12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Poem - 6 - Incident of the French Camp Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 6 - On the Rule of the Road Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 5 - The Chair Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 4 - The Midnight Visitor Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 4 - Ulysses Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 4 - The Summit Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 29/08/2020
12 ஆம் வகுப்பு பொருளியல் முக்கிய 2 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Economics Important 2 Mark Book Back Questions (New Syllabus) 2020
12ஆம் வகுப்பு Economics / பொருளியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Economics / பொருளியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Economics Test

1.
2.
உடன் தொடர்பு என்பதனை வரையறு.
3.
புள்ளியியல் என்றால் என்ன?
4.
பொருளாதாரத் திட்டமிடலின் வரைவிலக்கணம் எழுதுக.
5.
ஒலிமாசுவினை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளை கூறுக.
6.
நேர்முக வரிக்கு இரு எடுத்துக்காட்டு தருக.
7.
தடையற்ற வாணிகப் பகுதி என்றால் என்ன?
8.
வெளி அங்காடி நடவடிக்கை என்பதன் பொருள் கூறுக.
9.
நெகிழிப் பணம் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
10.
இறுதி நிலை சேமிப்பு நாட்டம் (MPS) - வரையறு
11.
'சே' விதியின் எடுகோள்களைப் பட்டியலிடுக.
12.
தனிமனிதர் வருமானம் என்றால் என்ன?
13.
முதலாளித்துவம் என்றால் என்ன?
1.
2.
உடன் தொடர்புப் பகுப்பாய்வு என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாறிகள் எவ்வாறு ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டு மாறுகின்றன என்பதைப் பற்றி கணக்கிடுவது ஆகும் என்று சர்ஃபிரான்சிஸ் கால்டன் கூறுகிறார்.
3.
புள்ளியியல் என்பது மதிப்பீடுகளையும் நிகழ்தகவுகளையும் பற்றிய அறிவியலாகும்.
(அல்லது)
புள்ளியியல் என்பது எண்ணியலான விவரங்களைத் திரட்டி, ஒருங்கிணைந்து வழங்கி, பகுத்தாய்ந்து விவரிப்பது ஆகும்.
4.
இராபின்ஸ் கூற்றுப்படி, “பொருளாதாரத் திட்டமிடல் என்பது தனியார் உற்பத்தி, வழங்கல் நடவடிக்கைகளைக் கூட்டாக கட்டுப்படுத்துவது அல்லது ஒடுக்குவதை குறிப்பதாகும்”. (அல்லது) "பொருளாதாரத் திட்டமிடல் என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட இலக்குகளை அடைய உரிய பொறுப்பில் உள்ளவர்கள் நிதானமாக சந்தித்து, இருக்கக்கூடிய பொருளாதார வளங்களை அதிக அளவில் பயன்படுத்த சுட்டிக்காட்டும் வழிமுறைகளே ஆகும்" என்று டால்டன் கூறுகிறார்".
5.
ஒலித்தடைகளை ஏற்படுத்துதல்
போக்குவரத்து நெரிசல் கட்டுப்பாடு
ஒலி பெருக்கிகளைக் கட்டுப்படுத்துதல்
பெரிய ஊர்தி செல்லும் நேரத்தைக் கட்டுப்படுத்துதல்
6.
நேர்முக வரிக்கு உதாரணங்களாவன;
1. வருமான வரி
2. சொத்து வரி
7.
ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட உறுப்பினர் நாடுகள் அனைத்தும் ஒரே மண்டலமாகக் கருதி வாணிகத்தடைகளைக் குறைக்க ஒத்துழைக்கும். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகளுக்கிடையே ஒப்பந்தம் போடப்படுகிறது.
எ.கா : SAFTA, EFTA
8.
1. ஒரு குறுகிய அளவில் பார்க்கும் பொழுது, மைய வங்கியானது பொதுச் சந்தையில் அரசின் கடன் பத்திரங்களை வெளியிடுவதும் திரும்பப்பெறுவதும் வெளிச்சந்தை நடவடிக்கைகள் எனப்படுகின்றது.
2. மைய வங்கி அரசின் கடன் பத்திரங்களை மட்டுமல்லாமல் தனியார் நிறுவனங்களின் தகுதி படைத்த பத்திரங்களையும் விற்பனை செய்வதும், திரும்பப் பெறுவதும் ஆகும்.
9.
1. அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட பணம் நெகிழிப் பணமாகும். இது நிதிப் பொருட்களின் வரிசையில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தோற்றமாகும்.
2. நெகிழ்வுப் பணம்(Plastic Money) நடைமுறையில் உள்ள காகித பணத்திற்கு மாற்றாகும். தினந்தோறும் பயன்படுத்தும் வகையில் நெகிழி அட்டையில் உருவாக்கப்பட்டிருப்பதால் இது நெகிழிப் பணம் என்றழைக்கப்படுகிறது.
(உ.ம்) ரொக்க அட்டை, கடன் அட்டை, பற்று அட்டை போன்றவை ஆகும்.
10.
வருமான மாற்றத்திற்கும், சேமிப்பு மாற்றத்திற்கும் இடையேயுள்ள வீதமே இறுதிநிலை சேமிப்பு நாட்டமாகும்.
\(MPS=\frac { \Delta S }{ \Delta Y } \)
இதில், \(\frac { \Delta S }{ \Delta Y } \) = Marginal Propensity to save
\(\Delta S\) ∆S = சேமிப்பு மாற்றம்
\(\Delta Y\) ∆Y = வருமான மாற்றம்
11.
1. ஒரு தனி வாங்குபவரோ, விற்பவரோ அல்லது உள்ளீடு பொருளோ விலையை மாற்ற முடியாது.
2. முழு வேலை நிலை நிலவும்.
3. உழைப்பு, பண்டங்கள் ஆகியவற்றின் அங்காடியில் நிறைவுப் போட்டி நிலவும்.
12.
தனிமனிதர் வருமானம் என்பது ஒரு ஆண்டில் ஒரு நாட்டில் வசிக்கும் ஒவ்வொரு தனிமனிதருக்கும் பல வழிகளில் இருந்து கிடைக்கப்பெறும் மொத்த வருமானம் ஆகும். அவை வட்டியாகவோ, வாரமாகவோ, கூலியாகவோ இருக்கலாம். இவை அனைத்தையும் ஒவ்வொரு தனிமனிதருக்கும் கூட்டினால் அது தனிமனிதர் வருமானம் ஆகும்.
13.
1. முதலாளித்துவப் பொருளாதாரத்தின் தந்தை ஆடம் ஸ்மித் ஆவார்.
2. முதலாளித்துவப் பொருளாதாரம் தடையில்லாப் பொருளாதாரம் மற்றும் அங்காடிப் பொருளாதாரம் எனவும் அழைக்கப்படுகிறது.
3. இங்கு பொருளாதார நடவடிக்கைகளை தீர்மானிப்பதில் அரசாங்கத்தின் பங்கு குறைவாகவும், சந்தையின் பங்கு அதிகமாகவும் இருக்கும்.
4. முதலாளித்துவப் பொருளாதாரத்தில் உற்பத்தி நடவடிக்கைகள் தனியார் வசம் இருக்கும். பண்டங்கள், பணிகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் இலாப நோக்கத்தை முதன்மையாகக் கொண்டிருக்கும்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Supplementary - 3 - The Hour of Truth (Play) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 3 - All the World’s a Stage Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 3 - In Celebration of Being Alive Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 2 - Life of Pi Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards