12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 29/08/2020
12 ஆம் வகுப்பு வணிகவியல் மாதிரி 2 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Commerce Sample 2 Mark Creative Questions (New Syllabus) 2020
12ஆம் வகுப்பு Commerce / வணிகவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Commerce / வணிகவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Commerce Test1.
நுகர்வோரின் எங்கிருந்து பொருட்களை வாங்குவது சிறந்ததாக கருதப்படுகிறது?
2.
ஒரு நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் மனுவை தாக்கல் செய்யும் முன் செய்ய வேண்டியவை யாவை?
3.
விளம்பரத்தின் முக்கிய நோக்கம் யாது?
4.
செபி என்பது யாது?
5.
ஒரு இயக்குனர் தனக்குண்டான பணியை வேறு எவரிடமும் ஒப்படைக்கலாமா?
6.
உருவாக்கச் சான்றிதழ் என்றால் என்ன?
7.
ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்தின் கீழ் அனைத்து மகளிரும் நிதியுதவி பெற முடியுமா?
8.
நிறும செயலரின் பொறுப்புகள் யாவை?
9.
தொழில் முனைவோரை வகைப்படுத்தும் பல்வேறு காரணிகளை தருக?
10.
அறுதியிடப்படாத சரக்கு என்பதன் பொருள் யாது?
11.
இந்திய பங்குச் சந்தையில் மூன்று பங்கு பரிவர்த்தனை நிலையங்களைக் கூறு
12.
உலகமயமாக்கல் என்றால் என்ன?
13.
நிறுமத்தின் சூழல்கள் எவற்றை சார்ந்துள்ளது?
14.
தொலைபேசி நேர்காணல் - குறிப்பு வரைக.
15.
இந்தியாவில் 1986 வரை கிடைத்த பணச் சந்தையின் ஆவணங்களைக் கூறு.
16.
பரஸ்பர நிதி வணிகத்தில் ஈடுபடும் சில நிறுவனங்களைக் கூறுக
17.
எவ்வாறு ஊழியர்களை தக்க வைத்துக் கொள்ள முடியும்?
18.
நிதிச் சந்தை தேசிய வளர்ச்சிக்கு எவ்வாறு வழி செய்கிறது?
19.
சந்தையிடுகையும் விற்பனையும் ஒன்றா? ஏன்?
20.
எவ்வாறு கீழ்நிலை ஊழியர்களின் குறிக்கோள் நிர்ணயிக்கப்படுகிறது?
21.
காசோலையை பென்சிலால் எழுதலாமா? ஏன்?
22.
புதுமைப்படுத்துதல் உள்ளடக்கியது எது?
23.
வேலை வாய்ப்பு உலகில் நுழைவதற்கு "சிறந்த கடவுச்சீட்டு" எது?
24.
சந்தை செய்திகளைப் பரப்ப உதவும் நவீன கால உத்திகள் யாவை?
25.
சந்தையிடுகை கலவையின் வரைவிலக்கணம் தருக
26.
சில்லறை விற்பனை சந்தை என்றால் என்ன?
27.
பயிற்சி முறை - வரைவிலக்கணம் தருக.
1.
1. கூட்டுறவு அங்காடி
2. சிறப்பங்காடி
3. அரசுக் கடைகள்
2.
புகார் மனுவை பொருள் தயாரித்த நிறுவனத்திற்கோ அல்லது பொருள் விற்ற நிறுவனத்திற்கோ சட்டப்படி அறிவிப்பை நுகர்வோர் அனுப்ப வேண்டும்
3.
நுகர்வோர் மற்றும் பொருளை பயன்படுத்துபவருக்கு பொருள் அல்லது சேவை குறித்த தகவலை அளிப்பது
4.
(i) இந்தியப் பத்திர மாற்றக வாரியம் (செபி)
(ii) பங்குச் சந்தையை ஒழுங்குபடுத்தப்படும், கட்டுப்படுத்தும், சட்டபூர்வமான அமைப்பு ஆகும்
5.
1. இயக்குனர் தாங்கள் பணியை தாங்களே செய்ய வேண்டும்.
2. நிறும செயல்முறை விதிகளில் அனுமதி வழங்கியிருந்தால் அல்லது சிறப்பு நிபுணத்துவம் கோருகின்ற சில வேலைகளை இயக்குனர் செய்ய இயலாவிடின் இயக்குனர் தனது பணியை வேறு ஒருவருக்கு ஒப்படைக்கலாம்.
6.
தோற்றுவிப்பாளர் முறையான ஆவணங்களை மற்றும் கட்டணங்களை சமர்ப்பித்த பிறகு பதிவாளரால் வழங்கப்படும்.
7.
1. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினை மகளிர் மட்டுமே ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்தின் கீழ் பயன் பெற முடியும்.
2. நிதி வசதி 10 லட்சம் முதல் 1 கோடி வழங்கப்படுகிறது.
8.
1. நிறுமக் கொள்கைகள் குறித்த இரகசியம் காத்தல்
2. நிதிசார்ந்த முடிவுகள் எடுத்தல்
3. பணியாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்தல்
9.
1. தொழில் முனைவோர் கடைபிடிக்கும் தொழில்நுட்பம்
2. தொழிலின் தன்மை
3. தொழில் நடத்தும் இடம்
4. அவர்களின் உரிமை மற்றும் செயல் ஊக்கம்
10.
விற்பனை ஒப்பந்த நாளில் அடையாளம் காணப்படாத சரக்கினை அறுதியிடப்படாத சரக்கு எனப்படும்.
11.
1. தேசிய பங்குச் சந்தை (NSE)
2. இந்திய உடனடிப் பங்கு மாற்றகம் (OTCEI)
3. ஒருங்கிணைந்த இந்திய பங்கு பரிவர்த்தனை லிமிடெட் (ISE)
12.
உலக பொருளாதாரத்துடன் ஒரு நாட்டின் பொருளாதாரம் இணைவது உலகமயமாக்கல் எனப்படும்.
13.
1. உட்புறச் சூழல் - பலம் மற்றும் பலவீனம்.
2. வெளிப்புற சூழல் - வாய்ப்புகள் மற்றும் அச்சுறுத்தல்கள்
14.
1. விண்ணப்பித்தவர்களின் விவரங்களை தொலைபேசி வழியாகவே அறியப்பட்டு தேவையற்றவர்களை ஆரம்ப நிலையிலேயே நீக்கப்படும் முறை தொலைபேசி நேர்காணல் ஆகும்.
2. இது பெரும்பாலும் விண்ணப்பதாரர் நேரில் வர இயலாத போது நடைபெறும் முறையாகும்.
15.
(i) கருவூல சீட்டுகள்
(ii) வணிக ரசீதுகள்
(iii) குறுகிய கால அறிவிப்பு மற்றும் அழைப்புப் பணம்
(iv) உறுதிமொழிப் பத்திரம்
16.
1. ஆயுள் காப்பீட்டு கழகம்
2. UTI
3. வணிக வங்கிகள்
4. SBI - பாரத ஸ்டேட் வங்கி
5. கனரா வங்கிகள்
17.
சுகாதாரம், பாதுகாப்பு, நலன், சமூக பாதுகாப்பு, வேலை திருப்தி மற்றும் வாழ்க்கைத் தரம் இவற்றின் மூலம் ஊழியர்களை தக்க வைத்துக் கொள்ள முடியும்.
18.
நிதிப் பற்றாக்குறை உள்ள நிறுவனங்களுக்கு உபரி நிதிகள் தடங்கலின்றி நடமாட்டம் செய்ய உதவி செய்வதன் மூலம் ஒரு தேசத்தின் வளர்ச்சியில் நிதிச் சந்தை பங்களிப்பை வழங்குகிறது
19.
(i) சந்தையிடுகையும் விற்பனையும் ஒன்றல்ல
(ii) விற்பனை என்பது சந்தையிடுகை பணியின் முக்கிய அங்கம்
(iii) சந்தையிடுகை என்பது பொருள் உற்பத்திக்கு முன்பே தொடங்கி பொருளை உற்பத்தி செய்து வாடிக்கையாளரிடம் கொண்டு சேர்க்கும் ஒட்டுமொத்த நடவடிக்கை.
20.
கீழ்நிலை ஊழியர்களுக்கு வாய்ப்பை வழங்குவதன் மூலம், அவர்கள் தங்களது தரநிலையை தக்க வைத்துக் கொள்ளவும், உள் தரநிலையை அமைக்கவும், சாதனை வாய்ப்புகள் அதிகமாகும். இவ்வாறாக கீழ்நிலை ஊழியர்களின் குறிக்கோள் நிர்ணயிக்கப்படுகிறது.
21.
(i) காசோலையில் பென்சிலால் எழுதுவதற்கு சட்டம் தடை விதிக்கவில்லை
(ii) இருப்பினும் மோசடி செய்யும் வாய்ப்பை கருதி வங்கியர்கள் தாங்கள் அச்சிட்டு தந்த காசோலைகளில் பென்சில் வைத்து எழுத அனுமதிப்பதில்லை
22.
1. புதிய தொழில்நுட்பம்
2. புதிய கையகப்படுத்துதல்
3. புதிய வடிவமைப்பிலான தயாரிப்பு
4. செலவு குறைப்பு
ஆகியவற்றை புதுமைப்படுத்துதல் உள்ளடக்கியுள்ளது.
23.
வணிக உலகம் அல்லது அரசுத்துறை அல்லது தனியார் துறை போன்றவற்றின் வேலை வாய்ப்பு உலகில் வெற்றிகரமாக நுழைவதற்கு சிறந்த கடவுச்சீட்டு போன்றது "மேலாண்மை" ஆகும்.
24.
1. முகநூல்
2. ட்விட்டர்
3. யூடியூப்
4. வாட்ஸ்அப்
25.
அமெரிக்கா சந்தையிடுகை கழகத்தின் கூற்றுப்படி, "சந்தையிடுகை என்பது மக்கள் மற்றும் அவர்களின் நடவடிக்கைகளை உள்ளடக்கி பண்டங்கள் மற்றும் பணிகளை உற்பத்தியாளரிடமிருந்து நுகர்வோருக்கு கொண்டு சேர்ப்பதையே சந்தையிடுகை ஆகும்".
26.
மொத்த விற்பனையாளர்களிடமிருந்து மொத்தமாக பொருட்களை கொள்முதல் செய்து அவற்றை நுகர்வோருக்கு நேரடியாக சிறு சிறு அளவில் தேவைக்கு ஏற்ப விற்பனை செய்யப்படும் சந்தையாகும்.
27.
மதிஸ் மற்றும் ஜாங்சன் கூற்றுப்படி, "பயிற்சி என்பது கற்றல் நடைமுறை. இது ஊழியருக்கு திறன்கள், கருத்துக்கள், மனோபாவங்கள் மற்றும் இலக்குகளை அடைய உதவும் அறிவு".
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards