12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 29/08/2020
12 ஆம் வகுப்பு உயிரியல் முக்கிய 2 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Biology Important 2 Mark Creative Questions (New Syllabus) 2020
12ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
பொருந்தாததை கண்டறிந்து காரணம் கூறவும்.
வாழிடத்தை வழங்குதல், ஊட்ட சுழற்சி, முதல்நிலை உற்பத்தி, வழிமுறை வளர்ச்சி.
2.
வேளாண் காடுகளை சமூகக் காடுகளிலிருந்து வேறுபடுத்துக.
3.
முதல்நிலை உற்பத்தித்திறனை பாதிக்கும் காரணிகள் யாவை?
4.
பல்வகைத் தன்மை பரவலின் பங்கினை நிர்ணயிக்கும் காரணிகள் யாவை?
5.
நடமாடும் மரபணுக்கள் (அ) டிரான்ஸ்போசான் (அ) இடமாற்றிக் கூறுகள் என்றால் என்ன?
6.
வகைப்பாட்டியலின் இடையூறு என்றால் என்ன?
7.
வெப்பநிலை என்றால் என்ன? அவை உயிரினங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் செயல்களை வரிசைப்படுத்துக
8.
சர்க்கரை என்றால் என்ன?
9.
தானியங்களினின்று கிடைக்கும் ஊட்டசத்துக்கள் எவை?
10.
தொல்லுயிர் எச்ச மரபணுக்கள் என்றால் என்ன?
11.
உயிரிய வாயு உற்பத்தியின் மூலப்பொருட்கள் யாவை?
12.
பாலிமரேஸ் சங்கிலி வினையின் படிநிலைகளின் பெயர்களைத் தருக.
13.
குறுதிறன் வரையறு.(அ) குறுதிறனை எடுத்துக்காட்டுடன் வரையறுக்கவும்.
14.
டாக்டர். ஆனந்த மோகன் சக்ரவர்த்தி சமுதாயத்திற்கு ஆற்றிய பணி என்ன?
15.
தூயவரிசைத் தேர்வு மற்றும் நகல் தேர்வு
16.
இம்யூனோகுளோபுலின் வினைகளின் வகைகள் யாவை?
17.
மூடுவிதைத் தாவர, திறந்த விதைத் தாவர மகரந்தச் சேர்க்கைகளை வேறுபடுத்துக.
18.
சுகாதாரம் என்பது என்ன?
19.
அமீபா வகை டபீட்டம் என்றால் என்ன?
20.
ஆர்கிட்கள், பெரணிகள், வன்கொடிகள், தொங்கும் மாஸ்கள், பெப்பரோமியா, மணித்தாவரம், லைக்கன்கள் ஆகியவை தொற்றுத் தாவரம் ஏன்? (அ) தொற்றுத்தாவரம் என்றால் என்ன?
21.
தீச்சுட்டிக் காட்டிகள் - வரையறு (அ) டெரிஸ் மற்றும் பைரோனிமா தாவரங்கள் தீச் சுட்டிக்காட்டிகள் எனப்படுகின்றன ஏன்?
22.
மெண்டல் தாவர ஆய்வுகளில் வெற்றியாளராக இருக்க என்ன காரணம்?
23.
நவீன உருவாக்கப்பட்ட கோட்பாடுகள் யாவை?
24.
மொனிரா மற்றும் புரோட்டிஸ்டாவின் உணவு பெறுவதற்கான வழிமுறைகள் யாவை?
25.
கலப்பினம் செய்தல் என்றால் என்ன?
26.
இடை உணவூட்ட நிலை என்றால் என்ன?
27.
உறுப்புகளாக்கம் என்றால் என்ன?
28.
முராகிஷி மற்றும் ஸ்கூக் ஆகியோரின் திசு வளர்ப்பில் இவர்களது பங்களிப்பைத் தருக.
29.
மெதுவாக சிதையக்கூடிய அல்லது நிலைத்திருக்கும் மாசுபடுத்திகள் என்றால் என்ன?
30.
கருக்கோளம் (Blastocyst) என்றால் என்ன?
31.
ஆண் இனப்பெருக்க மண்டல துணைச்சுரப்பிகள் எவை?
32.
சின்ட்ரோம்கள் என்றால் என்ன?
33.
ஹீமோபிலியா இரத்தக்கசிவு நோய் என்று ஏன் அழைக்கப்படுகிறது?
34.
இந்திய அரசால் தேசிய அளவில் நடத்தப்பட்டு வரும் இனப்பெருக்க நலனுக்குரிய திட்டங்கள் எவை?
35.
இயற்கையான சீரியக்க, கால இடைவெளி முறை குடும்பக்கட்டுப்பாடு - விளக்குக.
36.
முட்டையிடும் உயிரிகள் என்றால் என்ன?
37.
கருவுறுதலை ஏன் ஒருங்கிணைவு என்கின்றோம்?
38.
பாலினப் பெருக்கம் என்றால் என்ன?
39.
தூண்டி மற்றும் அடக்கி வேறுபடுத்து.
40.
ஒகசாகி துண்டங்கள் என்றால் என்ன? இவை எந்த திசையில் உருவாக்கப்படுகின்றன?
41.
இரு சுருள் DNA வின் நீளத்தை எவ்வாறு கண்டறியலாம்?
1.
பொருந்தாதது: வழிமுறை வளர்ச்சி
காரணம்: ஒரு குறிப்பிட்ட வகை தாவர குழுமம் மற்றொரு வகை குழுமத்தை அதே இடத்தில் இடம் பெறச் செய்தல் வழிமுறை வளர்ச்சி எனப்படும். மற்றவை சூழல் மண்டல சேவைகளுடன் தொடர்புடையது.
2.
| வேளாண் காடுகள் | சமூகக் காடுகள் | |
| 1. | ஒரு நிலப்பகுதியில் காணப்படும் மரங்கள், பயிர்கள் மற்றும் கால்நடைகளின் ஒருங்கிணைப்பாகும். | சமூகக் காடுகள் உள்ளூர் சமூகத்தால் பராமரிக்கப்படுகின்றது. |
| 2. | இதன் முக்கிய நோக்கம் மரங்கள் பயிர்கள், கால்நடைகளின் ஒருங்கிணைப்பாகும். | சமூகக் காடுகளின் நோக்கம் வளிக்கார்பன் சேகரிப்பு மாற்றங்களைக் குறைத்தல், மாசுபாடு நீக்கம், காடழிப்பு, காடுகள் மீட்டெடுப்பு மற்றும் இளைஞர்களுக்கு மறைமுக வேலைவாய்ப்பு ஆகியவற்றை குறிக்கும். |
3.
1. ஒரு குறிப்பிட்ட இடத்தில் காணப்படும் தாவரச் சிற்றினங்கள்
2. அவற்றின் ஒளிச்சேர்க்கைத்திறன்
3. கிடைக்கும் ஊட்டச்சத்துக்கள் தன்மை
4. சூரிய ஒளி, மழையளவு
5. மழையளவு மண் வகை, நிலப்பரப்பு காரணிகள்
6. சுற்றுச்சூழல் காரணிகள்.
4.
வெப்பநிலை, மழைப்பொழிவு, நிலக்கோட்டிலிருந்து தூரம் (பரப்பு சரிவு வாட்டம்) கடல் மட்டத்திலிருந்து அதன் உயரம் (உயரடுக்கு சரிவு வாட்டம்) ஆகியவை ஆகும்.
5.
இது இலக்கு அமைவிடத்தோடு எந்த ஒரு தொடர் வரிசைத் தொடர்பையும் பெற்றிராமல் மரபணு தொகையத்தில் தம்மை செருகிக் கொள்ளத்தக்க DNA தொடர் வரிசையாகும். எனவே இடமாற்றக் கூறுகள் நடமாடும் மரபணுக்கள் எனப்படுகின்றன.
6.
பூமியில் காணப்படும் பல்வேறு சிற்றினங்கள் தற்போதைய மதிப்பீடு சுமார் 8-9 மில்லியன் ஆகும். இருப்பினும் நம் இயற்கை செல்வத்தின் சரியான பரிமாணம், நமக்குத் துல்லியமாக தெரியாது. இதுவே வகைப்பாட்டியலின் இடையூறு எனப்படும்.
7.
வெப்பநிலை அல்லது வெப்பம் மற்றும் குளிர்ச்சியின் அளவு, ஒரு சுற்றுச்சூழலில் மிகவும் அவசியமான மற்றும் மாறுபடும் காரணி ஆகும். இது உயிர்க்கோளத்தில் வாழும் அனைத்து உயிரினங்களில் முக்கிய செயல்களான.
(i) வளர்சிதை மாற்றம்
(ii) நடத்தை
(iii) இனப்பெருக்கம்
(iv) கருவளர்ச்சி மற்றும்
மரணம் ஆகிய அனைத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
8.
உணவு மற்றும் உற்சாகப் பானங்களில் பயன்படும், இனிப்பு சுவையுடைய, கரையக்கூடிய கார்போஹைடிரேட்டின் பொதுவான பெயர்.
9.
கார்போஹைடிரேட், புரதம், நார்கள், விட்டமின்கள், கனிமங்கள்.
10.
1. விரைவாகக் கூடிய சில DNA-க்கள் பொய்யான மரபணுக்களால் உருவகிக்கப்படுகின்றன.
2. இத்தகைய மரபணுக்கள், கடந்த காலங்களில் உயிரோட்டத்துடன் செயல்பட்டவைகள் -ஆனால் தற்போது புரதம் உருவாக்கும் தன்மையை இழந்துவிட்டவை
3. இவை பரிணாமத்திற்கான வரலாற்றைக் கூறுகிறது.
11.
விவசாய கழிவுகள், உரங்கள், தாவர பொருட்கள், கழிவு நீர், உணவு கழிவுகள், மாட்டுச் சாணம்.
12.
(i) இயல்பு திரிதல்
(ii) தூண்டுதல்
(iii) நீட்சியுறுதல்
13.
குறுதிறன் எனப்படுவது தண்டு செல்கள் சில வகை செல்களாக மட்டும் வேறுபாடடையும் திறனாகும். எடுத்துக்காட்டாக லிம்ஃபாய்டு அல்லது மாயலாய்டு தண்டு செல்கள் B மற்றும் T செல்களாக மட்டும் வேறுபாடடைதல், ஆனால் RBC யாக வேறுபாடடைவதில்லை.
14.
1. சூடோமோனாஸ் புட்டிடா என்பது மரபு பொறியியல் மாற்றப்பட்ட நுண்ணுயிரிகளாகும்.
2. இதற்கான காப்புரிமையை டாக்டர். சக்கரவர்த்தி பெற்றுள்ளார்.
3. இவை எண்ணெய்க் கசிவுகளில் உள்ள ஹைட்ரோகார்பன்களைச் சிதைக்கின்றன.
4. இது பெருமளவில் உருவாக்கப்பட்டு மாசுக் கட்டுப்பாட்டில் பயன்படுகிறது.
15.
| தூயவரிசைத் தேர்வு | நகல் தேர்வு | |
| 1 | இது ஒத்த மரபுக்கூறுடைய தாவரத்தை மீண்டும் தன் மகரந்தச்சேர்க்கை செய்து பெறப்பட்ட தாவரங்களாகும் | உடல இனப்பெருக்கம் செய்யும் தாவரங்களில் மைட்டாடிக் செல்பிரிதல் மூலம் உண்டான தாய் தாவரத்திலிருந்து ஒத்த பண்புகள் கொண்ட வழித்தோன்றல்கள் பெறப்படுகின்றன |
| 2 | எல்லா மரபுக்கூறுகளிலும் இவ்வாறு பெறப்பட்ட இரகமானது ஒரே சீர்தன்மையைக் கொண்டிருக்கிறது | கலப்பினத் தாவரத் தொகையிலிருந்து புறத்தோற்ற விகிதத்தின் அடிப்படையில் மிகச்சிறந்த இரகத்தைத் தெரிவு செய்ய நகல் தேர்வு உட்படுத்தப்படுகிறது |
16.
வீழ்படிவாதல், திரட்சி அடைதல், மேல்பூச்சாக்கம் மற்றும் நடுநிலையாக்கம்.
17.
| திறந்த விதைத் தாவர மகரந்தச் சேர்க்கை | மூடுவிதைத் தாவர மகரந்தச் சேர்க்கை | |
| 1 | நேரடி நிகழ்வு | மறைமுக நிகழ்வு |
| 2 | மகரந்தத் துகள்கள் திறந்த நிலையில் உள்ள சூல்களை நேரடியாகச் சென்றடைகின்றன. | மகரந்தத் துகள்கள் சூலக அலகின் சூலக முடியில் படியும் |
18.
WHO வின் படி சுகாதாரம் என்பது "உடல்நலத்தைப் பராமரிக்கவும் நோய்கள் பரவுவதை தடுக்கவும் உதவும் சூழ்நிலைகள் மற்றும் நடவடிக்கைகள் ஆகும்.
19.
1. மூன்றாவது வகை.
2. செல்சுவர் இழக்கப்படாமல் மகரந்த அறையினுள் செல்கள் ஊடுருவுகின்றன.
3. ஆண் மலட்டுத் தன்மையுடன் தொடர்புடையது.
4. பெரிபிளாஸ்மோடிய வகை டபீட்டத்துடன் குழப்பக் கூடும்.
20.
(i) ஒரு தாவரமானது மற்றொரு தாவரத்தின் மீது எந்தவொரு தீங்கும் விளைவிக்காமல் தொற்றி வாழ்வது தொற்றுத்தாவரம் எனப்படும்.
(ii) இது உடன் உண்ணும் நிலை இடைச்செயலாகும்.
(iii) இதில் ஒன்று பயன் அடைகிறது மற்றொன்று பயன் அடைவதில்லை.
21.
டெரிஸ் (பெரணி) மற்றும் பைரோனிமா (பூஞ்சை) தாவரங்கள் எரிந்த மற்றும் தீயினால் அழிந்த பகுதிகளைச் சுட்டிக்காட்டுகின்றன. எனவே இவை தீச் சுட்டிக்காட்டிகள்.
22.
(i) மெண்டலின் பகுப்பாய்வு, அனுபவ அறிவு.
(ii) கணித மற்றும் புள்ளியியல் அறிவின் பயன்பாடு நிகழ்விரைவு முறைகளைக் கையாண்டது.
(iii) எண்ணிக்கைகள் விவரங்கள் துல்லியமான விரிவான பதிவுகள்.
(iv) கவனமாக திட்டமிட்ட சோதனைகள்
(v) எடுத்துக் கொண்ட ஆய்வுத் தாவரம் தோட்டப் பட்டாணி (தனிப்பட்ட குரோமோசோம்களில் உள்ள ஏழு எதிரிடைப்பண்புகள்) இவையனைத்துமே மெண்டலின் வெற்றிக்குக் காரணமாக அமைந்தது.
23.
1. ஜீன் திடீர் மாற்றம்
2. மரபணு மறுசேர்க்கை
3. இயற்கை தேர்வு
4. இனப்பெருக்க ரீதியாக தனிமைப்படுத்துதல் முறைகள்
24.
(i) ஒட்டுண்ணி வகை
(ii) சாறுண்ணி வகை
(iii) கொன்றுண்ணி வகை
(iv) வேதிச்சேர்க்கை / ஒளிச்சேர்க்கை வகை
25.
இரு வேறுபட்ட பண்புகளை உடைய தாவரங்களைக் கலப்பு செய்து அதனால் F1 சந்ததியில் சில சிறப்புப் பண்புகளைப் பெறுவதற்கு கலப்பினம் செய்தல் என்று பெயர்
26.
1. கரிமப் பொருட்கள் ஏரியின் அடிப்பகுதியில் சேமிக்கப்படுகிறது.
2. நீர் வாழ்வாதாரங்கள் மற்றும் விலங்குகள் வேகமாக வளர்கின்றன.
இந்நிலைக்கு இடை உணவூட்ட நிலை என்று பெயர்.
27.
கேலஸ் செல்கள் வேறுபாடுகளுக்கு உள்ளாகி உடலக் கருக்களை உருவாக்குகின்றன. இவை கருவுருக்கள் எனப்படும்.
ரைசோஜெனிசிஸ்
இவற்றிலிருந்து வேர் உருவாவது ரைசோஜெனிசிஸ் எனப்படும்.
காலோஜெனிசிஸ்
இவற்றிலிருந்து தண்டு உருவாவது காலோஜெனிசிஸ் எனப்படும்.
28.
(i) திசு வளர்ப்பு ஊடகத்தை முறைப்படுத்தினார்கள். இது திசு வளர்ப்பின் மைல்கல்லாகும்.
(ii) அனைத்து வகையான திசு வளர்ப்புக்கும் பெரும்பாலும் பயன்படுத்தக்கூடிய ஊடகமாகும்.
29.
இவை பல ஆண்டுகளுக்கு எவ்வித மாற்றமும் அடையாமல் சுற்றுச்சூழலில் அப்படியே இருக்கும் மாசுபடுத்திகளாகும்.
30.
கருப்பையின் உட்சுவரில், கரு பதியும் நிலையில் இது உருவாகிறது. இந்நிலையில் கரு 100 செல்களைக் கொண்ட உள்ளீடற்ற பந்து போன்ற அமைப்பாகிறது. இதற்கு கருக்கோளம் என்று பெயர். இதன் உட்பகுதியில் திரவம் நிரம்பியுள்ளது.
31.
1. ஓரினை விந்துப் பைகள்
2. கௌபரின் சுரப்பி
3. பல்போயூரித்ரல் சுரப்பி
4. புரோஸ்டேட் சுரப்பி
32.
ஒரு உயிரியின் தனிப்பட்ட டி.என்.ஏ-வின் இயல்பற்ற பிறழ்நிலை தன்மையால் அல்லது கோளாறுகளால் உருவாகின்றன. இதற்கு சின்ட்ரோம் என்று பெயர்.
33.
1. இரத்தக்கசிவு நோய் ஒடுங்கிய x சார்ந்த மரபணுவால் ஏற்படுகிறது.
2. இவர்களில் இரத்த உறைவு பொருள் த்ராம்போப்ளாஸ்டின் காணப்படுவதில்லை.
3. எனவே இந்நோய் இரத்தக்கசிவு நோய் என்றழைக்கப்படுகிறது.
34.
1. மாபெரும் குழந்தைகள் தடுப்பூசித் திட்டம்.
2. பெண்களுக்கு ஊட்டச்சத்துக்கள் உணவு வழங்கல்.
3. ஜனனி சுரக்ஷா யோஜனா
4. ஜனனி சிசு சுரக்ஷா கார்யகரம்.
5. ஒருங்கிணைந்த இனப்பெருக்க, தாய், சேய் வளர்குழந்தை, பதின்பருவத்தினர்க்கான ஆரோக்கிய அணுகுமுறை.
6. சுரக்ஷித் மாத்ரித்வா அபியான்.
35.
1. மாதவிடாயின் 14 ஆம் நாளில் அண்ட செல் வெளியேறும்.
2. வெளியேறிய அண்ட செல் 2 நாட்கள் உயிருடன் இருக்கும்.
3. விந்தணுக்கள்,பெண் இனப்பெருக்கப்பாதையில் 12 மணிநேரம் உயிருடன் இருக்கும்.
4. இக்காலத்தில், கலவியை தவிர்த்தல், கருத்தரிப்பதைத் தவிர்க்கலாம்.
36.
இவ்வகை உயிரிகளில் தாயின் உடலுக்கு வெளியே இடப்பட்ட முட்டைகள் பொரித்து குஞ்சுகள் வெளிவருகின்றன.
37.
கருவுறுதலை ஒருங்கிணைவு என்று அழைப்பதற்கு காரணம் இரு ஒற்றை மய இனச்செல்களில் இணைந்து, இரட்டை மய கருவாக மாறுகிறது.
38.
இனப்பெருக்க செயலில் இரு பெற்றோர் ஈடுபட்டு இரண்டுவகை இனச்செல்கள் இணைந்து நடைபெறும் இனப்பெருக்கம் பாலினப் பெருக்கமாகும்.
39.
| தூண்டி | அடக்கி |
| ஒரு மரபணு செயல்பாடான நொதி உருவாக்கம் ஒரு தளப்பொருளிருந்தால் தூண்டப்படுகிறது. இவ்வாறு (Switch On) முடுக்கப்படுவது தூண்டுதல் எனப்படும். | ஒரு பொருளினால் மரபணு வெளிப்பாடு (Turned Off) கட்டுப்படுத்தப்படுகிறது. இந்த தடைப்படுத்தும் பொருள் 'அடக்கி' எனப்படுகிறது. |
| இதனால் படியெடுத்தல், மொழிபெயர்த்தல் துவங்குகிறது. | இதனால் படியெடுத்தல், மொழிபெயர்த்தல் நிறுத்தப்படுகிறது. |
40.
1. பின்தங்கு இழையில் புதிதாக உருவாக்கப்பட்ட துண்டுகள் - ஒகசாகி - துண்டங்கள் எனப்படும்.
2. இவை சிறிய தொடர்ச்சியற்ற துண்டங்கள் ஆகும்.
3. இவை 5' - 3' - திசையில் RNA பிரைமரில் இருந்து துவங்குகிறது.
41.
மொத்த கார இணைகளின் எண்ணிக்கை x இரு கார இணைகளுக்கிடையேயான தூரம்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards