12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 29/08/2020
12 ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் பயிற்சி 2 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Accountancy Practise 2 Mark Creative Questions (New Syllabus) 2020
12ஆம் வகுப்பு Accountancy / கணக்குப்பதிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Accountancy / கணக்குப்பதிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Accountancy Test

1.
கிடைமட்ட பகுப்பாய்வு என்றால் என்ன?
2.
ஆண்டுத்தொகை என்றால் என்ன?
3.
பொது வெளியீடு என்றால் என்ன?
4.
மதிப்பூதியம் என்றால் என்ன?
5.
நடப்பு விகிதம் என்றால் என்ன?
6.
டேலியின் நுழைவாயில் என்றால் என்ன?
7.
வட்டிக்குரிய காலம் என்றால் என்ன?
8.
ஆதாய விகிதம் கணக்கிடுவதன் நோக்கம் என்ன?
9.
விமலா மற்றும் கமலா இருவரும் கூட்டாளிகள். 4:3 என்ற விகிதத்தில் இலாபம் மற்றும் நட்டங்களைப் பகிர்ந்து வந்தனர். வினிதா என்பவர் விமலாவிடம் 1/14 பங்கும் மற்றும் கமலாவிடமிருந்து 1/14 பங்கும் பெற்று கூட்டாண்மையில் சேருகிறார். அவர்களின் புதிய இலாபப் பகிர்வு விகிதம் மற்றும் தியாக விகிதம் கணக்கிடவும்.
10.
பின்வரும் விவரங்களிலிருந்து கடன் கொள்முதலை கணக்கிடவும்.
| விவரம் | ரூ. |
|---|---|
| தொடக்க கடனீந்தோர் | 1,70,000 |
| கொள்முதல் திருப்பம் | 20,000 |
| கடனீந்தோருக்குச் செலுத்தியது | 4,50,000 |
| இறுதிக் கடனீந்தோர் | 1,90,000 |
11.
அசோக் மற்றும் மும்தாஜ் இருவரும் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளிகள். அவர்கள் 5:1 என்ற விகிதத்தில் இலாபம் மற்றும் நட்டங்களைப் பகிர்ந்து வருகின்றனர். அவர்கள் தருண் என்பவரை 2/9 இலாப விகிதத்தில் நிறுவனத்தில் சேர்க்க முடிவு செய்கின்றனர். சேர்க்கையின் போது நிறுவனத்தின் நற்பெயர் மதிப்பு ரூ.27,000 என்று மதிப்பிடப்படுகிறது. தருணால் தன்னுடைய பங்கிற்கான நற்பெயர் மதிப்பிற்கான தொகையைக் கொண்டுவர முடியவில்லை. நிறுவனம் மாறுபடும் முதல் முறையில் கணக்கினைப் பராமரிக்கிறதெனக் கொண்டு தேவையான குறிப்பேட்டுப் பதிவினைத் தரவும்.
12.
ரவி மற்றும் குமார் என்ற இரு கூட்டாளிகள் 7:3 என்ற விகிதத்தில் இலாப நட்டத்தைப் பகிர்ந்து வந்தனர். அவர்கள் கிறிஸ்டி என்பவரை \(\frac { 3 }{ 7 } \) பங்கிற்கு கூட்டாளியாகச் சேர்த்தனர். கிறிஸ்டி ரவியிடமிருந்து \(\frac { 2 }{ 7 } \) பங்கும், குமாரிடமிருந்து \(\frac { 1 }{ 7 } \) பங்கும் பெறுகிறார். புதிய இலாபப் பகிர்வு விகிதம் மற்றும் தியாக விகிதம் கணக்கிடவும்.
13.
புற அக பொறுப்பு விகிதம் என்றால் என்ன?
14.
Tally.ERP 9-ல் குழு என்றால் என்ன?
15.
இலாப நோக்கற்ற அமைப்பின் முதலின வரவுகளில் ஏதேனும் நான்கினைத் தரவும்.
16.
உயர் இலாபம் என்றால் என்ன?
17.
கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆனந்த் கட்டுமான நிறுமத்தின் தகவல்களிலிருந்து, விரைவு விகிதத்தைக் கணக்கிடவும்.
| விவரம் | ரூ |
|---|---|
| மொத்த நடப்புப் பொறுப்புகள் | 1,00,000 |
| மொத்த நடப்புச் சொத்துகள் | 2,50,000 |
| சரக்கிருப்பு | 50,000 |
| முன்கூட்டிச் செலுத்திய செலவுகள் | 15,000 |
18.
இலாபநட்டப் பகிர்வு கணக்கு ஏன் தயாரிக்கப்பட வேண்டும்?
19.
பத்திர முனைமக் கணக்கு பற்றி சிறுகுறிப்பு வரையவும்
20.
பின்வரும் விவரங்கள் ஒரு சங்கத்தின் 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய இறுதிக் கணக்குகளில் எவ்வாறு தோன்றும்?
| பெறுதல்கள் | ரூ | ரூ | செலுத்தல்கள் | ரூ |
|---|---|---|---|---|
| சந்தா | ||||
| 2017-2018 | 5,000 | |||
| 2018-2019 | 48,000 | |||
| 2019-2020 | 3,000 | 56,000 | ||
இச்சங்கத்தில் 300 உறுப்பினர்கள் உள்ளனர். ஒவ்வொருவரும் ஆண்டுச் சந்தாவாக ரூ. 200 செலுத்துகின்றனர். இன்னும் பெறவேண்டிய 2017-18 ஆம் ஆண்டுக்கான சந்தா ரூ.1,000.
21.
அந்தோணி மற்றும் அக்பர் என்ற இரு கூட்டாளிகள் தங்கள் இலாபம் மற்றும் நட்டங்களை 3:2 என்ற விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். 2018, ஜனவரி 1 அன்று அவர்களின் முதல் கணக்குகளின் இருப்புகள் அந்தோணி ரூ.60,000 மற்றும் அக்பர் ரூ.40,000 ஆகும். 2018, ஏப்ரல் 1 அன்று அந்தோணி கூடுதல் முதலாக ரூ.10,000 கொண்டு வந்தார். அவ்வாண்டில் அக்பர் ரூ.5,000 கூடுதல் முதல் கொண்டு வந்தார். 2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய முதல் மீது வட்டி ஆண்டுக்கு 6 % எனக் கணக்கிடவும்.
22.
கிரண், வினோத் மற்றும் விமல் எனும் கூட்டாளிகள் 5:3:2 எனும் விகிதத்தில் இலாபம் பகிர்ந்து வந்தனர். கிரண் விலகினார். வினோத் மற்றும் விமல் ஆகியோரின் புதிய இலாப விகிதம் 2:1 ஆகும். ஆதாய விகிதத்தை கணக்கிடவும்
23.
ஜெயம் டயர்ஸ் நிறுமம் 15,000 சாதாரணப்பங்குகளை ரூ. 10 வீதம் பின்வருமாறு செலுத்தும்படி வெளியிட்டது. விண்ணப்பத்தின் மீது ரூ.3 ஒதுக்கீட்டின் மீது ரூ.5 முதலாம் மற்றும் இறுதி அழைப்பின் மீது ரூ.2. அனைத்து தொகையும் பெறப்பட்டது. ஆனால் 100 பங்குகளை வைத்திருக்கும் ஒரு பங்குதாரர் அழைப்பு பணத்தை செலுத்தத் தவறினார். அழைப்பு நிலுவைக் கணக்கைப் பயன்படுத்தி அழைப்பிற்கான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.
24.
பின்வரும் விவரங்களிலிருந்து, பெறுதற்குரிய மாற்றுச்சீட்டுக் கணக்கினைத் தயாரித்து கடனாளிகளிடமிருந்து பெற்ற மாற்றுச்சீட்டினைக் கணக்கிடவும்.
| விவரம் | ரூ. |
|---|---|
| தொடக்க பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு | 20,000 |
| இறுதி பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு | 30,000 |
| மாற்றுச்சீட்டிற்கான ரொக்கம் பெற்றது | 60,000 |
| பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு மறுக்கப்பட்டது | 5,000 |
25.
26.
பாரத் நிறுமம் ரூ.10 மதிப்புள்ள 1,00,000 பங்குகளை முகமதிப்பில் பொதுமக்களுக்கு வெளியிட்டது. பங்குகள் மீதான பணம் செலுத்த வேண்டிய விவரங்கள் பின்வருமாறு:
| விண்ணப்பத்தின் போது பங்கொன்றிற்கு | ரூ.5 |
| ஒதுக்கீட்டின் போது பங்கொன்றிற்கு | ரூ.3 |
| முதல் மற்றும் இறுதி அழைப்பின் போது பங்கொன்றிற்கு | ரூ.2 |
1,20,000 பங்குகளுக்கு விண்ணப்பத் தொகை பெறப்பட்டது. கூடுதல் விண்ணப்பத் தொகை உடனடியாக திருப்பிச் செலுத்தப்பட்டது. மேற்கண்டவற்றை பதிவு செய்ய குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்
27.
அபர்ணா மற்றும் ப்ரியா இருவரும் கூட்டாளிகள். அவர்கள் தங்கள் இலாபம் மற்றும் நட்டங்களை 3:2 என்ற விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். பிருந்தா 1/5 இலாபப் பங்கிற்கு கூட்டாண்மையில் சேருகிறார். அவர் தமது நற்பெயர் பங்காக ரூ.10,000 கொண்டுவருகிறார். கூட்டாளிகளின் முதல் கணக்குகள் மாறுபடும் முதல் முறையில் கணக்கிடப்படுகிறது. கூட்டாளிகள் தமது நற்பெயர் தொகை முழுவதையும் எடுத்துக்கொண்டனர். இதற்கு தேவையான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.
28.
பயோனியர் நிறுமத்தின் பின்வரும் இருப்புநிலைக் குறிப்பிலிருந்து உரிமையாளர் விகிதத்தைக் கணக்கிடவும்.
| விவரம் | ரூ. |
|---|---|
| I. பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள் | |
| 1. பங்குதாரர் நிதி | |
| (அ) பங்குமுதல் | |
| (i) நேர்மைப் பங்குமுதல் | 1,00,000 |
| (ii) முன்னுரிமைப் பங்குமுதல் | 75,000 |
| (ஆ) காப்புகள் மற்றும் மிகுதி | 25,000 |
| 2. நீண்டகால பொறுப்புகள் | |
| நீண்டகாலக் கடன்கள் | - |
| 3. நடப்புப் பொறுப்புகள் | |
| கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள் | 2,00,000 |
| மொத்தம் | 4,00,000 |
| II. சொத்துகள் | |
| 1. நீண்டகாலச் சொத்துகள் | |
| (அ) நிலைச் சொத்துகள் | 2,75,000 |
| (ஆ) நீண்டகால முதலீடுகள் | 50,000 |
| 2. நடப்புச் சொத்துகள் | |
| ரொக்கம் மற்றும் ரொக்கத்திற்குச் சமமானவைகள் | 75,000 |
| மொத்தம் | 4,00,000 |
1.
1) பல ஆண்டுகளுக்கான தொகைகளைப் பகுப்பாய்வு செய்வதற்கு எடுத்துக் கொண்டால், அப்பகுப்பாய்வு கிடைமட்ட பகுப்பாய்வு என்றழைக்கப்படும்.
2) பொதுவாக, ஒரு ஆண்டானது அடிப்படை ஆண்டாக எடுத்துக் கொள்ளப்பட்டு பிற ஆண்டுகளுடனான தொகை அடிப்படை ஆண்டுடன் ஒப்பீடு செய்யப்படுகிறது.
3) ஒப்பீடு அறிக்கைகள், மற்றும் போக்கு சதவீதங்கள் போன்றவை கிடைமட்ட பகுப்பாய்விற்கான எடுத்துக்காட்டுகள் ஆகும்.
2.
ஆண்டுத்தொகை என்பது தொடர்ச்சியான இடைவெளிகளில் தொடர்ந்து சீராக பெறப்படும் ரொக்க ஓட்டத்தைக் குறிக்கும். குறிப்பிட்ட ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் ஒரு குறிப்பிட்ட வட்டி வீதத்தில் ஒரு ரூபாயின் தற்போதைய மதிப்பை ஆண்டுத்தொகை அட்டவணை காண்பிக்கும். கீழ்க்கண்ட சூத்திரத்தைப் பயன்படுத்தி ஆண்டுத் தொகைக் காரணி கணக்கிடப்படுகிறது.
ஆண்டுத்தொகை காரணி = \(\frac { { \left( 1+i \right) }^{ n }-1 }{ i{ \left( 1+i \right) }^{ n } } \)
அதில், i = வட்டி வீதம்
n = எதிர்நோக்கும் ஆண்டுகள்
3.
ஒரு பொதுநிறுமம் தகவலறிக்கை மூலம் பொது மக்களுக்கு வெளியிடும் நேர்மைப் பங்கு வெளியீட்டினை பொது வெளியீடு என்று அழைப்பர். இது தொடக்க பொது முனைவு மற்றும் கூடுதல் முனைவுகளையும் உள்ளடக்கியது.
4.
ஒரு நிறுவனத்தில் வழக்கமான ஊழியராக இல்லாத ஒருவருக்கு வழங்கப்படும் ஊதியமே மதிப்பூதியம் எனப்படும். இது ஒரு வருவாயினச் செலவாகும்.
5.
(i) நடப்பு விகிதம், ஒரு வணிக நிறுவனத்தின் நடப்புச் சொத்துகளுக்கும் மற்றும் நடப்புப் பொறுப்புகளுக்கும் உள்ள விகிதச்சாரத்தைத் தருகிறது.
(ii) இரு நடப்புச் சொத்துகளை நடப்புப் பொறுப்புகளால் வகுப்பதன் மூலம் கணக்கிடப்படுகிறது.
(iii) நடப்பு விகிதம், ஒரு வணிக நிறுவனம் தனது நடப்புப் பொறுப்புகளை எப்போது செலுத்த வேண்டுமோ அப்போது, அதை எதிர்கொள்ளும் திறனைக் குறிக்கிறது. அது பின்வருமாறு கணக்கிடப்படுகிறது.
6.
(i) ஒரு புதிய நிறுவனத்தை உருவாக்கிய பின்பும் ஒவ்வொரு முறை Tally-ஐ துவக்கும் போதும் Tallyயின் திரை தோன்றும்.
(ii) இந்தத் திரையே டேலியின் நுழைவாயில் (Gateway of Tally) என அழைக்கப்படுகிறது. இது தெரிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் கீழ் தெரிவு செய்யப்பட்ட நிறுவனத்தை இடது பலகத்தில் காண்பிக்கும்.
7.
வட்டிக்குரிய காலம் என்பது எடுப்புகள் எடுத்த நாள் முதல் கணக்காண்டின் இறுதி நாள் வரையிலான காலமாகும். வெவ்வேறு தொகைகள் வெவ்வேறு கால இடைவெளிகளில் எடுக்கும் போது இம்முறை பொருந்துகிறது.
8.
(i) ஆதாய விகிதம் கணக்கிடுவதன் நோக்கம் விலகும் கூட்டாளிக்கு கொடுக்கப்படும் நற்பெயரை ஏற்றுக் கொள்வதாகும். ஆதாயப் பங்கு பின்வருமாறு கணக்கிடப்படுகிறது.
(ii) ஆதாயப்பங்கு = புதிய பங்கு - பழைய பங்கு
(iii) ஆதாய விகிதம் = தொடரும் கூட்டாளிகளுக்கு கிடைக்க பெற்ற ஆதாயத்தின் விகிதமாகும்.
9.
தியாக விகிதம் மற்றும் புதிய இலாபப்பகிர்வு விகிதம் கணக்கிடுதல்:
தியாகப் பங்கு = \(\frac { 1 }{ 14 } ,\frac { 1 }{ 14 } \)
விமலா மற்றும் கமலா அவர்களின் தியாக விகிதம் 1 : 1
பழைய பங்கு 4 : 3 அதாவது \(\frac { 4 }{ 7 } :\frac { 3 }{ 7 } \)
பழைய கூட்டாளிகளின் புதிய பங்கு = பழைய பங்கு - தியாகப் பங்கு
விமலா = \(\frac { 4 }{ 7 } -\frac { 1 }{ 14 } =\frac { 8-1 }{ 14 } =\frac { 7 }{ 14 } \)
கமலா = \(\frac { 3 }{ 7 } -\frac { 1 }{ 14 } =\frac { 6-1 }{ 14 } =\frac { 5 }{ 14 } \)
புதிய கூட்டாளியின் தியாகப் பங்கின் கூட்டுத்தொகை
= \(\frac { 1 }{ 14 } +\frac { 1 }{ 14 } =\frac { 2 }{ 14 } \)
விமலா, கமலா மற்றும் வினிதா அவர்களின் புதிய இலாபப் பகிர்வு விகிதம் \(\frac { 7 }{ 14 } :\frac { 5 }{ 14 } :\frac { 2 }{ 14 } \) அல்லது 7 : 5 : 2
10.
| விவரம் | ரூ. | விவரம் | ரூ. |
|---|---|---|---|
| ரொக்கக் க/கு (அளித்தது) | 4,50,000 | இருப்பு கீ/கொ | 1,70,000 |
| கொள்முதல் திருப்பம் க/கு | 20,000 | கொள்முதல் க/கு (கடன்) | 4,90,000 |
| இருப்பு கீ/இ | 1,90,000 | (இருப்புக்கட்டும் தொகை) | |
| 6,60,000 | 6,60,000 |
11.
பழைய கூட்டாளிகளின் தியாகம் குறிப்பிடப்படவில்லை. பழைய கூட்டாளிகளின் இலாப விகிதமான 5:1 தியாக விகிதமாக கருத வேண்டும். எனவே, தியாகவிகிதம் 5:1.
தருணின் நற்பெயர் =27,000 x \(\frac { 2 }{ 9 } \) =ரூ.6,000
| நாள் | விவரம் | பே.ப.எ | பற்று ரூ. | வரவு ரூ. | |
|---|---|---|---|---|---|
| தருணின் முதல் க/கு | ப | 6,000 | |||
| அசோக் முதல் க/கு (5/6) | 5,000 | ||||
| மும்தாஜ் முதல் க/கு (1/6) | 1,000 | ||||
| (தருணின் நற்பெயர் பழைய கூட்டாளிகளின் முதல் கணக்கில் பழைய இலாப விகிதத்தில் சரிக்கட்டப்பட்டது) |
12.
தியாக விகிதம் மற்றும் புதிய இலாபப் பகிர்வு விகிதம் கணக்கிடுதல்
தியாகப் பங்கு =\(\frac { 2 }{ 7 } ,\frac { 1 }{ 7 } \)
ரவி மற்றும் குமார் அவர்களின் தியாக விகிதம் 2:1
பழைய இலாபப் பகிர்வு விகிதம் = 7:3 அல்லது \(\frac { 7 }{ 10 } :\frac { 3 }{ 10 } \)
பழைய கூட்டாளிகளின் புதிய பங்கு = பழைய பங்கு – தியாகப் பங்கு
ரவி = \(\frac { 7 }{ 10 } -\frac { 2 }{ 7 } =\frac { 49-20 }{ 70 } =\frac { 29 }{ 70 } \)
குமார் =\(\frac { 3 }{ 10 } -\frac { 1 }{ 7 } =\frac { 21-10 }{ 70 } =\frac { 11 }{ 70 } \)
புதிய கூட்டாளியின் பங்கு
கிறிஸ்டி =\(\frac { 3 }{ 7 } \)
கிறிஸ்டியின் பங்கிற்குரிய பகுதியை சமன் செய்யும் பொருட்டு , 10 ஆல் பெருக்கி மற்றும் வகுக்க வேண்டும்.
=\(\frac { 3 }{ 7 } \times \frac { 10 }{ 10 } =\frac { 30 }{ 70 } \)
ரவி, குமார் மற்றும் கிறிஸ்டி அவர்களின் புதிய இலாபப் பகிர்வு விகிதம் =\(\frac { 29 }{ 70 } :\frac { 11 }{ 70 } :\frac { 30 }{ 70 } \)= 29:11:30
13.
(i) புற அக பொறுப்புகள் விகிதம் ஒரு வணிக நிறுவனத்தின் நீண்டகால கடன் தீர்க்கும் திறனை மதிப்பிடுவதற்கு கணக்கிடப்படுகிறது.
(ii) புற அக பொறுப்புகள் விகிதம் நீண்டகால கடன் மற்றும் பங்குதாரர் நிதிக்கும் உள்ள தொடர்பினை வெளிப்படுத்துகிறது.
(iii) இது கீழ்கண்டவாறு கணக்கிடப்படுகிறது.
புற அக பொறுப்புகள் விகிதம்

14.
(i) 2009-ம் ஆண்டு Tally solutions, ERP9 எனும் மென்பொருளை அறிமுகம் செய்தது. இந்த மென்பொருள் விரிவான வணிக மேலாண்மைக்கு தீர்வு அளிக்கிறது.
(ii) இது அனைத்து கணக்கேடுகளையும் பராமரிக்கும் பெறுதல், செலுத்தல், விற்பனை, கொள்முதல் போன்ற பல்வேறு வகையான சான்றாவணங்களை பயன்படுத்தி நடவடிக்கைகளை பதிவு செய்யலாம்.
15.
1) ஆயுள் உறுப்பினர் கட்டணம்
2) உயில்கொடை
3) அறக்கட்டளை நிதி
4) முதலீடுகள் விற்ற தொகை
16.
ஒரு வியாபாரத்தின் உயர் இலாபம் என்பது சாதாரண இலாபத்தை விட கூடுதலாக உள்ள சராசரி இலாபம் ஆகும்.
உள்ள இலாபம் = சராசரி இலாபம் - சாதாரண இலாபம்
17.
விரைவு விகிதம் = = \(\frac {1,85,000}{1,00,000}\) = 1.85:1
நீர்மைச் சொத்துகள் = நடப்புச் சொத்துகள் – சரக்கிருப்பு – முன்கூட்டிச் செலுத்திய செலவுகள்
= 2,50,000 – 50,000 – 15,000
= ரூ.1,85,000
18.
இலாபநட்டப் பகிர்வு கணக்கு இலாப நட்டக் கணக்கின் நீட்டிப்பாகும். இது கூட்டாளிகளிடமிருந்து பெற வேண்டிய தொகை மற்றும் கூட்டாளிகளுக்குச் செலுத்த வேண்டியது தொடர்பான நடவடிக்கைகளைச் சரிக்கட்டும் நோக்கத்திற்காக தயாரிக்கப்படுகிறது.
19.
நிறுமம் பங்குகளை முகமதிப்பைவிட அதிகமான விலையில் வெளியீடு செய்தால் அது முனைமத்தில் வெளியிடுதல் எனப்படும். மிகுதியான தொகை முனைமம் என்றழைக்கப்படும்.
20.
| செலவுகள் | ரூ | வருமானம் | ரூ | ரூ |
|---|---|---|---|---|
| சந்தா | 48,000 | |||
| கூட்டுக: பெறவேண்டிய சந்தா (2018-2019) | 12,000 | 60,000 | ||
| பொறுப்புகள் | ரூ | சொத்துகள் | ரூ | ரூ |
|---|---|---|---|---|
| முன்கூட்டிப் பெற்ற 2019-20 ஆம் ஆண்டிற்கான சந்தா | 3,000 | பெறவேண்டிய சந்தா | ||
| 2017 – 2018 | 1,000 | |||
| 2018 – 2019 | 12,000 | 13,000 |
மாணவர் குறிப்பு

21.
முதல் மீதான வட்டி கணக்கிடுதல்:
அந்தோணி முதல் மீது வட்டி:
முதல் மீது வட்டி = முதல் தொகை x வட்டி வீதம் x வட்டிக்குரிய காலம்

குறிப்பு: அக்பர் கொண்டு வந்த கூடுதல் முதல் எந்த நாள் என்று கொடுக்காததால் முதல் மீது வட்டி சராசரி காலமாக 6 மாதங்களுக்கு கணக்கிட வேண்டும்.
22.
ஆதாய பங்கு =புதிய பங்கு – பழைய பங்கு
வினோத் \(=\frac { 2 }{ 3 } =\frac { 3 }{ 10 } =\frac { 20-9 }{ 30 } =\frac { 11 }{ 30 } \)
விமல் \(\\ =\frac { 1 }{ 3 } -\frac { 2 }{ 10 } =\frac { 10-6 }{ 30 } =\frac { 4 }{ 30 } \)
ஆகையால், வினோத் மற்றும் விமல் ஆகியோரின் ஆதாய விகிதம் = 11 : 4
23.
| நாள் | விவரம் | பே. ப.எ |
பற்று ரூ. |
வரவு ரூ. |
|
|---|---|---|---|---|---|
| நேர்மைப் பங்கு முதல் மற்றும் இறுதி அழைப்பு க/கு (15,000 × 2) | ப | 30,000 | |||
| பங்குமுதல் க/கு | 30,000 | ||||
| (பங்கு முதல் மற்றும் இறுதி அழைப்புத் தொகை பெற வேண்டியது) | |||||
| வங்கி க/கு (14,900 × 2) | ப | 29,800 | |||
| அழைப்பு நிலுவை க/கு (100 × 2) | ப | 200 | |||
| நேர்மைப் பங்கு முதல் மற்றும் இறுதி அழைப்பு க/கு | 30,000 | ||||
| (அழைப்பு பணம் பெறப்பட்டது, பெறப்படாத தொகை அழைப்பு நிலுவைக் கணக்கில் எடுத்துச் செல்லப்பட்டது) |
24.
| விவரம் | ரூ. | விவரம் | ரூ. |
|---|---|---|---|
| இருப்பு கீ/கொ | 20,000 | ரொக்கக் க/கு | 60,000 |
| கடனாளிகள் க/கு (அவ்வாண்டில் பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு பெற்றது - இருப்புக் கட்டும் தொகை) | 75,000 | கடனாளிகள் க/கு (பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு மறுக்கப்பட்டது) | 5,000 |
| இருப்பு கீ/இ | 30,000 | ||
| 95,000 | 95,000 |
25.
26.
| நாள் | விவரம் | பே. ப.எ |
பற்று ரூ. |
வரவு ரூ. |
|
|---|---|---|---|---|---|
| வங்கி க/கு (1,20,000 × 5) | ப | 6,00,000 | |||
| நேர்மைப் பங்கு விண்ணப்பக் க/கு | 6,00,000 | ||||
| (விண்ணப்பத் தொகை பெற்றது) | |||||
| நேர்மைப் பங்கு விண்ணப்பக் க/கு (1,00,000 × 5) | ப | 5,00,000 | |||
| நேர்மைப் பங்குமுதல் க/கு | 5,00,000 | ||||
| (நேர்மைப் பங்கு விண்ணப்பத் தொகையை பங்கு முதலுக்கு மாற்றியது) | |||||
| நேர்மைப் பங்கு விண்ணப்பக் க/கு (20,000 × 5) | ப | 1,00,000 | |||
| வங்கி க/கு | 1,00,000 | ||||
| (மிகுதியான பங்கு விண்ணப்பத்தொகை திருப்பிச் செலுத்தியது) | |||||
| நேர்மைப் பங்கு ஒதுக்கீட்டு க/கு | ப | 3,00,000 | |||
| நேர்மைப் பங்கு முதல் க/கு | 3,00,000 | ||||
| (ஒதுக்கீட்டுத் தொகை பெற வேண்டியது) | |||||
| வங்கி க/கு | ப | 3,00,000 | |||
| நேர்மைப் பங்கு ஒதுக்கீட்டு க/கு | 3,00,000 | ||||
| (ஒதுக்கீட்டுத் தொகை பெற்றது) | |||||
| நேர்மைப் பங்கு முதல் மற்றும் இறுதி அழைப்பு க/கு | ப | 2,00,000 | |||
| நேர்மைப் பங்கு முதல் க/கு | 2,00,000 | ||||
| (பங்கு முதல் மற்றும் இறுதி அழைப்பு தொகை பெற வேண்டியது) | |||||
| வங்கி க/கு | ப | 2,00,000 | |||
| நேர்மைப் பங்கு முதல் மற்றும் இறுதி அழைப்பு க/கு | 2,00,000 | ||||
| (பங்கு முதல் மற்றும் இறுதி அழைப்புத் தொகை பெற்றது) |
27.
பழைய கூட்டாளிகளின் தியாகம் கொடுக்கப்படவில்லை அவர்கள் பழைய இலாபப் பகிர்வு விகிதமான 3 : 2 தியாக விகிதமாக எடுத்துக் கொள்ள வேண்டும். எனவே, தியாக விகிதம் 3 : 2
| நாள் | விவரம் | பே.ப. எண் |
பற்று ரூ. |
வரவு ரூ. |
|
|---|---|---|---|---|---|
| வங்கி க/கு | ப | 10,000 | |||
| அபர்ணாவின் முதல் க/கு (3/5) | 6,000 | ||||
| பிரியாவின் முதல் க/கு (2/5) (நற்பெயருக்காக பெற்ற தொகை அபர்ணா மற்றும் பிரியாவின் தியாக விகிதப்படி பகிரப்பட்டது) |
4,000 | ||||
| அபர்ணாவின் முதல் க/கு | ப | 6,000 | |||
| பிரியாவின் முதல் க/கு | ப | 4,000 | |||
| வங்கி க/கு (கூட்டாளிகளால் தொகை எடுக்கப்பட்டது) |
10,000 |
28.
உரிமையாளர் விகிதம் = =0.5:1
பங்குதாரர் நிதி = நேர்மைப் பங்குமுதல் + முன்னுரிமை பங்குமுதல் + காப்புகள் மற்றும் மிகுதி
= 1,00,000 + 75,000 + 25,000
= ரூ.2,00,000
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards