ஒதுக்கீட்டு க/கு | ப | 3,00,000 | |||
| நேர்மைப் பங்கு முதல் க/கு | 3,00,000 | ||||
| (ஒதுக்கீட்டுத் தொகை பெற வேண்டியது) | |||||
| வங்கி க/கு | ப | 3,00,000 | |||
| நேர்மைப் பங்கு ஒதுக்கீட்டு க/கு | 3,00,000 | ||||
| (ஒதுக்கீட்டுத் தொகை பெற்றது) | |||||
| நேர்மைப் பங்கு முதல் மற்றும் இறுதி அழைப்பு க/கு | ப | 2,00,000 | |||
| நேர்மைப் பங்கு முதல் க/கு | 2,00,000 | ||||
| (பங்கு முதல் மற்றும் இறுதி அழைப்பு தொகை பெற வேண்டியது) | |||||
| வங்கி க/கு | ப | 2,00,000 | |||
| நேர்மைப் பங்கு முதல் மற்றும் இறுதி அழைப்பு க/கு | 2,00,000 | ||||
| (பங்கு முதல் மற்றும் இறுதி அழைப்புத் தொகை பெற்றது) |
16.
புற அக பொறுப்புகள் விகிதம் = =\(\frac {80,000}{1,60,000}\) = 0.5:1
நீண்டகாலக் கடன் = கடனீட்டுப் பத்திரங்கள் = ரூ.80,000
பங்குதாரர் நிதி = நேர்மைப் பங்குமுதல் + காப்புகள் மற்றும் மிகுதி
= 1,00,000 + 60,000 = ரூ.1,60,000
17.
| செலவுகள் | ரூ | வருமானம் | ரூ | ரூ |
|---|---|---|---|---|
| நடப்பாண்டில் பெற்ற சந்தா | 16,000 | |||
| கழிக்க: 2017 ஆம் ஆண்டுக்கான சந்தா பெற்றது | 3,000 | |||
| 13,000 | ||||
| கழிக்க: 2019 ஆம் ஆண்டுக்கான சந்தா பெற்றது | 5,000 | |||
| 8,000 | ||||
| கூட்டுக: 2018 ஆம் ஆண்டு பெற வேண்டிய சந்தா | 4,000 | |||
| 12,000 | ||||
| கூட்டுக: 2018 ஆம் ஆண்டிற்கான சந்தா 2017-ஆம் ஆண்டில் முன்கூட்டிப் பெற்றது | 2,000 | 14,000 | ||
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards