12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 29/08/2020
12 ஆம் வகுப்பு வேதியியல் மாதிரி 2 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Chemistry Sample 2 Mark Book Back Questions (New Syllabus) 2020
12ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
\(2 \times 10^{-3}\) M, H3O+ அயனிச் செறிவைக் கொண்டுள்ள ஒரு பழரசத்தில் OH– அயனிச் செறிவை கணக்கிடுக. கரைசலின் தன்மையை கண்டறிக.
2.
ஒத்த தொகுதிகளைக் கொண்டுள்ள ஈரிணைய ஆல்கஹால்களைத் தயாரிக்க ஒரு தகுந்த வினை பொருளைத் தருக.
3.
கூழ்மநிலையிலுள்ள Fe(OH)3 மற்றும் As2S3 ஆகியவற்றை ஒன்றாக கலக்கும்போது நிகழ்வதென்ன?
4.
ஹாலஜனிடைச் சேர்மங்கள் என்றால் என்ன? எடுத்துக்காட்டுடன் தருக.
5.
கனிமம் மற்றும் தாது ஆகியவற்றிற்கிடையேயான வேறுபாடுகள் யாவை?
6.
பின்வருவனவற்றுள் இருந்து பீனாலை எவ்வாறு தயாரிப்பாய் ?
i) குளோரோபென்சின்
ii) ஐசோபுரப்பைல் பென்சீன்
7.
தொகுப்பு டிடர்ஜெண்ட்கள் பற்றி குறிப்பு வரைக .
8.
(A) எனும் கரிம சேர்மம் ( C3H5Br ) ஐ உலர் ஈதரில் உள்ள மெக்னீஷியத்துடன் வினைப்படுத்தும்போது சேர்மம் (B) கிடைக்கிறது. இச்சேர்மத்தை CO2 உடன் வினைப்படுத்தி அமிலத்துடன் சேர்க்கும்போது (C) கிடைக்கிறது. (A), (B) மற்றும் (C) ஆகியவற்றை கண்டறிக.
9.
பின்வரும் அணைவுச் சேர்மங்களை அவைகளின் மோலார் கடத்துத் திறனின் ஏறு வரிசையில் எழுதுக.
(i) Mg[Cr(NH3)(Cl)5]
(ii) [Cr(NH3)5Cl]3[CoF6]2
(iii) [Cr(NH3)3Cl3]
10.
சங்கிலித் தொடராக்கம் என்றால் என்ன? கார்பனின் சங்கிலித் தொடராக்கப் பண்பினைப் பற்றி குறிப்பு எழுதுக.
11.
புரதங்களின் முதல்நிலை மற்றும் இரண்டாம் நிலை அமைப்புகளை வேறுபடுத்துக.
12.
டேனியல் மின்கல கட்டமைப்பை விளக்குக. கலவினையை எழுதுக.
13.
அமிலங்கள் மற்றும் காரங்கள் பற்றிய லெளரி–ப்ரான்ஸ்டட் கொள்கையை விளக்குக.
14.
A \(\rightarrow \)விளைபொருள் என்ற பூஜ்ய வகை வினைக்கான தொகைப்படுத்தப்பட்ட வேக விதியினை வருவிக்க.
15.
படிக திண்மங்களை படிக வடிவமற்ற திண்மங்களிலிருந்து வேறுபடுத்துக.
16.
1.
கொடுக்கப்பட்டது H3O+ = \(2 \times 10^{-3}\)M
\(K_{w}=[H_{3}O^{+}][OH^{-}]\)
\(\therefore [OH^{-}]=\frac{K_{w}}{[H_{3}O^{+}]}=\frac{1\times10^{-14}}{2\times10^{-3}}=5\times10^{-12}M\)
\(2\times10^{-3}>>5\times10^{-12}\)
அதாவது [H3O+]>>[OH-], எனவே பழச்சாறு அமிலத்தன்மை கொண்டது
2.

3.
அயனிகளின் மின்சுமைகளின் நடுநிலையாக்கல் நடைபெறும். எனவே வீழ்படிவாதல் ஏற்படும் அதாவது Fe3+ மற்றும் O2-அயனிகள் நடுநிலையாக்கப்படுகின்றன. எனவே புதிய சேர்மங்கள் உருவாகும்.
Fe(OH)3 ஒரு நேர்மின்சுமையுடைய கூழ்மம்
As2O3 ஒரு எதிர்மின் சுமையுடைய கூழ்மம்
4.
ஒவ்வொரு ஹேலஜனும் மற்ற ஹேலஜன்களுடன் வினைபட்டு ஹேலஜன் இடைச்சேர்மங்கள் என்ற இடைச்சேர்மங்களை உருவாக்குகின்றன.
உதாரணம்: AB வகை BrF : AB, வகை = ICl3
5.
| கனிமம் | தாது | |
| 1. | இயற்கையில் காணப்படும் அகழ்ந்து எடுக்கப்பட்ட ஒரு பொருளானது ஓர் உலோகத்தை அதன் தனித்த நிலையிலோ, அல்லது அதன் ஆக்சைடு, சல்பைடு போன்ற சேர்ம நிலைகளிலோ கொண்டிருப்பின், அந்தப் பொருள் கனிமம் எனப்படும். | அதிக சதவீதத்தில் உலோகத்தினை பெற்றுள்ள கனிமங்களிலிருந்து எளிதாகவும், பொருளாதார ரீதியாக சிக்கனமாகவும் உலோகங்களை பிரித்தெடுக்க இயலுமாயின் அத்தகைய கனிமங்கள் தாதுக்கள் எனப்படும். |
| 2. | அனைத்துக் கனிமங்களும் தாதுக்கள் அல்ல | அனைத்துத் தாதுக்களும் கனிமங்களாகும் |
| 3. | பாக்சைட் மற்றும் களிமண் ஆகியன அலுமினியத்தின் கனிமங்களாகும். | பாக்சைட் அலுமினியத்தின் தாது ஆகும் |
6.
குளோரோ பென்சீன்:
300 வளிமண்டல அழுத்தம் மற்றும் 633 K வெப்பநிலை கொண்ட மூடிய கலனில் வைத்து குளோரோ பென்சீனை 6-8% NaOH கொண்டு நீராற்பகுக்கும் போது முதலில் சோடியம் பீனாக்ஸைடு கிடைக்கிறது. இதனை நீர்த்த HCl கொண்டு வினைப்படுத்த பீனால் கிடைக்கிறது.

ஐசோபுரப்பைல் பென்சீன்:
523 K வெப்பநிலையில் H3PO4, வினையூக்கி முன்னிலையில் ஒரு மூடிய கலனில் பென்சீன் மற்றும் புரப்பீன் கலந்த கலவையை வெப்பப்படுத்தும் போது கியூமின் (ஐசோபுரப்பைல் பென்சீன்) கிடைக்கிறது. கியூமின் மற்றும் 5% நீரிய சோடியம் கார்பனேட் கரைசலுடன் காற்றை செலுத்தும்போது ஆக்ஸிஜனேற்றமடைந்து கியூமின் ஹைட்ரோபெராக்ஸைடு கிடைக்கிறது. இதனை நீர்த்த அமிலத்துடன் வினைப்படுத்தும் போது பீனால் மற்றும் அசிட்டோன் கிடைக்கிறது. அசிட்டோன் இவ்வினையில் முக்கிய துணை விளைபொருளாக கிடைக்கிறது.

7.
தொகுப்பு டிடர்ஜெண்ட்கள் என்பவை ஆல்கைல் ஹைட்ரஜன் சல்பேட்டுகளின் சோடியம் உப்புகள் அல்லது நீண்ட சங்கிலி ஆல்கைல் பென்சீன் சல்ஃபானிக் அமிலங்களின் சோடியம் உப்புகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட விளைபொருட்களாகும். மூன்று வகையான டிடர்ஜெண்ட்கள் உள்ளன.
சோப்புகள்:
அ) எதிரயனி டிடர்ஜெண்ட்கள் :
இவை சல்போனேற்றப்பட்ட நீண்ட சங்கிலி ஆல்கஹால் அல்லது ஹைட்ரோகார்பன்களின் சோடியம் உப்புகள் ஆகும். இவற்றின் மூலக்கூறின் எதிரயனி பகுதி சுத்தப்படுத்தும் செயலில் ஈடுபட்டுள்ளது. எ.கா. சோடியம் லாரைல் சல்பேட் (SDS)
பயன்: வீட்டு உபயோகத்திலும் மற்றும் பல்பொடியிலும் பயன்படுத்தப்படுகிறது.
ஆ) நேரயனி டிடர்ஜெண்ட்கள் :
இவை அசிட்டேட்டுகள், குளோரைடுகள் அல்லது புரோமைடுகள் அயனிகளாகக் கொண்ட அமீன்களான நான்கு (4o) அமோனியம் உப்புகள். இவற்றின் மூலக்கூறின் நேரயனி பகுதி சுத்தப்படுத்தும் செயலில் ஈடுபட்டுள்ளது.
எ.கா.: N- ஹெக்சாடெக்கைல்ட்ரைமெத்தில் அமோனியம் குளோரைடு
இ) அயனித் தன்மையற்ற டிடர்ஜெண்ட்கள் :
இவற்றில் எந்த அயனியும் இல்லை. இவை உயிர் மூலக்கூறு நிறை ஆல்கஹாலின் எஸ்டர்களாகும்.
எ.கா. பென்டாஎரித்ரிட்டால் ஸ்டியரேட்
பயன்: பாத்திரம் கழுவுவதிலும் பயன்படுகிறது.
8.
வளையபுரப்பைல் புரோமைடு
வளையபுரப்பைல் மெக்னீசியம் புரோமைடு
வளையபுரப்பைன் கார்பாக்சிலிக் அமிலம்
9.
i) \(
\mathrm{Mg}\left[\mathrm{Cr}\left(\mathrm{NH}_3\right) \mathrm{Cl}_5\right] \rightleftharpoons \mathrm{Mg}^{2+}+\left[\mathrm{Cr}\left(\mathrm{NH}_3\right)_5 \mathrm{Cl}_5\right]^{2-} \) (2 அயனிகள்)
ii) \(\left[\mathrm{Cr}\left(\mathrm{NH}_3\right)_5 \mathrm{Cl}\right]_3\left[\mathrm{CoF}_6\right]_2 \rightleftharpoons\left[\mathrm{Cr}\left(\mathrm{NH}_3\right)_5 \mathrm{Cl}\right]_3^{6+}+\left[\mathrm{CoF}_6\right]_2^{6-}\) (2 அயனிகள்)
iii) [Cr(NH3)3 Cl3] - அயனியுறுவதில்லை.
iii > ii > i
10.
சங்கிலித் தொடராக்கம் என்பது, ஒரு தனிமத்தின் அணுச் சங்கிலி உருவாக்கும் திறன் ஆகும். சங்கிலித் தொடராக்கத்திற்கு பின்வரும் நிபந்தனைகள் அத்தியாவசியமானவையாகும்.
(i) தனிமத்தின் இணைதிறன் இரண்டோ அல்லது அதற்கு அதிகமாகவோ இருத்தல் வேண்டும்.
(ii) ஒரு தனிமம் அதே தனிம அணுவுடன் சுய பிணைப்பை ஏற்படுத்தும் திறனை கொண்டிருக்க வேண்டும்.
(iii) சுய பிணைப்பின் வலிமையானது, மற்ற தனிமங்களுடன் உருவாக்கும் பிணைப்புகளைப் போலவே வலிமையானதாக இருத்தல் வேண்டும்
(iv) மற்ற மூலக்கூறுகளுடன், சங்கிலித் தொடர் மூலக்கூறுகள் வேதிவினை மந்தத்தன்மை கொண்டிருத்தல் வேண்டும்.
கார்பன் அணுவானது மேற்கூறிய அனைத்து பண்புகளையும் பெற்றுள்ளது. மேலும் தங்களுக்குள் பிணைப்பை ஏற்படுத்தும் தன்மையையும் மற்றும் H, O, N, S, ஹேலஜன்கள் போன்ற பிற அணுக்களுடன் இணைந்து பல சேர்மங்களை உருவாக்கும் இயல்பினையும் பெற்றுள்ளது.
11.
புரதங்களின் முதல் நிலை அமைப்பு:
அமினோ அமிலங்களால் ஆன பாலிபெப்டைடு சங்கிலிகளாகும்.
அமினோ அமிலங்களுக்கு இடையே உருவாகும் பெப்டைடு பிணைப்பு ஆகும்.
நேரான சங்கிலி அமைப்பு.
புரதங்களின் இரண்டாம் நிலை அமைப்பு:
α-சுருள் மற்றும் β இழைகள் அல்லது தாள்கள் உருவாக்கும் பெப்டைடு சங்கிலி.
பாலிபெப்டைடு சங்கிலியில் உள்ள அமினோ அமிலங்கள் கார்பனைல் (-C=O) ஆக்சிஜனுக்கும் மற்றும் அமின்களுக்கும் (NH2) இடையே உருவாகும் ஹைட்ரஜன் பிணைப்பு மூலமாக ஒழுங்கான வடிவத்தை உருவாக்குகிறது.
α-சுருள் அல்லது β தாள் அமைப்பு
12.
டேனியல் மின்கலம் ஒரு கால்வானிக் மின்கலமாகும். இது ஒரு வோல்டாயிக் மின்கலம் ஆகும்.
இது இரண்டு அரை மின்கலங்களைக் கொண்டுள்ளது.
அ) ஆக்ஸிஜனேற்ற அரை மின்கலன்
முகவையிலுள்ள நீர்த்த ஜிங்க் சல்பேட் கரைசலில் ஜிங்க் உலோகப்பட்டை மூழ்க வைக்கப்பட்டுள்ளது.
ஒடுக்க அரை மின்கலன்
முகவையிலுள்ள நீர்த்த காப்பர் சல்பேட் கரைசலில் காப்பர் உலோகப் பட்டை மூழ்க வைக்கப்பட்டுள்ளது.
அரை மின்கலங்களை இணைத்தல்
ஜிங்க் மற்றும் காப்பர் பட்டைகள் வெளிப்புறமாக ஒரு கம்பி மூலம் இணைக்கப்படுகின்றன. இதனூடே ஒரு இணைப்பியும் (k) ஒரு மின்மூலமும் இணைக்கப்பட்டுள்ளன. (எடுத்துக்காட்டு: வோல்ட் மீட்டர்).
எதிர்மின்முனைப் பகுதி மற்றும் நேர்மின்முனைப் பகுதிகளிலுள்ள மின்பகுளிக் கரைசல்கள், தலைகீழாக கவிழ்த்து வைக்கப்பட்டுள்ள U வடிவ குழாய் மூலம் இணைக்கப்பட்டுள்ளன.
இந்த U வடிவ குழாயில், அகார்-அகார் ஜெல்லுடன் KCl, Na2 SO4 போன்ற வினையுறா மின்பகுளிகள் கலந்த பசை வைக்கப்பட்டுள்ளது. இது உப்பு பாலமாக செயல்படுகிறது.
இணைப்பி (k) மூலம் மின்சுற்றை மூடும்போது, எலக்ட்ரான்கள் ஜிங்க் பட்டையிலிருந்து காப்பர் பட்டைக்கு பாய்கின்றன. இதற்கு காரணம் அந்தந்த மின்முனைகளில் நிகழும் ஆக்ஸிஜனேற்ற ஒடுக்க வினைகளே ஆகும்.

நேர்மின்வாய் ஆக்ஸிஜனேற்றம்
i) ஜிங்க் பட்டை நேர்மின்முனை என்றழைக்கப்படுகிறது.
ii) ஜிங்க் மின்முனையில் ஆக்ஸிஜனேற்றம் நிகழ்கிறது.
iii) ஜிங்க் ஆனது Zn2+ அயனிகளாகவும், எலக்ட்ரான்களாகவும் ஆக்ஸிஜனேற்றமடைகின்றன.
iv) இந்த Zn2+அயனிகள் கரைசலுக்குள் நுழைகின்றன.
v) எலக்ட்ரான்கள் கம்பியின் வழியே வெளிச்சுற்றிற்கு பாய்கின்றன. பின்னர் அவை காப்பர் பட்டைக்குள் நுழைகின்றன.
vi) ஜிங்க் மின்முனையில் எலக்ட்ரான்கள் விடுவிக்கப்படுவதால், எதிர்குறியை (-ve) பெறுகிறது.
\(\mathrm{Zn}_{(\mathrm{s})} \rightarrow \mathrm{Zn}_{(\mathrm{aq})}^{2+}+2 \mathrm{e}^{-}\) (எலக்ட்ரான் இழப்பு -ஆக்ஸிஜனேற்றம்)
எதிர்மின்வாய் ஒடுக்கம் :
காப்பர் பட்டை - எதிர்மின்வாய்வாக செயல்படுகிறது.
ஆக்ஸிஜன் ஒடுக்கம் நடைபெறுகிறது.
மின்சுற்று வழியே ஜிங்க் பட்டையிலிருந்து காப்பர் பட்டைக்கு பாய்கின்றன.
கரைசலிலுள்ள Cu2+ அயனிகள் எலக்ட்ரான்களை ஏற்றுக்கொண்டு காப்பர் உலோகமாக ஒடுக்கமடைகின்றன.
இவை காப்பர் மின்முனையின் மீதே படிகின்றன.
காப்பர் மின்முனை எலக்ட்ரான்களை உட்கொள்ளப்படுவதால் நேர்க்குறியை (+ve) பெறுகிறது.
\(C u_{(a q)}^{2+}+2 e^{-} \rightarrow C u_{(s)}\)
(எலக்ட்ரான் ஏற்பு - ஒடுக்கம்)
உப்புப்பாலம் :
இரண்டு அரை மின்கலன்களிலுள்ள மின்பகுளிக் கரைசல்கள் உப்புப்பாலத்தை பயன்படுத்தி இணைக்கப்படுகின்றன.
இரண்டு மின்நடுநிலைத்தன்மையை பகுதிகளிலும் பராமரிக்க, வினையுறா எதிரயனிகள் Cl- (உப்புப் பாலத்தில் வைக்கப்பட்டுள்ள KCI லிருந்து) உப்புப் பாலத்திலிருந்து நேர்மின்முனைப்பகுதிக்குள் நுழைகின்றன.
எதிர்மின்முனை ஒடுக்கத்தால் எதிர்மின்முனை கரைசல் அதிகளவு SO42- அயனியை கொண்டுள்ளது.
மின் நடுநிலைத் தன்மையை பராமரிக்க K+அயனிகள் உப்புப்பாலத்திலிருந்து எதிர்மின்முனைப்பகுதிக்குள் நகருகின்றன.
மின்சுற்று முழுமையடைதல்:
எதிர்மின்சுமை கொண்ட ஜிங்க் மின்முனையிலிருந்து, நேர்மின்சுமை கொண்ட காப்பர் மின்முனையை நோக்கி வெளிச்சுற்றின் வழியே எலக்ட்ரான்கள் பாய்கின்றன.
அதே நேரத்தில், எதிரயனிகள் நேர்மின்முனைப் பகுதியை நோக்கியும், நேரயனிகள் எதிர்மின்முனைப் பகுதியை நோக்கியும் நகருகின்றன.
இதனால் மின்சுற்று முழுமையடைகிறது.
மின்முனைகள் அழிதல்:
டேனியல் மின்கலமானது செயல்பட, ஜிங்க் மின்முனையில் நிறை தொடர்ந்து குறைகிறது, ஆனால் காப்பர் மின்முனையின் நிறை தொடர்ந்து அதிகரிக்கிறது.
எனவே ஜிங்க் மின்முனையானது முற்றிலுமாக Zn2+ அயனிகளாக மாறும் வரையிலோ அல்லது மொத்த Cu2+ அயனிகளும் உலோக காப்பராக மாறும் வரையிலோ மின்கலன் வேலை செய்யும்.
Zn(s) + CuSO4(aq) \(\rightarrow\) ZnSO4(aq) + Cu(s)
கால்வானிக் மின்கல குறியீடு
\(Z n_{(s)}\left|Z n_{(a q)}\right| C u^{2+}_{(a q)}| C u_{(s)}\)
13.
அமிலம் என்பது மற்றொரு பொருளுக்கு ஒரு புரோட்டானை வழங்கக்கூடிய ஒரு பொருளாகும். காரம் என்பது மற்றொரு பொருளிலிருந்து ஒரு புரோட்டானை ஏற்கக்கூடிய ஒரு பொருளாகும். அதாவது, அமிலம் என்பது ஒரு புரோட்டான் வழங்கி மற்றும் காரம் என்பது ஒரு புரோட்டான் ஏற்பி.
ஹைட்ரஜன் குளோரைடை நீரில் கரைக்கும்போது, அது, நீர் மூலக்கூறுக்கு ஒருபுரோட்டானை வழங்குகிறது. அதாவது, HCl ஒரு அமிலமாகவும், H2O ஒரு காரமாகவும் நடந்துகொள்கின்றன. அமிலத்திலிருந்து காரத்திற்கு புரோட்டான் மாற்றப்படும் நிகழ்வை பின்வருமாறு குறிப்பிடலாம்.
HCl + H2O \(⇌\) H3O+ +Cl-
அம்மோனியாவை நீரில் கரைக்கும்போது, அது நீரிலிருந்து ஒரு புரோட்டானை ஏற்றுக்கொள்கிறது. இந்த நேர்வில், அம்மோனியா (NH3) மூலக்கூறு ஒரு காரமாகவும், H2O மூலக்கூறு அமிலமாகவும் செயல்படுகின்றன. வினையானது பின்வருமாறு குறிப்பிடப்படுகிறது.
H2O + NH3 \(⇌\) NH4+ + OH-
இதன் மறுதலை வினையை பின்வரும் சமநிலையில் கருதுவோம்.

H3O+ஆனது CI - க்கு ஒரு புரோட்டானை வழங்கி HClஐ உருவாக்குகிறது.
அதாவது, விளைபொருட்களும் அமிலம் மற்றும் காரங்களாக செயல்படுகின்றன. பொதுவாக,லௌரி - ப்ரான்ஸ்டட் (அமிலம் - கார) வினையை பின்வருமாறு எழுதப்படுகிறது.
அமிலம்1 + காரம்2 \(⇌\) அமிலம்2 + காரம்1
ஒரு புரோட்டானை வழங்கிய பிறகு எஞ்சியுள்ள பகுதி ஒரு காரமாகும் (காரம்1). மேலும் இது ப்ரான்ஸ்டட் அமிலத்தின் (அமிலம்1) இணைகாரம் என்றழைக்கப்படுகிறது. அதாவது ஒரு புரோட்டானால் மட்டும் வேறுபடும் வேதிக்கூறுகள் இணை அமில - கார இரட்டைகள் என்றழைக்கப்படுகின்றன.

HCI மற்றும் Cl -,H2O மற்றும் H3O+ஆகியன இரண்டும், வெவ்வேறு இணைஅமில - கார இரட்டைகளாகும். அதாவது, Cl - என்பது HCL அமிலத்தின் இணைகாரம் (அல்லது) HCI என்பது Cl - அயனியின் இணை அமிலம் ஆகும். இதேபோல H3O+ என்பது H2Oவின் இணை அமிலமாகும்.
லௌரி ப்ரான்ஸ்டட் கொள்கையின் வரம்புகள்:
BF3, AlCl3 போன்ற புரோட்டான்களை வழங்க இயலாத சேர்மங்களும் அமிலங்கள் போல செயல்படுவதை இக்கொள்கை விளக்கவில்லை.
14.
செறிவு எல்லை முழுமைக்கும் ஒரு வினையின் வினைவேகமானது, வினைபடு பொருட்களின் செறிவினைப் பொருத்து அமையவில்லை எனில் அவ்வினை பூஜ்ய வகை வினை என அழைக்கப்படுகிறது. இத்தகைய வினைகள் அரிதானவை பின்வரும் கருத்தியலான பூஜ்ய வகை வினையைக் கருத்தில் கொள்வோம்.
A →விளைபொருட்கள்
வினைவேகம் Rate = k[A]°
\( \frac{-d[A]}{d t}=k(1) \\ \Rightarrow-d[A]=k d t \)
t = 0 எனும் போது செறிவு [A] மற்றும், t = t எனும் போது செறிவு [A] என அமையும் எல்லையில் மேற்கண்டுள்ள சமன்பாட்டை தொகையிட
\(-\int_{\left[A_0\right]}^{[A]} \mathrm{d}[\mathrm{A}]=\mathrm{k} \int_0^{\mathrm{t}} \mathrm{dt}\)
\( -([\mathrm{A}])_{\left[A_0\right]}^{[A]}=k(t)_0^t \\ {\left[A_0\right]-[A]=k t} \\ k=\frac{\left[A_0\right]-[A]}{t} \mathrm{Y}=\mathrm{m} x+\mathrm{C} . [\mathrm{A}]=-\mathrm{kt}+\left[\mathrm{A}_0\right] \Rightarrow y=m x+c \)
[A] Vs நேரம். வரைபடமானது k என்ற சாய்வு மதிப்பினையும் [A] என்ற வெட்டுத்துண்டு மதிப்பினையும் பெற்றுள்ள ஒரு நேர்கோட்டினை தரும்.
15.
| வ.எண் | படிக வடிவமுடைய திடப்பொருள் | படிக வடிவமற்ற திடப்பொருள் |
|---|---|---|
| 1 | இதன் உட்கூறுகள் நீண்ட எல்லை வரையில் ஒழுங்காகக் கட்டமைக்கப்பட்டுள்ளன. | ஒழுங்குத் தன்மையின் எல்லை குறைவு. இதன் உட்கூறுகள் அங்கும் இங்கும் ஒழுங்கின்றி அமைந்துள்ளன. |
| 2 | குறிப்பிட்ட வடிவமுடையது. | ஒழுங்கற்ற வடிவமுடையது. |
| 3 | படிக வடிவமுடைய திடப்பொருட்கள் பொதுவாக திசையொப்பு (aniotropic) பண்பற்றவை. | இவைகள் திரவங்களைப் போன்று திசையொப்புப் பண்பு (isotropic) உடையவை. |
| 4 | இவைகள் உண்மையான திடப்பொருட்களாகக் கருதப்படுகின்றன. | இவைகள் போலி திடப்பொருட்கள் அல்லது அதிகுளிரவைக்கப்பட்ட திரவங்களாகக் கருதப்படுகின்றன. |
| 5 | வரையறுக்கப்பட்ட உருகுதல் வெப்ப மதிப்பினைப் பெற்றுள்ளன. | இவைகள் வரையறுக்கப்பட்ட உருகுதல் வெப்ப மதிப்பினைப் பெற்றிருப்பதில்லை. |
| 6 | இவைகள் துல்லியமான உருகுநிலையைப் பெற்றுள்ளன | வெப்பநிலை அதிகரிக்கும் போது இவைகள் சீராக, மென்மையாக மாறும் இயல்புடையவை. எனவே இப்பொருட்களை எவ்வடிவமாகவும் வார்க்க இயலும். |
| 7 | எடுத்துக்காட்டு: NaCl, வைரம் போன்றவை |
எடுத்துக்காட்டு: இரப்பர், கண்ணாடி போன்றவை |
16.

12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards