12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 28/08/2020
12 ஆம் வகுப்பு கணினி பயன்பாடுகள் முக்கிய 2 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Computer Application Important 2 Mark Book Back Questions (New Syllabus) 2020
12ஆம் வகுப்பு Computer Applications / கணினி பயன்பாடுகள் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Applications / கணினி பயன்பாடுகள் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Applications Test

1.
உரைப்பெட்டி (Textbox) மற்றும் உரைபரப்பு (Textarea ) ஒப்பிடுக.
2.
HTML படிவ உறுப்புகளை வரையறு.
3.
mysqli_connect_error( ) செயற்கூறை வரையறு.
4.
PHP இல் உள்ள MySQLi செயற்கூறுகளை கூறுக.
5.
இணையத்தை வரையறு.
6.
WiFi-ன் நன்மைகள் யாவை?
7.
URL இன் வகைகள் யாவை?
8.
IP முகவரி என்றால் என்ன?
9.
for மடக்கு மற்றும் foreach மடக்கினை ஒப்பிடுக.
10.
மடக்கு கட்டமைப்பை வரையறு.
11.
ஒரு ஈத்தர்நெட் போர்ட் என்ன?
12.
Switch கூற்றின் கட்டளை எழுதுக.
13.
நிபந்தனை கூற்றை வரையறு.
14.
தொடர்புருத்த அணிகளை வரையறு.
15.
PHP-ன் செயற்கூறு வரையறுக்கவும்
16.
17.
புலனாகும் பொருட்கள் மற்றும் மின்னணு பொருட்களை உங்கள் சொந்த எடுத்துக்காட்டுடன் வேறுபடுத்துக.
18.
கிளைன்ட் சேவையகம் கட்டமைப்பை வரையறு
19.
PHP ன் பொதுவான பயன்பாடு என்ன?
20.
நுண் மின்னணு செலுத்துதல் மற்றும் பேரின மின்னணு செலுத்துதல் வேறுபடுத்துக.
21.
தரவுதள உறவுநிலைகளின் வகைகளை பட்டியலிடுக.
22.
தரவு மாதிரியை (Data model) வரையரு மற்றும் தரவு மாதிரி வகைகளை பட்டியலிடவும்.
23.
ஃபிஷிங் (Phishing) பற்றி எழுதுக.
24.
தொடர்புள்ள உரை என்றால் என்ன?
25.
Desktop publishing என்றால் என்ன?
26.
EDI யின் நான்கு முக்கிய கூறுகள் எவை?
27.
வரையறு – பல்லூடக உருவாக்கம்.
28.
வரையறு – பல்லூடகம் மற்றும் அதன் சிறப்பம்சம்
1.
| உரைப்பெட்டி (Textbox) | உரைபரப்பு (Textarea) |
| HTML படிவத்தில் ஒரு வரி உரையை உள்ளிடப் பயன்படுகிறது. | HTML படிவத்தில் பல வரி உரையை உள்ளிடப் பயன்படுகிறது. |
| < Input > ஓட்டின் மூலம் உருவாக்கப்படுகிறது. | < Textarea > ஓட்டின் மூலம் உருவாக்கப்படுகிறது. |
2.
1. HTML படிவ உறுப்புகள் என்பன பயனருடன் ஊடாடப் பயன்படும் உரைப்பெட்டி, கீழ்விரி பெட்டி, தேர்வுப் பெட்டி, ரேடியோ பொத்தான்கள் போன்ற சிறப்புக் கூறுகளாகும்.
2. வலைப்பக்கத்தையோ (அ) வலையகத்தையோ பயனர் அணுகும் போது, பயனரிடமிருந்து தரவுகளைச் சேகரிக்கப் பயன்படுகின்றன.
3.
PHP நிரல் மொழி வழியாகத் தரவுத்தள சேவையகக் கணினியை இணைக்கும் போது ஏற்படும் பிழை விவரங்களைத் தரப் பயன்படும் செயற்கூறு. பிழையேதுமில்லை எனில், NULL என்ற மதிப்பைத் திருப்பியனுப்பும்.
கட்டளை அமைப்பு:
mysqli_connect_error();
4.
1. mysqli_connect ( ) Function
2. mysqli_close ( ) Function
3. mysqli_query ( ) Function
5.
1. இணையம் என்பது வலையமைப்புகளின் வலையமைப்பு - உலகளாவிய வலையமைப்பு ஆகும்.
2. இது உலகளாவிய தனிப்பட்ட வலைப்பின்னல்களின் இணைப்பு.
3. இது கல்வி, தொழில், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களால் தனித்தனியாக இயக்கப்படுகிறது.
6.
(i) இது இணையத்திற்கு இயக்கத்தை வழங்குகிறது.
(ii) இது இணையத்துடன் இணைப்பை வழங்குகிறது.
(iii) LAN ன் எளிமை.
(iv) இணைப்பை உறுதிப்படுத்துகிறது.
(v) தொலைதூர இணைப்புகளை இணைக்க அனுமதிக்கிறது.
(vi) குறைந்த செலவு மற்றும் அதிக நன்மைகள்.
7.
URL இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
1. முழு நிலை URL (Absolute URL): இணையத்தில் உள்ள ஒரு கோப்பின் முழுமையான முகவரி ஆகும்.
2. சார்பு நிலை URL (Relative URL): இணையத்தில் உள்ள ஒரு கோப்பின் முழுமையற்ற முகவரி ஆகும்.
8.
IP முகவரி:
(i) IP (Internet Protocol) முகவரி என்பது வலையமைப்பில் உள்ள ஒரு தருக்க (Unique) முகவரியாகும்.
(ii) ஒரு வலையமைப்பில் உள்ள ஒரு கணினியை கண்டறிய ஐபி முகவரி பயன்படுத்தப்படுகிறது.
9.
| for மடக்கு | foreach மடக்கு | |
| 1 | குறிமுறைத் தொகுதியைக் குறிப்பிட்ட தடவைகள் செயல்படுத்த உதவுகிறது. | அணிகளில் பன்முறையைச் செயல்படுத்த எளிதான வழியை வழங்குகிறது. |
| 2 | PHP உட்பட C, C++, Java போன்ற மொழிகளில் பயன்படும் மடக்கு அமைப்பாகும். | PHP-ல் மிகவும் பிரத்யேகமான ஒன்றாகும். |
10.
மடக்கு அமைப்பு: நிரலாக்கம் செய்யும் போது ஒரே குறிமுறைத் தொகுதியை மீண்டும் மீண்டும் குறிப்பிட்ட தடவைகள் செயல்படுத்துவதற்கோ (அ) குறிப்பிட்ட நிபந்தனையை அடையும் வரை செயல்படுத்தப் பயன்படும் கூற்றுகள். இது பன்முறை செயல்பாடுகளை எழுதுவதற்கு பயன்படுகிறது.
11.
1. ஈத்தர்நெட் போர்ட் (அ) தொடர்பி என்பது ஈத்தர்நெட் அட்டையில் ஒரு திறவுப் பகுதியாகும். இது RJ45 இணைப்பியை ஏற்கிறது
2. ஈத்தர்நெட் வடத்தின் RJ45 இணைப்பியை ஏற்படுகிறது
3. மதர்போர்டில் உள்ள ஈத்தர்நெட் அட்டையுடன் ஈத்தர்நெட் வடத்தை இணைக்கிறது
12.
switch(n) {
case label1:
code to be executed if n=label1 ;
break;
case label2:
code to be executed if n= label 2;
break;
case label3:
code to be executed if n=label3;
break;
...
default:
code to be executed if n is different
from all labels;
}
13.
நிபந்தனைக் கூற்றுகள் என்பன நிரலாக்க மொழியில் பல்வேறு முடிவுகளுக்கு ஏற்ப பல்வேறு மொழியில் பல்வேறு முடிவுகளுக்கு ஏற்ப பல்வேறு செயல்பாடுகளைச் செய்யப் பயன்படும் கூற்றுகள் ஆகும்.
14.
தொடர்புருத்த அணிகள் : தொடர்புருத்த அணிகள் என்பது திறவும் (Key) மதிப்பும் (Value) இணைந்த தரவு கட்டமைப்பாகும். நேரியல் அணியில் (Linear array) தரவுகளை தேக்கி வைப்பதற்கு பதிலாக தொடர்புருத்த அணிகளை கொண்டு தரவுகளை தேக்கி வைக்கலாம்
15.
ஒரு நிரலில் உள்ள ஒரு தொகுதியின் ஒரு பகுதி குறிப்பிட்ட செயல்பாட்டு பணிகளை செய்கிறது. (சேர்த்தல், செயற்படுத்துதல், நீக்குதல் கணக்கீடுதல் போன்றவை ).இந்த பகுதி (Segment) செயற்கூறு என்று அழைக்கப்படுகிறது. ஒரு செயற்கூறு என்பது ஒரு வகை துணை நிரல் அல்லது ஒரு நிரலில் உள்ள செயல்முறை ஆகும்.
16.
17.
| புலனாகும் பொருட்கள் | மின்னணு பொருட்கள் |
| குறிப்பிட்ட முகவரிக்கு விநியோகிக்கப்படக் கூடிய மின் - வணிக வலைத்தளத்திலிருந்து நுகர்வோரால் வாங்கப்படக்கூடிய பொருள்கள் | ஒரு வலை தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்படக் கூடிய மென்பொருள் பாடல் (அ) பயன்பாடுகளைக் குறிக்கும் |
| எ.கா: பைகள், காலணிகள், ஆடைகள் | எ.கா: எதிர் நச்சு மென்பொருள் பதிவிறக்கம், hotstar பயன்பாடு பதிவிறக்கம் |
18.
1. சேவையகம் என்பது கிளைன்ட் என்று அழைக்கப்படும் மற்ற நிரல்கள் (அ) சாதனங்களின் செயல்திறனை வழங்கும் ஒரு கணிப்பொறி (அ) சாதனங்களின் கட்டமைப்பே கிளைன்ட் சர்வர் கட்டமைப்பு என்று அழைக்கப்படுகிறது.
2. வலையமைப்பில் (இணையகம்/அகஇணையகம்) இரண்டு விதமான வன்பொருள் அமைப்புகளிடையே பயன்பாடுகளை பகிரும் வழிமுறைகளை பயனாளர் சேவையக கட்டமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
19.
(i) PHP என்பது சேவையகம் சார்ந்த வலை மற்றும் பொதுப் பயன்பாட்டு ஸ்கிரிப்டிங் மொழிகளில் முக்கியமான ஒன்றாகும்.
(ii) மிக எளிமையான மற்றும் இலகுவான திறந்த மூல சேவையகம் சார்ந்த ஸ்கிரிப்டிங் மொழியாகும்.
(iii) எளிதாக HTML மற்றும் பிற பயனாளர் சார் ஸ்கிரிப்டிங் மொழிகளான CSS மற்றும் ஜாவா ஸ்கிரிப்டுடன் உட்பொதிக்க முடியும்.
(iv) நிகழ்நேர வலை உருவாக்க திட்டங்களில் இயங்கு மற்றும் ஊடாடு வலைப்பக்கங்களை உருவாகின்றது.
20.
| நுண் மின் செலுத்துதல் முறைகள் | பேரின மின் செலுத்துதல் முறைகள் |
| 1. இது செயல்திறன் மிக்க, சிறிய அளவிலான மற்றும் அடிக்கடி பணம் செலுத்தலை அனுமதிக்கும் ஒரு மின்னணு பணம் செலுத்தல் அமைப்பு ஆகும். | பேரின மின்செலுத்தல் முறைகள் உயர் மதிப்பு கட்டணங்களை செலுத்த உதவும். |
| 2. பரிவர்த்தனை செலவுகளை மிகவும் குறைவாக வைத்திருப்பதற்காக, தகவல் தொடர்பு மற்றும் கணக்கீட்டு செலவுகள் இங்கே குறைக்கப்படுகின்றன. | பேரின செலுத்தல் அமைப்புகளில், அதிகப் பணப் பரிவர்த்தனைகள் காரணமாகப் பாதுகாப்பு தேவைகள் இதில் கடுமையானதாக இருக்கும். |
21.
ER மாதிரியில், இரண்டு உருப்பொருளுக்கு இடையே உறவுநிலை உள்ளது. மூன்று வகையான உறவுநிலைகள் உள்ளன. அவை:
(i) ஒன்றுடன் ஒன்று உறவு நிலை
(ii) ஒன்றுடன் பல உறவு நிலை
(iii) பலவற்றுடன் பல உறவு நிலை
22.
தரவுத்தள தொழில்நுட்பம் உறவுநிலை மற்றும் பொருள் உறவுநிலை பண்புகளைக் கொண்ட மாதிரிகளின் அடிப்படையில் அமைந்துள்ளது.
வகைகள் :
1. படிநிலை தரவுத்தள மாதிரி
2. வலையமைப்பு மாதிரி
3. உறவுநிலை மாதிரி
4. பொருள் சார்ந்த தரவுத்தள மாதிரி
23.
1. ஃபிஷிங் என்பது ஒரு வகை மின்-வணிக அச்சுறுத்தலாகும்.
2. உண்மையான வங்கி அதிகாரியாக தன்னை பாசாங்கு செய்யும் ஒருவர், மின்னஞ்சல், தொலைபேசி அல்லது குறுஞ்செய்தி மூலம் பயனரை தொடர்பு கொண்டு அவர்களின் வங்கி கணக்கு எண், கடன் அட்டை விவரங்கள், OTP,PIN அல்லது கடவுச்சொற்கள் போன்ற முக்கிய தரவை கேட்டு தனிநபர்களை வலையில் சிக்க வைக்க முயற்சிப்பார்.
3. அதன் விளைவு அடையாள திருட்டு மற்றும் நிதி இழப்பு போன்ற பேரழிவு செயல்களுக்கு வழிவகுக்கும்.
24.
தொடர்புள்ள உரை : உரைத்தொகுதிகளுக்கு இடையே உள்ள உரையை இணைக்கும் செயல்முறை.
25.
டெஸ்க்டாப் பப்ளிசிங் (Desktop publishing) என்பது DTP மென்பொருளைப் பயன்படுத்தி ஆவணங்களுக்கான பக்கங்களை வடிவமைப்பு (Page Layout) செய்வதாகும்.
26.
1. Standard Document Format
2. Translator and Mapper
3. Communication Software
4. Communication Network
27.
பல்லூடக உருவாக்கம் :
திட்டப் பணியானது சுமுகமாகத் தொடரவும் மற்றும் தகவல், இலக்குப் பார்வையாளர்களைச் சென்றடைவதை உறுதி செய்யக்கூடியத் திறமையான திட்டமிடல்.
28.
பல்லூடகம் என்னும் சொல் 'பல' மற்றும் 'ஊடகம்' என இரண்டு சொற்களை உள்ளடக்கியது. அதாவது ஊடகங்களின் பல வடிவங்களை ஒன்றாக இணைக்கிறது. சேமித்தல், தகவல் தொடர்பு, வழங்கல் மற்றும் உரை, ஒளி, நிழற்படம், வரைகலை மற்றும் ஒலி ஆகியவற்றின் உள்ளீடு/வெளியீடு ஊடாடுதல் போன்ற சேவைகளையும் வழங்குகிறது.
அதன் சிறப்பம்சம் :
(i) ஊடகங்களை ஒரே ஊடகத்தில் ஒரே தகவல் தொகுப்பில் ஒன்றிணைக்கிறது .
(ii) தகவல்துறையில் பல்லூடகம் சமீபத்திய செறிவூட்டும் அனுபவமாக மாறி வருகிறது .
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards