12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Poem - 6 - Incident of the French Camp Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 6 - On the Rule of the Road Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 5 - The Chair Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 4 - The Midnight Visitor Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 4 - Ulysses Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 4 - The Summit Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 29/08/2020
12 ஆம் வகுப்பு வணிகவியல் முக்கிய 2 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Commerce Important 2 Mark Book Back Questions (New Syllabus) 2020
12ஆம் வகுப்பு Commerce / வணிகவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Commerce / வணிகவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Commerce Test1.
”கூட்டம்” என்றால் என்ன ?
2.
முழுநேர இயக்குநர் என்பவர் யார்?
3.
பங்குரிமை ஆணை என்பதை வரையறு.
4.
டிஜிட்டல் இந்தியாவைப் பற்றி குறிப்பு வரைக.
5.
தெளிவான தொழில் முனைவோருக்கு உதாரணம் தருக.
6.
தொழில் முனைவோரின் மேலாண்மை பணிகளை பட்டியலிடுக. (ஏதேனும் 2)
7.
காசோலை என்றால் என்ன?
8.
9.
தனியார்மயமாக்கல் என்றால் என்ன?
10.
மின் சந்தையிடுகை என்றால் என்ன?
11.
பெருநிறுவன நிர்வாகத்தின் பொருள் என்ன?
12.
மாநில ஆணையம் என்ற பதத்தை விவரிக்கவும்.
13.
ஜான் F கென்னடி கூறிய நுகர்வோர் உரிமைகள் யாவை?
14.
"வாங்குவோர் ஜாக்கிரதை" என்றால் என்ன?
15.
பண்டங்கள் மற்றும் பணிகளின் விலையை பாதிக்கும் அக காரணிகள் இரண்டினைத் தருக.
16.
ஒழுங்குமுறை சந்தை என்றால் என்ன?
17.
பங்கேற்று நடித்தல் முறை என்றால் என்ன?
18.
சோதனை குறித்து நீவீர் அறிவது யாது?
19.
அக வள ஆட்சேர்ப்பின் ஏதெனும் இரண்டைக் கூறுக.
20.
மனித வள மேலாண்மையின் இயல்புகளில் ஏதேனும் இரண்டு கூறுக.
21.
புறத்தோற்றமற்ற பத்திர கணக்கு என்றால் என்ன ?
22.
ஊகவணிகர்களின் வகைகள் யாவை?
23.
அரசுப் பத்திரங்கள் சந்தை என்றால் என்ன?
24.
பரஸ்பர நிதி என்றால் என்ன?
25.
உடனடிச் சந்தை என்றால் என்ன?
26.
பணியாளர்களை யாரால் கட்டுப்படுத்த முடியும்?
27.
மேலாளர் என்பவர் யார்?
1.
ஒரு நிறுமத்தின் கூட்டம் என்பது பல வகையான சட்டவிதி கூறுகளுக்கு உட்பட்டு முறையான வகையில் ஒருங்கிணைக்கப்படும் நபர்களின் குழுவை கூட்டம் எனலாம். ஒரு நிறுமம் தனது செயல்பாடுகள் குறித்து பல முடிவுகளை எடுக்க, பல வகையான கூட்டங்களை குறிப்பிட்ட கால இடைவெளிக்கு ஒருமுறை கூட்ட வேண்டியது அவசியமாகிறது.
2.
நிறுமத்தின் இயக்குநராக பணிபுரியும் ஒருவர் தனது வேலை நேரம் முழுவதையும் நிறுமத்தின் வளர்ச்சிக்காக பயன்படுத்துவதும் மேலும் இதன் மூலமாக நிறுமத்திற்கு வருமானம் ஏற்படும் வகையில் குறிப்பிடத்தக்க நேரடி ஆர்வத்தைக் காட்டுபவரும் முழுநேர இயக்குநர் ஆவார்.
3.
(i) ஒரு நிறுவமானது தனது பங்குகள் மீது உரிமை உள்ளது என வாக்குறுதி அளித்து தனது பொது முத்திரையுடன் வெளியிடப்படும் ஆணை பங்குரிமை ஆணை எனப்படும்.
(ii) இதனை வைத்திருப்பவருக்கு அதில் குறிப்பிட்டுள்ள பங்குகளுக்கு உரிமை உண்டு.
4.
இத்திட்டத்தின் மூலம் அனைத்து அரசின் சேவைகளும் பயனாளிகளுக்கு மின்னணு முறையில் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் இந்திய பொருளாதாரம் மின்னணு பொருளாதாரமாக மாறி வருகிறது. உலகெங்கும் கிடைக்கும் பொருட்கள் மற்றும் பணிகளை மக்கள் மின்னணு முறையில் பெற வகை செய்திடும் அறிவு பொருளாதாரமாக இந்திய பொருளாதாரம் மாறி வருகிறது என்றால் மிகையாகாது.
5.
திருவாளர்கள் திருபாய் அம்பானி, ஜம்சேட் டாடா, T.V. சுந்தரம் ஐயங்கார், சேஷாத்திரி, பிர்லா, நாராயண மூர்த்தி, அஸிஸ் பிரேம்ஜி.
6.
1. திட்டம் தீட்டல்
2. அமைப்புப்பணி
3. கட்டளையிடல்
4. கட்டுப்பாடு காத்தல்
5. ஒருங்கிணைப்பு
7.
மாற்றுமுறை ஆவணச் சட்டம் 1881ன் பிரிவு 6ன்படி வெளிப்படையாக கேட்டாலன்றி வேறு எப்போதும் பணம் தரக்கூடாது என வாடிக்கையாளரால் வங்கியின் மீது எழுதப்படும் மாற்றுச் சீட்டே காசோலை எனப்படும்.
8.
9.
தனியார்மயமாக்கல் என்றால் பொதுத்துறை நிறுவனங்களின் உரிமைகளை தனியார் நிறுவனங்களுக்கு மாற்றி தரும் நிகழ்வு அல்லது கொள்கையை குறிப்பிடுவதாகும். சுருங்கக் கூறின் தனியார்மயமாக்கல் என்பது பொதுதுறைக்கு ஒதுக்கப்பட்ட தொழில்களை தனியார் துறைக்கு மாற்ற அனுமதி அளிப்பதாகும்.
10.
பொருள்களையும் சேவைகளையும் மின் இணையம் மற்றும் தொலைத் தொடர்பு மின்னணு சாதனங்கள் மூலம் விற்பனை செய்வதை மின் சந்தையிடுகை எனலாம்.
11.
(i) பெருநிறுவன ஆளுகை என்பது ஒரு நிறுவனத்தை நிர்வகிக்கும் விதிகள் மற்றும் கொள்கைகள் ஆகும். ஒரு நிறுவனத்தை நிர்வகித்து அதன் குறிக்கோளை அடைவதற்கான ஒரு வடிவமைப்பை இது வழங்குகிறது. இது உட்கட்டுப்பாட்டு செயல்திறன் அளவீடு மற்றும் பெருநிறுவனத்தை வெளிப்படுத்துதல் ஆகியவற்றிற்கான வழிகாட்டுதல்களை வழங்குகிறது.
(ii) பெருநிறுவன ஆளுகை என்பது பயமின்மை, வெளிப்படைத்தன்மை, பொறுப்பு மற்றும் பொறுப்பு ஏற்பு (Accountability) போன்ற நான்கு தூண்களை அடிப்படையாக கொண்டது.
12.
(i) இந்த ஆணையம் மாநில அளவில் செயல்பட்டுவருகிறது. இந்த அமைப்பை நுகர்வோர் குறைபாட்டு தீர்ப்பாணையம் என அழைக்கப்படுகிறது.
(ii) சரக்கு மற்றும் சேவைகள் தொடர்பாக எழும் புகார்கள் இந்த தீர்ப்பாணையத்தின் செயல் எல்லைக்குள் அடங்கும்.
(iii) விற்கப்பட்ட சரக்கில் ஏற்படும் பழுதுகள் மற்றும் தரக்குறைகள் மற்றும் நியாயமற்ற மற்றும் தடை செய்யும் வணிக நடைமுறைகளுக்கு (Unfair Restrictive Trade Practices). வணிக நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு ஆணையம் என்ற பெயரில் துவங்கப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டுவருகிறது.
13.
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி திரு. ஜான் F கென்னடி அவர்கள் " அடிப்படையான நுகர்வோர் உரிமை என்பது பாதுகாப்பு உரிமை, தகவல் பெறும் உரிமை, தேர்ந்தெடுக்கும் உரிமை மற்றும் கேட்கும் உரிமை" என்று கூறுகிறார்.
14.
(i) வாங்குவோர் ஜாக்கிரதை எனும் சொல் கேவியட் எம்ப்டர் எனும் இலத்தீன் மொழிச் சொல்லிலிருந்து பிறந்தது ஆகும். "உள்ளது உள்ளபடியே என்ற சொற்றொடரைப்போன்று நுகர்வோர் வாங்கிய பொருட்கள் அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை அல்லது குறைபாடுடையவை எனில் அத்தகு இடர்பாடுகளுக்கு வாங்குபவரே பொறுப்பேற்க வேண்டும்.
(ii) பொருட்களை வாங்கியவர் அதற்கு நிவாரணம் தேட இயலாது என நுகர்வோரை எச்சரிக்கை செய்யும் தத்துவமே "வாங்குவோர் ஜாக்கிரதை அல்லது விழித்திரு" எனும் கோட்பாடாகும்.
15.
1. மூலப்பொருட்கள் கிடைக்கும் அறை
2. உற்பத்திச் செலவு
3. பொருளின் தரம்
4. தேவை
16.
அரசின் சட்டம் மற்றும் விதிகளுக்கு உட்பட்டு சந்தை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் இதன் செயல்பாடுகள் அனைத்தும் சட்டமுறைப்படி கட்டுப்படுத்தப்படுகிறது.
உதாரணமாக மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னை பங்கு சந்தைகள்.
17.
(i) பயிற்றுவிப்பாளர்கள் இந்த முறையில் பதவியின் சூழ்நிலையை அல்லது பதவியில் நியமிக்கப்பட்ட பாத்திரத்தை விளக்குவார்.
(ii) அவர்கள் எந்த ஒத்திகையும் இல்லாமல் ஒதுக்கப்படும் பாத்திரங்களில் செயல்பட வேண்டும்.
(iii) முன் தயாரிக்கப்பட்ட உரையாடல்கள் எதுவும் இல்லை. எனவே அவர்கள் எந்த வகையிலும் பங்கேற்காமல் பங்கு வகிக்க வேண்டும்.
18.
1. விண்ணப்பதாரர் பணிக்கு தேவையான கல்வித்தகுதி மற்றும் அறிவினை பெற்றவரா என உறுதிப்படுத்திக் கொள்ள மேற்கொள்ளப்படும் பல்வேறு தேர்வு நடவடிக்கைகளை சோதனை எனப்படுகிறது.
2. சோதனை, திறன் சோதனை மற்றும் ஆளுமை சோதனை என பிரிக்கப்படுகிறது.
19.
(i) பதவி உயர்வு - பணிமூப்பு மற்றும் தகுதியின் அடிப்படையில் பணியாளர்கள் நிறுவன அமைப்பின் படிநிலையில் உள்ள கீழ்மட்ட நிலையிலிருந்து மேல்மட்ட நிலைக்கு சென்று பணி புரிய வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
(ii) தக்கவைத்தல் - மேலாண்மை விருப்பப்படி, வயது முதிர்வு ஓய்வு பிறகும் ஓய்வூதியம் பெறும் பணியாளர்களை நிறுவன தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்ளலாம்.
20.
(i) உலகளவில் பொருத்தமானது: (Universally relevant) மனித வள மேலாண்மை உலகளவில் பொருந்தக்கூடியதாக உள்ளது.
(ii) இலக்கு சம்பந்தமானது:
ஒரு நிறுவனத்தில் உள்ள மனித வளத்தை சிறந்த முறையில் பயன்படுத்துவதன் மூலம் அந்நிறுவனத்தின் குறிக்கோள்களை அடைவது சாத்தியமாகிறது.
21.
(i) புறத்தோற்றமற்ற பத்திரக் கணக்கு என்பது ஒருவர் மின்னணு அல்லது புறத்தோற்றமற்ற வடிவத்தில் வாங்கக்கூடிய அனைத்து பங்குகளையும் குறிக்கிறது.
(ii) புறத்தோற்றமற்ற பத்திரக் கணக்கு, சாதாரண வங்கிக் கணக்கைப் போலவே பங்குகள், பத்திரங்கள், அரசாங்கப் பத்திரங்கள், பரஸ்பர நிதிகள் மற்றும் பரிமாற்ற வர்த்தக நிதிகள் போன்றவைகளை வைத்துள்ளது.
22.
(i) இந்தியாவில் பங்கு மாற்றகங்களில் நான்கு வகையான ஊக வணிகர்கள் செயல்படுகின்றனர்.
(ii) அவர்கள் காளை, கரடி, கலைமான், முடவாத்து என்று அழைக்கப்படுகின்றனர்.
23.
அரசு அல்லது தங்கமுனை பத்திரங்களை வாங்கவும் விற்கவும் கூடிய ஒரு சந்தைக்கு 'அரசு பத்திரங்கள் சந்தை' என்று பெயர்.
24.
(i) சிறு முதலீட்டாளர்களின் சேமிப்புகளை பெரிய முதலீடாக மாற்றும் நிதி நிறுவனங்களையே பரஸ்பர நிதி என்கிறோம்.
(ii) பரஸ்பர நிதி நிறுவனம் பங்குதாரர்களிடமிருந்து பெற்ற நிதியினை முதலீடு செய்வதற்கு அந்த முதலீட்டிலிருந்து பெற்ற பலனை பங்குதாரர்களுக்கு அளிக்கிறது.
25.
ஆவணங்களை வழங்கலும், ரொக்கம் பெறுதலும் உடனடியாக நடைபெறும் சந்தை உடனடிச் சந்தை ஆகும். அதாவது தீர்வு உடனடியாக நடைபெறுகிறது.
26.
1. பணியாளர்களை ஒரு அமைப்பின் மேலாளரால் கட்டுப்படுத்த முடியும்.
2. ஒரு மேலாளர், பணியாளர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு, பதவி உயர்வு, பணியாளர்களின் செயல்திறன் மதிப்பீடு மூலம் கட்டுப்படுத்த முடியும்.
27.
(i) ஒரு நிறுவனத்தின் மேலாண்மைப் பணியை ஏற்பவர் மேலாளர்.
(ii) ஒரு மேலாளர் என்பவர் நிறுவனத்தின் நிர்வாகம் மற்றும் பணி சார்ந்த செயல்பாடுகள் என இரண்டினையும் மேற்கொள்கிறார்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Supplementary - 3 - The Hour of Truth (Play) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 3 - All the World’s a Stage Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 3 - In Celebration of Being Alive Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 2 - Life of Pi Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards