12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 28/08/2020
12 ஆம் வகுப்பு கணினி பயன்பாடுகள் பயிற்சி 2 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Computer Application Practise 2 Mark Bookback Questions (New Syllabus) 2020
12ஆம் வகுப்பு Computer Applications / கணினி பயன்பாடுகள் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Applications / கணினி பயன்பாடுகள் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Applications Test

1.
ஒளிக்காட்சி கோப்பு வடிவங்களைப் பட்டியலிடுக.
2.
PHP ல் படிவத்தை செல்லுபடியாக்கல் என்றால் என்ன ?
3.
PHP ல் உள்ள படிவத்தை கையாள்வதில் உள்ள வழிமுறையினைப் வரையறு.
4.
வலைத் தரவுத்தளம் என்றால் என்ன?
5.
இணைப்பு சரம் (Connection String) என்றால் என்ன?
6.
மொபைல் வலையமைப்பின் சில அம்சங்களை பட்டியலிடுங்கள்.
7.
எத்தனை வகையான RFID அமைப்புகள் உள்ளன? அவை யாவை?
8.
தீர்வி என்றால் என்ன?
9.
ஒரு களம் என்றால் என்ன?
10.
foreach மடக்கின் பயன் என்ன?
11.
for மடக்கு மற்றும் foreach மடக்கினை ஒப்பிடுக.
12.
முறுக்கப்பட்ட ஜோடி கேபிள்களின் வகைகள் என்ன ?
13.
RJ45 இணைப்பான் வகைகளில் ஒரு குறிப்பை எழுதவும்
14.
Switch கூற்றின் கட்டளை எழுதுக.
15.
Switch கூற்றின் பயன் என்ன?
16.
PHP-ல் அணிகளை வரையறுக்கவும்.
17.
PHP-ல் செயற்கூறு கட்டளை அமைப்பை எழுதுக.
18.
NS2 சிறுகுறிப்பு தருக
19.
புலனாகும் பொருட்கள் மற்றும் மின்னணு பொருட்களை உங்கள் சொந்த எடுத்துக்காட்டுடன் வேறுபடுத்துக.
20.
URL என்றால் என்ன?
21.
வலை சேவையகம் என்றால் என்ன?
22.
மறையீட்டு நாணயத்தில் கிளை நாணயம் என்றால் என்ன?
23.
தரவுதள உறவுநிலைகளின் வகைகளை பட்டியலிடுக.
24.
25.
மின்-வணிகத்தின் பல்வேறு வகையான பாதுகாப்புத் தொழில்நுட்பங்களை பட்டியலிடுக.
26.
பேஜ்மேக்கர் மென்பொருளில் ஒரு புதிய ஆவணத்தை எவ்வாறு திறக்கலாம்?
27.
பேஜ்மேக்கர் மென்பொருளை திறப்பதற்கான வழிமுறைகளைக் கூறு.
28.
EDI மூலம் பரிமாற்றம் செய்யப்படும் சில வகை வணிக ஆவணங்களை பட்டியலிடுக.
29.
வரையறு – பல்லூடக உருவாக்கம்.
1.
1. AVI (Audio Video Interleave)
2. MPEG (Moving Pictures Experts Group)
2.
செல்லுபடியாக்கல் (Validation) என்பது பயனரால், பயனர் கணிப்பொறியிலிருந்து உள்ளீடு செய்யப்பட்ட தரவுகளை சரிபார்க்கும் ஒரு செயலாகும். PHP-ல் இரண்டு வகையான செல்லுபடியாக்கல் உள்ளது. அவை பின்வருமாறு.
1. பயனர் கணிப்பொறி சார்ந்த செல்லுபடியாக்கல்; (client side validation)
2. சேவையகக் கணிப்பொறி சார்ந்த செல்லுபடியாக்கல்; (Server side validation)
3.
1. படிவ ஒட்டு (< Form >tag), ஆவணத்திலுள்ள அனைத்து படிவ உறுப்புகளைக் கட்டுப்படுத்தவும், வழிமுறையைக் (POST (அ) GET) குறிப்பிடவும் பயன்படுகின்றது.
2. முறைமை என்பது HTML ல் உள்ள படிவ ஓட்டின் (< Form >tag) ஒரு பண்புக்கூறாகும்.
3. HTML படிவ உறுப்புகளில் பயனர் உள்ளீடுகளை வழங்கி submit பொத்தானைக் கிளிக் செய்யும் பொழுது, கோரிக்கை (Request) ஒன்று உருவாக்கப்பட்டு படிவ ஓட்டின் Action பண்புக்கூறில் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள PHP கோப்பினை அடைகின்றது. அனைத்து உள்ளீட்டு மதிப்புகளும் தொகுக்கப்பட்டு POST (அ) GET வழிமுறை மூலம் சேவையகத்திற்கு அனுப்பப்படுகின்றன.
4.
இணையம் வழியாக அணுகுவதற்கு, மேலாண்மை செய்வதற்கும் உருவாக்கப்பட்ட ஒரு தரவுத்தள பயன்பாடாகும்.
5.
(i) இணைப்பு சரம் என்பது, ஒரு தரவு மூலத்தையும், அதன் வழிமுறையையும் பற்றிய தகவல்களைக் குறிப்பிட்டு அவ்விரண்டையும் இணைக்கும்.
(ii) இணைப்பு துவங்குதலின் குறியீடாக அனுப்பப்படுகின்றன.
6.
1. கைபேசி கோபுரங்கள் நெருக்கமாக இருப்பதால், ஒற்றை பரிமாற்றி அல்லது செயற்கைக் கோள்களை ஒப்பிடும் போது கைபேசி சாதனங்கள் குறைந்த மின்சக்தியை பயன்படுத்துகின்றன.
2. செல் கோபுரங்கள் வேறுபட்ட பல இணைப்புகளை இணைக்கின்றன. இது பெரிய டிரான்ஸ்மிட்டரை காட்டிலும் திறன் அதிகமானது.
3. கைபேசிகள் அதிக அளவுக்கு தரவுசார் தகவல் தொடர்புக்கு பயன்படுத்தப்படுவதால், கைபேசி வலையமைப்புகள் எப்போது முழுமையாக பயன்பாட்டிலேயே உள்ளது.
7.
1. செயல் RFID அமைப்பு
2. செயலற்ற RFID அமைப்பு
RFID குறிப்பானின் இரண்டு வகைகள் செயல் (Active) RFID குறிப்பான் மற்றும் செயலற்ற (Passive) RFID.
1. ஒரு செயலற்ற RFID ஒட்டில், படிப்பானிடமிருந்து Radio அலைகள் ஒரு செயலற்ற RFID ஒட்டால் எதிர்கொள்ளப்படும் போது, படிப்பானால் மின்சக்தி வழங்கப்படுகிறது. மின்சுற்றிலுள்ள ஆண்டெனா ஒரு காந்த புலத்தை உருவாக்குகிறது.
2. மின்கலம் மூலம் இயங்கும் RFID ஒட்டு என்பது சிறிய மின்கலத்துடன் இணைக்கப்பட்டு தகவல்களை ஒளிபரப்பும் ஆற்றலுடையது.
8.
(i) தீர்வி (Resolver) என்பது ஒரு களப்பெயரை ஐபி முகவரியாக மொழிபெயர்க்கும் பணியை துவக்கும் நிரலாகும்.
(ii) தீர்வி புரவன் (Host) கணினியிலேயே சேமிக்கப்பட்டு இருப்பதால், தீர்விக்கும் பயனர் நிரலுக்கும் இடையேயான தொடர்பை உருவாக்க எந்த நெறிமுறையும் அவசியமில்லை.
9.
களம் : ஒரு களம் (Domain) என்பது களப்பெயர் வெளியின் ஒரு ஒற்றை முனை ஆகும். களப்பெயர் வெளியின் மர அமைப்பில் ஒரு துணை மரமாகும். களம் மேலும் துணை களங்களாகப் பிரிக்கப்படுகின்றது.
10.
1. foreach மடக்கு PHP-ல் மிகவும் பிரத்தியேகமான ஒன்றாகும். இது அணிகளுடன் மட்டுமே செயல்படுகிறது.
2. foreach மடக்கு அணிகளில் பன்முறையைச் செயல்படுத்த எளிதான வழியை வழங்குகிறது.
11.
| for மடக்கு | foreach மடக்கு | |
| 1 | குறிமுறைத் தொகுதியைக் குறிப்பிட்ட தடவைகள் செயல்படுத்த உதவுகிறது. | அணிகளில் பன்முறையைச் செயல்படுத்த எளிதான வழியை வழங்குகிறது. |
| 2 | PHP உட்பட C, C++, Java போன்ற மொழிகளில் பயன்படும் மடக்கு அமைப்பாகும். | PHP-ல் மிகவும் பிரத்யேகமான ஒன்றாகும். |
12.
(i) முறுக்கு இணை கம்பிகள் இரு வகைப்படும்
1. காப்பிடப்பட்ட முறுக்கு இணை கம்பி (Shielded Twisted pair - STP)
2. காப்பில்லாத முறுக்கு இணை கம்பி (Unshielded Twisted pair - UTP)
(ii) தற்பொழுது இணையத்தில் நவீன வடங்களாக UTP கேபிள்கள் பயன்படுத்தப்படுகின்றன
(iii) விலைமலிவானதாகவும், நிறுவுவதற்கு பராமரிப்பதற்கும் எளிமையானதாகவும் இருக்கின்றன
(iv) STP என்பது வெளி (மின் காந்த) குறுக்கீடுகளிலிருந்து கம்பிகளை பாதுகாக்க கூடுதல் உறைகளால் பாதுகாக்கப்பட்டிருக்கும்
13.
1. RJ45 இணைப்பி, பொதுவாக பல்வேறு தொழில்முறை தரங்களில் உற்பத்தி செய்யப்படுகின்றன. அவை CAT 3, CAT 5, CAT 6, CAT6e மற்றும் CAT 7
2. இதில் CAT என்பது Category என்ற வார்த்தையில் இருந்து உருவாக்கப்பட்டது
3. அதனை தொடர்ந்து வரும் எண் வட்டத்தின் பாதிப்பைக் குறிக்கிறது
4. சமீபத்திய பாதிப்பு வேகமான வடம் என்பதைக் காட்டுகிறது
14.
switch(n) {
case label1:
code to be executed if n=label1 ;
break;
case label2:
code to be executed if n= label 2;
break;
case label3:
code to be executed if n=label3;
break;
...
default:
code to be executed if n is different
from all labels;
}
15.
Switch கூற்று பல்வேறு நிபந்தனைகளின் அடிப்படையில் பல்வேறு செயல்களைச் செய்யப் பயன்படுகிறது.
16.
அணி என்பது ஒரே தரவு வகையைச் சார்ந்த (ஒரே மாதிரியான) ஒன்றுக்கு மேற்பட்ட மதிப்புகளை ஒரு அணியின் மாறியில் தேக்கி வைப்பதாகும்.
17.
function function Name ( )
{
Custom Logic code to be executed ;
}
18.
(i) NS2 என்பது Network Simulation பதிப்பு 2 என்பதன் சுருக்கமாகும்.
(ii) இது பொதுவாக வலையின் தொடர்பு மற்றும் நிகழ்வு சார்ந்த ஆய்வுக்கான திறந்த மூல சிமுலேசன் வகை சார்ந்த மென்பொருள் ஆகும்.
(iii) NS2 உருவாக்க மற்றும் இயக்க OTCL மற்றும் C++ உதவுகின்றன.
19.
| புலனாகும் பொருட்கள் | மின்னணு பொருட்கள் |
| குறிப்பிட்ட முகவரிக்கு விநியோகிக்கப்படக் கூடிய மின் - வணிக வலைத்தளத்திலிருந்து நுகர்வோரால் வாங்கப்படக்கூடிய பொருள்கள் | ஒரு வலை தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்படக் கூடிய மென்பொருள் பாடல் (அ) பயன்பாடுகளைக் குறிக்கும் |
| எ.கா: பைகள், காலணிகள், ஆடைகள் | எ.கா: எதிர் நச்சு மென்பொருள் பதிவிறக்கம், hotstar பயன்பாடு பதிவிறக்கம் |
20.
URL (Uniform Resource Locator) என்பது இணையத்தில் குறிப்பிட்ட வலைப்பக்கத்தின் (அ) கோப்பின் தனித்த முகவரி ஆகும்.
21.
வலை சேவையகம் என்பது பயனர்களுக்கு வலை பக்கங்களை உருவாக்கும் கோப்புகளை வழங்கப் பயன்படுத்தும் ஒரு மென்பொருள் ஆகும்.
22.
(i) பல மறையீட்டு நாணயங்கள் ஒரே மூல குறிமுறையின் அடிப்படையில் இயங்குகின்றன
(ii) இதில் நிரலர், நேரம், தேதி, தொகுதிகளில் எண்ணிக்கை போன்ற சில அலப்புருக்களில் சிறிய மாற்றங்களை மட்டுமே செய்கின்றனர்
(iii) அந்த நாணயங்கள் கிளை நாணயங்கள் எனப்படும்
23.
ER மாதிரியில், இரண்டு உருப்பொருளுக்கு இடையே உறவுநிலை உள்ளது. மூன்று வகையான உறவுநிலைகள் உள்ளன. அவை:
(i) ஒன்றுடன் ஒன்று உறவு நிலை
(ii) ஒன்றுடன் பல உறவு நிலை
(iii) பலவற்றுடன் பல உறவு நிலை
24.
25.
(i) குறியாக்கத் தொழில்நுட்பம் (Encryption technology)
(ii) அங்கீகார தொழில்நுட்பம் (Authentication technology)
(iii) பாதுகாப்பு அங்கீகார நெறிமுறைகள் (Authentication protocols)
26.
புதிய ஆவணத்தை உருவாக்க,
(i) பட்டிப்பட்டையில் File > New என்பதைக் கிளிக் செய்ய வேண்டும் அல்லது விசைப்பலகை மூலம் Ctrl + N என்பதை அழுத்த வேண்டும். இப்பொழுது Document Setup உரையாடல் பெட்டி தோன்றும்.
(ii) இந்த உரையாடல் பெட்டியில் புதிய ஆவணத்திற்குத் தேவையான அளவுகளை உள்ளீடு செய்ய வேண்டும்.
(iii) பிறகு OK பொத்தானை அழுத்த வேண்டும்.
27.
விண்டோஸ் 7 இயக்க அமைப்பில், Start > All Programs > Adobe > Page Maker 7.0 > Adobe PageMaker 7.0 என்ற வரிசையில் கிளிக் செய்து அடோப் பேஜ்மேக்கரைத் திறக்கலாம்.
28.
(i) டெலிவரி குறிப்புகள் (Delivery Notes)
(ii) விலைப்பட்டியல்கள் (Invoices)
(iii) கொள்முதல் ஆணைகள் (Purchase Orders)
(iv) செயல்பாட்டு ஒப்புகைகள் (Functional Acknowledgment)
29.
பல்லூடக உருவாக்கம் :
திட்டப் பணியானது சுமுகமாகத் தொடரவும் மற்றும் தகவல், இலக்குப் பார்வையாளர்களைச் சென்றடைவதை உறுதி செய்யக்கூடியத் திறமையான திட்டமிடல்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards