12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 28/08/2020
12 ஆம் வகுப்பு கணினி பயன்பாடுகள் முக்கிய 2 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Computer Application Important 2 Mark Creative Questions (New Syllabus) 2020
12ஆம் வகுப்பு Computer Applications / கணினி பயன்பாடுகள் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Applications / கணினி பயன்பாடுகள் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Applications Test

1.
If else ladder என்று அழைக்கப்படுவது எது?
2.
பயனாளர் சேவையகக் கட்டமைப்பு வகைகள் யாவை?
3.
களப்பெயர் முறைமையில் உள்ள முக்கியப் பகுதிகள் யாவை?
4.
MYSQL வில் WHERE பிரிவுடன் பயன்படுத்தக்கூடிய செயற்குறிகளைப் பட்டியலிடு.
5.
இணைப்புத் திறவுகோல் என்றால் என்ன?
6.
தரவுத்தளம் என்றால் என்ன?
7.
MAC முகவரி என்றால் என்ன?
8.
Internet of things (IoT) என்றால் என்ன?
9.
ஹேக்கர்ஸ் என்பவர் யார்?
10.
தரவுத்தளம் என்றால் என்ன?
11.
HTML படிவம் என்றால் என்ன?
12.
விற்பனை முனை (POS) என்றால் என்ன?
13.
குறுக்கீட்டுக் கண்டுபிடிப்புகள் என்றால் என்ன?
14.
Open NMS ன் வகைகள் யாவை?
15.
பேஜ்மேக்கரில் Master Pages Palette ன் பயன் யாது? அதை எவ்வாறு காண்பிப்பாய்?
16.
ஈத்தர்நெட் அட்டை என்றால் என்ன?
17.
திரை உருளல் செய்தல் என்றால் என்ன? அதை எவ்வாறு செய்வாய்?
18.
Real Audio பற்றி குறிப்பு வரைக.
19.
Tiff என்றால் என்ன?
20.
புகழ் பெற்ற எண்முறைச் சான்றிதழ் வகைகள் யாவை?
1.
1.if -else கூற்றில், else தொகுதியில் உள்ள கூற்றுகள் அதற்கு இணையான if கூற்றின் நிபந்தனை தவறாகும் போது செயல்படும்.
2. else க்குப் பிறகு மற்றொரு நிபந்தனை சோதிக்கப்பட வேண்டுமெனில், else கூற்றை தொடர்ந்து if கூற்று இருக்கும். இதுவே ifelse ladder என்று அழைக்கப்படுகிறது.
2.
பயனாளர் சேவையகக் கட்டமைப்பை மூன்று வகைப்படுத்தலாம்.
1. ஒற்றை அடுக்கு கட்டமைப்பு
2. இரண்டு அடுக்கும் கட்டமைப்பு
3. பல/மூன்று அடுக்கு கட்டமைப்பு
3.
நான்கு முக்கிய கூறுகள் உள்ளன. அவை
(i) பெயர்வெளி (Name Space)
(ii) பெயர் சேவையகம் (Name Server)
(iii) மண்டலம் (Zone)
(iv) தீர்வி (Resolver)
4.
| செயற்குறி வகை | செயற்குறி |
| கணக்கீட்டுச் செயற்குறி | +,-,*,% |
| ஒப்பிட்டுச் செயற்குறி | =,!=,<,> |
| தருக்கச் செயற்குறி | AND,ANY,BETWEEN,EXISTS,IN,LIKE,NOT,OR,UNIQUE |
5.
இணைப்புத் திறவுகோல் : அட்டவணையில் ஒன்றுக்கு மேற்பட்ட பண்புக்கூறுகளைக் கொண்டு தனித்தன்மையுடன் வரிசைகளை அடையாளம் காணும் திறவுகோல். கூட்டுத் திறவுகோல் என்றும் அழைக்கப்படுகிறது.
6.
தரவுத்தளம் என்பது கட்டமைக்கப்பட்ட தரவுகளின் தொகுப்பாகும். இது தரவுகளை சேமிக்க, மீட்டெடுக்க மற்றும் நிர்வகிக்கக் கூடிய ஒரு இடமாகும்.
7.
MAC (Medium Access Control) முகவரி என்பது வலையமைப்பில் ஒவ்வொரு சாதனத்தையும் தனிப்பட்ட முறையில் கண்டறியும் வன்பொருள் அடையாள எண் ஆகும்.
8.
(i) Internet of things (IoT) என்பது ஒவ்வொரு நாளும் நாம் பயன்படுத்தும் சாதனங்கள் பெரும்பாலும் இலக்க இணைப்பு மூலமாக இணையத்துடன் தொடர்பு கொண்டுள்ளதைக் குறிக்கிறது.
(ii) IoT ல் "Thing" என்பது மனித தலையீடு மற்றும் கையேட்டில் உதவி இல்லாமல் IP முகவரியை இருத்துகிறது.
(iii) தரவை வலையமைப்பில் இணைக்கும் மற்றும் பரிமாற்றம் திறன் கொண்ட ஒரு பொருளைக் குறிக்கிறது.
9.
ஹேக்கர்ஸ் என்பவர்கள் திறமையான கணினி வல்லுநர்கள். அவர்கள் தொழில்நுட்ப அறிவை பயன்படுத்தி மற்றவர்களின் கணக்குகளை அணுகுவர்.
10.
தரவுத்தளம்: ஒழுங்கமைக்கப்பட்ட தரவுகளின் தொகுப்பாகும். இதில் தரவுகள் கணினியில் மின்னணு முறையில் தேக்கி வைக்கப்பட்டு தேவையானபோதெல்லாம் அணுகப்படுகின்றன.
11.
HTML: (Hypertext markup language) என்பது வலைப்பக்கங்கள் மற்றும் வலைப் பயன்பாடுகளை உருவாக்குவதற்கான பொதுவான குறியீட்டு மொழியாகும். ஒரு HTML படிவம் என்பது வலைத்தளத்தை பார்வையிடுவர் மூலம் உள்ளீடு பெற்று அதனை CGI, ASP ஸ்கிரிப்ட் (or) PHP ஸ்கிரிப்ட் மூலம் back-end பயன்பாட்டிற்கு அனுப்புகிறது.
12.
(i) விற்பனை முனையின் (POS) - இது வாடிக்கையாளர்கள் கடன் மற்றும் பற்று அட்டைகள் மூலம் பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்குவதற்கு பணம் செலுத்த வழிவகை செய்கிறது.
(ii) வாடிக்கையாளர் வசதிக்காக சில வங்கிகள் POS முனையங்களில் பற்று அட்டைகளைப் பயன்படுத்திப் பணத்தை பெற அனுமதிக்கின்றன.
13.
(i) தற்போதுள்ள தொழில்நுட்பங்களை மாற்றிடும் புதுமைகள், சீர்குலைவைக் குறிக்கும் புதுமைகள் என்று அழைக்கப்படுகின்றன.
(ii) குறுக்கீட்டுக் கண்டுபிடிப்புகள் புதிய சந்தையை உருவாக்குகிறது.
14.
1. Meridian
2. Horizon
1. மெரிடியன்: நிறுவனம் மற்றும் வியாபார அமைப்பிற்கு ஏற்றது. திறன் மற்றும் நீண்ட கால சேவைக்கு ஏற்றது.
2. ஹரிசன்: புதிய கண்டுபிடிப்புகள் அடிக்கடி தேவைப்படும் IT Ecosystems மற்றும் புதிய மேலாண்மை திட்டத்திற்கு ஏற்றது.
15.
1. மாஸ்டர் பக்கத்தில் செய்யக்கூடிய அனைத்துக் கட்டளைகளையும் Master pages Palette ஒழுங்குபடுத்துகிறது.
2. Master pages Palette-ஐக் காண்பிக்க பட்டிப்பட்டையில் Window > show master Pages என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
16.
ஈத்தர்நெட் அட்டை என்பது வலையமைப்பில் உள்ள சாதனங்களை இணைக்கவும், அவற்றுக்கிடையே தரவுகளை பரிமாற்ற அனுமதிக்கும் வலையமைப்பு இடைமுக அட்டை (NIC) ஆகும்.
17.
1. ஆவணத்தை மேலும் கீழுமாகவும் இடது மற்றும் வலது புறமாகவும் நகர்த்துவதை திரை உருளல் செய்தல் என்கிறோம்.
2. ஆவணத்தை மேலும் கீழுமாக நகர்த்த செங்குத்துத் திரை உருளல் பட்டையும், இடது மற்றும் வலது புறமாக நகர்த்த கிடைமட்டக் திரை உருளல் பட்டையும் பயன்படுகின்றது.
18.
1. RA வடிவம் இணையத்தில் ஒலியின் ஓட்டத்திற்காக வடிவமைக்கப்பட்டதாகும்.
2. இலக்க ஒலி வளங்களைப் பொதுவாக கணினிக் கோப்புகளாக கணினியின் வன்வட்டு (அ) CD /DVD களில் சேமிக்கப்படுகிறது.
19.
1. Tiff (Tagged Image File Format) வடிவம் கணிப்பொறி பதிப்பக உலகில் (அதிகத் தரமான வெளியீடு) பொதுவானது ஆகும்.
2. பெரும்பாலும் அனைத்து மென்பொருள் தொகுப்புகளை ஆதரிக்கிறது.
3. Tiff-ன் சமீபத்திய பதிப்புகள் நிழற்பட சுருக்கத்தை அனுமதிப்பதோடு, கணினிகளுக்கிடையே பெரிய கோப்புகளை அனுப்புவதற்கும் வசதியான வடிவமாகும்.
20.
Pretty Good Privacy (PGP) மற்றும் X.509.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards