12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 28/08/2020
12 ஆம் வகுப்பு கணினி பயன்பாடுகள் மாதிரி 2 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Computer Application Sample 2 Mark Creative Questions (New Syllabus) 2020
12ஆம் வகுப்பு Computer Applications / கணினி பயன்பாடுகள் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Applications / கணினி பயன்பாடுகள் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Applications Test

1.
பயனாளர் சேவையகக் கட்டமைப்பு வகைகள் யாவை?
2.
ICANN என்றால் என்ன?
3.
தரவு வினவல் மொழியின் கட்டளையின் பயன் யாது?
4.
RDBMS அடிப்படை எவற்றை உள்ளடக்கியது?
5.
வலையமைப்பு மாதிரி கொண்டுள்ள மூன்று தரவுத்தள கூறுகள் யாவை?
6.
உடன் நிகழ் பரிவர்த்தனை என்றால் என்ன?
7.
MAC முகவரி என்றால் என்ன?
8.
வீட்டில் வலையமைப்புக்கள் இணைக்கப்படும் வழிகள் யாவை?
9.
வினவல் என்றால் என்ன?
10.
HTML படிவத்தின் பயன் யாது?
11.
மின் - காசோலைகள் எனக் குறிப்பிடப்படுபவை யாவை?
12.
நுண் மின்செலுத்தல் முறை பரிவர்த்தனையில் படிநிலைகளை விளக்குக.
13.
குறுக்கீட்டுக் கண்டுபிடிப்புகள் என்றால் என்ன?
14.
மின் அரசாண்மை என அழைக்கப்படுபவை யாவை?
15.
Network Simulation என்றால் என்ன?
16.
பேஜ்மேக்கரில் Document Master என்றால் என்ன?
17.
ஈத்தர்நெட் வடமிடல் என்றால் என்ன?
18.
மற்ற சொற்செயலிகளில் இருக்கும் திரை உருளல் பட்டையிலிருந்து பேஜ்மேக்கர் திரை உருளல் பட்டை எவ்வாறு வேறுபடுகிறது?
19.
AVI படிவம் பற்றி குறிப்பு வரைக.
20.
BMP மற்றும் DIB என்றால் என்ன?
21.
புகழ் பெற்ற எண்முறைச் சான்றிதழ் வகைகள் யாவை?
22.
RFID ன் குறிப்பானின் வகைகள் யாவை? விவரி
1.
பயனாளர் சேவையகக் கட்டமைப்பை மூன்று வகைப்படுத்தலாம்.
1. ஒற்றை அடுக்கு கட்டமைப்பு
2. இரண்டு அடுக்கும் கட்டமைப்பு
3. பல/மூன்று அடுக்கு கட்டமைப்பு
2.
(i) ICANN (Internet Corporation for Assigned Names and Numbers) என்பது இலாப நோக்கமற்ற நிறுவனமாகும்.
(ii) இது களப்பெயர்கள் மற்றும் IP முகவரிகள் போன்ற அனைத்து இணைய வளங்களுக்கான பெயர்களையும் எண்களையும் வழங்குகிறது
3.
தரவு வினவல் மொழியில் (DQL) தரவுத்தள அட்டவணைகளிலிருந்து தரவை மீட்டெடுக்க SELECT என்கிற SQL கட்டளை மட்டுமே பயன்படுகிறது.
4.
RDBMS-ன் அடிப்படையானது.
1. தரவுத்தளம்
2. அட்டவணை
3. பதிவு
4. பண்புக்கூறு
5. திறவுகோல்
6. திட்டம்
போன்றவற்றை உள்ளடக்கியது.
5.
1. வலையமைப்புத் திட்டம் : தரவுத்தள கட்டமைப்பு பற்றிய அனைத்தையும் வரையறுக்கிறது.
2. துணைத்திட்டம் : பயனருக்கு தரவுத்தளங்களில் கட்டுப்பாடு விதிக்கிறது.
3. மொழி : தரவுத்தளத்தை அணுகுவதற்கான அடிப்படை செயல்முறை.
6.
1. பல பயனர்கள் ஒரே பொருளை ஒரே நேரத்தில் அணுகுவதன் மூலமாக செய்யும் பரிவர்த்தனையே உடன் நிகழ் (concurrent) பரிவர்த்தனை எனப்படும்.
2. தரவு மதிப்பில் உள்ள மாற்றங்கள் ஏதேனும் ஒரு கொடுக்கப்பட்ட நேரத்தில் நிலையானதாக இருக்கும். இந்த பண்பு வெற்றிகரமான பரிவர்த்தனைக்கு உதவி புரிகிறது.
7.
MAC (Medium Access Control) முகவரி என்பது வலையமைப்பில் ஒவ்வொரு சாதனத்தையும் தனிப்பட்ட முறையில் கண்டறியும் வன்பொருள் அடையாள எண் ஆகும்.
8.
வீட்டில் வலையமைப்புகள் இரு வழிகளில் இணைக்கப்பட்டுள்ளன.
1. கம்பி வலையமைப்பு
2. கம்பியில்லா வலையமைப்பு
(i) கம்பி மூலம் இணைக்கப்பட்ட பிணைய அமைப்பு. உதாரணமாக ஒலிபெருக்கி, cctv, அச்சுப் பொறிகள் மற்றும் வருடிகள் போன்ற சாதனங்கள் கேபிள்கள் மூலமாகவும் இணைக்கப்படுகிறது.
(ii) கம்பியில்லா வலையமைப்பு கேபிள்களே இல்லாமல் டேப்லெட் கம்ப்யூட்டர், உட்புற கேமராக்கள் மற்றும் e-readers போன்ற சாதனங்களை இணைக்கிறது.
9.
தரவுத்தள அட்டவணை (அ) அட்டவணைகளில் தொகுப்பிலிருந்து தரவு (அ) தகவலைப் பெறுவதற்கான கட்டளைகளே வினவல் ஆகும்.
10.
(i) ஒரு HTML படிவம் என்பது வலைத்தளத்தை பார்வையிடுவர் மூலம் உள்ளீடு பெற்று அதனை CGI, ASP ஸ்கிரிப்ட் (or) PHP ஸ்கிரிப்ட் மூலம் back-end பயன்பாட்டிற்கு அனுப்புகிறது.
(ii) back-end பயன்பாடானது அனுப்பப்பட்ட தரவின் மீது தேவையான செயல்பாடுகளைச் செய்கின்றது.
11.
EFT (Electronic Funds Transfer) அமெரிக்காவில் மின்னணு காசோலைகள் (அ) மின் - காசோலைகள் என்று குறிப்பிடப்படுகிறது.
12.
(i) படி 1: செயலாக்குபவர் வாடிக்கையாளரின் அடையாளத்தை உறுதிசெய்த பின் பணத்துக்கு மாற்றாக நுண் பணம் வழங்குகிறார்.
(ii) படி 2: வாடிக்கையாளர், நிகழ்நிலைச் சேவை வழங்குநரிடம் நுண் கட்டணங்களை செலுத்தி விரும்பிய பொருட்கள் அல்லது சேவைகளை அவர்களிடமிருந்து பெறுகிறார்
(iii) சேவை வழங்குநர் வாடிக்கையாளரிடமிருந்து பெறப்பட்ட நுண் கட்டணங்களை செயலாக்குபவர்களிடம் கொடுத்து பணத்தைப் பெறுகிறார்.
13.
(i) தற்போதுள்ள தொழில்நுட்பங்களை மாற்றிடும் புதுமைகள், சீர்குலைவைக் குறிக்கும் புதுமைகள் என்று அழைக்கப்படுகின்றன.
(ii) குறுக்கீட்டுக் கண்டுபிடிப்புகள் புதிய சந்தையை உருவாக்குகிறது.
14.
அரசாங்கம் ஒரு அங்கமாகச் செயல்படும் மின் வர்த்தக மாதிரிகள் மின் அரசாண்மை என்று அழைக்கப்படுகின்றன.
எ.கா:
1. அரசாங்கம் - வணிக (G2B)
2. அரசாங்கம் - நுகர்வோர் (G2C)
3. அரசாங்கம் - அரசாங்கம் (G2G)
15.
(i) கணிப்பொறி வலையமைப்பில் Network Simulation என்பது வலையமைப்பின் செயல்பாட்டை விளக்கும் ஒரு மாதிரி அமைப்பு ஆகும்.
(ii) வலையமைப்பின் செயல்பாட்டை அதன் பல உறுப்புகள் (routers, nodes, switches, access point, links, etc.) ஒன்றோடொன்று தொடர்பு கொள்வதை கணிப்பதன் மூலம் விளக்குகிறது.
16.
பேஜ்மேக்கரில் உருவாக்கப்படும் அனைத்து ஆவணங்களிலும் இயல்புநிலையாக Document Master என்ற பெயரில் மாஸ்டர் பக்கம் இருக்கும்.
17.
ஈத்தர்நெட் வடமிடல் (Ethernet Cabling) என்பது ஈத்தர்நெட் வடங்களைப் பயன்படுத்தி கணினிகளை மற்ற சாதனங்களுடன் இணைக்கும் செயலாகும்.
18.
பேஜ்மேக்கர் திரை உருளல் பட்டை ஆவணத்தில் பல பக்கங்கள் இருந்தாலும் தற்போது இருக்கும் பக்கத்தை மட்டுமே திரை உருளல் செய்கிறது.
19.
1. ஒரு விண்டோஸிற்கான ஒரு ஒளிக்காட்சி கோப்பு வடிவமாகும்.
2. இங்கு, ஒலி மற்றும் படத்தின் கூறுகளைக் கோப்பில் மாற்ற நெடுவரிசை தொகுப்பில் சேமிக்கப்படுகிறது.
20.
BMP (Bitmap) :
1.தொடக்கத்தில் இந்த வடிவமானது விண்டோஸ் 3.1ல் பயன்படுத்தப்பட்டது.
2. மிகவும் பெரியது மற்றும் சுருக்கமற்றது.
3. எனவே, அதிக தெளிவுத்திறன் (அ) பெரிய நிழற்படங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது.
(ii) DIB (Device Independent Bitmap) :
1. இந்த வடிவம் BMP-யை ஒத்தாகும்.
2. கோப்புகளை பல்வேறு சாதனங்களில் காண்பிக்க அனுமதிக்கிறது.
21.
Pretty Good Privacy (PGP) மற்றும் X.509.
22.
RFID ன் குறிப்பானின் வகைகள்:
1. செயல் RFID: இந்தக் குறிச்சொல் ஒரு தனித்தன்மையைக் கொண்டுள்ளது. இந்த அமைப்புகள், நீண்ட தூரங்கள் மற்றும் வாகனங்கள் போன்ற உயர்மதிப்பு பொருட்களை கண்காணிக்கவும் பயன்படுகின்றன.
2. செயலற்ற RFID: இது படிப்பான் ஆன்டெனா முதல் குறிப்பான் ஆன்டெனா வரை உள்ள ஆற்றல் மூலமாக ஆற்றலைப் பெறுகிறது.
செயலற்ற RFID அமைப்பின் செயல்பாடு: தூண்டுதல் இணைப்பு முறையைப் பயன்படுத்தி ஒரு செயலற்ற RFID அமைப்பு (Induction Coupling method)
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards