12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 28/08/2020
12 ஆம் வகுப்பு கணினி அறிவியல் முக்கிய 2 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Computer Science Important 2 Mark Book Back Questions (New Syllabus) 2020
12ஆம் வகுப்பு Computer Science / கணினி அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Science / கணினி அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Science Test

1.
பொதுவான தரவு காட்சிப்படுத்துதல் வகையை பட்டியலிடுக.
2.
தரவுத்தளத்தை இணைக்க பயன்படும் முறைகள் யாவை? எடுத்துக்காட்டு தருக.
3.
தொகுப்பான் மற்றும் வரிமொழி மாற்றியை வேறுபடுத்துக.
4.
பைத்தான் மூலம் CSV கோப்பை படிப்பதற்கான இரு வழிகளை குறிப்பிடுக.
5.
Unique மற்றும் Primary Key கட்டுப்பாடுகளை வேறுபடுத்துக.
6.
RDBMS-ன் சில எடுத்துக்காட்டுகளைப் பட்டியலிடுக
7.
சான்றுருவாக்கல் என்றால் என்ன?
8.
List உறுப்புகளை பின்னோக்கு வரிசையில் தலைகீழாக எவ்வாறு அணுகுவாய்?
9.
பைத்தானில் சரங்களை மாற்றம் செய்ய முடியுமா?
10.
செயற்கூறின் வகைகளை எழுதுக
11.
break கூற்றைப் பற்றி குறிப்பு வரைக.
12.
வில்லைகள் பற்றி சிறு குறிப்பு வரைக.
13.
போலிக் குறிமுறை வரையறை.
14.
மாறிகளுக்கு எதற்காக வரையெல்லை பயன்படுத்தப்பட வேண்டும்? காரணம் கூறுக?
15.
நிரலாக்க மொழியைப் பொறுத்து செயற்கூறுவை வரையறுக்கவும்.
1.
(i) விளக்கப்படங்கள் (Charts)
(ii) அட்டவணைகள் (Tables)
(iii) வரைகலை (Graphs)
(iv) நிலப்படங்கள் (Maps)
(v) இன்போகிராபிக்ஸ் (Infographics)
(vi) டேஷ்போர்டு (Dashboards)
2.
Connect ( ) வழிமுறையைப் பயன்படுத்தி இணைப்பை உருவாக்கி தரவுத்தளத்தின் பெயரை இணைக்கவும்.
எடுத்துக்காட்டு:
#connecting to the database
connection = sqlite3.connect("Academy.db")
#cursor
cursor = connection.cursor ( )
3.
| தொகுப்பான் | வரிமொழி மாற்றி | ||
|---|---|---|---|
| 1 | முழுநிரலையும் ஸ்கேன் செய்து அதை ஒட்டு மொத்தமாக இயந்திர குறியீடாக மொழிபெயர்க்கிறது | நிரல் ஒரு நேரத்தில் ஒரு அறிக்கையை மொழிபெயர்க்கிறது | |
| 2. | மூலக்குறியீட்டைப் பகுப்பாய்வு செய்ய அதிக நேரம் எடுக்கும். | மூலக்குறியீட்டைப் பகுப்பாய்வு செய்ய குறைந்த நேரம் எடுக்கும். | |
| 3. | சி, சி++ போன்ற புரோகிராமிங் மொழி தொகுப்பான்களைப் பயன்படுகிறது. | பைத்தான், ரூபி போன்ற புரோகிராமிங் மொழி பெயர்ப்பாளர்களைப் பயன்படுத்துகிறது. | |
4.
CSV கோப்பினை படிக்க இரண்டு வழிமுறைகள் உள்ளன.
(i) CSV தொகுதி படித்தல் செயற்கூறை பயன்படுத்துதல்.
(ii) DictReader இனக்குழுவை பயன்படுத்துதல்.
5.
| Unique | Primary Key | |
| (i) | இந்த கட்டுப்பாடு குறிப்பிட்ட நெடுவரிசைகளில் எந்த இரு வரிசைகளும் ஒரே மதிப்பை கொண்டிருக்காது என்பதை உறுதி செய்கிறது. | தரவுத்தளத்திலுள்ள ஒரு பதிவை தனித்தன்மையோடு அடையாளம் காட்ட ஒரு புலத்தினை Primary Key என்ற கட்டுப்பாட்டுடன் அறிவிக்க வேண்டும். |
| (ii) | UNIQUE கட்டுப்பாட்டை Not NULL என்று அறிவிக்கப்பட்ட புலங்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். | Primary Key கட்டுப்பாடு வெற்று (NULL) மதிப்புகளை அனுமதிக்காது. |
6.
(i) SQL Server
(ii) Oracle
(iii) MySQL
(iv) MariaDB
(v) SQLite
(vi) MS - Access
7.
இனக்குழு உருவாக்கப்பட்ட பின் அந்த இனக்குழுவின் பொருள் அல்லது சான்றுரு உருவாக்கப்பட வேண்டும். பொருளை உருவாக்கும் இந்த முறைக்கு "சான்றுருவாக்கல்" (instantiation) என்று பெயர்.
8.
(i) பைத்தான், List உறுப்புகளுக்கு பின்னோக்கு அல்லது எதிர்மறை, சுட்டெண்களை வழங்குகிறது. இதனால் பைத்தான், சுட்டெண்களை எதிர் வரிசையில் பட்டியலிடுகிறது.
(ii) பைத்தான், List-ன் கடைசி உறுப்பிற்கு -1 முந்தைய உறுப்பிற்கு -2 என்ற சுட்டெண் மதிப்புகளையும் இருத்துகிறது. இதுவே பின்னோக்கு சுட்டு என அழைக்கப்படுகிறது.
9.
பைத்தானில் சரங்களை மாற்றியமைக்க முடியாது. அதாவது சரத்தை ஒருமுறை வரையறுத்த பின்பு அதை திருத்துதல் அல்லது நீக்குதல் போன்ற செயல்பாடுகள் அனுமதிக்கப்பட மாட்டாது. எனினும், முந்தைய சரம் முழுவதும் புதிய சரத்தால் மாற்றப்படலாம்.
10.
1) பயனர் வரையறுக்கும் செயற்கூறுகள்
2) உள்ளிணைந்த செயற்கூறுகள்
3) லாம்டா செயற்கூறுகள்
4) தற்சுழற்சி செயற்கூறுகள்
11.
(i) break கூற்று அதை உள்ளடக்கிய மடக்கை விட்டு வெளியேறச் செய்கிறது. நிரலின் கட்டுப்பாடானது, மடக்கின் உடற்பகுதிக்கு வெளியே இருக்கும் கூற்றுக்கு பாய்கிறது.
(ii) நிபந்தனையின் மதிப்பு தவறு என்று வரும் வரை while அல்லது for மடக்கு செயல்படுத்தப்படும். ஆனால், break கூற்றைப் பயன்படுத்தி கட்டுப்பாட்டை மடக்கை விட்டு நிறுத்தி வெளியேறச் செய்யமுடியும்.
(iii) break பின்னலான மடக்கின் உள்ளே இருந்தால், break கூற்று மிக உட்புறமாக (inner most) அமைந்துள்ள மடக்கை விட்டு வெளியேறும்.
12.
பைத்தான், நிரலில் இடம்பெறும் நிரல் வரிகளை அடிப்படை மொழிக்கூற்றுகளாக பிரிக்கிறது. இந்த கூறுகள் வில்லைகள் எனப்படும். பொதுவாக வில்லைகளின் வகைகளாவன.
(i) குறிப்பெயர்கள்
(ii) சிறப்புச் சொற்கள்
(iii) செயற்குறிகள்
(iv) வரம்புக்குறிகள்
(v) நிலைஉருக்கள்
வில்லைகளை பிரிப்பதற்கு வெற்று இடைவெளி கண்டிப்பாக இருத்தல் வேண்டும்.
13.
போலிக் குறிமுறை என்பது குறிப்பிட்ட செயலை முடிப்பதற்கான வரையறுக்கப்பட்ட கட்டளையின் தொகுதியாகும்
14.
(i) மாறியை நிரலின் எந்தப் பகுதியில் அணுக அல்லது பயன்படுத்த முடியும் என்பதை குறிக்க வரையெல்லை பயன்படுகிறது.
(ii) ஒரே ஒரு வரையெல்லைக்குள் மாறிகளின் வரையெல்லையை உட்படுத்துவது சிறந்த வழிமுறை ஆகும்.
(iii) இதில் எதிர்பாராத விதமாக செயற்கூறுக்கு உள்ளே உள்ள மாறிகளில் ஏற்படும் மாற்றங்கள் செயற்கூறுக்கு வெளியே எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது.
15.
செயற்கூறு என்பது ஒரு பெரிய நிரலில் வரையறுக்கப்படும் ஒரு குறிமுறை அலகு ஆகும். செயற்கூறுகள், நிலையான வெளியீட்டை வழங்குவதற்கான மாறிகள், கோவைகள் போன்ற பலவகையான உள்ளீடுகளின் மீது செயல்படும் குறிமுறை தொகுதிகளை கொண்டிருக்கும்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards