12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 28/08/2020
12 ஆம் வகுப்பு கணினி அறிவியல் பயிற்சி 2 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Computer Science Practise 2 Mark Creative Questions (New Syllabus) 2020
12ஆம் வகுப்பு Computer Science / கணினி அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Science / கணினி அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Science Test

1.
பகா எண்களைக் கொண்ட ஒரு Set, இரட்டைப்படை எண்களை கொண்ட மற்றொரு Set உருவாக்குவதற்கான நிரல் [ஒட்டு, வெட்டு, வேறுபாடு, சமச்சீரான வேறுபாடு போன்ற செயற்பாடுகளுக்கான விடையை நிரூபிக்கவும்].
2.
முழு Tuples-ஐ எவ்வாறு நீக்குவாய். எ.கா.தருக.
3.
முதல் 20 வரையான எண்களில் 4-ல் வகுபடும் எண்களை பெறும் List ஒன்றை உருவாக்கும் நிரல் ஒன்றை எழுதுக.
4.
POP ( ), Clear ( ) மற்றும் remove ( ) செயற்கூறுகளுக்கான தொடரியலை எழுதுக.
5.
append ( ) மற்றும் Extend ( ) செயற்கூறின் தொடரியலை எழுதுக.
6.
பின்னலான List என்றால் என்ன எ.கா.தருக.
7.
வரி விளக்கப்படம் என்றால் என்ன?
8.
Pairs எனும் கலவை எவ்வாறு உருவாக்கப்படுகிறது?
9.
விகிதமுறு எண்ணின் ADT எடுத்துக்காட்டை எழுதுக.
10.
Impure செயற்கூறு என்றால் என்ன?
11.
மதிப்பீட்டு சார்புகள் யாவை?
12.
DBMS மென்பொருளுக்கான எ.கா தருக.
13.
title ( ) செயற்கூறின் பயன் யாது? எ.கா. தருக.
14.
பின்வரும் கூற்றின் வெளிப்பாடு யாது?
(i) print (len ("corporation"))
(ii) print ("School" .capitalize ( )
(iii) print ("welcome". center(15,'*'))
15.
தரவுத்தளங்களை உருவாக்க, வரையறுக்க மற்றும் கையாளுவதற்கு அனுமதிக்கின்ற மென்பொருள் பற்றி எழுதுக.
16.
சரவடிவமைப்பு செயற்குறிகளின் பயன் யாது?
17.
"சரங்களை மாற்றியமைக்க முடியாதது" காரணம் தருக.
18.
பைத்தான் குறிப்பெயர்களை குறிப்பிட நீங்கள் பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகளை எழுதுக.
19.
வேறுபாடு காண்க: BETWEEN மற்றும் NOT BETWEEN
20.
தரவு கையாளுதல் வகைகளை எழுதுக
21.
ஒரு தரவுத்தளத்தை எவ்வாறு உருவாக்குவாய் எ.கா தருக
22.
கீழ்காணும் குறிப்பெயர்கள் ஏன் தவறானது?விளக்கவும்.(i) (12) Name (ii) name $ (iii) Physics-mark (iv) break
23.
print ( ) செயற்கூறில் ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்புகளை எவ்வாறு பிரிப்பாய்?
24.
உள்ளமை வரையெல்லை என்றால் என்ன?
25.
பைத்தான் ஷெலின் ஊடாடும் முறைமை ஒரு எளிய முறை கால்குலேட்டரை போல் எவ்வாறு பயன்படுத்தலாம்?
26.
மாறும் நீள செயலுருபின் பொதுவடிவத்தை எழுதுக.
27.
பைத்தானில், தொகுதி என்றால் என்ன?
28.
ஆக்கியை விளக்கும் நிரலை எழுதுக.
29.
continue கூற்றின் செயல்பாட்டை பாய்வு படத்தின் மூலம் விளக்குக.
30.
கீழ்க்காணும் நிரலின் வெளியீட்டை எழுதுக.
for i in range (1,9,2):
print (i, end =' ')
else:
print ("In end of the loop")
31.
பைத்தானில் உள்ள மாற்று அல்லது கிளைப்பிரிப்பு கூற்றின் வகைகளை எழுதுக.
32.
நினைவிருத்தல் என்பது என்ன?
33.
நிரல் நெறிமுறையின் செயல்திறன் எவ்வாறு வரையறுக்கப்படுகிறது?
34.
ஒரு மாறியின் வாழ்நாள் என்றால் என்ன?
35.
தேவையற்ற மதிப்புகளை சேகரித்தல் என்றால் என்ன?
36.
உரை முறைமை மற்றும் இருமநிலை முறைமையின் வேறுபாட்டை எழுதுக.
1.
even=set([x*2 for x in range(1,11)])
primes=set( )
2.
முழு Tuples-ஐ நீக்குவதற்கு, del கட்டளை பயன்படுகிறது.
தொடரியல் :
del Tuples_name
print("The elements of Tup1 is ",Tup1)
del Tup1
print (Tup1)
3.
divBy4=[ ]
for i in range(21):
if (i%4==0):
divBy4.append(i)
print(divBy4)
4.
தொடரியல் :
List.remove(element)# ஒரு குறிப்பிட்ட உறுப்பை நீக்க
List.pop(index of an element)
List.clear( )
5.
List.append (element to be added)
List.extend ([elements to be added])
6.
(i) MyList என்ற List மற்றொரு List-டை உறுப்பாகக் கொண்டுள்ளது. இந்த வகை List "பின்னலான List (Nested List )" என்று அழைக்கப்படுகிறது.
(ii) பின்னலான List என்பது மற்றொரு List-ஐ ஒரு உறுப்பாக கொண்டுள்ள List ஆகும்.
எடுத்துக்காட்டு :
MyList = ["Welcome",3.14,10,2,4,6]
7.
வரி வரைப்படம் அல்லது வரி விளக்கப்படம் என்பது தகவல்களை, "குறிப்பான்கள்" (Marker) என்று அழைக்கப்படும் தரவு புள்ளிகளின் தொடரை நேர் கோட்டின் இணைப்பதன் மூலம் காட்டுகிறது. வரி வரைபடம் தரவுகளின் மாற்றத்தை குறிப்பிட்ட காலத்தில் நிகழக்கூடியதை காட்டும். எனவே, கால வரிசைப்படி இக்கோடுகள் அமைக்கப்படும்.
8.
pairs என்னும் கலவை அமைப்பு, List அல்லது Tuples கொண்டு உருவாக்கப்படுகிறது.
9.
எடுத்துக்காட்டு:
விகிதமுறு எண்ணின் ADT:
- - constructor
- - constructs a rational number with numerator n, denominator d
rational(n, d)
- - selector
numer(x) ➝ returns the numerators of rational number x
denom(y) ➝ returns the denominator of rational number y
10.
செயற்கூறுக்கு அளபுருக்களை அனுப்பாத போதும், செயற்கூறின் உள்ளே உள்ள மாறியானது பக்க விளைவுகளை ஏற்படுத்தும். இந்த வகைச் செயற்கூறு impure எனப்படும்.
11.
இந்த சார்புகள் நெடுவரிசையில் உள்ள மதிப்புகளைக் கொண்டு செயல்பாடுகளைச் செய்து ஒரே ஒரு மதிப்பை விடையாகக் கொடுக்கும்
(i) COUNT ( )
(ii) AVG ( )
(iii) SUM ( )
(iv) MAX ( )
(v) MIN ( )
12.
SQL server, Oracle, Mysql, MariaDB, SQLite
13.
| தொடரியல் | விளக்கம் | எடுத்துக்காட்டு |
| title ( ) | கொடுக்கப்பட்ட சரத்தின் வார்த்தைகளின் முதல் எழுத்தை மட்டும் பெரிய எழுத்துகளாக திருப்பும் |
> > >str1='education department' > > >print (str1.title ( )) Education Department |
14.
(i) 11
(ii) School
(iii) **** Welcome ****
15.
DBMS என்பது தரவுத்தளங்களை உருவாக்க, வரையறுக்க மற்றும் கையாளுவதற்கு அனுமதிக்கின்ற ஒரு மென்பொருளாகும். இது தரவுகளை எளிமையாக சேமிக்க, செயல்படுத்த மற்றும் பகுப்பாய்வு செய்ய பயனர்களை அனுமதிக்கிறது. DBMS, உருவாக்குதல் போன்ற பல தரவுத்தளத்தை வேலைகளை செய்வதற்கான இடைமுகம் (அ) கருவியை வழங்குகிறது. DBMS தரவுத்தளங்களுக்கு பாதுகாப்பையும் வழங்குகிறது. DBMS இது, பல பயனர்கள் உள்ள நிலையில் தரவு நிலைத்தன்மையும் பராமரிக்கிறது.
16.
பைத்தானில் உள்ள மிக முக்கியமான சிறப்பம்சங்களில் சரவடிவமைப்பு செயற்குறியும் ஒன்று. சரங்களை வடிவமைக்கவும், மாறியில் சேமிக்கப்பட்டுள்ள சரங்களின் பகுதியினை மாற்றியமைக்கவும் சரவடிவமைப்பு செயற்குறியான % பயன்படுகிறது.
17.
பைத்தானில் சரங்களை மாற்றியமைக்க முடியாது. அதாவது சரத்தை ஒருமுறை வரையறுத்த பின்பு அதை திருத்துதல் அல்லது நீக்குதல் போன்ற செயல்பாடுகள் அனுமதிக்கப்பட மாட்டாது.
18.
(i) குறிப்பெயர்கள் எழுத்துக்கள் (A..Z or a..z) அல்லது அடிக்கோடு (-) கொண்டு தொடங்க வேண்டும்.
(ii) குறிப்பெயர்கள் எண்கள் (0 .. 9) கொண்டிருக்கலாம்.
(iii) பைத்தான் குறிப்பெயர்கள் எழுத்து வடிவுணர்வு கொண்டது. அதாவது ஆங்கில பெரியெழுத்துகள் (uppercase) மற்றும் ஆங்கில சிறிய எழுத்துகள் (lowercase) வெவ்வேறாக கருதிக்கொள்ளும்.
(iv) குறிப்பெயர்கள் பைத்தான் சிறப்புச் சொற்களாக இருக்க கூடாது.
(v) பைத்தானில் % $, @ etc., போன்ற நிறுத்தற்குறிகள் குறிப்பெயர்களில் இடம் பெறக்கூடாது.
19.
BETWEEN என்ற சிறப்புச்சொல் மதிப்புகளின் பரப்பை வரையறுக்கிறது, இந்த பரப்பினுள் உள்ள மதிப்புகள் கொண்ட வரிசைகளை உள்ளடக்கும்
BETWEEN இயக்கியின் எதிர் இயக்கியாக NOT BETWEEN செயல்படும், நிபந்தனையை நிறைவு செய்யாத பதிவுகளை இது வெளிக்காட்டும்
20.
(i) செயல் முறையுடனான தரவு கையாளுதல் மொழி
(ii) செயல் முறை அல்லாத தரவு கையாளுதல் மொழி.
21.
1. ஒரு தரவுத்தளத்தை உருவாக்க, பின்வரும் கட்டளையை தூண்டுகுறியில் உள்ளிடவும்;
CREATE DATABASE database_name;
தரவுத்தளத்தின் பெயர்
(எடுத்துக்காட்டாக) அட்டவணைகளை சேமித்து வைக்க ஒரு தரவுத்தளத்தை உருவாக்க:
CREATE DATABASE stud;
2. தரவுத்தளத்துடன் செயலாற்ற, பின்வரும் கட்டளையை உள்ளிடவும்
USE DATABASE;
எடுத்துக்காட்டாக, உருவாக்கப்பட்ட stud என்ற தரவுத்தளத்தை பயன்படுத்த கொடுக்க வேண்டிய கட்டளை
USE stud;
22.
(i) குறிப்பெயர்கள் எழுத்துக்கள் கொண்டு தொடங்க வேண்டும்.
(ii) நிறுத்தற்குறி $ குறிப்பெயர்களில் இடம்பெறக்கூடாது.
(iii) குறிப்பெயரினுள் அடிக்கீரு (-) மட்டுமே இடம்பெற வேண்டும்.
(iv) குறிப்பெயர்கள் பைத்தான் சிறப்புச் சொற்களாக இருக்ககூடாது.
23.
காற்புள்ளி(,) கொண்டு print() செயற்கூறினுள் ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்புகளை பிரிக்கலாம்.
24.
ஒரு செயற்கூறின் உடற்பகுதியின் உள்ளே அல்லது உள்ளமை வரையெல்லையில் மாறியை அறிவிப்பது உள்ளமை மாறி எனப்படும்.
25.
ஊடாடும் முறைமையில் பைத்தான் குறிமுறையை நேரடியாக தூண்டுகுறியில் உள்ளிடப்பட்டவுடன், மொழிப்பெயர்ப்பி தீர்வுகளை உடனடியாக காட்டும். ஊடாடும் முறைமை ஒரு எளிய முறை கால்குலேட்டரை போல் பயன்படுத்தலாம்.
26.
மாறும் நீள செயலுருபின் பொதுவடிவம்
def function_name(*args):
function_body
return statement
27.
தொகுதி என்பது ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட வரிகளையுடைய குறிமுறையைக் குழுவாக ஒன்றிணைத்து, அதனை நிறைவேற்றும் போது ஒரு பெரிய வரிசையின் கூற்றுகளாக எடுத்துக் கொள்கிறது.
28.
ஆக்கியை விளக்கும் நிரல்:
class Sample:
def__ init__ (self, num):
print ("Constructor of class Sample..")
self.num = num
print ("the value is :", num)
S = Sample (10)
29.
30.
வெளியீடு:
1 3 5 7
End of the loop
31.
பைத்தானில் கீழ்க்கண்ட மாற்று (அல்லது) கிளைப்பிரிப்பு கூற்று வகைகள் உள்ளன:
1) Simple if கூற்று
2) if...else கூற்று
3) elif...elif கூற்று
32.
நினைவிருத்தல் என்பது ஒரு உகந்த யுக்தி ஆகும். ஒரே மாதிரியான உள்ளீடு மீண்டும் கொடுக்கப்படும் போது, மிக உயர்ந்த செயற்கூறு அழைப்புகள் முடிவுகளை சேமித்து தற்காலிக சேமிப்பு முடிவுகளை திருப்பி அனுப்பி, கணினி நிரல்களை வேகப்படுத்துவதற்கு முதன்மையாகப் பயன்படுகிறது
33.
கணினி வளங்கள் வரம்புக்குட்பட்டது. நேரம் மற்றும் இடச்சிக்கல்களை பயன்படுத்துவதன் மூலம் நிரல் நெறிமுறையின் செயல்திறன் வரையறுக்கப்படுகிறது
34.
ஒரு மாறி குறிமுறையில் பயன்படும் நேரமே அதனுடைய வாழ்நாள் 'Life Time' எனப்படும்
35.
பைத்தான், நினைவக இடத்தை விடுவிக்க தேவையற்ற பொருட்களை (உள்ளமைக்கப்பட்ட வகைகள் அல்லது இனக்குழு சான்றுருக்கள்) தானமைவாக நீக்குகிறது. அவ்வப்போது பைத்தான், நினைவகப் பகுதிகளை விடுவித்து பயன்பாட்டில் இல்லாதவைகளை மீட்டெடுக்கும் செயல்முறை தேவையற்ற மதிப்புகளை சேகரித்தல் (Garbage collection) என்றழைக்கப்படுகிறது.
36.
(i) உரை முறைமை தானமைவான கோப்பு பிடிக்கு முறைமையாகும். இதில், தரவை கோப்பிலிருந்து படிக்கும் போது தரவு சரங்களாக படிக்கப்படும்.
(ii) உரை அல்லது கோப்புகளான படங்கள் அல்லது, exe கோப்புகளை படிக்கும்போது அவற்றை இருமநிலை முறைமையில் கையாளுதல் செய்ய வேண்டும்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards