12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 29/08/2020
12 ஆம் வகுப்பு இயற்பியல் முக்கிய 2 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Physics Important 2 Mark Book Back Questions (New Syllabus) 2020
12ஆம் வகுப்பு Physics / இயற்பியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Physics / இயற்பியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Physics Test1.
ஒத்ததிர்வு அதிர்வெண் என்றால் என்ன?
2.
மின்காந்தத்தூண்டலின் பாரடே விதிகளைக் கூறுக.
3.
பெல்டியர் விளைவு என்றால் என்ன?
4.
நிலைமின் தடுப்புறை பற்றி சிறு குறிப்பு வரைக
5.
கூலூம் எதிர்த்தகவு இருமடி விதியைக் கூறு.
6.
7.
தளவிளைவுக்கோணம் என்றால் என்ன?
8.
முழுவதும் தளவிளைவு அடைந்த, தளவிளைவு அடையாத மற்றும் பகுதி தளவிளைவு அடைந்த ஒளி என்றால் என்ன?
9.
ஒளியின் அலைக் கொள்கை என்றால் என்ன?
10.
மாறுநிலைக் கோணத்திற்கான சமன்பாட்டைப் பெறுக.
11.
குவாண்டம் கருத்துப்படி, ஒளிச்செறிவு என்பதை வரையறை செய்க. அதன் அலகைத் தருக.
12.
இயற்கையில் உள்ள ‘நானோ’ பொருட்களுக்கு ஏதேனும் இரண்டு எடுத்துக்காட்டுகள் தருக.
13.
கியூரி-வரையறுக்கவும்.
14.
ஐசோடோப்பு என்றால் என்ன? எடுத்துக்காட்டு ஒன்று தருக.
15.
RADAR என்பது எதனைக் குறிக்கிறது?
16.
ஒரு டிரான்சிஸ்டர் பெருக்கியில் பின்னூட்டச் சுற்றுக்கான தேவையை விளக்குக.
17.
ஒரு குறைக்கடத்தி பொருளில் எலக்ட்ரான் துளை இணை எவ்வாறு உருவாக்கப்படுகிறது?
18.
சீரமைக்கப்பட்ட ஆம்பியரின் சுற்று விதியின் தொகையீட்டு வடிவத்தை எழுதுக.
19.
ஓம் விதியின் பயன்பாட்டு வடிவத்தை கூறு.
1.
ஒத்ததிர்வு ஏற்படும் மின்மூலத்தின் அதிர்வெண் ஒத்ததிர்வு அதிர்வெண் எனப்படும்.
\(\frac { 1 }{ R } \sqrt { \frac { L }{ C } } \)
\({ \omega }_{ r }L=\frac { 1 }{ { \omega }_{ r }C } \) (அல்லது) XL = XC
2.
முதல் விதி:
ஒரு மூடிய சுற்றுடன் தொடர்புடைய காந்தப்பாயம் மாறும் போதெல்லாம் சுற்றில் ஒரு மின்னியக்குவிசை தூண்டப்படுகிறது. காந்தப்பாயம் மாறுகின்ற வரை மின்னியக்கு விசை சுற்றில் இருக்கும்.
இரண்டாம் விதி:
ஒரு மூடிய சுற்றில் தூண்டப்பட்ட மின்னியக்கு விசையின் எண்மதிப்பு, நேரத்தைப் பொருத்து சுற்றுடன் தொடர்புடைய காந்தப்பாயம் மாறும் வீதத்திற்கு சமமாகும்
\(ɛ = \frac{d Φ_g}{dt}\)
3.
வெப்ப மின்னிரட்டையுடன் கூடிய மின் சுற்றில் மின்னோட்டத்தை செலுத்தும்போது, ஒரு சந்தியில் வெப்பம் வெளிப்படுதலும் மற்றொரு சந்தியில் வெப்பம் உட்கவர்தலும் நடைபெறும். இவ்விளைவு பெல்டியர் விளைவு எனப்படும்.
4.
கடத்தியின் புறப்பரப்பிலுள்ள மின்துகள்கள் எதுவாக இருந்தாலும் கடத்திக்கு வெளியே ஏற்படும் மின்னியல் மாறுபாடுகள் எதுவாயினும் அக்குழிவுப் பகுதியின் உட்புறம் மின்புலம் சுழியாகவே இருக்கும். புறத்தே ஏற்படும் மின்னியல் மாறுபாடுகளிலிருந்து நுட்பமான மின் கருவி ஒன்றைப் பாதுகாக்க வேண்டுமெனில் இத்தகைய குழிவுப் பகுதிக்குள் வைக்க வேண்டும். இதையே நிலைமின் தடுப்புறை என்பர்.
5.
இரண்டு காந்த முனைகளுக்கு இடையே உள்ள ஈர்ப்புவிசை அல்லது விலக்கு விசை அவற்றின் முனைவலிமைகளின் பெருக்கல் பலனுக்கு நேர்விகிதத்திலும் அவற்றிற்கு இடையே உள்ள தொலைவின் இருமடிக்கு எதிர்விகிதத்திலும் இருக்கும், கணிதவியல் முறையில் பின்வருமாறு நாம் எழுதலாம்.
\(\vec{F} \propto \frac{\mathrm{q}_{\mathrm{m}_{\mathrm{A}}} \mathrm{q}_{\mathrm{m}_{\mathrm{B}}}}{\mathrm{r}^2} \hat{\mathrm{r}}\)
இங்கு \(\mathrm{q}_{\mathrm{m}_{\mathrm{A}}}\)மற்றும \(\mathrm{q}_{\mathrm{m}_{\mathrm{B}}}\)என்பவை இரண்டு காந்த முனைகளின் முனை வலிமைகளைக் குறிக்கும். r என்பது இரண்டு காந்த முனைகளுக்கு இடையே உள்ள தொலைவைக் குறிக்கும்.
\(\vec{F}=k \frac{q_{m_A} q_{m_B}}{r^2} \hat{r}\)
6.
7.
எந்த குறிப்பிட்ட படுகோண மதிப்பிற்கு எதிரொளிப்பு அடைந்த கதிர் முற்றிலும் தளவிளைவு அடைந்ததோ, அந்த படுகோணமே தளவிளைவுக் கோணம் ஆகும்.
8.
தளவிளைவு ஆய்வி சுழியிலிருந்து 90o வரை ஒவ்வொரு முறை சுழற்றும் போதும், ஒளிச்செறிவு சுழியிலிருந்து பெருமத்திற்கும் இடையில் மாற்றமடைந்தால் அதனை முற்றிலும் தளவிளைவு அடைந்த ஒளி எனலாம்.
தளவிளைவு ஆய்வியின் ஒவ்வொரு 90° சுழற்சிக்கும் ஒளிச்செறிவு பெருமத்திற்கும் சிறுமத்திற்கும் இடையில் மாற்றமடைந்தால் அந்த ஒளியைப் பகுதி தளவிளைவு அடைந்த ஒளி என அழைக்கலாம்.
தளவிளைவு ஆக்கியின் மீது படுவதற்கு முன் ஒளி மூலத்திலிருந்து வரும் ஒளி, தளவிளைவு பெறாத ஒளி ஆகும்.
9.
ஒளி என்பது ஒளிமூலத்தினால் ஏற்படும் ஒரு மாறுபாடு: இம்மாறுபாடு வெளி முழுவதும் நிரம்பியுள்ள ஈதர் என்னும் ஒரு கற்பித ஊடகத்தின் வழியே இயந்திர அலையான நெட்டலை வடிவில் பரவுகிறது என்பது ஹைகென்ஸ் அலைக்கொள்கையாகும்.
10.
(i) மாறுநிலை படுகோணத்திற்கு, ஸ்னெல் விதியின் பெருக்கல் வடிவம்,
\(n_{1} \sin i_{c} =n_{2} \sin 90^{\circ}\)
\(n_{1} \sin i_{c} =n_{2} \ \because \sin 90^{\circ} = 1 \)
\(\sin i_{c} =\frac{n_{2}}{n_{1}} \)
(ii) இங்கு n1 > n2.
n1 அடர்குறை ஊடகத்தின் ஒளிவிலகல் எண்= n
n2 அடர்மிகு ஊடகத்தின் ஒளிவிலகல் எண் = 1
அதாவது n2 = 1 மற்றும் n1 = n
sin ic = 1/n (அல்லது) ic = sin-1 (1/n)
11.
குவாண்டம் கருத்துப்படி, கொடுக்கப்பட்ட அலைநீளத்தில் ஒளிச்செறிவு என்பது ஓரலகு காலத்தில் ஓரலகு பரப்பின் மீது படும், சமமான ஆற்றலைக் கொண்டுள்ள ஆற்றல் குவாண்டம் அல்லது ஃபோட்டான்களின் எண்ணிக்கை ஆகும். இதன் அலகு W\({ m }^{ -2 }\)
12.
i) மார்ஃபோ பட்டாம் பூச்சியின் இறக்கையில் உள்ள செதில்கள்.
ii) மயில் இறகுகள் சில பத்து நானோமீட்டர் தடிமன் கொண்டவை.
13.
ஒரு விநாடிக்கு 3.7 x 1010 சிதைவுகளைத் (3.7 x 1010 பெக்கரல்) தரும் கதிரியக்கத் தனிமத்தின் அளவு கியூரி எனப்படும்.
14.
சமமான அணுஎண் Z மற்றும் வேறுபட்ட நிறை எண் A கொண்ட ஒரே தனிமத்தின் அணுக்கள் ஐசோடோப்புகள் எனப்படும்.
\(_{ I }^{ I }{ H },_{ 1 }^{ 2 }{ H },_{ 1 }^{ 3 }{ H }\)
15.
ரேடார் (RADAR) என்பது RAdio Detection And Ranging என்ற சொற்றொடரின் சுருக்கமாகும்.
16.
வெளியீட்டின் ஒரு பகுதியை சமமான கட்டத்தில் உள்ளீடுடன் பின்னூட்டம் செய்யும் போது உள்ளீடு சைகையின் எண் மதிப்பு அதிகரிக்கும் இதுவே தொடர்ச்சியான அலைவுகளுக்கு தேவையானது.
17.
டையோடு முன்னோக்கு சார்பில் அமையும் போது இயக்கமில்லா பகுதி குறைந்து டையோடு மின்னோட்டத்தைக் கடத்தும். டையோடு பின்னோக்கு சார்பில் அமையும் போது இயக்கமில்லா பகுதி அதிகரித்து டையோடு மின்னோட்டத்தைக் கடத்தாது. எனவே டையோடு 'ஒரு திசைக்கருவி" என்றழைக்கப்படுகிறது,
18.
\(\oint \vec{B} \cdot \overrightarrow{d l}=\mu_o I_{\text {}}\)மூடப்பட்ட + \( +\mu_o \varepsilon_o \frac{d}{d t} \int \vec{E} \cdot \overrightarrow{d A}\)
19.
”வெப்பநிலை மாறாமல் உள்ள போது கடத்திக்குக் குறுக்கேயுள்ள மின்னழுத்த வேறுபாடானது அதில் பாயும் மின்னோட்டத்திற்கு நேர்த்தகவில் இருக்கும்”. இதுவே ஓம் விதியாகும்.
V = IR ஓம் விதியின் பயன்பாட்டு வடிவம் ஆகும்.
இங்கு,
V ⟶ மின்னழுத்த வேறுபாடு
I ⟶ மின்னோட்டம்
R ⟶ மின்தடை
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards