12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 28/08/2020
12 ஆம் வகுப்பு வரலாறு பயிற்சி 2 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard History Practise 2 Mark Bookback Questions (New Syllabus) 2020
12ஆம் வகுப்பு History / வரலாறு தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , History / வரலாறு பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ History Test1.
பன்னாட்டு சங்கத்திலிருந்து 1933 ஆம் ஆண்டில் ஜெர்மனி ஏன் வெளியேறியது?
2.
கார்பொனாரி இத்தாலிய ஐக்கியத்திற்கு செய்த தொண்டுகளை முன்வைத்து குறிப்பு வரைக.
3.
இலத்தீன் அமெரிக்க விடுதலைக்கு சைமன் பொலிவரின் பங்களிப்பை சுருக்கமாய் வரைக.
4.
பெரெஸ்ட்ரோயிகா கோட்பாட்டின் பொருள் சுருக்கத்தைக் கூறுக.
5.
ஜெர்மனி பிரான்சை தனிமைப்படுத்த முனைந்தது ஏன்?
6.
யார்க் மற்றும் லான்காஸ்டிரியன் குடும்பங்களுக்கு இடையேயான மோதல் ஏன் ரோஜாப்பூ போர் என்று அழைக்கப்பட்டது? இந்த போர் எவ்வாறு முடிவுக்கு வந்தது?
7.
பூமிதான இயக்கம் பற்றி எழுதுக.
8.
ஹைதராபாத் சமஸ்தானத்தை இந்திய யூனியனுடன் சேர்க்க எடுக்கப்பட்ட காவல் துறை நடவடிக்கையினை எது நியாயப்படுத்தியது?
9.
கிரிப்ஸ் முன்மொழிவைக் காங்கிரஸ் ஏன் நிராகரித்தது?
10.
தேசியவாதிகளால் ரெளலட் சட்டம் ஏன் எதிர்க்கப்பட்டது?
11.
ஆகாகான் தலைமையிலான முஸ்லிம் லீக் முன்வைத்த கோரிக்கைகள் என்ன?
12.
இரண்டாவது லாகூர் சதி என்றறியப்படும் நிகழ்வு யாது?
13.
14.
ஆங்கிலப் பாராளுமன்றத்திற்குச் சென்னைவாசிகள் சங்கத்தினர் அளித்த கோரிக்கைகள் என்ன?
1.
1.1933 ஆம் ஆண்டு ஜெனீவாவில் பன்னாட்டு சங்கம் ஆயுதக் குறைப்பு மாநாடு ஒன்றை நடத்தியது.
2.பிரான்சிற்கு இணையாக ஜெர்மனியும் மறு ஆயுதமாக்கல் கோரிக்கை விடுத்தது.
3.பிரான்ஸ் அதை ஏற்க மறுத்தது.
4.எனவே ஹிட்லர் அம்மாநாட்டிலிருந்தும்,பன்னாட்டுச் சங்கத்திலிருந்து ஜெர்மனியை வெளியேறினார்.
2.
1.சுதந்திர கருத்துகளையும், நாட்டுப் பற்றையும் வலியுறுத்திய கார்பொனாரி போன்ற இரகசிய குழுக்கள் 1820களில் பரவின.
2.தாராளமயமாதல் கருத்துக்களையும்,தேசியவாதத்தையும் இக்குழுக்கள் உயிர்த்தெழச் செய்தன.
3.
1.பொலிவர் கராகஸ் பகுதியின் கிரியோல் வகுப்பைச் சேர்ந்தவர்.
2.ஸ்பானியர்களின் காலனி ஆதிக்கத்தை விமர்சித்தார்.
3.பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பாதியிலும் இருபதாம் நூற்றாண்டிலும் கூடிய லத்தீன் அமெரிக்க விடுதலை இயக்கங்களும் இடது சாரிகளுக்கும் உத்வேக மூட்டும் ஒரு சக்தியாக பொலிவர் விளங்கினார்.
4.
1.1985 ல் மிகைல் கோர்பசேவ் சோவியத் ரஷ்யாவின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
2.1986ல் கமியூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் அரசியல் பொருளாதார மறுகட்டமைப்பை அவசியம் குறித்து விளக்கினார்.
3.பெரெஸ்ட்ரோயிகாவின் மூலம் அவர் பல நிறுவனங்களின் மீதிருந்த கட்டுப்பாடுகளைத் தளர்த்தினார்.
4.விவசாயிகளும் உற்பத்தியாளர்களும் வணிகர்களும் எதை உற்பத்தி செய்வது. எவ்வளவு உற்பத்தி செய்வது எந்த விலையில் விற்பது என முடிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
5.
1.1871 ல் பிராங்கோ-பிரஷ்ய போரில் அல்சாஸ்,லொரைன் பகுதியை இழந்தது.
2.அதற்காக பிரான்ஸ் பழி வாங்கக்கூடும் என பிஸ்மார்க் எதிர்பார்த்தார்.
3.அதனால் பிரான்ஸை தனிமைப்படுத்த தீர்மானம் கொண்டார்.
6.
1.அரச சிம்மாசனத்தை அடைய யார்க் குடும்பம் மற்றும் லான்காஸ்டிரியன் குடும்பம் என இரண்டு அரச குடும்பங்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
2.இதன் விளைவாக ரோஜாப்பூ போர் நடந்தது.(அவர்கள் முறையே வெள்ளை மற்றும் சிவப்பு ரோஜாக்கள் உடைய அடையாளக்குறிகளை அணிந்தனர், அதனால் இப்பெயர் பெற்றது.) இந்த உள்நாட்டுப்போரில் ஹென்றி டியூடர் வெற்றி வாகை சூடி, இங்கிலாந்தில் புதிய அரசாட்சி அமைய வழிவகுத்தார்.
3.ஏழாம் ஹென்றி என்று பட்டம் சூட்டிக்கொண்ட அவர் யார்க் குடும்பத்தைச் சேர்ந்த எலிசபெத் உடன் திருமண ஒப்பந்தத்தில் ஈடுபட்டார், இதனால் இங்கிலாந்து ஒரு தேசிய அரசாக உருவெடுத்தது.
7.
1.பெரும் நிலவுடைமையாளர்கள்,தங்களிடம் உபரியாக உள்ள நிலங்களைத் தாங்களாகவே முன் வந்து வழங்குவது பூமிதான இயக்கத்தின் நோக்கமாகும்.
2.வினோபா பாவே முதன் முறையாக தனது நிலத்தை அரசிடம் வழங்கியது மக்களின் கவனத்தை பெரிதும் கவர்ந்தது.
8.
(i) ஹைதராபாத் நிஜாம் விடுதலைப் பிரகடனம் செய்த 48 மணிநேரத்திற்குள் இந்தியா அங்கு காவல்துறை நடவடிக்கைகளைத் தொடர்ந்தது.
(ii) ஹைதராபாத் நிஜாம் மற்றும் அவரது இராணுவமான இரசாக்கர்கள் மீது தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி தெலுங்கானா மக்கள் இயக்கத்தை கம்யூனிஸ்டுகள் வழிநடத்தினர்.
(iii) இதன் காரணமாக ஹைதராபாத் மீது காவல்துறை நடவடிக்கை எடுப்பதற்குச் சட்டபூர்வமான காரணம் வாய்த்தது எனலாம்.
9.
(i) டொமினியன் அந்தஸ்து வழங்குவதென்பது ஏமாற்றமளிக்கக் கூடிய குறுகிய நடவடிக்கையாகும்.
(ii) பிற மாகாணங்களைப் போல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு மாற்றாக உறுப்பினர்களால் நியமிக்கப்படும் முறையை காங்கிரஸ் நிராகரித்தது.
(iii) ஆனால் பேச்சுவார்த்தை தோல்வி அடையக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டு அவ்வாறே நிகழ்ந்தது.
10.
1. மத்திய சட்டப்பேரவையில் ஒவ்வொரு உறுப்பினரும் இந்த மசோதாவை எதிர்த்த நிலையில் 1919 இல் மார்ச் மாதம் ரௌலட் சட்டத்தை அரசு நிறைவேற்றியது.
2. எந்தவித நீதிமன்ற விசாரணையுமின்றி எவரையும் சிறையில் அடைக்க இச்சட்டம் அதிகாரமளிக்காது.
3. 1919 இல் ரௌலட் சட்டத்திற்கு எதிராக வேலைநிறுத்தத்தில் ஈடுபடவும், எதிர்க்கவும் செய்தனர்.
11.
(i) ஆகாகான் தலைமையின் கீழ் சிம்லாவில் ஒன்று திரண்டு அப்போதைய அரசப் பிரதிநிதியான மிண்டோ பிரபுவிடம் முஸ்லிம் லீக் தங்களது கருத்துக்களை முன்வைத்தனர்.
(ii) அரசுப் பணிகளில் முஸ்லிம்களின் சதவீதத்தை உயர்த்துதல், உயர் நீதிமன்றங்களில் முஸ்லிம் நீதிபதிகளின் நியமனம் மற்றும் அரசுப் பிரதிநிதியின் ஆலோசனைக் குழுவில் உறுப்பினராதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.
12.
(i) ராஜகுரு, சுகதேவ் ஜதீந்திரநாத் தாஸ் ஆகியோருடன் பகத்சிங்கும் மேலும் 21 பேரும் கைது செய்யப்பட்டனர்.
(ii) சாண்டர்ஸ் கொலை தொடர்பான விசாரணைக்கு அவர்கள் ஆளாக்கப்பட்டனர். இந்த வழக்கு இரண்டாவது லாகூர் சதி வழக்கு என்று அறியப்படுகிறது.
13.
14.
1. சென்னைவாசிகள் சங்கம் 1852 டிசம்பரில் சமர்ப்பித்த மனுவில் ரயத்துவாரி, ஜமீன்தாரி முறைகள் வேளாண்மை வர்க்கத்தினரைக் கடும் துன்பங்களுக்கு உள்ளாக்கியதைச் சுட்டிக்காட்டியது
2. ஜமீன்தார்கள், கம்பெனியின் அதிகாரிகள் ஆகியோரின் அடக்குமுறை சார்ந்த தலையீட்டிலிருந்து விவசாயிகளை விடுவிக்கப் பண்டைய கிராமமுறையை மீட்டெடுக்க வலியுறுத்தியது.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards