12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 29/08/2020
12 ஆம் வகுப்பு வணிகவியல் முக்கிய 2 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Commerce Important 2 Mark Creative Questions (New Syllabus) 2020
12ஆம் வகுப்பு Commerce / வணிகவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Commerce / வணிகவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Commerce Test1.
நுகர்வோரின் எங்கிருந்து பொருட்களை வாங்குவது சிறந்ததாக கருதப்படுகிறது?
2.
திருமதி இராஜி என்பவர் ஒரு தொலைக்காட்சி வாங்குகிறார். அதன் தரத்தில் குறைபாடு, ஆனால் அவரது உறவினர் முத்து என்பவர் புகார் அளிக்கலாமா?
3.
விளம்பரத்தின் முக்கிய நோக்கம் யாது?
4.
செபி என்பது யாது?
5.
நீதிமன்றத்தால் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட நபரை இயக்குனராக நியமிக்கலாமா?
6.
பங்குத் தொகுதி பங்கு என்பதில் அடங்குமா?
7.
ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்தின் கீழ் அனைத்து மகளிரும் நிதியுதவி பெற முடியுமா?
8.
நிறும செயலர் வரைவிலக்கணம் தருக.
9.
பாரம்பரிய தொழில் முனைவோரை பற்றி கூறுக.
10.
விற்பனை என்றால் என்ன?
11.
"Put option", "Call option" - விளக்கம் தருக
"வாங்க விரும்பினால்", அழைப்பு விருப்பம்" - விளக்கம் தருக
12.
புதிய பொருளாதார கொள்கைக்கு அடித்தளமாக விளங்கியது எது?
13.
வணிக சுற்றுச் சூழல் என்றால் என்ன?
14.
சோதனை ஆய்வுத் தேர்வுக்கு எடுத்துக்காட்டுடன் தருக.
15.
தூய்மை இரசீது என்பதன் பொருள் யாது? எடுத்துக்காட்டு தருக
16.
மூலதனச் சந்தைக்கு வரைவிலக்கணம் தருக
17.
மனித வளத்தை நிர்வகிப்பதற்கு முக்கியமானதாக கருதப்படுவது எது?
18.
சந்தைப்படுத்தப்படும் சொத்துக்களுக்கு உதாரணம் தருக
19.
தொழில் முனைவு என்றால் என்ன?
20.
எவ்வாறு கீழ்நிலை ஊழியர்களின் குறிக்கோள் நிர்ணயிக்கப்படுகிறது?
21.
கொணர்பவர் காசோலை என்றால் என்ன?
22.
புதுமைப்படுத்துதல் என்றால் என்ன?
23.
நிர்வாகம் என்றால் என்ன?
24.
பரிந்துரை சந்தையிடுதல் என்றால் என்ன?
25.
கட்டுமம் என்றால் என்ன?
26.
சில்லறை விற்பனை சந்தை என்றால் என்ன?
27.
பணி வழியற்ற பயிற்சி முறை என்பது யாது?
1.
1. கூட்டுறவு அங்காடி
2. சிறப்பங்காடி
3. அரசுக் கடைகள்
2.
(i) ஆம், புகார் அளிக்கலாம்
(ii) பாதிக்கப்பட்டவர் மட்டுமே புகார் அளிக்கவேண்டும் என்ற அவசியமில்லை அவருக்கு பதில் வேறொருவரும் புகார் அளிக்கலாம்
3.
நுகர்வோர் மற்றும் பொருளை பயன்படுத்துபவருக்கு பொருள் அல்லது சேவை குறித்த தகவலை அளிப்பது
4.
(i) இந்தியப் பத்திர மாற்றக வாரியம் (செபி)
(ii) பங்குச் சந்தையை ஒழுங்குபடுத்தப்படும், கட்டுப்படுத்தும், சட்டபூர்வமான அமைப்பு ஆகும்
5.
தண்டனை காலம் முடிந்து 5 ஆண்டுகள் கழித்து அவரை இயக்குனராக நியமிக்கலாம்.
6.
பங்கு தொகுதிக்கும் பங்குக்கும் வேறுபாடு எதுவும் சொல்லப்படாத நிலையில் மட்டுமே பங்கு என்பதில் பங்கு தொகுதியும் அடங்கும்.
7.
1. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினை மகளிர் மட்டுமே ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்தின் கீழ் பயன் பெற முடியும்.
2. நிதி வசதி 10 லட்சம் முதல் 1 கோடி வழங்கப்படுகிறது.
8.
"ஒரு நிறுமத்தின் அமைச்சராக (அல்லது) நிர்வாக பணிகளை செய்து முடிக்க தேவையான அனைத்து தகுதிகளும் பெற்றுள்ள தனிநபர்". - நிறும சட்டம் 2013 பிரிவு 2 (14)
9.
1. இவர்கள் வணிகத்தை வாழ்க்கையின் ஒரு அங்கமாக கருதுபவர்கள்
2. தொழில் முனைவு என்பது இவர்களுக்கு இரத்தத்தில் ஊறிய ஒன்று.
3. காலங்காலமாக தொழிலில் இருப்பவர்கள், அதனால் சந்தையைப் பற்றிய முழுமையான அறிவு பெற்றவர்களாக இருப்பார்கள்.
10.
விற்பனை என்பது விற்பவர் பொருளின் மீதான உரிமையை விலை என்ற மறுபயனுக்கு மாற்றித் தருவது ஆகும்.
11.
(i) விருப்பச் சந்தையில் ஒரு ஆவணத்தை விற்க விரும்பினால் அதற்கு "வாங்க விரும்பினால்" அதாவது "Put option" என்றும்
(ii) வாங்க விரும்பினால் அதனை "அழைப்பு விருப்பம்" அதாவது "Call option" என்றும் அழைக்கப்படுகிறது.
12.
1. வணிகம் மற்றும் வரிவிதிப்பு தொடர்பான பொது உடன்பாடுகள் குறித்து ஆர்தர் டங்கல் கொடுத்த வரைவுத்திட்டம்.
2. 1991 ஆம் ஆண்டு இந்தியாவில் செயல்படுத்தப்பட்ட புதிய பொருளாதாரக் கொள்கை ஆர்தர் டங்கல் வரைவுத்திட்டத்தை ஒட்டியே அமைந்தது.
13.
வணிகத்தை சுற்றியுள்ள அதே சமயம் வணிகத்தின் மீது ஆதிக்கம் செலுத்துகின்ற உட்புற மற்றும் வெளிப்புற காரணிகளின் தொகுப்பு.
14.
அ) ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பித்தவரை வாகனம் ஓட்டி காட்டச் சொல்லுதல்.
ஆ) இசைப்பள்ளி மாணவரை இசைக்கச் சொல்லிக் கேட்டல்.
இ) ஆசிரியர் பணிக்கானவரை பாடம் நடத்திக் காட்டிச் சோதித்தல்.
15.
எந்த ஒரு ஆவணமும் எழுதி இணைக்கப்படாத இரசீதுகள் தூய்மை இரசீதுகள் எனப்படும். எ.கா: தொடர்வண்டி இரசீது மற்றும் சரக்குந்து இரசீது
16.
மூலதனச் சந்தை என்பது, "பல்வேறு வகையான மூலதன ஆதாயங்களின் தேவை மற்றும் அளிப்பிற்கு இடையே தோற்றுவிக்கப்பட்ட இணைப்புகளுடன் நிறுவன முதலீடுகள் மற்றும் செயல்பாடுகளின் ஒரு கலவையே ஆகும்" - அருண் கே.தத்தா
17.
1. பணியாளர்களை ஊக்குவித்தல்
2. பங்கேற்கச் செய்தல்
3. ஒருங்கிணைத்தல்
18.
1. பட்டியலிடப்பட்ட நிறுமத்தின் பங்குகள்
2. அரசு பத்திரங்கள்
3. பொதுத்துறை நிறுவனங்களின் பிணையங்கள்
19.
(i) ஒரு அமைப்பு தோற்றுவிப்பதில் முடியும் செயலைக் குறிக்கும்
(ii) ஊதியம் நாடி பணி மேற்கொள்வதையும், பெற்ற கல்வியை வைத்து தொழில் செய்வதையும் குறிக்காது
20.
கீழ்நிலை ஊழியர்களுக்கு வாய்ப்பை வழங்குவதன் மூலம், அவர்கள் தங்களது தரநிலையை தக்க வைத்துக் கொள்ளவும், உள் தரநிலையை அமைக்கவும், சாதனை வாய்ப்புகள் அதிகமாகும். இவ்வாறாக கீழ்நிலை ஊழியர்களின் குறிக்கோள் நிர்ணயிக்கப்படுகிறது.
21.
காசோலையை கொண்டு வருபவருக்கு பணம் தருமாறு ஆணை பிறப்பித்து வழங்கப்படும் காசோலை கொணர்பவர் காசோலை எனப்படும்
22.
வியாபார உலகில் செய்யப்படும் மாற்றங்களை எதிர்கொள்ள ஊழியர்களையும், அமைப்பையும் தயார்நிலைப்படுத்தும் செயல்பாடு ஆகும்.
23.
1. ஒரு குழுவால் ஒரு நிறுவனத்தை நிர்வகிப்பதற்கான செயல்முறையே நிர்வாகம் என்று அழைக்கப்படுகிறது.
2. நிறுவனத்தை நிர்வகிப்பவர் நிர்வாகி என்று அழைக்கப்படுகிறார்.
24.
வழக்கமாக பொருள்களைப் பற்றி விளம்பரம் செய்யாமல் ஒரு நிறுவனத்திற்குரிய ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர் மூலம் பொருள்களின் தன்மை மற்றும் சிறப்பைப் பற்றி மற்றவர்களுக்கு பரிந்துரை செய்ய தூண்டி விற்பனை அதிகரிக்கும் முறையை பரிந்துரை சந்தையிடுதல் எனலாம்.
25.
பொருட்களை விற்பனை செய்வதற்கு முன்னர் எளிதில் கையாளுவதற்கு ஏற்றவாறு உறையிடுவதையே கட்டுமம் எனப்படுகிறது.
26.
மொத்த விற்பனையாளர்களிடமிருந்து மொத்தமாக பொருட்களை கொள்முதல் செய்து அவற்றை நுகர்வோருக்கு நேரடியாக சிறு சிறு அளவில் தேவைக்கு ஏற்ப விற்பனை செய்யப்படும் சந்தையாகும்.
27.
பணி வழியற்ற பயிற்சி முறை என்பது தொழிலாளர்கள், ஊழியர்களிடம் உண்மையான பணி நிலையத்திலிருந்து வேலை பாடம் கற்றுக் கொள்வதற்கான பயிற்சி முறையாகும்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards