12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Maths Applications of Matrices and Determinants Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 28/08/2020
12 ஆம் வகுப்பு வரலாறு மாதிரி 2 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard History Sample 2 Mark Book Back Questions (New Syllabus) 2020
12ஆம் வகுப்பு History / வரலாறு தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , History / வரலாறு பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ History Test1.
மூனிச் ஒப்பந்தத்தின் கூறுகள் யாவை?
2.
ஃபிராங்கோயஸ் பபேஃப் என்பவர் யார்?
3.
பீட்டர்லூ படுகொலையின் பின்னணி யாது?
4.
பாஸ்டன் தேநீர் விருந்து குறித்து நீங்கள் அறிந்ததென்ன?
5.
பெரெஸ்ட்ரோயிகா கோட்பாட்டின் பொருள் சுருக்கத்தைக் கூறுக.
6.
பிரிட்டனுக்கும் பிரான்சுக்குமிடையே 1904 இல் கையெழுத்திட்ட நாடுகளுக்கு இடையே நட்புறவின் (entente-cordiale) முக்கியத்துவம் யாது?
7.
பிளாரன்ஸின் மெடிசி குடும்பம் பற்றி குறிப்பு வரைக.
8.
பூமிதான இயக்கம் பற்றி எழுதுக.
9.
அரசமைப்பு நிர்ணய சபையின் அமைப்பினை விளக்குக?
10.
சிம்லா மாநாட்டின் பேச்சுவார்த்தைகள் ஏன் முறிந்தன?
11.
12.
கௌராக்ஷினி சபை பற்றி குறிப்பு வரைக?
13.
1903 - 1914 ஆகிய கால கட்டங்களில் தேசிய இயக்கம் வளர்ந்து வருவதைக் கட்டுப்படுத்த ஆங்கில அரசு மேற்கொண்ட அடக்குமுறை நடவடிக்கைகள் என்ன?
14.
இரண்டாவது லாகூர் சதி என்றறியப்படும் நிகழ்வு யாது?
15.
16.
புதிய நிலவுடைமை உரிமைகளால் ஏற்பட்ட பாதிப்புகளை எழுதுக.
1.
1.மூனிச் மாநாட்டில்,பிரிட்டன்,பிரான்ஸ்,ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் கலந்து கொண்டன.
2.ஹிட்லர் அக்டோபர் 1 இல் நிர்ப்பந்தித்தது போல் சுடெட்டன்லாந்தை ஜெர்மானிய படைகள் ஆக்கிரமித்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டது.
3.செக்கோஸ்லோவாக்கியின் பகுதிகளை போலந்திற்கும்,ஹங்கேரிக்கும் பிரித்துக் கொடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
2.
1. பிரெஞ்சுப் புரட்சி நடந்த காலத்தில் செல்வாக்கு பெற்று விளக்கியவர் ஃபிராங்கோயஸ் பபேஃப் ஆவார்.
2. புரட்சியானது விவசாயிகள்,தொழிலாளர்களின் தேவைகளை வெளிக்கொணரவில்லை என்றார்.
3. தனியுடைமையை ஒழித்து நிலங்களைப் பொதுவுடைமையாக்க வேண்டும் என வாதிட்டார்.
3.
1.1819ல் ஏற்பட்ட மந்தநிலை காரணமாக 60,000 அதிருப்தியடைந்த மக்கள் ஹென்றி ஹன்ட் என்பவர் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
2.ஆர்ப்பாட்டக்காரர்களின் மனநிலையை கண்டு அதிகாரிகள் பீதியடைந்தனர்.
3.மான்செஸ்டர் யோமனரி எனும் தன்னார்வ குதிரைப்படையை கொண்டு ஆர்ப்பாட்டக்காரர்களை அடக்க உத்தரவிட்டனர்.
4.700 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.17 நபர்கள் கொல்லப்பட்டனர்.
4.
1. பாஸ்டன் படுகொலையை தொடர்ந்து 1773 ல் பூர்வகுடி அமெரிக்கர்களைப் போல வேடமணிந்த 100 கிளர்ச்சியாளர்கள் பாஸ்டன் துறைமுகத்தில் தேயிலை கப்பலில் ஏறி 342 பெட்டிகளை கடலில் வீசி எறிந்தனர்.
2. இதுவே பாஸ்டன் தேநீர் விருந்தாகும்.
5.
1.1985 ல் மிகைல் கோர்பசேவ் சோவியத் ரஷ்யாவின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
2.1986ல் கமியூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் அரசியல் பொருளாதார மறுகட்டமைப்பை அவசியம் குறித்து விளக்கினார்.
3.பெரெஸ்ட்ரோயிகாவின் மூலம் அவர் பல நிறுவனங்களின் மீதிருந்த கட்டுப்பாடுகளைத் தளர்த்தினார்.
4.விவசாயிகளும் உற்பத்தியாளர்களும் வணிகர்களும் எதை உற்பத்தி செய்வது. எவ்வளவு உற்பத்தி செய்வது எந்த விலையில் விற்பது என முடிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
6.
1.ஆங்கிலோ-ஜப்பானியக் கூட்டால் பிரான்ஸ் பிரிட்டனிடம் நட்பைக் கோரியது.
2.இது 1904 இல் நாடுகளுக்குள் ஒத்துப் போகிற நட்புறவை விளைவித்தது.
3.மொராக்கோவில் பிரான்சை தன்னிச்சையாக செயல்பட பிரிட்டன் ஒத்துக் கொண்டது.
4.எகிப்தில் பிரிட்டனின் ஆக்கிரமிப்பை பிரான்ஸ் அங்கீகரித்தது.
7.
1.பிளாரன்ஸ் நகரில் சக்திவாய்ந்த வர்த்தகக் குடும்பம் மெடிசி குடும்பம்.
2.கோசிமோ டி மெடிசி என்பவர் இத்தாலி முழுவதும் வங்கிக் கிளைகளை நடத்தி வங்கித்துறையில் கொடிகட்டிப் பறந்தார்.
3.1434-1464ஆம் ஆண்டுகளில் அரசு நிர்வாகத்தை மறைமுகமாக தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.
8.
1.பெரும் நிலவுடைமையாளர்கள்,தங்களிடம் உபரியாக உள்ள நிலங்களைத் தாங்களாகவே முன் வந்து வழங்குவது பூமிதான இயக்கத்தின் நோக்கமாகும்.
2.வினோபா பாவே முதன் முறையாக தனது நிலத்தை அரசிடம் வழங்கியது மக்களின் கவனத்தை பெரிதும் கவர்ந்தது.
9.
(i) 1946 டிசம்பர் 9 ஆம் நாள் அரசியலமைப்புக்குழு தன் பணியைத் தொடங்கியது.
(ii) அரசியலமைப்புக் குழுவின் தலைவராக டாக்டர் ராஜேந்திர பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
(iii) டாக்டர் பி.ஆர் அம்பேத்கர் அரசியலமைப்பு வரைக்குழுவின் நிரந்தர தலைவராக நியமிக்கப்பட்டார்.
(iv) 1949 நவம்பர் 26 ஆம் நாள் முதல் இந்திய அரசியலமைப்பை இச்சபை ஏற்றுக்கொண்டது.
(v) 1950 ஜனவரி 26 ஆம் நாள் முதல், அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தது.
(vi) அது முதல் ஜனவரி 26 குடியரசு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது
10.
(i) வேவல் பிரபு ஜூன் 1945 இல் பேச்சுவார்த்தை நடத்த சிம்லா மாநாட்டைக் கூட்டினார்.
(ii) அரசப் பிரதிநிதியின் குழுவிற்கு முஸ்லீம் லீக் தனக்கு மட்டுமே இஸ்லாமியப் பிரதிநிதிகளை நியமிக்க உரிமை உள்ளது என்றது.
(iii) காங்கிரஸ், ஜாதி இந்துக்களை மட்டுமே நியமிக்க முடியும் என்று வலியுறுத்தியது. இது மேலும் மக்களை இனவாரியாகப் பிரிக்கும் முயற்சி என்று வேவல் பிரபு கருதி சிம்லா பேச்சுவார்த்தையைக் கைவிட்டார்.
11.
12.
(i) பஞ்சாப்பை சேர்ந்த பசுப்பாதுகாவலர்கள் மத்திய மாகாணத்தின் "கௌராக்ஷினி" சபா (பசுப்பாதுகாப்பு சங்கங்கள்) செயல்பாட்டாளர்கள் ஆவர்.
(ii) இவர்கள் மிகவும் போர்க்குணம் கொண்டவர்களாக பசுப் பாதுகாவலர்களாக இருந்தனர்.
(iii) இவர்கள் தேவநாகிரி மொழியை அலுவல் மொழியாக அங்கீகரிக்க வேண்டும் என்று பரப்புரை செய்தனர்.
(iv) மேலும் பசுக்களின் விற்பனை அல்லது பசுக் கொலையில் இந்த சங்கங்களின் தலையீடுகள் இருந்தன.
(v) ஐக்கிய மாகாணங்கள் பீகார், குஜராத் மற்றும் பம்பாய் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு பரந்த பகுதியில் பரவிய கலவரங்கள், நூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை பலிவாங்கின.
13.
1 1903-ல் கர்சன் பிரபு குற்ற உளவுத்துறையை (CID) உருவாக்கினார்.
2 1908 வெடிபொருட்கள் சட்டம், 1910 தேசத்துரோக கூட்டங்கள் தடுப்புச் சட்டம் ஏற்படுத்தினர்.
3 1914-ல் இயற்றப்பட்டது புரட்சிகர இயக்கங்களின் அடிப்படைக் கட்டமைப்பைத் தகர்க்கும் நோக்கில் இவற்றில் பெரும்பான்மையான சட்டம் இயற்றப்பட்டன.
4 இவை தேசிய இயக்கம் வளர்ந்து வருவதை கட்டுப்படுத்த ஆங்கில அரசு மேற்கொண்ட அடக்குமுறை நடவடிக்கைகள் ஆகும்.
14.
(i) ராஜகுரு, சுகதேவ் ஜதீந்திரநாத் தாஸ் ஆகியோருடன் பகத்சிங்கும் மேலும் 21 பேரும் கைது செய்யப்பட்டனர்.
(ii) சாண்டர்ஸ் கொலை தொடர்பான விசாரணைக்கு அவர்கள் ஆளாக்கப்பட்டனர். இந்த வழக்கு இரண்டாவது லாகூர் சதி வழக்கு என்று அறியப்படுகிறது.
15.
16.
1. கிழக்கு இந்திய கம்பெனி அறிமுகம் செய்த புதிய நில நிர்வாகக் கொள்கையினால் இரண்டு முக்கியப் பாதிப்புகள் ஏற்பட்டன.
2. நிலத்தை விற்பனைப் பொருளாக்குவது இந்தியாவில் வேளாண்மையை வணிகமயமாக்குவது ஆகிய இரண்டையும் அவர்கள் நிறுவனமாகவே ஆக்கினார்கள்.
3. ஆங்கிலேயர் வருகைக்கு முன்பு இந்தியாவில் நிலத்தில் தனிச் சொத்துரிமை என்பது இல்லை.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards