12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 29/08/2020
12 ஆம் வகுப்பு பொருளியல் மாதிரி 2 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Economics Sample 2 Mark Book Back Questions (New Syllabus) 2020
12ஆம் வகுப்பு Economics / பொருளியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Economics / பொருளியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Economics Test

1.
பன்னாட்டுப் பொருளியல் என்றால் என்ன?
2.
ஒட்டுறவு என்பதனை வரையறு.
3.
பொருளாதார முன்னேற்றம் - வரையறு.
4.
உலக வெப்பமயமாதல் என்பதனை வரையறு
5.
"பொது நிதி" வரையறு
6.
7.
கடன் விநியோகப் பகிர்வு என்றால் என்ன?
8.
பண்டமாற்று என்றால் என்ன?
9.
பெருக்கி - வரையறு
10.
நுகர்வுச் சார்பு என்றால் என்ன?
11.
தொகு அளிப்பின் கூறுகள் யாவை?
12.
ஊரக வேலையின்மையின் முக்கியமான இயல்பு யாது?
13.
பொருளாதார மாதிரியின் இலக்கணம் தருக
14.
பேரியல் பொருளியலின் இலக்கணம் தருக.
1.
பன்னாட்டுப் பொருளியல் என்பது பண்டங்கள் மற்றும் பணிகள் நாடுகளுக்கிடையே பரிமாற்றம் செய்வது பற்றிய பொருளியலின் ஒரு பாடப்பிரிவாகும்.
2.
ஒரு மாறியின் மதிப்பில் மாற்றம் மற்ற மாறியின் மதிப்பில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதே ஒட்டுறவு ஆகும். இங்கு இரு மாறிகள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றது.
3.
பொருளாதார முன்னேற்றம் என்பது பின்தங்கிய நாடுகளின் சிக்கல்களைக் கொண்டதாகும். அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தை ஒரு குறிப்பிட்ட நோக்கம் மற்றும் தேவையை அடைய பயன்படுத்தும் வழிமுறையைக் குறிக்கும்.
4.
நிலத்தின் மேற்பரப்பில் (நிலமும் நீரும்) தற்பொழுது ஏற்பட்டுள்ள தட்ப வெப்ப நிலை அதிகரிப்பு புவி வெப்பமயமாதல் என்கிறோம்.
5.
"பொது நிதி என்னும் பாடம் அரசியலுக்கும் பொருளியலுக்கும் இடையே எல்லைக் கோடாகத் திகழ்கிறது. இது அரசின் பொது அதிகார வெவ்வேறு அமைப்பின் வரவு செலவுகளைப் பற்றியும் அது ஒன்றோடொன்று சரி செய்து கொள்வதைப் பற்றியும் கருத்தில் கொள்கிறது." என்று டால்டன் கூறுகிறார்.
(அல்லது)
“அரசின் வருவாய் மற்றும் செலவுகளின் இயல்பையும், கொள்கைகளையும், ஆராய்வதே பொது நிதியியல் ஆகும்." என்று ஆடம் ஸ்மித் கூறுகிறார்.
6.
7.
1. வணிக வங்கிகள் வழங்கும் கடன்கள் பல்வேறு நோக்கங்களுக்காக வழங்கப்படுகிறது.
2. நாட்டின் பண அளிப்புச் சூழ்நிலைகளுக்கேற்ப அக்கடன் நோக்கங்களைப் பட்டியலிட்டு வரையறை செய்வதன் மூலம் கடன் கட்டுப்பாட்டினை ஏற்படுத்துவது ஆகும்.
8.
பிறரிடமிருந்து தங்களுக்கு தேவையான பொருட்களை அல்லது பணிகளை பெறும் பொருட்டு, தங்களிடம் உள்ள பொருட்களை அல்லது பணிகளை மாற்றாக வழங்குவது பண்டமாற்று முறையாகும்.
9.
நாட்டு வருமானத்தின் மாற்றத்திற்கும் முதலீட்டில் ஏற்படும் மாற்றத்திற்கும் உள்ள வீதத்தை பெருக்கி என வரையறுக்கலாம்.
\(\Delta I\)என்பது முதலீட்டில் அதிகரிப்பையும், \(\Delta Y\) என்பது வருமானத்தில் அதிகரிப்பையும் குறிக்கின்றது. எனவே,.
\(K=\frac { \Delta Y }{ \Delta I } \)
10.
வருவாய்க்கும் நுகர்வுக்கும் உள்ள தொடர்பையே "நுகர்வுச் சார்பு" அல்லது "நுகர்வு நாட்டம்" என்கிறோம். இது "மொத்த நுகர்வு, மொத்த நாட்டு வருமானம் ஆகிய இரு ஒட்டுமொத்தத்திற்கிடையேயான சார்புத் தொடர்பாகும்."
இதனை = C = f (Y) எனலாம்.
இதில் C = நுகர்வு
Y = வருமானம்
f = சார்பு
11.
தொகு அளிப்பின் நான்கு கூறுகளாவன :
1. மொத்த (விரும்பப்படுகிற) நுகர்வுச் செலவு (C)
2. மொத்த (விரும்பப்படுகிற) தனியார் சேமிப்பு (S)
3. நிகர வரிவசூல் (T)
4. தனிமனிதர் (விரும்பப்படுகிற) வெளிநாட்டவர்க்கு (உறவினர் மற்றும் நண்பர்கள்) கொடுக்கின்ற மாற்று செலுத்தல்கள், உதவித்தொகை ஆகியவை. இது Rf (வெளிநாட்டிற்கு வழங்கிய நிவாரண தொகை) என குறிக்கப்படுகிறது.
12.
1. இந்திய கிராமப்புறங்களில் வேலையின்மையும், குறைவான வேலைவாய்ப்பும் காணப்படுகின்றன.
2. கிராமங்களில் மறைமுக வேலையின்மையும், பருவகால வேலையின்மையும் நிலவுகின்றன.
13.
1. மாதிரி என்பது உண்மை சூழலை எளிமையாக பிரதிபலிப்பது ஆகும்.
2. பொருளாதார வல்லுநர்கள், பொருளாதார நடவடிக்கைகள், அவற்றுக்கிடையேயான உறவுகள், நடத்தைகள் பற்றி விவரிப்பதற்கு மாதிரிகளைப் பயன்படுத்துகின்றனர்.
3. மாதிரி என்பது பொருளாதாரம் எவ்வாறு இயங்குகிறது என்பதை விளக்குகிறது.
14.
பேரியல் பொருளாதாரம் என்பது ஒட்டு மொத்தங்களாகிய நாட்டு வருமானம், வேலைவாய்ப்பு நாட்டு உற்பத்தி முதலானவற்றை உள்ளடக்கியது. பேரியல் பொருளாதாரத்தை 'வருவாய்க் கோட்பாடு'' எனவும் அழைப்பர்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards