12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Poem - 6 - Incident of the French Camp Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 6 - On the Rule of the Road Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 5 - The Chair Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 4 - The Midnight Visitor Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 4 - Ulysses Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 4 - The Summit Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 29/08/2020
12 ஆம் வகுப்பு உயிரியல் பயிற்சி 2 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Biology Practise 2 Mark Creative Questions (New Syllabus) 2020
12ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
ஆற்றல் பிரமிட்கள் எப்பொழுதும் நேரானது ஏன்?
2.
வேளாண் காடுகள் என்றால் என்ன?
3.
நிகர முதல்நிலை உற்பத்தித்திறனுக்கும், நிகர இரண்டாம் நிலை உற்பத்தித்திறனுக்கும் உள்ள வேறுபாடு யாது?
4.
ஆல்காவிலிருந்து உயிரிய ஹைட்ரஜன் எவ்வாறு பெறப்படுகிறது?
5.
BAC தாங்கு கடத்தியை YAC தாங்குக் கடத்தியிடம் இருந்து வேறுபடுத்துக.
6.
ஆல்பா பல்வகைத் தன்மை - வரையறு.
7.
ஒப்பீட்டுப் பெருக்கம் என்றால் என்ன?
8.
எண்ணெய்களின் 2 வகைகள் யாவை?
9.
தானியங்களினின்று கிடைக்கும் ஊட்டசத்துக்கள் எவை?
10.
தொல்லுயிர் எச்ச மரபணுக்கள் என்றால் என்ன?
11.
பாலிமரேஸ் சங்கிலி வினையின் படிநிலைகளின் பெயர்களைத் தருக.
12.
உயிரிய தொழில்நுட்பம் வரையறு.
13.
முதல் உயிர் எதிர்ப்பொருள் கண்டறிந்தவர் யார்? உயிர் எதிர்ப்பொருள் என்ற சொல்லை முதலில் பயன்படுத்தியவர் யார்?
14.
இரகங்களுக்கிடையே மற்றும் சிற்றினங்களுக்கிடையே கலப்புறுத்தம்
15.
தாவரங்களுக்கும், விலங்கினங்களுக்கும் இடையே ஒரு கூட்டுப்பரிணாமம் உள்ளது (Coevolution) விளக்குக?
16.
மாற்றப்படும் உறுப்புகள் நிராகரிக்கப்படுவதில் முதன்மை திசுப்பொருத்த எதிர்பொருள் தூண்டிகளின் பங்கு என்ன?
17.
தாவர செல்லின் எந்த சிறப்புப் பண்பு தோட்டக்கலை, வனவியல், தாவரப்பெருக்கு தொழிற்சாலைகளில் பயன்படுகிறது?
18.
பிளாஸ்மோடியத்தின் ஊகைனெட் எந்த நிலையில் காணப்படுகிறது?
19.
யுட்ரிகுலேரியா (பை தாவரம்) டையோனியா வீனஸ் பூச்சி உண்ணும் தாவரம், சாரசீனியா போன்ற பூச்சிகள் மற்றும் விலங்குகளைச் சாப்பிடுவதன் மூலம் நைட்ரஜனை பெறுகின்றன. இவற்றில் எந்த வகையான இடைச்செயல்கள் காணப்படுகின்றன?
20.
உயிரிமம் என்றால் என்ன?
21.
சடுதி மாற்றத்தை வரையறு
22.
நவீன உருவாக்கப்பட்ட கோட்பாடுகள் யாவை?
23.
ஒரே உயிரினம் இரண்டு தொகுப்பைச் சேர்ந்த உயிரினங்களின் பண்புகளையும் ஒருங்கே பெற்றிருக்க முடியுமா? விவாதி.
24.
தொடர்ச்சியான வேறுபாடு என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக
25.
காற்று மாசுபாட்டினைக் கட்டுப்படுத்துதல் சட்டம் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது.
26.
அகார் என்றால் என்ன?
27.
நெபன்கென் எங்குள்ளது? அதன் முக்கியத்துவம் கூறுக.
28.
ஹீமோபிலியா இரத்தக்கசிவு நோய் என்று ஏன் அழைக்கப்படுகிறது?
29.
XX-XO வகை பால்நிர்ணய உயிரிகள் யாவை?
30.
வைட்டமின் E-ன் சிறப்பு என்ன?
31.
தாமிரம் வெளிவிடும் உள்கருப்பைச் சாதனங்களுக்கு எடுத்துக்காட்டு தருக.
32.
கடல் சாமந்தியின் பாலிலி இனப்பெருக்க முறையை விவரி.
33.
HGT (அ) கிடைமட்ட மரபணு மாற்றம் என்றால் என்ன?
34.
நியூக்ளியோசைடு எவ்வாறு உருவாகிறது?
1.
1. ஆற்றல் பிரமிட்கள் அடிப்பகுதியில் உள்ள உற்பத்தியாளர்கள் முதல் இறுதிமட்டம் வரையுள்ள அடுத்தடுத்த ஊட்ட மட்டங்களில் ஆற்றல் கடத்தல் படிப்படியாக குறைகிறது.
2. எனவே ஆற்றல் பிரமிட் எப்பொழுதும் நேரானது.
2.
1. வேளாண் காடுகள் என்பது ஒரு நிலப்பகுதியில் காணப்படும் மரங்கள், பயிர்கள் மற்றும் கால்நடைகளின் ஒருங்கிணைப்பாகும்.
2. மேலும் அவற்றிற்கிடையேயுள்ள தொடர்புகளை அறிவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
3.
| நிகர முதல்நிலை உற்பத்தித்திறன் | நிகர இரண்டாம் நிலை உற்பத்தித்திறன் | |
| 1 | தாவரத்தின் சுவாசச் செயலால் ஏற்படும் இழப்பிற்குப் பிறகு எஞ்சியுள்ள ஆற்றல் விகிதம் முதல்நிலை உற்பத்தித்திறன் | ஓர் அலகு இடத்தில் ஓர் அலகு காலத்தில் சுவாச இழப்பிற்குப் பிறகு நுகர்வோர்களால் சேமிக்கப்படும் ஆற்றல். |
| 2 | இது தற்சார்பு ஊட்ட உயிரிகளில் (Producer) கணக்கிடப்படுகிறது. | இது நுகர்வோர்களில் கணக்கிடப்படுகிறது. |
4.
1. இதில் ஒளி உயிரிய முறை நீர் பிளத்தல் எனும் செயல்முறை விளங்குகிறது.
2. கிளாமிடோமோனஸ் ரீன்ஹார்டிஐ ஆக்சிஜனை வெளியேற்றுகிறது.
3. கந்தகம் கொடுக்கப்படாத போது.
5.
| BAC தாங்கு கடத்தி | YAC தாங்கு கடத்தி | |
| 1 | குறுகிய தூரம் கடக்கும் | ஈஸ்ட் குரோமோசோம் போன்ற செயல்படுகிறது. |
| 2 | மிகப்பெரிய அளவிலான DNA நகலாக்கம் செய்ய உருவாக்கப்பட்டது. | வட்ட மற்றும் கோடு வடிவம் என இரு வடிவங்களில் காணப்படுகிறது. |
| 3 | மிக பயனுள்ள நகலாக்க கடத்தி | கோடு வடிவ ஈஸ்ட் செயற்கை குரோமோசோம்கள் ஈஸ்ட் செல்லிலும் பெருக்கமடிகின்றன. |
| 4 | 300 KB வரையிலான DNA செருகிகளை நகலாக்க செய்யக் கூடியது | |
| 5 | நிலையானவை பயன்படுத்த எளிமையானவை. |
6.
ஒரு குறிப்பிட்ட பகுதி சமுதாய அல்லது சூழ்நிலை மண்டலத்தில் வாழும் வகைப்பாட்டுத் தொகுதிகளின் எண்ணிக்கையை வைத்து அளவிடப்படுவது ஆல்பா பல்வகைத்தன்மை ஆகும்.
7.
கால மாற்றத்திற்கேற்ப உயிரினங்களின் எண்ணிக்கையில் ஏற்படும் மாற்றம். எ.கா. ஒரு குறிப்பிட்ட பரப்பில் குறிப்பிட்ட மணி நேரத்தில் கண்டறியக் கூடிய பறவைகளின் எண்ணிக்கை.
8.
(i) அத்தியாவசியமான எண்ணெய்கள்
நறுமணம் கொண்ட இவை, காற்றுடன் கலக்கும் போது ஆவியாகின்றன. (எ.டு) இஞ்சியிலிருந்து வரும் எண்ணெய்.
(ii) தாவர எண்ணெய் (நிலைத்த எண்ணெய்)
இது ஆவியாவதில்லை, முழு விதை, கருவூண் திசு இதற்கு ஆதாரம்.
9.
கார்போஹைடிரேட், புரதம், நார்கள், விட்டமின்கள், கனிமங்கள்.
10.
1. விரைவாகக் கூடிய சில DNA-க்கள் பொய்யான மரபணுக்களால் உருவகிக்கப்படுகின்றன.
2. இத்தகைய மரபணுக்கள், கடந்த காலங்களில் உயிரோட்டத்துடன் செயல்பட்டவைகள் -ஆனால் தற்போது புரதம் உருவாக்கும் தன்மையை இழந்துவிட்டவை
3. இவை பரிணாமத்திற்கான வரலாற்றைக் கூறுகிறது.
11.
(i) இயல்பு திரிதல்
(ii) தூண்டுதல்
(iii) நீட்சியுறுதல்
12.
நல்ல பொருட்களையும் சேவையையும் அளிப்பதற்காக உயிரியல் காரணிகளைக் கொண்டு செயல்படுத்தப்படும் அறிவியல் மற்றும் பொறியியல் கோட்பாடுகளே உயிரிய தொழில்நுட்பம் என வரையறுக்கலாம்.
13.
1. ஸ்ட்ரெப்டோமைசின் என்ற உயிர் எதிர்ப்பொருளை செல்மேன் வாக்ஸ்மேன் என்பவர் கண்டறிந்தார்.
2. 1943 ஆம் ஆண்டில் உயிர் எதிர்ப்பொருள் என்ற சொல்லையும் முதலில் அவர் பயன்படுத்தினார்.
14.
| இரகங்களுக்கிடையே | சிற்றினங்களுக்கிடையே | |
| 1 | ஒரே சிற்றினத்தின் இருவேறு இரகங்களுக்கிடையே கலப்பு செய்தல் | ஒரு பேரினத்தின் இருவேறுபட்ட சிற்றினங்களுக்கிடையே கலப்பு செய்தல் |
| 2 | தன் மற்றும் அயல் மகரந்தச்சேர்க்கை அடையும் தாவரங்களை மேம்படுத்தலாம் | இது பொதுவாக சாதகமான மரபணுக்களை ஒரு சிற்றினத்திலிருந்து மற்றொரு சிற்றினத்திற்கு மாற்ற பயன்படுகிறது |
15.
பெரும்பாலான தாவரங்களில், மகரந்தச் சேர்க்கை குறிப்பிட்ட விலங்கின சிற்றினங்கள் மூலம் நடைபெறும். மகரந்தச் சேர்க்கைக்கு ஏற்றவாறு மலர்கள் மாறுபாடு அடைந்துள்ளன.
16.
1. இவை செல்களின் புறப்பரப்பில் காணப்படும் எதிர்பொருள் தூண்டிகளாகும்.
2. இவை தடைகாப்பு துலங்கல்களை தூண்டுவதால் ஒரே இன உயிர்களுக்கிடையே மாற்றப்படும் உறுப்புகள் நிராகரிக்கப்படுகிறது.
17.
தகுந்த சூழ்நிலைகளில் ஒரு முழு தாவரத்தை, ஒரு தாவர செல் உண்டாக்கும் மரபணு சார் திறன், முழு ஆக்குத்திறன் எனப்படும்.
18.
கொசுவின் குடலில் பாதிப்படைந்த சிவப்பணுக்கள் உடைவதால் வெளியேறும் ஆண் மற்றும் பெண் இனச்செல்கள் இணைந்து ஊகைனெட் என்ற இரட்டைமய கருமுட்டையை உருவாக்குகின்றன.
19.
இங்கு எதிர்மறை இடைச்செயலில் கொன்று உண்ணும் வாழ்க்கை இரண்டு வகையான உயிரினங்களுக்கிடையே நடைபெறுகிறது.
20.
உயிரிமம் எனப்படுவது பெரிய இயற்கையாகக் காணப்படும் தாவர மற்றும் விலங்குகள் அமைந்த வாழிடம் (எ.கா) காடுகள், டுண்ட்ரா
21.
ஒரு குரோமோசோமின் மரபணுக்களில் நியூக்ளியோடைடு வரிசையில் காணப்படும் நிலையான மாற்றமே சடுதி மாற்றம் எனப்படும். இது பரிணாம முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
22.
1. ஜீன் திடீர் மாற்றம்
2. மரபணு மறுசேர்க்கை
3. இயற்கை தேர்வு
4. இனப்பெருக்க ரீதியாக தனிமைப்படுத்துதல் முறைகள்
23.
இரண்டு மாறுபட்ட தொகுப்பை சேர்ந்த உயிரினங்களின் பண்புகளையும் ஒருங்கே பெற்றுள்ள உயிரினங்கள் இணைப்பு உயிரிகள் எனப்படும்.
எ.கா: 1) பெரிபேட்டஸ் - வளையத்தசைப் புழுக்கள் மற்றும் கணுக்காலிகள் தொகுதிகளை இணைக்கும் உயிரி.
2) ஆர்க்கியோப்டெரிக்ஸ் - ஊர்வன மற்றும் பறவைகளை இணைக்கும் உயிரி.
24.
ஓர் உயிரினத் தொகையில் பெரும்பாலான மிகச்சிறிய அளவு வேறுபாடு கொண்டிருப்பது ஆகும். எ.கா மனித உயரம் & மனித தோலின் நிறம்
25.
காற்று மாசினைக் கட்டுப்படுத்தும் சட்டம். 1981-ம் ஆண்டு இயற்றப்பட்டு 1987 ஆம் ஆண்டு திருத்தியமைக்கப்பட்டது.
26.
இது ஊடகத் தயாரிப்பில் திட நிலைப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் கடல்பாசிகளிலிருந்து பெறப்படும் ஒரு சிக்கலான மியூசிலேஜ் பாலிசாக்கரைடு ஆகும்.
(i) ஜெலிடியம்
(ii) கிராசிலேரியா
(iii) ஜெலிடியெல்லா
எனும் பாசிகளிலிருந்து பெறப்படுகிறது.
27.
1. விந்து செல்லின் நடுப்பகுதியில், அச்சு இழையைச் சுற்றி, மைட்டோகாண்ட்ரியாக்கள் திருகு போல் அமைந்துள்ளன. இது மைட்டோகாண்ட்ரியல் திருகு' அல்லது நெபன்கென் எனப்படும்.
2. இது விந்து நகர்வுக்குத் தேவையான ஆற்றலை ATP மூலக்கூறு வடிவத்தில் உற்பத்தி செய்கிறது.
28.
1. இரத்தக்கசிவு நோய் ஒடுங்கிய x சார்ந்த மரபணுவால் ஏற்படுகிறது.
2. இவர்களில் இரத்த உறைவு பொருள் த்ராம்போப்ளாஸ்டின் காணப்படுவதில்லை.
3. எனவே இந்நோய் இரத்தக்கசிவு நோய் என்றழைக்கப்படுகிறது.
29.
மூட்டைப்பூச்சிகள், கரப்பான் பூச்சி, வெட்டுக்கிளி
30.
வைட்டமின் E இனப்பெருக்க உறுப்புகளின் இயல்பான செயல்பாட்டுக்கு உதவும், எனவே இது மலட்டுத்தன்மைக்கெதிர் வைட்டமின் எனப்படும்.
31.
CuT-380A ,நோவா T,CuT,CuT380Ag,Multiload 375.
32.
1. துண்டாதல் முறையில் சாமந்தியின் பல பேரினங்களில் நடைபெறுகிறது.
2. பாதத்தட்டுகளின் அடிப்பகுதியில் ஏற்படும் சுருக்கங்களால் அவை பிரியும்.
3. பிரிந்த கதுப்புகள் ஒவ்வொன்றிலும் குடல் தாங்கிகளும், உணர்கொம்புகளும் வளர்ந்து புதிய கடற்சாமந்திகள் உருவாகின்றன.
33.
1. இண்ட்ரான்கள் என்பவை நகரக்கூடிய வரிசையமைப்புகள் இவை மரபணு பிளத்தல் பண்பினால் பிளவுற்று வெளியே (அ) குறிப்பிட்ட இலக்குகளுக்குள் நகரும் டிரான்ஸ்போசான்கள் போல் சென்று உயிரினங்களுக்கிடையே மரபணுக்களைக் கடத்துகிறது. இதற்கு கிடைமட்ட மரபணு மாற்றம் என்று பெயர்.
2. உயிரினங்களின் பரிணாமத்திற்கு இது பெரும் பங்கு ஆற்றியுள்ளது.
34.
1. ஒரு நைட்ரஜன் காரப்பொருள், ஒரு சர்க்கரை மூலக்கூறோடு பிணைந்து (சர்க்கரையின் 1வது கார்பன்) நியூக்ளியோசைடு - உருவாகிறது. இதற்கு N - குளுக்கோஸிடிக் பிணைப்பு என்று பெயர்.
2. இது சர்க்கரையின் 1வது கார்பனுடன் நைட்ரஜனின் 9வது இடத்திலும் (பியூரின்)
3. நைட்ரஜனின் 1வது இடத்திலும் பிணைக்கின்றது (பிரமிடின்)
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Supplementary - 3 - The Hour of Truth (Play) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 3 - All the World’s a Stage Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 3 - In Celebration of Being Alive Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 2 - Life of Pi Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards