12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 29/08/2020
12 ஆம் வகுப்பு உயிரியல் மாதிரி 2 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Biology Sample 2 Mark Creative Questions (New Syllabus) 2020
12ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
வேளாண் பறக்கும் இயந்திரம் என்றால் என்ன?
2.
மேய்ச்சல் உணவுச்சங்கிலியின் வரைபட உருவமைப்பை வரைக.
3.
பயனற்ற ஓசோன் படலம் மற்றும் நன்மை தரும் ஓசோன் படலத்தை வேறுபடுத்துக.
4.
உயிரித்திரள் ஏன் சூழல் மண்டலத்தின் உற்பத்தித்திறனை எனப்படுகிறது?
5.
தமிழ்நாட்டிலுள்ள தேசிய பூங்காக்களை அட்டவணைப்படுத்து.
6.
எவ்வாறு பறவைகள் நிலவாழிடத்திற்கு ஏற்ப தங்களை தகவமைத்துக் கொள்கின்றன?
7.
நடமாடும் மரபணுக்கள் (அ) டிரான்ஸ்போசான் (அ) இடமாற்றிக் கூறுகள் என்றால் என்ன?
8.
பூமியில் உள்ள முக்கிய உயிர்த்தொகைகள் யாவை?
9.
தென்னிந்தியக் கலாசாரத்தில் ஆரோக்கியமான எண்ணையாக சமையிலும், மருத்துவத்துறையிலும் குறிப்பிடப்படுவது எது?
10.
தமிழகத்தில் வெண்டைக்காய் விளையுமிடங்கள் கூறு.
11.
தொல்லுயிர் எச்ச மரபணுக்கள் என்றால் என்ன?
12.
'திரள்' என்றால் என்ன?
13.
ஹெபாடைடிஸ் B தடுப்பூசி ஒரு துணை அலகு தடுப்பூசியாகும். காரணம் தருக.
14.
கலப்புறுத்தம் என்றால் என்ன?
15.
இயற்கை வேளாண்மை எவ்வாறு வேதியியல் உரங்கள் பயன்படுத்தும் வேளாண்மை முறையை விட மேலானது?
16.
மூடுவிதைத் தாவர, திறந்த விதைத் தாவர மகரந்தச் சேர்க்கைகளை வேறுபடுத்துக.
17.
நோய்த் தடைகாப்பின் இரும் பெரும் பிரிவுகள் எவை?
18.
திசு வளர்ப்பு என்றால் என்ன?
19.
போட்டியிடுதல் என்றால் என்ன?
20.
பசுமை இல்ல விளைவு (அ) ஆல்பிடோ விளைவு என்றால் என்ன?
21.
மூலக்கூறு பாரம்பரியவியல் என்றால் என்ன?
22.
திடீர் மாற்றக் கொள்கையின் முக்கிய பண்புகள் யாவை?
23.
பரிணாமம் என்றால் என்ன?
24.
மெண்டலின் பரிசோதனைகளுக்கு - தோட்டத்துப் பட்டாணி ஒரு மிகச்சிறந்த தேர்வாக இருந்ததற்குத் காரணம் தருக.
25.
இரண்டாம் வளர்சிதை மாற்றப் பொருட்களையும் அவை பெறப்படும் தாவரங்களையும் அட்டவணைப்படுத்துக.
26.
காற்று மாசுபாட்டினைக் கட்டுப்படுத்துதல் சட்டம் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது.
27.
முராகிஷி மற்றும் ஸ்கூக் ஆகியோரின் திசு வளர்ப்பில் இவர்களது பங்களிப்பைத் தருக.
28.
மனித செல்களில் மிகச்சிறியவை, மிகப்பெரியவை எவை?
29.
பெண் புற இனப்பெருக்க உறுப்பின் பகுதிகள் எவை?
30.
31.
கருப்பை வாய் புற்றுநோயின் பொதுவான அறிகுறிகள் யாவை?
32.
ஸ்ட்ரோபிலா ஆக்கம் என்றால் என்ன?
33.
ஒகசாகி துண்டங்கள் என்றால் என்ன? இவை எந்த திசையில் உருவாக்கப்படுகின்றன?
1.
1. பயிர் பெருக்கம் மற்றும் பயிர் வளர்ச்சியைக் கண்காணிக்கும் வேளாண்மைக்கு உதவும் ஒரு ஆளில்லா வானூர்தியாகும்.
2. விவசாயிகள் தங்களது நிலங்களை வானிலிருந்து கண்காணிக்கும் வாய்ப்பினை வழங்குகிறது.
3. நீர்ப்பாசன பிரச்சனைகள், மண்ணின் மாற்றங்கள், பூச்சி மற்றும் பூஞ்சைத் தாக்கங்கள் முதலிய தொல்லைகளை கூரிய பார்வையால் தெளிவுபடுத்த உதவுகிறது.
4. பாதுகாப்பான, சிக்கனமான, அபாயங்களற்ற பூச்சி மருந்து, உரங்கள் பயன்படுத்துவதற்கு பயன்படும் எளிய முறையாகும்.
2.
3.
| பயனற்ற ஓசோன் படலம் | நன்மை தரும் ஓசோன் படலம் |
| அடிவளிமண்டலத்தில் (troposphere) காணக்கூடிய ஓசோன் படலம் பயனற்றதாகும். ஏனென்றால் இந்த அடுக்கு சூரியனிடமிருந்து வெளிப்படும் UV கதிர்களை தடுத்து நிறுத்துவதில் ஈடுபடுவதில்லை. | மீவெளி மண்டலத்தில் (stratosphere) காணக்கூடிய ஓசோன் படலம் நன்மை தரும் அதற்காக. ஏனெனில் இவ்வடுக்கு சூரியனிடமிருந்து வெளிப்படும் UV கதிர்களை பெருமளவில் தடுத்து நிறுத்தி DNA சிதைவினால் உயிரினங்களில் தீங்குண்டாவது தடுக்கப்படுகிறது. |
4.
1. ஓர் அலகு இடத்தில் தாவரங்களின் எண்ணிக்கை அல்லது உயிரித்திரள் அடிப்படையில் குறிப்பிடப்படுகிறது.
2. இது கிராம் / சதுர மீட்டர் / வருடம் (அ) கிலோகலோரி / சதுரமீட்டர் / வருடம் ஆகிய அலகுகளால் குறிப்பிடப்படுகிறது.
5.
1. கிண்டி தேசிய உயிரியல் பூங்கா - சென்னை
2. மன்னார் வளைகுடா கடல்சார் உயிரியப் பூங்கா - ராமநாதபுரம் தூத்துக்குடி
3. இந்திரா காந்தி தேசிய உயிரியல் பூங்கா - கோயம்புத்தூர்
4. முதுமலை தேசிய உயிரியல் பூங்கா - நீலகிரி
5. முக்குருத்தி தேசிய உயிரியல் பூங்கா - நீலகிரி.
6.
1. பறவைகள் அதிக உணவு கிடைக்கும் மழைக்காலம் துவங்கும் முன்பே கூடு கட்டுதல் மற்றும் இனப்பெருக்கம் ஆகிய செயல்களில் ஈடுபடுகின்றன.
2. வறண்ட காலத்தில் பறவைகள் அரிதாகவே இனப்பெருக்கம் செய்கின்றன.
7.
இது இலக்கு அமைவிடத்தோடு எந்த ஒரு தொடர் வரிசைத் தொடர்பையும் பெற்றிராமல் மரபணு தொகையத்தில் தம்மை செருகிக் கொள்ளத்தக்க DNA தொடர் வரிசையாகும். எனவே இடமாற்றக் கூறுகள் நடமாடும் மரபணுக்கள் எனப்படுகின்றன.
8.
1. பனிச்சமவெளி உயிர்த் தொகை
2. பசுமை மாறா ஊசியிலைக்காடு உயிர்த்தொகை
3. புல்வெளி உயிர்த்தொகை
4. உயர்மலைச் சாரல் உயிர்த்தொகை
5. வன உயிர்த்தொகை மற்றும்
6. பாலைவன உயிர்த் தொகை
9.
எள் எண்ணெய் (நல்லெண்ணெய்)
10.
கோயம்புத்தூர், தர்மபுரி, வேலூர்
11.
1. விரைவாகக் கூடிய சில DNA-க்கள் பொய்யான மரபணுக்களால் உருவகிக்கப்படுகின்றன.
2. இத்தகைய மரபணுக்கள், கடந்த காலங்களில் உயிரோட்டத்துடன் செயல்பட்டவைகள் -ஆனால் தற்போது புரதம் உருவாக்கும் தன்மையை இழந்துவிட்டவை
3. இவை பரிணாமத்திற்கான வரலாற்றைக் கூறுகிறது.
12.
1. இரண்டாம் நிலை சுத்திகரிப்பின் போது முதல்நிலையில் உருவான நீர் பெரிய காற்றோட்டமுள்ள தொட்டிக்குள் செலுத்தப்படுகிறது.
2. அங்கு அவை இயந்திரங்களின் உதவியால் தொடர்ச்சியாக கலக்கப்படுவதால் காற்று உட்செலுத்தப்படுகிறது.
3. இதனால் காற்று சுவாச நுண்ணுயிரிகள் தீவிரமாக வளர்ந்து திரளாக உருவாகின்றன.
4. திரள் என்பது பாக்டீரியாத் தொகுப்பும் பூஞ்சை இழைகளும் இணைந்து வலைப்பின்னல் போன்ற அமைப்பாக காணப்படும்.
13.
சாக்கரோமைசெஸ் செரிவிசியே எனும் ஈஸ்டில், ஹெபாடைடிஸ் B புறப்பரப்பு எதிர்பொருள் தூண்டிக்கான மரபணுவை நகலாக்கம் செய்து, துணை அலகு தடுப்பூசியாக மறுசேர்க்கை ஹெபாடைடிஸ் B தடுப்பூசியாக உற்பத்தி செய்யப்படுகிறது.
14.
(i) மரபணுவகையத்தில் வேறுபட்ட இரண்டிற்கு மேற்பட்ட தாவரங்களைக் கலப்புறச் செய்யும் முறைக்குக் கலப்புறுத்தம் என்று பெயர்
(ii) இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட இரகச்சிற்றினங்களின் தகுந்த பண்புகளை இணைக்கப் பயன்படும் மிகச்சிறந்த வழிமுறையாகவும் உள்ளது
(iii) இயற்கையான கலப்புறுத்தம் நிகழ்வு முதன்முதலாகக் காட்டன் மேதர் என்பவரால் சோளப்பயிரில் அறியப்பட்டது
15.
1. இயற்கை வேளாண்மை என்பது இயற்கையான வழிகளில் தாவரங்களை பயிர் செய்தல் மற்றும் விலங்குகளை வளர்த்தல் ஆகியவற்றை உள்ளடக்கியது ஆகும்.
2. கரிமப் பொருட்களை பயன்படுத்தி மண்ணின் தரத்தைப் பாதுகாத்தல் மற்றும் உயிரியல் செயல்பாடுகளை ஊக்குவித்தல்.
3. மண் வாழ் நுண்ணுயிரிகளை பயன்படுத்தி பயிர்களுக்கு ஊட்டச்சத்துக்களை அளித்தல்.
4. சூழியல் சமநிலை பராமரிக்கப்படுகிறது.
5. இதன்மூலம் மாசடைதலும் கழிவுகளும் குறைகின்றது.
6. இயற்கை முறையில் களை மற்றும் தீங்குயிரிகளை கட்டுப்படுத்துதல்.
16.
| திறந்த விதைத் தாவர மகரந்தச் சேர்க்கை | மூடுவிதைத் தாவர மகரந்தச் சேர்க்கை | |
| 1 | நேரடி நிகழ்வு | மறைமுக நிகழ்வு |
| 2 | மகரந்தத் துகள்கள் திறந்த நிலையில் உள்ள சூல்களை நேரடியாகச் சென்றடைகின்றன. | மகரந்தத் துகள்கள் சூலக அலகின் சூலக முடியில் படியும் |
17.
1. இயல்பு நோய்த் தடைகாப்பு
2. பெறப்பட்ட நோய்த் தடைகாப்பு
18.
தகுந்த கட்டுப்படுத்தப்பட்ட சூழலில், தாவரத் திசுக்களை தனிப்பட்ட வளர்ப்பு ஊடகத்தில் வளர்க்கும் முறை திசு வளர்ப்பு (Tissue culture) எனப்படும்.
19.
இதில் இருவகையான உயிரினங்கள் (அ) சிற்றினங்களுக்கு இடையிலான இடைச்செயல்களில் இரண்டு உயிரினங்களும் பாதிப்படைகின்றன.
20.
சிறிய துகள்களைக் கொண்ட ஏரோசால்கள் வளிமண்டலத்தினுள் நுழையும் சூரியக் கதிர்வீச்சினை பிரதிபலிக்கும். இது ஆல்பிடோ விளைவு எனப்படுகிறது.
21.
மரபணுக்கள், புற அமைப்பு, மற்றும் உயிர்ச் செயல்களை எவ்வாறு மூலக்கூறு நிலையில் மேற்கொள்கிறது என்பதை விளக்கும் பிரிவு.
22.
1. திடீர் மாற்றம் அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படும் தன்மை கொண்டது.
2. இயற்கையாக இனப்பெருக்கம் செய்யும் இனக்கூட்டத்தில் திடீர் மாற்றங்கள் ஏற்படும்.
3. இடைப்பட்ட உயிரினங்கள் காணப்படாது.
4. இயற்கைத் தேர்வுக்கு உட்பட்டது.
23.
ஒரு இனக் கூட்டத்திலுள்ள ஒரு சிற்றினத்தின் அல்லது அதற்கு மேற்பட்ட பண்புகளில் ஏற்படும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கடத்தப்படக்கூடிய மாற்றங்கள் பரிணாமம் எனப்படும்.
24.
(i) இது ஒரு பருவ தாவரமாகவும், ஒற்றை மரபணுவால் கட்டுப்படுத்தக்கூடிய தெளிவான எதிரிடைப் பண்புகளைக் கொண்டதாகவும் இருப்பது
(ii) தற்கருவுறுதல் நடைபெறுவது இயல்பானது அயல் கருவுறுதல் செய்வது எளிதானது.
25.
| இரண்டாம் நிலை வளர்சிதைப் பொருட்கள் | தாவரங்கள் | பயன்கள் |
|---|---|---|
| டிகாக்சின் | டிஜிடாலிஸ் பர்பூரியா/td> | இதயத்திற்கு மருந்து |
| கோடின் | பப்பாவர் சோம்னிஃபெரம் | வலிநிவாரணி |
| கேப்சைசின் | கேப்சிகம் அன்னும் | வாதவலியை குணப்படுத்த |
| வின்கிரிஸ்டைன் | கேதராந்தஸ் ரோசியஸ் | புற்றுநோய்க்கு எதிர்மருந்து |
| குவினைன் | சின்கோனா ஆஃபிசினாலிஸ் | மலேரியா எதிர்மருந்து |
26.
காற்று மாசினைக் கட்டுப்படுத்தும் சட்டம். 1981-ம் ஆண்டு இயற்றப்பட்டு 1987 ஆம் ஆண்டு திருத்தியமைக்கப்பட்டது.
27.
(i) திசு வளர்ப்பு ஊடகத்தை முறைப்படுத்தினார்கள். இது திசு வளர்ப்பின் மைல்கல்லாகும்.
(ii) அனைத்து வகையான திசு வளர்ப்புக்கும் பெரும்பாலும் பயன்படுத்தக்கூடிய ஊடகமாகும்.
28.
1. விந்து - மிகச்சிறிய மனித செல்
2. அண்டம் - மிகப்பெரிய மனித செல்
29.
(i) பேரிதழ்கள்
(ii) சிற்றிதழ்கள்
(iii) கன்னித்திரை
(iv) சுமரி
30.
31.
1. இடுப்பு வலி
2. கலவிக் கால்வாய் திரவ மிகைப்போக்கு
3. இயல்புக்கு மாறான இரத்தப்போக்கு
32.
இந்நிகழ்வில் பல கிடைமட்டப்பிளவுகள் ஒரே நேரத்தில் நடைபெற்று தனித்துப் பிரியாத எண்ணற்ற உயிரிகளை உருவாக்குகின்றன.
33.
1. பின்தங்கு இழையில் புதிதாக உருவாக்கப்பட்ட துண்டுகள் - ஒகசாகி - துண்டங்கள் எனப்படும்.
2. இவை சிறிய தொடர்ச்சியற்ற துண்டங்கள் ஆகும்.
3. இவை 5' - 3' - திசையில் RNA பிரைமரில் இருந்து துவங்குகிறது.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards